Wednesday, 8 October 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


அக்டோபர் 9: சே குவேரா நினைவு தினம் இன்று (1967)

Posted: 08 Oct 2014 09:44 PM PDT

அக்டோபர் 9:
சே குவேரா நினைவு தினம்
இன்று (1967)


திருடிட்டு ஜெயிலுக்கு போனா கண்டிப்பா மக்கள் இனிமே திட்டமாட்டாங்க. ..நாம வெளியில...

Posted: 08 Oct 2014 09:36 PM PDT

திருடிட்டு ஜெயிலுக்கு போனா கண்டிப்பா மக்கள்
இனிமே திட்டமாட்டாங்க.
..நாம வெளியில
வரணும்னு நமக்காக
வேண்டி மொட்டை போடுவாங்க... கர்ச்சீப்பை மூஞ்சில
கட்டிக்கிட்டு ஏதாவது பேங்குக்குள்ள
பூந்துற
வேண்டியதுதான்..

@விஜய் சிவானந்தம்

Posted: 08 Oct 2014 12:41 PM PDT


Posted: 08 Oct 2014 11:15 AM PDT


இலவச பொருள் மாதிரியே... வீட்டுக்கு ஒண்ணு எஞ்சினியரிங் படிச்சிட்டு சும்மாதான் இரு...

Posted: 08 Oct 2014 09:55 AM PDT

இலவச பொருள்
மாதிரியே...
வீட்டுக்கு ஒண்ணு எஞ்சினியரிங்
படிச்சிட்டு சும்மாதான்
இருக்கோம்.

@செல் முருகன்

'அவனுக்கு என்ன குறைச்சல்' என்பது அவன் அழகையோ அறிவையோ குறிப்பதில்லை அவனுடைய சம்பள...

Posted: 08 Oct 2014 08:31 AM PDT

'அவனுக்கு என்ன
குறைச்சல்' என்பது அவன்
அழகையோ அறிவையோ குறிப்பதில்லை அவனுடைய
சம்பளத்தை மட்டுமே குறிக்கிறது.

- விவிகா சுரேஷ்

இளையோர்களின் ஒட்டுமொத்த அன்பையும், ஆதரவையும் அரசு பெற ஏன் "அம்மா பெட்ரோல் கடை "த...

Posted: 08 Oct 2014 08:30 AM PDT

இளையோர்களின்
ஒட்டுமொத்த
அன்பையும், ஆதரவையும்
அரசு பெற ஏன்
"அம்மா பெட்ரோல்
கடை "தொடங்கக்கூடாது...?

மஞ்சல் துண்டுக்கு களுத்தறுத்த சிக்களக் காட்டுமிராண்டி மகிந்தாவின் உலகத்தை ஏமற்று...

Posted: 08 Oct 2014 08:10 AM PDT

மஞ்சல் துண்டுக்கு களுத்தறுத்த சிக்களக்
காட்டுமிராண்டி மகிந்தாவின் உலகத்தை ஏமற்றும் பொய்கள்!
சொல்லிலும் செயலிலும் வாய்மை வேண்டும் என்பதனை சிங்களப் பேரினவாதம் ஒருபோதும் உணரப்போவதில்லை -

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆடைகளை அணிந்துகொள்ளும் சிறுவர்களைப் பற்றிச் சிங்கள அரசும் சிங்கள இனத்தவரும் விடுதலைப் புலிகள் சிறுவர்களைத் தங்களின் அமைப்பில் இணைத்து வைத்திருந்தார்கள் என்று பொய்ப்பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். ஈழத்தில் பல சிறார்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆடைகளை அணிந்துகொள்ளுவதற்கு ஆசைப்பட்டார்கள். அதனால் அவர்களின் விருப்பத்தை பெற்றோரும் நிறைவேற்றுகிறார்கள், அவற்றைப் புகைப்படங்களாக பிடித்துக் கண்டும் மகிழ்கிறார்கள். இவற்றைக் கண்டுகொள்ளும் கொடூரச் சிங்கள இனவாதிகள் சர்வதேச சமூகத்திடம் விடுதலைப் புலிகளின் அமைப்பில் உள்ள சிறார்களைப் பாருங்கள் என்று இவ்வாறான புகைப்படங்களைப் பயன்படுத்தி உண்மைக்கு புறம்பாக பொய்ப்பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் சிங்கள இனத்தவர்கள் திரைப்படங்களைத் தயாரித்து அவற்றில் நடிக்கும் சிறார்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆடைகளை அணிய வைத்து அவர்களின் கரங்களில் ஆயுதங்களையும் வழங்கி அவற்றின் புகைப்படங்களை ஊடகங்களிலும் சர்வதேச சமூகத்திடமும் வழங்கி தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள் சிங்களப் பேரினவாதிகள்.

மாபெரும் இனவழிப்பை மேற்கொண்டுவிட்டு அவை சாதாரணமான குற்றங்கள் என்று மஹிந்த அண்மையில் கூறியிருந்தார். முள்ளிவாய்க்காலில் மாபெரும் இனவழிப்பை மேற்கொண்டு விட்டு அதன்பின்னர் சர்வதேச சமூகத்தினை ஏமாற்றுவதற்காக இறுதி யுத்தத்தில் உயிர் தப்பிப் பிழைத்துக்கொண்ட குழந்தைகளையும், முதியவர்களையும், பெண்களையும் மற்றும் தமிழ் மக்களையும் தூக்கி வைத்துக் கொண்டு அவர்களுக்கு உதவுவது போன்றும் பல புகைப்படங்களைப் பிடித்துக்கொண்டார்கள் காட்டுமிராண்டிப் படையினர். அவற்றைப் பயன்படுத்தி தாங்கள் மனிதாபிமான போரை நடத்தியதாக உலகை ஏமாற்றும் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது சிங்களப் படையினர் மின்னஞ்சல்களின் மூலமாக தாங்கள் அரங்கேற்றிய நாடகங்களின் புகைப்படங்களை சர்வதேச சமூகத்திடம் அனுப்பிவைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார்கள். காட்டுமிராண்டிப் படையினர் அரங்கேற்றிய நாடகங்களின் புகைப்படங்களைச் சர்வதேசத்திடம் அனுப்பிவைத்தும் அவர்களின் ஊடகங்களின் மூலமாகவும் பிரச்சாரத்தில் ஈடுபட்டும் தங்களின் மீதுள்ள போர்க்குற்றங்களில் இருந்து நழுவிவிடலாம் என்று சதித்திட்டங்களை அமைத்து தீவிரமாகச் செயல்படுகிறார்கள்.

கிட்லர் அன்று மேற்கொண்ட இனவழிப்பை மனிதாபிமான நடவடிக்கை என்று கூறவில்லை ஆனால் கிட்லரை விடக் கொடியவர்கள் சிங்களப் பேரினவாதிகள் என்பதனால் தாங்கள் மேற்கொண்ட இனவழிப்பு யுத்தத்தினை மனிதாபிமான நடவடிக்கை என்றும் அந்த யுத்ததின் போது சாதாரணமான குற்றங்களே நடைபெற்றன என்று கூறிக்கொண்டு இருக்கிறார்கள். இக்கொடியவர்களின் உண்மை முகத்தினை உலகம் கண்டுகொண்டால் இவர்கள் மனிதகுலத்தில் வாழுவதற்குத் தகுதியற்றவர்கள் என்றும் இவர்கள் மனிதகுலத்திற்கு எதிரானவர்கள் என்ற உண்மையையும் உலகம் புரிந்துகொள்ளும். தன்னுடைய சிங்கள இனத்தவரை மனிதகுலத்திற்கு எதிரான காட்டுமிராண்டிகளாக மாற்றியும் மற்றும் தவறான பாதையிலும் கொண்டு சென்று அவர்களை வளர்த்து வருகிறார்கள் சிங்களப் பேரினவாத காட்டாச்சியாளர்கள். நீதி, நேர்மை, மனிதநேயம் மற்றும் மனிதப் பண்புகளே இல்லாமல் வாழும் ஒரு இனமாக சிங்கள இனத்தைக் கட்டியெழுப்புகிறார்கள் சிங்களப் பேரினவாதிகள்.
எப்போதும் கோழைகளே அதிகமாகப் பொய்களைக் கூறுவார்கள், வீரமில்லாத கோழைகளின் ஆயுதம் பொய்தான் இன்று மஹிந்த முதுகெலும்பில்லாதவராக பொய்களைக் கூறி அதற்குப் பின்னால் பயந்து பதுங்கிக்கொண்டு இருக்கிறார். உண்மையான கோழையின் முழுவடிவமாக மஹிந்தவே இருக்கிறார், நீதிக்கு முன்னால் சென்று தான் குற்றமற்றவர் என்று நிரூபிக்க முடியாத குற்றவாளியாகவும் கோழையாகவும் இருக்கிறார் மஹிந்த. வீரமில்லாதவர்கள் கோழைத்தனமான வழியில் சென்று வெற்றியடைய வேண்டும் என்று மட்டுமே நினைவில் கொள்வார்கள், சிங்களம் கூறும் பொய்களே அவர்களை விட கோழைகள் இவ்வுலகில் வேறு எங்கும் பார்க்க முடியாது என்ற உண்மையை உணர்த்துகிறது. உண்மையில் புத்தபெருமானின் விரோதிகளாகச் சிங்களப் பேரினவாதிகள் உள்ளனர்.

மனத்தால்கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்வேண்டும் மற்றும் மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும். செய்யக்கூடாததைச் செய்யாததால் விளையும் நன்மையைவிடப் பொய் கூறாத பண்பு பொய்த்துப் போகாமல் கடைப்பிடிக்கும் அறவழி நன்மை தருவதாகும் என்று வாய்மையைப் பற்றிக் கூறுகிறார்கள். இந்த அறத்தின் பக்கம் தனது தலையைக் காட்டாத மஹிந்த அரச மரத்துடன் தன்னுடைய தலையை வைத்துக்கொண்டால் புத்தரின் ஞானத்தையும் அருளையும் பெற்றுவிடலாம் என்ற மூடநம்பிக்கையில் ஈடுபட்டுவருகிறார். சொல்லிலும் செயலிலும் வாய்மை வேண்டும் என்பதனைச் சிங்களப் பேரினவாதம் ஒரு போதும் உணரப்போவதில்லை. சிங்களப் பேரினவாதிகள் நேர்வழி சென்று வெல்ல முடியாமையினாலும், இவர்களுக்கு முதுகெலுப்பில்லாதமையினாலும் இவ்வாறு பொய்ப் பித்தலாட்டங்களில் கூச்சப்படாமல் ஈடுபட்டுவருகிறார்கள்.

நாம் சிங்களத்தின் பொய்ப் பித்தலாட்டங்களை உடைத்தெறிந்து உலகிற்கு உண்மைகளை தொடர்ந்து உணர்த்த வேண்டும். அதர்மத்தின் வழியைப் பின்பற்றி வெற்றியைப் பெற்றுக்கொண்டு தொடர்ந்து நிலைக்கமுடியும் என்று நினைக்கிறது சிங்களப் பேரினவாதம். திருந்துவார்களா சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்கள் என்ற வினாவிற்கான விடை, முதலில் சிங்களப் பௌத்த பேரினவாதப் பிக்குகள் திருந்தவேண்டும், அவர்களுக்கு ஞானம் பிறக்க வேண்டும், அந்த ஞானம் அவர்களுக்கு எட்டாக்கனியாகும்


ஜெயலலிதா என்னை 12 முறை கொலை செய்யப்பார்த்து தோல்வியடைந்தார். - சு சாமி. # ஆமா...

Posted: 08 Oct 2014 07:17 AM PDT

ஜெயலலிதா என்னை 12
முறை கொலை செய்யப்பார்த்து
தோல்வியடைந்தார். -
சு சாமி.

# ஆமா இவரு பெரிய
பிடல் கேஸ்ட்ரோ..
ராஜபக்சேட்ட
நக்கி திங்கிற நாய்
இதுக்கு லவுட்ட பாரு..

@துருவன்

இப்பல்லாம் நிறைய பெண்கள் சீரியல் பார்க்குறதை விட்டுட்டு, நியூஸ் பார்க்க ஆரம்பிச்...

Posted: 08 Oct 2014 05:15 AM PDT

இப்பல்லாம் நிறைய
பெண்கள் சீரியல்
பார்க்குறதை விட்டுட்டு,
நியூஸ் பார்க்க
ஆரம்பிச்சிட்டாங்களாம்.
அதைவிட இதுதான்
அழுவாச்சி அழுவாச்சியா இருக்காம்!

@Jayant

தமிழி எழுத்துருவில் திருக்குறள் ! உலகப் பொதுமறையான திருக்குறள் எழுதப்பட்டது கிம...

Posted: 08 Oct 2014 02:30 AM PDT

தமிழி எழுத்துருவில் திருக்குறள் !

உலகப் பொதுமறையான திருக்குறள் எழுதப்பட்டது கிமு 200 முதல் - கிமு 100 வரை இருக்கலாம் என கணக்கிடப் பட்டுள்ளது. அன்றைய காலத்தில் இப்போதுள்ள நாம் பயன்படுத்தும் தமிழ் எழுத்துருக்கள் இல்லை . தமிழ் பிராமி அல்லது தமிழி எழுத்துருக்கள் தான் அப்போது தமிழை எழுத பயன்படுத்தி உள்ளனர் தமிழர்கள் . வள்ளுவரும் தமிழி எழுத்துருவைத் தான் திருக்குறள் எழுத பயன்படுத்தி உள்ளார் எனத் தெரிகிறது. திருக்குறள் அன்றைய காலத்தில் இப்படத்தில் காண்பது போல தமிழி எழுத்துருவில் எழுதப்பட்டிருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இப்படத்தில் தமிழி எழுதுருவிலும் இக்காலத்தில் உள்ள சதுர்வட்ட எழுதுருவிலும் திருக்குறள் எழுதப்பட்டுள்ளதை காணலாம்.


கல்யாண வீட்டுல எல்லாம் சாப்பாடு எப்ப போடுவாங்க, முகூர்த்தம் எப்பன்னு விசாரிச்சிட...

Posted: 08 Oct 2014 02:03 AM PDT

கல்யாண வீட்டுல எல்லாம்
சாப்பாடு எப்ப
போடுவாங்க, முகூர்த்தம்
எப்பன்னு விசாரிச்சிட்டு இருந்தா,
ஒருத்தன் மட்டும் வர போற
பொண்ணுங்கள் ல,
எது எனக்கு மாமன்
பொண்ணு முறையாவுது,
எது எனக்கு அத்தை பொண்ணு முறையாவுது விசாரிச்சிட்டு இருக்கான்.

# அது சரி..அவன் அவன்
கவலை அவன் அவனுக்கு..

@கனா காண்கிறேன்

அப்பாவும் பையனும்.... "அடடே என் பையா... ஓடிவா வாவாவாவாவா.... உம்ம்ம்ம்ம்ம்மாமாம...

Posted: 08 Oct 2014 01:55 AM PDT

அப்பாவும் பையனும்....

"அடடே என் பையா...
ஓடிவா வாவாவாவாவா....
உம்ம்ம்ம்ம்ம்மாமாமா..
உனக்கு இன்னைக்கு அம்மாகிட்ட
கேசரி கிண்டித்தரச்சொல்லவா?"

"வேண்டாம்பா ... நான்
இனி ஒழுங்கா படிக்கிறேன்பா.. :P

@Jayant

போற போக்க பாத்தா கல்யானம் காதுகுத்துக்கு பத்ரிக்கை வச்சாக்கூட 200 ஓவா குட்த்தாதா...

Posted: 08 Oct 2014 01:48 AM PDT

போற போக்க
பாத்தா கல்யானம்
காதுகுத்துக்கு பத்ரிக்கை வச்சாக்கூட
200 ஓவா குட்த்தாதான்
வருவாய்ங்க
போலருக்கு அந்த
அளவுக்கு ட்யூன்
பன்னிவிட்டாய்ங்க.
:P

@கரிகாலன்

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


வெள்ளைகாரர்கள் காட்டிற்குள் சென்று அங்கு இருக்கும் மிருகங்களைப் பற்றி "NATIONAL...

Posted: 08 Oct 2014 07:30 AM PDT

வெள்ளைகாரர்கள் காட்டிற்குள் சென்று அங்கு இருக்கும் மிருகங்களைப் பற்றி "NATIONAL GEOGRAPHIC" சேனலிலும், "DISCOVERY" சேனலிலும் பேசிக்கொண்டிருப்பதை மூக்கின் மேல் விரல் வைத்து பார்த்துகொண்டிருக்கும் தமிழர்களே, ஒருநிமிடம் இந்த பதிவை வாசியுங்கள்.

மனிதர்களுக்கு குழந்தை பிறக்கும் போது எப்படி வயதில் மூத்தவர்கள் பரிவோடு பிள்ளை ஈனும் பெண்ணின் அருகில் சுற்றி நின்று அவளுக்கு ஆதரவாக ஒருவர் கைகளை பிடித்துக்கொள்வார், மற்றொருவர் காலை விரித்து குழந்தை எளிதாக வெளிவர உதவி செய்வார், இன்னொருவர் இடுப்பை நீவிவிடுவார், இது அனைவரும் அறிந்ததே.

திருபுனம் கோயிலில் உள்ள இந்த சிற்பத்தை பாருங்கள், பிள்ளை பெரும் அந்த யானை வலியால் துடிக்கின்றது என்பதை மேலே உயர தூக்கி இருக்கும் அந்த யானையின் தலை உணர்த்துகின்றது, தும்பிக்கையை தூக்கி வலியில் பிளிருகின்றது (தும்பிக்கை எங்கே காணோம்!) அதான் நமக்கு கைகள் இருகின்றதே உடைத்து விட்டோம்!.

பிள்ளை பெரும் யானை வலியால் துடிப்பதை கண்ட மூத்த யானைகள், அந்த பெண் யானைக்கு ஆதராவாக ஒன்று தன்னுடைய துதிக்கையால் இடுப்பை அழுத்திப் பிடித்து அரவணைக்கின்றது, மற்றொன்று அழகாக வாலை தூக்கி பிடித்து குட்டி யானை வெளி வர உதவுகின்றது.

இடுப்பை பிடிக்கும் ஆண் யானை ஒருவேளை தந்தையாக இருக்கலாம் வாலை உயர்த்தி பிடிக்கும் பெண் யானை அந்த யானை கூட்டத்தின் குடும்ப உறுப்பினராக இருக்கலாம்! தன்னுடைய குழுந்தை எளிதாக வர வேண்டும் என்பதற்காக தாய் யானை சற்று அமர்ந்த நிலையில் குட்டிக்கு உதவுகின்றது.

வலியில் முக்கி முனகும் அந்த பெண் யானையை மற்ற யானைகள் அரவணைக்கின்றது..குட்டி இந்த உலகை காண ஆவலோடு வெளியே வருகின்றது...அடடா..எந்த ஆங்கில சேனலாவது, இதை இவ்வளவு தத்ரூபமாக காட்டியது உண்டா? இந்த சிற்பத்தை செய்தவர் இதற்கு முன் இந்த காட்சியை கண்டிருந்தால் தானே இவ்வளவு தத்ரூபமாக செய்ய முடியும்! தமிழர்கள் எல்லா துறையிலும் முன்னேறியவர்கள் என்பதை காட்ட வேறு சான்று ஏதேனும் வேண்டுமா?

கோயில்கள் நம் முன்னோர் நமக்காக விட்டுச் சென்ற சொத்து! அதில் அவர்களின் அனுபவமும் ஆராய்சிகளும் உள்ளது!! திறந்த கண்களோடும், செவிகளோடும் கோயில்களை அணுகுங்கள்..அவை நமக்கு கற்றுத்தர நிறைய விஷயங்கள் வைத்துள்ளது!.

- Sasi Dharan


ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் வானவியல் சாஸ்த்திரத்தில் சிறந்...

Posted: 08 Oct 2014 04:30 AM PDT

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் வானவியல் சாஸ்த்திரத்தில் சிறந்து விளங்கினார்கள் என்று அனைவரும் அறிந்த ஒன்றே.

அதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால், பிரபஞ்ச இயக்கத்தின் கொள்கைகளை தற்போதைய அறிவியல் அறிஞர்களை விட மிக துள்ளியமான கணித அளவிடுகளுடன் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தி வைத்துவிட்டு சென்றுள்ளனர்கள் நம் முன்னோர்கள்.

சீனா, லாஸ், திபத் ஆகிய நாடுகள் ஒன்று சேர்ந்து திபத்தில் நடத்திக்கொண்டு இருக்கு ஆய்வின் போது அவர்களுக்கு பல ஆவணங்கள் கிடைத்தது. ஆனால் அவை அனைத்தும் சமஸ்கிருதத்தில் இருந்த காரணத்தால் அதை மொழி பெயர்க்க சத்தீஸ்கரில் உள்ள ஒரு பழ்கலைகழகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

அதை மொழிபெயர்த்த ரய்னா என்னும் பேராசிரியர் கொடுத்த விளக்கம் மிக ஆச்சரியம் மிக்க தகவலாக இருந்தது. அவற்றின் நீளம் கருதி சுருக்கமாக சொல்லி முடிக்கிறேன்.,.

அந்த ஆவணத்தில் விமானம் இயங்கும் தத்துவங்களும் பிரபஞ்சத்தில் உள்ள கோள்கள் மற்றும் நட்டத்திரங்களின் இயக்கம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது பிரபஞ்சம் என்பது ஹீலியம் மற்றும் ஹைட்ரஜன் நிரம்பிய ஊடகமாக உள்ளது இதே தத்துவத்தை பயன்படுத்தி பல விமானங்கள் இயக்கமுடியும் என்றும் அத்துடன் சில கணித விகிதாச்சார அளவிடுகளும் கொடுக்கப்பட்டுள்ளது…
ஆவணங்கள் முழுமையாக கிடைக்கும் பட்சத்தில் விமானங்கள் பற்றிய இன்னும் பல தகவல்கள் வெளியாகும்,

இவை அனைத்தும் நம் புராணங்களில் கடவுள் காற்றில் பறந்து வந்தார், ராமணன் சீதையை விமானத்தில் இலங்கைக்கு கடத்திச்சென்றான் என்று படித்துள்ளோம்.


இராசராசனின் சில ஆய்வுக்குறிப்புகள்: பெரியகோவிலும். மா மன்னன் இராசராச சோழன் க...

Posted: 08 Oct 2014 04:30 AM PDT

இராசராசனின் சில ஆய்வுக்குறிப்புகள்:

பெரியகோவிலும்.

மா மன்னன் இராசராச சோழன் குறிப்புகள் (ஆய்வுக்குரியவை)

இயற்பெயர் - அருண்மொழித்தேவன் (அருண்மொழிவர்மன்)

பிறந்தநாள் - 943 ஐப்பசி சதயம் நட்சத்திரம் .

கி.பி. 943 என்று பேராசிரியர் சி. கோவிந்தராசனார் மற்றும் முனைவர் சி. கோ.தெய்வநாயகம் எழுதிய சோழர் வரலாறு (பக்கம் 102) எனும் நூல் குறிப்பிடுகிறது. (உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுச் சிறப்பு வெளியீடு)

இராசராசன் சித்திரைத் திங்கள் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர் என மன்னரது திருப்புகலூர் கல்வெட்டும் முதலாம் இராசேந்திர சோழரின் எண்ணாயிரம் கல்வெட்டும் செப்புவதாக முனைவர் சூ. சுவாமிநாதன் (கல்வெட்டாய்வாளர் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறை மைசூர்) கல்லெழுத்தில் காலச்சுவடுகள் (பக்கம் 38, 39) என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

சிறப்புப் பெயர்கள் - 42
1. இராசகண்டியன்
2. இராசசர்வக்ஞன்
3. இராசராசன்
4. இராசகேசரிவர்மன்
5. இராசாச்ரயன்
6. இராசமார்த்தாண்டன்
7. இராசேந்திரசிம்மன்
8. இராசவிநோதன்
9. இரணமுகபீமன்
10. இரவிகுலமாணிக்கன்
11. இரவிவம்சசிகாமணி
12. அபயகுலசேகரன்
13. அருள்மோழி
14. அரிதுர்க்கலங்கன்
15. பெரியபெருமாள்
16. அழகியசோழன்
17. மும்முடிச்சோழன்
18. பண்டிதசோழன்
19. நிகரிலிசோழன்
20. திருமுறைகண்டசோழன்
21. செயங்கொண்டசோழன்
22. உத்தமசோழன்
23. மூர்த்தவிக்கரமாபரணன்
24. உத்துங்கதுங்கன்
25. உய்யக்கொண்டான்
26. உலகளந்தான்
27. தெலிங்ககுலகாலன்
28. கேரளாந்தகன்
29. மூர்த்தவிக்கரமாபரணன்
30. சோழேந்திரசிம்மன்
31. சோழநாராயணன்
32. சோழகுலசுந்தரன்
33. சோழமார்த்தாண்டன்
34. பாண்டியகுலாசனி
35. சிவபாதசேகரன்
36. சிங்களாந்தகன்
37. சத்துருபுஜங்கன்
38. சண்டபராக்ரமன்
39. ஜனநாதன்
40. சத்திரியசிகாமணி
41. கீர்த்திபராக்கிரமன்
42. தைலகுலகாலன்

தாய் தந்தையர் - வானவன் மாதேவி சுந்தரசோழன்
உடன் பிறந்தோர் - ஆதித்த கரிகாலன் (அண்ணன்) குந்தவை (அக்கை)
மனைவியர் - 15

மக்கள் - இராசேந்திர சோழன், எறிவலி கங்கைகொ ண்ட சோழன் என்னும் இரு ஆண்மக்களும், மாதேவடிகள், அருமொழி சந்திர மல்லியரான கங்கமாதேவியார், இரண்டாம் குந்தவைஎன்னும் மூன்று பெண்மக்களும் இருந்தனர்
(30 கல்வெட்டுகள். வை.சுந்தரேச வாண்டையார். பக்கம் 29)

அரியனை அமர்ந்தநாள் - ஆடி மாதம் 22ம் நாள் 985வது வருடம் 18/07/985

ஆட்சி ஏற்ற வயது - 42ம் வயது

தஞ்சை பெரியகோயில் கட்டியது - ஆட்சியாண்டு 25, 275ம் நாள் சனிக்கிழமை

கும்பாபிசேசம் செய்த நாள் - 22/04/1010 (புனர்பூச நட்சத்திரத்தில்)

இறந்த நாள் - 17/01/1014 (ஆட்சியாண்டு 29, மார்கழி மாதம் பூர்வபட்சம் சதூர்த்தசி திதி)

முதல் திவசம் செய்தது - 6/01/1015 (1015 மார்கழி மாதம் பூர்வபட்சம் சதூர்த்தசி திதி)

வாழ்ந்த கால வயது - 71 ஆண்டுகள்

ஆட்சிச் காலம் - 28 ஆண்டுகள் 8 மாதங்கள் 29 நாட்கள்

முதலாம் இராஜராஜ சோழன். கி.பி 985 முதல் கி.பி 1014

பா விவேக்


நம் வரலாற்றைத் தெரிந்து கொள்ள உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய...

Posted: 08 Oct 2014 02:30 AM PDT

நம் வரலாற்றைத் தெரிந்து கொள்ள உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லவிருக்கிறேன்.

இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது. இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம், இதுதான் " நாவலன் தீவு" என்று அழைக்கப்பட்ட "குமரிப் பெருங்கண்டம்". கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது, ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு மாபெரும் தமிழ்க் கண்டம்! இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் "குமரிக்கண்டம்". ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன! பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன!

குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன! தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.

நக்கீரர் "இறையனார் அகப்பொருள்" என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள "தென் மதுரையில்" கி.மு 4440இல் 4449 புலவர்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து நடத்தப்பட்டது. இதில், "பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்" ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர். இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன. இரண்டாம் தமிழ்ச் சங்கம் "கபாடபுரம்" நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், "அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்" ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் "தொல்காப்பியம்" மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய "மதுரையில்" கி.மு 1850 இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், "அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்" ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.

இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம்.

பா விவேக்


கொஞ்சம் இங்க வாசிச்சிட்டு லைக் பண்ணிட்டு போங்க.... இங்கே இருக்கும் விநாயகர் சில...

Posted: 07 Oct 2014 10:13 PM PDT

கொஞ்சம் இங்க வாசிச்சிட்டு லைக் பண்ணிட்டு போங்க....

இங்கே இருக்கும் விநாயகர் சிலை ஒரு அற்புதம் இருக்கிறது.... உடனே நீங்க எல்லாம் சொல்லுவிங்க மத்த கோவிலில் விநாயகர் உக்காந்து இருப்பார் இங்க நின்னுகிட்டு இருக்கார் அவ்வளவுதானே என்று நினைப்பிர்கள், ஆனால் நம் முன்னோர்கள் எவ்வளவு பெரிய "Structural Engineer" ஆளுன்னு இப்போம் சொல்றேன் உங்களுக்கு, விநாயகர் நிற்பது அவருடைய ஒரு காலில் மட்டுமே .இரு கரங்கள் ,ஒரு கால் ,மற்றும் அணிந்திருக்கும் ஆடையின் நுனி அலங்கார வளைவின் பக்கவாட்டு மிக சிறிய பிடிமானமாக இருக்கிறதே தவிர விநாயகரின் முழு கனமும் தாங்கப்படுவது ஒற்றை பாதத்தில் மட்டுமே.....
-திருப்பெருந்துறை

நம்ம கட்டிடக்கலைக்கு நிகர் எதுவும் இல்லை.... ஒழுங்கா லைக் பண்ணி ஷேர் பண்ணுங்க.....

Narthana ganapathi balanced in single leg, two hands , right leg and deity's dress got the additional support from arch..


ஆங்கிலத்தில் வார்த்தையே இல்ல என்பதற்கு இதுவே ஆதாரம் . . அப்பா -Father அம்மா -Mot...

Posted: 07 Oct 2014 09:27 PM PDT

ஆங்கிலத்தில் வார்த்தையே இல்ல
என்பதற்கு இதுவே ஆதாரம் .
.
அப்பா -Father
அம்மா -Mother
.
சகோதரன் -Brother
சகோதரி -Sister
இளைய சகோதரன் -Younger Brother
மூத்த சகோதரன் -Elder Brother
இளைய சகோதரி -Younger Sister
மூத்த சகோதரி -Elder Sister
.
அண்ணன் -?
தம்பி -?
அக்கா -?
தங்கை -?
.
மாமா -Uncle
மாமி -Aunt
.
சித்தப்பா -?
சித்தி -?
பெரியப்பா -?
பெரியம்மா -?
.
உலகிலேயே சொல்வளமும் பொருள்வளமும் மிக்க
மொழி
நம் தமிழ் மட்டும் தான் ........

பா விவேக்


Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


சாப்பிட்ட உடனே சில விஷயங்களை செய்யக்கூடாது! சாப்பிட்ட உடனே சில விஷயங்களை செய்யக...

Posted: 08 Oct 2014 10:20 AM PDT

சாப்பிட்ட உடனே சில விஷயங்களை செய்யக்கூடாது!

சாப்பிட்ட உடனே சில விஷயங்களை செய்யக்கூடாது என வீட்டுப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். அந்த ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு அறிவியல் காரணம் உண்டு தெரியுமா?

* உடனே பழங்கள் சாப்பிடக் கூடாது.ஏன்?

வயிற்றில் வாயுவை உருவாக்கி உப்பச் செய்துவிடும். இரண்டு மணி நேரத்துக்குப் பிறகோ அல்லது உணவு எடுத்துக்கொள்ளும் ஒருமணி நேரத்துக்கு முன்போ பழங்களை சாப்பிடுவது நல்லது.

* தேநீர் குடிக்கக் கூடாது. ஏன்?

தேயிலை அதிக அளவு அமிலங்களை உள்ளடக்கியது. இது உணவில் உள்ள புரத மூலக்கூறுகளுடன் சேர்ந்து உணவு செரிப்பதை சிக்கலாக்கி விடும்.

* புகை பிடிக்கக் கூடாது. ஏன்?

உணவு எடுத்தவுடன் பிடிக்கும் ஒரு சிகரெட், 10 சிகரெட்டுகள் பிடிப்பதற்கு சமமான விளைவை ஏற்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் புற்றுநோய் வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.

* இடுப்பு பெல்ட்டை தளர்த்தக் கூடாது. ஏன்?

சாப்பிட்ட பிறகு லேசாக இருக்கட்டுமே என இடுப்பில் உள்ள பெல்ட்டை இறக்கிவிடுவார்கள் அல்லது தளர்த்தி விடுவார்கள். இதனால் சாப்பிட்ட உணவு உடனடியாக குடலுக்கு சென்று விழுவதால் சரியானபடி வேலை செய்ய முடியாமல் செரிமானக் கோளாறு ஏற்படும்.

* குளிக்கக் கூடாது. ஏன்?

சாப்பிட்டவுடன் குளிப்பதால் கை, கால்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் உணவு செரிக்க தேவைப்படும் ரத்த ஓட்டம் குறைந்து வயிற்றில் உள்ள உணவின் செரிமானத்தை குறைக்கிறது.

* உடனே நடக்கக் கூடாது. ஏன்?

சாப்பிட்ட உடனே நடந்தால் உடலுக்கு நல்லது என ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இது தவறானது. இப்படி உடனடியாக நடப்பதால் உணவில் உள்ள சத்துகளை உணவு மண்டலத்தால் எடுக்க இயலாமல் போய்விடும். இதனால் சாப்பிட்டும் சரியான சத்துகள் நம் உடலில் சேராது.

* சாப்பிட்டதும் தூங்கக் கூடாது. ஏன்?

சாப்பிட்டவுடன் படுக்கைக்கு சென்றால் நாம் சாப்பிட்ட உணவுகள் சரியாக செரிமானம் ஆகாது. வயிற்றுக்குத் தேவை இல்லாத வாயுவும் நோய்க்கிருமிகளும் வர வழிவகுக்கும்.


யாரும் இல்லை என்ற கவலை வேண்டாம். உனக்காய் அழுவதற்கு உன் கண்கள் இருக்கிறது துடைப்...

Posted: 08 Oct 2014 05:51 AM PDT

யாரும் இல்லை என்ற
கவலை வேண்டாம்.
உனக்காய் அழுவதற்கு
உன் கண்கள் இருக்கிறது
துடைப்பதற்கு
உன் கைகள் இருக்கிறது.
இனி யாரும் இல்லை என்ற
கவலை வேண்டாம்.
உன் தலையினை நீயே வருடிக்கொடு
உன் தோள்களை நீயே தட்டு
உன் திறமைகளை நீயே பாராட்டு..
உன் தவறுகளை நீயே குழிதோண்டிப் புதை
தோல்விகளை கண்டு அஞ்சாதே
வெற்றிகளில் மயங்கிக்கிடக்காதே
முதலில் உன்னை வென்று
பின் உலகை வெல்ல வா....
உடலில் உயிரும்
உணர்வில் துணிவும்
இருக்குவரை போராடு...
உன் எதிரிகளின் மூக்குகளை
உன் நம்பிக்கைகளால் உடை
நட அடுத்தவன்
கைகளைப்பிடித்து அல்ல
உன் கால்களைக்கொண்டு....!

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


மாட்டிகொண்டீர்கள்..!! எத்தனை புத்தகங்களை அரைகுறையாக சப்பிவிட்டு என்னைக்கண்டு ஓட...

Posted: 08 Oct 2014 01:55 AM PDT

மாட்டிகொண்டீர்கள்..!!

எத்தனை புத்தகங்களை அரைகுறையாக சப்பிவிட்டு என்னைக்கண்டு ஓடி ஒழிந்தீர்...............
அடுப்பங்கரையில் ஆட்சியமைத்து அர்த்தராத்திரியில் மாநாடு போட்டீர்......
பாதித்தூக்கத்திலே பதகளிக்க வைத்தீர்.......
காய்களை பழமாக்க விடவே இல்லை.........
எத்தனையோ எத்தனனங்கள் உங்களை பிடிக்க
அத்தனையும் அர்த்தமிழந்து போயின.....
இனியும் நாங்கள் ஏமாறப்போவதில்லை..........
வைரமுத்தை பின்பற்றி பூனை வளர்த்தேன்........பிடிபடவில்லை.........
மனிதாபிமானத்துக்காய் ........
பொறித்த மீனும் கருவாடும் தந்து பார்த்தேன்
திருட்டுத்தனமாய் திண்டவுடனே ஓடினாய்......
கூடிக்குலவினாய்...........
குடும்பத்தைப்பெருக்கினாய்.........
குதித்து விளையாடினாய்.........
இப்படியாக என் ஆத்திரத்தை ஆயிரம் தடவையாக
கிளரிவிட்டாய்..........
நேற்று உனக்கு மரணம் வரும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை......
மனைவியின் முயற்சியில் வசமாக மாட்டிக்கொண்டீர்..........
இனி உங்கள் வம்சாவழி ஒழிந்துவிடும்.......
யுத்தம் செய்யாமலே உங்களை இனஒழிப்பு செய்வோம்.......
உணவு தந்தே அழித்துவிடுவோம்.........
எங்கிருந்தோ வந்து இங்கு அதிகாரம் செலுத்த முனையும் உங்களை
இனியும் சும்மா விட மாட்டோம்.........!

via Ibnu Salaah

----------------------------------------------
இக்கவிதை தேச நலனை சீர்குலைக்க உருவெடுத்திருக்கும் சகல தீய சக்திகளுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.
#Admin


யாரும் இல்லை என்ற கவலை வேண்டாம். உனக்காய் அழுவதற்கு உன் கண்கள் இருக்கிறது துடைப்...

Posted: 07 Oct 2014 11:00 PM PDT

யாரும் இல்லை என்ற
கவலை வேண்டாம்.
உனக்காய் அழுவதற்கு
உன் கண்கள் இருக்கிறது
துடைப்பதற்கு
உன் கைகள் இருக்கிறது.
இனி யாரும் இல்லை என்ற
கவலை வேண்டாம்.
உன் தலையினை நீயே வருடிக்கொடு
உன் தோள்களை நீயே தட்டு
உன் திறமைகளை நீயே பாராட்டு..
உன் தவறுகளை நீயே குழிதோண்டிப் புதை
தோல்விகளை கண்டு அஞ்சாதே
வெற்றிகளில் மயங்கிக்கிடக்காதே
முதலில் உன்னை வென்று
பின் உலகை வெல்ல வா....
உடலில் உயிரும்
உணர்வில் துணிவும்
இருக்குவரை போராடு...
உன் எதிரிகளின் மூக்குகளை
உன் நம்பிக்கைகளால் உடை
நட அடுத்தவன்
கைகளைப்பிடித்து அல்ல
உன் கால்களைக்கொண்டு....!

உங்க lover'ட குணம் எப்டி இருக்கணும் னு ஆசைப்படுறிங்க. .! ? ? ? 1 - சந்தோஸ் சுப்...

Posted: 07 Oct 2014 09:00 PM PDT

உங்க lover'ட குணம் எப்டி இருக்கணும் னு ஆசைப்படுறிங்க. .! ? ? ?

1 - சந்தோஸ் சுப்ரமணியம் ஜெனிலியா.
2 - அலைபாயுதே சாலினி.
3 - ராஜா ராணி நஸ்ரியா.
4 - காதல் சுகமானது சினேகா.
5 - பிரியமானவளே. சிம்ரன்.
6 - எங்கேயும் காதல் ஹன்சிகா.
7 - மௌனம் பேசியதே திரிஷா.
8 - துப்பாக்கி காஜல்.
9 - களவாணி ஓவியா.
10 - காதல் கீதல் னு எவணாச்சும் வந்திங்க..... கொய்யால அழிகின தக்காளியாலயே அடிப்பேன்.

பதில் சொல்லுங்க பார்க்கலாம்! ;)

மனைவியின் கர்ப்ப காலம் குறைந்தது 300 நாட்கள்; கணவனின் கர்ப்ப காலம் குறைந்தது 20...

Posted: 07 Oct 2014 07:00 PM PDT

மனைவியின் கர்ப்ப காலம் குறைந்தது 300 நாட்கள்;
கணவனின் கர்ப்ப காலம் குறைந்தது 20 வருடங்கள்...

யக்கோய் என்னமா இங்கிலிசு பேசுறிங்க யா .. :o :D ஆக்சுவலி யுவர் இங்கிலிஷு சோ கி...

Posted: 07 Oct 2014 11:14 AM PDT

யக்கோய் என்னமா இங்கிலிசு பேசுறிங்க யா .. :o :D
ஆக்சுவலி யுவர் இங்கிலிஷு சோ கியுட்டு யா.. ;)

# 100 ருப்பீஸ் வடக்கி பூச்சிங் யா .. :P
வாட்டர் யு மிங்கிங் யா .. நம்பர் லேடிங் யா . .. ஐ நடிச்சு படிப்போயிங்க்யா .. ஒ மாய் காட் யா!



Posted: 07 Oct 2014 10:55 AM PDT


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


:)

Posted: 08 Oct 2014 09:30 AM PDT

:)


தோல்வி என்பது நாம் வெற்றியடையப் போவதின் முதற்படி.... என்ன சொல்லவராங்கனு கொஞ்சம்...

Posted: 08 Oct 2014 09:15 AM PDT

தோல்வி என்பது நாம் வெற்றியடையப் போவதின் முதற்படி.... என்ன சொல்லவராங்கனு கொஞ்சம் படிச்சுத் தான் பாருங்களேன்..

ஒரு இடத்தில் யானைகள் நிறைய கட்டப்பட்டிருந்தன. அந்த வழியே போன ஒருவன் யானைகளை பார்த்தபடியே சென்றான். ஒரே ஒரு கயிறு மட்டும் தான் யானைகளின் காலில்கட்டி இருக்கிறது,

இவ்வளவு பெரிய உருவம் கொண்டயானை அதை அறுத்து கொண்டு போகாதா என்று வியந்தான். அருகில் இருந்த பாகனிடம் இந்த யானைகள் கயிற்றை அறுத்து கொண்டு போகாதா என்று கேட்டான்.

இந்த யானைகள் சிறியதாக இருக்கும் போது இந்த கயிற்றால் தான் கட்டினோம். அப்போது அது இழுக்கும் போது இந்த கயிறுகள் அறுகவில்லை.

யானைகள் பெரிதாக பெரிதாக தன்னால் கயிற்றை அறுக்க முடியாது என்று எண்ணி கயிற்றை அறுக்க முயற்சி செய்வதில்லை என்று பாகன் சொன்னான்.

அந்த மனிதன் ஆச்சரியப்பட்டான், இந்த யானைகள் ஒரு நிமிடத்தில் இந்த கயிற்றை அறுத்து கொண்டு போகலாம் ஆனால் அவைகள் அதற்கான முயற்சி செய்வதில்லை அதனாலேயே அவைகள் கட்டுண்டு கிடக்கின்றன.

இந்த யானைகள் போல் நம்மில் எத்தனை பேர் ஒரு முறை தோற்றதும் மீண்டும் முயற்சிக்காமல் துவண்டு போகின்றோம்.

தோல்வி என்பது நாம் வெற்றியடையப் போவதின் முதற்படியே தொடர்முயற்சியே நம் வெற்றிக்கு வழி வகுக்கும்...!

(y) (y)

Relaxplzz

என்னை தமிழை விட்டு ஆங்கிலம் படிக்கச் சொன்னீர்கள் படித்தேன். விவசாயம் விட்டு அமெ...

Posted: 08 Oct 2014 09:00 AM PDT

என்னை தமிழை விட்டு ஆங்கிலம் படிக்கச் சொன்னீர்கள் படித்தேன்.
விவசாயம் விட்டு அமெரிக்கா போக சொன்னீர்கள் போனேன்.

ஊரெல்லாம் சுற்றி பணம் செய்வது நல்லது என்றீர்கள். அப்படியே செய்தேன்.
திரும்பி ஊருக்கு வந்தேன்
என் நிலமெல்லாம் மாற்றான் கையில்.
என் மொழியோ சவக்கிடங்கில்.
அண்ணனும் தம்பியும் டாஸ்மார்க் கடையில்

ஆங்கிலம் படித்தால் வெளிநாட்டில் வேலை பார்க்கலாம் எனச் சொல்லி சொல்லியே என் ஊரில் என்னை அகதி ஆக்கி விட்டீர்களே இது நியாயமா?

என் நிலத்தில் புழுதியில் உரிமையோடு புரண்டவனை
அழுக்குப் படுகிறது எனச் சொல்லி
அடுக்கு மாடிக் கட்டிடத்தில்
அடிமையாக இருக்க விட்டீர்களே இது நியாயமா?

-பிரபுகண்ணன் முத்தழகன்

ஆங்கிலத்தில் ரிலாக்ஸ் ப்ளீஸ் Relaxplzz


அருமையான ஓவியம்

Posted: 08 Oct 2014 08:50 AM PDT

அருமையான ஓவியம்


அழகு.... <3

Posted: 08 Oct 2014 08:40 AM PDT

அழகு.... ♥


:)

Posted: 08 Oct 2014 08:30 AM PDT

:)


வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்கு வந்த நண்பன்...! முதல் வாரத்தில்- ஒன் அன்ட் ஆப்...

Posted: 08 Oct 2014 08:15 AM PDT

வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்கு வந்த நண்பன்...!

முதல் வாரத்தில்- ஒன் அன்ட் ஆப் லாக்ஸ் சம்பளம் மச்சி, ஆபிஸ் கார், ப்ளாட் தர்றாங்க. பப், பார்ட்டினு வாரத்துக்கு ரெண்டு நாள் ஜாலிதான் போ..

ரெண்டாவது வாரம்- ஒரு லட்சம் வாங்கினாலும் அதுக்கேத்த செலவாயிடும். ஒரு பிலிப்பினிய கரெக்ட் பண்ணி வச்சிருக்கேன். அவளோட ஷாப்பிங். சாப்பிட போனாலே கிரெடிட் கார்டுல 10 ஆயிரம் காலி. அதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல.

மூணாவது வாரம்- அங்க எல்லாத்துக்கும் பணத்தை புடிங்கிருவான். குடிக்கற தண்ணிக்கும் காசு தான். கார் பார்க்கிங்குக்கும் பணம்.. இதுக்கே மாசம் 20 ஆயிரம் அழணும்.

நாலாவது வாரம்- மூணு மாசத்துக்கு ஒருக்கா தான் அப்பாவுக்கு ஒரு 20, 30 ஆயிரம் தேத்தி அனுப்புவேன். அதுவே சமயத்துல கஷ்டம்தான்.

ஐந்தாவது வாரம்- நாய்ப் பொழப்புடா அது. லெபனான்காரன் மேனேஜர் பருப்பு மாதிரி பேசுவான். எதிர்த்துப் பேசினா மொதலாளிகிட்ட போட்டுக் குடுத்துருவான். அந்த சீனாக்காரன் என் முட்டி உயரம்தான் இருப்பான். ஆனா, எப்டி திட்டுவான் தெரியுமா..

ஆறாவது வாரம்- போதும்டா அந்த கேவலம்லாம். மாசக்கடைசில எத்தனையோ நாள் சாப்பிட காசு இல்லாம ரூம்மேட் வாங்கிட்டு வர்ற பிரட்டுக்காக காத்திருப்பேன்.

ஏழாவது வாரம்- திரும்பிப் போகலடா மச்சான் நான். அத்தான் கிட்ட ஒரு லட்சம் கேட்ருக்கேன். செகன்ட் ஹேன்ட் கார் ஒண்ணு வாங்கி ஓட்டப்போறேன். அப்பாவுக்கு விவசாயித்துல கூடமாட இருந்து உதவியும் செய்யலாம்னு யோசனை.

எட்டாவது வாரம்- ....தா.. ஊராடா இது. பிடிக்கலடா. எப்டித்தான்டா இங்க வாழ்றது. கசாப்க்கடை காதர் பாய் கிட்ட அம்பதாயிரம் கேட்ருக்கேன். இன்னும் ரெண்டு நாளில் டிக்கெட் போட்டு ஓடிருவேன்டா.. வரும்போது உனக்கெதும் வாங்கிட்டு வரணுமாடா மச்சான்.

நான்.. போடாங்ங்ங்ங்...... :P

Relaxplzz

பிளாஸ்டிக் கவரில் டீ பார்சல் கேன்சர் பாதிப்பு அபாயம் - எச்சரிக்கை செய்தி திடப்ப...

Posted: 08 Oct 2014 08:00 AM PDT

பிளாஸ்டிக் கவரில் டீ பார்சல் கேன்சர் பாதிப்பு அபாயம் - எச்சரிக்கை செய்தி

திடப்பொருள்கள் வாங்க பயன்படுத்தப்பட்டு வந்த பிளாஸ்டிக்குகள் அடுத்தகட்டத்திற்கு தாவி தற்போது சூடான திரவப்பொருள்களை வாங்கி வரவும் பரவலாக பயன்படுத்தப் பட்டு வருகின்றன. இதனால் உணவுப்பொருள்கள் வேதிவினை யாகி கேன்சர் உள்ளிட்ட பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

நம் அன்றாட பயன்பாட்டில் பிளாஸ்டிக் தவிர்க்க முடியாத பொருளாகி ஊடுருவி கிடக்கிறது. சிறிய கேரி பேக் முதல் சமையல் பாத்திரம், மருத்துவம், சுகாதாரம், மின்துறை என்று அனைத்திலும் இதன் தாக்கம் வீரியமாக இருக்கிறது. இருப்பினும் அனைத்து பிளாஸ்டிக் பொருட்களும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதில்லை. மறுசுழற்சி மூலம் தொடர்ந்து அவற்றை பல்வேறு ரூபங்களாக மாற்றி மாற்றி அதன் வீரியத்தன்மை வெகுவாய் குறைக்கப்படுகிறது. இருப்பினும் குறிப்பிட்ட மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ் டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு பெரும் சவாலாக உள்ளது. இதனால் 40 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக்கு களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி, சேமித்து வைத்தல், விற்பனை உள்ளிட்ட அனைத்து கட்டத்திலும் இதற்கு தடை உண்டு. இருப்பினும் அரசு, அதிகாரிகளின் கடும் நடவடிக்கை இன்மையால் தொடர் ந்து இவை சந்தையில் வலம் வந்தபடி உள்ளன.
எளிமையான பயன்பாடு, விலை குறைவு உள்ளிட்ட காரணங்களால் ஆரம்பத்தில் பொதுமக்களின் பார்வை யை இந்த பிளாஸ்டிக் பொருட்கள் ஈர்க்க துவங்கின. இதனால் துணிப்பை மெல்ல மெல்ல பயன்பாட்டில் இரு ந்து விலக துவங்கியது. கையை வீசி கொண்டு செல்லலாம். பொருட்களை வாங்கி வந்தபின் பிளாஸ்டிக் பையை தூக்கிப் போட்டு விடலாம் என்ற மனோநிலையில் நுகர்வோர் மத்தியில் புதிய கொள்முதல் கலாச்சாரத்தை ஏற்படுத்த துவங்கியது.

எனினும் இதன்பின்னால் உள்ள அபாயங்களை பலரும் உணரவில்லை. இவ்வாறு தூக்கி வீசப்பட்ட பிளா ஸ்டிக்குகள் அவ்வளவு எளிதில் மக்குவதில்லை. மண்ணில் பல ஆண்டுகளாக புதைந்தே கிடந்து மழைநீரை உட்புகாமல் செய்வதுடன், மண்ணின் உதிரித்தன்மையை பாதித்து காற்று ஊடுருவதிலும் சிக்கலை ஏற்படுத்துகிறது.
இதனால் மண்புழு உள்ளிட்டவைகளும் அழிய துவங்கின. சிதறி கிடக்கும் இந்த பிளாஸ்டிக்கழிவுகளை அழித் தாலும் அது சுற்றுச்சூழலுக்கு கேட்டையே விளைவிக்கிறது. எரிக்கும் போது, அதில் இருந்து வெளிவரும் டையாக்சின் காற்றுமண்டலத்தில் கலந்து விடுகிறது.
இதை சுவாசிப்பவர்களுக்கு தும்மல், கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. காற்றில் கலந் திருக்கும் டையாக்சினின் மீது மழை பொழியும் போது அவை அமில மழையாக தரையை தொட்டு பாதிப்பை தொடர்கிறது.

பொதுவாக மண்ணில் பல் வேறு விதைகள் சிதறி கிடக்கும். மழை நேரங்களில் இவை தழைத்தெழும். மழை காலங்களில் சிறு தாவரங்களான நாயுருவி, துளசி, குப்பை மேனி, தும்பை, திருநீற்றுப்பச்சை என்று பல்வேறு மூலிகைச்செடிகள் கண்ணுக்கெட்டியதூரம் வரை வளர்ந்து சுற்றுச்சூழலுக்கும், மனிதனுக்கும் பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தின.

ஆனால் பிளாஸ்டிக் எரிப்பினால் மண்ணின் மேல் உள்ள மண்புழு மட்டுமல்லாது இதுபோன்ற விதைகளும் கருகுவதால் முன்பு போல மழைக்கு பிந்தைய சிறுதாவரங்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
இவ்வாறு புதைத்தாலும், எரித்தாலும் தன்சுபாவத்தை மாற்றி கொள்ளாமல் சுற்றுச்சூழலுக்கு தொடர்ந்து கேடுவிளைவிக்கும் இந்த பிளாஸ்டிக்குகள் பெரும் சவாலாகவே இருந்து வருகிறது.

திடப்பொருள்கள் வாங்க மட்டுமே பயன்படுத்தப் பட்டு வந்த இந்த பிளாஸ்டிக்குகள் தற்போது திரவ பொ ருட்களையும் ஆட்கொண்டு வருகிறது. ஆரம்பத்தில் உணவகங்களில் குழம்பு, ரசம் என்று பேக் செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகள் தற்போது இதை விட அதிகமாக டீ கடைகளில் பயன்படுத்தப்படுகிறது. கட்டட வேலைகள், தினக்கூலிகள் என்று டீயை மொத்தமாக வாங்கி பகிர்ந்து குடிக்கும் அத்தனை இடங்களிலும் இந்த முறை பரவலாகிவிட்டது.

டீயை பார்சல் கட்டி தருவதற்காகவே பல்வேறு முன்னேற்பாடுகள் கடைகளில் செய்யப்பட்டுள்ளன. இதில் உள்ள பாலிபுரோப்பின் அதிகசூட்டினால் உருகி உணவுப்பொருளுடன் கலக்கும். கேன்சர், கிட்னி பாதிப்பு, வயிற்றுக்கோளாறு உள்ளிட்ட பாதிப்பை ஏற்படுத்தும்.
இருப்பினும் கையை வீசிக்கொண்டு சென்று பொருளை வாங்கி பழகிவிட்ட தற்போதைய நடைமுறை பாதிப்பையும் துரிதப்படுத்தி வருகிறது.
தூக்குவாளி போன்ற பாத்திர விற்பனையும் குறைந்துவிட்டது. சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும் இந்த வில்லனை அரசு, அதிகாரிகள் மட்டுமல்லாது பொதுமக்களும் இணைந்து எதிர்கொள்வதன் மூலமே இதனை தடுக்க முடியும்.


"விழிப்புணர்வு"

சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைபகுதி!

Posted: 08 Oct 2014 07:49 AM PDT

சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைபகுதி!


"அழகு தமிழ்நாடு"

இளையோர்களின் ஒட்டுமொத்த அன்பையும் ,ஆதரவையும் அரசு பெற ஏன் "அம்மா பெட்ரோல் கடை "த...

Posted: 08 Oct 2014 07:40 AM PDT

இளையோர்களின் ஒட்டுமொத்த அன்பையும் ,ஆதரவையும் அரசு பெற ஏன் "அம்மா பெட்ரோல் கடை "தொடங்கக்கூடாது ...?

#சும்மா_கேட்டு_வைப்போம் ;-)

:)

Posted: 08 Oct 2014 07:30 AM PDT

:)


ட்ரெய்னியாக ஒரு பெரிய கம்பெனியில் ஒருவன் வேலைக்கு சேர்ந்தான். சேர்ந்ததும் மிதப்...

Posted: 08 Oct 2014 07:15 AM PDT

ட்ரெய்னியாக ஒரு பெரிய கம்பெனியில் ஒருவன் வேலைக்கு சேர்ந்தான்.

சேர்ந்ததும் மிதப்பு தாங்காமல் இண்டர்காமில் டயல் செய்து "ஹலோ யாரது? எனக்கு ஒரு காபி உடனே வேண்டும்"

"என்னது காபியா? நீ தவறான நம்பர் டயல் செய்திருக்கிறாய்?"

"சரி சரியான நம்பர் எது?"

"ஹலோ நீ யார் கிட்ட பேசிக்கிட்டிருக்க தெரியுமா?"

"யாரு கிட்ட?"

"நான் தான் இந்த கம்பெனியோட CEO"

"நீ யார்கிட்ட பேசிக்கிட்டிருக்க தெரியுமா?"

"தெரியாது,யார் கிட்ட?"

"தெரியாதா அப்பாடா…ரொம்ப நல்லது"

டொக்…

:P :P

Relaxplzz

கவனியுங்கள்... உங்கள் எண்ணங்களைக் கவனியுங்கள், அவைகளே வார்த்தைகளாக வருகின்றன....

Posted: 08 Oct 2014 06:56 AM PDT

கவனியுங்கள்...

உங்கள் எண்ணங்களைக் கவனியுங்கள், அவைகளே வார்த்தைகளாக வருகின்றன.

உங்கள் வார்த்தைகளை கவனியுங்கள், அவைகளே செயல்களாக ஆகின்றன.

உங்கள் செயல்களைக் கவனியுங்கள், அவைகளே பழக்கமாகின்றன.

உங்கள் பழக்கங்களைக் கவனியுங்கள், அவைகளே உங்கள் நடத்தையாகின்றன.

உங்கள் நடத்தையைக் கவனியுங்கள், அவைகளே உங்களுடய எதிர்காலத்தை நிச்சயிக்கின்றன.

Relaxplzz


வாழ்வின் மொழி...

'அவனுக்கு என்ன குறைச்சல்' என்பது அவன் அழகையோ அறிவையோ குறிப்பதில்லை அவனுடைய சம்பள...

Posted: 08 Oct 2014 06:42 AM PDT

'அவனுக்கு என்ன குறைச்சல்' என்பது அவன் அழகையோ அறிவையோ குறிப்பதில்லை அவனுடைய சம்பளத்தை மட்டுமே குறிக்கிறது.

#என்ன_நான்_சொல்றது!

- விவிகா சுரேஷ்


:)

Posted: 08 Oct 2014 06:32 AM PDT

:)


காட்டுத் தீ திகுதிகுவென எரிந்து கொண்டிருக்க யானை, சிங்கம், புலி போன்ற பெரிய மிரு...

Posted: 08 Oct 2014 06:19 AM PDT

காட்டுத் தீ திகுதிகுவென எரிந்து கொண்டிருக்க யானை, சிங்கம், புலி போன்ற பெரிய மிருகங்கள் செய்வதறியாது தவித்தன.

ஒரு சின்னஞ் சிறு சிட்டுக்குருவி மட்டும் எவ்வளவு வேகமாக பறக்க முடியுமோ அவ்வளவு வேகமாக பறந்து தனது சின்னஞ் சிறு அலகால் தண்ணீரை அள்ளி வந்து தெளித்தது .

இதைக் கண்ட பெரிய விலங்குகள் " நீயோ சின்னஞ் சிறு குருவி. உன்னால் என்ன செய்து விட முடியும் ? " என்று கேட்டன.

அதற்கு அந்த குருவி " என்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் சிறப்பாக செய்ய முயற்சிக்கிறேன் . என்னைப் பொறுத்தவரை நாம் அனைவரும் இதைத்தான் செய்ய வேண்டும் " என்றது.

இந்த கதையைச் சொன்னவர் வங்காரி மத்தாய். அவர் மேலும்

" நானும் அந்த சிட்டுக் குருவி போல இந்த பூமி அழிந்து கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க விரும்பவில்லை. என்னால் என்ன சிறப்பாக செய்ய முடியுமோ அதைச் சிறப்பாக செய்வேன்."

அவர் என்ன செய்தார் தெரியுமா ?

கிட்டத்தட்ட 14 கோடிக்கும் மேலான மரக்கன்றுகளை நட்டு பசுமரக் குடைகளை உருவாக்கியது அவரது இயக்கம்.
அவருக்கு நோபல் பரிசு பின் கிடைத்தது . அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் கறுப்பின பெண்.

Relaxplzz

யாரும் இல்லை என்ற கவலை வேண்டாம். உனக்காய் அழுவதற்கு உன் கண்கள் இருக்கிறது துடைப...

Posted: 08 Oct 2014 04:59 AM PDT

யாரும் இல்லை என்ற
கவலை வேண்டாம்.

உனக்காய் அழுவதற்கு
உன் கண்கள் இருக்கிறது
துடைப்பதற்கு
உன் கைகள் இருக்கிறது.

இனி யாரும் இல்லை என்ற
கவலை வேண்டாம்.
உன் தலையினை நீயே வருடிக்கொடு
உன் தோள்களை நீயே தட்டு
உன் திறமைகளை நீயே பாராட்டு..
உன் தவறுகளை நீயே குழிதோண்டிப் புதை.

தோல்விகளை கண்டு அஞ்சாதே
வெற்றிகளில் மயங்கிக்கிடக்காதே
முதலில் உன்னை வென்று
பின் உலகை வெல்ல வா....

உடலில் உயிரும்
உணர்வில் துணிவும்
இருக்குவரை போராடு...

உன் எதிரிகளின் மூக்குகளை
உன் நம்பிக்கைகளால் உடை
நட அடுத்தவன்
கைகளைப்பிடித்து அல்ல
உன் கால்களைக்கொண்டு....!

(y) (y)

Relaxplzz


"தன்னம்பிக்கை வரிகள்"

நினைவிருந்தால் like பண்ணுங்க (y)

Posted: 08 Oct 2014 04:45 AM PDT

நினைவிருந்தால் like பண்ணுங்க (y)


:)

Posted: 08 Oct 2014 04:30 AM PDT

:)


உலகத்துலயே மிக வேகமானது எதுனு தெரியுமா? . . . . . .சிறுத்தை . . . . . புல்லட் டி...

Posted: 08 Oct 2014 04:15 AM PDT

உலகத்துலயே மிக வேகமானது எதுனு தெரியுமா?
.
.
.
.
.
.சிறுத்தை
.
.
.
.
.
புல்லட் டிரெயின்
.
.
.
.
.
.
.
.
ஜெட் விமானம்
.
.
.
.
.
.
.
.
இது எதுவும் கிடையாது...........
.
.
.
.
.
.
.
.
நம்ம ஊரு மீடியாக்கள்தான்
.
.
.
.
.
பயபுள்ளைக ஜட்ஜ் தீர்ப்பை எழுதறதுக்கு பேனாவை எடுத்த உடனயே இவங்க தீர்ப்பை டெலிகாஸ்ட் பண்ணிட்டாங்க......

:P :P

Relaxplzz

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள் இளவே...

Posted: 08 Oct 2014 03:55 AM PDT

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந் தென்றல் உன் மீது பண்பாடும்

இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந் தென்றல் உன் மீது பண்பாடும்

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்

மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்

விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதிலென்ன பாவம்
எதற்கிந்த சோகம் கிளியே..

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்

கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது
மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது
கடல்களில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது

நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி..
மறுவாசல் வைப்பான் இறைவன்

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந் தென்றல் உன் மீது பண்பாடும்

இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந் தென்றல் உன்மீது பண்பாடும்

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்

Relaxplzz


தமிழ் பாடல்கள்

:)

Posted: 08 Oct 2014 03:30 AM PDT

:)


"சாவுற காலம் தெரிஞ்சிட்டா - வாழ்கின்ற காலம் நரகமாயிடும்" இதை எழுதிய தலைவர் சுஜாத...

Posted: 08 Oct 2014 03:15 AM PDT

"சாவுற காலம் தெரிஞ்சிட்டா - வாழ்கின்ற காலம் நரகமாயிடும்" இதை எழுதிய தலைவர் சுஜாதா நம்முடன் இல்லை, ஆனாலும், இது இப்ப உண்மையாகி விட்டது.

பிரிட்டனில் ஒரு பிளட் டெஸ்ட்(blood test) 400 பவுன்டில் (34,000 ரூபாய்கள்) செய்கிறார்கள். இது டெலிமோர்ஸ் டெக்னலாஜி வகையை சேர்ந்தது.

இதன் மூலம் உடம்பில் இருக்கு அத்தனை நோய்கள், வயதுக்கு மீறிய மூப்பா, இளமையா, என்று கூறுவது மட்டுமில்லாமல் - உங்களின் இறப்பை துள்ளியமாக கணிக்க முடியும்.

இதை ஏற்கனவே பறவை மிருகங்கள் என டெஸ்ட் செய்து இப்போது மனிதர்களுக்கும் இதை வெற்றிகரமாக சோதனை செய்து வெற்றி கண்டுள்ளார்கள்.

டெஸ்டுக்கு எத்தனை பேர் தைரியமா போக ரெடி..?!

via Ravi Nag

Relaxplzz

இல்லத்தரசிகளுக்கு இனிய யோசனைகள்! பெண்கள் பொதுவாக சமையலில் வெளுத்து வாங்குவார்கள...

Posted: 08 Oct 2014 03:00 AM PDT

இல்லத்தரசிகளுக்கு இனிய யோசனைகள்!

பெண்கள் பொதுவாக சமையலில் வெளுத்து வாங்குவார்கள். அவங்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. இருந்தாலும் அவர்களின் சமையலுக்கு உதவதற்காக குட்டிக் குட்டி டிப்ஸ். பல பேருக்குத் தெரிஞ்சதும் இருக்கலாம், தெரியாததும் இருக்கலாம். உங்களுக்குத் தேவையான டிப்ஸை எடுத்துக்கோங்க.. குடும்பத்தாரின் பாராட்டை அள்ளிக்கோங்க!

* டீத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில்உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு வைத்திருந்தால் டீ ஏலக்காய் மணத்தோடு சுவையாக இருக்கும்.

* மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்துப் போய் நன்றாகப் பொரியாது. வெறும் வாணலியை அடுப்பில் வைத்துச் சூடேற்றி, அதில் வடகத்தைப் போட்டு, சற்றுப் புரட்டி எடுத்து விட்டு, எண்ணெயில் பொரித்தால் நன்றாகப் பொரியும்.

* தேங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்க நாம் அரைக்கும் சட்னியில் பாதி தேங்காயும், பாதி கொத்தமல்லியும் சேர்த்து அரைத்தால் மிகவும் ருசியாக இருக்கும்.

* வெங்காய ஊத்தப்பம் செய்யும்போது தோசை இரு புறமும் வெந்து இருந்தால்தான் சுவையாக இருக்கும். தோசையின் நடுப் பகுதியில் சிறு ஓட்டை போட்டு எண்ணெய் ஊற்றினால் விரைவில் வெந்தும், சுவையாகவும் இருக்கும்.

* தோசைக்கு ஊற வைக்கும்போது 1 கிலோவிற்கு 50 கிராம் வேர்க்கடலை, 50 கிராம் பட்டாணி சேர்த்து ஊற வைத்து அரைத்து மாவுடன் கலந்து தோசை வார்த்தால் நிறமான, சுவை அதிகமான, சத்து நிறைந்த தோசை ரெடி.

* சமைத்த சாதம் மிஞ்சிப் போய் விட்டால், அதைப் போல் இரண்டு பங்கு தண்ணீ­ரைக் கொதிக்க வைத்து, அதில் பழைய சாதத்தைக் கொட்டி, ஒரு கொதி வந்ததும் இறக்கி வடித்து விடவும். பின்னர் மறுபடியும் 5 நிமிடம் வடித்த சாதத்தை அடுப்பில் வைத்து இறக்கினால் நீர்ப்பசை அகன்று புதிதாகச் சமைத்ததைப் போல் இருக்கும்.

* வீட்டில் ஜாம் தயாரிக்க விரும்பினால் சரியாகப் பழுக்காத பழங்களையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் ஜாம் நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.

* காலிஃபிளவரை சமைக்கும் முன் அவற்றைக் கொஞ்சம் கொதிக்க வைத்த உப்பு நீரில் சிறிது நேரத்திற்கு முக்கி எடுக்கவும். அதனால் அந்த பூக்களுக்குள் உள்ள கண்ணுக்குத் தெரியாத சிறு பூச்சிகள் விலகிவிடும்.

* குக்கரில் பருப்பை சமைக்கும் போது, ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் தூளையும், ஒரு டீ ஸ்பூன் நெய்யையும் அதற்குள் சேர்த்து விடுங்கள். அதிலிருந்து வரும் மணத்திற்கே, அனைவரும் ஒரு பிடி பிடித்துவிடுவார்கள்.

* நன்றாகக் காய்ந்து போன பிரட், பன் போன்றவைகளை எடுத்துத் தண்ணீர் கலந்து பிசைந்து விடுங்கள். நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், பூண்டு போன்றவற்றுடன் கொஞ்சம் உப்பை சேர்த்து மாவாக ஆக்கி விடுங்கள். கொஞ்சம் எண்ணெயை சுட வைத்து இந்த கலவையை வடை சுடுவது போல் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து விடுங்கள். பஜ்ஜிகளுக்கு போட்டியாக சூப்பர் சுவையாக இருக்கும்.

* சப்பாத்திக்கு மாவு உருட்டும் போது அந்த உருட்டு பலகையின் கீழ் ஒரு சமையலறைத் துணியை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் அந்த பலகை ஆடாமலும் விலகாமலும் இருக்கும், நீங்களும் வேகமாக மாவைத் தேய்க்கலாம்

* வாழைத்தண்டுகள், கீரைத்தண்டுகள் மற்றும் கொத்துமல்லி இலைகள் வாடாமல் இருக்க அவற்றை அலுமினியம் காகிதத்தில் சுற்றி வைக்கலாம்.

* பழம், ஃப்ரூட் சாலட், ஜூஸ் ஆகியவற்றின் சுவையை அதிகரிக்க சிறிதளவு தேன் சேர்க்கலாம்.

* வீட்டிலேயே கேக் செய்யும் பேது, பேகிங் ஓவன் தட்டில் சரியாக எண்ணெய் அல்லது நெய் தடவியிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே பேக் செய்யத் தொடங்குங்கள்.

* தேங்காயை சரிபாதியாக உடைக்க தண்ணீரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.

* இனிப்புகள் தயாரிக்கும்போது சர்க்கரைக்குப் பதில் வெல்லம் அல்லது தேன் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.

* வெங்காயம் வதக்கும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் எளிதில் வதங்கி விடும்.

* ஊறுகாய் தயாரிக்கும்போது கைகளைப் பயன்படுத்தக் கூடாது மரத்தினால் ஆன கரண்டிகளையே பயன்படுத்துங்கள்.

* கோதுமை மாவு அரைக்கும்போது அதனுடன் சோயா பீன்ஸையும் சேர்த்து அரைத்தால் சப்பாத்திகள் ஊட்டம் கூடுவதுடன் ருசியும் அபாரமாக இருக்கும்.

* வெங்காயத்தைத் தோலோடு குளிர்ந்த நீரில் போட்டு பின்னர் நறுக்கினால் கண்களில் கண்ணீ­ர் வராது.

* பச்சை மிளகாய் ஒரு மாத காலத்திற்கு மேலாக கெடாமல் இருக்க ஒரு காகிதக் கவரில் சிறிய துளையிட்டு கவரில் பச்சை மிளகாய்களை அதில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி உப்பை கலக்கவும் பிறகு இதில் முட்டையை போடவும் முட்டை மூழ்கினால் அது புதிய முட்டை. மிதந்தால் பழைய முட்டை.

* இஞ்சி, பூண்டு, சட்னி தயாரிக்க இரண்டையும் 2க்கு மூன்று என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். இஞ்சியை குறைவாக பயன்படுத்தினால் பண்டம் ருசியாக இருக்கும்.

* காய்ந்த பழங்களைப் பராமரிக்க அதை வைத்திருக்கும் பாத்திரத்தில் 23 கிராம்புகளை போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு ருசி கெடாமல் இருக்கும்.

* கேக் பேக் செய்யும்போது தேவையான நேரத்திற்கு முன்பாகவே பேகிங் ஓவனைத் திறக்காதீர்கள்.

* தண்ணீரில் சிறிதளவு வினிகரைச் சேர்த்தால் விரிசல் விழுந்த முட்டையைக் கூட சமைக்கலாம்.

* முட்டைக்கோசை சமைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால் அதன் மணம் மாறாமல் இருக்கும்.

* உருளைக் கிழங்குகளை பிளாஸ்டிக் கவர்களில் போட்டு வைக்கக்கூடாது. ஏனெனில் அதிலுள்ள ஈரத்தன்மையால் கிழங்கு அழுகி விடும் வாய்ப்பு இருக்கிறது.

Relaxplzz


"வீட்டு டிப்ஸ்" - "HOME TIPS"

புரியாணி எச்சங்கள் கொட்டப்பட்டு பள்ளங்கள் திடலாகிறது இங்கே.. எச்சிலே ஊறாமல் பச்...

Posted: 08 Oct 2014 02:45 AM PDT

புரியாணி எச்சங்கள் கொட்டப்பட்டு
பள்ளங்கள் திடலாகிறது இங்கே..

எச்சிலே ஊறாமல் பச்சிளம் ஒன்று
பரிதாப மரணமாகிறது அங்கே ..

#மரத்துப்போன_மனிதாபிமானம்

Relaxplzz


:)

Posted: 08 Oct 2014 02:30 AM PDT

:)


பொம்பளைன்னா பொறுமை வேணும் அவசர பட கூடாது. அடக்கம் வேணும் ஆத்திரம் பட கூடாது......

Posted: 08 Oct 2014 02:15 AM PDT

பொம்பளைன்னா பொறுமை வேணும்
அவசர பட கூடாது.

அடக்கம் வேணும்
ஆத்திரம் பட கூடாது...

அமைதி வேணும்
அதிகாரம் பண்ண கூடாது...

கட்டுபாடு வேணும்
இப்படி கத்‌த கூடாது...

பயபக்தியா இருக்கணும்
இப்படி பஜாரித்தனம் பண்ண கூடாது...

மொத்ததுல பொம்பளை பொம்பளையா இருக்கணும்...

இந்த டயலாக்கை ரஜினி பேசுனா கை தட்டி ரசிக்குதுங்க பொண்ணுங்க... புருசன் பேசுனா கையை முறுக்கி நெஞ்சுலையே குத்துதுங்க...

#என்னமோ போடா கொமாரு... ;-)

- சதீஷ் குமார் தேவகோட்டை

"எதுக்கும் பயப்படாதீங்க!” டிராஃபிக் ராமசாமி... 'அட, அவருக்கு வேற வேலை இல்லைப்ப...

Posted: 08 Oct 2014 02:00 AM PDT

"எதுக்கும் பயப்படாதீங்க!"

டிராஃபிக் ராமசாமி...

'அட, அவருக்கு வேற வேலை இல்லைப்பா... சும்மா எதுனா கேஸ் போட்டுட்டே இருப்பார்!' என அலுத்துக்கொள்வார்கள் சிலர். ஆனால், அந்த ஒரு நபரின் முனைப்புதான், தாதுமணல் கொள்ளை விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தைத் தலையிடவைத்து, ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையில் ஒட்டுமொத்த வில்லங்கத்தையும் மீண்டும் விசாரிக்க வைத்திருக்கிறது. ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை ஆரம்ப நாட்களில் விறுவிறுக்கவைத்து, இப்போது இறுதிக்கட்டத்தை எட்டவைத்திருக்கிறது. சென்னையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என இவர் தொடர்ந்த வழக்குதான், தலைநகரில் விதிமீறல் கட்டடங்களுக்குக் கடிவாளம் போட்டது. நோக்கு வர்மம், களறி சண்டை என சட்டத்தைக் கையில் எடுக்காமல், சட்டரீதியாகப் போராடும் இந்தத் 'தமிழன்' தாத்தாவுக்கு வயது 82.

என்னைச் சுத்தி ஏதோ ஒரு விஷயம் சரியில்லைனா, நான்தானே அதைச் சரி செய்யணும். 'என் வீட்டுக்கு வெளியே என்ன நடந்தா எனக்கு என்ன'னு போக முடியுமா? காந்திஜி அப்படி நினைச்சிருந்தா, இப்போ நான், நீங்கள்லாம் இப்படி சுதந்திரமா உலாத்திட்டு இருக்க முடியுமா? இதே சென்னையில்தான் நான் பிறந்தேன்; வளர்ந்தேன். அப்போ எல்லாம் இந்த ஊர் எப்படி இருக்கும் தெரியுமா? பொதுமக்களும் அரசாங்க ஊழியர்களும் எவ்வளவு பொறுப்போடு இருப்பாங்க தெரியுமா? பின்னி மில்லில் வேலை பார்த்தேன். ஓய்வுக்குப் பின்னாடி ஊர்க்காவல் படையில் சேர்ந்தேன். தமிழ்நாட்டில் ஊர்க்காவல் படையைத் தொடங்கினதே நான்தான். இப்போ அது போலீஸுக்கு கமிஷன் வசூலிச்சுத் தரும் அமைப்பா மாறிடுச்சு.

மனைவி, ஒரே பொண்ணு. பொண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. நான் போடும் பொதுநல வழக்குகளால் என் குடும்பத்துக்கு ஏகப்பட்ட பிரச்னைகள். வீட்டுக்கே வந்து மிரட்டுவார்கள்; அடிப்பார்கள். அதனால் என் மனைவி பயந்தார். குடும்பமா, சமூகமானு யோசிச்சப்ப, சமூகம்தான் முக்கியம்னு முடிவு எடுத்தேன். இப்போ 12 வருஷமா ஒரு மாடி ரூம்ல தங்கித்தான் என் வேலைகளைப் பார்த்துட்டு இருக்கேன். காலை, மதியம், இரவு... மூணு வேளையும் காபி, மோர், இவைதான் எனக்கு நீர், ஆகாரம் எல்லாம். ரெண்டையும் மாத்தி மாத்திக் குடிச்சுப்பேன். தாம்பரத்தைத் தாண்டினா மட்டும், காலையில் ரெண்டு இட்லி சாப்பிடுவேன். மூணு வேளை சாப்பிட்டு, பல வருஷங்கள் ஆச்சு. ஒருவேளை சாப்பாட்டு மேல ஆசையில்லாம போனாத்தான், சமூகம் மேல அக்கறை வருமோ என்னவோ!''

''பயப்படாதீங்க. எதுவா இருந்தாலும் விடாப்பிடியா எதிர்த்து நில்லுங்க. எதிர்ப்புகள் விலகிப்போகும். சொந்த இழப்புகளைச் சந்திக்க தயாரா இருங்க. எதிராளி பெரிய ஆளா இருந்தா, அஞ்சி ஒதுங்கிடாதீங்க. நியாயம் நம் பக்கம் இருக்குனு துணிஞ்சு இறங்குங்க. இதுக்கெல்லாம் தயாரா இருந்தா, யார் வேணும்னாலும் சமுதாயப் பணி செய்ய வரலாம்!''

Thanks Vikatan


உங்க lover'ட குணம் எப்டி இருக்கணும் னு ஆசைப்படுறிங்க. .! ? ? ? 1 - சந்தோஸ் சுப்...

Posted: 08 Oct 2014 01:45 AM PDT

உங்க lover'ட குணம் எப்டி இருக்கணும் னு ஆசைப்படுறிங்க. .! ? ? ?

1 - சந்தோஸ் சுப்ரமணியம் ஜெனிலியா.
2 - அலைபாயுதே சாலினி.
3 - ராஜா ராணி நஸ்ரியா.
4 - காதல் சுகமானது சினேகா.
5 - பிரியமானவளே. சிம்ரன்.
6 - எங்கேயும் காதல் ஹன்சிகா.
7 - மௌனம் பேசியதே திரிஷா.
8 - துப்பாக்கி காஜல்.
9 - களவாணி ஓவியா.
10 - காதல் கீதல் னு எவணாச்சும் வந்திங்க..... கொய்யால அழிகின தக்காளியாலயே அடிப்பேன். ;-)
11. " என் மனைவிதான் என் காதலி."

பதில் சொல்லுங்க பார்க்கலாம்!

Relaxplzz