*******
பாலில் கலக்கப்படும் 3 விஷ(ய)ங்களை எப்படி கண்டறிவது ?
.
முதல் கலப்படம் எல்லோருக்கும் தெரிந்த தண்ணீர்.
.
பாலில் தண்ணீர் சேர்த்திருந்தால் ஒரு துளி பாலை
வழ வழப்பான செங்குத்து தளத்தில் வழிய விட்டால்
தூய பால் வெள்ளை கோட்டிட்டது போல் வழியும்
.
கலப்பட பால் எந்த அடையாளமும் ஏற்படுத்தாது
உடனடியாக வழிந்து விடும்..
.
அடுத்து பால் திக்காக தெரிய வேண்டுமென்பதற்காக
அதில் ஒரு வகை மாவு கலக்கப்படுகிறது.
.
இதைக் குடிக்கும் குழந்தைகளின் வயிறு அதோகதிதான்
.
வழுவழுப்பான தரையில் சுத்தமான பாலை
ஒரு துளி விட்டால் அது ஷேக் மட்டும்தான் ஆகும்.
.
ஆனால் மாவு கலந்த பாலைவிட்டால் அது தரையில்
ஒட்டி நிற்காமல், உருண்டோடும்.
.
பாலில் கலக்கப்படும் மூன்றாவது விஷயம் சோப்புப் பவுடர்
.
பாலைக் கெடுத்து விடாதா என்றுதானே யோசிக்கிறீர்கள்.
.
அப்படி பால் கெட்டுப் போகாதபடிக்கு, அதை இன்னும்
சில கெமிக்கல் பிராசஸ் செய்கிறார்கள்.
.
இந்தப் பாலை கொதிக்க வைத்து ஆற்றினால் பாலில்
நுரை பொங்கி வழியும்.
.
பாலில் நுரை அதிகமாக இருந்தால் இனி உஷாராயிடுங்க..!
.
பாலில் கலப்படம் செய்வதில் உச்சக்கட்ட கொடுமையான
விஷயம் இதுதான்.
.
டிடெர்ஜென்ட் பவுடர், எண்னெய் எல்லாம் சேர்த்து
பால் போன்ற செயற்கை பாலையும் உருவாக்கி விடுகிறார்கள்.
.
சில பிராண்டட் நிறுவனங்கள் எங்கள் பாலில் 100% பாக்டீரியா கிடையாது என்று விளம்பரம் செய்கின்றன.
.
உண்மையில் இது தவறு.
.
பாலின் சுவையே சில `நல்ல' பாக்டீரியாக்களால்தான்.
.
பால் பாக்கெட்டின் மீது அது பேக் செய்யப்பட்ட தேதி இருக்கும்.
பேக் செய்யப்பட்டு 2 நாட்களுக்குள் இருந்தால் மட்டும்
அந்தப் பாலை வாங்கலாம்.
.
அதற்கு மேல் என்றால் வேண்டவே வேண்டாம்!
என்று சொல்லிவிடுங்கள் ...
.
எல்லா மாடுகளுமே சிறிதளவு பாலை தன் கன்றுக்காக
மடியிலேயே நிறுத்தி வைத்துக் கொள்ளும்.
.
இயற்கை அவைகளுக்கு சொல்லிக் கொடுத்த தாய் அன்பு.
.
அந்தப் பாலையும் அதன் மடியிலிருந்து பிடுங்குவதற்கு
மாடுகளுக்கு நரம்புத் தளர்ச்சியை உண்டு பண்ணும்
ஆக்ஸிடோஸின் இன்ஜெக்ஷனை அதன் கழுத்தில் போட்டுவிட்டு
.
பிறகு பால் கறக்கிறார்கள். நரம்புகள் தளர்ந்து போன
அந்த மாட்டிடம் இருந்துவருவது பால் மட்டுமல்ல..
.
அதன் ரத்தமும் சேர்ந்துதான்!
.
இந்தப் பாலைக் குடிப்பதால் நமக்குக் கிடைப்பது
விட்டமினோ, கால்சியமோ அல்ல..
.
தீவிரமான வாதநோய்தான்!
