Friday, 19 June 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


:(

Posted: 19 Jun 2015 06:46 PM PDT

:(


Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


பிஎஸ்என்எல் வழங்கும் புதிய சலுகை...! சாதாரண தொலைபேசி சேவையை ஊக்குவிக்கும் வகையி...

Posted: 19 Jun 2015 11:20 AM PDT

பிஎஸ்என்எல் வழங்கும் புதிய சலுகை...!

சாதாரண தொலைபேசி சேவையை ஊக்குவிக்கும் வகையில் சாதாரண
தொலைபேசிவாடிக்கையாளர்களுக்கு
புதிய சலுகையை பிஎஸ்என்எல்
அறிவித்துள்ளது.

பிஎஸ்என்எல் சாதாரண
தொலைபேசிகளின்எண்ணிக்கையைஅத
ிகரிக்கவும்,வாடிக்கையாளர்களை
ஊக்குவிக்கவும்
பிஎஸ்என்எல் தொலைபேசியில்
இருந்து எந்த நிறுவனத்தின்
செல்போன் அல்லது சாதாரண
தொலைபேசிக்கும் இரவு 9 மணியில் இருந்து காலை 7 மணி வரை இலவசமாக அளவின்றி பேசலாம்.

இந்தப் புதிய சலுகை மே 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

அதற்கு ஏற்ப மாதந்திர கட்டணமும்
உயர்த்தப்படுகிறது.

இந்த மாற்றங்கள் கடந்த மே 1 ம் தேதி
முதல் அமலுக்கு வந்துள்ளது.


இந்திய நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன என்பது தெரியுமா? - தெரிந்து கொள்ளுங்க...

Posted: 19 Jun 2015 10:20 AM PDT

இந்திய நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன என்பது தெரியுமா? - தெரிந்து கொள்ளுங்கள்......!!

இந்திய ரூபாய் நோட்டுகள் நாசிக் நகரத்தில் அச்சிடப்படுகிறது என்பது தெரியும். இந்திய நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன என்பது தெரியுமா?

டெல்லி, மும்பாய், கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் தயாரிக்கப்படுகின்றன. எந்தக் காசு எந்த நகரத்தில் தயாரிக்கப்பட்டது என்பதற்கும் ஒரு குறி இடப்படுகிறது. நாணயங்களின் அடியில் தயாரிக்கப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும். அதனைப் பார்த்திருப்பீர்கள்.

அத்துடன் ஒரு குறியும் இடம் பெற்றிருக்கும்.அந்தக் குறியை வைத்து அந்த நாணயம் எந்த ஊரில் தயாரிக்கப்பட்டது என்பதை அறியமுடியும். நாணயத்தில் உள்ள ஆண்டுக்குக் கீழே,
ஒரு புள்ளி இருந்தால் அது டெல்லியிலும்,
டைமண்ட் வடிவம் இருந்தால் அது மும்பாயிலும்,
நட்சத்திர வடிவம் இருந்தால் அது ஹைதராபாத்திலும்,
எந்தக் குறியீடும் இல்லாமல் இருந்தால் அது கொல்கத்தாவிலும்தயாரிக்கப்பட்டது ஆகும்.

சரி...உங்கள் பையில் உள்ள நாணயத்தினை எடுங்கள்; எந்தக் குறி இருக்கிறது என்று பாருங்கள். அது எந்த ஊரில் தயாரானது என்று தெரிந்துவிடும்.


செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்; இனி கூகுளில் தேடலாம்: புதிய ஆப்ஸ் அறிமுகம்......

Posted: 19 Jun 2015 09:20 AM PDT

செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்; இனி கூகுளில் தேடலாம்: புதிய ஆப்ஸ் அறிமுகம்...!
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்கள் தொலைந்து போனால் கூகுளில் தேடி கண்டுபிடிக்கும் வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது
இதற்கென அப்ளிகேசன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதை உங்கள் செல்போனில் இன்ஸ்டால் செய்து உங்கள் ஜிமெயில் Account உடன் Login செய்தால் மட்டும் போதும் .. கீழே உள்ள லிங்க் இல் சென்று அந்த App டவுன்லோட் பண்ணிகொங்க
லிங்க் : http://goo.gl/8K4a3O
கூகுளில் தேடுவது எப்படி?
கூகுள் தேடல் பக்கத்தில் Find My Android Phone! என்று டைப் செய்ததும் வரும் திரையில் தொலைந்து போன ஆண்ட்ராய்டு செல்போனின் தகவலை குறிப்பிட்டால் அது எங்கிருக்கிறது என்பது பற்றிய தகவல்கள் தெரிந்துவிடும். நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து எவ்வளவு தொலைவில் உங்கள் போன் இருக்கிறது என்பது உள்ளிட்ட தகவல்களை இந்த அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்வதன் மூலம் கண்டுபிடித்து விடலாம்.
மொபைல் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்தால் அதில் இருக்கும் 'ரிங்' என்ற வசதியை பயன்படுத்தி, உங்கள் மொபைலை செயல்படாமல் பூட்டி வைக்க முடியும். தேவைப்பட்டால் போனில் உள்ள தகவல்களை அழிக்கவும் முடியும்
#ஷேர் செய்ய மறந்துவிடாதிகள்
நீங்க ஷேர் செய்வதால் யாருகாவது உதவியாக இருக்கும்.


Posted: 19 Jun 2015 08:20 AM PDT


Posted: 19 Jun 2015 07:57 AM PDT


Respect hashim amla grin emoticon :D AND muslim brothers heart emoticon <3

Posted: 19 Jun 2015 07:30 AM PDT

Respect hashim amla grin emoticon :D
AND muslim brothers heart emoticon ♥


C.F.L .பல்புகள் உடைந்தால்...? என்ன செய்யலாம்...! என்ன செய்யக் கூடாது......!! சி...

Posted: 19 Jun 2015 07:20 AM PDT

C.F.L .பல்புகள் உடைந்தால்...?
என்ன செய்யலாம்...! என்ன செய்யக் கூடாது......!!

சி. எஃப். எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்துவிட்டால், உடனேஅந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. ஏனென்றால் இந்த பல்புகளுக்குள்உள்ள மெர்க்குரி திரவம் , ஆர்சனிக் , துத்தநாகத்தைவிடஅதிகவிஷத்தன்மையுள்ளது . இந்த விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது சருமத்தில் பட்டாலோ , மைக்ரேன் தலைவலி , மூளை பாதிப்பு , உடல் அசைவுகள் , பாதிக்கப்பட்டு நிலை தடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம் .அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு சரும பாதிப்புகளும் ஏற்படுமாம் .

சி. எஃப். எல் .பல்புகள் உடைந்துவிட்டால்என்ன செய்ய வேண்டும் ?

* உடனே அந்த அறையிலிருந்து வெளியேறி விட வேண்டும் . அந்த நெடி மூக்கில் ஏறக்கூடாது . பதினைந்து நிமிடங்கள் ஆனபின் அப்புறப்படுத்தலாம் . நொருங்கிக் கிடக்கும் கண்ணாடித்துகள்கள் காலில் படாமல் பார்த்துக் கொள்ளவும் .

* வேக்வம் க்ளீனரால் சுத்தப்படுத்தக்கூடாது . வேக்வம் உறிஞ்சப்பட்டால், அது உள்ளே ஒட்டிக்கொள்ளும். அதைத் திரும்ப உபயோகிக்கும் போது மெர்க்குரித் துகள்கள் மற்ற அறைகளுக்கும் பரவி , மிக மோசமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும் .

* கைகளில் ரப்பர் கிளவுஸ் போட்டுக்கொண்டு சாதாரண துடைப்பத்தால் சுத்தப்படுத்தலாம் .

* உடைந்தத் துகள்கள் மற்றும் திரவத்தை ஒரு பிளாஸ்டி பையில் சேகரித்து , ' சீல் ' செய்யவும் . சாதாரண குப்பைத் தொட்டியில் போடாமல் , கார்ப்பரேஷன் ' ரீசைக்ளீங் பின்' னில் கொண்டு சேர்த்தால் , அவர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்திவிடுவார்கள் .


கடந்த ஆண்டு இந்திய மாம்பழங்களை ஐரோப்பிய நாடுகள் தடை செய்தன . இவ்வாண்டு இந்திய பச...

Posted: 19 Jun 2015 06:20 AM PDT

கடந்த ஆண்டு இந்திய மாம்பழங்களை ஐரோப்பிய நாடுகள் தடை செய்தன . இவ்வாண்டு இந்திய பச்சை மிளகாய் சவுதி அரேபியா மற்றும் அமெரிக்கா நியு ஜெர்சி மாகாணத்திலும் தடை செய்துள்ளனர் . அதற்கு அவர்கள் கூறும் காரணம் பூச்சி மருந்து அதிகம் பயன்படுத்துவதால் அதை தடை செய்திருப்பதாக அந்த நாட்டு அரசாங்கங்கள் தெரிவிக்கின்றன
போகட்டும் விசயத்திற்கு வருவோம்
1. காலம் காலமாய் இயற்கை முறையில் விவசாயம் செய்த இந்திய விவசாயிகளை செயற்கை உரமும் பூச்சி கொல்லி மருந்தையும் தந்தது யார் ? இந்திய அரசும் பணவெறி பிடித்த அமெரிக்க , ஐரோப்பிய நிறுவனங்கள் தானே
2. எந்த நாட்டையும் விட மாம்பழம் & பச்சை மிளகாய் போன்றவை உயர்ந்த தரத்துடன் சுவையுடன் விளைச்சலை கொடுப்பது இந்திய மண்ணில் தானே
3. பெப்சியிலோ கோக்கிலோ கரப்பான் பூச்சி , இரும்பு துண்டு ஏன் மலம் இருந்தாலும் எடுத்து போட்டு விட்டு உறிஞ்சி குடிக்கும் இந்தியனே உனக்கு கொஞ்சமாவது சூடு சொரணை இருக்கா ?
4. நம் நாட்டு நீர் வளங்களையும் விளை நிலங்களையும் பன்னாட்டு நிறுவனத்துக்கும் இந்திய பணக்கார பொறுக்கி நிறுவனங்களுக்கும் தாரை வார்த்து விட்டு , கடன் சுமையால் விவசாயிகள் தற்கொலையை ஏசி அறையில் அமர்ந்து கொண்டு டிவியில் பார்த்து கொண்டு இருக்கும் ஆளும் வர்க்கமே, ஒட்டு மொத்தமாய் நாசமாய் போய்டுங்க
4. குழந்தைகளுக்கு பயன்படுத்தும் Johnson & Johnson தயாரிப்புகள் நறுமணத்திற்காக கெமிக்கல் சேர்க்கும் ஈவு இரக்கமற்ற காரியத்தை இது வரை யாரும் தட்டி கேட்கவில்லை
5. இந்தியா சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகள் ஆன பின்பும் தினசரி பயன்படுத்தும் பற்பசை, குளியல் சோப்பு , சலவை சோப்பு , சலவை தூள், வீட்டு உபயோக பொருட்கள் , உணவு பொருட்கள் பிஸ்கேட், ஜாம் , குளிர்பானம் , என பல எல்லாம் அமெரிக்க & ஐரோப்பிய நிறுவனங்களே பெரிய சந்தையை கைப்பற்றி இருக்கும் மர்மம் என்ன ?
6. மட்டமான , உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சீனா பொருட்களை அனுமதிப்பது யார் ?
7. இந்திய ரயில்வேயிலும் முக்கியமான மக்கள் கூடும் இடங்களிலும் பெப்சி , கோக் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்கள் மட்டுமே விற்க்கப்படுவதின் மர்மம் என்ன ?
8. இந்திய தயாரிப்புகளை வாங்க கவுரவம் பார்க்கும் இந்தியனே , பன்னாட்டு தயாரிப்புகள் பல குப்பை என தெரிந்தும் பளப்பளப்பான பேக்கிங் , கவர்ச்சியான விளம்பரம் மற்றும் வெள்ளைத்தோலுக்கு மயங்கி எவ்வளவு விலை கொடுத்தும் வாங்கத் தயாராக இருக்கும் இளிச்சவாயனே , உன்னுடைய அடிமை புத்தி எப்பொழுது தான் நீங்கும் ?
இது போல விழிப்புணர்வு கட்டுரைகளை பகிர்வதோடு , கடைப்பிடிக்கவும் செய்வோம்.

இனி எஸ்.டி.டி. அழைப்புகளுக்கு 0 அல்லது +91 போட தேவையில்லை! வாடிக்கையாளரின் வசதி...

Posted: 19 Jun 2015 05:20 AM PDT

இனி எஸ்.டி.டி. அழைப்புகளுக்கு 0 அல்லது +91 போட தேவையில்லை!

வாடிக்கையாளரின் வசதிக்காக வெளியூர் அழைப்புகளை எளிமையாக்கியுள்ளன முக்கிய செல்போன் நிறுவனங்கள். இதன்படி, இனி வெளியூர் அழைப்புகளுக்கு 0 அல்லது +91 போடத் தேவையில்லை.
தற்போது மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி எனப்படும், செல்போன் எண்ணை மாற்றாமல் மொபையில் ஆபரேட்டரை மட்டும் மாற்றிக்கொள்ள வகை செய்யும் வசதியை குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டுமே பயன்படுத்த முடியும்.
எடுத்துக்காட்டாக சென்னையில் இருந்து டெல்லி சென்று அங்கு மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி வசதியை பயன்படுத்த முடியாது. இதற்குக் காரணம் எஸ்.டி.டி. அழைப்புகளுக்கு 0 அல்லது +91 போடவேண்டியிருப்பது தான்.
எனவே வாடிக்கையாளர்களுக்கு இடையூறாக இருக்கும் இந்த தடையை நீக்கும் படி, தொலைத்தொடர்பு துறை, மொபைல் ஆபரேட்டர்களுக்கு உத்தரவிட்டது. அதோடு, வரும் ஜூலைக்குள் அதனை செய்து முடிக்கவும் காலக்கெடு விதிக்கப் பட்டது.
இதன்படி, ஏர்டெல், வோடபோன், எம்.டி.என்.எல். போன்ற முக்கிய நிறுவனங்கள் எஸ்.டி.டி. அழைப்புகளுக்கு 0 அல்லது +91 போட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை நீக்கியுள்ளது.
மற்ற நிறுவனங்களும் ஜூலை மாத முடிவிற்குள் இந்த தடையை நீக்கி விடும் என எதிர்பார்க்கப் படுகிறது.


Posted: 19 Jun 2015 04:20 AM PDT


#இந்தியா-வில் பேசப்படும் #மொழிகள் மொழி வரைபடம் 1859 ஆங்கிலேயர் வெளியிட்ட இந்திய...

Posted: 19 Jun 2015 03:04 AM PDT

#இந்தியா-வில் பேசப்படும் #மொழிகள்
மொழி வரைபடம் 1859
ஆங்கிலேயர் வெளியிட்ட இந்திய மொழிகள் வரைபடம்
இப்படத்தில் தமிழ்ப் பகுதியில் திருவனந்தபுரமும் மைசூரும் உள்ளன.


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


;) Relaxplzz

Posted: 19 Jun 2015 09:40 AM PDT

எங்கள் #கிராமத்து_கிச்சன்

Posted: 19 Jun 2015 09:38 AM PDT

எங்கள் #கிராமத்து_கிச்சன்


சும்மா... சும்மா... 5

:P Relaxplzz

Posted: 19 Jun 2015 09:21 AM PDT

நீ ஓவியம் வரையநினைத்தால் பறவைகளை வரையாதே சிறகடித்து பறந்துகொண்டேயிருக்கும்...

Posted: 19 Jun 2015 09:10 AM PDT

நீ ஓவியம்
வரையநினைத்தால்

பறவைகளை
வரையாதே
சிறகடித்து
பறந்துகொண்டேயிருக்கும்

பசுமையான
மரம் ஒன்றை வரைந்துபார்

அவைகளெல்லாம்
மீண்டும் உன்னிடமே
திரும்பிவிடும் இளைப்பாற

வாழ்க்கை என்பது
நாட்கள் சார்ந்ததல்ல
நொடிகளை சார்ந்தது
ஒருநொடி இன்பமாகும்
அடுத்தநொடி துன்பமாகும்

வாழ்க்கை என்பது
எதிர்பார்பது அல்ல
கொடுப்பது

நாணலைப்போல்
வளைந்து கொடு

புயலே வந்தாலும்
வெற்றி உனக்குதான்...
(y) (y)

- முயற்சியே விதை

Relaxplzz

தமிழகத்தின் பெரும் அதிர்ச்சி பாஸ் இது! தயவு செய்து முழுமையாக படியுங்கள் வில்லி...

Posted: 19 Jun 2015 08:30 AM PDT

தமிழகத்தின் பெரும் அதிர்ச்சி பாஸ் இது!

தயவு செய்து முழுமையாக படியுங்கள்

வில்லிவாக்கத்திலிருந்து கோயம்பேடு போக வேண்டியிருந்தது. மீட்டர் பொருத்தச்சொல்லி எடுக்கப்பட்ட நடவடிக்கை எப்படி இருக்குனு தெரிஞ்சுக்கலாம்னு கால் டாக்ஸியை தேர்வு செய்யாமல் ஆட்டோவில் போக முடிவு செய்தேன். முதலில் வந்தவர் 200 ரூபாய் என்றார். அடுத்து வந்தவர் 150 என்றார்.. "100 ரூபாய் தான் தர முடியும்" என்றேன். முடியாது என்று போய்விட்டார்.

"சரிதான்.. தமிழ் நாட்டு ஆட்டோக்காரர்கள் நாய் வால் மாதிரி.. திருத்த முடியாது.." என்று நினைத்தபோது, ஒரு ஆட்டோ வந்தது. "கோயம்பேடு போகணும்.. எவ்வளவு.." என்றேன் சலிப்போடு..'

"மீட்டர் சார்ஜ் தான்.. உக்காருங்க.." என்று அந்த ஆட்டோ டிரைவர் கூறியபோது இன்ப அதிர்ச்சியில் எனக்கு மயக்கமே வந்துவிடும்போலிருந்தது.
கோயம்பேடு போய் சேரும்வரை மீட்டரையே கவனித்துக் கொண்டிருந்தேன்.. வெறும் 69 ரூபாய் தான் மீட்டரில் வந்தது. பாவிகளா.. 200 ரூபாய்.. 150 ரூபாய் என்று ஆட்டோ கட்டண கொள்ளையர்கள் கேட்ட தொகைக்கும் மீட்டரில் விழுந்த தொகைக்கும் எவ்வளவு வித்தியாசம். இவ்வளவு நாளா எங்களை எவ்வளவு கொள்ளையடிச்சிருக்கீங்க.. இப்போவாவது பூனைக்கு மணி கட்டிருக்காங்களேனு சந்தோசமா இருந்துச்சு.

மீட்டர் போட்டு ஓட்டிய அந்த டிரைவரின் கையைப்பிடித்து, "இப்படியே ஓட்டுங்க.. நிறையபேர் பஸ்ஸுக்கு காத்திருக்காம உங்க ஆட்டோல வந்து ஏறுவாங்க.." என்று வாழ்த்து சொல்லிவிட்டு சந்தோசமாக கூடுதலாக பணம் கொடுத்தேன்.

அப்போது , "நாங்க நேர்மையா வண்டி ஓட்ட தான் ஆசைப்படுறோம் சார். ஆனா தொடர்ந்து மீட்டர் போட்டு ஓட்டுறது எங்க கைல இல்ல. இப்போ வெறும் ரெண்டு மூணு சதவீதம் பேர் தான் இப்படி ஓட்டுறோம். மீதிபேர் பழையபடிதான் மீட்டர் போடாம ஓட்டுறாங்க. இதை அதிகாரிகள் கடுமையா கண்காணிச்சாங்கனா எல்லாரும் மீட்டர் போட்டு ஓட்டுவாங்க.. ஆனா அப்படி செய்யலனா எங்களையும் அந்த ஆட்கள் கெடுத்துருவாங்க.. உண்மையிலே நாங்க எல்லாரும் மீட்டர் போட்டு ஓட்டுனோம்னா நிக்க நேரம் இருக்காது.. அவ்வளவு சவாரி வரும்.. ஆனா எங்க ஆளுங்க பண்ற அட்டகாசத்தால பலபேர் கால் டாக்ஸி புக் பண்ணிட்டு போய்டுறாங்க.." என்றார் அவர் வருத்தமாக ..

இவர்களைப்போன்றவர்களை நேர்மையாக மீட்டர் போட்டு ஓட்டுவதற்கு நாமும் உதவ வேண்டும். மீட்டர் போடாமல் இஷ்டத்திற்கு பணம் கேட்கும் ஆட்டோக்களில் ஏறாமல், உடனடியாக 044-26744445, 044-24749001 என்ற எண்களுக்கு ஆட்டோ நம்பரை குறிப்பிட்டு புகார் தெரிவியுங்கள்.. நடவடிக்கை எடுப்பார்கள்.. ( இந்த நம்பரை உங்கள் செல்போனில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்)
நாலுபேர் மீது நடவடிக்கை எடுக்கும்போதுதான் மற்ற ஆட்டோ கட்டண கொள்ளையர்களும் வழிக்கு வருவார்கள்.

Relaxplzz


டைட்டானிக் பற்றி தெரியாத தகவல்கள் டைட்டானிக் படம் பற்றி தான் அனைவரும் பேசுகிறோ...

Posted: 19 Jun 2015 08:10 AM PDT

டைட்டானிக் பற்றி தெரியாத தகவல்கள்

டைட்டானிக் படம் பற்றி தான் அனைவரும் பேசுகிறோமே தவிர நிஜ டைட்டானிக் கப்பல் பற்றி நம்மில் எத்தனை பேர் தெரிந்து கொண்டோம் என்று தெரியவில்லை. இந்தக் கட்டுரை எழுதும் வரை எனக்கும் எதுவும் தெரியாது இதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் இந்தக் கப்பல் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆவலில் எழுதுகிறேன். இதன் மூலம் நானும் பல விசயங்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது.

படிக்க ஓரளவு எளிமையாக கொடுக்க முயற்சிக்கிறேன்.

உலகின் முதல் சொகுசுக் கப்பலான டைட்டானிக்கின் பெயர் RMS TITANIC. இங்கிலாந்தின் மிகப்பெரிய கப்பல் நிறுவனமான White Star Line நிறுவனம் இதைக் கட்டியது.
கப்பல் கட்டும் பணி 1909 மார்ச் மாதம் 31 ம் தேதி துவங்கி 1911 மே மாதம் 31 ம் தேதி கட்டி முடிக்கப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு வருடம் கட்டப்பட்ட இந்தக்கப்பலின் எடை 46,328 டன் ஆகும்.
Southampton நகரில் (இங்கிலாந்து) இருந்து கிளம்பி Cherbourg, France & Queenstown, Ireland வழியாக நியூயார்க் சென்றடைவதாக திட்டமிடப்பட்டது.

டைட்டானிக் கப்பல் பெண் பாலில் தான் (She) அழைக்கப்படுகிறது அதாவது இந்தக்கப்பலை பெண்ணாக கருதுகிறார்கள்.
இந்தக் கப்பல் A முதல் G வரை பல அடுக்குகளாக கட்டப்பட்டது. மேல் (A) அடுக்கில் முதல் வகுப்பு பயணிகளான செல்வந்தர்களுக்கும் அதன் கீழே வரும் அடுக்குகள் அதற்கு கீழ் வகுப்புகளான இரண்டு, மூன்று வகுப்பு பயணிகளுக்குமானது. மூன்றாம் வகுப்பு பயணிகள் அறை டார்மிட்டரி என்று அழைக்கப்படும் பல அடுக்குகளைக் கொண்ட படுக்கைகளால் ஆனது. (டைட்டானிக் படத்தில் ஜேக் ன் அறை)

இந்த சொகுசுக் கப்பல் முக்கியமாகப் பணக்காரர்களுக்காகவே கட்டப்பட்டது. இதில் உள்ள ஒரு அடுக்கின் பெயரான Promenade Deck (A Deck) ல் நீச்சல்க் குளம், சொகுசான உணவருந்தும் இடம், படிக்கும் எழுதும் இடம், உடற்பயிற்சிக் கூடம், விளையாட்டு இடம் மற்றும் புகைபிடிக்கும் இடம் என்று பார்த்துப் பார்த்துக் கட்டப்பட்டது. இதில் பயன்படுத்தப் பட்ட பொருட்கள் சாமானியர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. புரியும் படி கூறவேண்டும் என்றால் சாதா விடுதியில் தங்கி இருந்தவர் ஐந்து நட்சத்திர விடுதிக்கு சென்றால் எப்படி மலைத்துப் போவாரோ அது போல இருக்கும். முதல் வகுப்புப் பயணிகள் தங்களுடன் செவிலியர் உதவியாளர்கள் ஆகியோரை துணைக்கு அழைத்து வர அனுமதிக்கப்பட்டனர்.

இதில் இங்கிலாந்து அமெரிக்க நாடுகளின் மிகப்பெரிய பணக்காரர்கள் பெரும்பாலும் சென்றனர் இதில் அமெரிக்க மில்லியனர் John Jacob Astor IV மற்றும் இவரது 18 வயது கர்ப்பமான மனைவி பிரசவத்திற்காக நியூயார்க் சென்றார்கள். John Jacob Astor IV தான் இந்தக்கப்பலில் மிகப்பெரிய பணக்காரர். இவர் ஆண் என்பதால் படகில் ஏற அனுமதிக்கப்படவில்லை பின் 1912 ஏப்ரல் 22 ம் தேதி இவருடைய இறந்த உடலுடன் இருந்த பல ஆயிரம் டாலர்கள் பணமும் கண்டு எடுக்கப்பட்டது. RMS Carpathia கப்பலால் காப்பற்றப்பட்ட இவரது மனைவி இதன் பிறகு 1916 ல் மறுமணம் செய்து கொண்டார் அதன் பிறகு அவரை விவாகரத்து செய்து விட்டு இன்னொருவரை 1933 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

மூன்றாம் வகுப்பில் தான் அதிக பயணிகள் இருந்தார்கள் இவர்கள் பெரும்பாலும் குடியேறிகள், அமெரிக்கா சென்று வேலை தேடி தங்கள் வாழ்க்கையைத் தொடங்க திட்டமிட்டு இதில் வந்தவர்கள். பல நாட்டை சேர்ந்தவர்களும் இதில் இருந்தனர். மூன்றாம் வகுப்பில் இருந்த இரண்டு மாதக் குழந்தையான Millvina Dean தான் இருந்ததிலேயே வயது குறைந்த பயணி!! இவர் தன்னுடைய 97 ம் வயதில் 2009 ஆண்டு காலமானார். டைட்டானிக் விபத்தில் பிழைத்தவர்களில் இவர் தான் கடைசி நபர். ஒவ்வொரு அடுக்கிற்க்கும் கதவு இருக்கும் இதனால் ஒரு வகுப்பு பயணிகள் மற்ற வகுப்பு பயணிகளுடன் கலக்காமல் இருக்க முடியும். விபத்து ஏற்பட்ட போது கதவு மூடி இருந்ததால் சிலர் வெளியே வர முடியாமல் மாட்டிக்கொண்டனர்.

கப்பலில் செல்லக் கட்டணம் தோராயமாக மூன்றாம் வகுப்பிற்கு $36 இரண்டாம் வகுப்பிற்கு $66 முதல் வகுப்பிற்கு $125 மற்றும் டீலக்ஸ் வகுப்பிற்கு $4500 ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. நூறு வருடம் முன்பு 4500$ என்றால் தற்போது கணக்குப் போட்டுப் பார்த்தால் தலை சுற்றுகிறது. அந்தக்காலத்தில் ஒரு வீட்டையே 1000$ க்கு வாங்க முடியுமாம்!

விபத்து ஏற்ப்பட்டால் தப்பிக்க 20 படகுகள் (Life boats) மட்டுமே இருந்தன இதில் 16 படகுகள் 65 பேரையும் 4 படகுகள் 47 பேரையும் கொள்ளும் அளவு கொண்டது 1100 – 1200 பேர் தப்பித்து இருக்க முடியும் ஆனால் இதில் 710 பேர் மட்டுமே தப்பிக்க முடிந்தது. முதல் வகுப்பு பயணிகள் படகில் மிகக் குறைவானவர்களே இருந்தனர் அதோடு தனது படகில் ஏறி படகை கவிழ்த்து விட்டால் என்ன செய்வது என்று பலரை படகில் ஏற இருந்தவர்கள் அனுமதிக்கவில்லை. இந்த விபத்திற்குப் பிறகே பாதுகாப்பு விசயத்தில் அனைவரும் அதிக கவனம் செலுத்தினார்கள். உயிர்காக்கும் படகுகளின் முக்கியத்துவம் அதிகரிக்கப்பட்டது.

படகில் ஏற முடியாதவர்கள் அனைவரும் தண்ணீரில் விழுந்து குளிரில் சில நிமிடங்களில் விரைத்து இறந்து விட்டார்கள். கடுமையான பனி (−2°C) அப்போது நிலவியது. டைட்டானிக் படத்தில் நீங்கள் கவனித்து இருக்கலாம் ஜேக் தண்ணீரில் விழுந்த உடனே அவரது தலை முடியில் இருந்த நீர் பனிக்கட்டியாக மாறி இருக்கும். நம்மால் பனிக்கட்டியையே சில நொடிகள் கூட கையில் வைத்து இருக்க முடியாது அப்படி இருக்கும் போது நம் உடல் முழுவதும் இதைப் போல குளிர்ச்சியில் இருந்தால்!…

தப்பித்துச் செல்ல குழந்தைகளுக்கும் பெண்களுக்குமே முன்னுரிமை வழங்கப்பட்டது எனவே இந்தக்கப்பலில் சென்ற பெரும்பான்மையான ஆண்கள் இறந்து விட்டார்கள். அப்படியும் தப்பித்த ஆண்கள் நாட்டில் உள்ளவர்களால் கடும் விமர்சனத்திற்கு ஆளாகினர் காரணம் பல குழந்தைகள் பெண்கள் படகு கிடைக்காமல் இறந்து விட்டனர் அப்படி இருக்கும் போது அவர்களை காப்பாற்றாமல் கோழை போல இவர்கள் நடந்து கொண்டதால் பலரால் அதன் பிறகு சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டு இகழப்பட்டனர்.

மூன்று என்ஜின்களைக் கொண்ட இதில் இரண்டு எஞ்சின்கள் இணைந்து 30,000 குதிரை சக்தியை (Horse Power) தரவல்லது. நிலக்கரி மூலம் வேலை செய்யும் Turbine மேலும் 16,000 குதிரை சக்தி வேகத்தை தரவல்லது மொத்தம் 46,000 குதிரை சக்தி. இரண்டு எஞ்சின்கள் 720 டன் எடை கொண்டதாகும். இதை இயக்குவதில் 176 பணியாளர்கள் பகுதி நேர வேலையில் (24/7) பயன்படுத்தப்பட்டார்கள். அழுக்கு, வெப்பம் அதிகம் உள்ள இடம் என்பதால் இங்கு பணி புரிவது என்பது மிகச் சிரமமான ஒன்றாகும். இதில் தினமும் வரும் 100 டன் சாம்பல் கடலில் கொட்டப்பட்டது.

கப்பலின் வேகம் மணிக்கு 39 கிலோ மீட்டர்
முதல்வகுப்பில் 739 பயணிகளும், இரண்டாம் வகுப்பில் 674 பயணிகளும், மூன்றாம் வகுப்பில் 1026 பயணிகளும் இவர்களோடு 900 பணியாளர்களும் பயணம் செய்ய முடியும் ஆக மொத்தம் 3, 339 பேர் பயணம் செய்யலாம் ஆனால் இதில் 2,224 நபர்கள் மட்டுமே (900 ஊழியர்களும் சேர்த்து) பயணம் செய்தார்கள். முன்பே குறிப்பிட்டபடி இந்தக்கப்பலில் மூன்றாம் வகுப்பு பயணிகளே அதிகம் இருந்தனர். அப்போது ஒவ்வொரு குடும்பமும் மிகப்பெரியதாக இருக்கும் 7 குழந்தைகள் எல்லாம் சகஜமாக பெற்றுக்கொள்வார்கள். இவ்வாறு வந்தவர்கள் பலர் குடும்பத்தோடு இறந்து போனார்கள்.

டைட்டானிக் பயணிகளை மட்டுமே ஏற்றிச் செல்ல பயன்படாமல் கார்கோ என்று அழைக்கப்படும் சரக்குப் பொருட்களையும் ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்டது. இதில் பல டன் பொருட்கள் சரக்குகளாக கொண்டு செல்லப்பட்டன. கடிதங்கள் கொண்டு செல்லவும் பயன்படுத்தப்பட்டது.

இதில் பயன்படுத்தப்பட்ட தந்தி முறை சாதனங்கள் 1000 மைல் வரை தகவல்களை அனுப்ப வல்லது.
ஏப்ரல் 14 இரவு 11 : 40 மணிக்கு டைட்டானிக் 220 அடி நீள பனிப்பாறையில் மோதி மூழ்கத் தொடங்கி ஏப்ரல் 15 விடியற்காலை 2 : 20 மணிக்கு முற்றிலுமாக 12,415 அடி ஆழத்தில் (3,784 மீட்டர்) மூழ்கியது. விபத்து நடந்தவுடன் உதவி கோரிய போது அருகில் இருந்தது கப்பல் RMS Carpathia ஆகும், தூரம் சுமார் 93 கிலோ மீட்டர். இது வர 4 மணி நேரம் ஆகும் என்று கணக்கிடப்பட்டது. RMS Carpathia சரியாக 4 : 10 மணிக்கு டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்திற்கு வந்து படகில் பிழைத்தவர்களை காப்பாற்றியது. படகில் இருந்தவர்கள் ஒரு சிலர் குளிர் தாங்காமல் இறந்து விட்டார்கள். இந்த விபத்தில் மொத்தமாக 1,514 பேர் இறந்து விட்டார்கள் பணியாளர்களுடன் சேர்த்து 710 பேர் உயிர் பிழைத்தார்கள்.

கேப்டன் Edward John Smith இருப்பதிலேயே மிகுந்த அனுபவம் பெற்றவராக விளங்கி இருந்தார். கப்பல் மூழ்கும் போது கடைசியாக இவர் என்ன செய்து கொண்டு இருந்தார் என்று பல்வேறு ஊகங்கள் கூறப்படுகின்றன. செய்தி அறையில் பரபரப்பாக இருந்தார் என்றும், அறையினுள் அமைதியாக சென்று விட்டார் என்றும், தண்ணீரில் குதித்து ஒரு குழந்தையை காப்பாற்ற முயற்சித்தார் என்றும் பல்வேறு செய்திகள் உலவுகின்றன. இவருக்கு இங்கிலாந்தில் சிலை வைக்கப்பட்டு கவுரப்படுத்தப்பட்டுள்ளது.
மூழ்க வாய்ப்பே இல்லை கடவுளாலும் எதுவும் செய்ய முடியாது என்று கருதப்பட்ட டைட்டானிக்கின் முதல்ப் பயணமே கடைசிப்பயணமாக ஆகிப் போனது மிகவும் சோகமான விசயமாகும். 10 ஏப்ரல் 1912 அன்று புறப்பட்டு 15 ஏப்ரல் 1912 மூழ்கிய டைட்டானிக் மொத்தமாக பயணம் செய்தது நான்கு நாட்கள் மட்டுமே!

மனிதன் என்னதான் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எதை உருவாக்கினாலும் இயற்கை முன்பு நாம் ஒன்றுமில்லை என்று நம் அனைவருக்கும் இயற்கை உணர்த்திக்கொண்டே வருகிறது. அதில் விலை உயர்ந்த பாடமாக மனித குலத்திற்கு இந்த விபத்து அமைந்து விட்டது.

Relaxplzz

உன் கை ரேகையை பார்த்து உன் எதிர்காலத்தை நம்பிவிடாதே...!!!" ஏனென்றால் கை இல்லாதவ...

Posted: 19 Jun 2015 07:50 AM PDT

உன் கை ரேகையை பார்த்து
உன் எதிர்காலத்தை நம்பிவிடாதே...!!!"

ஏனென்றால் கை இல்லாதவனுக்கும்
எதிர்காலம் உண்டு...!!!"


Posted: 19 Jun 2015 07:17 AM PDT


நம் பால்யகாலத்து பள்ளிக்கூட Group Photoவை பார்த்தால், #நிச்சயமாய் அதில் ஒரு மாண...

Posted: 19 Jun 2015 07:10 AM PDT

நம் பால்யகாலத்து பள்ளிக்கூட Group Photoவை பார்த்தால்,

#நிச்சயமாய் அதில் ஒரு மாணவன் தவறியிருப்பான்.
:(

#நிச்சயமாய் ஒரு மாணவனின் பெயர் மறந்துபோயிருக்கும்.
;-)

#நிச்சயமாய் ஒரு மாணவன் கண்மூடியபடியேயிருப்பான்.
:P

#நிச்சயமாய் நம் மனங்கவர்ந்த பெண்ணொருத்தி அதில் சிரித்துக்கொண்டிருப்பாள்.


#நிச்சயமாய் ஃபோட்டோவைப்பார்த்ததும் நீங்கள் அழுகையும் சிரிப்புங்கலந்த உணர்வுக்காளாவீர்கள்.

:) :)

- ஃபீனிக்ஸ் பாலா

Relaxplzz

திடீர்ன்னு ஒரு கல்யாணத்துக்குள்ள நுழைஞ்சிட்டோம்னா, பொண்ணு மாப்ளைய மட்டும் படக்கு...

Posted: 19 Jun 2015 06:10 AM PDT

திடீர்ன்னு ஒரு கல்யாணத்துக்குள்ள நுழைஞ்சிட்டோம்னா, பொண்ணு மாப்ளைய மட்டும் படக்குன்னு கண்டுபுடிச்சிடலாம். ஆனா, மத்த எல்லாரையும் யார் யாருன்னு அவங்க செய்கைகள வச்சே எப்படி கண்டுபுடிக்கிறதுங்குறதத் தான் இப்போ பாக்கப் போறோம்.

1. கல்யாண மேடையில, ஃபுல் மேக்கப்புல பாத்த உடனே பளிச்சின்னு தெரியிறது பொண்ணுதான். ஆனா அந்தப் பொண்ண விட அதிகமா மேக்கப் போட்டுக்கிட்டு ஒண்ணு அந்த ஸ்டேஜ்ல சுத்திக்கிட்டு இருந்தா அது தான் பொண்ணோட தங்கச்சி.

2. கல்யான வீடியோ கவரேஜ்ல எல்லா ஃப்ரேம்லயும் பொண்ணும் மாப்ளையும் இருப்பாங்க. அவங்களுக்கு அடுத்த படியா, எல்லா ஃப்ரேம்லயும் ரெண்டு மூணு தங்க சங்கிலிகள் தெரியிறமாதிரி நிக்கிற ஒரு பொண்ணு இருக்கும். அது வேற யாரும் இல்லை. பையனோட அக்கா.

3. ஆளுக்கும் போட்டுருக்க ட்ரஸ்ஸுக்கும் சம்பந்தமே இல்லாம, ஆனா மாப்ளைக்கு ஈக்குவலா ஒருத்தன் கோட் சூட்டெல்லாம் போட்டுக்கிட்டு டம்மியா, ஸ்டேஜ்ல நின்னுகிட்டு இருப்பான். அது வேற யாரும் இல்லை. மாப்ளையோட அக்கா புருஷன். அந்தக் கோட்ட, அவர் கல்யாண ரிஷப்ஷனுக்கு அப்புறம் இப்பதான் போட்டுருப்பாரு.

4. இன்னொருத்தன் மாப்ள மாதிரியே வேஷ்டி சட்டையெல்லாம் போட்டுக்கிட்டு, ஸ்டேஜ்ல நிக்காம, டான் மாதிரி அங்க இங்க ஓடுறது உடியாருறது வர்றவங்கள கவனிக்கிறது, ஸ்டேஜ்ல ஏறுறது இறங்குறதுன்னுரொம்ப ஆக்டிவா ரொம்ப சந்தோஷமா திரிஞ்சிட்டு இருப்பான். அவந்தான் மாப்ளையோட தம்பி. ரூட்டு கிளியரான சந்தோஷத்துல தலைகால் புரியாம சுத்திக்கிட்டு இருப்பான்.

5. மாப்ளைக்கு லைட்டா வேர்த்தாலோ, வாழ்த்த வர்றவங்க கூட்டத்துல பொட்டுவைக்கும் போது லைட்டா அங்க இங்க அப்பிட்டாலோ, மின்னல் மாதிரி ஒருத்தன் ஒரு கர்ச்சீப்ப வச்சிக்கிட்டு மாப்ள மூஞ்ச தொடைச்சிட்டே இருப்பான். அவன் மாப்ளையோட ஸ்கூல் ஃப்ரண்டா இருக்கும். மொதநாள் நைட்டு பேச்சிலர் பார்ட்டில மூச்சுத் தெணறத் தெணறக் குடிச்சவனும் அவனாத்தான் இருக்கும்

6. கல்யாணம்5 முடிஞ்சி ஒரு பத்து நிமிஷம் கழிச்சி, "இய்ய்ய்யாய்…எவண்டா அவன் நா வர்றதுக்கு முன்னால தாலியக் கட்டுனது.." ன்னு மண்டபத்தோட வாசல்ல ஒருத்தன் ஃபுல் போதையில கத்திக்கிட்டு இருப்பான். அவனை யாருமே மதிக்காம, ஆனா ஒரே ஒரு அம்மா மட்டும் போய் அவன உள்ள கூப்டாங்கன்னா அவன் தான் மாப்ளையோட தாய் மாமன். பத்து மணி கல்யானத்துக்கு பதினொன்னே முக்காலுக்கு வருவாரு. ஆனா கல்யாணம் அவர் வந்ததுக்கப்புறம் தான் நடக்கனும்னு வேற எதிர்பாப்பாறு. அப்போ அவனப் போய் கூப்டுறது யாருன்னு உங்களுக்கே தெரியும்.

7. கூட்டத்துல உக்காந்துருக்க எல்லாரும் "எப்பப்பா… கல்யாணம் முடியும்.. எப்பப்பா சோறு போடுவாய்ங்க" ன்னு ஒரே ஆவலோட உக்கார்ந்திருக்கும்போது, ஒரே ஒரு அம்மா மட்டும் வச்ச கண்ணு வாங்காம கல்யாணப் பொண்ணையே மொறைச்சி பாத்துகிட்டு இருக்கும். அப்டி இருந்தா. அது பொண்ணோட அப்பா வழி அத்தைன்னும், அவங்க பையனுக்கு இந்தப் பொண்ணை கேட்டு, பொண்ணு வீட்டுல இல்லைன்னு சொல்லிட்டாங்கன்னும் நீங்களே கண்டுபுடிச்சிடலாம்.

8. மேமாசம், பீக் அவர்ல சென்னை சிட்டி பஸ்ல ட்ராவல் பண்ண மாதிரி ஒரு களைப்போட, ஒரு நிமிஷம் கூட உக்காராம, ஸ்டேஜ்ல கல்யாணம் முடிஞ்சிருச்சா இல்லையான்னு கூட கவனிக்காம எல்லாரையும் போய், "வாங்க வாங்க.. சாப்டு போங்க" ன்னு ஒருத்தர் கூப்டுட்டு இருந்தா அவர்தான் பொண்ணோட அப்பா.

9. பொண்ணுக்கு எத்தனை சவரன் நகை போட்டுருக்காய்ங்க, யார் யார் என்ன செய்றாங்கங்குற விஷயத்த, பையனோட அம்மா அப்பாவ விட, இன்னொரு முக்கியமான கேரக்டர் ரொம்ப கூர்மையா, திருட்டுப்பய நகைய கவ்வ போறப்போ பாக்குற மாதிரி ஒண்ணு பாத்துக்கிட்டு இருக்கும். அதுவேற யாரும் இல்லை. பையனோட அண்ணி.. எங்க நம்மள விட அதிகமாகிதிகமா நகையப் போட்டுவிட்டு நம்மள டம்மி ஆக்கிறப்போறாய்ங்களோங்குற பீதியிலயே இருக்கும்.

10. அந்த கல்யாணக் கூட்டத்துலயே, ஒரே ஒரு குரூப்பு மட்டும், அந்த கல்யணத்துக்கும் அவங்களுக்கும் எந்த சம்பந்தமுமே இல்லாத மாதிரி, தனியா ஒரு மீட்டிங் போட்டுக்கிட்டு இருக்கும். அதுதான் பொண்ணோட அப்பாவோட சொந்தக்காரய்ங்க.

11.கல்யாணமெல்லாம் முடிஞ்ச உடனே அரக்க பரக்க ஒரு கும்பல், வீங்கிப்போண மூஞ்சோட, ஒழுங்கா சீவாத தலையோட வேக வேகமா வந்து மாப்ளைக்கும் பொண்ணுக்கும் வெறும் கைய மட்டும் குடுப்பாய்ங்க. அவிங்க வேற யாரும் இல்லை.மாப்ளையோட ஆஃபீஸ் மேட்ஸோ இல்லை காலேஜ் மேட்ஸோ. ரூம்போட்டு விடியகாலம் வரைக்கும் குடிச்சிட்டு இப்பதான் எழுந்து வர்றாய்ங்கன்னு அர்த்தம்.

12. அதே கல்யாணத்துல, யாரு கூடவும் பேசாம, ஒரு young, Husband & wife, அவங்க குழந்தைய விளையாட விட்டுட்டு, அதுக்கு ஐஸ்கிரீம் வாங்கி சாப்ட குடுத்துகிட்டு, கையில் ஒரு கேமராவ வச்சிகிட்டு சீட்டுல உக்காந்த படியே ஸூம் பண்ணி மாப்ளைய ஃபோட்டோ எடுக்குறதும், அப்பப்போ மாப்ளைய பாத்து கைகாட்டுறதுமா இருப்பாய்ங்க. அவனும் வேற யாரும் இல்லை. மாப்பிளையோட மச்சான்..

Relaxplzz

வாக்கிங் ஒரு சிறந்த உடற்பயிற்சி என்பதை நாம் அறிவோம். சில முக்கிய தகவல்கள். 1. ந...

Posted: 19 Jun 2015 05:10 AM PDT

வாக்கிங் ஒரு சிறந்த உடற்பயிற்சி என்பதை நாம் அறிவோம். சில முக்கிய தகவல்கள்.

1. நடக்கும் போது, ஒரு பக்கம் தலைய சாச்சி கிட்டு, செல்போன்ல பேசிகிட்டு நடக்க வேண்டாம். முடிந்தால் செல்போனை வீட்டுல வச்சிட்டு வாங்க. தலையை உயர்த்தி, வயிற்றின் தசைகளை மென்மையாக உள்ளிழுத்து, கைவீசம்மா கைவீசு என்று நடக்க வேண்டும்.

2. சரியான நடைப்பயிற்சியில் வியர்ப்பது இயல்பு. எனவே இறுக்கமான, பாலியெஸ்டர் ஆடைகளைத் தவிர்க்கவும். உடல் சோர்ந்து போகாமல், வியர்வையை உறிஞ்ச ஏதுவாக, தள‌ர்வான காட்டன் ஆடைகளை அணியவும்.

3. கால்களை மூடும் விதமாக, மென்மையாக பாதங்களை இறுக்காமல் ஷீ அணிந்து கொள்வது நல்லது.

4. மூளையில் ஏற்படும் செரோடினின் பகிர்ந்தளிப்பு, உடலில் என்சைம்களின் சுரப்பு...உடலுக்கு உற்சாகத்தை கொடுக்கும். இதயத் துடிப்பு சீராகி, ப்ரோஸ்டோகிளான்டின்களின் சுரப்பு மூலம், மூட்டுகளுக்கு தேவையான லூப்ரிகேஷன் கிடைத்து, தசைகளின் இலகுவாகி, உடலுக்கு தேவையான சக்தி சேமித்து வைக்கப் பட்டுள்ள கார்போஹைட்ரேட்டிடமிருந்து எடுத்துக் கொள்ளப் படும்.

5. பிரிஸ்க் வாக் மூலம், இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் அதிகரித்து, ரத்த ஓட்டம் மூலம் ஆக்சிஜன் சுழற்சி ஏற்பட்டு, சுமார் 6 கலோரிகள் செல்வழிக்கப் படிகிரது.

6. முதல் 5 நிமிடங்களில் உடலுக்கு உற்சாகம், 10 முதல் 20 நிமிடங்களில் உடல் வெப்பமடைதல், தோலுடன் சேர்ந்துள்ள ரத்தக் குழாய்கள் விரிவடைந்து வெப்பம் வெளியேறி, உடல் வியர்க்க துவங்கும். சக்தியளிக்கும் ஹார்மோன்களின் சுரப்பு, சுவாசம் அதிகரிப்பு நடைபெறும்.

7. சுமார் 30 முதல் 45 நிமிடங்களில் உடல் லேசாகி, கொழுப்பு சத்து எரிந்து, இன்சுலின் சுரப்பு சீராகும்.

8. ஒரு மணி நேரத்தில், நமது நடையின் வேகத்தை குறைக்க, இதயத் துடிப்பு சீராகி, வியர்வைகள் அடங்கி, அதன் பின்னரும் ஒருமணி நேரம் கலோரிகள் செலவாகும் என்பது மருத்துவ ரீதியான உண்மை.

9. அதிக பருமனானவர்கள், இதயம் பலகீனமானவர்கள், ஆஸ்த்துமா பிரச்சினைகள் உள்ளவர்கள், எலும்பு மர்றும் மூட்டு நோய்களால் பாதிக்கப் பட்டவர்கள்....அதற்கேற்ப மருத்துவ ஆலோசனை பெர்று நடை பயிற்சியை தொடரலாம். இல்லையெனில் சிக்கல் தான்.

Relaxplzz

உங்கள் மனைவியை புரிந்து கொள்ள, அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள் மனைவி : நமக்கு...

Posted: 19 Jun 2015 04:10 AM PDT

உங்கள் மனைவியை புரிந்து கொள்ள, அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள் மனைவி : நமக்கு வேணும்.
அர்த்தம் : எனக்கு வேணும்.

மனைவி ; உங்க முடிவு.
அர்த்தம் : நான் சொல்றதுதான் கரெக்ட், அதுக்கப்புறம் உங்க இஷ்டம்.

மனைவி : உங்களுக்கு என்ன இஷ்டமோ அதை செஞ்சிக்கங்க..
அர்த்தம் : பின்னாடி எப்படியும் என்கிட்டதான் வருவீங்க.

மனைவி : தாராளமா... செய்யுங்க.
அர்த்தம் ; எனக்கு இஷ்டமில்லை

மனைவி : எனக்கு ஏதும் வருத்தமில்லை.
அர்த்தம் : வருத்தமாயிருக்கிறேன்

மனைவி : நீங்க ரொம்ப மேன்லியா இருக்கீங்க..
அர்த்தம் : முதல்ல ஷேவ் பண்ணுடா வெண்ணை.

மனைவி : இந்த கிச்சன் ரொம்ப சின்னதாயிருக்கு.
அர்த்தம் : வேற வீடு பாக்கணும்

மனைவி : உங்களுக்கு என்னை பிடிக்குமா..?
அர்த்தம் : பெரிசா ஏதோ கேட்க போறேன்.

மனைவி : என்னை உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்?
அர்த்தம் : உங்களுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை செஞ்சிருக்கேன்.

மனைவி : நான் குண்டாயிட்டேனாப்பா?
அர்த்தம் : அப்படியில்லை, அழகாயிருகேன்னு சொல்லு

மனைவி : சரி.
அர்த்தம் : நோ..

மனைவி : நோ.
அர்த்தம் : சரி.

மனைவி : உங்களுக்கு புது ரெஸிபியில செஞ்ச இந்த டிபன் பிடிச்சிருக்கா?
அர்த்தம் : பழகிக்குங்க

மனைவி ; ஒண்ணுமில்லை.
அர்த்தம : நிறைய இருக்கு.

மனைவி : நான் அதை பத்தி பேச விரும்பலை.
அர்த்தம் : இப்படி ஏத்திவிட்டுத்தான் பேச ஆரம்பிக்கணும்.

அவ்ளோதான் இத புரிஞ்சுகிட்டா வாழ்க்கை வண்ண மயம் :P :P

Relaxplzz

வயிற்று நோயும், தேனின் பயனும் சித்த மருத்துவத்தில் தேனின் பயன் இன்றியமையாதது. இ...

Posted: 19 Jun 2015 02:10 AM PDT

வயிற்று நோயும், தேனின் பயனும்

சித்த மருத்துவத்தில் தேனின் பயன் இன்றியமையாதது. இயற்கை தந்த வரப்பிரசாதத்தில் தேனும் ஒன்று. அதன் பயன்கள் பல. உணவாகவும், மருந்தாகவும் விளங்கும் தேனின் பயன்களைப் பார்ப்போம்....

* கடுமையான வயிற்று வலி உள்ளவர்கள்பின்வருமாறு செய்ய வேண்டும். கொதிக்கும் சூடுள்ள ஒரு கப் நீர் எடுத்து ஒரு டீ ஸ்பூன் தேனை அதனுடன் கலந்து ஆற்ற வேண்டும். தாங்கக் கூடிய சூட்டுடன் அந்த நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக அருந்த வேண்டும். அருந்தினால் வயிற்றுவலி உடனே நின்று விடும். ஜீரணக் கோளாறுகளும் குணமாகும்.

* வயிற்றில், குடலில் புண் இருக்கிறதா? உணவு உண்பதற்கு இரண்டுமணி நேரத்திற்கு முன்பு இரண்டு டீ ஸ்பூன் தேன் அருந்த வேண்டும். இப்படி பத்துத் தினங்கள் அருந்த வேண்டும். பிறகு 10 தினங்கள் மேற்சொன்னாறு தேன் அருந்த வேண்டும். குடற்புண்கள் ஆறி விடும்.

* வயிற்றில் எரிச்சல், வயிற்றில் இரைச்சல் இருந்தால், உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் 1 டீ ஸ்பூன் தேனை நீரில் கலந்து அருந்த வேண்டும். தொடர்ந்து சில நாட்களுக்கு அருந்தினால் வயிற்றில் ஏற்படும் எரிச்சல், இரைச்சல் ஆகியன குணமாகிவிடும்.

* இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். அத்துண்டுகளை ஒரு சட்டியில் இட்டு அடுப்பில் வைத்து சிவக்க வறுக்க வேண்டும். அதில் ஒரு கப் நீரையும் இரண்டு டீ ஸ்பூன் தேனையும் கலந்து காய்ச்ச வேண்டும். சுண்டக் காய்ந்ததும் எடுத்து, வடிகட்டி அருந்த வேண்டும். இப்படி இருவேளை அருந்தினால் செரிமானம் ஆகாமையால் ஏற்பட்ட பேதி நின்றுவிடும்.

* ஒரு டீ ஸ்பூன் மிளகைத் தூள் செய்து மெல்லிய துணியில் சலித்துக்கொள்ள வேண்டும். அதில் அரை டீ ஸ்பூன் தூள் எடுத்து, அதனுடன் தேன் கலந்து உட்கொள்ள வேண்டும். செரிமானக் கோளாறுகளால் ஏற்பட்ட வயிற்று நோய் குணமாகும்.

* அகத்திக் கீரையைக் காம்பு நீக்கி ஆய்ந்தெடுத்து ஆவியில் வேக வைக்க வேண்டும். அதைப் பிழிந்து சாறு எடுக்க வேண்டும். அந்தச் சாற்றில் தேன் கலந்து அருந்தினால், எல்லாவித வயிற்றுக் கோளாறுகளும் குணமாகும்.

* ஆலமரத்திலிருந்து பால் எடுக்க வேண்டும். அதில் ஒரு டீ ஸ்பூன் பால் எடுத்து, அதனுடன் ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும். அருந்தினால் வயிற்றிலுள்ள புழுக்கள் வெளியேறும். வயிற்றிலுள்ள புண் குணமாகும்.

* குப்பைமேனிச் செடியின் வேரை இடித்து இட்டுக் கஷாயமாக்க வேண்டும். அக்கஷாயத்தில் 30 மில்லி எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து அருந்தினால் வயிற்றிலுள்ள புழுக்கள் வெளியேறும்.

* பத்து கொன்றை மரப் பூக்களை 100 மில்லி பசும் பாலில் இட்டு காய்ச்ச வேண்டும். பூ நன்றாக வெந்ததும், வடிகட்ட வேண்டும். அதனுடன் ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும். அதனால் வயிற்று கோளாறுகள் வயிற்றுப்புண், குடற்புண் ஆகியன குணமாகும்.

* சீதள பேதியை குணப்படுத்த 100 மில்லி ஆட்டுப் பாலை ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும்.

ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, பின்பு அதில் அரை எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும். நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடிவிடும். குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கிவிடும்.

குளிர்ச்சியால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்துவிடும். இதய பாதிப்புகள் நீங்கி இதயம் பலம் பெறும். புதிய இரத்தம் உடம்பில் பாய்ந்தோடும். அதிகாலையிலும், படுக்கச் செல்வதற்கு முன்பும் பருகவேண்டும்.

நெல்லிக்காய்களைத் துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்கவேண்டும். பின்பு ஒரு ஸ்பூன் வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும். என்றும் இளமையுடன் இருக்க வேண்டுமென விரும்புவோர் தினமும் தேனை அருந்தவேண்டும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தினமும் தேனை அருந்திவர வேண்டும்.

சிறந்த மருத்துவரும், மாபெரும் சிந்தனையாளருமான ஹிப்போ கிரேட்ஸ் 107 வயது வரை நோய் நொடியின்றி, திடகாத்திரமாக புலன்கள் பலம் நிறைந்தவராக வாழ்ந்தார். இதற்குக் காரணம் தேன்தான். "ஒவ்வொரு நேரமும், உணவு உண்ணும்போது தேனையும் சேர்த்து உண்டு வந்தேன்" என்று கூறினார் அவர்.

நாம் உண்ணும் உணவுகள் இரைப்பையில் சென்று சேருகிறது. அங்கு ஜீரண உறுப்புகளெல்லாம் ஒன்று சேர்ந்து உணவை ஜீரணித்து பலவித சத்துக்களைத் தனித்தனியாகப் பிரித்து, பின்பு உடல் முழுவதும் அனுப்புகின்றன. இந்தப் பணியினை இரைப்பை மிகச் சிறப்பாகச் செய்கிறது. இந்த இரைப்பையின் பணி சீராக நடப்பதற்கு தேன் மிகவும் உதவுகிறது. ஜீரணச் சத்து குறைந்திருந்தால் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் ஜீரண உறுப்புகள் பலம் பெற்றுவிடும். இரைப்பையின் பணி கெட்டுவிட்டால் உடம்பு அவ்வளவுதான்.

ஒரு ஸ்பூன் தேனைச் சாப்பிட்டு வந்தால் அரை மணி நேரத்தில் நரம்புகள் சுறுசுறுப்புடன் திகழும். சிலருக்குக் கை, கால்கள், விரல்கள் மற்றும் உடல் நடுங்க ஆரம்பிக்கும். இவர்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நிச்சயம் குணம் காண்பார்கள்.

மூட்டு வலிகளுக்குச் சிறந்த மருந்து தேன்தான். வலி உள்ள இடத்தில் நன்றாகத் தேனைத் தேய்த்துவிட வேண்டும். அத்துடன் எப்பொழுது உணவு உட்கொண்டாலும் ஒரு ஸ்பூன் தேனையும் உடனே உட்கொள்ள வேண்டும். மூட்டுகள் தேயாது, மூட்டுகள் வலிக்காது.

படுக்கையே கதியாகக் கொண்டிருக்கும் பிணியாளர்கள், பாலில் கொஞ்சம் தேன் கலந்து தவறாமல் குடித்து வந்தால், விரைவில் தெம்பு ஏற்பட்டு சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்கிவிடுவார்கள் கொம்புத்தேன், மலைத்தேன், குறிஞ்சித்தேன் என்று தேனில் அறுபது வகை உண்டு. ஒவ்வொரு வகைத் தேனுக்கும் ஒவ்வொரு சிறப்பு குணம் உண்டு.

ஆஸ்துமா, அலர்ஜி தொல்லைகளிலிருந்து விடுபட தினமும் தேனைப் பருகி வரவேண்டும். 120 கிலோ எடையுள்ள ஆல்பிரட், ஆஸ்திரேலியா நாட்டின் தலைசிறந்த ஓவியர். உடலின் எடையைக் குறைப்பதற்கு இவர் உண்ணாத மருந்துகளில்லை. பார்க்காத வைத்தியமில்லை. ஆனாலும், உடல் எடை குறைந்தபாடில்லை. பின்னர், தேனை உண்டு வந்தார். சில நாட்களில் அவருடைய உடல் எடை குறைய ஆரம்பித்துவிட்டது.

இத்தகைய சிறப்புள்ள தேன் கெட்டியாக, தெளிவானதாக, வெளிறிய தங்கத்தை ஒத்த நிறத்தில் இருக்கும். நமது உடலுக்கு கார்போஹைட்ரேட் சக்திகளை அளித்து, நமக்குத் தேவையான சக்தியைத் தருகிறது. பிற உணவுகளைப் போல் வயிற்றில் தங்கிப் புளிக்கும் அபாயமோ, ஜீரணக் கோளாறோ எல்லாம் இதில் இல்லை. இதில் இரும்பு, தாமிரம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளதால் நல்ல இரத்த விருத்தி ஏற்படும்.

சோர்வுற்றநிலை, அதிக வேலை, பசியின்மை, அதிக அமிலத்தன்மை, பித்தம் சம்பந்தமான தொல்லைகள், இரத்தக்குழாய் தொடர்பான சில தொல்லைகள், இருதயத் தசைகளுக்குப் போதுமான இரத்தம் இன்மையால் ஏற்படும் வலி, தொற்று நோய்க் கிருமிகளால் உண்டான காய்ச்சல், மூளைக்கு அதிக வேலை கொடுத்ததால் ஏற்பட்ட சோர்வு, கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் காலை நேரத் தொல்லைகள், ஹைபோகிளை சீமியா எனப்படும் இரத்தத்தில் சர்க்கரைச் சத்து குறைந்த நிலை போன்றவைகளுக்குத் தேன் மிகுந்த பயனுள்ளது. ஒரு மேசைக்கரண்டி தேனை இரவில் படுக்கும்போது உண்டு. வந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை மாறும். நரம்புத் தளர்ச்சிக்குத் தேனைவிடச் சிறந்த மருந்து இல்லை. தேனை துளசிச் சாற்றில் கலந்து உபயோகிப்பது சளி, தொண்டை வீக்கம், பிராங்டீஸ் எனப்படும் சுவாசத் தொல்லை போன்றவைகளுக்கு மிகவும் நல்லது.

இதனைத் தவறாது உபயோகித்தால் சக்தி அதிகரிக்கும். சோர்வு ஏற்பட்டாலும் உடல் தாங்கும் தன்மை பெறும். உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.

Relaxplzz

SIR.... சார்.... என்று ஒருவரை அழைப்பதை அவர்களும் விரும்புவார்கள்.. ஆங்கிலம் ப...

Posted: 18 Jun 2015 09:10 PM PDT

SIR.... சார்....

என்று ஒருவரை அழைப்பதை அவர்களும் விரும்புவார்கள்..

ஆங்கிலம் பேசிவிட்டோம் என்று நாமும் மகிழ்வோம்...

அதன் அர்த்தம் என்ன???
*
SLAVE I REMAIN... என்பதன் சுருக்கமே சார்...

அதாவது நான் உங்களின் அடிமை என்பதை மறுபடியும் நினைவூட்டுகிறேன் என்பதே...
*
*
அடிமைகள் மட்டுமே சொல்லும் ஒரு வாசகம் சார்...

Relaxplzz

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 19 Jun 2015 09:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


இப்படி வாழ்ந்து பார்க்கலாமே... *ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்றுபேரையாவது பாராட்ட...

Posted: 19 Jun 2015 08:45 AM PDT

இப்படி வாழ்ந்து பார்க்கலாமே...
*ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்றுபேரையாவது பாராட்டு.
*மாதம் ஒரு முறையாவது சூரிய உதயத்தைப்பார்.
*'நன்றி','தயவுசெய்து'-இந்த வார்த்தைகளை முடிந்தவரை அதிகம் உபயோகி.
*உன் வசதிக்கும் தகுதிக்கும் உட்பட்டு வாழக் கற்றுக்கொள்.
*உன்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறாயோ, அப்படியே நீயும் மற்றவர்களை நடத்து.
*ரகசியங்களைக் காப்பாற்று.
*புதிய நண்பர்களைத் தேடிக்கொள்: பழைய நண்பர்களை மறந்துவிடாதே.
*தொழில் ரகசியங்களைக் கற்பதில் நேரத்தை வீணடிக்காமல் தொழிலைக் கற்றுக் கொள்.
*உன் தவற்றை தயங்காமல் ஒத்துக்கொள்.
*தைரியமாக இரு.உண்மையில் அவ்வாறு இருக்க முடியாவிட்டாலும், அப்படித் தோற்றம் அளி
*ஒரு போது மற்றவரை ஏமாற்றாதே.
*கவனிக்கக் கற்றுக்கொள்.சந்தர்ப்பங்கள் அமைதியாக சில நேரம் தான் வரும்.
*கோபமாக இருக்கும்போது ஒரு முடிவும் எடுக்காதே.
*உன் தோற்றத்தில் எப்போதும் கவனம் இருக்கட்டும்.
*மேலதிகாரிகளையோ பெரியவர்களையோ சந்திக்க செல்லும்போது காரணத்துடனும் நம்பிக்கையுடனும் செல்.
*ஒரு வேலை முடியுமுன் கூலி கொடுக்காதே.
*வதந்தி,வம்பு பேசுவதைத் தவிர்.
*போரில் வெற்றி பெற சண்டையில் விட்டுக்கொடு.
*ஒரே சமயத்தில் நிறைய வேலைகளை ஒத்துக் கொள்ளாதே.பணிவாக மறுத்து விடுவதில் தவறில்லை.
*வாழ்க்கை எப்போதும் ஒரே சீராக இருக்கும் என்று எதிர்பாராதே.
*பொருட்கள் வாங்கும்போது சிறந்ததையே தேர்ந்தெடு.
*'எனக்குத் தெரியாது', மன்னிக்கவும்', என்பதை சொல்லத் தயங்காதே..!!
---------------------------------------
நீங்கள் தெரிந்து கொண்டதை மற்றவருக்கும் தெரியபடுத்துங்கள்..

பழகியவர்கள் பிரியும் போது கூட வலிக்கவில்லை அவர்கள் பழக்கம் இல்லதவர்களைப்போல் நட...

Posted: 19 Jun 2015 07:40 AM PDT

பழகியவர்கள் பிரியும் போது கூட வலிக்கவில்லை

அவர்கள் பழக்கம் இல்லதவர்களைப்போல்
நடந்து கொள்ளும் போது தான் வலிக்கிறது


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 19 Jun 2015 07:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


Posted: 19 Jun 2015 06:40 AM PDT


நஸ்ரியாவின் கணவரும் அன்ரியா கொடுத்த முத்தம்! கடுப்பில் நஸ்ரியா

Posted: 19 Jun 2015 06:10 AM PDT

நஸ்ரியாவின் கணவரும் அன்ரியா கொடுத்த முத்தம்! கடுப்பில் நஸ்ரியா


நஸ்ரியாவின் கணவரும் அன்ரியா கொடுத்த முத்தம்! கடுப்பில் நஸ்ரியா
www.indiasian.com
andrea jeremiah

Posted: 19 Jun 2015 05:30 AM PDT


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 19 Jun 2015 05:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


Posted: 19 Jun 2015 04:12 AM PDT


Posted: 19 Jun 2015 03:11 AM PDT


காலுக்கு செருப்பு போட தெரிந்த உங்களுக்கு தலைக்கு கவசம் போடா தெரியாதா ?

Posted: 19 Jun 2015 03:10 AM PDT

காலுக்கு செருப்பு போட தெரிந்த உங்களுக்கு தலைக்கு கவசம் போடா தெரியாதா ?


காலுக்கு செருப்பு போட தெரிந்த உங்களுக்கு தலைக்கு கவசம் போடா தெரியாதா ?
www.indiasian.com
Kamal and Gauthami at Papanasam Press Interaction

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 19 Jun 2015 03:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


குமாரசாமி கணக்கு

Posted: 19 Jun 2015 02:48 AM PDT

குமாரசாமி கணக்கு



பனம் பழம் சாப்பிட்டிருக்கீங்களா????

Posted: 19 Jun 2015 02:09 AM PDT

பனம் பழம் சாப்பிட்டிருக்கீங்களா????


Posted: 19 Jun 2015 01:52 AM PDT


ஹிந்தி தொலைக்காட்சி நடத்திய குரலிசை தெரிவு போட்டியில் ஹிந்தி & தமிழ் மொழி பாடல்க...

Posted: 19 Jun 2015 01:23 AM PDT

ஹிந்தி தொலைக்காட்சி நடத்திய குரலிசை தெரிவு போட்டியில் ஹிந்தி & தமிழ் மொழி பாடல்களை பாடி நடுவர்களை வியப்பில் ஆழ்த்திய தமிழச்சி நித்தியஸ்ரீயின் அழகிய குரலிசையை கேளுங்கள் ..
Very amazing talented Nithyashree for idol junior audition in Mumbai..



ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஓவியர். பிஜய்_பிஸ்வால் வரைந்த ஓவியம்

Posted: 19 Jun 2015 01:08 AM PDT

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஓவியர். பிஜய்_பிஸ்வால் வரைந்த ஓவியம்


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 19 Jun 2015 01:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


மாயம் இல்லை மந்திரம் இல்லை நீங்களே பாருங்கள் இங்கு நடக்கும் அதிசயத்தை

Posted: 19 Jun 2015 12:10 AM PDT

மாயம் இல்லை மந்திரம் இல்லை நீங்களே பாருங்கள் இங்கு நடக்கும் அதிசயத்தை


மாயம் இல்லை மந்திரம் இல்லை நீங்களே பாருங்கள் இங்கு நடக்கும் அதிசயத்தை
www.indiasian.com
chines boy supper magic

22 - 26 வயது ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது எது? 1) உங்கள் காதலிக்கு திருமணம் ஆ...

Posted: 19 Jun 2015 12:02 AM PDT

22 - 26 வயது ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது எது?
1) உங்கள் காதலிக்கு திருமணம் ஆகி இருக்கும்.
2) அப்போது தான் வேலை தேட ஆரம்பித்திருப்பீர்கள். அதற்குள்,பெரியவர்களின் பார்வையெல்லாம்
" இதெல்லாம் எங்க உறுப்படப்போது? " என்பது
போன்றே இருக்கும்.
3) டீன் ஏஜ் பசங்கலெல்லாம் , அவர்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளத் தயங்குவார்கள்.உங்களுக்கு வயதாகி விட்டது போல் எண்ணுவார்கள்.
4) கார்ட்டூனை ரசிப்பது போல் செய்திகளையும்
ரசிப்பீர்கள்.
5) உடல் பருமன் ஏறாமல் , நீங்கள் விரும்பிய அனைத்தையும் உங்களால் சாப்பிட முடியாது.
6) தினமும் shave செய்யாவிட்டால் , வாலில்லா குரங்கைப் போல் இருப்பீர்கள்.
7) ஞாயிற்று கிழமைகளில் விளையாடும் கிரிக்கெட் மேட்ச் க்கு உங்களை கூப்பிட உங்கள் தெரு இளவட்டங்கள் மறந்து விடுவார்கள்.
உறவினர் வீடுகளுக்குச் சென்றாலோ , சுப நிகழ்ச்சிகளுக்கு சென்றாலோ அத்தைமார்கலெல்லாம் எப்போது திருமணம் என்பார்கள்?மாமாக்களோ உன் career பத்தி என்ன முடிவு பண்ணியிருக்க என்பார்கள்?
9) இந்த உலகை வெல்வதற்கான அத்தனை தன்னம்பிக்கையும் உங்களிடம் நிறைந்திருக்கும்.ஆனால் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மட்டும் குறைவாக இருக்கும்.
10) இந்த உலகைப் பற்றி உங்களுக்கு பள்ளிகளில் என்னக் கற்பிக்கப் பட்டதோ , அது அத்தனையும் ஒன்றுமே இல்லை என்பது உங்களுக்கு தெரியவந்திருக்கும்.
11) வேலைக்காக எழுதும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பின்னர் கூட , வேலை கிடைத்திருக்காது.
12) சிபாரிசு என்றவுடன் வேலை கிடைக்கும்.இங்கு எல்லாமே அரசியல் தான் என்பதை புரிந்துக்கொள்வீர்கள்.
13) காதலுக்கு கண்கள் உண்டு என்பீர்கள்.காதலை விட நட்புச் சிறந்தது என்று உணர்வீர்கள் .
14) இங்கு எதுவுமே எளிதில் இலவசமாக கிடைத்து விடாது என்பதை உணர்ந்துக் கொள்வீர்கள். உங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் அதீத நம்பிக்கை மட்டுமே உங்கள் மனசாட்சியை வழி நடத்தும்.
15) இப்படி ஒரு வாழ்க்கையைத் தான் எதிர்க்கொள்ளப் போகிறோம் என்று சற்றும் எதிர்பார்க்காத ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருப்பீர்கள்.
# எந்த அளவுக்கு துல்லியமாய் எழுதி இருக்கிறேன் என்றுத் தெரியாது.இதைப் படிக்கையில் நீங்கள் மகிழ்ச்சி அடைந்தால் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

இந்தோனேசியாவில் பயிர்களோடு மீன்களை வளர்க்கும் பயனுள்ள விவசாய முறை ! உழவின்றி உண...

Posted: 18 Jun 2015 11:07 PM PDT

இந்தோனேசியாவில் பயிர்களோடு மீன்களை வளர்க்கும் பயனுள்ள விவசாய முறை !

உழவின்றி உணவில்லை... உலகெங்கும் விவசாயத்தில் ஈடுபடும் நாடுகளுகளில் அவர்களுக்கென பிரத்யோக விவசாய பாரம்பரிய முறைகள் உண்டு. அதன் படி இந்தோனேசியாவில் விவசாய முறையில் மீன்களை வயல்களில் விடும் வழக்கம் சற்று சுவாரசியமானது இங்கு விவசாயிகள் தங்களது வயல் வரப்புகளில் மீன்களை விட்டு விடுகின்றனர்...

நம்மூரில இதை பண்ணினா, பயிரை அறுத்து சோறாக்கி, மீனை புடிச்சு குழம்பு வைச்சு, அதே இடத்துல தின்னுபுட்டு தட்டை கவுத்து வைச்சிட்டு Have a nice day' னு எழுதிவைச்சுபுட்டு கெளம்பிடுவானுக களவாணி பசங்க!


Posted: 18 Jun 2015 11:05 PM PDT


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 18 Jun 2015 11:00 PM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


இதுதான் மனிதனின் வாழ்க்கை! கட்டாயம் பாருங்கள் வீடியோ

Posted: 18 Jun 2015 10:10 PM PDT

இதுதான் மனிதனின் வாழ்க்கை! கட்டாயம் பாருங்கள் வீடியோ


இதுதான் மனிதனின் வாழ்க்கை! கட்டாயம் பாருங்கள் வீடியோ
www.indiasian.com
life is short so play more

Posted: 18 Jun 2015 10:04 PM PDT


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 18 Jun 2015 09:00 PM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


ஆண்களை போல் பெண்களும் நடந்து விட்டால் இப்படித்தான் நடக்கும்!. வீடியோ

Posted: 18 Jun 2015 08:10 PM PDT

ஆண்களை போல் பெண்களும் நடந்து விட்டால் இப்படித்தான் நடக்கும்!. வீடியோ


ஆண்களை போல் பெண்களும் நடந்து விட்டால் இப்படித்தான் நடக்கும்!. வீடியோ
www.indiasian.com
If Girls Behaved Like Boys

Posted: 18 Jun 2015 07:03 PM PDT


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 18 Jun 2015 07:00 PM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


அஜித் ரசிகர்கள் கட்டாயம் பாருங்கள் ..! இது 'வீரம் 'திரைக்கு வர முன்னரானது

Posted: 18 Jun 2015 06:10 PM PDT

அஜித் ரசிகர்கள் கட்டாயம் பாருங்கள் ..! இது 'வீரம் 'திரைக்கு வர முன்னரானது


அஜித் ரசிகர்கள் கட்டாயம் பாருங்கள் ..! இது 'வீரம் 'திரைக்கு வர முன்னரானது
www.indiasian.com
Veeram Shooting Spot | Ajith | Tamannah