Thursday, 14 August 2014

FB Posts by Araathu அராத்து

FB Posts by Araathu அராத்து

ஒரு குட்டீஸ் குறுநாவல் எழுதிட்டு இருக்கேன். சென்னையில சிறுத்தை பூந்த சம்பவத்தை நாவலில் நுழைத்தேன். கொஞ்சம் கற்பனையை கலந்து ஒரு சிறுத்தையை ரெண்டாக்கினேன். நேத்து நியூஸ் பேப்பரில் சுற்றித் திரிவது ஒரு சிறுத்தை அல்ல , ரெண்டு என வனத்துறை அதிகாரி பேட்டி கொடுக்கிறார் :-) // ஆழி சிரிச்சிகிட்டே எறங்கி , அந்த சிறுத்தையை தட்டி குடுத்தான். கவலைப்படாதே , இன்னும் கொஞ்சம் தூரம் போனதும் , பறக்கும் ரயில் இருக்கு , அதுல ஏறி காட்டுக்கு போயிடலாம்.அதுவரைக்கும் எது நடந்தாலும் பயப்படாதே , நான் பாத்துக்கறேன்னு சொல்லிட்டு இருக்கும்போதே பெரும் இரைச்சலோடு ஒரு கும்பல் கைல லைட்டுங்கள வச்சிகிட்டு வேல் கம்பு தடிங்களோட வந்துகிட்டு இருந்திச்சி. டேய் ஒரு சிறுத்தை இல்லைடா ! ரெண்டு சிறுத்தைங்க , உடாதீங்க , அடிச்சி கொல்லுங்க டான்னு கத்த ஆரம்பிச்சிச்சி அந்த கும்பல். ஒரு கொழந்தைய வேற சிறுத்தைங்க தூக்கிட்டு வந்துடுத்துடா சுட்டுத்தள்ளுங்கடான்னு கத்திகிட்டே ஒடியாந்தாங்க. பசியில இருந்த சிறுத்தை டென்ஷனாயி பயந்து போயி பாய்ஞ்சி ஓட ஆரம்பிச்சிது. கூட வந்திருந்த சிறுத்தையும் அதை காப்பாத்தணுமேன்னு அதும்பின்னால ஓட ஆரம்பிச்சிது. //

Posted: 13 Aug 2014 08:47 PM PDT