Sunday, 14 December 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


ஓர் உச்சகட்ட தனிமையை உணர, ஒரு சிறு நிராகரிப்பே போதுமானதாய் இருக்கிறது இப்போதெல்ல...

Posted: 14 Dec 2014 08:32 PM PST

ஓர் உச்சகட்ட
தனிமையை உணர,
ஒரு சிறு நிராகரிப்பே
போதுமானதாய்
இருக்கிறது இப்போதெல்லாம்...

@காளிமுத்து

தெருக்காட்டில் மேயும் ஒவ்வொரு மாட்டின் வயிற்றுக்குள்ளும் கிலோக்கணக்கில் கிடக்கிற...

Posted: 14 Dec 2014 08:26 PM PST

தெருக்காட்டில் மேயும்
ஒவ்வொரு மாட்டின்
வயிற்றுக்குள்ளும்
கிலோக்கணக்கில்
கிடக்கிறது,
இரண்டு லட்சம் வருடங்கள்
மக்காத மனிதத்தவறு.!

#பாலிதீன்


@காளிமுத்து


"போதும் வாங்கப்பா ..." என்று சாராய கடை வாசலில் இருந்து அப்பனை கைய பிடிச்சு இழுக்...

Posted: 14 Dec 2014 08:13 PM PST

"போதும் வாங்கப்பா ..."
என்று
சாராய கடை வாசலில்
இருந்து அப்பனை கைய
பிடிச்சு இழுக்கும்
மகனைப் போல
லேப்டாப்பை மூடச்சொல்கிறான்
மகன்!.

@காளிமுத்து

Posted: 14 Dec 2014 05:35 PM PST


இந்த நாட்டில் இரண்டே இரண்டு விசயங்களைச் செய்ய மட்டும் எந்த விதமானத் தகுதியும் தே...

Posted: 14 Dec 2014 05:03 AM PST

இந்த நாட்டில் இரண்டே இரண்டு விசயங்களைச் செய்ய மட்டும் எந்த விதமானத் தகுதியும் தேவையே இல்லை.. ஒன்று அரசியல், இன்னொன்று கல்யாணம்.. அரசியல் பற்றிப் பேச ஏற்கனவே பலர் இருப்பதால் நான் அடுத்த விசயத்தைப் பற்றிப் பேசுகிறேன்..

வயசு 25க்கு மேல் ஆகிவிட்டது என்கிற ஒரே காரணத்திற்காக இந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவசர அவசராமகக் கல்யாணம் செய்து வைத்துவிடுகிறார்கள்.. இந்த லூசுகளும் "எல்லோரும் அந்தந்த வயதில் கல்யாணம் செய்ய வேண்டும்" என்று பெருசுகள் சொல்வதை நம்பிக்கொண்டு கழுத்தை நீட்டுகின்றன, அல்லது நீட்டிய கழுத்தில் கட்டுகின்றன..

அதன் பின் இருவரும் படும் பாடு இருக்கிறதே... புரிதலும், விட்டுக்கொடுத்தலும் இல்லாமல் ஒருவர் எண்ணத்தைப் பிறர் மீது திணிப்பதில் ஆரம்பித்து, தன் ஈகோவை நிலைநாட்ட அவரை தன் கட்டுக்குள் கொண்டு வர நினைப்பதும், அது நடக்காத பட்சத்தில் அவரை ஒரு தொல்லையாக நினைத்து கஷ்ட படுவதும் தான் காலம் காலமாக திருமணம் என்கிற பெயரில் இங்கு நடந்து வருகிறது..

என்ன ஒன்று, அந்த காலத்தில் ஆணும் பெண்ணும் உள்ளுக்குள் பொறுமினாலும், இதையெல்லாம் கடமையே என சமாளித்து கொண்டு வாழ்ந்தார்கள்.. இன்று இருவருக்கும் கல்வியும், பொருளாதார சுதந்திரமும் இருப்பதால் ஜஸ்ட் லைக் தட், டாட்டா பை பை சொல்லி பிரிந்து விடுகிறார்கள்.. திருமணம் என்னும் பந்ததிற்கு என்று நம் சமூகத்தில் ஒரு மதிப்பிருக்கிறது.. தயவு செய்து 'பிள்ளைக்கு வயதாகிறதே' என்கிற எண்ணத்தில் உங்கள் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைக்காதீர்கள்..

செக்ஸ் கல்வி பற்றியெல்லாம் சொல்லிக் கொடுப்பதற்கு முன், முதலில் கல்யாண வாழ்க்கை பற்றிய நடைமுறையை சொல்லிக்கொடுங்கள்..

@ராம் குமார்


சமஸ்கிருதம் மொழி தமிழை வளர்த்ததா? சமஸ்கிருதம் என்ற பெயர் ஒரு செயற்கையாக சூட்டப்...

Posted: 14 Dec 2014 01:03 AM PST

சமஸ்கிருதம் மொழி தமிழை வளர்த்ததா?

சமஸ்கிருதம் என்ற பெயர் ஒரு செயற்கையாக சூட்டப்பட்ட பெயர் என்று ஆய்வாளர்கள் சிலர் கூறுகின்றனர். சமஸ்கிருத மொழி ஒரு செயற்கை மொழி. இயற்கையாக வளர்ந்த மொழி அல்ல. சமஸ்கிருதம் தமிழ்மொழியி லிருந்து , , t, th, d, dh, n, s (த, ந, ண, ட, ச) போன்ற ஒலிகளை கடன் வாங்கியதாக சமஸ் கிருத அறிஞர்கள் பலர் ஒப்புக் கொண்டிருக் கிறார்கள்.

சமஸ்கிருதத்தில் உள்ள சொற்களும் பெரும்பாலும் கடன் வாங்கப்பட்டவை. ஆய்வாளர் கள் கருத்துப்படி சமஸ்கிருதம், 40% தமிழ் சொற்களையும், 30% பிராகிருத சொற்களையும், 30% இதர மொழிகளிடமிருந்து கடனாகப் பெறப் பட்டவை. கடனாக சொற்களை பெற்ற பிறகும் சமஸ்கிருதம் வளரவில்லை என்பதைக் கீழ்க்கண்ட புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

சமஸ்கிருதம் பேசியவர்கள் எண்ணிக்கை 1921ல் 23 கோடியில் 356 பேர்கள்; 1951ல் 36.20 கோடியில் 555 பேர்கள், 1971--ல் 61 கோடியில் 2210 பேர்கள். மேலும் சமஸ்கிருதம் பேசும் ஆரியர்கள் கூட தமிழ் போன்ற மாநில மொழிகளைத்தான் தாய்மொழியாகக் கொண்டிருக்கிறார்கள். சமஸ்கிருதம் பேசும் ஒருவர் கூட சரியான இலக்கணத்துடனும் சொற்களுடனும் பேசுவதில்லை.

மாதவ தேஷ்பாண்டே Socio Linguistic Issues என்ற நூலில் கீழ்வருமாறு கூறுகிறார்.

பாணினி (400- 500 கிமு) பதஞ்சலி (300 கிமு) போன்றவர்கள் சமஸ்கிருதத்திற்கு இலக்கணம் அமைத்தபோது சமஸ்கிருதம் இறந்த மொழியாக இருந்தது. சமஸ்கிருத சொற்களை பயன்படுத்துவதை கேள்வி அறிவின் மூலமே கற்றுக் கொள்கிறார்கள். இலக்கணத்துடன் கற்றுக் கொள்வதில்லை.''

இவ்வாறு மொழி அறிஞர்கள் சமஸ்கிருதத்தின் குறைபாடுகளை கூறுவதால் சமஸ்கிருதம் தமிழ் போன்ற வளம் நிறைந்த மொழிகளை ஒருபோதும் வளர்க்க உதவாது.

எனவே தமிழ் சமஸ்கிருதத்தின் உதவியால் வளர்ந்தது என்பதனை ஏற்க இயலாது.


Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


இனிய இரவாகட்டும் ... @ Indupriya MP ...

Posted: 14 Dec 2014 07:07 AM PST

இனிய இரவாகட்டும்
...
@ Indupriya MP
...


இளைஞர்களின் கையில் எதிர்காலத் தமிழ்நாடு எப்படி இருக்கும் என்று நம் பக்கத்தின் வா...

Posted: 14 Dec 2014 05:45 AM PST

இளைஞர்களின் கையில் எதிர்காலத் தமிழ்நாடு எப்படி இருக்கும் என்று நம் பக்கத்தின் வாயிலாக கேட்டதற்கு கிடைத்த பதில்கள் மிகவும் வருத்தமளிக்கிறது :(

வந்த பதில்கள் குறைவு என்றாலும் அதில் பெரும்பாலான பதில்கள் எதிர்மறையாகவே இருந்தன.....

நாம் இளைஞராகவோ அல்லது நம் வீட்டில் உள்ள ஒருவர் இளைஞராகவோ இருக்கின்றனர். எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால் கூட உலகளவில் மனிதவளம் படைத்தவர்களின் பட்டியலில் நாம் கண்டிப்பாக முன்னிலையில் இருக்கிறோம். அப்படி இருந்தும் நாம் இளைஞர்களை நம்புவதில் பின்னிலையில் தான் இருக்கிறோம்.

நம் கண்முன் ஒரு சமூக பிரச்சினை நடக்கும்போது அதை நாம் தட்டிக்கேட்க வேண்டும் எனத் தோன்றும். ஆனால் அங்குள்ள சூழ்நிலையினால் நமது அமைதியான வாழ்வில் எதாவது பிரச்சினை வந்துவிடுமோ என்று விலகிச்சென்றுவிடுவோம்.

இப்படி நாம் தான் நினைத்துக்கொண்டிருக்கிறோம் நம்மைப்போல் யாராவது ஒருவர் நம்மை வழிநடத்தினால் நாமும் அதில் பங்கெடுக்கலாம் என்று பலர் நினைத்ததை நானும் அறிவேன்.

இப்படியே அனைவரும் யாராவது முன்வர வேண்டும் என்று எண்ணினால், தமிழகத்தின் நிலையும், தமிழர்களின் நிலையும் மிகவும் மோசமான நிலையினை எய்துவிடும் (ஏற்கனவே அதை நோக்கிதான் சென்று கொண்டிருப்பதாகத் தெரிகிறது).

ஒவ்வொரு முறை யாராவது தமிழகத்தில் இது குறை, அது குறை என்று கூறும் போது.... நீங்கள் ஏன் அதை சரிசெய்ய முயற்சி எடுக்கக் கூடாது, நீங்கள் இந்த இடத்தினைச் சேர்ந்தவர்தானே என்று எனக்குள்ளே கோபம்கொள்வதுண்டு (ஒருநாளும் வெளிக்காட்டியதில்லை). ஆனால், நானும் அவர்களைப் போலவே சுயநலத்துடன் இருந்துகொண்டு என் நலத்தினையும், என் குடும்பம், என் நண்பர்கள் என்று எண்ணும்பட்சத்தில் நான் எப்படி அடுத்தவரைகளைக் குறைகூற முடியும்...

இதைப் போலவே அநேக இளைஞர்கள் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இப்படி தனித்தனியாக ஒரே எண்ணங்கள் கொண்டவர்கள் ஒன்றிணைந்தால் கண்டிப்பாக ஏதாவது ஒரு சின்ன மாற்றத்தினையாவது கொண்டுவர முடியும்...

உங்களுக்கும் என்னைப் போலவே எண்ணங்கள் இருக்குமாயின் கீழே கொடுக்கப்பட்ட பக்கத்தில் இணையுங்கள். இவர்களின் இந்த புதிய முகப்புத்தகப் பக்கம்தான் என்னுள் இருந்த பல எண்ணங்களை வெளிக்கொணர வழிவகுத்தது..

https://www.facebook.com/TN.ilayathalaimurai

ஒரு முயற்சி செய்துதான் பார்ப்போமே....

வெற்றி, தோல்வி என்று எது கிடைத்தாலும் பகிர்ந்துகொள்வோம் என்ற நம்பிக்கையில்....

பா விவேக்


எதிர்கால தமிழகத்தினை வழிநடத்துவதில் இளைஞர்களின் பங்கு எவ்வாறு இருக்கும் ? ஒரே வ...

Posted: 14 Dec 2014 02:11 AM PST

எதிர்கால தமிழகத்தினை வழிநடத்துவதில் இளைஞர்களின் பங்கு எவ்வாறு இருக்கும் ?

ஒரே வரியில் உங்களது கருத்தினை எளிமையாக பதிவு செய்யவும்...

பா விவேக்

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


நாதாரித்தனம் என்றால் என்ன ..? 1.பக்கத்து வீட்டுல கறி குழம்புணு தெரிஞ்சதும் தன்...

Posted: 13 Dec 2014 09:57 PM PST

நாதாரித்தனம் என்றால் என்ன ..?

1.பக்கத்து வீட்டுல கறி குழம்புணு தெரிஞ்சதும் தன் வீட்டுல ரசம் மட்டும் வைப்பது..
2.ஸ்விம்மிங் pool ல அப்படியே சூச்சூபோயிடுறது ..
3.விஜய்ய கலாய்ச்சிட்டு விஜய் படம் ஓபனிங் ஷோ பார்க்கிறது..
4.பொதுக் கழிப்பிடத்தில் ஐட்டம் நம்பர்னு மேனேஜர் மொபைல் நம்பரை எழுதி விடுறது
5.நாலு நல்ல ரூபா நோட்டுகுள்ள ஒரு கிழிஞ்ச நோட்ட வெச்சு குடுக்குறது
6.பொண்ணுங்களோட சாட் பண்ண பொண்ணுங்க ஐடி கிரியேட் பண்றது..
7.கை கழுவினதும் கர்சீப் இல்லனா பேண்டு பாக்கெட்ல கைய விட்டு தொடச்சுக்குறது ...
8.எக்ஸாம்ல பக்கத்துல உள்ளவன பாத்து எழுதிட்டு, அடுத்த கொஸ்டீனுக்கு ஆன்ஸர அவனுக்கு தெரியாத மாதிரி மறைச்சு எழுதுறது..
9.நடிக்க வந்து நாலு படம் ஹிட்டாகி நூறு பேரு கூடினா முதல்வர் பதவிக்கு ஆசை படுறது..
10.லவ்வர பாக்க போகும்போது மொபைலில் கால் ஹிஸ்டரி , பிரவுஸ் ஹிஸ்டரி டெலிட் பண்ணிட்டு போறது.

மோடி ஆட்சிக்கு வந்தபோது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் 120 டாலர் இப்போது 57 டால...

Posted: 13 Dec 2014 07:43 PM PST

மோடி ஆட்சிக்கு வந்தபோது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் 120 டாலர்
இப்போது 57 டாலர் தான்.

பாதியாக குறைய வேண்டிய பெட்ரோல் டீசல் விலை பெயரளவில் குறைக்கப்படுவதேன்..?

#ஆப்கி பார் கார்பரேட் சர்க்கார்

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


Yenathu ithuvum Pongal Release ah..?

Posted: 14 Dec 2014 03:45 AM PST

Yenathu ithuvum Pongal Release ah..?


4m views \m/ 83k likes \m/ 5m views and 100k likes are not a big deal!! #Yennai...

Posted: 14 Dec 2014 12:36 AM PST

4m views \m/
83k likes \m/

5m views and 100k likes are not a big deal!! #YennaiArindhaal _/\_


Yennai Arindhaal Official Teaser | Ajith, Gautham Menon, Harris Jayaraj, Trisha, Anushka

The wait is over! Watch the breathtaking teaser of Ajith Kumar's Yennai Arindhaal directed by Gautham Vasudev Menon with music by Harris Jayaraj. The film al...

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


ஒரு மாணவன் தனது தேர்வு ஒன்றில். முட்டை மதிப்பெண் கிடைத்ததால் பெரும் அதிர்ச்சி ஆன...

Posted: 14 Dec 2014 09:10 AM PST

ஒரு மாணவன் தனது தேர்வு ஒன்றில். முட்டை மதிப்பெண் கிடைத்ததால் பெரும் அதிர்ச்சி ஆனான்..! காரணம்
அவன் அனைத்து கேள்விகளுக்கும்.. சரியாக பதிலளித்திருப்பதாகவே நம்பினான்..!

சரியான பதிலை எழுதியதாகவே.. அந்த மாணவன்
தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம்..
வாதாடினான்..!

சரி.. அப்படி என்ன தான்
கேள்விகளுக்கு பதில் அளித்தான்.. என பார்ப்போம்..!

கேள்வி;- எந்த போரில் திப்பு சுல்தான் உயிரிழந்தார்..?

பதில்;- அவரது கடைசி போரில்..!

கேள்வி;- இந்திய சுதந்திரத்திற்கான பிரமாணம் எங்கே கையெழுத்திடப்பட்டது..?

பதில்;- காகிதத்தின் அடிப் பகுதியில்..!

கேள்வி;- சுப நிகழ்ச்சிகளில் வாழை மரங்கள் எதற்காக
கட்டப்படுகிறது..?

பதில்;- அவைகள் கீழே விழாமல் இருப்பதற்காக.. கட்டப்படுகிறது..!

கேள்வி;- விவாகரத்திற்கான முக்கிய காரணம் என்ன..?

பதில்;- திருமணம் தான்..!

கேள்வி;- இரவு- பகல் எவ்வாறு ஏற்படுகிறது..?

பதில்;- கிழக்கே உதித்த சூரியன் மேற்கில் மறைவதாலும்.. மேற்கில் மறைந்த சூரியன் மீண்டும் கிழக்கில் உதிப்பதாலும் இரவு- பகல் ஏற்படுகிறது..!

கேள்வி;- மகாத்மா காந்தி எப்போது பிறந்தார்..?

பதில்;- அவரது பிறந்த நாளன்று..!

கேள்வி;- திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதா..?

பதில்;- இல்லை.. திருமணங்கள் செய்யும் அவரவர் வீட்டில்

கேள்வி;- தாஜ்மகால் யாருக்காக யார் கட்டினார்..?

பதில்;- சுற்றுலா பயணிகளுக்காககொத்தனார்களால் கட்டப்பட்டது..!

கேள்வி;- 8மாம்பழங்களை 6 பேருக்கு எப்படி சரியாக
பிரித்து கொடுப்பது..?

பதில்;- ஜூஸ் போட்டு.. 6 டம்ளர்களில் சரியான அளவாக ஊற்றி கொடுக்கலாம்..!

மாணவன் சரியாக தானே பதிலளித்துள்ளான்..???

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்...(செம காமடீ இல்ல)

Relaxplzz

இதுதான் ராஜராஜ சோழரின் சமாதி தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு...

Posted: 14 Dec 2014 09:00 AM PST

இதுதான் ராஜராஜ சோழரின் சமாதி தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ?

உலகிலேய மிகபெரிய யானைப் படையை கட்டி ஆண்ட சோழ மன்னன் தென்னிந்தியா முழுவதும் , தெற்காசியா வரை வேர் பரப்பி தன் மகன் வெற்றி கொடி நாட்ட வழிவகுத்த மாமன்னன் ராச ராச சோழன்.1000 வருடமாக கம்பீரமாக நிற்கும் பெரியகோவிலை கட்டிய மன்னன்,உலகின் முதல் கப்பல் படையை நிறுவிய மன்னன், இன்னும் அடுக்கிகொண்டே போகலாம் இவருடைய புகழை,இப்படிப்பட்ட மாமன்னன் சமாதியை பாருங்கள்.

தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ?இதுதான் ராஜராஜ சோழரின் சமாதி. நாட்டில் எவன் எவனுக்கோ மணிமண்டபங்களும் சிலைகளும் நினைவாலயன்ஹ்களும் பரவிக்கிடக்கும் போது உலகை ஆண்ட மாமன்னருக்கு சொல்லிக்கொள்ளும்படியாக மரியாதை செய்யவில்லை நமது தமிழக அரசு.

இச்செய்தியை அதிகமாகப் பகிர்ந்து அரசின் செவிகளுக்கு கொண்டுசெல்வோம்.

Relaxplzz


:) Relaxplzz

Posted: 14 Dec 2014 08:55 AM PST

Computer ரை கண்டுபிடிப்பதற்கு முன்பே Password டை கண்டுபிடித்தது தமிழ் சினிமா !!...

Posted: 14 Dec 2014 08:50 AM PST

Computer ரை கண்டுபிடிப்பதற்கு முன்பே Password டை கண்டுபிடித்தது தமிழ் சினிமா !!
*
*
*
*
*
*
*
*
*
*
படம் : அலிபாபாவும் 40 திருடர்களும்.
Password : அன்டாகாகசம் ...அபுகாகுஹும

:D :D

:P :P

Posted: 14 Dec 2014 08:40 AM PST

:P :P


:) Relaxplzz

Posted: 14 Dec 2014 08:30 AM PST

:) Relaxplzz

Posted: 14 Dec 2014 08:25 AM PST

அருமை... பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 14 Dec 2014 08:20 AM PST

அருமை...

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


மூன்றாம் வகுப்பு மாணவன் :- "டீச்சர் இந்த உலகத்தின் எடை என்ன ? ஆசிரியை : ( பதில்...

Posted: 14 Dec 2014 08:10 AM PST

மூன்றாம் வகுப்பு மாணவன் :- "டீச்சர் இந்த உலகத்தின் எடை என்ன ?

ஆசிரியை : ( பதில் தெரியாததால் ) மிக அருமையான
கேள்வி .நாளை வகுப்பிற்கு வரும்ப
சரியான பதிலை கண்டுபிடிக்கிறார்கள் பார்ப்போம் .

அன்று மாலையே ஆசிரியை நூலகத்த
நூல்களை புரட்டி
பதில் கண்டுபிடித்தார் .

ஆசிரியை :- (மறுநாள் ) உலகத்தின்
எடை என்ன என்ற கேள்விக்கு யாரேனும்
விடை கண்டுபிடித்தீர்களா ?

யாருமே பதில் பேசவில்லை .

ஆசிரியை :- (பெருமையாக ) தான்
கண்டுபிடித்த விடையை சொல்ல

மாணவன் : - டீச்சர் நீங்க சொன்ன எடை
உலகிலுள்ள மனிதர்களை சேர்த்தா சேர்க்காமலா

ஆசிரியை :- ?????????????????

நாங்கெல்லாம் விண்வெளில இருக்க
வேண்டியவய்ங்க..

டீச்சர்.- அவ்வவ்வ்வ்வ் :P :P

Relaxplzz

பால்யத்தில் விற்றுவிட்டார் பாலியலில் சிக்கிவிட்டேன். அருவருப்பை அங்கமெங்கும் அண...

Posted: 14 Dec 2014 08:00 AM PST

பால்யத்தில் விற்றுவிட்டார்
பாலியலில் சிக்கிவிட்டேன்.

அருவருப்பை அங்கமெங்கும்
அணிந்த பின் தான்
ஆடைகளை அவிழ்க்கின்றேன்!

என் கண்களுக்கு என்றும்
நான் நிர்வாணம் ஆனதில்லை!

விரும்பியும் ஏற்கவில்லை
வெறுத்தாலும் எவரும் விடுவதில்லை!

குழந்தைகளைப் போல்
என் முத்தமும்
காமத்தில் சேர்ந்ததில்லை!

காதலித்து ஏமாற்றியதில்லை
கள்ளக்காதலும் இங்கில்லை
எங்கள் எண்ணிக்கை அதிகரித்தாலும்
கற்பழிப்பும் குறைந்ததில்லை.

மனிதாக வாழ்ந்துவிட ஆசைதான்
ஆறறிவு மிருகங்கள் விடுவதில்லை.

மாதமொருமுறை ஜீரணம் ஆகிவிடுவதால்
கருப்பையும் எங்களுக்கோர் இரண்டாம்
இரைப்பை தான்!

நான் குடும்பம் நடத்துவதே
சம்சாரிகளோடுதான்.
நான் மட்டுமா விபச்சாரி!

விலைமகள் இல்லையடா
ஞானிகளும் தோற்றுவிட்ட ஆத்மாவை
மேனியிலிருந்து பிரித்தெடுத்த
கலைமகளடா நான்!

சதைவிகிதமாய் பார்க்கப்படும்வரை
முப்பத்துமூன்று சதவிகிதமும் வெறும்
மூடநம்பிக்கை தான்!

#அவளதிகாரம்

Relaxplzz


காட்டை அழிப்பது தான் நாகரீக வளர்ச்சி என்றால், அப்படிப்பட்ட வளர்ச்சி ஒருபோதும் தே...

Posted: 14 Dec 2014 07:50 AM PST

காட்டை அழிப்பது தான் நாகரீக வளர்ச்சி என்றால்,
அப்படிப்பட்ட வளர்ச்சி ஒருபோதும் தேவையில்லை.


அம்மா : ஸ்கூல்ல நேத்திக்கு டீச்சரை எதிர்த்துப் பேசினியா, உனக்கு பயமே கிடையாதா?...

Posted: 14 Dec 2014 07:45 AM PST

அம்மா : ஸ்கூல்ல நேத்திக்கு டீச்சரை எதிர்த்துப் பேசினியா, உனக்கு பயமே கிடையாதா?

பிள்ளை : நீதானம்மா டீச்சருக்கு பயப்படாதன்னு சொன்ன..
அம்மா : நான் எப்படா சொன்னேன்.

பிள்ளை : கடவுளத் தவிர வேற யாருக்கும் பயப்படாதன்னு சொன்னியே

அம்மா :? !?!?! :O :O

Leg பீஸ் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)

Posted: 14 Dec 2014 07:40 AM PST

Leg பீஸ் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)


:) Relaxplzz

Posted: 14 Dec 2014 07:30 AM PST

:) Relaxplzz

Posted: 14 Dec 2014 07:20 AM PST

"இப்படியாக மனிதன்" * ஒரு சினிமா தியேட்டர்ல மூன்று மணி நேரம் உட்கார்ந்திருக்கும்...

Posted: 14 Dec 2014 07:10 AM PST

"இப்படியாக மனிதன்"

* ஒரு சினிமா தியேட்டர்ல மூன்று மணி நேரம் உட்கார்ந்திருக்கும் நம்மளால, ஒரு உறவினர் அல்லது நண்பரின் வீட்டு துக்க காரியத்தில் அரை மணி நேரம் உட்கார்ந்திருக்க முடியல.
சாவுன்னா பயம் ல?

* ஹோட்டல்ல ஆர்டர் பண்ணின சாப்பாட்டு அயிட்டம் வரும் வரை பொறுமையா அடுத்தவன் தட்டை வேடிக்கை பார்க்கும் நம்மளால, ரோட்டுல நடந்த சின்ன ஆக்சிடென்ட்டுக்கு வண்டிய விட்டு கீழ இறங்கி உதவத் தோணல.
அவ்ளோ தைரியசாலி ல ?

* யாரோ கல்யாணம் செஞ்சு நமக்கு புண்ணியம் தரப் போற இந்நாள் காதலி கூட காபி ஷாப்ல ரெண்டு மணி நேரம் பேசுனதையே திரும்பத் திரும்பப் பேச முடியற நம்மளால, ஹாஸ்பிட்டல்ல ஒருத்தர் கூட பத்து நிமிஷம் பொறுமையாவும் அன்பாவும் பேச முடியல.
எப்பவும் ஜாலியா தான் இருக்கணும் ல?

* ஒரு பெரிய சாமியாருக்காக மணிக்கணக்குல காத்திருந்து தவம் செஞ்சு பார்க்கத் துடிக்கும் நம்மளால, நம்ம குழந்தைங்க கூட கொஞ்ச நேரம் கூட விளையாட முடியல... அவங்கள கொஞ்ச முடியல.
அவங்க கேட்கற கேள்விக்கு பதில் சொல்ல முடியாது ல?

* மொபைல் ஸ்கிரீன், கம்ப்யூட்டர் ஸ்கிரீன், சினிமா ஸ்கிரீன், டி.வி ஸ்கிரீன்னு பார்க்கும் நம்மள்ல எத்தனை பேரு, சக மனிதனின் முக ஸ்கிரீனைப் பார்த்து புன்னகையும், பதிலும் சொல்லுறோம்?
புன்னகை செய்யறது அவ்ளோ கஷ்டம் ல ?

* காலையில் எந்திருச்சு வாக்கிங் போகணும்னு அக்கறை காட்டுற நம்மில் எத்தனை பேரு வீட்டுல அம்மா / அப்பா / மனைவிகிட்ட டாக்கிங் செய்யணும்னும் நினைக்கிறோம்?
நிறைய உண்மைகள் பேசவேணும் ல?

Relaxplzz

பணக்கார இளைஞனின் விலையுயர்ந்த கார் நின்று கொண்டிருந்தது. ஏழைச் சிறுவன் ஒருவன் எ...

Posted: 14 Dec 2014 07:00 AM PST

பணக்கார இளைஞனின் விலையுயர்ந்த கார் நின்று கொண்டிருந்தது.

ஏழைச் சிறுவன் ஒருவன் எட்டி நின்று அந்தக்
காரையே ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

சிரித்துக்கொண்டே அந்த இளைஞன் சொன்னார், "இது என் அண்ணன் எனக்குப் பரிசளித்தது".

சிறுவன் முகத்தில் வியப்பு.

"உனக்கு அப்படி ஓர் அண்ணன் இருந்திருக்கலாம்
என்று ஆசைப்படுகிறாயா?" இளைஞர் கேட்டார்.

சிறுவன் சொன்னான், ' இல்லை! அப்படியோர் அண்ணனாக வளர வேண்டுமென்று விரும்புகிறேன்".

நம்பிக்கையுணர்வு நல்லெண்ணங்களையே வளர்க்கும்...!

(y) (y)

Relaxplzz


கனடா வரையில் தமிழில் சேவை கிடைக்கிறது, இந்தியாவில் தான் சரியாக அங்கீகரிக்கப்படவி...

Posted: 14 Dec 2014 06:50 AM PST

கனடா வரையில் தமிழில் சேவை கிடைக்கிறது, இந்தியாவில் தான் சரியாக அங்கீகரிக்கப்படவில்லை! கேட்டால் தமிழ் வட்டார மொழியாம்!

இனி தமிழை வட்டார மொழி(REGIONAL LANGUAGE) என்று சொல்பவர்களிடம் சொல்லுங்கள் தமிழ் உலக மொழி(WORLD LANGUAGE) ஆக அங்கீகரிக்கப்பட்டு பல வருடங்கள் ஆகின்றது என்று..

Relaxplzz


அழகு

Posted: 14 Dec 2014 06:40 AM PST

அழகு


:) Relaxplzz

Posted: 14 Dec 2014 06:30 AM PST

அழகிய ஈழம்! யாழ்ப்பாணம்!

Posted: 14 Dec 2014 06:20 AM PST

அழகிய ஈழம்! யாழ்ப்பாணம்!


பூரிகட்டையால் அடித்தாள் மனைவி.! எதுக்குடி என்னை அடிச்ச?? உங்க சட்ட பாக்கெட்ல ம...

Posted: 14 Dec 2014 06:10 AM PST

பூரிகட்டையால் அடித்தாள் மனைவி.!

எதுக்குடி என்னை அடிச்ச??

உங்க சட்ட பாக்கெட்ல மீனான்னு பேரு எழுதி ஒரு பில்ல பாத்தேன்.

யேய் லூசு அது நான் நேத்து ரேஸ் போயிருந்தேன்ல அந்த குதிரையோட பேருடி.!

அய்யயோ என்ன மன்னிச்சிருங்க

சரி சரி விடு.

சிறிது நேரத்தில் கணவன் குளித்துவிட்டு பாத்ரூமை விட்டு வெளியே வந்தவுடன் மீண்டும் பூரிக்கட்டையால் அடி விழுந்தது

இப்ப எதுக்குடி அடிச்ச??

நீங்க குளிக்க போனதும் அந்த மீனாங்குற குதிர உங்க செல்லுக்கு கால் பன்னுச்சு.!!!

# செத்தான்டா சேகரு..!

:P :P

Relaxplzz

வயிற்றுப்புண், மலச்சிக்கல் போக்கும் திராட்சை! திராட்சைப்பழம் எல்லோருக்கும் தெர...

Posted: 14 Dec 2014 06:00 AM PST

வயிற்றுப்புண்,
மலச்சிக்கல் போக்கும் திராட்சை!

திராட்சைப்பழம் எல்லோருக்கும் தெரிஞ்ச ஒண்ணுதான். ஆனா அதுக்குள்ள மருத்துவக்குணம் சிலபேருக்கு தெரிஞ்சிருக்கும், சில பேருக்கு தெரியுறதுக்கு வாய்ப்பில்லை. தெரிஞ்சாலும், தெரியலைன்னாலும் ஏதோ பழம் சாப்பிடணும்னு சாப்பிடுவோம், அவ்வளவுதான்.

அல்சர், அல்சர்னு அவதிப்படுறவங்களுக்கு இந்த திராட்சை அற்புதமான மருந்து. காலையில எழுந்திரிச்சதும் வெறும் திராட்சை ஜூஸ் (வீட்டுல தயாரிச்சது) குடிச்சி பாருங்க... அல்சருக்கே அல்சர் வந்துரும். அதேமாதிரி தலைசுற்றல், மலச்சிக்கல், கை - கால் எரிச்சல் உள்ளவங்க திராட்சையை சாப்பிட்டு வந்தா கைமேல் பலன் கிடைக்கும். நிறைய நோய்களுக்கு மலச்சிக்கல்தான் காரணமாயிருக்கு.

மலச்சிக்கல் போகணும்னா அப்பப்போ காய்ஞ்ச திராட்சை சாப்பிடுங்க. இதே பிரச்சினை குழந்தைகளுக்கு இருந்தா கொஞ்சம் தண்ணியில காய்ஞ்ச திராட்சையை ராத்திரி ஊறப்போட்டுட்டு காலைல எழுந்திரிச்சதும் அதை நசுக்கி அந்த சாறை குடுங்க, பிரச்சினை சரியாயிரும். இது எத்தனை வயசு குழந்தைக்கும் கொடுக்கலாம். குழந்தை உண்டானவங்களுக்கு வாய்க்குமட்டல், வாந்தி, வாய்க்கசப்பு இருக்கும். அப்போ திராட்சை சாப்பிட்டா பலன் கிடைக்கும்.

எடை குறைவா இருக்குறவங்க, உடம்புல சூடு அதிகம் உள்ளவங்களும் கண்ணை மூடிக்கிட்டு திராட்சையை சாப்பிடுங்க. இந்த திராட்சை புற்றுநோயைக்கூட சரிப்படுத்தும்னு ஆராய்ச்சியில நிரூபிச்சிருக்காங்க. எல்லாம் நம்ம கையிலதான் இருக்கு. முக்கியமா விதை உள்ள கருப்பு திராட்சை எல்லா திராட்சைகளையும்விட விஷேசமானது.

Relaxplzz


உலகத்தில உள்ள அம்புட்டு அறிவாளியும் நம்ம ஊர்ல தான் இருக்காங்க... டாக்டர் தண்ணிய...

Posted: 14 Dec 2014 05:50 AM PST

உலகத்தில உள்ள அம்புட்டு அறிவாளியும் நம்ம ஊர்ல தான் இருக்காங்க... டாக்டர் தண்ணிய Filter பண்ணி குடிக்க சொல்லிருக்காரு (எந்த தண்ணின்னு சொல்லலப்பா)


:) Relaxplzz

Posted: 14 Dec 2014 05:30 AM PST

:) Relaxplzz

Posted: 14 Dec 2014 05:20 AM PST

ஒரு ஆசிரியர் ஐந்தாம் வகுப்பறையில் உள்ள மாணவர்களை அவரவர்களின் "அம்மா" வைப்பற்றி 2...

Posted: 14 Dec 2014 05:10 AM PST

ஒரு ஆசிரியர் ஐந்தாம் வகுப்பறையில் உள்ள மாணவர்களை
அவரவர்களின் "அம்மா" வைப்பற்றி 200 வார்த்தைகளில் ஒரு
கட்டுரை எழுதச் சொல்லி
அரை மணி நேரம் கொடுத்தார்.

ஒரு மாணவன் மட்டும் ஆரம்பித்த இரண்டே நிமிடங்களில்
எழுதி முடித்து பேப்பரைக் கொடுத்தான்.

ஆச்சரியப்பட்ட ஆசிரியர் அவன் கொடுத்த பேப்பரை
பிரித்துப் படித்து அவன் எழுதியிருந்த ஒரே வரியைப்
படித்து இன்னும் ஆச்சரியப்பட்டார்...

அது என்னவாயிருக்கும் ன்னு யோசிங்க...!!!

அது....................
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களை எந்த முறையில்
மாற்றி,
மாற்றி சேர்த்துப் படித்தாலும் அதனால் எனது
அம்மாவைப் பற்றி சரியாக எடுத்துரைக்க இயலாது...

"Any combination of 26 alphabets can never explain my MOTHER"

♥ ♥

Relaxplzz

சொத்துப் பிரிகையின்போது கேட்காமலேயே கிடைத்தது டைவர்ஸ்! தாய் மூத்தமகன் வீட்டிலும...

Posted: 14 Dec 2014 05:00 AM PST

சொத்துப் பிரிகையின்போது
கேட்காமலேயே
கிடைத்தது டைவர்ஸ்!
தாய் மூத்தமகன் வீட்டிலும்…
தந்தை இளையமகன் வீட்டிலுமாக ....!


"மனம் தொட்ட வரிகள்" - 2

திருவிழாக்களில் தொலைந்த குழந்தைகளை விட திருவிழாக்களை தொலைத்த குழந்தைகளே அதிகம் இ...

Posted: 14 Dec 2014 04:51 AM PST

திருவிழாக்களில் தொலைந்த
குழந்தைகளை விட
திருவிழாக்களை தொலைத்த
குழந்தைகளே அதிகம்
இப்போது..!!

- காளிமுத்து


"சில நியாயங்கள் - யதார்த்தங்கள்" - 3

தொட்டால் வாடி விடும் என்று தெரிந்தும், தொட்டு பார்த்து விளையாடியவர்கள் தாராளமா ல...

Posted: 14 Dec 2014 04:40 AM PST

தொட்டால் வாடி விடும் என்று தெரிந்தும், தொட்டு பார்த்து விளையாடியவர்கள் தாராளமா லைக் பண்ணலாம்