Thursday, 25 December 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


இன்று சுனாமி பேரலை தாக்கிய 10ஆம் ஆண்டு நினைவு நாள்.

Posted: 25 Dec 2014 08:03 PM PST

இன்று சுனாமி பேரலை தாக்கிய 10ஆம் ஆண்டு நினைவு நாள்.


Posted: 25 Dec 2014 05:53 PM PST


ஜான்சி ராணி தோன்றுவதற்கு, ஒரு நூற்றாண்டு காலத்திற்கு முன்பே தமிழகத்தில் தோன்றி,...

Posted: 25 Dec 2014 07:54 AM PST

ஜான்சி ராணி தோன்றுவதற்கு,
ஒரு நூற்றாண்டு காலத்திற்கு முன்பே தமிழகத்தில்
தோன்றி,
வெள்ளையருக்கு எதிராக
வீரப்போர் புரிந்தவர் தான்
வீரமங்கை வேலுநாச்சியார்.
நம் நாட்டின் பெண்களின்
கையில்
கரண்டி படித்து பார்த்திருக்கிற
ோம் ஆனால் அக்காலத்தில்
வால்ஏந்தி நின்ற
காட்சியை பார்த்தால்
இப்பொழுதும்
பிரம்மிப்பாகத்தான்
இருக்கிறது.
உடன்கட்டை ஏறி தன்
உயிரை மாய்த்துக்கொள்ள
ும் வழக்கமுள்ள ஒரு காலக்
கட்டத்தில், தன் கணவர்
சிவகங்கை அரசர்
முத்துவடுகநாதரைக்
கொன்ற
வெள்ளையர்களைத்
துணிவுடன்
எதிர்த்து நின்று போரிட்டுப்
பழிதீர்த்ததுடன்,
வெற்றியும் பெற்றுச்
சுதந்திரதேவி போல்
அரசாண்ட இந்தத்
தமிழரசி.தான்
வீரமங்கை வேலுநாச்சியார்.


Posted: 25 Dec 2014 02:54 AM PST


தலைவாழை இலையா கொடு என்பது அந்தக்காலம், டைனிங் டேபிள்ல போடுவது போல் சிறிய சைஸ் இ...

Posted: 25 Dec 2014 02:40 AM PST

தலைவாழை இலையா கொடு என்பது அந்தக்காலம்,

டைனிங் டேபிள்ல
போடுவது போல்
சிறிய சைஸ்
இலையா கொடு என்பது இந்தக்காலம்...
:(

@பிரபின் ராஜ்

அழகியல்!

Posted: 25 Dec 2014 12:01 AM PST

அழகியல்!


குற்றாலம்!

Posted: 24 Dec 2014 11:21 PM PST

குற்றாலம்!


பெறுவதை விட, கொடுப்பதில் மகிழ்ச்சி பெருகட்டும்! அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்...

Posted: 24 Dec 2014 10:13 PM PST

பெறுவதை விட,
கொடுப்பதில்
மகிழ்ச்சி பெருகட்டும்!
அனைவருக்கும்
கிறிஸ்துமஸ்
நல்வாழ்த்துகள்..


அன்று பொருட்களை விற்று பொருளாதார நெருக்கடியை சமாளித்தோம்! இன்று பொருட்களை கடனில்...

Posted: 24 Dec 2014 10:08 PM PST

அன்று பொருட்களை விற்று பொருளாதார
நெருக்கடியை சமாளித்தோம்!
இன்று பொருட்களை கடனில்
வாங்கி பொருளாதார
நெருக்கடியை ஏற்படுத்திக்
கொள்கிறோம்!

@கனா காண்கிறேன்

அழகு தமிழ்நாடு!

Posted: 24 Dec 2014 09:51 PM PST

அழகு தமிழ்நாடு!


Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


பிள்ளைகள் தன் கைபிடித்து நடப்பதை ரசிப்பவள் அம்மா... கையை எடுத்து விட்டு பிள்ளைக...

Posted: 24 Dec 2014 05:40 PM PST

பிள்ளைகள் தன் கைபிடித்து நடப்பதை ரசிப்பவள்
அம்மா...

கையை எடுத்து விட்டு பிள்ளைகளை தனித்து நடக்கவிட்டு அந்த தைரியத்தை ரசிப்பவர் தான் அப்பா..!

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


பாரதத்தின் தலைமகன் பாரத ரத்னா -வாஜ்பாய் : ஊழல் கறைபடியாத இந்தியாவின் சிறந்த பிரத...

Posted: 24 Dec 2014 10:31 PM PST

பாரதத்தின் தலைமகன் பாரத ரத்னா -வாஜ்பாய் :
ஊழல் கறைபடியாத இந்தியாவின் சிறந்த பிரதமரான அடல் பிகாரிவாஜ்பாய் பிறந்த நாள் இன்று. இந்திய நாட்டின் சிறந்த பிரதமர் என்ற முறையில் அரசியலுக்கு அப்பாற்பட்டு அவரை வாழ்த்துவோம்! அடல் பிகாரிவாஜ்பாய் என்பது தான் பெயர். கிருஷ்ணா பிகாரிவாஜ்பாய்க்கும் கிருஷ்ணதேவிக்கும் மகனாய் 1924- டிசம்பர்-25 ல் மத்தியப்பிரதேசத்தில் உள்ள குவாலியர் நகரில் பிறந்தார். சிறு வயதிலே தெய்வ பக்தியும் தேச பக்தியும் மிக்கவராய் வளர்ந்தார். இளம் வயதிலேயே கவிஞராய் திகழ்ந்தார். பின்னர் ஜான்சிராணி லட்சுமிபாய் கல்லூரியில் முதுகலைப்பட்டம் பெற்றார். சிலகாலம் பத்திரிகையாளராய் பணியாற்றினார். விடுதலை உணர்வை எழுத்தில் பதித்தார்.

1942 ஆம் ஆண்டு நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போரட்டத்தில் கலந்து கொண்டதிற்காக சிறை சென்றார். நாட்டு விடுதலைக்குப்பின் ஜனசங்கம் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். அதி தீவிர செயல்பாட்டால் நன்மதிப்பை பெற்றார். "நேரு பண்டிட் அவர்கள் அடலின் பணிகளை பார்த்து எதிர்கால இந்தியாவின் பிரதமர் நீதான்" என வாழ்த்தினார். வாஜ்பாய் திருமணம் செய்யாமல் பிரம்மச்சரியத்தை கடைபிடித்தார்.அல்மா மாத்தர் என்ற பெண்குழந்தையை தத்தெடுத்து வளர்த்து திருமணமும் செய்து வைத்தார். மொரார்ஜி தேசாய் பிரதமரான போது வாஜ்பாயை வெளியுறவுத்துறை அமைச்சரானர். அமைச்சர் பணியை திறம்பட செய்தார். அதனால் சிறந்த பார்லிமென்ட்ரியனாக தேர்ந்தேடுக்கப்பட்டார். பின் பாரதியஜனதா கட்சியின் முதல் தலைவரானார்.1992 ஆம் ஆண்டு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷனை பெற்றார்.

1996 ல் 13 நாட்கள் பிரதமராக இருந்தார்.1998-99 பிறகு 13மாதமும், பிறகு 1999-04 வரை பிரதமராக தொடர்ந்து ஆட்சி செய்தார்.வாஜ்பாயின் ஆட்சியின் போது தான் இந்தியாவின் ஏழைகளின் சதவிதம் குறைந்தது.முதியோர்களுக்கு நிதியுதவி திட்டம்.முதியோருக்கு இலவச அரிசி வழங்குதல் .நாடு முழுக்க கிராமங்களின் சாலை வசதியை மேம்படுத்துதல் போன்ற திட்டங்களால் இந்தியாவை வேகமாக முன்னேற்றினார். இவரின் ஆட்சிக்காலத்தில் தான் இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை விஸ்வரூபம் எடுத்தது.அனு ஆயுத வலிமையில் இந்தியாவை மூன்றாவது நாடாக்கினார்.அமேரிக்கா ,ரஷ்யாவிற்கு பிறகு அனு குண்டை விட பல மடங்கு பலம் கொண்ட ஹைட்ரஜன் அனு ஆயுதம் தயாரித்த மூன்றாவது நாடக்கினார்.இன்று வரையில் மூன்று நாடுகளில் மட்டுமே இந்த ஆயுதம் உள்ளது.

அவரின் சாதனகள்: அனைத்து பிரதமரும் புறக்கணிக்கும் தமிழகம், ஆந்திரா, பிகார், பஞ்சாப், மத்தியபிரதேசப்பகுதிக்கு முன்னுரிமை அளித்தார். பாகிஸ்தானை எதிரியாக நினைக்காமல் நட்பு நாடக்க முயற்சி செய்தார். டெல்லி- லாகுர் பேருந்து பயணம் செய்தார். பாகிஸ்தானுக்கு ரயில்சேவையை துவக்கினார். இந்திய- பாக் ஒற்றுமைக்கு உழைத்தார். அதே நேரம் 1998-May அணு குண்டு சோதனை செய்தார் இதனால் வந்த பல பொருளாதார தடையை உடைத்தார்.அமேரிக்காவிற்கு அடிவருடியாக இல்லாமல் நட்பு நாடாக்கினார்.அதே நேரம் இந்தியாவின் ஆயுத உற்பத்தியைக் கண்டு அமேரிக்கா இந்தியாவின் மீது பொருளாதார தடை விதித்தது...அதே அமேரிக்காவை தடையை நீக்கி இந்தியாவிற்கு நெருங்கிய நாடாக்கினார். பாக் கார்கிலை ஆக்ரமித்தபோது போர் நடத்தி பாகிஸ்தானுக்கு மரண அடி கொடுத்தார் கார்கிலை மீட்டார்.போரினால் கடுமையாக பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் வேறு வழியின்றி , இந்திய விமானி நசிகேதாவை உயிருடன் ஒப்படைத்து சமாதானத்திற்கு அடிகோலியது போருக்கு பின் அமைதியை கடைபிடித்தார்.இந்திய விமானம் கடத்தப்பட்டபோது, பரிசோதனை செய்யமால் கடத்தல்காரரின் கோரிக்கையை ஏற்று பயணிகளை காப்பாற்றினார். சீனாவை வாய்த்திறக்காமல் வைத்திருந்தார். இலங்கை ராணுவம், இந்திய மீனவரை தாக்கிய போது இலங்கையை கடுமையாக எச்சரித்தார் இலங்கை பிரதமர் ரணிலை கண்டித்து இனி தாக்குதல் நடந்தால் இலங்கை இருக்காது என எச்சரித்தார். அவர் காலத்தில் இலங்கை கடற்படை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை. இலங்கைக்காண ஆயுத பொருளாதார உதவிகளை நிறுத்தினார். இதனால், விடுதலைபுலிகள் வெற்றிகளை குவித்தனர் பிரபாகரன் விரும்பியதும் வாஜ்பாய் ஆட்சியை தான். அமேரிக்காவுக்கிற்கு நட்பாகவும் அதே சமயம் பாலஸ்தீன விடுதலையை ஆதரித்தார். இந்தியாவை தங்க நாற்கர சாலையால் இணைத்தார். முதியோர் உதவி தொகை, சிக்ஷா அபியான் மூலம் எளியோர் வாழ்கையை உயர்த்தினார் நதிநீர் இணைப்பை செய்ய நினைத்தார் இதனால் பல மாநிலம் வளம் பெறும் தண்ணீர் பஞ்சம் இருக்காது.விவசாயம் செழிக்கும். இந்திய வல்லரசு கனவை நினைவாக்க அப்துல் கலாமை அதிபர் ஆக்கினார். வாஜ்பாய் தன் கவிதையை தமிழில் மொழிமாற்றம் செய்து அண்ணாவிற்கு அர்ப்பணித்தார்.

வாஜ்பாயின் ஆளுமையை போற்றும் வகையில் நாட்டின் உயர்ந்த விருதான பாரதரத்னா வழங்கப்பட உள்ளது.அவரின் பிறந்த நாளான இன்று நல்லாட்சி தினமாக கொண்டாடப்படுகிறது..உலக அரங்கில் இந்தியாவை உயர வைத்த நாட்டின் பெருமையை உயர்த்தியவரின் பெருமை போற்றுவோம்!

வி. ராஜமருதவேல் (copyrights reserved by rajamaruthavel-காப்புரிமை விதிகள் படி கட்டுரையில் மாற்றமில்லாமல் சமுகவலை தளங்களில் இணையங்களில் பகிரலாம்.)


வெற்றித்திருமகள்: ராணி வேலுநாச்சியார் வீரத்தின் அடையாளமாகவும் வெற்றித் திருவு...

Posted: 24 Dec 2014 09:11 PM PST

வெற்றித்திருமகள்:
ராணி வேலுநாச்சியார் வீரத்தின் அடையாளமாகவும் வெற்றித் திருவுருமாகவும் விளங்குகிறார் அவர். உலகில் மிகப்பழமையான பாதுகாப்பு இனமாகவும் சேதுபாலம், ராமலிங்கத்தின் பாதுகாவலர்களான சேதுபதி வம்சத்தில் 1730ஆம் ஆண்டு,உதித்தவர் தான் வேலு நாச்சியார்.தந்தை இராமநாதபுர மன்னர் முத்து விஜயரகுநாத செல்லத்துரை சேதுபதி. தாய் முத்தாத்தாள் நாச்சியார். இவர்களின் ஒரே பெண் குழந்தை வேலுநாச்சியார். வேலுநாச்சியார் பிறந்தது 'சக்கந்தி'' இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள ஊர்.

ராமநாதபுரத்தின் இளவரசியான அவர் மகாபாரதம், ராமயணம், இலக்கியங்களை சிறு வயதிலேயே கற்றுத்தேர்ந்தார். மேலும் அவருக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, உருது, அரபி, பிரஞ்ச், இங்கிலிஷ், ஜெர்மன் என பத்து மொழிகள் பேசக்கற்றவர். சிறு வயதிலேயே போர்கலைகளிலும் தேர்ந்தவராக விளங்கினார். வாள் சண்டை, வில்வித்தை, யானையேற்றம், குதிரையேற்றம், வளைதடி ஆகியவற்றில் சிறந்து விளங்கினார். "போர்வாளை தன் கைகளால் இரண்டாக உடைக்கும் வலிமைப் பெற்றவர்" ஆறடி உயரத்தில் பேரெழில் கொஞ்சும் அழகில் மயிலாகவும் வீரத்தில் விட்டு கொடுக்காத புலியாக இருக்கும் அவரின் வீரத்தையும் அழகையும் கண்டு காதல்வயப்பட்டு சிவகங்கை இளவரசர் கவுரிபவல்லப உடையன முத்துவடுகநாதத்தேவர் வேலுநாச்சியாரை மணந்து கொண்டார். 1746ம் வருடம். வேலுநாச்சியார் சிவகங்கைக்கு குடிபுகுந்தார்.

சிவகங்கையை ஆக்ரமிக்க நினைத்து போர் தொடுத்த நவாப் கிழக்கிந்தியபடையை விரட்டியடித்தார் முத்துவடுகநாதத்தேவர். அதனால் ,நவாப் கிழக்கிந்தியபடையினர் வஞ்சத்தால் கொல்ல நினைத்தனர்.. கோவிலுக்கு ஆயுதமின்றி சென்ற முத்துவடுகநாதத்தேவர்இளவரசியையும் கொல்ல படையை அனுப்பினர் நவாப் .நடைப்பெற்ற சிறிய யுத்ததில் மன்னர் வளரிவீச்சீல் பல எதிரிகளை கொன்றார். நவாப் படையினர் மன்னரின் குதிரைக்கால்களை வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும், கண்டந்துண்டமாக வெட்டி மன்னரையும் இளவரசியையும் படுகொலை செய்தனர். இதற்கு தலைமை தாங்கியவன் தளபதி பான்ஜோர்,ஜோசப ஸ்மித்.

நவாப் கிழக்கிந்தியபடையினர் வஞ்சத்தால் சிவகங்கையை கைப்பற்றி உசேன்பூர் என்று பெயர் மாற்றம் செய்தனர்.மன்னர் இறந்த செய்தி எட்டி வேலு நாச்சியார் கதறினார். கணவரின் உடலைப் பார்க்க துடித்தார். இந்தச் சமயத்தில் நாச்சியாரைக் கைது செய்ய நவாப் படை ஒன்றை அனுப்பினான். வேலு நாச்சியார் எதிரிப்படைகளை துவம்சம் செய்தார். இறந்த கணவரை சென்று பார்த்துவிட வேண்டுமென துடித்தார்.கணவரின் உடலைக் காண காளையர் கோயில் சென்றார். வேலு நாச்சியார். காளையர் கோயிலில் எங்கெங்கும் பிணக் குவியல். இறந்த அரசரும் இளையராணியும் காண, தானும் உடன்கட்டை ஏறி உயிர் விட முடிவு செய்தார். அமைச்சர் தாண்டவராய பிள்ளை, தளபதிகளாயிருந்த மருது சகோதரர்கள் மனதை மாற்றி நாட்டை எதிரியிடமிருந்து மீட்டு உங்கள் கைகளால் பழி வாங்கவேண்டும் என உரைத்தனர். அரசியையும் வெள்ளச்சி நாச்சியார்யையும் திண்டுக்கல் கோபால நாயக்கர் கோட்டைக்கு மருது சகோதரர்களின் பாதுகாப்போடு கொண்டு சென்றனர் .

விருப்பாட்சிப் பாளையக்காரர் கோபால நாயக்கர்,விருப்பாட்சியில் பாதுகாப்பாக தங்க வைத்தார்.ஆண் வேடத்தில் ஐதர் அலியை சந்தித்து படையுதவி கேட்டார் அவரும் 5000 குதிரைவீரர்களையும் 5000 காலாட் வீரர்களையும், பீரங்கிப்படைஒன்றையும் உடன் அனுப்பி வைத்தார்.1780 ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது.,விஜயதசமி அன்று சிவகங்கை அரண்மனைக்குள்ளே இருக்கும் ராஜராஜேஸ்வரி தெய்வத்தை கூட்டம், கூட்டமாக பெண்கள் சென்று வழிபடுவது வழக்கம். வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும். வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும், ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் உள்ளே இருந்த கோவிலுக்குள் சென்று திடீர் தாக்குதல் நடத்தியது. இதை ஆங்கிலேயப் படைகள் எதிர்பார்க்கவில்லை.வெள்ளையர் நவாப் படைகள் சூறையாடப்பட்டன. வேலு நாச்சியாரை காப்பாற்ற தன்னை வேலு நாச்சியார் என்று நவாப் கம்பனி படையிடம் பொய்யுரைத்து அதனால் வெட்டுன்ட இறந்த உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு,தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தினார். இன்று தெய்வமாக அவர் வெட்டுண்ட காளியம்மனாக வணங்கப்படுகிறார்.

மறவர் சீமையின் படைகளோடு மருதுபாண்டியரின் மக்கள் படையும் சேர்ந்து கம்பனிபடையை நாசம் செய்தது. மருதுபாண்டியரின் கொரில்லா போர் முறை உக்கிரம் தாளது அந்திய படை தோற்று ஓடியது. ராணியார் பெண் படையுடன் மகாஉக்கிரம் காட்டினார்." தேசப்பற்று மிக்க குயிலி என்ற பெண் உடலில் தீ மூட்டி கம்பனியின் ஆயுதக்கிடங்கில் புகுந்து சர்வநாசம் செய்து இறந்தார்." தனது ஐம்பதாவது வயதில், தனதுகணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்தார். கடைசியில் எதிரிப்படை வீழ்ந்தது ராணி பான்ஜோர் கழத்தில் கத்தி வைக்க பான்ஜோரும் ஸ்மித்தும் மண்டியிட்டு "ராணியிடம் உயிர்பிச்சை அளிக்குமாறு வேண்டினர் ராணிக்கு மன்னிப்பு பட்டயம் எழுதி கொடுத்தனர் மண்டியிட்டவருக்கு மரணம் விளைவிப்பது அதர்மம் ஆதலால் மன்னிப்பு அளித்தார் ராஜநீதியை நிலைநாட்டினார்".

சிவகங்கையின் ராணியாய் மீண்டும் பதவி ஏற்றார்.சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது. 1790-ல் அவரது மகளின் மறைவினால் மனமுடைந்த வேலுநாச்சியார் இதய நோயாளியாகி சிகிச்சைக்காக பிரான்ஸ்நாட்டுக்குச் சென்றார். மருது சகோதரர்களை மகன்களாக எண்ணி நாட்டின் ஆளுநர்களாக நியமித்தார் 1793-ல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் நாச்சியாருக்கு துயரம் அதிகமானது. அதனால்,விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார். வேலுநாச்சியார் 25டிசம்பர் 1796 இறந்தார்.உலகில் எந்த ராணியும் ராணி வேலு நாச்சியாருக்கு இணையாக முடியாது.இந்நாளில் அவரை வணங்குவோம்.
-வி. ராஜமருதவேல் (copyrights reserved by rajamaruthavel-காப்புரிமை விதிகள் படி கட்டுரையில் மாற்றமில்லாமல் சமுகவலை தளங்களில் இணையங்களில் பகிரலாம்


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


:) Relaxplzz

Posted: 25 Dec 2014 09:30 AM PST

மும்பை பெண்களுக்கு ஒரு நற்செய்தி. திரு. ராகேஷ் மரியா (படத்தில் இருப்பவர்) என்னு...

Posted: 25 Dec 2014 09:15 AM PST

மும்பை பெண்களுக்கு ஒரு நற்செய்தி.

திரு. ராகேஷ் மரியா (படத்தில் இருப்பவர்) என்னும் காவல்துறை அதிகாரி ஒரு சேவையை அறிமுகப்படுத்தியுள்ளார். தனியாக ஒரு பெண் ஆட்டோவிலோ அல்லது டாக்ஸியிலோ செல்ல நேர்ந்தால், வாகனத்தில் ஏறும் முன் அந்த வாகனத்தின் பதிவு எண்ணை 9969777888 என்ற ஹெல்ப்லைன் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும் என்கிறார்.

அவர்களுக்கு செய்தி கிடைத்தவுடன் நமக்கு ஒரு Acknowledgement மெசேஜ் அனுப்புவார்கள்.GPRS மூலமாக அந்த வாகனத்தை டிராக் செய்வார்கள்.இந்த சேவைக்கு கட்டணம் ஏதும் கிடையாது.

MTNL லுடன் இணைந்து மும்பை போலீஸ் இந்த சேவையை செய்கிறது.நம்ம மாநிலத்திலும் இந்த வசதி ஏற்படுத்தினால் நல்லா தான் இருக்கும்.


தமிழன் சாதித்த கட்டிடக்கலை! உங்கள் கையால் தொடலாம், உருட்டலாம், முழு உருளையையும்...

Posted: 25 Dec 2014 09:00 AM PST

தமிழன் சாதித்த கட்டிடக்கலை! உங்கள் கையால் தொடலாம், உருட்டலாம், முழு உருளையையும் பிடிக்கலாம் ஆனால் வெளியே எடுக்க முடியாது. கோவில் என்பது வழிபாட்டிற்கான இடம் மட்டுமல்ல. அது ஒரு கலைக்கூடம்.

இடம்: திருவாசி, திருச்சி அருகில்

You can touch, hold , rotate but you cannot take out. Our temples are not only for spritual and religious activities. It's an art gallery.

Plave: Thiruvaasi - Near Trichirapalli


நண்பர்களே தயவு செய்து இதை அதிகம் ஷேர் செய்யுங்கள்...! பெண்களின் பாதுகாப்பிற்கு ச...

Posted: 25 Dec 2014 08:45 AM PST

நண்பர்களே தயவு செய்து இதை அதிகம்
ஷேர் செய்யுங்கள்...!
பெண்களின் பாதுகாப்பிற்கு சில
ஆலோசனைகள்...!
1. இரவானாலும், பகலானாலும்
இரயிலில்
பயணம் செய்யும்
போது ஆட்களே இல்லாத
அல்லது ஒரு சிலர் மட்டுமே இருக்கும்
கம்பார்ட்மெண்டில் ஏறாதீர்கள். ஆட்கள்
இருக்கும்
பக்கமே ஏறுங்கள்......!
2. ஆட்டோவில் தனியே பயணம் செய்ய
வேண்டியத் தருணம் வந்தால், ஆட்டோவில்
ஏறும்
போதே தொலைபேசியில் உங்கள்
வீட்டாருக்கோ இல்லை நண்பருக்கோ அழைத்துப்
பேசத்
தொடங்குங்கள்.எங
்கு இருந்து எங்கு செல்கிறீர்கள்
என்பதை சொல்லி விட்டு தொடர்ந்து இறங்கும்
இடம் வரும் வரை அழைப்பைத்
துண்டிக்காமல்
பேசிக் கொண்டே செல்லுங்கள்......!
( அதற்காக ஆட்டோக்காரர் சரியான
ரூட்டில்
தான் செல்கிறாரா என்பதை கவனிக்காமல்
விட்டு விடாதீர்கள்)
3.பேருந்து நிலையம், இரயில் நிலையம்,
பேருந்து நிறுத்தம் என
எங்கு நின்றாலும் ஏதேனும்
ஒரு குடும்பம் நிற்கும்
பக்கமோ இல்லை பெண்கள் கூட்டமாக
நிற்கும்
பக்கமோ நில்லுங்கள்.
தனியே நிற்காதீர்கள்......!
4.இரவில் வீதியில் தனியாக நடக்க
வேண்டி வந்தால்,
அச்சத்தோடு தலையை குனிந்தபடி நடக்காதீர்கள்.
நிமிர்ந்து எல்லா பக்கமும் நோட்டம் விட்ட
படி நடங்கள்.அதற்காகதிரு திருவென
முழிக்க கூடாது.பயம் வந்தால் மீண்டும்
தொலைபேசியில் துணைத் தேடிக்
கொள்ளுங்கள்.தொல
ைபேசியை பையில்
வைத்து விட்டு ஹெட் போனில்
பேசுங்கள்......!
5.கேலி கிண்டல் செய்யும்
ஆண்களை எப்போதும்
கண்டு கொள்ளாதீர்கள்.
முறைக்காதீர்கள்.நீங்கள் ஆகாயத்தில்
நடப்பது போலவும் உங்கள் காதில்
எதுவுமே விழாதது போலவும்
நினைத்துக்
கொண்டு நடையைக்கட்டுங்கள்......!
6.கண்ட இடத்தில் எல்லாம் மொபைல் ரீ
சார்ஜ்
செய்யாதீர்கள். எவரையும் எளிதில்
நம்பி மொபைல் நம்பர்
கொடுக்காதீர்கள்
.காதலனே அழைத்தாலும்
தேவையற்ற நேரங்களில் தேவையற்ற
இடங்களுக்கு செல்லாதீர்கள்
......!
7.மற்ற பெண்கள்
அப்படி இருக்கிறார்களே என்று எவரை பார்த்தும்
எதையும் செய்யாதீர்கள்......!
8.உங்கள் சுதந்திரத்திற்கான
எல்லையை யாரும் சொல்லிதரக்
கூடாது.நீங்களே உங்களுக்கு எல்லை இட்டுக்
கொள்ளுங்கள்......!
# தன் குடும்ப
பொருளாதாரத்தை உயர்த்த
வேண்டும் என்ற நல்ல நோக்கில் தான்
வளர்ந்த
ஊரை விட்டு ஏதோ ஒரு நகரத்தில்,
பெண்கள்
விடுதியில் தன்
வாழ்க்கையை கழித்துக்
கொண்டிருக்கும் பெண்களுக்காக
சொல்கிறேன்......!
உங்களுக்கு உங்களை விட பெரிய
பாதுகாப்பு யாருமில்லை என்று நினைத்துக்
கொள்ளுங்கள.....!
தயவு செய்து பகிரவும்.....!


நம் சிறு வயது நினைவுகளை தூண்டும் இதை சுவைத்து உணர்ந்தவர்கள் லைக் பண்ணுங்க..

Posted: 25 Dec 2014 08:30 AM PST

நம் சிறு வயது நினைவுகளை தூண்டும் இதை சுவைத்து உணர்ந்தவர்கள் லைக் பண்ணுங்க..


சற்று முன் டீ குடித்த கடையின் வாசலில் கண்டேன் இவர்களை... எழுபது வயதுக்கு மேல் ஆ...

Posted: 25 Dec 2014 08:15 AM PST

சற்று முன் டீ குடித்த கடையின் வாசலில் கண்டேன் இவர்களை...

எழுபது வயதுக்கு மேல் ஆன ஏழை தம்பதிகள்... முதலில் ஒரு பன் வாங்கினர்... அதை ஆளுக்கு பாதியாக பிரித்தனர்...

அந்த மனைவி சிறிதாக எடுத்துக்கொண்டு முதியவர்க்கு கொடுத்தார்... ஏதோ நினைத்த பெரியவர் மீண்டும் இரண்டு பிஸ்கட்கள் வாங்கி மனைவிக்கு கொடுக்க அதில் பாதி மட்டும் அவர் எடுத்துக்கொண்டார் ...

மனைவி மீண்டும் கொஞ்சம் கணவருக்கு கொடுத்துவிட்டு, இருந்த ஒரு கப் டீயில் கொஞ்சம் குடித்து மீதியை கணவருக்கு வலுக்கட்டாயமாக கொடுக்கிறார்...
மறுபடி கணவர் திருப்பிக்கொஞ்சம் பகிர்ந்து கொடுக்கிறார்...

தண்ணீரை கூட பகிர்ந்தே குடித்து நகர்ந்தார்கள்...

தள்ளாத வயதிலும் தளராத அன்னியோன்யம் கொண்ட அவர்களை பார்த்து ஏனோ கண்கள் பூத்துவிட்டது !!

வாழ்வின் அர்த்தத்தை ஏழ்மையில் கூட விடாத விந்தை தம்பதிகள் !

- Siddhan cbe


வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க இலகுவான வழி ....!!!! தற்பொழு...

Posted: 25 Dec 2014 08:00 AM PST

வைரஸ் தாக்கிய 'பென்ட்ரைவ்' இலிருந்து பைல்களை மீட்க இலகுவான வழி ....!!!!

தற்பொழுது தகவல்களை சேமிக்க
பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.

இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டு விடும். கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.

இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை. உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.

1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.

2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.

3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.

4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.

5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும்.

◦நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.

◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும் —

உபயோகமான தகவல் என்று நினைத்தால், நண்பர்களுடன் பகிருங்கள்.

மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் Tune in இல் புரட்சி எப்.எம் ஐக் கேட்டு மகிழ இங்கே கிளிக் செய்யுங்கள்


பெண் : டாக்டர் என்னோட ரெண்டு வயசு பையன் இன்னும் எப்பவும் ம் விரல் சூபபுரான் . ட...

Posted: 25 Dec 2014 07:45 AM PST

பெண் : டாக்டர் என்னோட ரெண்டு வயசு பையன் இன்னும் எப்பவும் ம் விரல் சூபபுரான் .

டாக்டர் : ஒன்னும் problem இல்லை.....சரி பண்ணிடலாம்

பெண் : ரொம்போ கேவலமா இருக்கு டாக்டர் ...எவ்வளோ செலவு ஆனாலும் பரவாயில்லை

டாக்டர் : ஒன்னும் செலவு இல்லை ...ரெண்டு வயசு பையனுக்கு ஒரு பெரிய பையனோட ...... டவுசர மாட்டி வுட்டுடு....அவ்வளோதான்

பெண் : (குழப்பமாக )......எதுக்கு டாக்டர்...?????

டாக்டர் : அந்த டவுசர் அவனுக்கு லூசா இருக்கும் ...அதை கீழே விழாமே மேலே இழுத்து விடுறதே அவன் வேலையா இருக்கும் விரல் சூப்ப டைம் இருக்காது...


கணவரின் மருத்துவ செலவுக்காக மாரத்தான் ஓட்ட பந்தயத்தில் கலந்து வெற்றி பெற்ற 61 வய...

Posted: 25 Dec 2014 07:30 AM PST

கணவரின் மருத்துவ செலவுக்காக மாரத்தான் ஓட்ட பந்தயத்தில் கலந்து வெற்றி பெற்ற 61 வயது பாட்டி...!

என் கணவருக்கு, இருதய கோளாறு. மகாராஷ்டிர மாநிலம், பிம்ப்லி என்ற இடத்தில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு, எம்.ஆர்.ஐ., ஸ்கேன் வசதி இல்லாததால், தனியார் மருத்துவமனையில் தான், ஸ்கேன் எடுக்க வேண்டியிருந்தது. அதற்கு, 5,000 ரூபாய் கட்டணம் தேவைப்பட்டது. விவசாய கூலி வேலை மூலம், தினம், 100 ரூபாய் சம்பாதிக்கும் என்னிடம், என் கணவரின் சிகிச்சைக்கு பணம் இல்லை. அப்போது தான், மராத்தான் போட்டி பற்றி அறிந்தேன்.

வேகமாகக் கூட நடந்ததில்லை நான். கணவருக்காக, பந்தயத்தில் ஓடி, பரிசை வெல்ல தீர்மானித்தேன். காலில் செருப்பு கிடையாது; 9 முழ சேலையை வரிந்து கட்டி, பந்தயத்தில் ஓடி, வெற்றி பெற்றேன். கணவரை காப்பாற்ற, இதற்கு மேல், எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
- மராத்தான் போட்டியில் வென்ற 61 வயதான லதா பேக்வான்


வாய்ப்புக்களுக்காக காத்திருக்காதீர்கள், வாய்ப்புக்களை உருவாக்கிகொள்ளுங்கள் ..!!

Posted: 25 Dec 2014 07:15 AM PST

வாய்ப்புக்களுக்காக காத்திருக்காதீர்கள்,
வாய்ப்புக்களை உருவாக்கிகொள்ளுங்கள் ..!!


திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர். அவர்களுக்...

Posted: 25 Dec 2014 07:00 AM PST

திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர். அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும்.

குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
எளிமையுடன் எண்ணற்ற சத்துக்களும் கொண்டது

வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்பு சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.

செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா, மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் 'சி' அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.

கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.

மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்.

பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.

நீங்கள் தெரிந்துகொண்டதை மற்றவருக்கும் தெரியபடுத்துங்கள்.... பகிருங்கள்...!!!


பிறந்தநாள் என்றால் என்ன ? இந்த ஒரு கேள்வி BBC வேர்ல்ட் நிறுவனத்தார் உலகில் உள்ள...

Posted: 25 Dec 2014 06:45 AM PST

பிறந்தநாள் என்றால் என்ன ?

இந்த ஒரு கேள்வி BBC வேர்ல்ட் நிறுவனத்தார் உலகில் உள்ள பெரிய மனிதர்கள்(VIP) எல்லோரிடமும் கேட்டனர்.அதில் மிக சிறந்த பதிலாக தேர்வு செய்ய பட்டது யாருடைய பதில் தெரியுமா?

அப்துல் கலாம் அவர்களின் பதில் தான்.......அது என்ன தெரியுமா?
.
.
.
..
.
.
.
.
.
.
" வாழ்கையில் அந்த ஒரே ஒரு நாள் , உன்னுடைய அழுகை குரல் கேட்டு உன் தாய் சிரிப்பது "

வயலில் வேலை செய்த களைப்புடன் இந்த தண்ணீரை அள்ளி குடிக்கும் அருமை விவசாயிக்குத்தா...

Posted: 25 Dec 2014 06:30 AM PST

வயலில் வேலை செய்த களைப்புடன் இந்த
தண்ணீரை அள்ளி குடிக்கும்
அருமை விவசாயிக்குத்தான் தெரியும்.

இதை விட கோக் பெப்சி பெரியது இல்லை.


அல்சரை தவிர்க்க.........! நண்பர்களே தயவு செய்து இதை அதிகம் ஷேர் செய்யுங்கள்...!...

Posted: 25 Dec 2014 06:15 AM PST

அல்சரை தவிர்க்க.........!

நண்பர்களே தயவு செய்து இதை அதிகம் ஷேர் செய்யுங்கள்...!

ஒரு நடிகையின் போட்டோ வை ஷேர் செய்யறோம்.....!

உங்கள் ஷேர் ஒரு உயிரை கூட காப்பாற்றலாம்.....!

ஒரு கப் தயிரை தவறாமல் சாப்பிட்டு வந்தால் அல்சர் வரவே வராது.......!

தினமும் ஒரு ஏலக்காயை தேனோடு உண்பது கண் பார்வைக்கும், நரம்பு மண்டலத்திற்கும்மிகவும் நல்லது.......!

தினமும் இரண்டு அல்லது மூன்று ஓமம் சாப்பிட்டால் ஒரு மனிதனுக்கு தேவையான இரும்புச் சத்தில் பத்து சதவீதம் கிடைக்கிறது.......!

குழந்தைகளுக்கு முகத்தில் பாலுண்ணி தோன்றியதும், வெங்காயத்தை வெட்டி அதன் மேல் தேய்த்துவிட்டால் இரண்டு மூன்று தினங்களில் உதிர்ந்து விடும்.......!

மஞ்சள், பூண்டு இவை இரண்டையும் பால் விட்டு அரைத்து தலைக்கு பற்றுப் போட்டால், தலைவலி நீங்கும்.......!

உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்கலாம் anyway share பண்ணுக......!

நண்பர்களே தயவு செய்து இதை அதிகம் ஷேர் செய்யுங்கள்...!

Relaxplzz


பெயர்: கோதையம்மாள். வயது:75 க்கும் மேல்.. . (அவருக்கே சரியாக நினைவில்லை..) ஊர்...

Posted: 25 Dec 2014 06:00 AM PST

பெயர்: கோதையம்மாள்.

வயது:75 க்கும் மேல்.. . (அவருக்கே சரியாக நினைவில்லை..)

ஊர்: பாண்டிச்சேரி..தெரு ஓரத்தில்..

பிள்ளைகள்: தறுதலைகள்..

தொழில்: சுமார் 10 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு கோலம் போடுவது..

சம்பளம்: ஒரு நாளைக்கு ,ஒரு கோலத்துக்கு ரூ.5 தோரயமாக மாதம் ரூ.1500..

ஒரு வீட்டில் மாதம் 500 கொடுத்து மூன்று வேளை உணவு..(அவர்கள் உணவுக்கு பணம் வாங்க மறுத்தாலும்,இவர் விடுவதில்லை..வலுக்கட்டாயமாக கொடுத்துவிடுகிறார். )

எதேட்சையாகத்தான் சந்தித்தேன்..இதுவரை 10,000 ரூபாய்க்கு மேல் சேர்த்து ஒரு வீட்டில் கொடுத்து வைத்திருக்கிறார் ,தன்னுடைய ஈமக்கடனுக்காக.. அனாதைப் பிணமாக சாக விருப்பமில்லையாம்..

எனது நண்பரும் நானும் கொடுப்பதாக முன்வந்த சில உதவிகளையும் கண்டிப்பாக மறுத்துவிட்டார்..மேலும் போட்டோவுக்கும் முகம் காட்ட மறுத்து விட்டார்.

ஒவ்வொரு ஊரும் இவரைப் போன்று நிறைய கோதைகளால் நிரம்பியிருக்கின்றன, சுய மரியாதைக்கும் ,தன்னம்பிக்கைக்கும் உதாரணமாய்..

ஆனால் நம் கண்கள் தவறவிட்டிருக்கலாம்..காதுகள் கேட்க்க அலுப்பு பட்டிருக்கலாம்..நம் நேரமின்மையால் கூட இருக்கலாம்.

"தன்மானச்சிங்கம் கோதையம்மாள்"

Relaxplzz


"ஆண்களின்" அன்பு..! திருமணம் ஆன புதுதம்பதினர்கள் மருத்துவமனைக்கு வரும்பொழுது ,...

Posted: 25 Dec 2014 05:45 AM PST

"ஆண்களின்" அன்பு..!

திருமணம் ஆன புதுதம்பதினர்கள் மருத்துவமனைக்கு வரும்பொழுது , Pregnancy Confirmed ( உங்கள் மனைவியின் கர்ப்பம் உறுதி செய்யப்படுகிறது ) - என நான் சொல்லும் அந்த தருணம் பெண் சந்தோஷப்படுகிறாள் , ஆண் பெருமைப்படுகிறான் . பெண் மனதில் 9 மாதகாலம் குழந்தையை எப்படி பாதுகாப்பது என சிந்தீப்பாள் , ஆனால் ஆண் மனைவி, குழந்தை இரண்டு பேரையும் எப்படி பாதுகாப்பது என சிந்தித்து கொண்டு இருப்பான், பெண் மனதில் 10% அன்பு இருந்தால் , அதை 100 % வெளிப்படுத்துவாள் . ஆனால் ஆண் மனதில் 100% அன்பு இருக்கும் ஆனால் 10% அன்பைக்கூட வெளிப்படுத்த தெரியாது . ஆண்களுக்கு கோபத்தை வெளிப்படுத்த தெரிந்த அளவிற்க்கு அவர்கள் மனதில் இருக்கும் அன்பையும் முழுமையாக வெளிப்படுத்தி இருந்தால் பெண்களை விட ஆண்களே அன்புக்குரியவர்கள் என்ற உண்மை இந்த உலகத்திற்க்கு தெரிந்து இருக்கும் .

அறிவு தளத்தில் வேண்டுமானல் சில நேரங்களில் பெண்கள் ஆண்களைவிட உயர்வாக தெரியலாம் . ஆனால் அன்பு தளத்தில் எப்பொழுதும் பெண்களை விட ஆண்களே உயர்ந்துள்ளனர் என்பதை என்னால் உறுதி பட சொல்ல முடியும் ..

Relaxplzz


அழகிய படம்!

Posted: 25 Dec 2014 05:30 AM PST

அழகிய படம்!


ஆண்களைப் பற்றிய கேவலமான உண்மைகள்!! எல்லோரும் பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்.....

Posted: 25 Dec 2014 05:16 AM PST

ஆண்களைப் பற்றிய கேவலமான உண்மைகள்!!

எல்லோரும் பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்...

இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்....

ஆண் என்பவன் யார்?

ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான்.

அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான்,

அவன் தன் தாய் தந்தை, சகோதரிக்காக குடும்ப சூழ்நிலையால்,..... பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி தியாகம் செய்கிறான்.

தன் மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு வெளிநாடுகளில் வேலை செய்வதன் மூலம் அன்பு மற்றும் சந்தோசத்தை தியாகம் செய்கிறான்.

அவன் மகள் மற்றும் சகோதரிக்காக தன் எதிர்காலத்தை வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலம் கடனாளியாய் உருவாகிறான் ஆனால் அதை அவர்களுக்காக திருப்பிச் செலுத்த தன் வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுகிறான்.

அவன் தன் மனைவியின் ஆசைகள் மற்றும் குழந்தைகக்காக படிப்பு, திருமணம் என எந்தவித குறையும் இல்லாமல் வைக்க தன்னையே தியாகம் செய்கிறான்.

அவன் மிகவும் கஷ்டப்பட்டாலும், தன் தாய், மனைவி, தன் முதலாளி ஆகியோரின் இசையை (திட்டுகள்) கேட்க வேண்டியுள்ளது.

எல்லா தாயும்,மனைவியும் முதாலாளியும் அவனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சிக்கின்றனர்.

இறுதியில் மற்றவர்களின் சந்தோசத்திற்காக விட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதன் மூலம் அவன் வாழ்க்கை முடிகிறது.

பெண்கள உங்கள் வாழ்வில் ஒவ்வொரு ஆணையும் மதியுங்கள்.

அவன் உங்களுக்காக என்ன தியாகம் செய்துள்ளான் என்பதை நீங்கள் எப்போதும் அறியப் போவதில்லை.

அவனுக்கு தேவைப்படும்போது உங்கள் கரங்களை நீட்டுங்கள் அவனிடமிருந்து இருமடங்காக நீங்கள் அன்பை பெறுவீர்கள்.

ஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதையும் மதியுங்கள். அமைதி கொள்வோம்.


தேடித் பார்த்தபோது விளை'நிலங்கள் இன்னும் இருக்கின்றன, சிறிய மாற்றம் ! விலை'நிலங்...

Posted: 25 Dec 2014 05:02 AM PST

தேடித் பார்த்தபோது
விளை'நிலங்கள்
இன்னும் இருக்கின்றன,
சிறிய மாற்றம் !
விலை'நிலங்களாக
இருக்கின்றன...!


-----------சிந்திக்க-------- தாய் புறாவிடம் குஞ்சு புறா கேட்டது,,,, கோவிலில் இ...

Posted: 25 Dec 2014 04:15 AM PST

-----------சிந்திக்க--------

தாய் புறாவிடம் குஞ்சு புறா கேட்டது,,,,

கோவிலில் இருந்தோம்,
திருவிழா என்று நம்மை விரட்டி விட்டனர்.!!!

நாகூரில் இருந்தோம்,
அங்கேயும் வெள்ளை அடிப்பதாக சொல்லி விரட்டி விட்டனர்.!!!

வேளாங்கண்ணியிலும்
திருவிழா பெயரை சொல்லி துரத்தி விட்டனர்.!!!

ஆனால் ஒரு சந்தேகம் அம்மா...

நாகூருக்கு வருபவர்களை முஸ்லிம்கள் என்றும்,
கோவிலுக்கு வருபவர்களை ஹிந்துக்கள் என்றும், வேளாங்கண்ணிக்கு வருபவர்களை கிறஸ்தவர்கள் என்றும் அழைக்கிறார்கள்.

ஆனால் நாம் எங்கு சென்றாலும் நம்மை
மட்டும் ஏனம்மா
''புறா'' என்றே அழைக்கின்றனர் ???

#தாய்_புறா
அதனால் தான் அவர்கள் கீழேயே வசிக்கிறார்கள்,
நாம் மேலேயே வசிக்கிறோம்.......

Relaxplzz

ரத்த குழாய் அடைப்பு நீங்க.. நண்பர் ஒருவருக்கு ரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டதால் ப...

Posted: 25 Dec 2014 04:00 AM PST

ரத்த குழாய் அடைப்பு நீங்க..

நண்பர் ஒருவருக்கு ரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டதால் பைபாஸ் அறுவை சிகிச்சை
செய்ய நேர்ந்தது, ஆனால் அறுவை சிகிச்சை இல்லாமல் சாதரணாமாக நாம் உண்ணும்
உணவில் (ஆயுர் வேத டாக்டர் பரிந்துரைத்த) எல்லா அடைப்புகளும் நீங்கியதுதான்
ஆச்சரியம்.

தயவு செய்து கவனியுங்கள்.

உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும்.
ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச்
செய்யுங்கள். நீங்கள் குணமடைவீர்கள்.

தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு
பரிந்துரைக்கப்பட்டார்.

இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.

தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில், இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள்
இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும்
தெரிவித்தார்.

ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு
பரிந்துரைத்தார்.

மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில் பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல் நாள்
ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார்.

நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து
வியந்தார்.

ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து
சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.

இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய
மூலப்பொருள்கள்:

1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் புண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.

எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60
நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு
இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை
அருந்துங்கள் மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும் நீங்களே
உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

நண்பர்களே! இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்., ஏனென்றால்
மருத்துவமனை வாங்கும் பெருந்தொகையால் ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும்.....!


நீ பற்ற வைக்கும் நெருப்பு உன்னையே எரிக்கும். நீ மரத்திற்கு ஊற்றும் நீர் உன் தாக...

Posted: 25 Dec 2014 03:15 AM PST

நீ பற்ற வைக்கும் நெருப்பு
உன்னையே எரிக்கும்.

நீ மரத்திற்கு
ஊற்றும் நீர்
உன் தாகம் தணிக்கும்.

நீ செய்யும் வினை
உன்னையே வந்தடையும்.

எல்லாமே உனக்கு
தெரியும் என்பது மடத்தனம்.

தெரிந்ததை செய்வது தான்.
புத்திசாலி தனம்.

எண்ணத்தால் எளிதாய் இரு.
மனதால் பலமாய் இரு.
அன்பால் ஆரோக்கியமாய் இரு.
காதலால் கண்ணியமாய் இரு.
நட்பால் நாணயத்துடன் இரு.

பொதுவாய்
மனிதனாய் இரு......

Relaxplzz

வறுமைதான் என் வைராக்கியத்தை உறுதிப்படுத்தியது தந்தை சைக்கிள் ரிக்ஷா ஓட்டுநர்......

Posted: 25 Dec 2014 03:00 AM PST

வறுமைதான் என் வைராக்கியத்தை உறுதிப்படுத்தியது

தந்தை சைக்கிள் ரிக்ஷா ஓட்டுநர்... மகன் ஐஏஎஸ் அதிகாரி!

படிப்பறிவும் பொருளாதாரப் பின்புலமும் இல்லாத நாராயண், வாரணாசியில் சைக்கிள் ரிக்ஷா ஓட்டுநர். இவருக்கு மூன்று பிள்ளைகள். சாப்பாட்டுக்கே சிரமமான நிலைமை. இந்த வறுமையான சூழ்நிலையிலும் தன் மகன் கோவிந்த் ஜெய்ஸ்வாலை ஐஏஎஸ் படிக்க வைத்துள்ளார். இன்று கோவிந்த் உதவி ஆட்சியர்.

தான் படிக்காவிட்டாலும் கல்வியின் முக்கியத்துவம் அறிந்த நாராயண், தன் சிரமமான பொருளாதார நிலைமையிலும் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்துள்ளார். அதில் இளைய மகனான கோவிந்த் ஜெய்ஸ்வால்தான் இப்போது ஐஏஎஸ் அதிகாரி.

நெருக்கடி மிகுந்த வாரணாசி பகுதியில் 12 x 8 என்ற அளவுகொண்ட ஒரு சிறிய அறைதான் கோவிந்தின் வாடகை வீடு. அந்தச் சிறிய அறையில்தான் கோவிந்தின் படிப்பு, வீட்டின் சமையல், துணிகளைத் துவைத்தல் மற்றும் குடும்பத்திலுள்ள அனைவரின் இரவு நேர உறக்கமும். வறுமை ஒருபுறம் வளர்ந்து கொண்டிருக்க, கூடவே கோவிந்தின் ஐஏஎஸ் கனவும் வளர்ந்திருக்கிறது. வீட்டைச் சுற்றியுள்ள மின்தறி சத்தங்கள், தொழிற்சாலைகளின் புகை, பதினான்கு மணி நேரம் மின்வெட்டு எனப் பல்வேறு பிரச்சினைகள் அவரது கனவுக்கு முட்டுக்கட்டை போட்டாலும் அவற்றை வென்று, கனவைக் கைப்பற்றியிருக்கிறார் கோவிந்த்.

சிறு வயதில் மற்ற பிள்ளைகளைப் போல வீதியில் விளையாடுவது, நண்பர்களுடன் அரட்டை என எதுவும் இல்லாமல் படிப்பதில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருந்திருக்கிறார். இதனால், மற்ற மாணவர்கள் கோவிந்தை கூச்ச சுபாவம் மிக்க மாணவராவே கருதினர். ஆனால், உண்மையில் கோவிந்த் தனது லட்சியத்துக்காக தனது சிறு வயது பால்ய சந்தோஷங்களை தியாகம் செய்துள்ளார் என்பதே உண்மை.

கணக்குப் பாடத்தில் வல்லவரான கோவிந்த், எட்டாம் வகுப்பு படிக்கும்போதே மற்ற ஒன்பதாவது, பத்தாவது படிக்கும் மாணவர்களுக்கும் மாலை வேளையில் டியூஷன் சொல்லிக் கொடுத்து அதில்வரும் வருமானத்தில் தன் அக்காக்களுக்கும், குடும்பத்திற்கும் உதவிகரமாக இருந்துள்ளார். பள்ளியில் அவர்தான் முதல் மாணவர். பின்பு பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் தனது கல்லூரிப் படிப்பினை முடித்து, ஐஏஎஸ் தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருந்தார். மேலும், தனது ஐஏஎஸ் தேர்வுப் பயிற்சிக்காக டெல்லிக்குச் செல்ல திட்டமிட்டிருந்தார் கோவிந்த். அந்த நேரத்தில் துரதிர்ஷ்டவசமாக கோவிந்தின் தந்தைக்கு காலில் அடிபட்டு படுக்கையில் முடங்கினார். ஒரு பக்கம் தன் கனவு, இன்னொரு பக்கம் தந்தையின் உடல் நிலை என இறுக்கமான சூழ்நிலையில் இருந்த கோவிந்திற்கு அவரது தந்தை நாராயண் நம்பிக்கை அளித்து, டெல்லிக்குச் சென்று படிக்க, மகள்களின் திருமணத்திற்காக வாங்கிய இடத்தினை 30,000 ரூபாய்க்கு விற்று, கோவிந்தை டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தன் குடும்பத்தின் வறுமை நிலையை எண்ணி கடுமையாகப் படித்த கோவிந்த், 2006ம் ஆண்டு நடந்த ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றார். மேலும் இரண்டு வருட ஐஏஎஸ் பயிற்சியில் தனக்குக் கிடைத்த உதவித்தொகையை அடிபட்ட தந்தையின் மருத்துவச் செலவிற்காக அனுப்பியுள்ளார் கோவிந்த்.

வெற்றிபெற்ற அனுபவத்தை கோவிந்த் கூறும்போது, "சிறு வயதில் பகல் நேரத்தில் தொழிற்சாலைகளின் சத்தத்தில் நான் கணக்குப் பாடங்களின் சூத்திரங்களை மட்டுமே போட்டுப் பார்ப்பேன். ஏனென்றால், அந்தச் சத்தத்தில் மற்ற பாடங்கள் சரியான முறையில் மனதில் ஏறாது. சத்தங்கள் மாலை நேரங்களில் குறைந்ததும் மற்ற பாடங்களைப் படிப்பேன். அப்துல் கலாம் தான் என்னுடைய ஹீரோ. என்னுடைய ஐஏஎஸ் கனவு நிஜமாக என்னுடன் இருந்து நம்பிக்கையூட்டியது அவர் எழுதிய, 'அக்னி சிறகுகள்' புத்தகம். மேலும் என்னை எப்போதும் ஊக்கப்படுத்தி உற்சாகம் அளித்த சகோதரிகளுக்கும், என் கனவின் மேல் நம்பிக்கை வைத்து என்னை டெல்லிக்கு அனுப்பி வைத்த என் தந்தைக்கும் மனம் நெகிழ்ந்த நன்றியைக் கூறுகிறேன். என்னுடைய சிறுவயது நாட்கள் கஷ்டமானவையாக இல்லாமல் போயிருந்தால் நான் ஐஏஎஸ் ஆகியிருக்க வாய்ப்பில்லை. அந்த வறுமையும் கஷ்டங்களும்தான் என் வைராக்கியத்தை அதிகப்படுத்தி, பொறுப்புடன் படிக்க காரணமானது" என்கிறார் கோவிந்த்.

ஐஏஎஸ் பிரதானத் தேர்வில் கணக்கினைத் தவிர்த்து விட்டு தத்துவம், வரலாற்றுப் பாடங்களைப் பிரதானமாகத் தேர்ந்தெடுத்து எழுதியிருக்கிறார் கோவிந்த். "உலகில் எல்லாப் பாடங்களும் எளிதில் படிக்கக் கூடியவைதான். ஆனால், அதில் நாம் எவ்வளவு தூரம் ஆழமாக கற்றுக் கொள்கிறோம் என்பதே முக்கியம்" என்கிறார். ஐஏஎஸ் தேர்வில் அனைத்துப் பாடங்களையும் தாய்மொழி ஹிந்தியிலேயே எழுதியிருக்கிறார் இவர். "தாய்மொழியில் தேர்வு எழுதுவது பிரச்சினை கிடையாது. நாம் கற்றதை தெளிவான முறையில் எப்படித் தேர்வில் வெளிப்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம். இத்துடன் தளராத நம்பிக்கையும் இருந்தால் எந்தத் தடையையும் உங்களால் வெல்ல முடியும்" என்று சொல்லும் கோவிந்த் ஜெய்ஸ்வால், இப்போது நாகாலாந்து மாநிலத்திலுள்ள சூன்ஹிபோடோ (zunheboto) என்ற மாவட்டத்தில் உதவி ஆட்சியராகப் பணிபுரிகிறார்.

---என். ஹரிபிரசாத்

Relaxplzz


இரெண்டுமே நம்மூரில் தான்... :(

Posted: 25 Dec 2014 02:45 AM PST

இரெண்டுமே நம்மூரில் தான்... :(


இந்த யானைக்கு எத்தனை கால்கள்..???

Posted: 25 Dec 2014 02:45 AM PST

இந்த யானைக்கு எத்தனை கால்கள்..???


பழந்தமிழரின் அளவை முறைகள்...! முகத்தல் அளவைகள் ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெ...

Posted: 25 Dec 2014 02:15 AM PST

பழந்தமிழரின் அளவை முறைகள்...!

முகத்தல் அளவைகள்

ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர்.
ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர்.
ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர்.
ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர்.
ஒரு பாலாடை = முப்பது மில்லி லீட்டர்.
ஒரு குப்பி = எழுநூறுமில்லி லீட்டர்.
ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.

முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.
ஐந்து சோடு = ஒரு அழாக்கு.
இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு = ஒரு உரி.
இரண்டு உரி = ஒரு நாழி.
எட்டு நாழி = ஒரு குறுணி.
இரண்டு குறுணி = ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு = ஒரு தூணி.
மூன்று தூணி = ஒரு கலம்.

நிறுத்தல் அளவைகள்

மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பணவெடை.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.
பத்து விராகன் எடை = ஒரு பலம்.
இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.
ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.
மூன்று தோலா = ஒரு பலம்.
எட்டு பலம் = ஒரு சேர்.
நாற்பது பலம் = ஒரு வீசை.
ஐம்பது பலம் = ஒரு தூக்கு.
இரண்டு தூக்கு = ஒரு துலாம்.

ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.
ஒரு பணவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.
ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)
ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.
ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.
ஒரு விராகன் = நான்கு கிராம்.

கால அளவுகள்

இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாளிகை.
இரெண்டரை நாழிகை = ஒரு மணி.
மூன்றே முக்கால் நாழிகை = ஒரு முகூர்த்தம்.
அறுபது நாழிகை = ஒரு நாள்.
ஏழரை நாழிகை = ஒரு சாமம்.
ஒரு சாமம் = மூன்று மணி.
எட்டு சாமம் = ஒரு நாள்.
நான்கு சாமம் = ஒரு பொழுது.
ரெண்டு பொழுது = ஒரு நாள்.
பதினைந்து நாள் = ஒரு பக்கம்.
ரெண்டு பக்கம் = ஒரு மாதம்.
ஆறு மாதம் = ஒரு அயனம்.
ரெண்டு அயனம் = ஒரு ஆண்டு.
அறுபது ஆண்டு = ஒரு வட்டம்.

தமிழறிந்த அனைவருக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் இவை... எனவே இயன்றவரையில் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Relaxplzz

விடையில்லா வினாக்கள்!! அண்மையில் சென்னையில் இருந்து அரசு விரைவு பேருந்தில் மதுர...

Posted: 25 Dec 2014 02:00 AM PST

விடையில்லா வினாக்கள்!!

அண்மையில் சென்னையில் இருந்து அரசு விரைவு பேருந்தில் மதுரைக்குப் பயணித்தேன். பஸ்ஸில் எனக்குப் பின்னால் கைக் குழந்தையுடன் ஓர் இளம் தம்பதி. பஸ் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஏறக்குறைய அனைத்து பயணிகளும் தூங்க தொடங்கி விட்டனர். அந்த இளம் தம்பதி, குழந்தைக்கான மெத்தையை தரையில் விரித்து குழந்தையை அதில் படுக்க வைத்தனர்.

நள்ளிரவில் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது ஒரு மோட்டலில் (சாலை வழி உணவகம்) பஸ் நின்றது. அங்கே இருந்த ஒலிபெருக்கியில் பலத்த சத்தத்தில் ஒரு டப்பாங்குத்து பாட்டு கத்தியது. இருப்பினும், என்னைப் போன்ற ஒன்றிரண்டு பயணிகளைத் தவிர, யாரும் இறங்கவில்லை. மற்ற அனைவருமே நல்ல தூக்கத்தில் இருந்தனர்.

அந்த மோட்டலின் கல்லாவில் இருந்தவர், அவரின் அருகில் இருந்த ஒருவரைப் பார்த்து "போ' என்றார். உடனே அந்த நபர் கையில் ஒரு காலி தண்ணீர் கேனை எடுத்துக்கொண்டு அந்த கேனால் பஸ்ûஸ ஓங்கி ஓங்கி தட்டியபடியே சுற்றி சுற்றி வந்தார். அவ்வளவுதான், நல்ல தூக்கத்தில் டம் டம் என்று தட்டும் சத்தம் கேட்டு அனைத்து பயணிகளும் வாரிச் சுருட்டி எழுந்தனர். தரையில் படுத்திருந்த குழந்தை வீறிட்டு அழும் சத்தம், கீழே அவர்கள் கதற விடும் பாட்டுச் சத்தத்தையும் மீறி கேட்டது.

சரி, கீழே இறங்கி விட்டோமே ஒரு டீ சாப்பிடுவோம் என்று நினைத்து "டீ எவ்வளவு' என கேட்டேன். "பதினைந்து ருபாய்' என்றனர். டீ குடிக்கும் எண்ணத்தை மாற்றிக் கொண்டு பிஸ்கெட் வாங்கலாம் என்று போனேன். தரமான நிறுவன பெயர்களில் ஒன்றிரண்டு எழுத்துகளை விழுங்கிவிட்டு அதே போன்ற பேக்கிங்கில் உள்ளூர் தயாரிப்பு பிஸ்கெட்களாக வைத்திருந்தனர். உதாரணமாக, மில்க் பிக்கீஸ் என்பதற்கு பதில் மில்க் பிக்ஸ் என ஓர் ஆங்கில எழுத்தை தவிர்த்துவிட்டு, கம்பெனி பிஸ்கெட் போன்ற பேக்கிங்கில் விற்றனர். அதையும் வாங்க மனமின்றி யோசித்தபடி நின்றேன்.

அப்போது பஸ்ஸில் வந்த கைக்குழந்தையின் தந்தையான அந்த இளைஞர் கடைக்காரருடன் வாக்குவாதம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். "பஸ்ஸில் தட்டுவதற்கு யார் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது? நான் போலீஸில் புகார் செய்வேன்' என்ற ரீதியில் அவர் பேச… இவரைப்போல எத்தனையோ பேரை பார்த்துவிட்ட மிதப்பில் கடைக்காரர் பேச… இருவருக்கும் கைகலப்பு ஏற்படும் நிலை உருவானது. பிரச்னை அதிகரித்தால் பயணத்தில் சிக்கல் ஏற்படலாம் என்ற சுயநலம் தோன்றவே, அந்த இளைஞரைச் சமாதானம் செய்து பஸ்ஸில் ஏற்றி விட்டேன்.

சில நிமிடங்களில் பஸ் புறப்பட்டது. நடத்துநரிடம் பேசினேன். "உங்களுக்கு ஓசியில் உணவு கிடைக்கிறது என்பதற்காக இப்படி பயணிகளின் உயிருடன் விளையாடு கிறீர்களே" என்று நான் துவங்க… தொடர்ந்து ஒவ்வொரு பயணியும் சகட்டுமேனிக்கு ஓட்டுநரையும் நடத்துநரையும் வறுத்தெடுக்க துவங்கினர்.

சற்று நேரம் பேசாமல் இருந்த நடத்துநர் பேசத் தொடங்கினார்."இவ்வளவு பேர் பஸ்சுல இருந்து இறங்கினீங்களே நாங்க என்ன சாப்பிட்டோம்னு பாத்தீங்களா…. வெறும் டீ தான் சாப்பிட்டோம். இங்க இருக்கற பொருள் எப்படி இருக்கும்னு எங்களுக்கு தெரியும். அதுனால இதுமாதிரி இடங்கள்ல நாங்க சாப்பிடவே மாட்டோம்… அப்புறம் ஏன் நிறுத்துறோம்னு அடுத்த கேள்வி கேப்பீங்க… இங்க நாங்க நிறுத்தலேன்னா எங்களுக்கு மெமோ கொடுப்பாங்க… காரணம் என்னன்னு நீங்களே புரிஞ்சுக்கங்க' என்றார்…

அவர் தரப்பில் இருக்கும் நியாயம் புரிந்தது. ஆனால், என் மனதில் பல கேள்விகள் எழுந்தன. தூங்கும் பயணிகளை எழுப்ப காலி டப்பாவால் பஸ்ûஸ தட்டும் அதிகாரத்தை அவர்களுக்கு யார் கொடுத்தது? ஒரு நிறுத்தத்தில் பஸ்ûஸ விட்டு பயணிகள் இறங்கும் முன் பஸ் புறப்பட்டால் ஓட்டுநரை எச்சரிக்கும் விதத்தில் ஒரு பயணி லேசாக கையால் பஸ்ûஸ தட்டினாலே கோபித்துக் கொள்கிற ஓட்டுநரும் நடத்துநரும் இந்த நபர் காலி பாட்டிலால் தொடர்ந்து சத்தமாக தட்டுவதை தங்கள் மேலதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லலாமே…

உணவகத்தை யார் வேண்டுமானாலும் நடத்தட்டும். நியாயமான விலையில் உணவையும் பொருள் களையும் தரமாக கொடுக்கலாமே. ரயில் நிலையங்களில் உள்ளது போல, இதுபோன்ற உணவகங்களிலும் விலை, எடை போன்றவற்றை முறைப் படுத்தலாமே. உணவுப் பொருள் தரம், போலி தயாரிப்புகள் தடுப்பு, தரக் கட்டுப்பாடு என விதவிதமான அரசுத் துறைகள் இருந்தும் அவற்றின் பார்வையில் இந்த மோட்டல்கள் படவில்லையா?… இப்படி பல கேள்விகள்… எல்லாமே விடையில்லா வினாக்கள்.

தகவல்: தமிழ்வளம்.காம்.

Relaxplzz


பேப்பரில் செய்த அழகிய வேலைப்பாடு... பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 25 Dec 2014 01:45 AM PST

பேப்பரில் செய்த அழகிய வேலைப்பாடு...

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


நாம்தான்... *ஒளியும் ஒலியும் பாத்த கடைசி தலைமுறையும் நாமதான் #ஓனிடா மண்டையன பாத...

Posted: 25 Dec 2014 01:15 AM PST

நாம்தான்...

*ஒளியும் ஒலியும் பாத்த கடைசி தலைமுறையும் நாமதான் #ஓனிடா மண்டையன பாத்த கடைசி தலைமுறையும் நாமதான

*மஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறை நாமாதான்...!

*கேலண்டர் அட்டையில் தேர்வெழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

*மயில் இறகை நோட்டுக்குள்ள வெச்சி அரிசி போட்டு அது குட்டி போடும்னு நம்பின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

*வெட்டிப்போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

*தந்தியில் மரணச் செய்தி அறிந்ததும், தந்திக்கே மரணம் வந்ததையும் அறிந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும

*கல்யாண மண்டபங்களில் உறவினர்கள் கையால் உணவு உண்ட கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

*காதல்கடிதத்தை கவரில் வைத்து மஞ்சள் தடவி ,பூஜை போட்டு ,பயந்து கொண்டே காதலியிடம் கொடுத்து திரும்பிப்பார்க்காமல் ஓடி வந்த கடைசி தலைமுறை நம்மளாதான்
இருக்கும்.

*நண்பர்களுக்கு கடிதம் எழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

*10th 12th ரிசல்ட் பேப்பர் ல பார்த்த கடைசி தலாமுறை நாம தான்

*கதவு வச்ச டிவி ய பாத்த கடைசி தலைமுற நாம தான்
*ஆடியோ கேசட்டில் பாட்டு கேட்டதும் நம்ம தான்.

*சைக்கிளில் கால் எட்டாத போதும் குரங்கு பெடல் ஓட்டியது நம்ம தலைமுறை தான்.

*போஸ்ட் கார்டு ல ரிசல்ட் வந்த தலைமுறை நாம தான்

*ஜவ்வுமிட்டாயில் வாட்ச் கட்டினது
*நாம் படித்த புத்தகத்தை விற்று அதில் வரும் பணத்தை
அடுத்த வகுப்புக்கும் புத்தகங்கள் வாங்கினது,
கோனார் தமிழ் உரை,வெற்றி அறிவியல் உரை
இதெல்லாம் போச்சு.

*நொண்டி, கிட்டிப்புள், பம்பரம், கண்ணாம்பூச்சி, கோலி பலவிதமான விளையாட்டுகளுக்கு கடைசி தலைமுறை நாம்தான்...

*5,10,20,25 பைசா நாணயங்களை கடைசியா பாத்த தலைமுறையும் நாமதான்,

*மண் குழப்பி வீடு கட்டி விளையாடிய கடைசி தலைமுறை
இதையெல்லாம் படிக்கும்போது சிறுதுளி கண்ணில். எட்டி பார்ப்பதும், அதை ரசிக்கும் கடைசி தலைமுறையும் நாம்தான்...

Relaxplzz

புது மனைவி கையில் கலக்கிக் கொடுத்த பானம் இன்னதென்று யூகிக்க இயலாவிடினும் ஏதோ ஓர...

Posted: 25 Dec 2014 01:00 AM PST

புது மனைவி

கையில் கலக்கிக் கொடுத்த பானம்
இன்னதென்று யூகிக்க இயலாவிடினும்
ஏதோ ஓர் அனுமானத்தில்
புது மனைவியைக் குளிர்விக்க எண்ணி
"தேநீர் மிகப் பிரமாதம்," என்றேன்;.
"அது புரூ காபிப்பா," என்றாள் அவள்,
இது கூடத் தெரியவில்லையே என்ற
ஏளனத்தை முகத்தில் தேக்கியபடி!

உப்பும், மிளகாய்த் தூளும்
வஞ்சனையின்றி வாரி வழங்கி
அம்மணி சமைத்த சாப்பாட்டை
விழுங்கவும் முடியாமல்
துப்பவும் முடியாமல் நான் தவிக்க,
"சிரமப்பட்டு நான் செஞ்ச சமையலை
வாயைத் தொறந்து, ரெண்டு வார்த்தை
பாராட்டினா முத்தா விழுந்துடும்?
பாராட்டவும் ஒரு மனசு வேணும்,
அது ஒங்கக்கிட்ட இல்லை," என்றாள்
முகத்தை ஒன்றரை முழம்
தூக்கி வைத்துக் கொண்டு!

வேறொரு நாள்...
"சமையலில் கை தேர்ந்து விட்டாய்;
இன்று உன் சமையல் அருமை" என்றேன்;
"சமைத்தது உங்க ளம்மா;
தெரிந்து கொண்டே, வேண்டுமென்று
என்னைக் வெறுப்பேற்றுகிறீர்"என்றாள்,
கடுகு வெடிக்கும் முகத்துடன்!

மனைவியின் பிறந்த நாளை
அரும்பாடுபட்டு நினைவில் நிறுத்தி
பத்துக் கடை ஏறி இறங்கி
ஆசையாய் வாங்கிப் பரிசளித்த
பச்சை வண்ணப் புடவையைத்
தூக்கி ஓரத்தில் வைத்தாள்,
"ஒங்களுக்குத் தேர்வு செய்யவே
தெரியலை," என்ற விமர்சனத்துடன்!
'இங்கிலீஷ் கலர்'(!?) தான் பிடிக்குமாம் அவளுக்கு!

சினிமா ஆசைப்பட்டாள் என்பதற்காக
வரிசையில் நின்று அடிபட்டு, மிதிபட்டு
புதுப்படத்தின் முதல் நாள் காட்சிக்கு
டிக்கெட் வாங்கி வந்தால்,
"பாழாய்ப்போன இப்படத்துக்கு வந்ததுக்குக்
கடற்கரைக்காவது போயிருக்கலாம்;
படுமட்டம் ஒங்க ரசனை,"என்றாள்
படம் பார்த்து முடித்த பிறகு!

இவளைத் திருப்திப்படுத்த முடியாது
என்றவுண்மை எனக்கு உறைத்த போது,
வெட்ட வெளியில் நின்ற வண்ணம்
"என்னைப் பிடிக்காதவளாக
இருந்துவிட்டுப் போடி!" என்று
வாய் விட்டுக் கத்தினேன்,
அவள் பக்கத்தில் இல்லையென்பதை
உறுதி செய்து கொண்டு!

(தமிழ் மன்றத்தில் எழுதியது)

- கலையரசி

Relaxplzz