Saturday, 22 November 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


பேசாமலே இருந்தாலும் மன்மோகன்சிங் நமக்கும் பிரதமர்ங்கிற உணர்வு இருந்துச்சு வாயத்த...

Posted: 22 Nov 2014 07:37 PM PST

பேசாமலே இருந்தாலும்
மன்மோகன்சிங் நமக்கும்
பிரதமர்ங்கிற
உணர்வு இருந்துச்சு
வாயத்தொறந்தாலும்
வெறும்
ஹிந்திய மட்டும் பேசுற மோடிய
பாத்தா அப்படி தோனல!

பூரிகட்டைக்கி எதுக்கு இவ்ளோ பில்டப் கொடுக்குறாங்கெனு தெர்ல!! பூராம் பயந்தாகோலி ப...

Posted: 22 Nov 2014 05:46 PM PST

பூரிகட்டைக்கி எதுக்கு இவ்ளோ பில்டப்
கொடுக்குறாங்கெனு தெர்ல!! பூராம்
பயந்தாகோலி பசங்க!!
அப்டிலாம் ஒன்னும்
வலிக்காது பாஸ்!!
அஞ்சு செகென்ட்
குருவி சுத்தும்
ஆறாவது செக்கென்ட்ல
நார்மலாயிரும்!!
சப்பமேட்டரு!!

@சத்தி லிங்க்

தென்னக இரயில்வேயில் தமிழனுக்கு இனி வேலை வாய்ப்பு இல்லை. திருச்சி ரயில்வே நிலையத்...

Posted: 22 Nov 2014 09:48 AM PST

தென்னக இரயில்வேயில்
தமிழனுக்கு இனி வேலை வாய்ப்பு இல்லை.
திருச்சி ரயில்வே நிலையத்தில்
இன்று (23.11.2014 )
நடைபெறும் தேர்வில்
கலந்து கொண்டு தேர்ச்சி பெற
காத்திருக்கும்
ஆயிரக்கணக்கான வட
இந்திய, கேரள இளைஞர்கள்
கூட்டம்.


காவிரியில் கர்னாடகா தடுப்பணைகள் கட்டுவது அவசியம். தமிழகம் தடுக்கக் கூடாது - கர்ன...

Posted: 22 Nov 2014 07:42 AM PST

காவிரியில் கர்னாடகா தடுப்பணைகள் கட்டுவது அவசியம். தமிழகம் தடுக்கக் கூடாது - கர்னாடக பாசகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார்.

#நம்மக்களைத் தவிர மீதி எல்லானுமே முதலில் தங்கள் இனத்தானா தான் இருக்கான், இந்தியன் என்பதெல்லாம் கூட்டுக் கொள்ளைக்கு மட்டும்தான் பயன்படுத்தறான். ஆனால் இ.வா தமிழன் மட்டும் தான் இந்தியன் என்று தன் வீட்டைத் திறந்துவைத்துள்ளான், இந்தியன் வந்து கொள்ளையடிக்க.

காந்தள்!

Posted: 22 Nov 2014 07:25 AM PST

காந்தள்!


மனம் பதை பதைக்கும் மனித உரிமை மீறல்

Posted: 22 Nov 2014 06:44 AM PST

மனம் பதை பதைக்கும் மனித உரிமை மீறல்




தமிழக கூலி தொழிலாளர்கள் மீது ஆந்திர வனத்துறை அதிகாரிகள் கொடூர தாக்குதல்....#BrutalAttack #ForestOfficials #AndhraPradesh

20/2/1956 ல் தமிழகத்தில் தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் தமிழர்களுக்குரியது என்று வ...

Posted: 22 Nov 2014 06:31 AM PST

20/2/1956 ல் தமிழகத்தில் தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் தமிழர்களுக்குரியது என்று வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடந்துள்ளது,

அதில் பங்கேற்ற கட்சிகள் தமிழரசுக் கழகம், தமிழரசு பொதுவுடமைக் கட்சி, தமிழரசு சோசலிசக் கட்சி,

நிராகரித்தவை எதுவென்று தெரியுமா? தீராவிடர் கழகமும், பேராயக்கட்சியுமாம்,

பார்ப்பனீய கட்சியும், பார்ப்பனீய எதிர்ப்பு இயக்கமும் கலந்துக்கொள்ளாதது ஏன்?

சேட்டன் பணிக்கர் வந்தார், இவ்விரண்டு ஸ்தலங்களும் மலையாளிகளுக்கே ஃசொந்தம், தமிழர்கள் இவ்விட பணிக்காரானு என்று தீராவிடரிடம் பறஞ்சதும்,

குளமாவது மேடாவது எல்லாம் இந்தியாவிற்குள் தானே உள்ளது என தேசியவாதியும் சொன்னதா இருக்குமோ?

தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள் தமிழ்ப் பிராமியில் "தமிழ...

Posted: 22 Nov 2014 02:41 AM PST

தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள்

தமிழ்ப் பிராமியில் "தமிழ்" என்ற சொல்
வெளிநாடுகள் (எகிப்து, தாய்லாந்து, ஓமன்)
• எகிப்தில் லெக்குஸ் லிமன் என்ற இடத்தில் கி.மு. 1ம் நூற்றாண்டு காலத்துக்குரிய உடைந்த சாடி ஒன்று தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் "பானை ஒறி" என்று எழுதப்பட்டிருந்தது. இதே இடத்தில் இதற்கு முன்னரும் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

• கி.மு. 1ம் நூற்றாண்டு காலத்துக்குரிய உடைந்த சாடியில் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் எகிப்தில் பெரின்ஸ் ரொக்ளோடிசியா என்ற குடியேற்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டன

• கி.மு. 2ம் நூற்றாண்டு கால மட்பாண்டத்தில் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் தாய்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டன. தாய்லாந்தில் குவான் லுக் பட் என்ற இடத்தில் கி.மு. 3ம்-4ம் நூற்றாண்டு உரைகல் ஒன்றில் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

• ஓமன் நாட்டில் தமிழ்-பிராமி பானை சிதில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் ணந்தை கீரன் என்ற சொல் உள்ளது. இது முதலாம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என மதிப்படப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டைசேர்ந்தவர்கள் ஓமனில் இதனை கண்டுள்ளார்கள்.

இலங்கை
• கி.மு. 2ம் நூற்றாண்டு கால மட்பாண்ட துண்டுகள் பூநகரியில் கண்டுபிடிக்கப்பட்டன.

• கி.மு. 3ம் நூற்றாண்டு கால கருப்பு சிவப்பு மட்பாண்டங்கள் கந்தரோடையில் கண்டுபிடிக்கப்பட்டன.

• தட்டையான தட்டத்தின் கருப்பு சிவப்பு மட்பாண்ட துண்டுகள் தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன் இலங்கையின் திசமகாராமையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் காலம் ஏறத்தாழ கி.மு. 300 என அகழ்வினை மேற்கொண்ட செருமன் ஆராட்சியாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியா
• கி.மு. 2ம் நூற்றாண்டு பானையில் வாயில் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கேரளாவில் கண்டுபிடிக்கப்பட்டன.
• கி.பி. 3ம் நூற்றாண்டு கால நான்கு தமிழ்ப் பிராமி கல்வெட்டுக்கள் கேரளாவிலுள்ள குகையிலும் மலையிலும் காணப்பட்டன. அதில் ஒன்று 'சேரன்' என்ற சொல்லுடன் காணப்பட்டது.

தமிழ்நாடு
• ஆதிச்சநல்லூரில் இரும்புக்காலத்தைச் சேர்ந்த தாழி கண்டுபிடிப்பு
• கி.மு. 500 கால தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் ஈரோட்டுக்கு அருகிலுள்ள சென்னிமலையிலுள்ள கொடுமணலில் கண்டுபிடிக்கப்பட்டன.
• கி.மு. 500 கால தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் பழனிக்கு தென் மேற்கில் 12 கி.மீ துரத்திலுள்ள பொருந்தலில் கண்டுபிடிக்கப்பட்டன.
• தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் மதுரை திருப்பரங்குன்றத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் "மு-ன-க-ர" எனவும் "மு-ஹ-க-டி" எனவும் எழுதப்பட்டிருந்தது. இது முதலாம் நூற்றாண்டுக்கு உரியது.
• ஐந்தாம் 'வீரர்' கல் தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன் போர்ப்பனக்கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்டன.
தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட ஊர்கள், தமிழ்நாடு
• அரசலூர்
• அழகர் மலை
• ஆனைமலை
• எடக்கல் கல்வெட்டு
• கருங்காலக்குடி


நேற்று 'டிஸ்கவரி தமிழ்' தொலைக்காட்சியில் நெகிழி (Plastic) மறுசுழற்சி பயன்பாடு பற...

Posted: 22 Nov 2014 01:35 AM PST

நேற்று 'டிஸ்கவரி தமிழ்' தொலைக்காட்சியில் நெகிழி (Plastic) மறுசுழற்சி பயன்பாடு பற்றி ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியை பார்த்தேன்.அதில் சில ஐரோப்பிய நாடுகள் நெகிழியை மறுசுழற்சி செய்து ரயில் தண்டவாளங்களுக்கு கீழ் இருக்கும் 'ஸ்லிப்பர்' கட்டைகளாக உருவாக்கி பயன்படுத்துகின்றன.
சாதாரணமாக மரங்களால் ஆன மரக்கட்டைகள்தான் தண்டவாளங்களுக்கு கீழ் அமைக்கப்படுவது வழக்கம். ஆனால் அந்த மரக்கட்டைகள் வெயில், மழை போன்ற இயற்கை நிகழ்வுகளால் குறிப்பிட்ட காலத்திற்குபிறகு சிதைந்து சேதம் அடைகின்றது. ஆனால் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு உருவாக்கப்படும் 'ஸ்லிப்பர்' கட்டைகள் அவ்வளவு சீக்கிரத்தில் சேதம் அடைவதில்லை.

இதனால் இரு வகை பயன்கள் உண்டு.

1.பிளாஸ்டிக் குப்பைகளை அழிக்க முடியாமல் தினறி வந்த பல நாடுகளுக்கும் தற்போது மாற்றுவழி கிடைத்துவிட்டது.

2.ரயில்வே துறையில் தண்டவாளங்களுக்கு கீழே பயன்படுத்தப்படும் மரக்கட்டைகளுக்கு பதில் இதுபோன்ற பிளாஸ்டிக் ஸ்லிப்பர் கட்டைகளை பயன்படுத்தினால் கோடிக்கான மரங்கள் வெட்டப்படுவது குறையும்.

இந்தியாவில் ரயில் பாதைகளின் நீளமும் அதிகம் பிளாஸ்டிக் குப்பைகளின் அளவும் அதிகம்.பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து இந்திய ரயில்வே துறையும் இதுபோல பயன்படுத்தலாமே. மரக்கட்டைகளை ஒப்பிடும்போது இதன் தேய்மானம் குறைவு ஆயுள் அதிகம்.

@நம்பிக்கை ராஜ்


The Tamil Bell Tamils have long been seafarers and traders. It is believed that...

Posted: 22 Nov 2014 12:36 AM PST

The Tamil Bell

Tamils have long been seafarers and traders. It is believed that they reached northern Australia by the 14th century, and there is a suggestion that they may have got as far as New Zealand. In 1836 the missionary explorer William Colenso found this bell, which had been used by Māori as a cooking vessel for generations. Inscribed on it in Tamil are the words 'Mohoyideen Buk's ship's bell'. The bell is now held at the national museum, Te Papa. Theories abound, but the precise origins of the bell and how it got to New Zealand remain a mystery.

http://tamilnation.co/diaspora/newzealand.htm

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=34830

http://www.jps.auckland.ac.nz/document//Volume_84_1975/Volume_84,_No._4/The_story_of_the_Tamil_bell,_by_Brett_Hilder,_p_476-484/p1

http://collections.tepapa.govt.nz/object/213397

http://www.teara.govt.nz/en/photograph/1135/the-tamil-bell

வெலிங்டனில் தமிழ்மணி!

நியூசிலாந்தின் வெலிங்டனில் உள்ள "ரே பாபா' தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது 500 ஆண்டுகள் பழைமை மிக்கதாகக் கருதப்படும் பண்டைத் தமிழர்களின் தமிழ்மணி (ANTIQUE TAMIL BELL). இதை மிசினரி வில்லியம் கொலன்சோ (William Colenso) என்பவர் 1836-இல், நியூசிலாந்தின் வடக்குப் பகுதியில் உள்ள வங்கரே (Wangarei) என்ற நகருக்கு 15 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் கண்டுபிடித்துள்ளார். இந்த கிராமத்தில் வாழும் மக்கள் மயோரி இனத்தைச் சேர்ந்தவர்கள். அம்மக்கள் இதை சமையல் பாத்திரமாக (குறிப்பாக உருளைக்கிழங்கு வேகவைக்க)ப் பயன்படுத்தி வந்துள்ளனர் என்றும், உடைந்த நிலையில் காணப்படும் இந்தத் தமிழ்மணி பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல மணி என்றும், இந்த மணி பல ஆண்டுகளுக்கு முன் சூறாவளியால் தூக்கி எறியப்பட்ட ஒரு பெரிய மரத்தில் கண்டெடுக்கப்பட்டது என்றும் கொலன்சோ கூறியுள்ளார். "புரிரி' என அழைக்கப்படும் அந்த மரத்தில் இந்த மணி பல்லாண்டு காலம் மறைந்து கிடந்ததாகவும் தெரியவந்துள்ளது.

13 செ.மீ. உயரமும் 9 செ.மீ அகலமும் உடைய இந்த மணியைச் சுற்றிலும் பழங்கால தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில் முகையிதீன் பக்ஸ் கப்பல் மணி என்னும் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. பண்டைத் தமிழர்களின் கப்பலில் பயன்படுத்தப்பட்ட இந்தத் தமிழ்மணி, மயோரியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் வர்த்தகத் தொடர்பு இருந்தது என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறது.


யார்கூடயாச்சும் பேசும்போது உடனே பதில் வந்தா.. அவங்களும் பேச பிரிய படறாங்கன்னும்...

Posted: 22 Nov 2014 12:08 AM PST

யார்கூடயாச்சும்
பேசும்போது உடனே பதில்
வந்தா.. அவங்களும் பேச
பிரிய படறாங்கன்னும்
லேட் ஆச்சுன்னு போர்
அடிக்காதேன்னும்
அர்த்தம்..

@கயல்விழி

கோபம் என்பது ரொம்ப உயர்ந்த விஷயம். நேசிப்பு மாதிரி உண்மையான விஷயம். @கயல்விழி

Posted: 22 Nov 2014 12:03 AM PST

கோபம் என்பது ரொம்ப
உயர்ந்த விஷயம்.
நேசிப்பு மாதிரி உண்மையான
விஷயம்.

@கயல்விழி

'நி எங்கே உருப்படப்போற' என ஆணும், 'உன்னை கட்டிக்கப் போறவன் என்ன பாடுபடப் போறானோ'...

Posted: 21 Nov 2014 11:59 PM PST

'நி எங்கே உருப்படப்போற'
என ஆணும்,
'உன்னை கட்டிக்கப்
போறவன் என்ன பாடுபடப்
போறானோ' என
பெண்ணும்
வசவு வாங்கி வளர்கிறார்கள்.

@மிருதுளா

வாய்ச்சொல் வீரன் இவன்.. (குறுந்தொகை:8) இது காதற் பரத்தையர் ஒருத்தி, தலைவனைக் கு...

Posted: 21 Nov 2014 11:51 PM PST

வாய்ச்சொல் வீரன் இவன்.. (குறுந்தொகை:8)

இது காதற் பரத்தையர் ஒருத்தி, தலைவனைக் குறித்து சொன்னது...

வாய்க்காலுக்கு அருகில் உள்ள மாமரத்திலிருந்து, விழுந்த முற்றியக் கனியை, நீரில் நீந்திவரும் வாளை மீன் எளிதில் கவ்விக்கொள்ளும்.. இத்தகைய ஊரையுடைய தலைவன் இவன். இவன் என் வீட்டிற்கு வந்தால்.."தான் அப்படி, தான் இப்படி" என்றெல்லாம் ஓங்கி பேசுவான்.. ஆனால் தன் வீட்டிற்குப் போய் விட்டாலோ, அங்குள்ள தன் மகனின் தாயாகிய அவனது மனைவியிடம் எப்படி நடந்துகொள்வான் தெரியுமா?? நாம் நம் கையையும் காலையும் தூக்கத் தானும் அது போலவே தூக்கும், கண்ணாடியில் தெரியும் நிழற்பாவைபோல அவள் விருப்பப்படியெல்லாம் ஆடுவான்..!! (இவனது வாய்ச்சொல் வீரமெல்லாம் என்னிடம்தான்!!)
******************************************

கழனி மாத்து விளைந்துஉகு தீம்பழம்
பழன வாளை கதூஉம் ஊரன்
எம்இல் பெருமொழி கூறித் தம்இல்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யும்தன் புதல்வன் தாய்க்கே.

-ஆலங்குடி வங்கனார்

மெரினா கடற்கரை!

Posted: 21 Nov 2014 11:01 PM PST

மெரினா கடற்கரை!


Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


goodnite

Posted: 21 Nov 2014 11:28 AM PST

goodnite


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


பெண்களுக்கு பாதுகாப்பிற்கு உதவும் எண்கள் 04423452365 1091 இந்த எண், தமிழக அரசின...

Posted: 22 Nov 2014 09:10 AM PST

பெண்களுக்கு பாதுகாப்பிற்கு உதவும் எண்கள்
04423452365

1091 இந்த எண், தமிழக அரசின் பெண்கள் அவசர உதவி எண். திடீர் ஆபத்துக்கள் வரும்போது பெண்கள் இந்த எண்ணைத் தொடர்புகொள்ளலாம். எங்கோ ஓர் இடத்தில் தனித்துவிடப்பட்டு விட்டாலும் அல்லது தங்க இடமில்லாதபோதும் இந்த நம்பருக்கு தொடர்புகொள்ளலாம்!

இந்த எண் எடுக்கப்படவில்லை என்றால் 044-23452365 என்கிற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்! பெண் குழந்தைகள் என்றால் 1098 என்கிற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்! பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டு ஆதரவற்ற நிலையில் இருக்கும் வயதான பெண்கள் என்றால் 1253-ஐ தொடர்புகொள்ளலாம்.
04428551155

குடும்பத்தில் கணவன் மூலம் வன்கொடுமைக்கு ஆளானாலோ அல்லது வேலை செய்யுமிடத்திலோ, கல்லூரியிலோ பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டாலோ 044-28551155 என்கிற தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் எண்ணுக்கும், 044-25264568 என்ற எண்ணுக்கும் அழைத்து ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளுவதோடு புகாரும் கொடுத்து உங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்குத் தீர்வும் காணலாம்.
04426530504, 26530599

மனரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களை, ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க 044 - 26530504, 044-26530599- என்கிற எண்களைத் தொடர்புகொள்ளலாம். இது, சென்னை முகப்பேரிலுள்ள பெண்களுக்கான விழுதுகள் தொண்டு நிறுவனத்தின் எண்! மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
04426184392, 9171313424

வாடகைத் தாய்களாகப் போய் புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள் 044-26184392, 9171313424 என்கிற உலக வாடகைத் தாய்களின் உரிமைகள் அமைப்பு
எண்ணைத் தொடர்புகொண்டு வாடகைத்தாய் என்றால் என்ன? அவர்களுக்கான உரிமைகள், விதிமுறைகள் என்ன என்பனவற்றை அறியலாம்.
04425353999, 90031 61710

ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் புகார் தெரிவிக்க ரயில்வே போலீஸ் நம்பரான 044-25353999, 90031 61710, 99625 00500 எண்களைத் தொடர்புகொள்ளலாம்.
95000 99100

சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்றால் 95000 99100 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். கொடுத்தால் போதும்,உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்கும்.
04424749002, 04426744445

ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால் 044-24749002 மற்றும் 044-26744445 என்கிற எண்களைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்.
04428592828, 94454 64748

பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்று உணர்ந்தால் மாநில நுகர்வோர் புகார்களுக்கான

டோல் ஃப்ரீ எண் 180011400,
94454 64748,
72999 98002,
72000 18001,
044- 28592828
ஆகிய எண்களைத் தொடர்புகொண்டு புகார் கொடுப்பதோடு ஆலோசனைகளையும் பெறலாம்.
93833 37639

பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்துவிட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு 93833 37639 என்கிற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்.

Relaxplzz

தசைகளை வலுவாக்கும் வாக்கிங்! ஜிம்மில் 2 மணி நேரம் உடற்பயிற்சி செய்து விட்டு வரு...

Posted: 22 Nov 2014 08:59 AM PST

தசைகளை வலுவாக்கும் வாக்கிங்!

ஜிம்மில் 2 மணி நேரம் உடற்பயிற்சி செய்து விட்டு வருவதை விட வேக நடை, பல அற்புதங்களை நம் உடலில் நிகழ்த்தும். சாதாரணமாக நடப்பதை விடச் சுறுசுறுப்பான வேக நடை (Brisk walk) நற்பலனை அள்ளி தரும்.

பின் இடுப்பு, தொடைகளை வெகு சீக்கிரம் குறைத்து அழகான வடிவத்தைப் பெற சிறந்த பயிற்சி வேக நடை. சுவாசப் பிரச்னை, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற தொல்லைகள் இருப்போர் வேக நடை நடக்கும்போது உடலில் ஆக்சிஜனின் ஒட்டம் சீராகும்.

ஃப்ரெஷ்ஷான காற்றைச் சுவாசித்துக் கொண்டே நடக்கையில் நுரையீரல் நன்றாகச் செயல்படத் தொடங்கும். ஒட்டம், மெது ஒட்டம் இது இரண்டிலும் எரிக்கப்படும் கலோரிகளும் வேக நடையினால் எரிக்கப்படும் கலோரிகளும் சமம்தான்.

'ஷூ' போட்டு நடப்பதுதான் சரியான முறை. வேகமாக நடக்கும் போது செளகர்யமாக இருக்க ஷூ அணிவதே சரி. குடிப்பழக்கம், புகைப்பழக்கம் இருப்பவர்கள், வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்கள், உடலுழைப்பு இல்லாதவர்கள் வேக நடை நடந்தால் இந்தப் பிரச்னைகளின் தாக்கம் குறையும். தினமும் அரை மணி நேரம் நடக்கலாம்.

30-40 வயதுள்ளவர்கள் மெதுவாக நடக்கத் தொடங்கிக் கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரிக்க வேண்டும். 50வயதுக்கு மேல் உள்ளவர்கள் அரை மணி வரை மட்டுமே நடக்க வேண்டும். அதற்கு மேல் நடக்கக் கூடாது. வேண்டுமெனில் இடையிடையே ஜாக்கிங் செய்யலாம்.
ஸ்ட்ரஸ் பஸ்டர் ஸ்விம்மிங்!

*உடல் முழுவதற்குமான உன்னதப் பயிற்சி நீச்சல். சைக்கிளிங், ரன்னிங்கை விட நீந்துவதால் அதிகக் கலோரிகள் எரிக்கப்படுகின்றன. உடல் பருமனான குழந்தைகளுக்குச் சிறந்த பயிற்சி! ஒரு மணி நேர பயிற்சியில் 500-650 கலோரிகள் வரை எரிக்கமுடியும்.

* மூச்சை இழுத்து விடுவதால் நுரையீரலுக்குச் சிறந்த பயிற்சியாக இருக்கிறது.

* அதிக டென்ஷன் இருந்தாலும், நீரில் நீந்தும்போது, சில்லென்ற உணர்வும், உடல் அசைவுகளும் ஸ்ட்ரெஸ்ஸையும் பஸ்பமாக்கிவிடும்.

* ஒவ்வொரு இதயத் துடிப்பிலும் ரத்தம் பம்ப் ஆவதால் இதயம் வலிமை பெறும்.

* நீந்துதல் பயிற்சியால் நோய் எதிர்பாற்றல் அதிகரிக்கும்.

* சிறு வயதிலேயே நீச்சல் பழகுவதால், வயதான காலத்தில் வரும் மூட்டுத் தொடர்பான பிரச்னைகளை வரவிடாது.

* தசைகள் நன்கு வளைந்து கொடுக்கும். தசைப் பிடிப்புகள், சுளுக்கு போன்ற பிரச்னைகள் வராது.

* உடலில் உள்ள வெப்பம் குறைந்து சமச்சீரான நிலையைப் பெறும்.

* நீச்சலை செய்வோருக்குப் பக்கவாதம் பக்கம் வராது.

* டைப் 2 சர்க்கரை நோய், இதய நோய், பக்க வாதம் போன்ற நோய்கள் வராமல் காக்கும்.
உடல் உறுதிதன்மை பெறும்.

* மனஅழுத்தம், டென்ஷன், பதற்றம் போன்ற மனம் சார்ந்த தொல்லைகள் தீரும்.

- ப்ரீத்தி
படங்கள்: தி.கௌதீஷ்
(மாணவ புகைப்படக்காரர்), விகடன்

Relaxplzz


"நலமுடன் வாழ" - 2

உலகின் மிகப் பெரிய ஏமாற்றம், . . . . . . . . . . . . . . . .. . டீயில் நனைக்கபட...

Posted: 22 Nov 2014 08:50 AM PST

உலகின் மிகப் பெரிய ஏமாற்றம்,
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..

.
டீயில் நனைக்கபட்ட பிஸ்கட் தவறி டீக்குள்
விழுவதுதான்...

#முடியல :P :P

Relaxplzz

இப்படத்தில் எத்தனை பூனைகள் உள்ளன? How many cats?

Posted: 22 Nov 2014 08:40 AM PST

இப்படத்தில் எத்தனை பூனைகள் உள்ளன? How many cats?


தன்னிகரற்ற வரிகள் இவை இறைச்சி பதப்படுத்தும் தொழிற் சாலையில் வேலைசெய்யும் ஒருவர்...

Posted: 22 Nov 2014 08:15 AM PST

தன்னிகரற்ற வரிகள் இவை

இறைச்சி பதப்படுத்தும் தொழிற் சாலையில் வேலைசெய்யும் ஒருவர் ,ஒரு நாள் மாலை வேலை முடியும் தருவாயில் இறைச்சி பதப்படுத்தும் Freezer அறைக்குள் எதோ வேலை யாக இருந்தபோது எதிர்பாராத விதமாய் அதன் தானி யங்கி கதவு பூட்டிக் கொண்டு விட்டது.

உடனே பெரும் கூச்சலிட்டாலும் அவர் எழுப்பிய ஓசை வெளியே யாருக்கும் கேட்கவில்லை மேலும் பெரும்பாலானோர் வேலை முடிந்து கிளம்பிவிட்டனர்… இன்னும் சிறிது நேரத்தில் ஐஸில் உறைந்து இறக்கப் போகிறோம் என்று எண்ணி கவலை அடைந்தார் அவர்.

அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்டது. உயிர் வந்தவனாய் வெளியே ஓடி வந்தார். தொழிற்சாலை காவலாளி நின்று கொண்டிருந்தான். சந்தோஷத்தில் அவ னை கட்டி தழுவிக்கொண்டார்.

அவனிட ம் " நான் உள்ளே இருப்பது உங்களுக்கு எப்படி தெரிந்தது?" என்று கேட்டார்.

"சார். நான் இங்க 10 வருசமா வேலை செய்றேன்…

நீங்க ஒருத்தர் மட்டும்தான் என்னையும் ஒரு மனுசனா மதிச்சு காலைல வணக்கமும் சாயங்காலம் குட்பை ரெண்டும் சொல்றவர்.

இன்னிக்கி காலைல வணக்கம் சொன்னீங்க ..ஆனா சாயங்காலம் உங்களோட குட் பை என் காதில் விழவில்லை. உடனே சந்தேகம் வந்து உள்ள வந்து ஒவ்வொரு இடமா தேடினேன்… அப்போ தான் உங்கள் கண்டு பிடிச்சேன் …" என்றான்

ஒருவருக்கொருவர் மற்றவர்களை தரக்குறை வாக எண்ணாமல் பரஸ்பரம் மரியாதை செலுத்திக்கொள்வது எப்போதுமே நன்மை பயக்கும் ஒரு விஷயம் தானே நண்பர்களே.

Relaxplzz

பேருந்தில் பயண சீட்டு பெறாதவர்களும், தொலைந்த பயண சீட்டிற்காக மறுபடியும் பணம் குட...

Posted: 22 Nov 2014 08:00 AM PST

பேருந்தில் பயண சீட்டு பெறாதவர்களும், தொலைந்த பயண சீட்டிற்காக மறுபடியும் பணம் குடுத்து பயணச் சீட்டு பெற்றவர்களும் இங்கே உண்டு...

சமூகத்தை மாற்ற நினைத்தவன் டெபாசிட் இழந்ததும், ஊழலை பெருக்க நினைத்தவன் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவனும் இங்கே உண்டு..

அத்து மீறுவதற்கு கொடுக்கப்படும் லஞ்சத்தை மறுப்பவனும், கடமையை செய்வதற்கே காசு கறப்பவனும் இங்கே உண்டு..

இது தான் எங்கள் இந்தியா. :(

Relaxplzz


"மனம் தொட்ட வரிகள்" - 1

பாதாமிலும் பிஸ்தாவிலும் தான் சத்து இருக்குன்னு நம்புவோர் கடலை மிட்டாயின் சுவை அற...

Posted: 22 Nov 2014 07:50 AM PST

பாதாமிலும் பிஸ்தாவிலும் தான் சத்து இருக்குன்னு நம்புவோர் கடலை மிட்டாயின் சுவை அறிவதில்லை. (y)


:P :P

Posted: 22 Nov 2014 07:40 AM PST

:P :P


:) Relaxplzz

Posted: 22 Nov 2014 07:30 AM PST

கொஞ்சம் சிரிங்க பாஸ்... :P :P "அப்பா..அப்ளிகேஷன்லே 'மதர் டங்க்' குனு இருக்கு......

Posted: 22 Nov 2014 07:15 AM PST

கொஞ்சம் சிரிங்க பாஸ்... :P :P

"அப்பா..அப்ளிகேஷன்லே 'மதர் டங்க்' குனு இருக்கு...என்ன எழுத..?.."

"ரொம்ப நீளம்னு எழுது..." :P :P

#####

"தம்பி உன் பெயர் என்னப்பா..?."

"பசுவுக்கு உடம்பு சரி இல்லை..."

"புரிய வில்லயே..."

" 'கவ் சிக்' (கவ்ஷிக்) என்பதை தமிழில் சொன்னேன்..."
:O:O

#####

"மேனேஜர், உங்க ஹோட்டல் ரூம் 708-லேருந்து பேசறேன்"

"சொல்லுங்க ஸார், என்ன வேணும்?"

"எனக்கும் என் பொண்டாட்டிக்கும் பெரிய வாக்குவாதம்.. ஜன்னல் வழியா வெளியே குதிச்சிருவேன்னு மிரட்டறா.."

"ஸார் இது உங்க பர்ஸனல் விஷயம்.."

"முட்டாள், ஜன்னல் திறக்க வரலை, சீக்கிரம் அதை திறக்க ஒரு ஆளை அனுப்பு"
:O :O
#####

டீசர்: "ஏ.பீ.சி.டி...எத்தனை எழுத்து.?.."

மாணவன்: 52 எழுத்து..

டீசர்: எப்படி..?? உனக்கு ஆங்கிலம் சரியா தெரியலே .."

மாணவன்: சின்ன ஏ.பீ.சி.டி 26 .. பெரிய ஏ.பீ.சி.டி 26..உங்களுக்கு தான் கணக்கு சரியா தெரியலே.. :P :P

#####

பேராண்டி.....ரிசல்ட் வந்தாச்சு., பேப்பர்ல உன் பேரு
இல்லையேடா....?
.
.
ஸ்பான்ஸர் கிடைக்கல , தாத்தா! :O :O

#####

"ஆமா..என் மனைவி ஊருக்கு போனது உங்களுக்கு எப்படி தெரியும்..?.."

"நீங்க சத்தமா சிரிச்சு பேசறதும், குஷியா பாட்டு பாடறதும் வச்சுதான்..." :D :D

#####

"முதல் இரவுலே என்ன கலாட்டா ..?.."

"மாப்பிளை ரயில்லே டிக்கெட் பரிசோதகரா இருக்காராம்...பொண்ணுகிட்டேயே 'ஐ.டீ.' கார்ட் கேட்டுஇருக்காரு..." :O :O

#####

"ஏன் டாக்டர் நீங்க ஆபரேசன் பண்றதுக்கு முன்னாடி அழறீங்க....?.."

"ஒரு உயிரை கொள்வது பாவம்னு எனக்கும் தெரியுமே...அதனால்தான்...!!.." :O :O

#####

"என் பொண்டாட்டி கிளி மாதிரி..!.."

"அவ்வளவு அழகா..?.."

"இல்லே...பேசினதையே திரும்ப திரும்ப பேசுவா.." :P :P

#####

"ஏன்டா 20 நாள் காலேஜுக்கு வரல...?"

"சார்... எங்கப்பா எப்பவும் சொல்லுவார் ஒரு இடத்துக்கு அடிக்கடி போனா மரியாதையா இருக்காதுனு" ;-) ;-)

#####

உலகத்தில் மிகச் சிறந்த காதல் ஜோடி
#செருப்புமட்டுமே
ஒண்ணு இல்லைன்னா இன்னொன்று வாழவே வாழாது ;
வாழ்ந்தாலும் WaStÈ :P :P

Relaxplzz


நகைச்சுவை துணுக்ஸ்

விடா முயற்சி:- போரில் தோல்வி அடைந்த அரசன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளி...

Posted: 22 Nov 2014 07:01 AM PST

விடா முயற்சி:-

போரில் தோல்வி அடைந்த அரசன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான். அரசன் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனின் படை மிகவும் சிறியடாக இருந்ததினால் அவனால் வெல்ல முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால் வெற்றி பெற்றன். வெற்றி பெற்ற எதிரி அரசனை கொல்ல திட்டமிட்டான். அதனால் அவன் காட்டிற்கு ஓடிச் சென்று அங்கு இருந்த ஒரு குகையில் ஒளிந்து கொண்டான்.

ஒருநாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தான். அந்தக் குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது. அந்த சிறிய சிலந்தியின் செயல் அவன் கவனத்தைக் ஈர்த்தது. குகையின் ஒரு பகுதியினுள் ஒரு வலையைப் பின்னக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது. சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையினில் பின்னிய நூல் அறுந்து சிலந்தி கீழே விழுந்து விட்டது.

இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும், அது தன் முயற்சியைக் கைவிடாமல் மறுபடி மறுபடியும் முயன்றது. கடைசியில் வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது. அரசன் "இச் சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் விடவேண்டும்? என யோசித்தான்

நானோ அரசன். நான் மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும்" என்று எண்ணினான் மறுபடியம் தன் எதிரியுடன் போர் புரிய தீர்மானித்தான். அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தான்.

தன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு படையை உருவாக்கினான். தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர் புரிந்தான். கடைசியில் போரில் வெற்றியும் பெற்றான். அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றான். தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவன் என்றுமே மறக்கவில்லை.

- ஆனந்த்

Relaxplzz


"தன்னம்பிக்கை கதை"

இன்பத்தை INBOX இல் வை...........! கவலையை OUTBOX இல் வை...........! புன்னகையை SEN...

Posted: 22 Nov 2014 06:52 AM PST

இன்பத்தை INBOX இல் வை...........!
கவலையை OUTBOX இல் வை...........!
புன்னகையை SENT பண்ணு...............!
கோபத்தை DELETE பண்ணு..................!
மனதை VIBRATE செய்து பார்...................!
வாழ்கை தானாக RING TONE ஆக மாறும்..

Relaxplzz


வாழ்வின் மொழி...

அறிவாளிடா நீ..

Posted: 22 Nov 2014 06:43 AM PST

அறிவாளிடா நீ..


வில்லேஜ் விஞ்ஞானி - 2

அம்மா <3

Posted: 22 Nov 2014 06:30 AM PST

உலகின் ஆறு உண்மைகள் . முதல் உண்மை : உங்கள் நாக்கினால் உங்கள் அனைத்துபற்களையும் த...

Posted: 22 Nov 2014 06:15 AM PST

உலகின் ஆறு உண்மைகள்
.
முதல் உண்மை :
உங்கள் நாக்கினால் உங்கள் அனைத்துபற்களையும் தொட
முடியாது !
.
இரண்டாவது உண்மை :
முதல் உண்மையை படிச்சு முடித்தவுடனே எல்லா முட்டாள்களும் இதனை முயற்சி செய்கிறார்கள் !..
.
மூன்றாவது உண்மை :
நீங்க இப்ப சிரிக்கிறீங்க .. ஏன்னா நீங்களும் முட்டாள்
ஆக்கப்பட்டதால் !
.
நான்காவது உண்மை :
இப்ப உங்க நண்பர்களையும் நீங்க முட்டாள்
ஆக்கனும்னு நினைக்கிறீங்க !
.
ஐந்தாவது உண்மை :
இப்ப நீங்க இத எல்லா முட்டாள்களுக்கும் அனுப்பப் போறீங்க !
.
ஆறாவது உண்மை :
முதல் உண்மை ஒரு பொய்....

Relaxplzz

தியாகச்சுடர் காமராசர் காமராசர் இறந்தபோது அவர் வீட்டில் (சென்னையில்) இருந்த மொத்...

Posted: 22 Nov 2014 06:00 AM PST

தியாகச்சுடர் காமராசர்

காமராசர் இறந்தபோது அவர் வீட்டில் (சென்னையில்) இருந்த மொத்த பணம் வெறும் 67 ரூபாய் மட்டுமே. காமராசர் பல வங்கிகளில் பணம் போட்டு வைத்திருக்கிறார் என்று பலர் மேடைகளில் பேசியதுண்டு, எழுதிய துண்டு. அது பொய் என்று நிரூபித்தது இந்த 67 ரூபாய்.

ஒருமுறை முதல்-அமைச்சர் காமராசர் ரெயிலில் பகல் வேளையில் திருநெல்வேலிக்குப் பயணமானார். விருதுநகர் ரெயில் நிலையத்தில் வண்டி நின்றபோது நிறைய பிரமுகர்கள் காமராசரை சந்தித்தனர். காமராசரோ வண்டியில் இருந்து இறங்கவே இல்லை. ரயில் பெட்டியின் வாசலில் நின்று அவர்களின் வரவேற்பைப் பெற்றுக் கொண்டார். வண்டி நகரும் முன் ஒரு தொண்டர் காமராசரிடம் ஐயா அதோ அம்மா நிக்காங்க என்று காட்ட காமராசர் ஏறிட்டுப் பார்த்தார். கூட்டத்துக்கு அப்பால் அவரது தாயார் நின்று கொண்டு மகனைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார். வண்டி நகரத் தொடங்கியது காமராசர் ரெயில் பெட்டியின் வாசலில் நின்று கொண்டிருந்தார். பெட்டியின் வாசல் அவரது தாயாருக்கு நேர் எதிரே வந்த போது, "சௌக்கியமா அம்மா'' என்று காமராசர் கேட்டார். தாயாரின் முகம் மேலும் மலர்ந்தது. வண்டி மேலும் நகர்ந்தது. தனது தாயார் தன்னைக் காணவேண்டும் என்பதற்காக தனது முழு உருவமும் வெளியே தெரியும்படி காமராசர் ரெயில் பெட்டி வாசலில் நின்று கொண்டே இருந்தார். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருக்க ரெயில் தெற்கு நோக்கி வேகம் எடுத்தது.

முதல்-அமைச்சர் பதவியை விட்டு விலகி, அகில இந்திய காங்கிரஸ் தலைவராகி, 1967 தேர்தலில் காமராசர் விருதுநகரிலேயே தோற்கடிக்கப்பட்டார். அதன்பின் நாகர்கோவில் பாராளுமன்ற உறுப்பினரானார். அப்போது சென்னையில் இருந்த காமராசருக்கு, சிவகாமி அம்மையாருக்கு உடல் நலமில்லை என்று சேதி சொன்னார்கள். உடனே புறப்பட்டு விருதுநகர் வந்தார். மதுரை நெடுமாறன் பெருந் தலைவருடன் வந்தார், தாயாரைக் கண்டார். மகனைக் கண்டவுடன் அந்த தாயின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.எனவே காமராசர் சென்னைக்குத் திரும்ப முடிவு செய்தார். தாயாரிடம் சொன்னார். போயிட்டு வாப்பா. ஆனால் நம் வீட்டில் சாப்பிட்டு விட்டுப் போ என்றார், அந்த தாயார் படுக்கையில் படுத்தபடி. சரி சொன்ன காமராசர் அன்று தன் வீட்டில் சாப்பிட்டார். தாயாருக்கு அது பரம திருப்தி. தாயிடம் விடை பெற்ற பின் சென்னைக்கு புறப்பட்டார். உடன் பயணம் செய்த நெடுமாறன் "நீங்கள் வீட்டில் சாப்பிட்டு எவ்வளவு காலம் ஆயிற்று?'' என்று கேட்டார். சற்றே கண்ணை மூடிக்கணக்கு போட்ட காமராசர் நான் என் வீட்டில் சாப்பிட்டு 25 வருஷமாவது இருக்கும் என்றார்.

1937_ல் சட்டசபை தேர்தல் நடந்தது. விருதுநகரை உள்ளடக்கிய சாத்தூர் தொகுதியில் காமராஜர் வெற்றி பெற்றார். காமராஜரை சாரட்டு வண்டி யில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அப்போது, அக்கினித் திராவகம் நிரப்பப்பட்ட மின்சார பல்புகள் அவரை நோக்கி வீசப்பட்டன. நல்லவேளையாக அவை காமராஜர் மீது படாமல் குதிரைகளுக்கு முன்னால் விழுந்து உடைந்து சிதறின.இதனால் மிரண்டு ஓடிய குதிரைகளை, அருகில் இருந்தவர்கள் அடக்கினார்கள்.

பச்சைத் தமிழர் ஆட்சியில்

1956_ல் தொடங்கப்பட்ட மதிய உணவுத் திட்டத்தின் மூலம் 29,017 பள்ளிகளில் மதிய உணவு அளிக்கப்பட்டது. 15 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்தார்கள். பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் நடத்தி, அதன் மூலம் ரூ.6 கோடி வசூலிக்கப்பட்டது. இந்த பணத்தைக் கொண்டு, மாணவர்களுக்கு கரும்பலகை, சீருடை ஆகியவை வழங்கப்பட்டன. மதிய உணவு திட்டத்துடன் காமராஜர் நிற்கவில்லை. கிராமம் தோறும் பள்ளிகள் தொடங்கினார். பள்ளிக்கூடம் இல்லாத ஊரே இல்லை என்ற நிலைமை ஏற்பட்டது. 1954_ல் இருந்த தொடக்கப்பள்ளிகள் எண்ணிக்கை 21 ஆயிரம். இது 1962_ல் 30 ஆயிரமாக உயர்ந்தது. மாணவர்கள் எண்ணிக்கை 29 லட்சத்தில் இருந்து 42 லட்சமாக உயர்ந்தது. இதேபோல் 1954_ல் இருந்த உயர்நிலைப்பள்ளிகள் 2,012. இது 1964_ல் 2,163 ஆக உயர்ந்தது. மாணவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 98 ஆயிரத்தில் இருந்து 10 லட்சத்து 98 ஆயிரமாக அதிகரித்தது. எஸ்.எஸ்.எல்.சி. வரை இலவச கல்வித் திட்டத்தை 1960_ல் காமராஜர் கொண்டு வந்தார். ஆண்டு ஒன்றுக்கு ரூ.1,200_க்கு குறைவாக வரு மானம் உள்ள குடும்பத்தின் மாணவனுக்கு இலவச கல்வி அளிக்கப்பட்டது. இந்த வருமான உச்ச வரம்பு பின்னர் ரூ.1,500 ஆக உயர்த்தப் பட்டது. 1962_ம் ஆண்டில், "வரு மான உச்ச வரம்பு இன்றி எல்லோருக்கும் இலவச கல்வி" என்று காமராஜர் அறிவித்தார். 1963_ம் ஆண்டு, அரசாங்கத்தின் ஒரு ஆண்டு மொத்த செலவே ரூ.127 கோடியே 19 லட்சம்தான். அதில் கல்விக்கு ரூ.27 கோடியே 58 லட்சம் ஒதுக்கப் பட்டது.

"வடக்கு வாழ்கிறது! தெற்கு தேய்கிறது" என்று தி.மு.கழகத்தினர் பிரசாரம் செய்தனர். இது, மக்களின் மனதில் ஆழப் பதிந்தது. தி.மு.கழகத்தின் வளர்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம். தி.மு.க. கூறுவதில் உண்மை இருப்பதை காமராஜரும் உணர்ந்துகொண்டார். எனவே, தமிழ்நாட்டில் பெரிய தொழிற் சாலைகளையும், அணைகளையும் அமைக்க வேண்டும் என்று முடிவு எடுத்தார். மத்திய அரசிடம் வற்புறுத்தி, ஐந்தாண்டு திட்டங்களில் தமிழ் நாட்டுக்கு கணிசமான தொகை ஒதுக்கும்படி செய்தார்.

சென்னை பெரம்பூரில், சுவிட்சர்லாந்து நாட்டு உதவியுடன் ரெயில் பெட்டி தொழிற்சாலை ரூ.12 கோடி செலவில் தொடங்கப்பட் டது. இந்த தொழிற்சாலை மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்தது.

நீலகிரியில் ரூ.11 கோடி மதிப்பில் பிலிம் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. இந்த தொழிற்சாலைக்கான தொழில் நுட்ப உதவியை பிரான்சு வழங்கியது. சென்னை கிண்டியில் இந்துஸ்தான் டெலிபிரிண்டர் தொழிற்சாலை அமைக்கப்பட்டது.

தென்ஆற்காடு மாவட்டம் நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி கிடைக்கும் என்று கண்டறியப்பட்டதும், 1956_ல் ரூ.160 கோடி மதிப்பீட்டில் நெய்வேலி நிலக்கரி கார்ப்ப ரேஷன் அமைக்கப்பட்டது. முதல் கட்டமாக அங்கு 250 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் சக்தி நிலையம் அமைக்கப்பட்டது.

துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலை திருச்சியில் அமைக்கப்பட்டது.

சென்னை கிண்டி, மதுரை, விருதுநகர், திருச்சி உள்பட 9 நகரங்களில் தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டன. மூன்றாவது ஐந் தாண்டு திட்டத்தில் மேலும் 13 தொழிற்பேட்டைகளை அமைக்க அரசு முடிவு செய்தது.

அம்பத்தூரில் 1,200 ஏக்கர் நிலத்தில் பெரிய தொழிற்பேட்டை அமைக்கப்பட்டது. பெரிய, நடுத்தர, சிறிய தொழிற்சாலைகள் இங்கு அமைக்கப்பட்டன. இதேபோன்ற தொழிற் பேட்டை, ராணிப்பேட்டையிலும் அமைக்கப் பட்டது.

கீழ் பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த் திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு ஆகிய 9 பெரும் நீர் பாசன அணைத் திட்டங்கள்

அகண்ட காவிரியின் வலக்கரையில் கட்டளைக்கரை ரெகுலேட்டருக்கு சற்று மேலாக புதிய கட்டளை உயர் மட்ட கால்வாய் அமைத்தார்.

காவேரியின் இடைக்கரையில் ஸ்ரீரங்கத்தின் தொடக்கத்தில் மேல் அணைக்கட்டுக்கு மேல் புள்ளம்பாடி கால்வாய் வெட்டப்பட்டது.

தென்னார்க்காடு மாவட்டம் வடூரின் அருகே வரகத்தின் குறுக்கே அணை கட்டினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நெய்யாறு திட்டம்

கோவையில் பரம்பிக்குளம் _ ஆழியாறு திட்டம்.

தமிழகத்தில் ஆயிரத்து 600 ஏரிகள் அபிவிருத்தி செய்யப்பட்டன.

சென்னை ஆவடியில் ராணுவ டாங்கி தொழிற் சாலை அமைக்கப்பட்டது. அறுவை சிகிச்சைக் கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலை ரஷிய உதவியுடன் அமைக்கப் பட்டது.

பாரத்ஹெவி எலக்ரிக்கல்ஸ்

சிமெண்ட் தொழிற்சாலைகள்.

மேட்டூர் காகித தொழிற்சாலை.

கிண்டியில் உள்ள தொழிற்பண்ணை

சென்னைக்கு அருகே ஸ்டாண்டர்டு மோட்டார் கம்பெனி.

சென்னைக்கு அருகே ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள் தொழிற்சாலை.

மேட்டுப்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள ரயான் செயற்கைப்பட்டு தொழிற்சாலை.

அம்பத்தூரில் உள்ள டன்லப் ரப்பர் கம்பெனி.

தென் ஆற்காடு மாவட்டம் புகளூர், மதுரை பாண்டிராஜபுரம், தஞ்சை வடபாதி மங்கலம், திருச்சி பெட்டவாய்த்தலை, கோவை உடுமலைப்பேட்டை, வட ஆற்காடு ஆம்பூர்,

செங்கல்பட்டு படாளம் ஆகிய ஊர்களில் சர்க்கரை ஆலைகள் தோற்றுவிக்கப்பட்டன.

15 ஆயிரத்து 303 ஆரம்பப் பள்ளிகளை தமிழகத்தில் 26 ஆயிரத்து 700 ஆரம்ப பள்ளிகளாக உயர்த்தினார்.

18 லட்சம் சிறுவர்கள் படித்ததை 34 லட்சம் சிறுவர்கள் படிக்கும் நிலைக்கு தமிழகத்தை உயர்த்தி காட்டினார்.

471 உயர் நிலைப்பள்ளிகளாக இருந்ததை ஆயிரத்து 361 உயர் நிலைப்பள்ளிகளாக கொண்டு வந்தார்.

தமிழகத்தில் 28 கல்லூரிகள் என்று இருந்ததை 50 கல்லூரிகளாக உயர்த்தினார்.

6 பயிற்சி கல்லூரிகளை 17 பயிற்சி கல்லூரிகளாக மாற்றினார்.

தமிழகத்தில் 19 மாதிரி தொழில் பள்ளிகள், 6 செய்முறை தொழிற்பயிற்சி நிலையங்கள், 19 பொது வசதி பட்டறைகள் 5 சமூக நல நிலையங்கள்

இவை போக ஏராளமான சிறு, குறு தொழிற்சாலைகள் தமிழகத்தின் வீதிகளில் தொடங்கப்பட்டன. பெரியார் சொன்னதுபோல் மூவேந்தர் ஆட்சி காலத்திலும் இல்லாத பொற்கால ஆட்சி காமராஜர் ஆட்சி காலத்தில் தான் இருந்தது

தேர்தலில் தோற்றபிறகு சேலத்தில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது. அப்போது எல்லோரும், மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் அரசுகள் இல்லை என்று யாருடனாவது கூட்டு சேரவேண்டும் என்று பேசினார்கள். அப்போது காமராஜருக்கு கோபம் வந்தது. ஏல, போறவனெல்லாம் போங்க! என்னை ஆளை விடுங்க யார் வேணுமானாலும் எங்கேயும் போய் சேருங்க என்று கோபமாக பேசினார். பெருந் தலைவர் ஆத்திரப்பட்டு பேசி விட்டதால் எல்லோரும் வெளியே போயிருவாங்க என்று நினைத்தார்கள் . சுமார் 15 நிமிடம் அமைதி நிலவியது.திடீரென பெருந் தலைவரே பேச ஆரம்பித்தார். நான் எதுக்கு சொல்றேன் தெரியுமா! என்றார். அவரை யாரும் பேச விடல்லை. 10 பேர் எழுந்து தேம்பி, தேம்பி அழுதனர். அதில் பணக்காரர்கள், முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் உண்டு.அவர்கள் எங்களுக்கு பதவி வேண்டாம் ஒன்றும் வேண்டாம் உங்களை விட்டு போக மாட்டோம். தப்பா பேசினால் மன்னியுங்கள் என்று சொன்னதும் கூட்டமே அழுதது.

சென்ற இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஏற்படாத மறுமலர்ச்சியும் விழிப்பும் இப்போது ஏற்பட்டுள்ளன. இதற்கு காரணம் நமது காமராசர்தான். ஊர்தோறும் சாரம் தொழில்வளம் ஏற்பட்டுள்ளன. மூவேந்தர் காலத்தில் கூட நிகழாத இந்த அதிசயத்தை சாதித்த நமது காமராசரின் அறிவுத்திறனை மறுக்க முடியுமா?" என்றார் அறிவாசான் பெரியார்.

Relaxplzz


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் நம்மில் பலர் "இரு செல்" உயிரியாகவே இருக்கிறோம். ஒன்று பேச, ம...

Posted: 22 Nov 2014 05:40 AM PST

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

நம்மில் பலர் "இரு செல்" உயிரியாகவே இருக்கிறோம்.

ஒன்று பேச, மற்றொன்று பேஸ்புக், டுவிட்டர் நோண்ட.

- Jayant Prabhakar

:) Relaxplzz

Posted: 22 Nov 2014 05:30 AM PST

வடநாடுகாரரும் ... தமிழ்நாட்டு முதியவரும் இரயிலில் ஒன்றாக பயனம் செய்கிறார்கள்......

Posted: 22 Nov 2014 05:15 AM PST

வடநாடுகாரரும் ... தமிழ்நாட்டு முதியவரும் இரயிலில் ஒன்றாக பயனம் செய்கிறார்கள்...

முதியவர் காற்று வேண்டுமென ஜன்னலை திறக்க முயற்சிக்கிறார்....முடியவில் லை ..

வடநாடுகாரர் வருகிறார்.. சலோ, சலோ, என்று சொல்லி கண்ணாடியை இழுத்துவிடுகிறார்... திறந்துவிடுகிறது..
கோதுமை சாப்பிடுங்க உடல் வலுவாகிடும் என பெரியவரை பார்த்து சொல்கிறார்..

பெரியவர் அமைதியாகிறார்..

அடுத்து பாத்ரூம் கதவை திறக்க முயல்கிறார்.. முடியவில்லை..

வடநாடுகாரர் வந்து சலோ,சலோ, என வந்து திறந்துவிடுகிறார்... மறுபடியும் பெரியவரை பார்த்து கோதுமை சாப்பிடு உடல்வலுவாகிடும் என்கிறார்..

பெரியவர் அமைதியாகிறார்..

இவனுக்கு பாடம் கற்பிக்க நினைக்கிறார்..

இரயிலின் அபாயசங்கிலியை இழுப்பதை போல பாவனை செய்கிறார்..

உடனே வடநாடுகாரர் வந்து சலோ,சலோ என செயினைபிடித்து இழுக்க வண்டி நிற்கவும் டிடிஆர் வந்து வடநாடுகாரரிடம் பைன்வசூலித்துசெல்கிறார்கள்...

அப்போது அந்தபெரியவர் நிதானமாய் வடநாடுகாரரை பார்த்து சொல்கிறார்... உடல் வலிமையானால் மட்டும் போதாது தம்பி.. மூளையும் வளரனும்... பழையசாதம் சாப்பிடு... மூளை வளரும்.. என்றார் சிரித்துக்கொன்டே..

:P :P

Relaxplzz

ஒருவனின் கவிதை அல்ல ஒரு இனத்தின் அழுகை ஆன்மிகம் தேட வேண்டாம் அன்னதானம் போட வேண்...

Posted: 22 Nov 2014 05:00 AM PST

ஒருவனின் கவிதை அல்ல
ஒரு இனத்தின் அழுகை

ஆன்மிகம் தேட வேண்டாம்
அன்னதானம் போட வேண்டாம்
மது கடைகளை மூடி பாருங்கள் - அந்த
மகேஸ்வரனே உங்களை வணங்குவார் ..

இருப்பதை வைத்து
சிறப்பாய் வாழ்வோம்
குடிப்பதை வைத்து
என்ன வளர்ச்சி ?
வேரிலே விசமென்றால்
ஏது மலர்ச்சி ?

ஊற்றில் விடத்தை கலந்து
ஊருக்கு அனுப்பி என்ன பயன் ?
நாற்றை எல்லாம் கருக விட்டு
வேலியை கட்டி என்ன பயன் ?

மனமும் உடலும் கெடுத்தபின்
மாநிலம் வளர்ச்சி என்ன பயன் ?
குளத்தில் நீரை கெடுத்து விட்டு
குடத்தை வாங்கி என்ன பயன் ?

சமுதாயமே சீரழிந்த பின்
சாலையும் ஆலையும் எதற்கு ?

தமிழகத்தில் எல்லா சாலைகளும்
சுடுகாடு நோக்கி போகிறது .
உடலும் மனமும் போதையிலே
நாடே வீணாய் ஆகிறது

மாநிலம் ,
வசதியாக இல்லையெனும்
பரவாயில்லை -தமிழினம்
நிம்மதியாக வாழ
வழி காட்டுங்கள் ..

ஒருவனின் கவிதை அல்ல
ஒரு இனத்தின் அழுகை

- V.Natarajan @ Relaxplzz


ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு இராணுவ சகோதரிகள். கண்டிப்பாக இவர்களையும் பெற்றோர்...

Posted: 22 Nov 2014 04:50 AM PST

ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு இராணுவ சகோதரிகள். கண்டிப்பாக இவர்களையும் பெற்றோர்களையும் பாராட்டியே ஆக வேண்டும். (y) (y)


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் முகத்துக்கு முன்னாடி அதிகம் புகழ்பவா்கள் , முதுகுக்கு பின்னாட...

Posted: 22 Nov 2014 04:40 AM PST

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

முகத்துக்கு முன்னாடி அதிகம் புகழ்பவா்கள் ,
முதுகுக்கு பின்னாடி கட்டாயம் இகழத்தான் செய்வாா்கள்

- Rockét Märéés

:) Relaxplzz

Posted: 22 Nov 2014 04:30 AM PST

மனைவி:உங்க அம்மா அதைக் கொடுத்தேன்,இதைக கொடுத்தேன் என்று குத்திக் காண்பித்துக் கொ...

Posted: 22 Nov 2014 04:15 AM PST

மனைவி:உங்க அம்மா அதைக் கொடுத்தேன்,இதைக கொடுத்தேன் என்று குத்திக் காண்பித்துக் கொண்டேயிருந்தார கள்,இல்லையா?

இன்று அவர்கள் கொடுத்த பொருட்களையெல்லா ம் அவர் மூஞ்சியிலே விட்டெறிந்து விட்டேன்.....

கணவன்:பேஷ்,பேஷ் !........
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
மனைவி:அதில் அம்மிக் குழவியும் ஒன்னு
?
?
?
கணவன்... அடிப்பாவி...............................???? :O :O

Relaxplzz

மதுரைஅப்துல் ரஜாக்கின் அதிர வைக்கும் கண்டுபிடிப்புகள்! மதுரையில் பீபீகுளம் பகுத...

Posted: 22 Nov 2014 04:00 AM PST

மதுரைஅப்துல் ரஜாக்கின் அதிர வைக்கும் கண்டுபிடிப்புகள்!

மதுரையில் பீபீகுளம் பகுதியில் வசிக்கும் நாற்பத்தியோரு வயதாகும் அப்துல் ரஜாக், ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். தினசரி கூலி வேலைக்குச் செல்லும் வறியவர். அதே நேரத்தில் இராணுவத்தினருக்கான சூடான உடை, 2-இன் - ஒன் குக்கர், இரு பக்கம் காற்றினைத் தரும் டேபிள் ஃபேன், துளை விழாத டயர், வயரில்லாத ஃபோன் சார்ஜர் உட்பட 20 க்கும் மேற்பட்ட நூதன கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர்.

சாதாரண எலக்ட்ரீஷியனாக நிலையில்லாமல் கிடைக்கும் இடங்களில் அங்கும் இங்கும் அலைந்து வேலை செய்து காலத்தை ஓட்டிக் கொண்டு வரும் அப்துல் ரஜாக், தான் வசிக்கும் பகுதியில் வாகனங்களில் டயர்கள் அதிக அளவில் திருட்டு போவதை அறிந்தார். அதனைத் தொடர்ந்து இத்திருட்டுக்களைத் தடுக்க "சேஃப்டி லாக்' ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

இந்த சாதனத்தைத் தயாரிக்க இவருக்கு செலவான தொகை வெறும் இருநூறு ரூபாய் மட்டுமே. இதைக் குறித்து அப்துல் ரஜாக் செய்தியாளர்களிடம் பேசுகையில் "மோட்டார் பைக், கார் சக்கரத்தில் உள்ள நட்டுகள் எவரும் கழற்றும் விதத்தில் வடிவமைக்கப் பட்டு இருப்பதால்தான் டயர்கள் திருடு போகின்றன. எனது கண்டுபிடிப்பான இந்த "சேப்டி லாக்' நட்டுகள் பகுதியை முற்றிலும் மறைக்கும். அத்துடன் பார்வைக்கும் அழகாக இருக்கும். அத்துடன், டியூபிலிருந்து எவரும் காற்றை வெளியேற்றி விட முடியாது. உரிமையாளர் தவிர வேறு எவரும் இப்பகுதியை திறக்க முடியாதவாறு இந்த சாதனம் வடிவமைத்துள்ளேன்" என்றார்.

மேலும் பேசுகையில் "எனது இந்த கண்டுபிடிப்பிற்கான அரசுபூர்வமான காப்புரிமை (Patent) பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் என்னை அணுகினால் மாதிரி செய்முறை (Demo) காண்பிக்க தயாராக உள்ளேன்" என்றார். போலீஸ் கமிஷனர் பாலசுப்பிரமணியன், நுண்ணறிவுப் பிரிவு உதவி கமிஷனர் குமாரவேல் ஆகியோர் அப்துல் ரஜாக்கின் கண்டுபிடிப்புகளை வரவேற்று பாராட்டுதல்களைத் தெரிவித்துள்ளனர்.

இந்த சாதனைக்காக சென்ற ஆண்டு தேசிய விருது கிடைத்ததும், இந்திய ராணுவ வீரர்களுக்காக பிரத்யேகமாக தயாரித்துள்ள "வார்ம் ஜாக்கெட்" என்று பெயரிட்டுள்ள சூடான உடையினைத் தயாரித்துள்ள அப்துல் ரஜாக்கை பாதுகாப்பு அமைச்சகம் / Ministry of Defence (MoD)டெல்லிக்கு அழைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இத்தனை அமளிகளுக்குப் பிறகும் தினசரி பிழைப்பிற்கோ, குடும்பம் நடத்துவதற்கோ வழியின்றி ஏழ்மைச் சூழலிலேயே காலம் தள்ளுகிறார் அப்துல் ரஜாக். பாதுகாப்பு அமைச்சகத்தின் அழைப்பின் காரணமாக டெல்லி செல்வதற்கான செலவுத் தொகை ரூ.3000 கூட கையில் இல்லாத வருத்தம் அவர் கண்களில் தெரிந்தது. பட்டப் படிப்புகள் முடித்தப் பின்னரும், உயர்ந்த நிறுவத்தில் வேலை வாய்த்தால் தான் போவேன் என்ற வறட்டு பிடிவாதத்துடன் வேலை வெட்டி எதுவும் செய்யாமல் வெறுமனே சுற்றி வரும் இளைஞர்களிடையே, பள்ளிக்கல்வியைக் கூட முடிக்காத அப்துல் ரஜாக் சிறந்த முன் மாதிரியாகத் திகழ்கிறார்.

ஏழை தானே என்று அலட்சியப் படுத்தி விடாமல், அப்துல் ரஜாக் போன்ற கண்டுபிடிப்பாளர்களை தமிழக அரசு தாமதமின்றிக் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நம் கோரிக்கையாகும்..

Relaxplzz


அழகு

Posted: 22 Nov 2014 03:50 AM PST

அழகு


தொப்பியும் கறுப்பு கண்ணாடியும் இல்லாத எம்.ஜி.ஆர்

Posted: 22 Nov 2014 03:40 AM PST

தொப்பியும் கறுப்பு கண்ணாடியும் இல்லாத எம்.ஜி.ஆர்


"அரிய புகைப்படங்கள்"

:) Relaxplzz

Posted: 22 Nov 2014 03:31 AM PST

லேட்டஸ்ட் நோக்கியா கேமரா மொபைல் இது தான்... :P :P

Posted: 22 Nov 2014 03:22 AM PST

லேட்டஸ்ட் நோக்கியா கேமரா மொபைல்
இது தான்... :P :P


வில்லேஜ் விஞ்ஞானி - 2