Friday, 1 August 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


அழகிய ஈழம்! குருநகர் மீன்பிடித் துறைமுகம்!

Posted: 01 Aug 2014 09:55 AM PDT

அழகிய ஈழம்! குருநகர் மீன்பிடித் துறைமுகம்!


அழகிய ஈழம்! புங்குடுதீவு!

Posted: 01 Aug 2014 09:55 AM PDT

அழகிய ஈழம்! புங்குடுதீவு!


அழகிய ஈழம்! யாழ்ப்பாணம்!

Posted: 01 Aug 2014 09:30 AM PDT

அழகிய ஈழம்! யாழ்ப்பாணம்!


இங்கிலீஷ் பேசுனாலும் தமிழன்டா .. 1.லஞ்சம் வாங்குறாங்களேனு கூப்பாடு போடுவோம் ,ஆன...

Posted: 01 Aug 2014 02:45 AM PDT

இங்கிலீஷ் பேசுனாலும் தமிழன்டா ..

1.லஞ்சம் வாங்குறாங்களேனு கூப்பாடு போடுவோம் ,ஆனா நமக்கு காரியம் ஆகனும்னா லஞ்சம் குடுக்க யோசிக்கமாட்டோம்...

2.தீமிதிக்கிறப்ப, முன்னால ஓடினவன் கால் தடத்தை ஃபாலொ பண்ணி நாலே ஜம்ப்ல தாண்டிடுவோம்..

3.வாசல்ல எறும்புக்கு தீனியா அரிசிமாவு கோலம் போடுவோம்! வீட்டுக்குள்ள பூச்சி மருந்த தெளிச்சு கொன்னுடுவோம்..

4.26 எழுத்து கொண்ட ABCD வரிசையாக சொல்லுவோம், ஆனா18 எழுத்து கொண்ட கஙசஞ மாத்தி கூட சொல்ல மாட்டோம் .

5.ஃபாரின் போய்ட்டு வர்றவன்கிட்ட கோடாலி தைலம் வாங்கி வர சொல்லி நச்சரிப்போம் ..

6.புதுசா கார் வாங்கி சீட்ல இருக்குற பாலித்தீன் கவர கிழிக்காமலே கார்ல சுத்துவோம்

7.அடுத்த முதல்வர கோடம்பாக்கம் சாலிகிராமம் பக்கம் சல்லடை போட்டு தேடுவோம் ..

8.பெண்களை கடவுளாக வணங்குவோம். பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை எதிர்ப்போம்

9.சென்னைக்கு மிக அருகில் அப்டின்னு சொல்லி திண்டிவனத்துல இருக்குற ஃப்ளாட்ட காமிப்போம்...

10.கூல்டிரிங் பெட் பாட்டில வாட்டர் கேனா யூஸ் பண்ணுவோம்

11.உரிமையை கடமையாகவும், கடமையை உரிமையாகவும் எடுத்துகிட்டு குழப்பிக்குவாங்க

12.மார்கழி மாசம்.. கோவில்ல புனல் ஸ்பீக்கர கட்டி.. நாலாப்புறமும் ஒரு பயலையும் தூங்க விட மாட்டோம்

13.ஷாப்பிங் மால்ல மறுபேச்சில்லாம பொருள் வாங்கிட்டு வெளில இளனி விக்கறவன்ட பேரம் பேசுவோம்

14.சினிமாக்காரன் விளம்பத்துக்கு வந்தா பினாயிலா இருந்தாலும் வாங்கி குடிப்போம்

15.வெளிநாட்டுக்காரன்னாலே புத்திசாலின்னு நெனைக்கறது

16.கோவிலில் சாப்பாட்டை பிரசாதம் என்றுசொல்லி வீட்டுக்கும் PARCEL வாங்குவது..

@களவாணி பய


தகடூரில் இன்றும் தங்கள் முன்னோர்கள் சதிக்கல்லிற்கு கோவில் கட்டி வணங்குகின்றனர்....

Posted: 01 Aug 2014 01:40 AM PDT

தகடூரில் இன்றும் தங்கள் முன்னோர்கள் சதிக்கல்லிற்கு கோவில் கட்டி வணங்குகின்றனர். கலாச்சாரம் அழியாமல் பின்பற்றும் இந்த குடும்பத்திற்கு சல்யூட்.


தேர்! கோவிலுக்கு செல்பவர்கள் சிலர் அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் தேரை தொட்டு கும...

Posted: 31 Jul 2014 11:00 PM PDT

தேர்!

கோவிலுக்கு செல்பவர்கள் சிலர் அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் தேரை தொட்டு கும்பிடுவார்கள்.

"அதுலேதான் சாமியே இல்லையே எதுக்கு கும்பிடுறே"ன்னு கேட்டேன். "இதுலே ஒரு விசயம் இருக்கு, இந்த மரத்தைத்தான் நான் கும்பிடுறேன்" என்றார்.

தேர் இலுப்பை மரத்துலே தான் செய்றாங்கன்னு உனக்கு தெரியும். இந்த மரம் உறுதியும் வலிமையும் கொண்டதுங்கிறதுதான் உனக்கு தெரியும். ஆனா, இந்த இலுப்பை மரம் மருத்துவ குணம் கொண்டதென்பது உனக்கு தெரியுமா? காற்றில் இம்மரத்தின் வாசம் பட்டாலே போதும் என்று சொல்லி நகர்ந்து சென்றார்... நான் தேரை அன்னாந்து பார்த்துக்கிட்டு இருந்தேன்!


Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


வீழ்ந்துவிடாத வீரம்...!!! மண்டியிடாத மானம்...!!! தாழ்ந்திடாத தரம்...!!! கலைந்...

Posted: 01 Aug 2014 04:57 AM PDT

வீழ்ந்துவிடாத வீரம்...!!!

மண்டியிடாத மானம்...!!!

தாழ்ந்திடாத தரம்...!!!

கலைந்துவிடாத கலாச்சாரம்...!!!

அழிந்திடாத கலை...!!!

குறைந்து விடாத அன்பு...!!!

இதுவே தமிழகம்

மத்தியான நேரத்தில் இப்படி குளியல் போடுவதே ஒரு தனி சுகம்.... கிராமத்தில் பிறந்த அ...

Posted: 01 Aug 2014 01:57 AM PDT

மத்தியான நேரத்தில் இப்படி குளியல் போடுவதே ஒரு தனி சுகம்.... கிராமத்தில் பிறந்த அனைவருக்கும் இது ஒரு வசந்த காலம்..!

#ஸ்டீபன்


7 வகை அன்னம்: சுத்தான்னம் - சோறு மட்டும் மத்வன்னம் - தேன் கலந்த சோறு தத்யன்...

Posted: 01 Aug 2014 12:35 AM PDT

7 வகை அன்னம்:
சுத்தான்னம் - சோறு மட்டும்
மத்வன்னம் - தேன் கலந்த சோறு
தத்யன்னம் - தயிர் கலந்த சோறு
பாயசான்னம் - அரிசி பருப்பு கலந்த சோறு
கிருசாரன்னம் - நெய் முதலியன கலந்த சோறு
குளான்னம் - பால், வெல்லம், நெய் கலந்த சோறு
முற்கான்னம் _ தேங்காய், பயறு கலந்த சோறு ...

4,5 வது வகையோடு மதிய வணக்கங்கள் ...

@ Indupriya MP
...


இனிய காலை வணக்கம் நண்பர்களே...!

Posted: 31 Jul 2014 06:30 PM PDT

இனிய காலை வணக்கம் நண்பர்களே...!


Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


PLEASE SHARE THIS...!! How To Get Blood In Emergency .. Please Share This To a...

Posted: 01 Aug 2014 01:43 AM PDT

PLEASE SHARE THIS...!!

How To Get Blood In Emergency .. Please Share This To all .. It can Save Life .. !!!


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


:)

Posted: 01 Aug 2014 09:30 AM PDT

:)


பல நூறு பட்டு புழுக்களால் உருவான பட்டு இழைகளால் பின்னப்பட்ட மரம்...

Posted: 01 Aug 2014 08:52 AM PDT

பல நூறு பட்டு புழுக்களால் உருவான பட்டு இழைகளால் பின்னப்பட்ட மரம்...


சும்மா... சும்மா... 2

"அடடா..!” -------------- இந்த இரு புகைப்படங்களும்.. ஒன்று கருப்பு- வெள்ளையாகவும...

Posted: 01 Aug 2014 08:41 AM PDT

"அடடா..!"
--------------

இந்த இரு புகைப்படங்களும்..
ஒன்று கருப்பு- வெள்ளையாகவும்
மற்றொன்று வண்ணத்திலும் எடுக்கப்பட்டவை
என்று நீங்கள் கருதினால், அது தவறு.
இடது புறத்தில் உள்ள சிறுமியின்
கருப்பு- வெள்ளை புகைப்படம்,
1980-ல் எடுக்கப்பட்டது..
அந்தப் பெண் வளர்ந்து, பருவமடைந்து.. திருமணமாகி,
அவளுக்கு பிறந்த மகளின் புகைப்படம் தான்
வலது புறத்தில் வண்ணப்படமாக காணப்படுகின்றது...


"உலகம் இவ்வளவு தான்"

(y)

Posted: 01 Aug 2014 08:30 AM PDT

(y)


வாழ்வின் முதல் நண்பனை / நண்பியை நியாபகம் இருக்கின்றதா..? 1. ஆம் 2. இல்லை 3. இப்...

Posted: 01 Aug 2014 08:20 AM PDT

வாழ்வின் முதல் நண்பனை / நண்பியை நியாபகம் இருக்கின்றதா..?

1. ஆம்
2. இல்லை
3. இப்போதும் அவர்/அவள் என் நண்பனே

போதை தெளிய

Posted: 01 Aug 2014 08:09 AM PDT

இந்த பசுமையை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 01 Aug 2014 08:00 AM PDT

இந்த பசுமையை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


ஆக்ஸிலரேட்டர் மாட்டிக் கொண்டால்... ஆக்ஸிலரேட்டர் பெடலில் இருந்து நீங்கள் காலை எ...

Posted: 01 Aug 2014 07:42 AM PDT

ஆக்ஸிலரேட்டர் மாட்டிக் கொண்டால்...

ஆக்ஸிலரேட்டர் பெடலில் இருந்து நீங்கள் காலை எடுத்த பிறகும் கார் அதே வேகத்தில் சென்றாலோ, அல்லது இன்னும் வேகமாகச் சென்றாலோ ஆக்ஸிலரேட்டர் பெடல் ஸ்டக் ஆகிவிட்டது என்று அர்த்தம்.

கிளட்ச்சை அழுத்தி கியர்களை படிப்படியாகக் குறையுங்கள். ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட கார் என்றால், கியரை நியூட்ரலுக்குக் கொண்டு வாருங்கள். வீல்களை லாக் செய்யாமல், பிரேக்கை நன்றாக அழுத்துங்கள். அப்படியே சாலையின் ஓரத்துக்கு வந்து விடுங்கள். காரை நிறுத்திய பிறகு இன்ஜினை ஆஃப் செய்யுங்கள்.

[மோட்டார் விகடன் - ஜனவரி 2012 இதழில் இருந்து]


"தெரிந்து கொள்வோம்" - 2

:)

Posted: 01 Aug 2014 07:29 AM PDT

:)


2014ல் ஆச்சரியமான வெள்ளிக் கிழமைகள்! 4/4/2014 வெள்ளி 6/6/2014 வெள்ளி 8/8/2014...

Posted: 01 Aug 2014 07:15 AM PDT

2014ல் ஆச்சரியமான வெள்ளிக் கிழமைகள்!

4/4/2014 வெள்ளி

6/6/2014 வெள்ளி

8/8/2014 வெள்ளி

10/10/2014 வெள்ளி

12/12/2014 வெள்ளி!!

:)

அப்பாக்கள் படிக்க வேண்டிய ஒன்று.... குழந்தைக்குத் தேவை அப்பாவின் அரவணைப்பு! ......

Posted: 01 Aug 2014 06:48 AM PDT

அப்பாக்கள் படிக்க வேண்டிய ஒன்று....

குழந்தைக்குத் தேவை அப்பாவின் அரவணைப்பு! .....

குழந்தைப் பருவத்தில் அப்பாவின் அரவணைப்பு தவிர அவசியமான வேறு எந்தத் தேவையும் இருப்பதாக என்னால் நினைக்க முடியவில்லை... - சிக்மண்ட் ஃபிராய்ட் (மனவியலாளர்)

சிம்மாசனங்களை விட்டு இறங்காத அப்பாக்களுக்கு குழந்தையின் இனிசியலில் மட்டும்தான் இடம்.

குழந்தையோடு குழந்தையாக இறங்கி, விளையாடி, தோற்று, அடி வாங்கி, அழுவதுபோல நடித்து, கன்னத்தில் முத்தமிட்டு, தோளில் கட்டிக்கொண்டு பம்பரமாகச் சுற்றும் அப்பாக்களுக்கு மட்டுமே இதயத்தில் இடம். எவ்வளவு பரபரப்பான அப்பாவாக இருந்தாலும் பிள்ளைக்காக சொத்து சேர்ப்பதைவிட முக்கியம் அவர்களுடன் செலவிடும் மதிப்புமிக்க நேரம்தான் என்கிறார் மனநல மருத்துவர் மீனாட்சி.

அப்பாவுடன் இருக்கும்போது குழந்தைகளுக்கு நேர்மறையாக சிந்திக்கும் குணம் அதிகரிக்கிறது. மனவளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கிறது.

அதிக தன்னம்பிக்கை பெறுகிறார்கள். சமூகத்துடனான பழக்கமும் அய்க்யூவும் அதிகரிக்கின்றன. மொழித்திறன் மேம்படுகிறது.

படிப்பில் முழுத் திறனையும் வெளிப் படுத்துவார்கள். எந்தப் பிரச்சினையையும் எளிதாக அணுகுவார்கள். குழந்தையின் திறமையை வளர்க்க ஏதேதோ தேடும் அப்பாக்கள் தினமும் ஒரு மணி நேரமாவது நேரம் ஒதுக்கி அவர்களோடு விளையாட வேண்டும்.

எல்லாக் குழந்தைகளுமே முழுத் திறமை யுடனும், அறிவுடனும்தான் பிறக்கின்றன. ஒரு மின்னல் விழுந்து மலையின் ஊற்றுக்கண் திறப்பது போல, குழந்தைக்குள் இருக்கும் அறிவுக் கண்ணைத் திறக்கும் அதிசய மின்னல் அப்பாக்களின் அன்பில் ஒளிந்திருக் கிறது. தான் சந்திக்கும் விஷயங்களை ஆராய்ந்து, தெளிவுபடுத்திக் கொள்ளும் போக்கை குழந்தைகளிடம் பார்க்க முடியும்.

அப்பாவுடன் விளையாடுவது, விவாதிப்பது என இருவருக்குமான தளம் விரிவடையும்போது மூளையின் செயல்பாடு அதிக அளவில் தூண்டப்படுகிறது (பிரெய்ன் ஸ்டிமுலேசன்). அப்பாவுடன் நேரம் செல வழிக்கும் குழந்தைகளின் திறன் மேம்படுவது உலகளவில் ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டிருக் கிறது.

தாயின் பனிக்குடம் தாண்டி உதிக்கும் அந்தத் தாமரையின் சின்னச் சிரிப்பு, செல்லச் சிணுங்கல், மின்னல் கோபம், கொல்லும் அழுகை - ஒவ்வொன்றாகப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப அப்பா நடக்கும் போது இருவருக்குமான இன்னொரு தொப்புள்கொடி முடிச்சு போடப்படுகிறது.

அது ஆயுள் முழுவதும் அறுக்கப்படுவதில்லை. அம்மாவோடு அப்பாவும் சேர்ந்து வளர்த்த குழந்தைக்கு எவ்வளவு சிக்கலான சூழலையும் தனதாக்கிக் கொள்ளும் வித்தை தெரிந்திருக்கும்.

படிப்பு, விளை யாட்டு, உறவு, சமூகம் என எல்லா இடத்திலும் தானாக முன்வந்து பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார்கள்.

எது சரி, தவறு என்பதை உணர்ந்து செயல்படும் பக்குவத்தை அவர்களிடம் பார்க்க முடியும். தேடல் வேட்கையுடன் இருப்பார்கள். கோடிக்கணக்கான முகங்களுக்கு மத்தியில் தங்களுக்கான தனி அடையாளத்தை காட்ட எப்போதும் குழந்தைகள் விரும்புவார்கள். அதற்கு அவர்களுக்குத் தேவை அப்பாவின் ஆள்காட்டி விரலைப் பற்றிக் கொண்டு நடக்கிற சந்தோஷம்தான் - தீர்க்கமாகச் சொல்கிறார் மீனாட்சி.....


"சுட்டீஸ் பக்கம்"

உண்மையே

Posted: 01 Aug 2014 06:30 AM PDT

உண்மையே


நேர்மையான மனைவி... ஒரு மனிதர், தான் காலமெல்லாம் சம்பாதித்த பணத்தை, தம் குடும்பத...

Posted: 01 Aug 2014 06:15 AM PDT

நேர்மையான மனைவி...

ஒரு மனிதர், தான் காலமெல்லாம் சம்பாதித்த பணத்தை, தம் குடும்பத்திற்கே கூட கருமித்தனமாக செலவு செய்து, சேமித்து வைத்திருந்தார்.

அவர் இறப்பதற்கு சிறிது காலத்திற்கு முன் தன் மனைவியை அழைத்து "நான் இறந்து விட்டாலும் என் பணத்தை என் கூடவே கொண்டு செல்ல விரும்புகிறேன். எனவே என் பணத்தை என்னுடன் சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்து விடு" என்று கடவுளின் பேரால் உறுதி மொழி வாங்கிக் கொண்டார். மனிதரின் கடைசி ஆசை என்று அவர் மனைவியும் கடவுளின் பேரால் உறுதி மொழி செய்து விட்டார்.

அம்மனிதர் இறந்த பின் எல்லா ஏற்பாடுகளும் நடந்தது. சவப்பெட்டியை மூடும்போது, அந்த நேர்மையான மனைவி, "கொஞ்சம் பொருங்கள்" என்று கூறி சவப்பெட்டியினுள் ஒரு பேழையையும் வைத்து மூடச்செய்தாள்.

அவளுடைய கடினமான வாழ்வையும் அவள் கணவருடைய கஞ்சத்தனத்தையும் அறிந்திருந்த அவள் தோழி "நீயும் முட்டாள்தனமாக அவர் சொன்னது போல் செய்து விட்டாயா" என்று கேட்டாள்.

அதற்கு அந்த நேர்மையான மனைவி, "அவர் சவப்பெட்டியினுள் பணத்தை வைப்பதாக கடவுளின் பேரால் உறுதி மொழி கொடுத்து விட்டு மாற்றவா முடியும். அவர் சேமிப்புகள் மொத்தத்தையும் பணமாக்கி என் கணக்கில் பேங்கில் போட்டு விட்டு, முழுத்தொகைக்கும் காசோலை வைத்து விட்டேன். அவர் போன இடத்தில் மாற்ற முடிந்தால் அவர் செலவழித்துக் கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை" என்றாள்.

கை முறுக்கு பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 01 Aug 2014 05:45 AM PDT

கை முறுக்கு பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:)

Posted: 01 Aug 2014 05:30 AM PDT

:)


மனிதனைப் பற்றிய சில உண்மைகள்:- * இருமலின் வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர். * ஒர...

Posted: 01 Aug 2014 05:15 AM PDT

மனிதனைப் பற்றிய சில உண்மைகள்:-

* இருமலின் வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர்.

* ஒரு சிசுவின் கையில் ரேகைகள் 3-வது மாதத்திலிருந்து உருவாகின்றன.

* கை, கால்கள் நகங்களின் அடிப்பகுதியிலிருந்து அதன் மேல்
பாகம் வரை வளர்வதற்கு 6 மாதங்கள் ஆகின்றன. கால் நகங்களை விட கைவிரல் நகங்கள் வேகமாக வளர்கின்றன.

* ஒரு மனிதனுக்கு சரியாக தினமும் 40 முதல் 100 தலைமுடிகள் உதிர்ந்து விடுகின்றன.

* கம்யூப்ட்டரில் சில மணி நேரங்கள் பணிபுரிந்து விட்டு பார்வையை சில நொடிகள் வெள்ளைநிற காகிதத்தில் செலுத்தினால் அந்தக் காகிதம் இளஞ்சிவப்பு நிறமாகத் தெரியும்.

* ஆண்களின் உடல் பாகத்தில் மிகவும் வளரக்கூடிய முடி, தாடியில் வளரும் முடிதான். ஏனென்றால் ஒருவர் தனது வாழ்நாளில் தாடியை எடுக்காவிட்டால் அது 30 அடி நீளம் வரை வளர்ந்து விடும்.

* 60 வயதாகும்போது நாக்கின் சுவை மொட்டுகளின் பெரும் பகுதி அழிந்து போய்விடுகின்றன.

* மனித தாடை 80 கிலோ எடையை இழுத்து அசைக்கக் கூடிய தாகும்.

* சிரிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. 6 வயது வரை குழந்தைகள் ஒரு நாளைக்கு 300 தடவைகள் சிரிக்கின்றன. 18 வயதைக் கடந்தவர்கள் ஒரு நாளைக்கு 100 தடவை மட்டுமே சிரிக்கிறார்கள்.

* ஒரு மனிதனின் உடம்பில் 600-க்கும் அதிகமான தசைகள் இருக்கின்றன. இது உடல் எடையில் 40 சதவீதமாகும்.

* உலகில் மனிதர்களிடம் பொதுவாக காணப்படும் ரத்த குரூப் ஓ. அபூர்வமான ரத்த குரூப் ஏ-ஹெச். இந்த ரத்த குரூப் கண்டு பிடிக்கப்பட்ட பின்னர். உலகில் மொத்தம் 10 பேரிடம் மட்டுமே இருப்பது அறியப்பட்டுள்ளது.

* மனிதனின் நரம்புகளை ஒட்டு மொத்தமாக நீளமாக்கினால் அது 45 மைல் நீளமாக இருக்கும்.

* மனிதனின் உடலில் ஒரு நிமிடத்திற்கு 300 கோடி அணுக்கள் செத்து மடிகின்றன.

* மனித மூளையில் 85 சதவீதம் தண்ணீர் தான் உள்ளது.

* ஒரு மனிதனின் தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக்கும்.

* ஒரு மனிதன் தனது வாழ்நாளில் 16 ஆயிரம் காலன் தண்ணீர் குடிக்கிறான்.

:P

Posted: 01 Aug 2014 05:00 AM PDT

:P


ZOOM & SEE சிவப்பு நிற புள்ளியை கவனமாக பாருங்கள். அதையே உற்று பாருங்கள். உங்களு...

Posted: 01 Aug 2014 04:45 AM PDT

ZOOM & SEE

சிவப்பு நிற புள்ளியை கவனமாக பாருங்கள். அதையே உற்று பாருங்கள். உங்களுடைய எண்ணங்களை சிதறடிக்க வேண்டாம். இப்போது நீல நிறமாக வட்டம் மறைந்து விடும். மீண்டும் உங்கள் கவனம் சிதறும் போது நீல நிற வட்டம் தோன்றும்...


:)

Posted: 01 Aug 2014 04:30 AM PDT

:)


ஒரு மந்திரவாதி, ஒரு டம்ளர் நீரைக் கவிழ்த்து அதிலிரந்து ஒரு கைக் குட்டை வரவைத்தான...

Posted: 01 Aug 2014 04:15 AM PDT

ஒரு மந்திரவாதி, ஒரு டம்ளர் நீரைக் கவிழ்த்து அதிலிரந்து ஒரு கைக் குட்டை வரவைத்தான்..

கூட்டத்தில் எல்லோரும் மகிழ்ந்து கை தட்டினார்கள்..
ஒருவன் மட்டும் கை தட்டாமல் உம்மென்று இருந்தான்.

அவனிடம் ஒருவன் "நீ ஏன் சிரிக்கவில்லை…உம்மென்று இருக்கிறாய்" என்று கேட்டபொழுது, அவன்,"இது ரொம்ப சாதாரணம்…

இவன் ஒரு டம்ளர் நீரிலிருந்து ஒரு கைக்குட்டை தானே எடுத்தான்…

என் மனைவி இரண்டு சொட்டு கண்ணீரில் ஒரு பட்டுப் புடைவையே எடுத்துடுவாள்" என்றான்.

:P :P

மறக்க முடியுமா...? இந்த விளையாட்டை விளையாடியவர்கள் 'லைக்' பண்ணுங்க.. (y)

Posted: 01 Aug 2014 04:00 AM PDT

மறக்க முடியுமா...?

இந்த விளையாட்டை விளையாடியவர்கள் 'லைக்' பண்ணுங்க.. (y)


தமிழரின் 2000-ஆண்டுகள் பழமையான குமிழித்தூம்பு என்ற மதகு..!! தானாகவே குளத்தின் அட...

Posted: 01 Aug 2014 03:46 AM PDT

தமிழரின் 2000-ஆண்டுகள் பழமையான குமிழித்தூம்பு என்ற மதகு..!! தானாகவே குளத்தின் அடியில் உள்ள சேற்றை வெளியேற்றும் சேறோடி துளை அமைப்பு இதன் சிறப்பு..!!கிட்டத்தட்ட Venturi-போன்று இது செயல்படுகிறது.

மதகை அடைத்துள்ள மூடுகல்லை பினைத்துள்ள இரும்பு கம்பியை அது பொருத்தப்பட்டுள்ள கல் தூண் மீதிருந்து தூக்கும் போது நீர் வேகமாக கீழே உள்ள கல் தொட்டிக்கு பாய்ந்து நீர் செல்லும் பாதை வழியாக வெளியேறும்..கல்தொட்டி நீர் உள்ளே வரும் பாதையைவிட பெரிதாக உள்ளதாலும் நீர் சுழல் ஏற்படுவதாலும் அந்த இடத்தில் குறைந்த அழுத்தம் ஏற்படும்..!! அதே நேரம் குளத்தின் அடிப்பகுதியில் அழுத்தம் அதிகமாக இருப்பதால் அடியில் தங்கியுள்ள சேறு அழுத்தப்பட்டு குறைந்த அழுத்தம் உள்ள கல் தொட்டிக்கு வந்து தண்ணீருடன் கலந்து பாசனத்திற்கு சத்துள்ள நீராக சென்றுவிடும்..!!தூர்வாரும் வேலை குறைந்துவிடும்..சத்தான மண் பயிருக்கு உரமாகிவிடும்..!!

நம் முன்னோர் பொறியியல் அறிவை பார்க்கும் போது வியப்பு ஏற்படுகிறதல்லவா..??ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்த மதகுகள் கைவிடப்பட்டு பலகை வடிவ மதகுகள் அமைக்கப்பட்டது குளத்தில் மண் தங்கிவிட காரணமானது..!! முனைவர்-குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் ஜீலை 2014 ரொத்திரம் இதலில் எழுதியுள்ள கட்டுரையில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல் அடிப்படையில் இது எழுதப்பட்டுள்ளது..


"தமிழ் - தமிழர் பெருமை" - 1

(y)

Posted: 01 Aug 2014 03:30 AM PDT

(y)


பெண் : "GALAXY GRAND" போன் விலை என்ன? கடைக்காரர் : Rs. 18,௦௦௦/- பெண்: "அம்மாடி...

Posted: 01 Aug 2014 03:20 AM PDT

பெண் : "GALAXY GRAND" போன் விலை என்ன?

கடைக்காரர் : Rs. 18,௦௦௦/-

பெண்: "அம்மாடியோ".......சரி iphone??

கடைக்காரர்: அம்மாடியோ+அம்மாடியோ +அம்மாடியோ

குயானாவில் உள்ள கெய்டியர் அருவி

Posted: 01 Aug 2014 03:10 AM PDT

குயானாவில் உள்ள கெய்டியர் அருவி


ஆஸ்திரேலியாவில் பிரசவத்திற்காக கேதே ஒக் டேவிட் என்ற ஆஸ்திரேலியப் பெண்மனி சிட்னி...

Posted: 01 Aug 2014 02:50 AM PDT

ஆஸ்திரேலியாவில் பிரசவத்திற்காக கேதே ஒக் டேவிட் என்ற ஆஸ்திரேலியப் பெண்மனி சிட்னி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கருத்தரித்து 27 வாரங்களே ஆன நிலையில். அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. குறைந்த எடையில் பிறந்த ஒரு ஆண், ஒரு பெண்.

இரு குழந்தைகளையும் காக்க மருத்துவர்கள் பெரு முயற்சி செய்தனர். பெண் குழந்தை உயிர் பிழைத்தது. ஆனால்.. மருத்துவர்கள் கடைசி வரை போராடியும் ஆண் குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை. குழந்தை இறந்துவிட்டதாக தாயிடம் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தாங்கிக் கொள்ள முடியாத, அந்தத் தாய்.. இறந்த குழந்தையை மார்போடு கட்டி அணைத்து அழ ஆரம்பித்து விட்டார். தொடர்ந்து இரண்டு மணி நேரம் தன் உடலுடன் குழந்தையை அணைத்துக் கொண்டு அழுதவாறே இருந்தார்.

அப்போது.. குழந்தை மெதுவாக மூச்சு விடுவதை அந்தத் தாய் உணர்ந்தார். உடன் மருத்துவர்களை அழைத்து குழந்தை மூச்சு விட ஆரம்பித்ததைக் கூறினார்.
மருத்துவர்கள் குழந்தைக்கு அவசர சிகிச்சை அளித்து.. இங்குபேட்டரில் வைத்து.. சகஜ நிலைக்குக் கொண்டு வந்தனர்.சிறிது நேரத்தில் கண் விழித்தது குழந்தை..

அதைப் பார்த்து.. ஆனந்தக்கண்ணீர் விட்ட தாயின் விரல்களை குழந்தை பிடித்துக் கொண்டது. இறந்த குழந்தையை உயிர் பிழைக்க வைத்தது எது..
ஆம்..
அந்த தாயின் அரவணைப்பு..
இப்போது சொல்லுங்கள், உலகத்தில் சிறந்தது தாய்மைதானே...

பிடித்திருந்தால் பகிரவும்


:)

Posted: 01 Aug 2014 02:30 AM PDT

:)


அரசுப் பேருந்துகளில் திருவள்ளுவர் புகைப் படத்தையும் திருக்குறள்களையும் இடம்பெறச்...

Posted: 01 Aug 2014 02:15 AM PDT

அரசுப் பேருந்துகளில் திருவள்ளுவர் புகைப் படத்தையும் திருக்குறள்களையும் இடம்பெறச்செய்தார் அன்றைய முதலமைச்சர் அறிஞர் அண்ணா.

ஒரு முறை சட்டசபையில், '' 'பேருந்தில் 'யாகாவாராயினும் ' எனும் குறள் உள்ளதே, அது யாருக்கு? ஓட்டுநருக்கா? நடத்துநருக்கா? பயணிகளுக்கா?'' என்று உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

ஓட்டுநர், நடத்துநருக்கு என்றால், தொழிலாளர்களின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும். பயணிகளுக்கு எனச் சொன்னால், மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்.

அப்போது அண்ணா எழுந்து சட்டென இப்படிச் சொன்னார் ''அது, நாக்கு உள்ள அனைவருக்காகவும் .''

:)

ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆங்கிலத்திலும் Relaxplzz

கோழி இறைச்சியில் அதிக அளவு ஆன்ட்டி பயாடிக்: சி.எஸ்.இ. எச்சரிக்கை விஞ்ஞானம் மற்ற...

Posted: 01 Aug 2014 01:58 AM PDT

கோழி இறைச்சியில் அதிக அளவு ஆன்ட்டி பயாடிக்: சி.எஸ்.இ. எச்சரிக்கை

விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (சி.எஸ்.இ) நடத்திய ஆய்வில் கோழி இறைச்சியில் அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எந்த விதமான வழிகாட்டுதலும் இல்லாத நிலையில், கறிக்கோழிகளுக்கு அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் கொடுக்கப்படுகிறது, இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

சாதாரண காய்ச்சல் உள்ளிட்ட தினசரி நோய்கள் பலவற்றுக்கு பல்வேறு ஆன்ட்டி பயாடிக்குகள் பயன்படுகின்றன. ஆனால், கறிக்கோழியில் அதிகம் ஆனட்டி பயாடிக் செலுத்தப்படுவதால், அதனை உட்கொள்ளும் மனிதர்களுகும் ஆன்ட்டி பயாடிக்கினால் குணப்படுத்த முடியக்கூடிய நோய்களையும் குணப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. காரணம், அந்த மருந்துகள் நம் உடலில் அளவுக்கு அதிகமாகி வேலை செய்யாமல் விரயமாகி விடுகிறது.

இந்தியாவில் நடத்தப்பட்ட இந்த மிகப் பெரிய ஆய்வில், பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கோழிக்கறியில் 40% மாதிரிகளில் அளவுக்கு அதிகமான ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.

விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் மாசுக் கண்காணிப்பு பரிசோதனைச் சாலையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சிக்கன் கறி பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது,

பரிசோதனைச் சாலையின் தலைமை இயக்குனர் சுனிதா நரைன் கூறும்போது, "ஆன்ட்டி பயாடிக் பயன்பாடுகள் மனித, மருத்துவப் பயன்பாடுகளையும் மீறிச் சென்றுள்ளது, கால்நடை வளர்ப்பு தொழிற்துறையினர் கோழிகள் எடை கூடுவதற்கும், வேகமாக வளர்வதற்கும் ஆன்ட்டி பயாடிக் மருந்துகளை அதிகம் பயனபடுத்துகின்றனர். இது தவறான அணுகுமுறை" என்று அவர் எச்சரித்துள்ளார்.

பரிசோதனை முடிவுகள்:

டெல்லியிலிருந்து 70 சிக்கன் மாதிரிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. கோழிகளின் லிவர், தசை மற்றும் கிட்னி பரிசோதனை செய்யப்பட்டது. பொதுவாக கோழிவளர்ப்பில் 6 ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது: ஆக்சிடெட்ரா சைக்ளின், குளோர்டெட்ராசைக்ளின், டெட்ராசைகிளின் வகையறாவான டாக்சிசைக்ளின், என்ரோபிளாக்சசின், சிப்ரோபிளாக்சசின், நியோமைசின் ஆகியவை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேற்கூறிய ஆன்ட்டி பயாடிக் மருந்துகளில் 5 வகை மருந்துகள் அனைத்து சிக்கன்களிலும் காணப்பட்டன. கிலோவுக்கு 3.37-131.75 மைக்ரோகிராம் ஆன்ட்டி பயாடிக் மருந்துகளின் படிவுகள் சிக்கன் கறியில் இருப்பது தெரியவந்தது.

குர்கவான் பகுதியிலிருந்து பெற்ற சிக்கன் கறி மாதிரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட (ஆக்சிடெட்ராசைக்ளின், டாக்சிசைக்ளின், என்ரோபிளாக்சசின்) மருந்துகளின் படிவுகள் அதிக அளவில் காணப்பட்டுள்ளது.

கோழிகளின் வாழ்நாளில் 35 முதல் 42 நாட்களுக்குள் ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் காரணமில்லாமல் வெறும் எடையை அதிகரிக்கவும் வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படுவதாக இந்த ஆய்வாளரகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த ஆய்வு ஒரு சிறு அளவை மட்டுமே காண்பித்துள்ளது. இன்னும் அதிகமான ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் முறையற்று பயன்படுத்தப்படுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால், சிக்கன் கறி சாப்பிடுபவர்களுக்கு ஆன்ட்டி பயாடிக் மருந்துகளையும் தடுக்கும் பாக்டீரியாக்களின் ஆதிக்கம் ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

இதனையும் சி.எஸ்.இ. ஆய்வாளர்கள் ஆய்வுப்பூர்வமாக நிரூபித்துள்ளனர். 2002ஆம் ஆண்டிலிருந்து 2013ஆம் ஆண்டுவரை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பெரும்பாலான நோயாளிகளுக்கு சிப்ரோபிளாக்சசின், ஆக்சிடெட்ரா சைக்ளின், டாக்சிசைக்ளின் போன்ற ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் வேலை செய்யாதது கண்டுபிடிக்கப்பட்டது.

சிப்ரோபிளாக்சசின் என்ற ஆன்ட்டி பயாடிக் மூக்கு முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களையும் எதிர்க்கும் மருந்தாகும். இதன் பலனை மனித உடல் இழக்கும்போது டைபாய்டு உள்ளிட்ட பிற கிருமித் தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது பெரும் சவாலாக மாறிவிடும், உண்மையில் இந்தியாவில் இது அதிகரித்திருப்பதாக சி.எஸ்.இ. எச்சரித்துள்ளது.

எனவே இறைச்சி உற்பத்தித் தொழிற்துறையில் தாறுமாறாக ஆன்ட்டி பயாடிக் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க அரசு கடும் சட்டங்களையும் கண்காணிப்பு முறையையும் கொண்டு வரவேண்டும் என்று சி.எஸ்.இ. தெரிவித்துள்ளது


"விழிப்புணர்வு"

டியர்.. நம்ம நிச்சயதார்த்தத்துக்கு எனக்கு ஒரு 'ரிங்' தருவீங்களா?? அவ்வளவு நாள்...

Posted: 01 Aug 2014 01:45 AM PDT

டியர்.. நம்ம நிச்சயதார்த்தத்துக்கு எனக்கு ஒரு 'ரிங்' தருவீங்களா??

அவ்வளவு நாள் ஏன் டியர் காத்திருக்கனும்?? உன் போன் நம்பர் குடு இப்பவே 'ரிங்' குடுக்குறேன்...

:P :P