ஜெர்மனியில் நடந்த சம்பவத்தோடு நம்மை ஒப்பீடு செய்து கொள்வோம் அண்மையில் ஓர் ஆங்கி... Posted: 06 Aug 2014 08:59 AM PDT ஜெர்மனியில் நடந்த சம்பவத்தோடு நம்மை ஒப்பீடு செய்து கொள்வோம் அண்மையில் ஓர் ஆங்கிலப் பத்திரிக்கையில் நான் படித்த சேதி ஒர் இந்தியர் ஜெர்மனி சென்றுள்ளார் ... அங்குள்ள ஹேம்பர்க் நகரத்தில் ஒர் உணவகத்தில் நண்பருடன் உணவருந்தச் சென்றுள்ளார் உணவகம் காலியாக இருந்திருக்கிறது அங்குள்ள ஒரு டேபிளில் ஒரு ஜோடி இரண்டு உணவு வகை மற்றும் இரண்டு குடிபானங்கள் மட்டுமே அவர்களுக்கு போதுமா என அவர் ஆச்சர்யப்பட்டாராம் மற்றொரு டேபிளில் வயதான பெண்கள் உணவு வகையை வெயிட்டர் பரிமாறுகிறார் தேவையான அளவு அனைவருக்கும் அழகாக பங்கிட்டார் யாரும் உணவை வீண் செய்யவில்லை நாங்கள் பசியோடிருந்ததால் அதிகமான உணவுகளை ஆர்டர் செய்து அதில் 3ல் 1 பங்கு உணவை உண்ணாமல் எழுந்தோம் உணவகத்தை விட்டு செல்ல எத்தனித்த போது ஒரு மூதாட்டி வந்து உணவை வீணடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தாள் "எங்கள் உணவுக்கு நாங்கள் காசு தந்தோம். நாங்கள் உணவை வீணடிப்பது பற்றி கேள்வி கேட்பது உங்களுக்கு தேவையில்லாத வேலை" என்றாராம் அவர் நண்பர் அந்த வயதான பெண்களில் ஒருத்தி மொபைலை எடுத்து ஒரு நம்பரை அழைத்தாள் சிறிது நேரத்தில் சீருடை அணிந்த சமுதாயத்துறை நபர் ஒருவர் வந்தார் வந்தவர் நடந்த விசயங்களை கேள்விப்பட்டு எங்களுக்கு 50 யுரோ ( அதாவது இந்திய மதிப்பில் ஏறக்குறைய 6 அல்லது 7 ஆயிரங்கள்) அபராதம் விதித்தார் நாங்கள் அமைதி காத்தோம் வந்தவர் உரத்த குரலில் "உங்களால் எந்த அளவு சாப்பிட இயலுமோ அவ்வளவு ஆர்டர் செய்யுங்கள் பணம் உங்களுடையது தான் ஆனால் இந்த உணவுக்கான ஆதாரங்கள் (அதாவது காய்கறி அரிசி தண்ணீர் மின்சாரம் ) சமுதாயத்தைச் சார்ந்தவை ...... சமுதாயத்திற்கான ஆதாரங்களை வீணடிப்பதில் உங்களுக்கு எந்த உரிமையும இல்லை என்றாராம்.. - Musthafa Bin Shahul. "உலகம் இவ்வளவு தான்" |
கடவுளுக்கே கிடைக்காத ஒரு இன்பம், குழந்தையின் முத்தம்... <3 Posted: 06 Aug 2014 08:50 AM PDT கடவுளுக்கே கிடைக்காத ஒரு இன்பம், குழந்தையின் முத்தம்... ♥ அன்பியல் - 1 |
:P :P Posted: 06 Aug 2014 08:40 AM PDT :P :P  |
(y) Posted: 06 Aug 2014 08:30 AM PDT (y)  |
கணவன் : டாக்டர் என் வொய்ஃப் ரொம்ப வயிறு வலிக்குதுனு சொல்றா... டாக்டர் : அப்படியா... Posted: 06 Aug 2014 08:15 AM PDT கணவன் : டாக்டர் என் வொய்ஃப் ரொம்ப வயிறு வலிக்குதுனு சொல்றா... டாக்டர் : அப்படியா...? கணவன் : ஆமாம் டாக்டர். அவ சொல்ற அறிகுறியை எல்லாம் வச்சுப் பார்க்கும் போது அவளுக்கு அப்பண்டீசா இருக்குமோனு எனக்கு சந்தேகமா இருக்கு... டாக்டர் லேசாக டென்சனாகிறார். டாக்டர் : என்ன மிஸ்டர் விவரம் இல்லாதவரா இருக்கீங்களே... போன வருசம் தான உங்க மனைவிக்கு அப்பண்டீஸ் ஆபரேஷன் பண்ணினோம். யாருக்காவது ரெண்டாவது தடவை அப்பண்டீஸ் வந்ததுனு கேள்விப் பட்டிருக்கீங்களா.....? கணவன் : (நிதானமாக மீண்டும் அதையே சொல்கிறான்) இல்ல டாக்டர் அவ படுற அவஸ்தையைப் பார்த்தா நிச்சயமா அவளுக்கு அப்பண்டீசா தான் இருக்கும்னு நான் நினைக்குறேன். டாக்டர் இம்முறை கோபத்தின் எல்லைக்கே போகிறார். டாக்டர் : உனக்கென்ன பைத்தியமா... நான் தான் சொல்கிறேனே ரெண்டாவது முறை அப்பண்டீஸ் வராது என்று. கணவன் : எனக்குப் பைத்தியம் எல்லாம் இல்லை டாக்டர். ஆனபோதும், நான் உறுதியாகச் சொல்கிறேன். என் மனைவி அப்பண்டீஸ் வலியால் தான் துடிக்கிறாள். ஏனென்றால்... டாக்டர் : ஏனென்றால்....? கணவன் : ஏனென்றால் நீங்கள் ஆபரேஷன் செய்தது என் முதல் மனைவிக்கு. இவள் என் இரண்டாவது மனைவி ! குசும்பு... 2 |
ஐந்து பேர் கலந்துகொண்ட ஓட்டபந்தயத்தில்., ஒருவனுக்கு கடைசி இடந்தான் கிடைத்தது ..... Posted: 06 Aug 2014 08:00 AM PDT ஐந்து பேர் கலந்துகொண்ட ஓட்டபந்தயத்தில்., ஒருவனுக்கு கடைசி இடந்தான் கிடைத்தது .. நண்பர்கள் கிண்டல் செய்தார்கள் அவன் கவலை கொள்ளவில்லை .. அமைதியாக அவர்களை பார்த்து சொன்னான் .. வேடிக்கை பார்த்திட மட்டுமே முடிந்த உங்களால் தோல்வி அடையக்கூட போராட தைரியமில்லையே... வெற்றியோ தோல்வியோ என்னையும் பார்க்க.,பல்லாயிரம் ரசிகர்கள் அமர்ந்து இருந்தார்கள் அல்லவா.. அந்த வெற்றியே எனக்கு போதுமென்றான் ..! தன்னம்பிக்கையே வெற்றியின் முதல் படி (y) (y) # படித்ததில் பிடித்தது # - 3 |
எப்படியெல்லாம் யோசிக்கிறான்... Posted: 06 Aug 2014 07:45 AM PDT |
:) Posted: 06 Aug 2014 07:30 AM PDT :)  |
வேடிக்கை மனிதர்கள்! மனிதர்கள் பலவிதம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம்… இந்த விடுமுற... Posted: 06 Aug 2014 07:15 AM PDT வேடிக்கை மனிதர்கள்! மனிதர்கள் பலவிதம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம்… இந்த விடுமுறைநாளில் ஊருக்குச் சென்றேன். 3 நாள் விடுமுறையதனால் இரவு 12க்குக் கூட மக்கள் கூட்டம் அலைமோதியது. பேருந்தில் இடம்பிடிக்க ஒவ்வொருவரும் செய்யும் வீரதீர செயல்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருந்தது. ² பேருந்தின் சன்னல் வழியே ஏதோ ஒரு பொருளைப் போட்டு இடம்பிடிப்பவர்களைப் பார்த்திருக்கிறேன்…… அந்தப் பொருளுக்குப் பதில் தன் குழந்தையை வைத்து இடம்பிடிப்பவர்களைப் பார்த்து வியந்துபோனேன்!! ² பேருந்து நிற்கும் முன்னர் ஏறுபவர்களையும் இறங்குபவர்களையும் பார்த்திருக்கிறேன்….. ஒருவர் பேருந்து நிற்கும் முன்னர் படிவழியே ஏறமுடியாத அளவுக்குக் கூட்டமானதால்………. மெதுவாக வந்த பேருந்தின் வலதுபுறம் வந்து பின்புற சக்கரத்தில் கால் வைத்து சன்னல் வழியே ஏறி அமர்ந்து தன்னைத்தானே வியந்துகொண்டு பெருமிதத்துடன் மற்றவர்களைப் பார்த்தார்…!! பேருந்துகளில் செல்லத்தக்க கூட்டம் நாமக்கல் பேருந்து நிலையத்தில் காத்திருந்தது. நானும் அந்தக் கூட்டத்தில் ஒருவனாக இருந்தேன். ஒரு பேருந்து வந்தது…. நிலையத்தின் முகப்பிலேயே இருந்தநான் வழியிலேயே ஏறி அமர்ந்துகொண்டேன். ஒருவருக்கொருவர் போட்டிபோட்டுக்கொண்டு ஏறி ஒருவழியாக பேருந்து நிற்கும் முன்னரே அமர்ந்துகொண்டார்கள்… ஆனால் அந்தப்பேருந்து 30 நிமிடங்களுக்குப் பின்னர்தான் செல்லும் என்று சொல்லிவிட்டு நடத்துனரும், ஓட்டுநரும் எங்கோ சென்றுவிட்டனர். வெறுப்படைந்த மக்கள் அரசுமுதல் பணியாளர்கள் வரை யார் யாரையோ திட்டினார்கள். மக்களை மேலும் வெறுப்பேற்றும் விதமாக…. அந்த 30 நிமிடத்தில் 5 பேருந்துகள் வந்து மக்களை ஏற்றிக்கொண்டு உடனேயே சென்றுவிட்டன. இறங்கி அந்தப் பேருந்துகளி்ல் ஏறிச்சென்றவர்கள் சிலர். (சரியான நேரத்தில் சரியான முடிவெடுப்பவர்கள்!) நேரமானாலும் பரவாயில்லை இதே பேருந்தில் சென்றுவி்டலாம் என்றிருந்தனர் சிலர் (தெளிவாக முடிவெடுப்பர்கள்) இறங்கி ஏறுவோமா? வேண்டாமா? என்று சிந்தித்துக்கொண்டே பேசாமல் (பேசிக்கொண்டே) இருந்துவிட்டவர்கள் பலர் (இவர்களுக்கு முடிவெடுக்கத்தெரியாது. காலம் தான் இவர்களுக்கு வழிசொல்லும்) எதைப் பற்றியும் கவலைப் படாமல் தூங்கி அருகில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் உரிமையுடன் தோளில் சாய்ந்துகொண்டவர்கள் சிலர்!!(எங்கிருந்துதான் இவர்களுக்கு இப்படித் தூக்கம் வருகிறதோ!) நள்ளிரவு என்றும் பாராமல் பலவித உணவுப்பொருள்களை தன் குடும்பத்துடன் பெரும் சத்தத்துடன் வயிற்றில் அள்ளிப் போட்டுக்கொண்டிருந்தனர் சிலர்!! ( பாவம் அவர்களுக்கு என்ன பசியோ!) அந்தப் பேருந்தில் நடக்கும் ஒவ்வொரு காட்சியையும் பார்த்து, கேட்டுக் கொண்டே நேரமானாலும் பரவாயில்லை இதே பேருந்தில் சென்றுவிடலாம் என்று காத்திருந்தேன்.. மக்கள் கோபத்தின் உச்சத்துக்கே சென்றுவிட்டார்கள். எங்கடா நடத்துனரையும், ஓட்டுநரையும் காணோம்…. நேரமாகும்னா வண்டியை ஏன்டா பேருந்து நிலையத்துக்குக் கொண்டுவரீங்க? என்றார் ஒருவர் பேருந்தில் ஏன்டா பெயர்ப்பலகை போட்டீங்க? வண்டியை எடுக்கும் போது வெச்சிக்க வேண்டியதுதானடா என்றார் ஒருவர்? ஆளாளுக்குப் பேசிக்கொண்டிருக்கும் போதே ஒருவழியாக ஓட்டுநரும், நடத்துனரும் உள்ளே வந்தார்கள்.. எல்லோரின் கோபமும் நடத்துனர் மீது திரும்பியது. பலரும் திட்டிக்கொண்டிருக்க ஒருவர் நடத்துனரைப் பார்த்து…. ஏன்யா என்னயா நினைச்சிட்டிருக்கீங்க? நீங்க பாட்டுக்க எனக்கென்னன்னு வண்டிய நிறுத்திட்டுப் போய்டீங்க? பெயர்பலகை வைக்காவிட்டால் நாங்க ஏறியிருப்போமா? வேறு பேருந்தில் போயிருப்போம்ல. வண்டி போயிடுச்சு? என்று வாய்மூடாமல் பேசிக்கொண்டிருந்தார்….. அதானே நல்லா கேளுங்க என்று பிறரும் அவரை உசுப்பேத்திவிட்டனர். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த நடத்துனர்…. அமைதியாக…. நான் தூங்கி 3 நாளாச்சுங்க.. அரசுப் பேருந்து அதனால் நடத்துனர் பற்றாக்குறை.. காலைல 12 மணிக்குச் சாப்பிட்டதுங்க.. இரவு 12 மணியாச்சு பசிதாங்கமுடியாம சாப்பிட்டு வந்தேங்க…. அவ்வளவு தான் வண்டிய எடுத்தாச்சு என்றார்.. அதற்கு மேல் யாரும் ஒருவார்த்தை கூட பேசவில்லை. பேருந்து அமைதியாகச் செல்ல ஆரம்பித்தது. மக்கள் கோபமாகப் பேசும் போது நடத்துனரும் கோபமா…. உங்கள யாருய்யா ஏறச் சொன்னது? நான்தான் அப்பவே சொன்னேன்லயா 30 நிமிடம் ஆகும்னு? என்று ஏதாவது பதில் பேசியிருந்தால் வார்த்தை வளரும், கோபம் அதிகரிக்கும். இந்தச் சூழலை மிக அழகாகக் கையாண்ட நடத்துனரின் பண்பு வியப்பிற்குரியாதாக இருந்தது. - முனைவர்.இரா.குணசீலன் |
"உணவுப் பொருட்களும் அவற்றின் தன்மைகளும்" உடற்சூட்டை தணிப்பவை பச்சைப்பயிறு, மோர... Posted: 06 Aug 2014 07:03 AM PDT "உணவுப் பொருட்களும் அவற்றின் தன்மைகளும்" உடற்சூட்டை தணிப்பவை பச்சைப்பயிறு, மோர், உளுந்தவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம் நாவற்பழம், கோவைக்காய், இளநீர் ருசியின்மையைப் போக்குபவை புதினா, மல்லி, கறிவேப்பிலை, நெல்லிக்காய், எலுமிச்சை, மாவடு, திராட்சை, வெல்லம், கருப்பட்டி, மிளகு, நெற்பொறி சிவப்பணு உற்பத்திக்கு புடலைங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம் கேழ்வரகு,பசலைக்கீரை மருந்தை முறிக்கும் உணவுகள் அகத்தி, பாகற்காய், வேப்பிலை, நெய், கடலைப்பருப்பு, கொத்தவரை, எருமைப்பால் . சோம்பு, வெள்ளரிக்காய் விஷத்தை நீக்கும் உணவுகள் வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், காயம் பித்தம் தணிப்பவை சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைவற்றல் செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை "நலமுடன் வாழ" - 2 |
அழகை பார்த்து வருவதுதான் காதல் என்றால் அழகில்லாதவர்கள் காதலிக்க முடியாது...!!!... Posted: 06 Aug 2014 06:46 AM PDT அழகை பார்த்து வருவதுதான் காதல் என்றால் அழகில்லாதவர்கள் காதலிக்க முடியாது...!!! பணத்தை பார்த்து வருவதுதான் காதல் என்றால் ஏழைகளுக்கு காதல் வராது...!!! உண்மையில் காதல் என்பது என்ன? அன்பிற்காக ஏங்கிகொண்டிருக்கும் ஒரு இதயத்திற்கு உண்மையான அன்பு எங்கிருந்து பெறப்படுகிறதோ அங்கு உருவாகும் ஒரு உன்னதமான காதல்...!!! - ஐஸ்வர்யா நாச்சியார். "சில நியாயங்கள் - யதார்த்தங்கள்" - 2 |
:) Posted: 06 Aug 2014 06:30 AM PDT :)  |
பக்கத்து வீட்டு பையன் பரிட்சைக்கு படித்துக் கொண்டிருந்தான். "தம்பி ... உனக்கு ப... Posted: 06 Aug 2014 06:15 AM PDT பக்கத்து வீட்டு பையன் பரிட்சைக்கு படித்துக் கொண்டிருந்தான். "தம்பி ... உனக்கு பரிட்சை எப்படி எழுதணும்னு தெரியுமா?"ன்னு கேட்டேன் நான். "சொல்லுங்க ... தெரிஞ்சிக்கிறேன்" "தம்பி, பரிட்சைக்கு மொத்தம் 3 மணி நேரம் கொடுப்பாங்க ..." "ம்ம்ம்ம்" "முதல் 1 மணி நேரத்துல 10 மார்க் கேள்விய எழுதணும்" "ம்ம்ம்" "இரண்டாவது 1 மணி நேரத்துல 5 மார்க் கேள்விய எழுதணும்" "ம்ம்ம்" "அப்புறம் அரை மணி நேரத்துல் 2 மார்க் கேள்விய எழுதணும்" "ம்ம்ம்" "கடைசி அரை மணி நேரத்துல 1 மார்க் கேள்விய எழுதணும் ... இதுல ஏதாவது உனக்கு சந்தேகம் இருந்தா கேளு".. "ஒரே ஒரு சந்தேகம் தான் இருக்கு" "என்ன?" . . . "மூணு மணி நேரமும் கேள்வியயே எழுதிகிட்டிருந்தா பதில் எப்போ எழுதுறது??".... :O :O #இது சுப்பர் கேள்வி தம்பின்னு சொல்லிட்டு எஸ்கேப் :P Relaxplzz |
5 முற்றிலும் உதடுகள் ஒட்டாக் குறட்பாக்கள் ! 310 இறந்தார் இறந்தார் அனையர் சினத்... Posted: 06 Aug 2014 05:58 AM PDT 5 முற்றிலும் உதடுகள் ஒட்டாக் குறட்பாக்கள் ! 310 இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை 341 யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன் 489 எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற்கு அரிய செயல் 1082 நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக்கொண் டன்னது உடைத்து 1296 தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத் தினிய இருந்ததுஎன் நெஞ்சு "தமிழ் - தமிழர் பெருமை" - 1 |
உங்கள் பார்வையில் தமிழகத்தின் மிக அழகான ஊர் எது...? Posted: 06 Aug 2014 05:44 AM PDT |
ஆயிரத்தில் ஒரு வார்த்தை Posted: 06 Aug 2014 05:30 AM PDT ஆயிரத்தில் ஒரு வார்த்தை  |
காதலிக்க பெண்கள் தேவை: (இந்த விளம்பரத்தை பாருங்க) 1.10th பெயிலாயிருக்கணும் (நாங... Posted: 06 Aug 2014 05:15 AM PDT காதலிக்க பெண்கள் தேவை: (இந்த விளம்பரத்தை பாருங்க) 1.10th பெயிலாயிருக்கணும் (நாங்க எல்லாம் 7வது பாஸ் , பாஸ் தான் பெருசு அதான்.....) 2.அப்பன் வசதியா இருக்கணும் (வீட்டோட மாப்பிள்ளையா செட்டில் ஆகலாம் ல.....) 3.அப்பா செல்லமா இருக்கணும் (செலவுக்கு பாக்கெட் மணி கிடைக்கும்) 4.மொக்க போடா தெரியனும் (நேரம் போகணும் ல) 5.பொண்ணு அழகா இருக்கணும் (நாலு பேரு கிட்ட பெருமையா சொல்லணும் ல) 6.குறைந்தது ஒரு தங்கை இருக்கணும் (அட போங்கப்பா கூச்சமா இருக்கு) 7.இரு சக்கர வாகனம் இருக்க கூடாது (நாங்க லிப்ட் குடுத்தா தான் கிக்) 8.அதிக தோழிகள் இருக்கணும் (கண்ணுக்கு குளிர்ச்சியா சைட் அடிக்கலாம் ல) 9.ஆண் நண்பர்கள் இருக்க கூடாது (போட்டி லாம் போட முடியாது) 10.பவர் ஸ்டாரின் ரசிகையா இருக்கணும் (அப்பத்தான் தியேட்டர்லயும் காதல் பண்ணலாம்) #இப்படிக்கு காதலிக்க பெண் கிடைக்காதோர் சங்கம் :P :P - Vasantha kumaran குசும்பு... 3 |
இமயமலைச் சாரலில் 20 வருடங்களுக்கு ஒரு முறை மலரும் 'நரிலதா மலர்' அசப்பில் பெண் போ... Posted: 06 Aug 2014 05:03 AM PDT இமயமலைச் சாரலில் 20 வருடங்களுக்கு ஒரு முறை மலரும் 'நரிலதா மலர்' அசப்பில் பெண் போலவே இருக்கும். The Narilatha flowering plant is said to grow in the hilly slopes of Himalayas in India and is understood to bloom once in two decades only; in other words it blossoms into a lady like flower after a 20-year interval. அரிய தகவல்கள் |
ஒற்றுமைக்கு..........காகம். அமைதிக்கு..............புறா உழைப்புக்கு............... Posted: 06 Aug 2014 04:44 AM PDT ஒற்றுமைக்கு..........காகம். அமைதிக்கு..............புறா உழைப்புக்கு............எறும்பு தன்மானத்திற்கு.....கவரிமான் சுறுசுறுப்புக்கு.........தேனீ தந்திரத்திற்கு..........நரி பேச்சுக்கு.................கிளி பாட்டுக்கு...............குயில் ஆடலுக்கு...............மயில் எதற்க்கு மனிதன்...? தகவல் துணுக்குகள் |
:) Posted: 06 Aug 2014 04:30 AM PDT :)  |
*மகளை கொஞ்சும் போது குத்தக் கூடாது என்பதற்காக தினமும் சவரம் செய்வது தந்தையின் பா... Posted: 06 Aug 2014 04:15 AM PDT *மகளை கொஞ்சும் போது குத்தக் கூடாது என்பதற்காக தினமும் சவரம் செய்வது தந்தையின் பாசம். ♥ *மகளுக்கு குடையாக வேண்டும் என்றே சேலை முந்தானையை பெரிதாக விட்டு சேலை கட்டுவது அன்னையின் பாசம். ♥ *பேத்திக்கு தொட்டில் கட்ட வேண்டும் என்றே தன் மணநாள் பட்டுச் சேலையை பத்திரப்படுத்துவது பாட்டியின் பாசம். ♥ *பேரனுக்கு தும்மல் வந்து விடும் என்று அவனைக் கண்டதும் மூக்குப் பொடியை ஒளித்து வைப்பது தாத்தாவின் பாசம். ♥ *தங்கைக்காக கிரிக்கெட் சேனலை விட்டுகொடுத்து சேனலை மாற்றுவது அண்ணனின் பாசம். ♥ *அண்ணனின் தவறுக்கு தந்தையிடம் திட்டு வாங்குவது தங்கையின் பாசம். ♥ *தனக்கு பிடித்ததை தன் தம்பிக்கு கொடுத்து அழகு பார்ப்பது அக்காவின் பாசம். ♥ # சொர்க்கத்தை மண்ணில் காட்டுவது பாசம் நிறைந்த குடும்பம். ♥ ~வல்வை |
இழப்பதற்கு ஒன்றுமில்லை ஜெயிப்பதற்கு உலகமே இருக்கிறது .... குடும்ப வறுமையால் சல... Posted: 06 Aug 2014 03:59 AM PDT இழப்பதற்கு ஒன்றுமில்லை ஜெயிப்பதற்கு உலகமே இருக்கிறது .... குடும்ப வறுமையால் சலூன் கடை நடத்தி கட்டிங், சேவிங் செய்வதில் பட்டதாரி இளம்பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட மேற்குபல்லடம் முனியப்பன்கோயில் வீதியை சேர்ந்த தங்கவேலு மகள் தேவி (30). பிகாம் பட்டதாரியான இவர், அங்கு சலூன் கடை நடத்தி வருகிறார். ஆண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் முடிவெட்டுகிறார். ஷேவிங் செய்கிறார். இவரது தொழில் நேர்த்தியை கேள்விப்பட்டு ஏராளமானோர் வாடிக்கையாளராகி உள்ளனர். பட்டதாரி பெண் தைரியமாக சலூன் தொடங்கி இருப்பது இப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தேவி கூறியதாவது: அரசு வேலைக்கு பலமுறை முயன்றும் கிடைக்கவில்லை. குடும்ப வறுமை வாட்டியது. தந்தை சர்க்கரை நோயாளி என்பதால், தந்தையின் தொழிலை கையில் எடுத்தேன். சிறுவயதில் இருந்தே அவரது பணியை பார்த்து வந்த எனக்கு தற்போது கை கொடுக்கிறது. தொடக்க நாட்களில் ஆண்கள் வரவே கூச்சப்பட்டனர். சிலர் கேலியும் கிண்டலும் செய்தனர். ஆனாலும் நான் மனம் தளரவில்லை. சீரான முடிவெட்டை பார்த்து, நாளாக நாளாகத்தான் வரத்துவங்கினர் என்றார். வாழ்த்துவோமே ...... வாழ்த்துக்கள் சகோதரி .... (y) "சாதனையாளர்கள்" |
தற்போதைய தமிழகம் .. புரிஞ்சவங்க மட்டும் லைக் போடுங்க நண்பர்களே . (y) Posted: 06 Aug 2014 03:45 AM PDT தற்போதைய தமிழகம் .. புரிஞ்சவங்க மட்டும் லைக் போடுங்க நண்பர்களே . (y)  |
(y) Posted: 06 Aug 2014 03:30 AM PDT (y)  |
"என் கணவர் தோசை சுட்டுப் போட்டுக்கிட்டே இருப்பார். எத்தனை-ன்னு கணக்குப் பார்க்கம... Posted: 06 Aug 2014 03:19 AM PDT "என் கணவர் தோசை சுட்டுப் போட்டுக்கிட்டே இருப்பார். எத்தனை-ன்னு கணக்குப் பார்க்கமாட்டார்"..... "ஏன்" ? "அவருக்குச் 'சுட்டுப் போட்டாலும் கணக்கு வராது' அதான்"..!!! :P :P |
ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி? அன்றாட வாழ்... Posted: 06 Aug 2014 03:03 AM PDT ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி? அன்றாட வாழ்வில் நாம் பல தேவைகளுக்காக பல வெப்சைட்டுகளை உபயோகித்து வருகின்றோம். அது சேட் செய்வதற்காக இருக்கலாம், பாடல்களை படங்களை டவுன்லோட் செய்வதற்காக இருக்கலாம் அல்லது வீறு எதோ நமக்கு தேவைப்படும் விசயங்களுக்காக வெப்சைட்டுகளை உபயோகிக்கின்றோம். என்னதான் தினமும் நாம் வெப்சைட்டுகளை தினமும் உபயோகித்து வந்தாலும். அந்த வெப்சைட்டினை நடத்துபவர் யார், அந்த வெப்சைட் எங்கிருந்து செயல்படுகிறது போன்ற விபரங்கள் நமக்கு தெரிவதில்லை. ஆனால் அவற்றை தெரிந்துகொள்ளும் ஆர்வம் நம்மில் அனைவரிடமும் இருப்பது என்னமோ உண்மைதான். அதற்கான வழி தெரியாமல்தான் நமது ஆர்வத்தை அப்படியே முடக்கிவிடுகின்றோம். ஒரு வெப்சைட்டினை பற்றிய முழுவிவரங்களை அறிதுகொள்ளவும் வழி இருக்கின்றது நண்பர்களே.... அது எப்படி என்று இங்கே பாப்போம். Whois33.com நமக்கு இந்த சேவையினை இலவசமாக வழங்குகின்றனர். இந்த வெப்சைட்டிற்கு சென்று யார் வேண்டுமானாலும் எந்த வெப்சைட் பற்றிய தகவல்களையும் ஒரு நொடிப்பொழுதில் தெரிந்துகொள்ள முடியும். Whois33.com க்கு சென்று நமக்கு எந்த வெப்சைட் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமோ அந்த வெப்சைட்டின் முகவரியினை டைப் செய்து சர்ச் கொடுத்தால் போதும் ஓரிரு வினாடிகளில் அந்த வேப்சைட்டினை பற்றிய முழுவிவரமும் தோன்றும். தகவல் தொழிநுட்பம் |
சாலையில் அடிபட்டுக்கிடந்தால் மனிதனை மனிதனே காப்பாற்றாத இந்த காலத்தில்... படம் 1... Posted: 06 Aug 2014 02:43 AM PDT சாலையில் அடிபட்டுக்கிடந்தால் மனிதனை மனிதனே காப்பாற்றாத இந்த காலத்தில்... படம் 1 : தன் இனத்திற்கு சம்மந்தமே இல்லாத புறா ஒன்று , கயிறு ஒன்றில் மாட்டி ,மின்சாரக் கம்பியில் இருந்து வெளிவரமுடியாமல் துடித்துக் கொண்டிருப்பதை பார்க்கும் காகம். படம் 2 : மாட்டி இருக்கும் அந்த கயிறை கண்டறிந்து அதை எப்படி மின்சார கம்பியில் படாமல் கழற்றலாம் என பார்க்கும் காகம் . படம் 3,4 : வழியை கண்டறிந்ததும், காப்பாற்றும் முயற்சியில் இறங்கிய காகம். படம் 5 : காப்பாற்றியதும் , இரண்டும் சந்தோஷமாக பறக்கும் அற்புதமான காட்சி...! # மனிதராகிய நாமும் இப்படி இருந்தால் உலகம் சொர்க்கமே... :) - ஜெகன் கனேசன் "சில நிகழ்வுகள்" |
:) Posted: 06 Aug 2014 02:30 AM PDT :)  |
''விடிஞ்சா உங்களுக்கு அறுபதாம் கல்யாணம் ,ஏன் சோகமாவே இருக்கீங்க ?'' ''பொண்ணு பி... Posted: 06 Aug 2014 02:20 AM PDT ''விடிஞ்சா உங்களுக்கு அறுபதாம் கல்யாணம் ,ஏன் சோகமாவே இருக்கீங்க ?'' ''பொண்ணு பிடிச்சிருக்கான்னு இப்பக்கூட என்கிட்டே யாரும் கேட்க மாட்டேங்கிறாங்களே !'' :O :O |
தூய்மையான அன்புக்கு மொழி இல்லை உணர்வுகள் தான் உண்டு ..... நேசம் அழகு <3 Posted: 06 Aug 2014 02:09 AM PDT தூய்மையான அன்புக்கு மொழி இல்லை உணர்வுகள் தான் உண்டு ..... நேசம் அழகு ♥ அன்பியல் - 2 |