Wednesday, 10 June 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


“அதிர்ஷ்டம் ஒருமுறைதான் கதவைத் தட்டுமாம்.... அப்படி ஒரு தடவை கதவை தட்டும்போதே ,...

Posted: 10 Jun 2015 07:10 AM PDT

"அதிர்ஷ்டம் ஒருமுறைதான் கதவைத் தட்டுமாம்....
அப்படி ஒரு தடவை கதவை தட்டும்போதே , அதை விட்டுடாம வீட்டுக்குள்ளே பிடிச்சு தள்ளி கதவை சாத்திடணும்.."

# இன்று நான் ரசித்த நண்பரின் பதிவு இது...!

டி.எம்.எஸ். , தன் ஆரம்ப கால வாழ்வில் ...இப்படி ஒருமுறை தனக்கு வந்த அதிர்ஷ்டத்தை , உடனடியாக உள்ளே பிடித்துத் தள்ளி கதவை சாத்தியிருக்கிறார் ...
அதனால்தான் பல ஆண்டுகள் பட உலகில் அவர் பட்டத்தை பறக்க விட்டிருக்கிறார்...

'தூக்குத்தூக்கி' என்று ஒரு படம்...சிவாஜி நடிப்பில் தயாராகிக் கொண்டிருந்தது...

அந்தப் படத்தில் மொத்தம் எட்டுப் பாடல்கள்..
சிவாஜிக்கு பின்னணி பாடுவதற்காக , அப்போது பிரபலமாக விளங்கிய பாடகர் திருச்சி லோகநாதனிடம் கேட்டபோது அவர் சொன்னார்...

"ஒரு பாடலுக்கு ஐநூறு ரூபாய். எட்டும் பாடுவதற்கு எட்டாயிரம்"
."எட்டாயிரமா..? கொஞ்சம் குறைச்சுக்கலாமே..?" என்று தயாரிப்பாளர்கள் கேட்க...

"அப்படி ரேட்டைக் குறைத்துக்கொண்டு என்னால் பாட முடியாது. வேணும்னா உங்களுக்கு ஒரு வழி சொல்கிறேன். மதுரையிலிருந்து செளந்தரராஜன் என்கிற புதுசா ஒரு பாடகர் வந்திருக்கிறார். அவரைக் கேட்டுப்பாருங்கள்" ...

திருச்சி லோகநாதனின் அந்த ஆலோசனையைக் கேட்டு ஆளுக்கு ஒரு பக்கம் தேடி, அடுத்த நாளே தொகுளுவ மீனாட்சி அய்யங்கார் செளந்தரராஜன் என்கிற டி.எம்.எஸ்.ஸைப் பிடித்தார்கள்.

"எட்டுப் பாடல்களையும் நீங்களே பாடுங்கள். மொத்தமாக இரண்டாயிரம் ரூபாய்தான் சம்பளம் தர முடியும்.... ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாமா?" என்று தயக்கத்துடன் தயாரிப்பு தரப்பு கேட்க....வேகமாகத் தலையாட்டினார் டி.எம்.எஸ்.

காரணம்....மதுரை பஜனை மடங்களில் பாடி, அதற்குச் சன்மானமாக காப்பி ..காராச்சேவு, பக்கோடா மற்றும் இரண்டு ரூபாய் வாங்கிய காலம் அது...

ஆனால்..அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நிலைக்கவில்லை.
"தூக்குதூக்கி" கதாநாயகன் சிவாஜி சொன்னார்.. 'பராசக்தி'யில் குரல் கொடுத்த சி.எஸ். ஜெயராமன்தான் எனக்குப் பொருத்தமாக இருக்கும்... அந்த ஜெயராம பிள்ளையைப் பாடவைக்காமல், நேற்று வந்தவரை எல்லாம்…" என்று அதிருப்தியுடன் சிவாஜி இழுக்க...

பார்த்தார் டி.எம்.எஸ்..! கதவைத் தட்டும் அதிர்ஷ்டத்தை உள்ளே பிடிச்சு தள்ளி கதவை சாத்திடணும் என்று உறுதியான முடிவை உடனே எடுத்தார்...

. சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் சிவாஜியிடம் ஒரு சவால் விட்டார்...

" நான் பாடுவதை ஒலிப்பதிவு செய்து கேளுங்கள். பிடிக்கவில்லை என்றால் நான் விலகிக்கொள்கிறேன்"
அசராமல் டி.எம்.எஸ். சொன்னதை , அரைகுறை மனதோடு ஒப்புக்கொண்டார் சிவாஜி.

மளமளவென்று மூன்று பாடல்களை ஒலிப்பதிவு செய்து சிவாஜிக்குப் போட்டுக்காட்டினார் இசையமைப்பாளர் ஜி.ராமநாதன்.

சிவாஜிக்கு ஒரே சந்தோஷம்... "அட..என் குரல் மாதிரியே பாடி இருக்காரே...நல்லா வந்திருக்கு. எல்லாப் பாட்டையும் நீங்களே பாடுங்க"

'பெண்களை நம்பாதே…', 'ஏறாத மலைதனிலே…' ..என தூக்குத்தூக்கியின் அத்தனை பாடல்களையும் டி.எம்.எஸ்ஸே பாடி அமர்க்களப்படுத்தினார்...!

# டி.எம்.எஸ்.வாழ்க்கையில் நடந்த இந்த சம்பவத்தை , அதிர்ஷ்டம் என்பதா..? தைரியம் என்பதா..?

# இதற்கு நண்பர் தன் பதிவில் சொன்ன பதில் பொருத்தமாக இருக்கிறது...

"அதிர்ஷ்டம் என்பது ஒருதலைக்காதல் ..
தைரியசாலிகளை மட்டுமே அது எப்போதும் காதலிக்கிறது...!"

- John Durai Asir Chelliah

Relaxplzz

இதுதாண்டா போலீஸ்.... நேற்று மாலை நண்பரின் வீட்டிற்க்கு சென்றிருந்தேன், பர்சனல்...

Posted: 10 Jun 2015 07:10 AM PDT

இதுதாண்டா போலீஸ்....

நேற்று மாலை நண்பரின் வீட்டிற்க்கு சென்றிருந்தேன், பர்சனல் விஷயமாக...

அப்போது அவரின் பாஸ்போர்ட் விஷயத்திற்க்காக எழும்பூர் காவல் அதிகாரி வந்திருந்தார்.

வெரிஃபிகேஷன் டீட்டெய்ல்ஸ் முடிந்தவுடன் புறப்பட தயாரானார்.

திடீரென்று என் நண்பர் அவரின் கையில் 200 ரூபாயை திணித்தார்.

நானும் கொஞ்சம் அதிர்ந்து செய்வதரியாமல் போலீஸ்காரரை பார்த்துக்கொண்டு நின்றேன்.

சிரித்துக்கொண்டே அந்த பணத்தை வாங்கிய அதிகாரி என் நண்பரின் குழந்தையை கூப்பிட்டார். குழந்தையின் கையில் நண்பர் கொடுத்த 200 ரூபாயை கொடுத்து "நல்ல புஸ்தகம் வாங்கிக்கோம்மா" என்று சொல்லிவிட்டு. "சார்...இந்த வேலைக்குத்தான் எனக்கு அரசாங்கத்தில் சம்பளம் கொடுக்குறாங்க தயவு செய்து இந்த மாதிரி விஷயங்களை ஊக்குவிக்காதீர்கள்" என நாசூக்காக சொல்லிவிட்டு சென்று விட்டார்.

நண்பர் கூனிக்குறுகிப்போனார். மன்னிப்பும் கேட்டார். வேறுயாராவது இருந்திருத்தால் என் நண்பரை உண்டு இல்லை என ஆக்கியிருப்பார்கள். ஆனால் இந்த நல்ல போலீஸ்காரர் இந்த சம்பவத்தை டீல் செய்த விதம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

நண்பர் செய்வதறியாமல் சாரி சார்....என சொல்லிட்டு செய்வதறியாஅமல் கையை பிசைந்துக்கொண்டு என்னைப்பார்த்தார்.

லஞ்சம் வேண்டாம் என்று சொன்னாலும் பொது மக்கள் விடுவதில்லை. தவறு செய்பவர்களை விட தவறு செய்ய தூண்டுபவர்கள்தான் குற்றவாளிகள்.

அதிகாரியின் முகம் என் கண் முன் நின்றது. அவருக்கு என் சல்யூட். இவர்கள் மாதிரி நல்லவர்கள் இருப்பதால் தான் சென்னையில் இன்னும் மழை பெய்கிறது போலும்.

அந்த அதிகாரியின் பெயர் எனக்கு தெரியவில்லையென்றாலும் அவரின் நேர்மை என்னை நெகிழச்செய்து இந்த பதிவை அவருக்கு சமர்ப்பணம் செய்ய வழிவகுத்ததில் மகிழ்ச்சியே!

நன்றி Selva Kumar

Relaxplzz

பொது அறிவு தகவல்கள் :- புலியே தாக்க பயப்படும் விலங்கு - காட்டு எருமை வாலில்லாத...

Posted: 10 Jun 2015 04:10 AM PDT

பொது அறிவு தகவல்கள் :-

புலியே தாக்க பயப்படும் விலங்கு - காட்டு எருமை

வாலில்லாத பூனைகளின் பெயர் மாங்க்ஸ் (Manx)

ராட்ஷச பாண்டாவின் முக்கிய உணவு மூங்கில் கிளைகள்

முள்ளம்பன்றி விரும்பி சாப்பிடும் உணவு உதிர்ந்த மான் கொம்புகள்

உலகின் மக பெரிய கங்காரு - சிவப்பு கங்காரு

எதிரிகள் பயமுறுத்தும் போது மயங்கிவிழும் விலங்கு - அப்போசம் (ஒருவகையான எலி )

ட்ரே என்னும் கூண்டுகளில் வாழ்பவை அணீல்கள்

மிக குறைவான ஆயுட்காலத்தை உடையது - ஈ

மிக மெதுவாக இயங்கும் பாலூட்டி - தேவாங்கு

எலும்பு கூடு இல்லாத விலங்கு - ஜெல்லி மீன்

பூனையின் கண்பார்வை மனிதனைவிட எட்டு மடங்கு கூர்மையானது.

ஒட்டகம் 1 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாக கண்டுபிடித்துவிடும்.

கரையான் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் முட்டை இடும்.

நத்தைகளால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை நித்திரை கொள்ள முடியும்.

மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவுதான் பொறுத்துக்கொள்ள முடியும்

Relaxplzz

பிள்ளைகளுக்கு நல்ல சிந்தனைகளை கூறுங்கள்! ஒரு குழந்தையைவிட நாம் உயர்ந்தவர் என்று...

Posted: 10 Jun 2015 03:10 AM PDT

பிள்ளைகளுக்கு நல்ல சிந்தனைகளை கூறுங்கள்!

ஒரு குழந்தையைவிட நாம் உயர்ந்தவர் என்று நினைக்காதீர்கள்….

01. பிள்ளைகள் எதாவது செய்தால் எப்போதும் குறை கூறுதல், அவர்கள் பாராட்டும்படி செய்தாலும் கண்டு கொள்ளாதிருத்தல் போன்ற செயல்களை பலர் செய்கிறார்கள் இதனால் பிள்ளைகளின் மன வளர்ச்சி குன்றும்.

02. எந்தக் குழந்தையும் பின்னால் எப்படி ஆகுமென எவருமே கூற முடியாது, மூடன் அறிவாளியாகலாம் பைத்தியம் தெளிந்த சித்தமுடையவனாகலாம் ஆகவே பிள்ளைகளை ஒருகாலமும் தப்பாக மட்டுக்கட்டி அலட்சியம் செய்யக் கூடாது.

03. தாமஸ் ஆல்வா எடிசன் மரமண்டை என்று பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டவர் பின்னாளில் ஆயிரம் கண்டு பிடிப்புக்களுக்கு அவரே அதிபதி.

04. லூயி பாஸ்டியர் சராசரி மாணவனாக பாடசாலையில் இருந்தவர் பின்னாளில் நோபல் பரிசு வாங்கினார்.

05. அல்பிரட் ஐன்ஸ்டைன் போன்ற மூளை அழுகிய மாணவனை நான் பார்த்ததே இல்லை என்றார் அவர் ஆசிரியர் ஆனால் அவரே 20 ம் நூற்றாண்டின் அதி சிறந்த விஞ்ஞானியானார்.

06. குழந்தைகளுடன் ஒரு நாளில் சிறிது நேரமாவது பேசுங்கள், நல்லதைப் பேசுங்கள் கனிவுடன் பேசுங்கள். அவர்கள் குறைகளைப் பற்றி அதிக நேரம் பேசாதீர்கள் நிறைகளை பற்றிப் பேசுங்கள்.

07. பிள்ளைகளுடன் யாரையும் ஒப்பிட்டு பேசாதீர்கள், அவன் அவனே.. நீங்கள் நீங்களே.. நீங்களே முன்னுதாரணமாக இருங்கள் உங்களைப் பார்த்து அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.

08. வாழ்வில் வெற்றிபெற்றவரைப்பற்றி பேசுங்கள், ஒவ்வொரு துறையிலும் சிறந்தவர்களைப்பற்றி பேசுங்கள்.

09. எப்படி இருக்கக் கூடாது என்று ஒப்பிட்டு பேசுவதைவிட எப்படி இருக்க வேண்டுமென ஒரு முன்னுதாரண மனிதரைப்பற்றிப் பேசுங்கள்.

10. பிள்ளைகளுக்கு வீட்டுக்குள் விலங்கிடாதீர்கள் வீடு ஒரு சிறைச்சாலைக் கூடமல்ல மனிதர்களை தோற்றுவிக்கும் கோயில்.

11. நல்ல மேற்கோள்களை கொடுங்கள், சுதந்திரம் கொடுத்து, கட்டாயப்படுத்தி வழிக்குக் கொண்டு வாருங்கள்.

12. மலர் தூவியுள்ள பாதையைப்பற்றி பிள்ளைகளுக்கு சொன்னால் அவர்கள் முள் நிறைந்த பாதையை புரிந்து கொள்வார்கள்.

13. உழைப்பைப்பற்றி சொல்லிக் கொடுங்கள் அவர்கள் உழைப்பில்லாத கேடுகளை புரிந்துகொள்வார்கள்.

14. வெற்றி பெற்றவர்களை சொல்லும்போது தோல்வியின் காரணங்களை அவன் அறிந்து கொள்வான்.

15. சுறு சுறுப்பை சொல்லிக் கொடுத்தால் அவன் சோம்பலை அடையாளம் காண்பான், விதியை வென்றவர்களை சொல்லும்போது அவன் வேதனையில் நொந்து அழிந்தவர்களை கண்டு கொள்வான் – இது போதும்.

Relaxplzz

வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர் மாடிப் படியில் இறங்கும்போது கீழே விழுந்து எலும்பு...

Posted: 09 Jun 2015 09:10 PM PDT

வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர் மாடிப் படியில்
இறங்கும்போது கீழே விழுந்து எலும்பு முறிவு
ஏற்பட்டது.

மருத்துவர் மாவுக்கட்டு போட்டுவிட்டு
" பாட்டி, இன்னும் 1 மாசத்துக்கு மாடிப் படி ஏறக்
கூடாது.." என்று சொல்லிப் போனார்.

ஒரு மாதத்துக்குப் பின், மாவுக்கட்டை மருத்துவர்
அகற்றும் போது பாட்டி கேட்டாள்..

"டாக்டர்.. இனி படியில் ஏறலாமில்லையா..?"

"ஓ.எஸ்.. தாராளமா.."

"நன்றி டாக்டர்.. தண்ணி பைப்பை புடிச்சி மாடி
ஏறுவது ரொம்பக் கஷ்டமா இருந்திச்சு."

:P :P

Relaxplzz

ஒரு பெரிய குரு இருந்தார். முற்றும் துறந்தவர். எல்லாம் கற்றவர். அவரை ஒரு பிரசங...

Posted: 09 Jun 2015 08:15 PM PDT

ஒரு பெரிய குரு இருந்தார்.
முற்றும் துறந்தவர். எல்லாம் கற்றவர்.

அவரை ஒரு பிரசங்கம் செய்யக் கூப்பிட்டிருந்த ாங்க.
பத்தாயிரம் பேர் வருவாங்கனு சொல்லியிருந்தாங ்க.
அவரை அழைச்சிட்டு வர ஒரு குதிரைக் காரன் போயிருந்தான்.

அன்னிக்குன்னு பார்த்து ஊரில் பயங்கர மழை. கூட்டம் கேன்சலாகி எல்லோரும் கலைஞ்சு போயிட்டாங்க. குரு வந்தபோது அங்கே யாருமே இல்லை. பேசறதுக்காக நிறையத் தயார் பண்ணிட்டு வந்த குருவுக்கோ ஏமாற்றம். இருக்கிற ஒரு குதிரைக்காரனுக் காக மட்டும்
பிரசங்கம் பண்ணவும் மனசில்லை. 'என்னப்பா பண்ண லாம்?'னு கேட்டார்.

'அய்யா! நான் குதிரைக் காரன்... எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க... நான் முப்பது குதிரை வளர்க்கிறேன். புல்லு வைக்கப் போறப்போ எல்லாக் குதிரையும் வெளியே போயி, அங்கே ஒரே ஒரு குதிரை மட்டும்தான்
இருக்குதுனு வெச்சுக்கோங்க. நான் அந்த ஒரு குதிரைக்குத் தேவையான புல்லை வெச்சிட்டுத்தாங ்க திரும்புவேன்'னான்.

பொளேர்னு அறைஞ்ச மாதிரி இருந்தது குருவுக்கு. அந்தக் குதிரைக்காரனுக் கு ஒரு 'சபாஷ்' போட்டுட்டு, அவனுக்கு மட்டும் தன் பிரசங்கத்தை ஆரம்பிச்சார்.

தத்துவம், மந்திரம், பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம்னு சரமாரியா போட்டுத் தாக்கி பிரமாதப் படுத்திட்டார் குரு. பிரசங்கம் முடிஞ்சுது. 'எப்படிப்பா இருந்தது என் பேச்சு?'னு அவனைப் பார்த்து பெருமையா கேட்டார் குரு.

'அய்யா... நான் குதிரைக்காரன். எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க... நான் புல்லு வைக்கப் போற இடத்தில் ஒரு குதிரைதான் இருந்துச்சுன்னா , நான் அதுக்கு மட்டும்தான் புல்லு வெப்பேன். முப்பது குதிரைக்கான புல்லையும்
அந்த ஒரு குதிரைக்கே கொட்டிட்டு வர மாட்டேன்!'னான். அவ்ளோதான்... குரு தெறிச்சிட்டார்!

நீதி...மத்தவங்களுக் கு என்ன தேவையோ, அல்லது எது சொன்னா புரியுமோ அதை மட்டும் சொல்லனும்...!!

Relaxplzz

இந்தத் தகவல் உங்களிடத்தில் மிகப் பெரிய மாறுதலை ஏற்படுத்தலாம் !! உலகத்தில் ஐந்து...

Posted: 09 Jun 2015 06:00 PM PDT

இந்தத் தகவல் உங்களிடத்தில் மிகப் பெரிய மாறுதலை ஏற்படுத்தலாம் !!

உலகத்தில் ஐந்து மிகப் பெரும் பணக்கார்களின் பெயர்களைச் சொல்லுங்கள் ?

ஐந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றவர்களை சொல்லுங்கள் ?

சமீபமாக நோபல் பரிசு பெற்ற பத்து நபர்களின் பெயர்களைச் சொல்லுங்கள் ?

இந்தக் கேள்விகளுக்கு மிகச் சரியான பதில்களை சொல்வதற்கு நாம் மிகவும் தடுமாறிப் போய்விடுவோம். ஏனென்றால் நேற்றைய தலைப்புச் செய்திகளைக் கூட நாம் மறந்து விடுகிறோம்.. ஏனென்றால் சாதனைகள் நம் மனதில் நிற்காது.!விருதுகளும் மறக்கப்பட்டு விடும்.

இப்பொழுது வேறு ஐந்து கேள்விகளைப் பார்ப்போம் :

உங்களது பள்ளிப் பருவத்தில் சிறந்த ஐந்து ஆசிரியர்களின் பெயர்களை கூறுங்கள்?

உங்களின் கடினமான நேரத்தில் உங்களுக்கு உறுதுணையாக இருந்த ஐந்து நண்பர்களின் பெயர்கள்?

உங்களுக்கு நல்ல விஷயங்களை தங்கள் அனுபவத்தில் இருந்து கற்றுக்கொடுத்த ஐந்து நபர்களின் பெயர்கள்?

உங்களின் திறமையை கண்டறிந்து அவற்றை உங்களுக்கு தெரியப்படுத்தியவர்களின் பெயர்கள்?

நீங்கள் மகிழ்ச்சியோடு உங்கள் நேரத்தை செலவிடும் ஐந்து நபர்களின் பெயர்கள்?

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் நீங்கள் வெகு எளிதாக பதில் கூறி விடுவீர்கள். ஏனென்றால் உங்கள் வாழ்க்கைக்கு உதவியர்கள் எல்லாம் நாம் அன்றாடம் சந்திக்கும் வெகு
சாதாரண மக்களே.!

உங்கள் உலகத்தை அழகு படுத்தியர்கள் இத்தகைய சாதாரண மனிதர்கள்தான். எனவே அவர்களை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள் ! அவர்களோடு சந்தோஷமாக இருங்கள். எப்பொழுதுமே வாழ்வில் சிறப்பான விஷயங்கள் சாதாரணமாகத்தான் இருக்கும்.!! எளிமையாகத்தான் இருக்கும்!

- கணபதி சுப்பிரமணியன்

Relaxplzz

0 comments:

Post a Comment