Thursday, 31 July 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


அழகிய ஈழம்! நல்லூர் கந்தசுவாமி கோவில்!

Posted: 31 Jul 2014 09:40 AM PDT

அழகிய ஈழம்! நல்லூர் கந்தசுவாமி கோவில்!


Posted: 31 Jul 2014 08:45 AM PDT


இன்னமும் தமிழன் இளிச்சவாயந்தானா? ====================================== சிவில் ச...

Posted: 31 Jul 2014 03:45 AM PDT

இன்னமும் தமிழன் இளிச்சவாயந்தானா?
======================================
சிவில் சர்விஸஸ் தேர்வினை முடித்து பயிற்சிக்காக டேராடூன் சென்றிருந்த போது நிகழ்ந்த சம்பவம் இது.

உடன் பயிற்சியில் இருந்த உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த பேட்ஜ் மேட்டுக்கு அன்று பிறந்த நாள். டிரக்கிங்கில் இருந்த இரண்டு வார காலகட்டத்தில் இந்த நாள் வந்தது. நண்பர்கள் சிலரோடு சேர்ந்து அவர் அறையைத் தட்டி " ஹேப்பி பர்த் டே வர்மாஜி " என்றோம் கோரஸாக.

அதற்கு அவர் தந்த பதில் திகைப்பை ஏற்படுத்தியது. கூலாக " ஸேம் டூ யூ"- என்று பதில் தந்தார் தனது தொப்பையைத் தடவியபடி.

வட நாட்டுக்காரர்களின் ஆங்கில மொழி அறிவு இந்த லட்சணந்தான்.

ஆங்கிலத்தை அறிவாகச் சுட்டுவதில் எனக்கும் சம்மதம் இல்லைதான். ஆனால் இந்தியாவில் அனைத்து சட்டம், நிர்வாக புத்தகங்களும் ஆங்கிலத்தில் இருக்கிறது. உலக அளவிலான புதிய நிர்வாகச் சங்கதிகளை ஆங்கிலத்திலேயே பெற முடிகிறது. இச்சூழலில் இந்தியா போன்ற ஆயிரக்கணக்கான மொழி புழங்கும் தேசத்தில் தொடர்புக்கான ஆங்கிலத்தின் அடிப்படை மொழி அறிவு கூட இல்லாத ஒரு நபருக்கு இந்தியாவின் மிக உயர்ந்த பதவி தூக்கிக் கொடுக்கப் படுகிறது என்றால் அதில் நியாயம் எப்படி இருக்க முடியும்?

சரி. வாதத்துக்காக ஒப்புக் கொள்கிறேன். இவருக்கு போதுமான நிர்வாக அறிவு இருக்கிறது. ஆங்கில மொழி அறிவு மட்டுமே குறைவு பதிலாக ஹிந்தி மொழி அறிவு இருக்கிறது. எனவே இவரைப் போன்றவர்களை உயர் பதவியில் அமர்த்துவது தவறில்லை என்ற சமாதானத்தை ஏற்றுக் கொள்கிறேன்.

அப்படியானால் இவரைப் போலவே போதுமான நிர்வாக அறிவும் ஆங்கில மொழி அறிவுக் குறைவும், அதற்குப் பதிலாக தமிழ் உட்பட தத்தம் தாய் மொழி அறிவு மட்டுமே கொண்டிருக்கும் கோடிக்கணக்கான இதர மாநிலத்து மாணவர்களை இந்த ஹிந்திக்காரனுக்கு நிகராக உயர்த்தி வைக்குமா அரசாங்கம்?

ஒரு போதும் அந்த வாய்ப்புக்கு வழியில்லை.

எப்படி?

சிவில் சர்வீஸஸ் தேர்வில் ஆங்கிலத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஹிந்திக்காரர்களுக்கு மட்டும் அவர்கள் தாய்மொழியில் விளக்கம் எழுதப்பட்டிருக்கும். ஏனையோருக்கு இந்த சலுகை கிடையாது. ஒரு போட்டித்தேர்வில் மற்றவரை விட்டு விட்டு ஒரு குறிப்பிட்ட சாரரை மட்டும் பிட் அடிக்க அனுமதிப்பதற்குச் சமமான செய்கையாகும் இது.

இந்த நியாயமற்ற தன்மையை உணர்ந்து சிவில் சர்வீஸஸ் தேர்வினை நடத்தும் யுபிஎஸ்ஸி அமைப்பு, முதல் நிலைத்தேர்வினில் (CSAT- Civil Services Aptitude Test) ஹிந்தி மாணவர்களுக்கு குறைந்த பட்ச ஆங்கில அறிவை உறுதி படுத்தும் 8 கேள்விகளை இணைத்திருக்கிறது. இவைகள் காம்ப்ரிகன்சன் வகையிலானவை என்பதால் ஹிந்தி இல்லாமல் ஆங்கிலத்தில் மட்டுமே கேட்கப்படும். ஹிந்திக்காரர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும் சலுகையான இந்தியில் விளக்கம் கொடுக்கும் முறை இதில் நிறுத்தப்பட்டுள்ளது.

விடுவார்களா வடக்கத்தியர்?

இந்த உத்தரவினை எதிர்த்து தனக்கு மட்டுமே அளிக்கப்பட்டு வரும் நியாயமற்ற சலுகைகள் தொடர வேண்டும் எனக் கோரி வட இந்தியர்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்துகிறார்கள். அரை நிர்வாணப் போராட்டமும் நடத்தப் போவதாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

"ஆங்கிலம் தெரிந்த நகர்ப்புற மாணவர்கள் மட்டுமே எளிதில் வெற்றிபெறும் வண்ணம் தேர்வு முறை அமையக்கூடாது. இது கிராமப் புற எளிய மாணவர்களுக்கு எதிரானதாகும்" - என்ற இவர்களின் கவர்ச்சிகரமான பம்மாத்துக் கோரிக்கை இன்றைய வட இந்திய ஆட்சியாளர்களையும், மீடியாவையும்,பொதுமக்களையும் எளிதில் கவரக்கூடியதாகவும், அப்படியே சட்டமாகக் கூடிய ஆபத்தும் இருக்கிறது.

ஆனால் அடிப்படை நியாயமோ அடியோடு வேறு.

இவர்கள் கும்பல் கலாச்சாரத்தில் மூழ்கி மெஜாரிட்டியான ஹிந்தி மாணவர்களுக்கு தனிச்சலுகை கொடுப்பது, ஹிந்தி தெரியாத ஏனைய கிராமப்புற மாணவர்களை அடியோடு நசுக்கும் காரியமாகும்.

ஹிந்தி தெரியாத கிராமத்து மக்கள் மட்டும் எளியவர்கள் இல்லாமல் எதிரிகளா? ஹிந்திக் காரர்களுக்கு தாய்மொழியில் விளக்கம் கொடுத்தால், தமிழ் உட்பட ஏனைய மொழியைத் தாய்மொழியாய் கொண்டவர்களுக்கும் அவரவர் மொழியில் விளக்கம் கொடுங்கள். போட்டி என்றால் சமதளப்போட்டி மட்டும் தானே நியாயமாய் இருக்க முடியும்? இதில் ஒரு கண்ணில் வெண்ணையும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைப்பது எப்படி சரியாக இருக்கும்?

ஒரு போட்டித்தேர்வில்- அதிலும் உலகிலேயே கடுமையான தேர்வுகளில் ஒன்று எனக் கருதப்படும் இந்திய சிவில் சர்விஸஸ் தேர்வில், தசம புள்ளிகள் கூட கட் ஆஃபாக நின்று ஆயிரக் கணக்கானோரின் தலை எழுத்தை மாற்றக் கூடிய கடும் போட்டித் தேர்வில், இந்தியாவின் கொள்கை முடிவுகளை எடுக்கும் உயர் பதவிகள் யாருக்கு என முடிவு செய்யும் தேர்வில், ஒரு சாரருக்கு அவருடைய தாய்மொழியில் விளக்கம் கொடுப்பதும் இன்னொரு சாரருக்கு அப்படி ஒரு வாய்ப்பு மறுக்கப்படுவதும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமையான பிரிவு 14, "சமத்துவத்துக்கான உரிமைக"க்கு புறம்பானதும், அதனை மீறும் காரியமும் ஆகும்.

ஒரு தனி மனிதன் வேலை பெறுகிறானா இல்லையா என்பதோடு முடிந்து விடுகின்ற எளிய சங்கதி அல்ல இது. ஒரு கூட்டு தேசத்தின் நிர்வாகத்தில் ஒரு இனத்தின் பங்களிப்பு அங்கீகரிக்கப்படுகிறதா அல்லது மறுக்கப்படுகிறதா என்ற உரிமை தொடர்பான சங்கதி இது.

வல்லான் வகுப்பதே வாய்க்கால்கள் என்று எண்ணிக் கொண்டு தொடர்ந்து தமிழன் இளிச்சவாயன் களாகவே இருக்க வேண்டுமா என்பதை தமிழக அரசியல் தலைவர்களும், மீடியாவும், வழக்க றிஞர்களும், சமூக செயற்பாட்டாளரும், அதிகாரிகளும், பொதுமக்களும் தீர்மானிக்க வேண்டிய தருணம் இது.

பகிர்வு: சுந்தரேசன் ராமச்சந்திரன்


ஒரு குழந்தை இருந்தால் நீ தகப்பன்...! இரு குழந்தைகள் இருந்தால் நீ ரெப்ரி ..!! @க...

Posted: 31 Jul 2014 02:45 AM PDT

ஒரு குழந்தை இருந்தால் நீ தகப்பன்...!
இரு குழந்தைகள் இருந்தால் நீ ரெப்ரி ..!!

@களவாணி பய

இலங்கை ராணுவக் கருத்தரங்கில் பங்கேற்கிறது இந்தியா.(செய்தி1) கோடியக்கரை அருகே மீ...

Posted: 31 Jul 2014 02:30 AM PDT

இலங்கை ராணுவக் கருத்தரங்கில் பங்கேற்கிறது இந்தியா.(செய்தி1)

கோடியக்கரை அருகே மீன்பிடித்து கொண்டிருந்த நாகை மீனவர்கள் 50 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.(செய்தி2).

கருத்தரங்கில் கலந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்தித் தானே மீனவர் சிக்கலைத் தீர்க்கமுடியும் என்பார்கள் உடம்பு முழுவதும் மூளையுள்ள இந்திய டேஷ்பக்தர்கள்.

Posted: 31 Jul 2014 01:40 AM PDT


இலங்கையுடன் மோடி நல்லுறவை விரும்புகிறார்....ஆனால் தமிழக மீனவர்களுடன் 'கொல்லுறவை'...

Posted: 31 Jul 2014 12:10 AM PDT

இலங்கையுடன் மோடி நல்லுறவை விரும்புகிறார்....ஆனால் தமிழக மீனவர்களுடன் 'கொல்லுறவை' விரும்புகிறார்....

# இதற்க்குத்தானே ஆசைப்பட்டாய் சூனா.குமாரா..... !

உலகத்தில எத்தனையோ விமானம் வெடிக்குது, இந்த சூனா சாமி போற வண்டிக்கு மட்டும் ஒண்ணுமே ஆகமாட்டேங்கிறது


கொழும்பில் நடைபெறும் இலங்கை ராணுவ கருத்தரங்கில் இந்திய ராணுவமும்,பாஜகவும் பங்கேற...

Posted: 30 Jul 2014 11:00 PM PDT

கொழும்பில் நடைபெறும் இலங்கை ராணுவ கருத்தரங்கில் இந்திய ராணுவமும்,பாஜகவும் பங்கேற்கும் - மோடி சர்க்கார் அறிவிப்பு

# இலங்கை மீது போர் குற்ற விசாரணை நடத்தி தண்டனை பெற்றுத்தரவேண்டும்.இலங்கையை இந்தியா நட்பு நாடு என சொல்லக்கூடாது என 7 கோடி தமிழர்களின் பிரதிநிதியான தமிழக சட்டசபை இயற்றிய தீர்மானத்தை மதிக்கக்கூட தெரியாத ஒரு சர்வாதிகார ஆட்சி நடக்கிறது.

தமிழ்நாடு இந்தியாவில்தானே இருக்கு?
தமிழக மக்களின் உணர்வை கொஞ்சம்கூட மதிக்க மாட்டாங்க போல.

மாமன்னர் 23ம் புலிகேசி தங்கள் பட்டத்து யானையை சிலோன் சமஸ்தான கல்யாணத்திற்கு வாடகைக்கு அனுப்புகிறார்.

@நம்பிக்கை ராஜ்

கும்பகோணம் தீ விபத்தில் அரசு அதிகாரிகளுக்கும், அரசாங்கத்திற்கும் தொடர்பே இல்லையா...

Posted: 30 Jul 2014 10:35 PM PDT

கும்பகோணம் தீ விபத்தில் அரசு அதிகாரிகளுக்கும், அரசாங்கத்திற்கும் தொடர்பே இல்லையா?.. கல்வித் துறைக்கும், நகராட்சிக்கும் இதில் பொறுப்பில்லையா என்ன?...

கும்பகோணம் முதல் பல நகரங்களில் தனியாருக்கான ஊக்குவிப்பு அதிகமாகவே இருக்கிறது. இன்றும் கூட கும்பகோணத்தில் தனியாரின் ஆதிக்கம் பொது பயன்பாட்டில் அதிகம் இருப்பதை பார்க்க முடியும்.

அரசும், வணிகநலன் மட்டுமே சார்ந்து இயங்கும் தனியாரும் கூட்டு சேர்ந்து நிகழ்த்தும் வன்முறையை நீதிமன்றமும் ஆதரிப்பதைத் தான் இந்த தீர்ப்பு காட்டி இருக்கிறது. அரசின் அனைத்து அயோக்கியத்தனங்களையும் தன்னகத்தே கொண்டு நீதித்துறை வளர்ந்து நிற்கிறது.

வணிகமயமாதலுக்கு இரையாகும் நமது எதிர்காலத்தினை மீட்டெடுக்க வேண்டுமென்றால் தனியார் மயத்தினை ஒழித்தாக வேண்டும். இல்லையேல் இது போன்ற கொடூரங்களை தடுக்க முடியாது.

நாளை மீத்தேன் நடைமுறைப்படுத்தப்பட்டால் இதுபோல விதிமுறைகள் காற்றில் பறக்க விடப்படும். நிவாரனம் என்று கிள்ளிகொடுத்துவிட்டு நீதிமன்றமும் இவர்களுக்கு துணை போகும்.
நமது அடிப்படை வாழ்வாதாரத்தினை அழிப்பது என்பதுவே இந்தியாவில் வளர்ச்சி.

தீயில் கருகிய அந்த பிஞ்சுகளின் உடல்களை பார்க்க மனம் பதறுகிறது.
குழந்தைகளின் சிரிப்பொலிகளால் நிறையவேண்டிய இந்த உலகத்தினை, அழுகுரல்களால் நிரப்பும் இந்த அரசும், அரசு வர்க்கமும்.

- திருமுருகன் காந்தி


தன் நாட்டில் அகதிகளாக குடியேறிய ஈழத்தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்ததனால் இன்று க...

Posted: 30 Jul 2014 09:45 PM PDT

தன் நாட்டில் அகதிகளாக குடியேறிய ஈழத்தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்ததனால் இன்று கனடா நாடு தமிழின படுகொலையாளன் ராசபக்சேவை வானத்தில் இருந்து கீழே தன் மண்ணை மிதிக்க அணுமதிக்கவில்லை கனடா அரசு !

தன் சொந்த நாட்டில் வாழும் தமிழக மீனவர்களை வாரமொருமுறை கொத்துக் கொத்தாக கடலில் கைது செய்து சிறையில் அடைக்கும் சிங்கள அரசைப் பாராட்டி விருந்து வைப்பதோடு, அவர்கள் நடத்தவிருக்கும் ராணுவ மாநாட்டில் பாசத்துடன் கலந்து கொள்ள சம்மதம் சொல்கிறது இந்திய அரசு !

# அது மானமுள்ள 'கனடா', இது மானங்கெட்ட 'வெண்ணைடா'!

#வாழ்க_23ம்_புலிகேசி


Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


90களில் பிறந்தவர்கள் வருங்காலத்துக்கும், கடந்த காலத்துக்கும் இடையே பாலமாக விளங்க...

Posted: 31 Jul 2014 02:04 AM PDT

90களில் பிறந்தவர்கள் வருங்காலத்துக்கும், கடந்த காலத்துக்கும் இடையே பாலமாக விளங்குகின்றார்கள். பழையதை விட முடியாமலும், புதியதை பிடித்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கும் உள்ளாக்கப்படுகிறவர்கள். 90களில் பிறந்தவர்களைப் பற்றி மேலே எழுதியிருப்பது கொஞ்சம்தான். இன்னும் நிறைய எழுதலாம்.
உலகிலேயே மிக வேகமாக வயதாகுவது யாருக்குத் தெரியுமா? 90களில் பிறந்த ஜெனரேஷன் Y மக்களுக்குத்தான். உத்தேசமாக 1985 முதல் 1995 வரை பிறந்த இவர்கள்தான் மிக வேகமாக வயதாகுபவர்கள். இங்கு வயது என்பது உடலளவில் அல்ல. மனதளவிலும், தாங்கள் சந்திக்கும் அனுபவங்களையும் குறிக்கிறது. 90களில் பிறந்தவர்களுக்கு என சில சிறப்புகள் இருக்கின்றன. சில விஷயங்களில் இவர்கள் கொடுத்து வைத்தவர்கள், சில விஷயங்களில் கொடுத்து வைக்காதவர்கள். 90களில் பிறந்தவர்களைப் பற்றிய ஒரு ஜாலி அலசல்.

90களில் பிறந்தவர்களும், கணினி & இணையமும்

90களில் பிறந்த இணையத்தையே இன்று இயக்குவது இந்த 90களில் பிறந்தவர்கள்தான்.
* ஏலியன் தலை போன்று இருந்த பழைய ஆப்பிள் ஐ மேக் கம்ப்யூட்டரின் மானிட்டரைப் பார்த்து, 'அதெல்லாம் பணக்காரன் வீட்டுல இருக்கரதுப்பா!' என்று வருந்தியவர்கள்.

* இன்று, அதே ஆப்பிள்-ன் ஐஃபோனில் 'டிஸ்ப்ளே சுமார்பா' என்று அலுத்துக்கொள்பவர்கள்.

* நியூட்டன் தலையில் விழுந்த ஆப்பிள் கதையை, ஸ்டீவ் ஜாப்ஸ் கண்டுபிடித்த ஆப்பிள் என்ற கதையாக அடுத்த தலைமுறைக்குச் சொல்லப்போகிறவர்கள்.

* மைக்ரோசாஃப்ட் பெயின்ட்டில் பென்சில் டூல் மூலம் மவுஸால் தன்பெயரை கிறுக்கி, உலகின் முதல் டிஜிட்டல் கையெழுத்தைப் போட்ட வர்க்கத்தினர்.

* ஃபோட்டோஷாப்பில் ஹீரோவின் உடலுடன் தன் தலையை சுமாரான மார்ஃபிங்கில் வெட்டி ஒட்டி தன் 'அழகில்' மயங்கியவர்கள்.

* MS-DOS ஆபரேட்டிங் சிஸ்டமை பயன்படுத்தத் தெரிந்தவர்கள்.

* விண்டோஸ் 98ன் அருமையை உணர்ந்தவர்கள்.

* பக்கத்து வீட்டு அங்கிளின் ஹார்டு டிஸ்க்கை ஃபார்மட் செய்து விண்டோஸ் XP ஆபரேட்டிங் சிஸ்டத்தை இன்ஸ்டால் செய்து கொடுத்து புளகாங்கிதம் அடைந்தவர்கள்.

* மைக்ரோசாஃப்ட் வேர்டு மென்பொருளில் தன் பெயரை WordArt மூலம் 3Dல் பார்த்து பெருமிதம் அடைந்தவர்கள்.

* அமெரிக்காவில் இருந்து வரும் மாமாவிடம் Palmtop இருப்பதைப் பார்த்து பொறாமைப்பட்டவர்கள். கம்ப்யூட்டர் பாடத்தில் உள்ள 'பேஸிக்ஸ் ஆஃப் கம்ப்யூட்டர்' பகுதியில் வரும் அரித்மெட்டிக் அண்டு லாஜிக்கல் யூனிட் (ALU) என்றால் என்ன என்று கேட்டு ஆசிரியர்களைத் திணறடித்தவர்கள். சுருக்கமாக சொன்னால் முதல் தலைமுறை கணினி ஆசிரியர்களைக் கண்ட தலைமுறையும் 90களில் பிறந்தவர்கள்தான்.

* ஹாட்மெயில், ரெடிஃப் மெயில், யாஹூ மெயில் ஆகியவற்றில் மெயில் அனுப்பிய முதல்நாளே, வீட்டுக்கு வந்த தபால்காரரிடன் 'இன்னும் எத்தனை நாளைக்கு லெட்டர்லாம் அனுப்பிக்கிட்டு இருப்பாங்களோ?!' என அலுத்துக்கொண்டவர்கள்.

* Road Rash, Need for Speed (முதல் எடிஷன் ) போன்ற கேம்களை விளையாடிவிட்டு, கோடை விடுமுறை நாட்களை தெருவில் கழிக்காமல், வீட்டிலுள்ளேயே கழித்த முதல் தலைமுறையினர்.

* கூகுளின் வளர்ச்சியை அருகில் இருந்து பார்த்தவர்கள். யூடியூபுக்கு முன்னர் 'கூகுள் வீடியோஸ்' என்று ஒன்று இருந்ததைப் பற்றி தெரிந்து வைத்திருப்பவர்கள்.
* ஆர்குட்டில் தன்னுடைய 'க்ரஷ்' தன் ப்ரொஃபைலைப் பார்த்தாளா?/பார்த்தானா? என்று தெரிந்துகொள்வதற்காகவே அக்கவுண்ட் வைத்திருந்தவர்கள்.

* ஃபேஸ்புக்கின் ஆரம்ப காலத்திலும், ஆர்குட்டைவிட்டு அவ்வளவு சீக்கிரம் வெளியே வராதவர்கள்.

* ட்விட்டரை இன்றும் முழுமையாக புரிந்துகொள்ள முடியாதவர்கள்.

* கூகுள் +, ஹிட்டாகாது என்று பயன்படுத்தாமலேயே சொல்பவர்கள்.

* இணையத்தில் லைவ் ஸ்ட்ரீம் மூலம் டிவி சேனல்களைப் பார்த்து, 'நான்லாம் நெட்லயே டிவி பார்ப்பேனே!' என்று சொன்னவர்கள்.

* தன் பெயரில் வலைப்பூ ஆரம்பித்து, அதை இன்னொரு கணினியில் போட்டுப் பார்த்து பெருமிதம் அடைந்தவர்கள்.

மொத்தத்தில் 90களில் பிறந்தவர்கள். இன்றைய இணையத்தின் குழந்தைகள்!

90களில் பிறந்தவர்களும், டிவியும்

* 90களில் பிறந்தவர்கள்தான் ஊர்கூடி 'ஒளியும் ஒலியும்' பார்த்த கடைசி தலைமுறை.

* டிடி என்றால் தூர்தர்ஷன் என்ற அர்த்தமும் உண்டு என்பதை அறிந்தவர்கள்.

* இசைஞானியின் பாடல்களைக் கேட்டுக்கொண்டே அம்மா மடியில் தூங்கியவர்கள்

* 'ஒய் திஸ் கொலைவெறி'யைக் கேட்டுக்கொண்டே அம்மாவின் தூக்கத்தையும் கெடுத்தவர்கள்.

* ஞாயிற்றுக்கிழமைகளின் மதியங்களை டாம் அண்ட் ஜெர்ரியுடன் கழித்தவர்கள்

* பள்ளி முடிந்து வந்ததுடன் 4 மணிக்கு ஸ்வாட் கேட்ஸும் (Swat Cats), 5 மணிக்கு போக்கெமான் (Pokemon) பார்த்த பாக்கியவான்கள்.

* WWE-ஐப் பார்த்துவிட்டு பக்கத்து வீட்டு குட்டிப் பயலை ஸ்டைலாக தூக்கிப்போட்டு ரவுடியான கடைசி தலைமுறை.

* பழைய விஜய் டிவியை பார்த்தவர்கள். Solidaire, Dynora டிவியைப் பயன்படுத்திய கடைசி தலைமுறையினர்.

* வீடியோ டேப்பாக இருக்கும் தன் பெற்றோரின் திருமண வீடியோவை சிடியாக மாற்றித் தந்தவர்கள்.

* குச்சி குச்சியாக இருக்கும் பழைய மாடல் ஆன்டெனாவை மொட்டை மாடியில் அட்ஜஸ்ட் செய்யத் தெரிந்த கடைசி மனிதர்கள்.

* டிவி ரிமோட்டை முதலில் பயன்படுத்தியவர்கள்.

* காலியாக இருக்கும் பக்கத்து வீட்டின் கேபிள் கனெக்‌ஷனில் நம் டிவிக்கு திருட்டு கனெக்‌ஷன் கொடுத்து த்ரில் அனுபவித்தவர்கள்.

* ஃப்ளாட் ஸ்க்ரீன் டிவியைப் பார்த்து வாய் பிளந்த இரண்டே வருடத்தில், சொந்த கிராமத்தில் இருக்கும் மாமாவுக்கு பிளாஸ்மா டிவிக்கும், LED டிவிக்கும் வித்தியாசம் சொல்லிக்கொடுக்கும் தலைமுறையினர்.

* டிவியில் இணைத்து விளையாடும் வீடியோ கேம் பாக்ஸை வாங்கித் தராவிட்டால் சாப்பிட மாட்டேன் என அடம்பிடித்த குழந்தைகள் இன்றைய தலைமுறையினர்

* அதே வீடியோ கேம் பாக்ஸின் கேட்ரிட்ஜ் வேலை செய்யாவிட்டால், அதில் வாயால் ஊதி திரும்ப பயன்படுத்தினால் வேலை செய்யும் என்ற சிதம்பர ரகசியத்தை அறிந்தவர்கள்.

* 'சிதம்பர ரகசியம்' தொடரை டிவியில் பார்த்துவிட்டு, நாடி ஜோசியத்தைப் பற்றி நண்பர்களிடம் பேசி மெய்சிலிர்த்தவர்கள்.

* 'மர்ம தேசம்' தொடரில் வரும் குதிரை சத்ததை கனவுகளில் கண்டு பயந்தவர்கள்.

* 'சின்ன பாப்பா, பெரிய பாப்பா' தொடரைப் பார்த்துதான் மாமியார் மருமகள் உறவையே புரிந்துகொண்டவர்கள்.

* நாலு ஸ்பீக்கர், ஒரு சப் வூஃபர் என்று இருக்கும் மியூசிக் சிஸ்டத்தை, ஹோம் தியேட்டர் ரேஞ்சுக்கு ஃபீல் செய்து, மைக்கேல் ஜாக்ஸன் பாடல்களை முழு வால்யூமில் ஓடவிட்டு, அதை ரசிப்பதுபோலவே நடித்து அந்த தெருவின் பீபியையே எகிறவிட்டவர்கள்.

* இடி இடித்தால் டிவியை ஆஃப் செய்யவேண்டும். இல்லாவிட்டால் பிக்சர் டியூப் போய்விடும் என்று பயந்தவர்கள்.

* நியூஸ் வருவதற்கு முன்பு, ஓடும் கவுன்ட் டவுன் டைமை வைத்து வாட்ச்சை செட் செய்தவர்கள்.

* சித்தி, மெட்டி ஓலி போன்ற சீரியல்களின் டைட்டில் மியூஸிக்கை எங்காவது கேட்க நேர்ந்தால் மெலிதாகப் புன்னகைப்பவர்கள்

* ஞாயிற்றுக்கிழமையானால் சக்திமான் பார்க்கவேண்டும் என்று 10 மணிக்கு முன், டிவி முன்னால் ஆஜரானவர்கள்.

* அதே சக்திமான் சீரியலுக்கு முன்னால், ராமாயணமும், மகாபாரதமும் ஓடும் என்றாலும் அப்போது டிவி பக்கமே எட்டிப்பார்க்காதவர்கள்.

* மியூஸிக் சானல்களுக்கு தன் பெயருடன் காதலியின் பெயரை SMS அனுப்பி, அதை டிவியில் பார்க்கும்போது உலகமே தன்னை ஆசிர்வதித்ததாக உணர்ந்த முதல் தலைமுறையினர்.

90களில் பிறந்தவர்களும், காதலும்

* இன்ஃபேச்சுவேஷன் (Infatuation) -ஐ காதல் என நினைத்துக்கொண்டு கற்பனையிலேயே குடும்பம் நடத்திய புண்ணியவான்கள்

* ஒரே காதல் ஜோடி, பேஜரில் இருந்து வாட்ஸ்அப் பயன்படுத்தி காதலித்துக்கொண்டே இருந்தால் அவர்களும் 90களில் பிறந்தவர்களே!

* மெரினா பீச்சில் இருந்து பீச் ஓரம் இருக்கும் KFC-க்கு இடம் மாறிய ஜோடியினர்.

* காதல் கடிதங்கள் அனுப்பிக் கொண்ட கடைசி தலைமுறையினர் (வரலாறு முக்கியம் அமைச்சரே!)

* ஃபோன் நம்பரை பகிர்ந்துகொள்வதன் மூலமும் காதலைத் துவக்க முடியும் என்ற முதல் தலைமுறையினர்.

* காதலர்களாக இருந்தாலும் பேருந்தில் கூட ஒன்றாக அமர்ந்து செல்ல தயங்கிய கடைசி தலைமுறையினர்.

* பைக்கில் கட்டிப்பிடித்துக்கொண்டு பறக்கும் முதல் தலைமுறை.

* காதல் தோல்வி என்றாலே தற்கொலை என்று நினைத்த கடைசி தலைமுறையினர்.

* காதல் தோல்வி என்றாலும், 'பிரேக்அப்' என்ற வார்த்தைக்குள் அடக்கிவிட்டு கடந்துசெல்லும் முதல் தலைமுறையினர்.

* 'நாங்கள் காதலிக்கிறோம்' என்பதை ' In a relationship ' என்று பட்டும்படாமல் சொல்லத் தெரிந்தவர்கள்.

* சாதி மூலம் காதல்கள் பிரிக்கப்படும் கடைசி தலைமுறை இவர்கள்.

* நட்பையும் காதலையும் குழப்பிக்கொள்ளும் கடைசி தலைமுறையாக இருந்தாலும், தேவைப்படும்போது காதலை நட்பாக மாற்றிக்கொள்ளும் முதல் தலைமுறையினர்.

மேலே உள்ள பாயின்ட்டுகளைப் படிக்கும்போது உங்களுக்கு உங்களையே பார்ப்பதுபோல் தோன்றினால், நீங்களும் 90களில் பிறந்த தலைமுறையினர்தான்! நானும் உங்கள் தலைமுறைதான்!

ர. ராஜா ராமமூர்த்தி


நியாபகம் வருதே.... நியாபகம் வருதே.....

Posted: 31 Jul 2014 01:37 AM PDT

நியாபகம் வருதே.... நியாபகம் வருதே.....


நல்ல நண்பன் ஆயிரம் பெற்றோர்களுக்குச் சமம்: "சாப்பிட்டேன்" என அம்மாவிடமும், "க...

Posted: 30 Jul 2014 09:30 PM PDT

நல்ல நண்பன் ஆயிரம் பெற்றோர்களுக்குச் சமம்:

"சாப்பிட்டேன்" என அம்மாவிடமும்,

"கவலைப்படவில்லை" என அப்பாவிடமும்,

"அடுத்த மா"தத்திற்குள் வேலை வாங்கிவிடுவேன்" என அண்ணனிடமும்,

"முதல் மாதச் சம்பளத்தில் உனக்கொரு மடிக்கணினி" என தங்கையிடமும் சொல்ல முடிந்தது..

"காலையிலிருந்து சாப்பிடல... ரொம்பப் பசிக்குதுடா,
எதாவது வாங்கிக்கொடு" என நண்பனிடம்
மட்டும் தான் கேட்க முடிந்தது.....

அம்மாவின் ஆசிர்வாதத்துடன் தொடங்கும் எந்த நாளும் இனிய நாளே! இனிய காலை வணக்கம் நண...

Posted: 30 Jul 2014 06:30 PM PDT

அம்மாவின் ஆசிர்வாதத்துடன் தொடங்கும் எந்த நாளும் இனிய நாளே!

இனிய காலை வணக்கம் நண்பர்களே...!


Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


Hurry up hurry up !!!!!

Posted: 31 Jul 2014 08:00 AM PDT

Hurry up hurry up !!!!!


Guess this beauty Queen?

Posted: 31 Jul 2014 07:30 AM PDT

Guess this beauty Queen?


நீங்கள் சினிமா துறையில் ஆர்வம் உள்ளவரா ? குறும்பட இயக்குனரா ? திரைப்படத்தில்...

Posted: 31 Jul 2014 07:29 AM PDT

நீங்கள் சினிமா துறையில் ஆர்வம் உள்ளவரா ?

குறும்பட இயக்குனரா ?

திரைப்படத்தில் நடிக்க அல்லது இயக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கிறீர்களா ?

பன்முகத் திறைமைக் கொண்டவரா ?

உங்கள் திறமையை வெளிக்கொண்டுவர வாய்ப்புக்காக காத்திருக்கிறீர்களா ?

இதோ உங்களுக்காக ...

இந்த பக்கத்தை லைக் செய்து தொடர்பு கொள்ளுங்கள்.....

https://m.facebook.com/lightsonentertainments?ref=bookmark


LightsOn Entertainment

Lights on entertainment is a consortium which aims in articulating the ideas and thoughts of young creative minds in field of media and digital marketing

நீங்கள் சினிமா துறையில் ஆர்வம் உள்ளவரா ? குறும்பட இயக்குனரா ? திரைப்படத்தில்...

Posted: 31 Jul 2014 07:18 AM PDT

நீங்கள் சினிமா துறையில் ஆர்வம் உள்ளவரா ?

குறும்பட இயக்குனரா ?

திரைப்படத்தில் நடிக்க அல்லது இயக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கிறீர்களா ?

பன்முகத் திறைமைக் கொண்டவரா ?

உங்கள் திறமையை வெளிக்கொண்டுவர வாய்ப்புக்காக காத்திருக்கிறீர்களா ?

இதோ உங்களுக்காக ...

இந்த பக்கத்தை லைக் செய்து தொடர்பு கொள்ளுங்கள்.....

https://m.facebook.com/messages/read/?tid=mid.1370694592437%3A1bd37f6b6abeaaab77

Sokka sonna thala

Posted: 31 Jul 2014 06:59 AM PDT

Sokka sonna thala


https://m.facebook.com/abiabipictures/photos/a.672227892823957.1073741842.455669...

Posted: 31 Jul 2014 06:42 AM PDT

புதிதாக மணமான‌ கணவன் -மனைவி இருவரும் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டனர். ஒருவர் மற்றவர...

Posted: 31 Jul 2014 06:23 AM PDT

புதிதாக மணமான‌ கணவன் -மனைவி இருவரும் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டனர். ஒருவர் மற்றவருடைய அலமாரியை திறந்து பார்ப்பதில்லை என்று.

30 ஆண்டுகள் உருண்டோடின..

ஒருநாள்
...
மனைவி தன்னுடைய அலமாரியை சுத்தம் செய்யும் போது ஒரு மூலையில் 3
புளியங்கொட்டைகளும், சில்லறையாக 500 ரூபாய்க்கு நோட்டுகளும் இருந்தன.

ஆச்சர்யம் அடைந்த மனைவி தன் கணவனிடம் இது குறித்து கேட்டாள். கணவன் சொன்னான்..

" அன்பே என்னை மன்னித்துவிடு.. ஒவ்வொருமுறை திருட்டுத்தனமாக உன் அலமாரியைத் திறக்கும்போதும் ஒரு புளியங்கொட்டையை போட்டு வைப்பேன்.."

" பரவாயில்லை உயிரே..! 30 வருடங்களில் மூன்றே மூன்று புளியங்கொட்டைகள் தானே.. அது என்ன பத்தும் ஐம்பதுமாக ரூபாய் நோட்டுகள்..?"

" புளியங்கொட்டைகள் சேர சேர கடையில் விற்று காசாக்கிவிடுவேன் கண்ணே..!"

இது ஜோக் அல்ல குழந்தை வெகுளித்தனமாக தன் தாயை கேட்டது : அம்மா, நம் வீட்டு வேலைக...

Posted: 31 Jul 2014 05:41 AM PDT

இது ஜோக் அல்ல

குழந்தை வெகுளித்தனமாக தன் தாயை கேட்டது : அம்மா, நம் வீட்டு வேலைக்காரியிடம் உன்னுடைய பர்ஸையும், நகைகளையும் கொஞ்ச நேரம் குடுத்து பார்த்துக்கொள்ள சொல்வாயா ?

அம்மா : அதெப்படி முடியும்…அவளை நான் நம்புவதில்லை.

குழந்தை :அப்பறம் ஏன் என்னை மட்டும் அவளிடம் விட்டு செல்கிறாய் ?

இலவசமாக பில் போட ஒரு சாப்ட்வேர்….! நம்மில் தொழில் செய்துவரும் அனைவருக்கும் பில்...

Posted: 31 Jul 2014 05:02 AM PDT

இலவசமாக பில் போட ஒரு சாப்ட்வேர்….!

நம்மில் தொழில் செய்துவரும் அனைவருக்கும் பில் என்பது எவ்வளவு முக்கியமானது என்பது தெரியும். பெரிய அளவில் மற்றும் நடுத்தர அளவில் தொழில் செய்பவர்கள்

மேலும் வாசிக்க...
http://indru.todayindia.info/bill-to-free-software/

ரயில்வே வேலை ஒன்றிற்காக இண்டர்வியூக்கு சென்றிருந்தார் ஒருவர். அப்போது அங்கே கேட்...

Posted: 31 Jul 2014 04:26 AM PDT

ரயில்வே வேலை ஒன்றிற்காக இண்டர்வியூக்கு சென்றிருந்தார் ஒருவர். அப்போது அங்கே கேட்கப் பட்ட கேள்விகளும், அதற்கு அவர் தந்த பதில்களும்!
தண்டவாளத்தில் பிளவு ஏற்பட்டிருப்பதைக் காண்கிறீர்கள். எதிரே ஒரு ரயில் வந்து கொண்டிருக்கிறது. அப்போது என்ன செய்வீர்கள்?
உடனடியாக சிவப்புக் கொடிய ஆட்டி ரயிலை நிறுத்த முயற்சி செய்வேன் சார்...
சிவப்புக் கொடி இல்லை, அப்போது என்ன செய்வீர்கள்?
இரவு நேரமானால், டார்ச் அடித்து சிக்னல் காட்டுவேன்.
கையில் டார்ச்சும் இல்லை, அப்போது என்ன செய்வீர்கள்?
என்னுடைய சிவப்புச் சட்டையைக் கழட்டி கொடியாகப் பயன் படுத்துவேன்.
அன்று நீங்கள் சிவப்பு கலர் சட்டை அணியவில்லை என்றால்...?
உடனடியாக என் சித்தப்பாவிற்கு போன் செய்வேன்!
(ஆபிசருக்கு இந்தப் பதிலைக் கேட்கவும் மிகவும் ஆச்சர்யம்....)
ஏன் உங்கள் சித்தப்பா அவ்வளவு பெரிய ஜாம்பவானா? ரயிலைக் கைகளாளேயே தடுத்து நிறுத்தி விடுவாரோ..?
அதெல்லாம் இல்லை சார். அவர் இதுவரை ரயில் விபத்தை நேரில் பார்த்ததில்லை. அதான்!

:p

Posted: 30 Jul 2014 11:08 PM PDT

:p


அசத்தலான அம்மா கேரக்டர் இருக்கிறதா? கூப்பிடு சரண்யாவை'' என்கிற அளவுக்குப் பெரும்...

Posted: 30 Jul 2014 10:33 PM PDT

அசத்தலான அம்மா கேரக்டர் இருக்கிறதா? கூப்பிடு சரண்யாவை'' என்கிற அளவுக்குப் பெரும்பாலான ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்துப் பாசமழை பொழிந்துகொண்டிருக்கிறார் சரண்யா பொன்வண்ணன். இதுதான் சமயமென்று சரண்யாவுக்கு சில 'அம்மா' கேள்விகள்

''உங்க அம்மா பற்றி...?'

''அம்மா பேர் சரோஜினிராஜ். பிறந்து வளர்ந்தது எல்லாம் கேரளா என்றாலும், அடிப்படையில் அவங்க தமிழ்ப் பொண்ணு தான். விதம் விதமா சமைச்சு அசத்துவாங்க. பிரமாதமான டெய்லர். அவ்ளோ சூப்பரா தோட்டம் அமைப்பாங்க. ரொம்ப தைரியமான லேடி.'

''முதன் முதலா அம்மாவா நடிச்ச படம்?'

'' 'அலை' படத்துல சிம்புவுக்கு அம்மாவா நடிச்சேன். அதுதான் ஆரம்பம்.'

''இனிமே 'அம்மா' வேடம்தான்னு முடிவானபோது மனநிலை எப்படி இருந்தது?'

''நம்ப மாட்டீங்க. ரொம்ப திருப்தியா இருந்தது. பாதுகாப்பா உணர்ந்தேன். கிளாமரா நடிக்கத் தேவை இல்லை. கிசுகிசு பிரச்னை கிடையாது. ஹீரோக்களுக்கு அம்மாவா நடிக்கிறதால, மரியாதை அதிகமாகுது. ரொம்ப சந்தோஷமா இருக்கு.'

''நீங்க அம்மாவா நடிக்க ஆரம்பிச்சப்போ, உங்க கணவர் பொன்வண்ணன் எப்படி ஃபீல் பண்ணினார்?'

''அவருக்கும் ரொம்ப சந்தோஷம். கல்யாணத்துக்குப் பிறகு குழந்தைகள்னு ஆகி அஞ்சாறு வருஷம் நடிக்காமலே இருந்தேன். மறுபடியும் நடிக்க வாய்ப்பு வந்தபோது, 'இது உனக்கு ரெண்டாவது இன்னிங்ஸ்... சொல்லப்போனா, மரியாதையான இன்னிங்ஸ்'னு சொல்லி உற்சாகப்படுத்தினதே அவர்தான்.'

''ஹீரோ மகன்களில் இந்த அம்மாவுக்குப் பிடித்த மகன் யார்?'

''என்னால பதிலே சொல்ல முடியாத கேள்வி இது. எனக்கு ரெண்டு மகள்கள். ஆனா எத்தனையோ மகன்கள். அம்மாவா நடிக்கும்போது ஜஸ்ட் நடிச்சுட்டு மட்டும் வந்துடறது இல்ல. அம்மா என்ற உணர்வு நடிப்பையும் மீறி நிலைச்சுடும். அதனால நான் யார் யாருக்கெல்லாம் அம்மாவா படத்துல இருக்கேனோ, அவங்க எல்லாம் எனக்குப் பிடித்த என் மகன்கள்தான்.'

''பிடிச்ச அம்மா பாட்டு?'

''கொஞ்ச நாள் முன்பு வரைக்கும் மன்னன் படத்துல வந்த 'அம்மா என்றழைக்காத உயிரில்லையே' பாட்டுதான். ஆனா இப்போ 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் வரும் 'அம்மா நீ எங்கே அம்மா' பாட்டுதான். காரணம் அது என் வாழ்க்கையோட சம்பந்தப்பட்ட பாட்டு. எனக்காக அம்மா கவலைப்பட்டுக்கிட்டே இருப்பாங்க. அவங்க இறந்த பிறகு எனக்கு ஒரு நல்ல மனிதரோட கல்யாணம் நடந்தது. நல்ல பிள்ளைகள் பிறந்தது. சினிமாவில் நல்ல கேரியர் அமைஞ்சது. அடுத்தடுத்து நல்லது எல்லாம் ஏதோ மிராக்கிள் மாதிரி நடந்தது.''

நன்றி : சினிமா விகடன்


Vj anna thinking about wat ???? Guess

Posted: 30 Jul 2014 10:05 PM PDT

Vj anna thinking about wat ???? Guess


Posted: 30 Jul 2014 10:02 PM PDT


இத விட வேற என்ன வேணும்யா !!!!

Posted: 30 Jul 2014 09:51 PM PDT

இத விட வேற என்ன வேணும்யா !!!!


யாருணே தெரியாத செல்போன் கடைகாரன்கிட்ட நம்பி நம்பர் கொடுக்குறாங்க.. நாலு மாசமா...

Posted: 30 Jul 2014 09:16 PM PDT

யாருணே தெரியாத செல்போன்
கடைகாரன்கிட்ட நம்பி நம்பர்
கொடுக்குறாங்க..

நாலு மாசமா சாட் பண்றோம்.. நம்மல
நம்பி நம்பர் கொடுக்கமாட்றாங்க.. :(

எழுமிச்சையில் அடங்கி உள்ள சிட்ரிக் அமிலத்தின் நன்மைகள்.. . . . . . வண்டிக்கு.. ம...

Posted: 30 Jul 2014 08:29 PM PDT

எழுமிச்சையில் அடங்கி உள்ள சிட்ரிக் அமிலத்தின் நன்மைகள்..
.
.
.
.
.
வண்டிக்கு.. முன்னால கட்டி உட்டா வண்டி ரிப்பேர் ஆவாது.
.
வீட்டு நிலைல கட்டி உட்டா பேயி பிசாசு வீட்டுக்குள்ள வராது.
.
புது வண்டி எடுக்குறப்ப டயருக்கு அடில வெச்சா வண்டி ஆக்சிடென்ட் ஆவாம ஓடும்.
.
வீடு கட்டுறதுக்கு முன்னால நாலா கீறி நாலு மூலைலயும் எரிஞ்சா வீட்டு வேலை சீக்கிரம் ஆவும்.
.
கொஞ்சமா கீறி அதுக்குள்ள குங்குமம் வெச்சு ரோட்டுல போட்டுட்டா நம்மல புடிச்ச சனி ஓடிரும்.
.
ஒரு துணில கட்டி கல்லா பெட்டிக்குள்ள போட்டுகிட்டா வியாபாரம் நல்லா நடக்கும்.
.
இதே பலன் கொஞ்சம் கூடனும்னா சாத்துகுடிய வெச்சு ட்ரை பண்ணலாம்.

En Anbu Chella Kutty TPD Nanbargaluku Iniya Kaalai Vanakkam...

Posted: 30 Jul 2014 07:38 PM PDT

En Anbu Chella Kutty TPD Nanbargaluku Iniya Kaalai Vanakkam...

Good night frnds

Posted: 30 Jul 2014 11:12 AM PDT

Good night frnds


பழமொழிகள்:- 1. அதிக உணவு அற்ப ஆயுள். குறைந்த உணவு அதிக ஆயுள். 2. எந்த இடத்தில...

Posted: 30 Jul 2014 10:54 AM PDT

பழமொழிகள்:-

1. அதிக உணவு அற்ப ஆயுள். குறைந்த உணவு அதிக ஆயுள்.

2. எந்த இடத்திலிருந்தும் சொர்க்கம் தூரத்தில் இருக்கிறது.

3. உங்களால் கீழ்ப்படிய முடியாதா? அப்படி என்றால் உங்களால் தலைமை தாங்கவும் முடியாது.

4. கடவுள் கதவை அடைத்தால் ஜன்னலைத் திறந்து விடுகிறார்.

5 கெட்ட புத்தகம் ஒரு திருடனைவிட மிகவும் மோசமானதாகும்.

6. தாயின் இதயம் என்றும் வாடாத, மலர்ந்த மலர்.

7. தூங்கும்போது சிரிக்கும் குழந்தை, தேவர்களுடன் விளையாடுகிறது.

8. பெண் குழந்தை இல்லாதவன் அன்பைப் பற்றி அறிய முடியாது.

9. நாக்கு கத்தியைக் காட்டிலும் ஆழமாகப் பாயும்.

10. சத்தியத்தை வளைக்கலாம்; முறிக்க முடியாது.

11. பண்புக்குப் பெரும் பகை செல்வம்.

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


:P :P

Posted: 31 Jul 2014 09:21 AM PDT

ஒரு நாள் ஒரு கிளிக்கு கல்யாணம் பண்ண ஒரு போட்டி வெச்சாங்க.! அதுல எல்லா பறவைகளும்...

Posted: 31 Jul 2014 09:15 AM PDT

ஒரு நாள் ஒரு கிளிக்கு கல்யாணம் பண்ண ஒரு போட்டி வெச்சாங்க.!

அதுல எல்லா பறவைகளும் கலந்துக்கிடுச்சு!
போட்டில காக்கா ஜெயிச்சுடுச்சு.!

காக்கா கிளிக்கு தாலி கட்டறப்ப "கல்யாணத்தை நிறுத்துங்க"ன்னு ஒரு குரல்.!

போலீஸ் காக்காவை அரெஸ்ட் பண்ணிட்டாங்க.! நினைவு இருக்கா?

ரெண்டாங்கிளாஸ் படிக்கறப்ப காக்கா பாட்டியோட வடையை திருடிடுச்சே..

அதனால தான்.!

:P :P

#என்னங்க அடிக்க எல்லாம் வர கூடாது, எனக்கும் இப்படித்தான் சொல்லிக்குடுத்தாய்ங்க... :P

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் ஒரு அறிவிப்பு... சாலை விபத்தில்...

Posted: 31 Jul 2014 09:00 AM PDT

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் ஒரு அறிவிப்பு...

சாலை விபத்தில் யாரேனும் உயிருக்கு போராடும்
சூழ்நிலையில்,தங்களின் பார்வையில் பட்டால்,
உடன் அவர்களை அருகில் உள்ள மருத்துவ
மனையில் சேர்த்து, விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற
வேண்டியது நமது மற்றும் மருத்துவரின் மனிதாபிமானமான கடமை. இதற்கு மருத்துவமனை நிர்வாகம் கண்டிப்பாக முதல் தகவல் அறிக்கை (F.I.R.) கேட்கக்கூடாது என்று மாண்புமிகு உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது....

முதலுதவி அளித்த பிறகு காவல்துறைக்கு தகவல்
தெரிவித்து கொள்ளலாம்...

தயவு செய்து இந்த செய்தியை தங்களுக்கு தெரிந்த
அனைவருக்கும் பரப்புங்கள்.... அது அனைவருக்கும் உதவியாக இருக்கும்...
ஏன்...
நாளை நமக்கே கூட உதவியாக இருக்கலாம்..


ஆண்கள் அழகானவர்கள் தான்.. * பொறாமை கொண்ட பெண்கள் தான் ஆண்களை வர்ணிப்பதே இல்லை.....

Posted: 31 Jul 2014 08:50 AM PDT

ஆண்கள் அழகானவர்கள் தான்..
*
பொறாமை கொண்ட பெண்கள் தான் ஆண்களை வர்ணிப்பதே இல்லை.. :P

பெண்கள் அழகானவர்கள் என்று சொல்வதற்க்கு இல்லை..
*
ஆண்கள் அவர்களை அழகாக பார்க்க தெரிந்தவர்கள்.. :P

புகழ்ந்து கெட்டவர்கள் ஆண்கள்..
*
புகழ்ச்சியை கேட்டு கெட்டவர்கள் பெண்கள்... :P


வெள்ளரி கார் ;-)

Posted: 31 Jul 2014 08:40 AM PDT

வெள்ளரி கார் ;-)


:)

Posted: 31 Jul 2014 08:30 AM PDT

:)


என்னை கவர்ந்த பதிவு..... ரொம்ப நாளா என்னை உருத்திகொண்டிருந்த கேள்வி.... விஜய்...

Posted: 31 Jul 2014 08:14 AM PDT

என்னை கவர்ந்த பதிவு.....

ரொம்ப நாளா என்னை உருத்திகொண்டிருந்த கேள்வி....

விஜய் ஆலுக்காஸ் போய் நகை வாங்க சொல்லுறாரு...

அர்ஜுன் ராம்ராஜ் பனியன் வாங்க சொல்லுறாரு..

கார்த்தி ப்ரு காபி குடிக்க சொல்லுறாரு...

திரிஷா மேடம் ஏதோ ஒரு ஆயில்மேண்ட வாங்க சொல்லுது..

சூர்யா சிம்கார்டு வாங்க சொல்லுறாரு...

அசின் தாயி மிரண்டா குடிக்க சொல்லுது...

பிரபு அண்ணன் கல்யான் போய் நகை வாங்க சொல்லுறாரு...

விக்ரம் அண்ணன் மனபுரம் போய் நகை அடகு வைக்க சொல்லுறாரு...

ஏங்க நான் தெரியாமத்தான் கேக்குறேன் ....
எல்லாரும் செலவு செய்யத்தான் யோசனை சொல்லுறீங்களே ஒழிய
யாராவது ஒரு ஆள் இப்படிதாங்க சம்பாரிக்கனுமுன்னு வழி சொல்லுறிங்களா?

முதலில் காசு வருவதற்கு வழி சொல்லுங்க
...அப்புறம் செலவு செய்வதற்கு வழி சொல்லலாம்...

- அன்புடன் செல்வா


குசும்பு... 1

(‘மயோரேலி’)......ஆகஸ்ட்-3ல் விஜய்சேதுபதி கலந்துகொள்ளும் தசை சிதைவு நோய்(muscular...

Posted: 31 Jul 2014 08:00 AM PDT

('மயோரேலி')......ஆகஸ்ட்-3ல் விஜய்சேதுபதி கலந்துகொள்ளும் தசை சிதைவு நோய்(muscular dystrophy)விழிப்புணர்வு பேரணி..!

பிறவியிலேயே சின்னக்குழந்தைகளை தாக்கும் நோய்களுள் ஒன்றுதான் தசை சிதைவு நோய்.. 3000 குழந்தைகளில் ஒருவரை இந்த நோய் தாக்குகிறது. இந்த நோய் தாக்கிய குழந்தைகள் நடக்க சக்தியற்று அடிக்கடி கீழே விழுவர். உடனே தானாக எழுந்து நிற்கவும் சிரமப்படுவர்.. மாடிப்படி ஏற முடியாது. சொல்லப்போனால் அவர்களின் வாழ்க்கை சக்கர நாற்காலியிலேயே கழிந்துவிடும் அபாயமும் உண்டு.

ஆனால் அதற்காக இதை இப்படியே விட்டுவிட முடியுமா..? இந்த மாதிரி நோய் இனி வரும் காலங்களில் எந்த ஒரு குழந்தையையும் தாக்கிவிடக்கூடது என்பதற்காகத்தான் 'ஜீவன் பவுண்டேசன்' என்கிற அமைப்பு ஒரு விழிப்புணர்வு பேரணியை சென்னையில் நடத்த இருக்கிறது.

'மயோரேலி' எனப்படும் இந்த பேரணி ஆகஸ்ட்-3ஆம் தேதி சென்னை மெரீனா கடற்கறையில் காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த பேரணியில் இந்த தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகளுடன் திரையுலக நட்சத்திரங்களான விஜய்சேதுபதி, வரலட்சுமி, காயத்ரி ஆகியோரும் கலந்துகொண்டு மக்களுக்கு இந்த நோய் குறித்த சமூக விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.

அடுத்த தலைமுறை ஆரோக்கியமாக பிறக்கவேண்டும் என்கிற எண்ணம் உள்ளவர்கள் இந்த பேரணியில் கலந்துகொண்டு சிறப்பிக்கும்போது இந்த விழிப்புணர்வு பேரணியின் நோக்கம் வெற்றியடையும்.. பேரணியின் நோக்கமும் நிறைவேறும்.

மேலும் விவரங்கள் மற்றும் முன்பதிவுக்கு உடனே
அணுகவும்..
Dr. அஜய் மற்றும் திருமதி வசந்தி பாபு. ( 044-2847 4400/ 98843 23123/ 98412 12442).


தெரிந்து கொள்வோம்

Posted: 31 Jul 2014 07:55 AM PDT

தெரிந்து கொள்வோம்


தெரிந்து கொள்வோம் - 2

தத்ரூபமான ஓவியம்

Posted: 31 Jul 2014 07:45 AM PDT

தத்ரூபமான ஓவியம்


:)

Posted: 31 Jul 2014 07:30 AM PDT

:)


“நேத்து ஏன் டாக்டர் நீங்க வரலே”? “ஜுரம், அதான் வரலே” “எனக்கும்தான் ஜுரம், நான்...

Posted: 31 Jul 2014 07:20 AM PDT

"நேத்து ஏன் டாக்டர் நீங்க வரலே"?

"ஜுரம், அதான் வரலே"

"எனக்கும்தான் ஜுரம், நான் வரலியா"?

:O :O

இந்த பசுமையை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 31 Jul 2014 07:10 AM PDT

இந்த பசுமையை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழர் சதிஸ் சிவலிங்கம்.. அவரது தந்தை சிவல...

Posted: 31 Jul 2014 07:00 AM PDT

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழர் சதிஸ் சிவலிங்கம்..

அவரது தந்தை சிவலிங்கமும் பளு தூக்கும் வீரராக இருந்தவராம். தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து தங்கபதக்கம் வாங்கியவராம் ..தற்போது VIT கல்லூரியில் செக்யூரிட்டி வேலை பார்த்து வருகிறாராம் ..... :(

சச்சின் டெண்டுல்கர் பேரு ஷரபோவாவுக்கு தெரியலைன்னு கவலைபடுறவங்க இருக்கிற நாட்டுல..இதுதான் விளையாட்டு மரியாதை ...

# சதீசு நீயாவது சூதானமா இருப்பா

- நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்.

மதவெறியர்களையும் அடுத்தவர்களின் மதநம்பிக்கைகளில் மூக்கை நுழைத்து, அதைப் புண்படுத...

Posted: 31 Jul 2014 06:45 AM PDT

மதவெறியர்களையும் அடுத்தவர்களின் மதநம்பிக்கைகளில் மூக்கை நுழைத்து, அதைப் புண்படுத்தும் சில சில்லறைகளையும் தவிர்த்து விட்டுப் பார்த்தால்..

உண்மையான ஹிந்துக்களுடன் பழகியவர்களுக்கு தெரியும்... அவர்கள் எவ்வளவு அன்பானவர்கள் என்று..!!

உண்மையான முஸ்லிம்களுடன் பழகியவர்களுக்கு தெரியும்... அவர்கள் எவ்வளவு கண்ணியமானவர்கள் என்று..!!

உண்மையான கிறிஸ்தவர்களுடன் பழகியவர்களுக்கு தெரியும்... அவர்கள் எவ்வளவு பண்பானவர்கள் என்று..!!

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ♥


:)

Posted: 31 Jul 2014 06:30 AM PDT

:)


ஒருவர் டாய்லெட்டில் அவருடைய விலையுயர்ந்த ஆப்பிள் ஃபோனை உள்ளே போட்டுவிட்டார். ஐம...

Posted: 31 Jul 2014 06:10 AM PDT

ஒருவர் டாய்லெட்டில் அவருடைய விலையுயர்ந்த ஆப்பிள் ஃபோனை உள்ளே போட்டுவிட்டார்.

ஐம்பதாயிரம் ரூபாய் ஆச்சே! குய்யோ முறையோ என அலறி அழ ஆரம்பித்தார்..

இந்த ஆளின் கத்தல் தாங்காத டாய்லெட் தேவதை, அவர் முன்னே தோன்றி, "ஏன் இப்படி ஊளையிடுகிறாய்" என்றது?.

இவரும் கதையைச் சொன்னார்.

படக்கென மறைந்த தேவதை, ஒரு சில நிமிடங்களில் தகிக்கும் தங்க நிறத்தில் ஒரு ஃபோனைக்கொண்டு வந்து கொடுத்து.

இவர் ஏற்கனவே விறகுவெட்டி (தங்கக்கோடாரி) கதைகளை சிறுவயதில் கேள்விப்பட்டிருந்ததால் மிகவும் நேர்மையாகவும், நியாயமாகவும் இருப்பதற்காக

"தேவதையே, என்னுடையது சாதாரண ஃபோன் தான். தங்கத்தால் ஆனது அல்ல" என்றார் பவ்வியமாக!

உடனே அந்த தேவதை,"ஏ மூதேவி.. இது உன்னுடைய ஃபோன் தான், நன்றாக கழுவி விட்டு உபயோகப்படுத்து"என்று கூறிவிட்டு மறைந்தது.!!??

கதை கருத்து: யாரும்
டாய்லெட்ல mobile phone பயன்படுத்தாதீங்க ப்ளீஸ். :P

ஜப்பானைப் பற்றிய இந்த அழகான தகவல்களை வாசியுங்கள்... 1.ஜப்பானில் மாணவர்கள் தங்கள...

Posted: 31 Jul 2014 05:50 AM PDT

ஜப்பானைப் பற்றிய இந்த அழகான தகவல்களை வாசியுங்கள்...

1.ஜப்பானில் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் சேர்ந்து ஒவ்வொருநாளும் பதினைந்து நிமிடங்கள் தங்கள் பாடசாலை மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்கிறார்கள்.

2.ஜப்பானில் நாய் வளர்ப்பவர்கள் அதன் கழிவுகளை அகற்றுவதற்காக வெளியில் செல்லும்போது விசேட பை ஒன்றினை கட்டாயமாக எடுத்துச் செல்வர்.

3. ஜப்பானில் சுகாதார ஊழியர்கள் "சுகாதார பொறியியலாளர்" என அழைக்கப்படுகிறார். அவரது சம்பளம் அமெரிக்க டொலரில் 5000/-இலிருந்து 8000/- வரை ஆகும். ஒரு சுத்தபடுத்துனர் எழுத்து மற்றும் வாய் மொழிமூல பரீட்சையின் பின்னரே தெரிவு செய்யப்படுகிறார்.

4. ஜப்பானில் இயற்கை வளங்கள் என்று எதுவும் இல்லை.அத்துடன் வருடத்திற்கு நூற்றுக்கணக்கான பூமி அதிர்ச்சிகள் அங்கு ஏற்படுகின்றன.ஆனால் ஜப்பான்தான் உலகிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார நாடாகும்.

5. ஜப்பானில் முதலாம் ஆண்டு தொடக்கம் ஆறாம் ஆண்டு வரையான மானவர்களுக்கு மற்றவர்களுடன் எப்படி பழக வேண்டும் என சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

6. ஜப்பான் மக்கள் உலகிலேயே மிகப் பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் தங்களுக்கென்று வேலைக்காரர்கள் வைத்துக் கொள்வதில்லை. பெற்றோரே வீட்டையும் பிள்ளைகளையும் கவனித்துக் கொள்வர்.

7.ஜப்பான் பாடசாலைகளில் முதலாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டுவரை பரீட்சைகளே இல்லை.கல்வியின் நோக்கம் விடயங்களை அறிந்து கொள்ளவும் ஒழுக்க நெறிகளை கற்றுக் கொள்ளவும்தானே தவிர பரீட்சை மூலம் அவர்களை தரப்படுத்தவல்ல என்கிறார்கள்.

8. ஜப்பானில் மக்கள் உணவுக் கடைகளில் எந்தவிதத்திலும் உணவை வீணாக்காமல் தமக்குத் தேவையானதை அளவில் மட்டும் சாப்பிடுகிறார்கள். உணவு வீணாதல் என்பதே அங்கு இல்லை.

9.ஜப்பானில் சராசரியாக ஒரு வருடத்தில் புகையிரதங்கள் தாமதமாக வந்த நேரம் ஆகக் கூடியது சுமார் 7 வினாடிகள் மாத்திரமே.

10. ஜப்பானில் மாணவர்கள் பாடசாலையில் சாப்பிட்ட பின் உடனேயே அங்கேயே பல் துலக்குகிறார்கள்.அவர்களுக்கு சாப்பிடும் உணவு சரியாக சமிபாடு அடைய வேண்டும் என்பதற்காக சாப்பிடுவதற்கு அரை மணித்தியாலம் ஒதுக்கப்படுகிறது.

ஆங்கிலத்தில் ரிலாக்ஸ் ப்ளீஸ் Relaxplzz


10 ரூபாய் இருந்தா கொடு என்னிடம் சுத்தமா ரூபாய் இல்லை பரவாயில்லை, கொடு நான் சுத...

Posted: 31 Jul 2014 05:40 AM PDT

10 ரூபாய் இருந்தா கொடு

என்னிடம் சுத்தமா ரூபாய் இல்லை

பரவாயில்லை, கொடு நான் சுத்தம் செய்து கொள்கிறேன்.

:P :P

(y)

Posted: 31 Jul 2014 05:30 AM PDT

(y)


விதை துளிர்க்க சத்தம் எழுப்புவதில்லை. மரங்கள் சரிகையில் பெரும் இரைச்சலை ஏற்ப்பட...

Posted: 31 Jul 2014 05:15 AM PDT

விதை துளிர்க்க சத்தம் எழுப்புவதில்லை.

மரங்கள் சரிகையில் பெரும் இரைச்சலை ஏற்ப்படுத்துகின்றன.
அழிவுகள் ஆர்ப்பரிக்கும்.

ஆக்கங்கள் அமைதிக்காக்கும்.

சாதனைகள் அமைதியாகவே தொடங்குகின்றன. (y)

சாயங்கால நேரம் மசால்வடை காப்பி கூட்டணி பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 31 Jul 2014 05:00 AM PDT

சாயங்கால நேரம் மசால்வடை காப்பி கூட்டணி பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


மரங்கள் மட்டும் "WIFI" சிக்னல் தருமானால் மரங்களாக நட்டுத் தள்ளி யிருப்போம். ஆனா...

Posted: 31 Jul 2014 04:45 AM PDT

மரங்கள் மட்டும் "WIFI" சிக்னல் தருமானால் மரங்களாக நட்டுத் தள்ளி யிருப்போம்.

ஆனால் பாவம் மரங்களால் சுவாசிக்க "ஆக்சிஜன்" மட்டுமே தர முடிகிறது.


:)

Posted: 31 Jul 2014 04:30 AM PDT

:)


சிறிய சந்தர்ப்பம். சினிமாவில் நடிக்க ஒரு சிறிய சந்தர்ப்பம் கிடைத்தால் பிரமாதப்ப...

Posted: 31 Jul 2014 04:15 AM PDT

சிறிய சந்தர்ப்பம்.

சினிமாவில் நடிக்க ஒரு சிறிய சந்தர்ப்பம் கிடைத்தால் பிரமாதப்படுத்திவிடலாம் என்று தெற்கு ரயில்வேயில் குமாஸ்தாவாக வேலை செய்த அந்த இளைஞர் நினைத்து கொண்டு இருந்தார்.

அந்த நேரத்தில் ஒரு நிமிடம் மட்டுமே நாடகத்தில் நடிக்க அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.மணியன் எழுதிய 'டாக்டர் நிர்மலா' நாடகத்தில், 'தை தண்டபாணி' என்ற பாத்திரத்தில் "தை, தை" என்று நோயாளியாய்க் மேடையில் குதித்ததார்.'ஐய்யய்யோ வயிறு வலிக்குதே, டாக்டர் வயிறு வலிக்குதே' என்று அந்த இளைஞர் துடித்து ஒட்டுமொத்த அரங்கத்தையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தார்.

அந்த இளைஞர் தான் நாகேஷ் என்ற நகைச்சுவை கலைஞராக இப்போது அறியப்படுபவர். 'தை நாகேஷ்' என்றும் பின்னர் ஆங்கிலத்தில் Thai என்பதை 'தாய்' என்று மாற்றி படித்ததால் இவர் "தாய் நாகேஷ்" என அழைக்கப்பட்டார்.

அந்த நாடகத்தில் அவருக்கு பெரிய கதாபத்திரம் எதுவும் இல்லை,திருப்புமுனை தரும் கதாபாத்திரமும் இல்லை.ஆனால் கிடைத்த ஒரு நிமிடத்தில்
அரங்கையே வயிறு குலுங்க சிரிக்க வைத்தாதால் முதல் பரிசை எம்.ஜி.ஆர். அவருக்கு வழங்கினார்.

கிடைத்த சின்ன சந்தர்பத்தை கெட்டியாக பிடித்துகொண்டு சினிமாவின் உச்சத்துக்கே போன பெரிய கலைஞர் அவர்.

-Ilayaraja Dentist.

'உணவே மருந்தாக... மருந்தே உணவாக! சென்னை, சைதாபேட்டை ரயில் நிலையம் அருகேயுள்ள ஜீ...

Posted: 31 Jul 2014 03:51 AM PDT

'உணவே மருந்தாக... மருந்தே உணவாக!

சென்னை, சைதாபேட்டை ரயில் நிலையம் அருகேயுள்ள ஜீனிஸ் சாலை எப்போதும் பரபரப்பாக ஆட்கள் பறந்து கொண்டிருக்கும் இடம். மாலைவேளைகளில் இங்குள்ள போண்டா, பஜ்ஜி, ஃபாஸ்ட் ஃபுட் கடைகளில் ஈக்களைப் போல மக்கள் மொய்த்துக் கொண்டிருப்பதைப் பார்க்க முடியும்.

இவற்றுக்கு அருகிலேயே... சிறிய தள்ளுவண்டி ஒன்றில், 'உணவே மருந்தாக மருந்தே உணவாக' என்ற வாசகத்தோடு... 'சளி நீங்க தூதுவளை சூப்', 'கொழுப்பைக் கரைக்க கொள்ளு சூப்', 'மூட்டு வலி நீங்க முடக்கத்தான் சூப்', 'ஆயுள் நீட்டிக்க தேன்நெல்லி' என சிலேட்டுகளில் எழுதி தொங்கவிடப்பட்டிருக்கும் தாய்வழி இயற்கை உணவகத்திலும் கூட்டம் அலைமோதுவது ஆச்சர்யமே!

உணவகத்தை நடத்தி வரும் மகாலிங்கத்திடம் பேசினோம், ''ஆரோக்கியமான வாழ்வுக்கு இயற்கை உணவுதான் ஏற்றதுனு நம்மாழ்வார் ஐயா அடிக்கடி சொல்லுவாரு. அந்த வார்த்தைகள்தான் இந்தக் கடை தொடங்கக் காரணமா இருந்தது. நண்பர்கள் சரவணன், ரவி ரெண்டு பேரோடயும் சேர்ந்து... இயற்கையாகக் கிடைக்கும் விளைபொருள்களை வெச்சு ஆரோக்கியமான உணவுப் பொருளை மக்களுக்கு கொடுக்கலாம்ங்கிற முடிவோட இந்த ஜனவரியிலதான் ஆரம்பிச்சோம். இதுக்கு, மக்கள்கிட்ட நல்ல வரவேற்பு இருக்கு.

காலையில, அருகம்புல் சாறு, நெல்லிக்கனிச் சாறு, வாழைத்தண்டு சாறு, மூலிகை கலந்த துளசி டீ, கறிவேப்பிலைச் சாறு, கேரட் கீர், பீட்ரூட் கீர் விற்பனை செய்றோம். மாலையில், தேன் நெல்லி, 7 வகை காய்கறிகள் கலந்த சூப், முடக்கத்தான் சூப், கொள்ளு சூப், முருங்கைக்காய் சூப், தூதுவளை சூப், மணத்தக்காளி சூப்பும் கொடுக்குறோம். இதை சாப்பிடறதால ஏற்படுற நன்மைகள் பத்தின துண்டு பிரசுரத்தையும் கொடுக்குறோம். பக்கத்துலயே சிறுதானிய உணவகத்தையும் ஆரம்பிச்சிருக்கோம். அதுல, இரவு நேரங்கள்ல சிறுதானிய தோசை, மூலிகை இட்லி, மூலிகை தோசைனு கொடுக்கிறோம்.

இதை ஆரம்பிக்கறதுக்கு 5 ஆயிரம் ரூபாய்க்கு உள்ளதான் முதலீடு செஞ்சோம். ஒரு நாளைக்குத் தேவையான காய்கறிகள், கீரைகள், மூலிகைகள், சிறுதானியங்கள் வாங்க மொத்தமா 2 ஆயிரம் ரூபாய் செலவாகுது. இயற்கை அங்காடிகள்ல காய்கறிகளை வாங்கிக்கிறோம். சாறு வகைகள், சூப் வகைகள்ல ஒரு நாளைக்கு 20 லிட்டர் தயாரிக்கிறோம். 200 மில்லி சூப் 15 ரூபாய்னு விற்பனை செய்றோம். தோசை 30 ரூபாய்னும் மூலிகை இட்லி 5 ரூபாய்னும் விற்பனை செய்றோம். ஹோட்டல்ல விக்கிற விலையைவிட குறைவுதான். ஒரு நாளைக்கு 3 ஆயிரத்து 500 ரூபாய் வருமானம் வருது. செலவெல்லாம் போக 1,500 ரூபாய் லாபமா கையில நிக்குது.

இப்பத்தான் மக்கள் கொஞ்சம் கொஞ்சமா எங்க பக்கம் திரும்ப ஆரம்பிச்சுருக்காங்க. சிலர் ரெகுலரா வர ஆரம்பிச்சுட்டாங்க. மெரினா கடற்கரையிலும் ஒரு கிளை தொடங்கி இருக்கோம். அங்கேயும் நல்ல வரவேற்பு'' என்றார் மகாலிங்கம் மகிழ்ச்சியுடன்.

அவரைத் தொடர்ந்த ரவி, ''நாங்க எந்த உணவுப் பொருள்லயும் ரசாயனத்தைச் சேர்க்கிறதில்ல. மூலிகைகள், கீரைகள்லருந்து எடுக்கப்பட்ட சாறுகளைத்தான் வடிகட்டி விற்பனை செய்றோம். நல்லெண்ணெய், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, பட்டை, சோம்பு, இஞ்சி, பூண்டு, கொத்தமல்லிதான் சேக்குறோம். பொதுவா சூப் ருசியாக இருக்கறதுக்காக மைதா மாவு சேர்ப்பாங்க. நாங்க அதை சேர்க்கறதில்ல. கொள்ளு தவிர எல்லா சிறு தானியங்களையும் ஒண்ணா சேர்த்து அரைச்சு பொடியாக்கி... கைக்குத்தல் அரிசி, கருப்பு உளுந்து சேர்த்து, அரைச்ச மாவுல கலந்து தோசை செய்றோம். கருப்பு உளுந்து எலும்புக்கு நல்லது. இந்த சிறுதானிய தோசையில் எல்லா சத்துக்களுமே இருக்கு. இதை எல்லா வயதினரும் சாப்பிடலாம். நார்ச்சத்து அதிகம் இருக்குறதால, சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.

எடையைக் குறைக்கணும்னு நினைக்கறவங் களுக்காக கொள்ளு தோசை தயாரிக்கிறோம். மூலிகைச் சாறை மாவோடு கலந்து மூலிகை இட்லி தயார் செய்றோம். மக்களுக்கு, நோய்க்கான மருந்தை நாங்க தரல. ஆனா, உணவையே மருந்தா தர்றோம்'' என்றார் புன்னகையோடு!

- விகடன்


பொது செய்திகள் - 2

;-)

Posted: 31 Jul 2014 03:32 AM PDT

முடி வெட்டும் தொழில் செய்யும் இந்தியர் ஒருவருக்கு மந்திரிகளுக்கு முடி திருத்தும்...

Posted: 31 Jul 2014 03:10 AM PDT

முடி வெட்டும் தொழில் செய்யும் இந்தியர் ஒருவருக்கு மந்திரிகளுக்கு முடி திருத்தும் தொழில் கிடைத்தது. அவர் பிரதமருக்கு முடி வெட்டும் பொழுது, "இந்த சுவிஸ் வங்கி பிரச்சினை என்ன?" என்று கேட்டார்.

அதற்கு பிரதமர், "நீ முடி வெட்டுகிறாயா அல்லது விசாரித்துக் கொண்டிருக்கிறாயா?" என சத்தமிட்டார்.

முடி திருத்துபவரும், "மன்னிக்கனும் ஐயா நான் சும்மா தான் கேட்டேன்" என்றார்.

மறு நாள் இரண்டாம் நிலை மந்திரியின் முடியை வெட்டும் பொழுதும், "ஐயா அது என்ன கருப்பு பணப் பிரச்சினை?" என்றார்.
அதற்கு அவர், "என்னிடம் எதற்கு இந்த கேள்வியை கேட்கிறாய்? அது உனக்கு தேவையில்லாதது" என கத்தினார்.

அதற்கு அந்த முடி திருத்துனர், "மன்னிக்கனும் ஐயா நான் சும்மா தான் கேட்டேன்" என்றார்.

மறுநாள் அந்த முடி திருத்துனரிடம் விசாரணை செய்தனர்.

"நீ எதிர்கட்சியை சேர்ந்தவனா"

"இல்லை ஐயா",

"நீ CID பிரதிநிதியா"

"இல்லை ஐயா"

"பின் எதற்கு முடி வெட்டும் பொழுது மந்திரிகளிடம் சுவிஸ் வங்கி கருப்பு பணம் பற்றி கேள்வி கேட்கிறாய்"

அதற்கு அவர் பதில்....

"ஐயா நான் அவர்களிடம் ஏன் இப்படி கேட்கிறேன் தெரியுமா? சுவிஸ் வங்கி, கருப்பு பணம் பற்றி இவர்களிடம் கேட்கும் பொழுது அவர்களின் தலைமயிர் விறைப்பாக நிற்கிறது. அதனால் எனக்கு வெட்டுவதும் எளிதாக இருக்கிறது".

:P :P


குசும்பு... 3

ஆசியாவின் அடையாளம் அழகு மாத்தூர் ..! மாத்தூர் தொட்டிப் பாலம் தமிழ்நாட்டில் கன்ன...

Posted: 31 Jul 2014 02:50 AM PDT

ஆசியாவின் அடையாளம் அழகு மாத்தூர் ..!

மாத்தூர் தொட்டிப் பாலம் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஆசியாவிலேயே மிகப்பெரிய தொட்டிப் பாலமாகும்.

இரண்டு மலைகளை இணைக்கும் இந்தப் பாலம் நீளவாக்கில் 1204 அடியாகவும், தரைமட்டத்திலுருந்து 104 அடி உயரத்திலும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்தைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு தூணின் சுற்றளவும் 32 அடியாகும். இவ்வாறு மொத்தம் 28 தூண்கள் உள்ளன. பெரிய பெரிய தொட்டிகளாக தொகுக்கப்பட்டு தண்ணீர் செல்லும் பகுதிகள் ஏழு அடி அகலமாகவும், ஏழு அடி உயரமும் உயரமாகவும் காணப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டம், அருவிக்கரை ஊராட்சி மன்றப் பகுதியில் அமைந்துள்ளது. 1962 ம் ஆண்டு தமிழ்நாடு முதல்வராக இருந்த காமராஜரால் தொடங்கப்பட்ட இப்பாலம் 1969ல் முழுமையாக கட்டப்பட்டு நிறைவுபெற்றது இந்தப்பாலம் நாகர்கோவிலில் இருந்து 45 (கி.மீ.) தூரத்திலும் திருவட்டாறிலிருந்து 3 (கி.மீ.) தூரத்திலும் அமைந்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து பேருந்து மூலம் இங்கு செல்லலாம்.


அரிய வகை வெள்ளை திமிங்கலம்

Posted: 31 Jul 2014 02:44 AM PDT

அரிய வகை வெள்ளை திமிங்கலம்