Friday, 10 April 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


நரேந்திரமோடி டிவிட்டர்ல இருக்காரு, ஃபேஸ்புக்ல இருக்காரு... இந்தியால மட்டும் இருக...

Posted: 10 Apr 2015 08:21 PM PDT

நரேந்திரமோடி
டிவிட்டர்ல இருக்காரு,
ஃபேஸ்புக்ல
இருக்காரு...
இந்தியால மட்டும்
இருக்கமாட்டாரு..

@செந்தில்

ஆந்திர முதல்வர் தலைமையில் வனத்துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று ஹைதராபாத...

Posted: 10 Apr 2015 11:16 AM PDT

ஆந்திர முதல்வர்
தலைமையில்
வனத்துறை
அதிகாரிகளின்
ஆலோசனைக் கூட்டம்
நேற்று ஹைதராபாத்தில்
நடைபெற்றது..
இதில்,
முதல்வர் "சந்திரபாபு
நாயுடு"..
உள்துறை அமைச்சர்
"சின்ன ராஜப்பா"...
வனத்துறை அமைச்சர்
"பொஜ்ஜல கோபால
கிருஷ்ணா ரெட்டி"..
தலைமை செயலர்
"கிருஷ்ணாராவ்"..
மாநில போலீஸ் டிஜிபி
"ராமுடு"...
உட்பட உயர் வனத்துறை
அதிகாரிகள் பலர்
பங்கேற்றனர்.
என்ன கருமம்டா இது,
ஆந்திர அரசு பதிவியில
எல்லாருமே
ஆந்திரகாரர்களா
இருக்காங்க.. அதெல்லாம்
ஒரு மாநிலமா...
தமிழ்நாட்டை
முன்னுதாரனமா
எடுத்துகோங்கடா.. இங்க
இருக்குற எட்டப்பர்களால
ஒரு தமிழன் கூட
உயர்பதவியில இருக்க
முடியாது... அதனால
தமிழன் தமிழனாவே
இருக்க முடியாது...

Posted: 10 Apr 2015 11:08 AM PDT


புதுச்சேரியில் ஆந்திர பேருந்து எரிப்பு! பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்...

Posted: 10 Apr 2015 10:51 AM PDT

புதுச்சேரியில் ஆந்திர பேருந்து எரிப்பு!

பொங்கு தமிழர்க்கு
இன்னல் விளைத்தால்
சங்காரம் நிசம்...


ஒரே ஒரு மீனவன சுட்டுட்டான்னு கேரளாகாரன் இத்தாலிகாரனையே தூக்கி உள்ள வெச்சான்..இங்...

Posted: 10 Apr 2015 10:38 AM PDT

ஒரே ஒரு மீனவன
சுட்டுட்டான்னு
கேரளாகாரன்
இத்தாலிகாரனையே
தூக்கி உள்ள
வெச்சான்..இங்க
என்னடான்னா எழவு வீட்ல
அழுதுகிட்ட இருக்குற
பொம்பளைங்ககிட்ட மைக்க
குடுத்து பணம் குடுத்து
உதவிய மக்களின்
முதல்வருக்கு நன்றி
சொல்லச் சொல்லி
அதையும்
ஓட்டாக்குறாங்க!.

@சசிதரன்

தமிழ் கல்வெட்டின் அருமை தெறியாமல், அதன் மேல் சிமெண்ட் கலவை கொட்டி மூடர்கள்...

Posted: 10 Apr 2015 04:45 AM PDT

தமிழ் கல்வெட்டின் அருமை தெறியாமல், அதன் மேல் சிமெண்ட் கலவை கொட்டி மூடர்கள்...


நிலம் கையகப்படுத்தல் சட்டத்தால் 30 கோடி பேருக்கு வேலை கிடைக்கும் - அருண்ஜேட்லி....

Posted: 10 Apr 2015 04:24 AM PDT

நிலம் கையகப்படுத்தல் சட்டத்தால் 30 கோடி பேருக்கு வேலை கிடைக்கும் - அருண்ஜேட்லி.

எத்தனை கோடி விவசாயிகள் சாப்பாட்டில் மண் அள்ளிப் போடப் போறீங்க,அந்த கணக்கை சொல்லுங்க

- இளையராஜா டென்டிஸ்ட்

ஒரு பொண்ணுக்காக குடிய விட்டுட்டேன்னு சொல்றவங்க லிஸ்ட்டில் எப்போதும் தாய், தங்கை...

Posted: 09 Apr 2015 10:12 PM PDT

ஒரு பொண்ணுக்காக
குடிய
விட்டுட்டேன்னு
சொல்றவங்க லிஸ்ட்டில்
எப்போதும் தாய், தங்கை
வருவதே இல்லை.!!!

@காளிமுத்து

சென்னையில் சந்திரபாபு நாயுடுவுக்கு சொந்தமான ஹெரிட்டேஜ் ப்ரஷ் சூப்பர் மார்க்கெட்...

Posted: 09 Apr 2015 10:08 PM PDT

சென்னையில்
சந்திரபாபு
நாயுடுவுக்கு
சொந்தமான
ஹெரிட்டேஜ் ப்ரஷ்
சூப்பர் மார்க்கெட் மீது
தாக்குதல்!!

#தமிழகத்தில் 800 வருடங்களுக்கு பிறகு திராவிடர்கள் மீதான எதிர்ப்பு இப்போது தான் தொடங்கியுள்ளது.. நாம ரொம்ப லேட் பாஸ்...


Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


கி.பி. 1225-ல் ஒரு சீன அறிஞர் சோழ நாட்டைப் பற்றியும் சோழர்படையைப் பற்றியும் பின்...

Posted: 10 Apr 2015 06:18 AM PDT

கி.பி. 1225-ல் ஒரு சீன அறிஞர் சோழ நாட்டைப் பற்றியும் சோழர்படையைப் பற்றியும் பின்வருமாறு எழுதியுள்ளார்.

"இந்நாடு மேற்கு நாடுகளுடன் போரிட்டுக் கொண்டிருக்கிறது. அரசாங்கத்தினரிடம் ஏறக்குறைய அறுபது ஆயிரம் போர் யானைகள் உள்ளன. ஒவ்வொரு யானையும் 6 அல்லது 7 அடி உயரம் உள்ளது. போரிடும்போது யானைகளின் மீது அம்பாரிகள் அமைத்து அவற்றில் வீரர்கள் அமர்ந்து கொண்டு நெடுந்தொலைவிற்கு அம்பு எய்கின்றார்கள். அருகே உள்ளவர்கள் ஈட்டிகளால் தாக்குகின்றனர். வெற்றி அடைந்தவுடன் யானைகளுக்கு விருந்து கொடுத்து கௌரவிக்கின்றனர். சிலர் அவைகளுக்கு பொன்னாலான அம்பாரிகளைப் பரிசாகத் தருகின்றன. ஒவ்வொரு நாளும் அரசர் முன் யானைகள் கொண்டுவரப்படுகின்றன.

Chinese geographer Chau Ju-kua, writing in about 1225, gives the following account of the Chola army:
This [Chola] country is at war with the kingdom of the [west] of India. The government owns sixty thousand war elephants, every one seven or eight feet high. When fighting these elephants carry on their backs houses, and these houses are full of soldiers who shoot arrows at long range, and fight with spears at close quarters


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


:P @relax

Posted: 10 Apr 2015 09:20 AM PDT

:P @relax


வாழ்க்கை ஒரு ஓவியம் அல்ல திரும்ப திரும்ப வரைவதற்கு அது ஒரு சிற்பம் செதுக்கினால்...

Posted: 10 Apr 2015 08:50 AM PDT

வாழ்க்கை ஒரு ஓவியம் அல்ல திரும்ப திரும்ப வரைவதற்கு
அது ஒரு சிற்பம்
செதுக்கினால் செதுக்கியதுதான் !!


தமிழ் மொழியில் அப்படி என்ன சிறப்பு என்று கேட்பவர்களுக்கு.. உலகில் அதிக சொற்கள்...

Posted: 10 Apr 2015 08:10 AM PDT

தமிழ் மொழியில் அப்படி என்ன சிறப்பு என்று கேட்பவர்களுக்கு..

உலகில் அதிக சொற்கள் கொண்ட மொழி எது? ஆங்கிலமா? என்று பலரும் கேட்கிறார்கள்.

ஆக்ஸ்போர்டு அகரமுதலி (Oxford Dictionary) ஒரு பக்கத்தில் இந்த கேள்வியை எழுப்பி விடையும் தந்துள்ளனர்.

20 தொகுதி கொண்ட ஆக்ஸ்போர்டு அகரமுதலியில் 171,476 சொற்கள் உள்ளன. ஆனால் மொத்தம் 250,000 சொற்களுக்குக் குறையாமல் இருக்குமாம்.

சொற்பொருள்களைக் கணக்கில் கொண்டால் முக்கால் மில்லியன் (750,000) இருக்கலாம்.

ஆனால் தமிழில் 12,000 பக்கங்கள் கொண்ட தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலியில் ஏறத்தாழ 500,000 தமிழ்ச்சொற்கள் உள்ளன.

Relaxplzz

8 மாசமா சாப்ட ஆப்பிள், ஆரஞ்சு , மாதுளைல கிடைக்காத மகிழ்ச்சி இந்த நுங்க பார்த்தது...

Posted: 10 Apr 2015 07:40 AM PDT

8 மாசமா சாப்ட ஆப்பிள், ஆரஞ்சு , மாதுளைல கிடைக்காத மகிழ்ச்சி இந்த நுங்க பார்த்ததும் கிடைச்சிட்டு.. (y)


:) Relaxplzz

Posted: 10 Apr 2015 07:30 AM PDT

:) Relaxplzz

Posted: 10 Apr 2015 07:20 AM PDT

மூன்று இளம் பெண்கள் ஒரு ஆணைக் காதலித்தனர்.... அவர் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுக்க எ...

Posted: 10 Apr 2015 07:10 AM PDT

மூன்று இளம் பெண்கள் ஒரு ஆணைக் காதலித்தனர்....

அவர் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுக்க எண்ணினார்....

அவர் மூன்று பெண்களிடமும் ரூ.5000 கொடுத்து ஒவ்வொருவரும் இதனை செலவிட்டு வாருங்கள் என்று அவர்களை சோதிக்க எண்ணினார்....
.
.
.
.
.
.
முதல் பெண் நிறைய
புதிய ஆடைகள் மற்றும் மேக்கப் சாதனங்களை வாங்கி தன்னை அலங்கரித்துக் கொண்டு, அவர் பார்வைக்கு நான் அழகாயிருப்பேன் எனத் தனக்குத்தானே கூறிக்கொண்டாள்....

இரண்டாவது பெண் செலவு செய்து அவருக்கு சட்டைகள் மற்றும் வாசனை திரவியங்கள் வாங்கி வைத்து, அவருக்காக எல்லாவற்றையும் வாங்கினேன் எனக் கூறிக்கொண்டாள்....

மூன்றாவது பெண் பணத்தை முதலீடு செய்தாள், இலாபம் கிடைத்தது, இலாபத்தை சேமிப்பில் வைத்துவிட்டு அசல் ரூபாயை அவரிடம் ஒப்படைக்க எண்ணினாள்,
இலாபத்தொகை அவர்களின் எதிர்கால சேமிப்புக்கு உதவும் என எண்ணினாள்....
.
.
இறுதியாக மனிதன் அப்பெண்களில் ஒருவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்....
.
.
.
.
.
.
.
.
யாரை தேர்ந்தெடுத்திருப்பார்????
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.மேக்கப் போட்டுட்டு வந்த முதல் பெண்ணைத்தான்,
அவள் ரொம்பவும் அழகாக இருந்தாள் .... :P :P

.
.
..நீதி : "ஆண்கள் எப்போதும் அழகை ஆராதிப்பவர்கள் " . :D :D

Relaxplzz

பேரிச்சம் பழத்தில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள். நிறைய பேர் டயட்டில் இருக்கும்...

Posted: 10 Apr 2015 07:00 AM PDT

பேரிச்சம் பழத்தில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள்.

நிறைய பேர் டயட்டில் இருக்கும் போது பேரிச்சம் பழத்தையும் சேர்த்துக் கொள்வார்கள். ஏன் என்று தெரியுமா? ஏனெனில் அதில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன.

மேலும் மருத்துவர்களே தினமும் பேரிச்சம் பழத்தையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள். அதிலும் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் கூட தினமும் 1-2 பேரிச்சம் பழம் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் இருக்கும்.
மேலும் பல கிழக்கிந்திய நாடுகளில் இந்த பேரிச்சம் பழம், அனைத்து உணவுகளிலும் சேர்க்கப்பட்டிருக்கும். அத்தகைய பேரிச்சம் பழத்தில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. சொல்லப்போனால் 1 பேரிச்சம் பழத்தில் 23 கலோரிகள் இருப்பதோடு, கொலஸ்ட்ரால் இல்லாமல் இருக்கிறது. அதிலும் இந்த பழத்தை உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட, இந்த இனிப்பான பழத்தை சாப்பிடலாம். இதனால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். சரி இப்போது அந்த பழத்தின் வேறு நன்மைகளைப் பற்றி ஆராய்வோமானால்,

மூட்டு வலி:

இன்றைய காலத்தில் மக்கள் மூட்டு வலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சனை வருவதற்கு முக்கிய காரணம் கால்சியம் குறைபாடேயாகும். ஆகவே தினமும் சிறிது பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால், ஒரு நாளைக்கு தேவையான கால்சியம் சத்தை பெறுவதோடு, மூட்டு வலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றை சரிசெய்யலாம்.

பார்வை கோளாறு:

பேரிச்சம் பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளன. ஆகவே கண் பார்வைக்கு தேவையான வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால், மாலைக்கண் நோய் ஏற்படாமல் தடுக்கும்.

கர்ப்பம் :

கர்ப்பிணிகளின் உடலில் இரத்தம் குறைவாக இருந்தால், பேரிச்சம் பழத்தை அதிகம் சாப்பிடுமாறு மருத்துவர்கள் சொல்வார்கள். இந்த பழத்தில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் செலினீயம் போன்றவை அதிகமாக உள்ளன. இவை அனைத்து கருவின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள். மேலும் இதில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது. ஆகவே கர்ப்பமாக இருக்கும் போது, இதனை அதிகம் சாப்பிட்டால், உடலில் உள்ள இரத்தத்தின் அளவானது குறையாமல் பாதுகாத்து கொள்ளும்.

குடல் கோளாறு :

பேரிச்சம் பழத்தில் கால்சியம், வைட்டமின் பி5, நார்ச்சத்து, வைட்டமின் பி3, பாஸ்பரஸ், கொழுப்பு, பொட்டாசியம் மற்றும் காப்பர் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆகவே அத்தகைய பேரிச்சம் பழத்தை, தினமும் சாப்பிட்டு வந்தால், குடலில் ஏதேனும் கோளாறுகள் இருந்தாலும் சரியாகிவிடும்.

பற்சொத்தை :

நிறைய பேர் பல் சொத்தையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த பேரிச்சம் பழத்தை சாப்பிட்டால், பற்களில் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் தடுக்கலாம். ஏனெனில் இதில் ஃப்ளோரின் என்னும் சத்து அதிகம் உள்ளது. எனவே பற்களில் ஆரோக்கியத்திற்கு இந்த சத்து மிகவும் இன்றியமையாதது.

மலச்சிக்கல்:

மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள், இரவில் படுக்கும் போது பேரிச்சம் பழத்தை நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்து அதனை சாப்பிட்டால், இந்த பிரச்சனையை தவிர்க்கலாம். ஏனெனில் இந்த பழத்தில் புரோட்டீன் மற்றும் இதர சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், சரிசெய்துவிடும்.

Relaxplzz


யானைகளை பற்றிய சில வியப்பூட்டும் செய்திகள்:- 1. உயிரினங்களில் யானையால் மட்டுமே...

Posted: 10 Apr 2015 06:10 AM PDT

யானைகளை பற்றிய சில வியப்பூட்டும்
செய்திகள்:-

1. உயிரினங்களில் யானையால்
மட்டுமே துள்ளி குதிக்க முடியாது.

2.தண்ணீர் இருப்பதை சுமார் 5 கிலோ மீட்டர்
தூரத்தில் வரும்போதே வாசனை மூலம்
தெரிந்துகொள்ளும்.

3. யானையின் பற்கள் சுமார் 5
கிலோ எடை வரை இருக்கும்.

4. ஆப்ரிக்கன் யானைக்கு நான்கு பற்கள்தான்.
ஆறு முறை பற்கள் விழுந்து முளைக்கும்.
கடைசி நேரம் பல் விழும்போது சரியாக
சாப்பிடாது.

5. நன்கு வளர்ந்த ஆப்ரிக்கன் யானையின்
தந்தத்தின் நீளம் சுமார் ஏழு அடிகள்
வரை இருக்கும்.

6. யானை துதிக்கையின் மூலம் 7.5 லிட்டர்
தண்ணீரை எடுத்து குடிக்கும் திறனுடையது.

7. ஒரு நாளைக்கு சுமார் 350 லிட்டர்
தண்ணீரை குடிக்கும்.

8. ஆப்ரிக்கன் யானைகள் சூரிய வெப்பத்தில்
இருந்து காத்து கொள்வதற்கு முதலில்
தண்ணீரை எடுத்து தனது உடலில் தெளிக்கும்
பின் புழுதியை எடுத்து உடம்பில்
தூற்றி கொள்ளும். அந்த சகதி லேயர் மூலம்
வெப்பத்தில் இருந்து காத்துக்கொள்ளும்.
பூச்சிகடியில் இருந்தும் இப்படித்தான்
காத்துக்கொள்ளும்.

9. யானையின் துதிக்கையின் நுனியில் உள்ள
இரண்டு விரல்கள் மூலம் சின்ன
குண்டுஊசியை கூட எடுத்துவிடும்.

10. யானைகளால்
அறுபது கட்டளை வார்த்தைகளை புரிந்து கொள்ளும்.

11. சராசரியாக சுமார் எழுபது வருடம்
வரை உயிர்வாழும்

12. யானையின் communication
பூனையை போன்றே இருக்கும்.

13. பொதுவாக ஒரு யானை கூட்டத்தில்
ஓன்று முதல் ஆயிரம் யானைகள் வரை இருக்கும்,
கூட்டத்தை வழிநடத்தி செல்வது வயதான பெண்
யானைதான்.

14. பொதுவாக யானை கூட்டத்தில் பெண்
யானைகளும் குட்டிகளும் தான் இருக்கும்.
வயது வந்த ஆண் யானைகள்
கூட்டத்தை விட்டு பிரிந்து விடும்.

15. நான்கு வருடத்திற்கு ஒரு முறைதான்
குட்டி போடும், அதிசயமாக சிலநேரங்களில்
இரண்டு குட்டிகள் கூட போடும்.

16. 24 மணிநேரம் தண்ணீர் அருந்தவில்லை எனில்
உயிரை விட்டுவிடும்.

17. யானை துதிக்கை சுமார் 1,50,000
தசைகளால் ஆனது. மனிதன் உடம்பில் மெத்த
தசைகளே 640 தான்.

18. தாய்லாந்து நாட்டின் தேசிய
விலங்கு யானைதான்.

Relaxplzz

பதினான்கு வயதில் சாதனை செய்த பதினான்கு பிரபலங்கள் பற்றிய தொகுப்பு ==============...

Posted: 10 Apr 2015 06:10 AM PDT

பதினான்கு வயதில் சாதனை செய்த பதினான்கு பிரபலங்கள் பற்றிய தொகுப்பு
=======================================

சாப்ளின்
-------------
அப்பாவை பிரிந்து அம்மா மனநிலை பிறழ்ந்த நிலையில் பசியோடும் வலியோடும் வாழ்ந்தாலும் அதை மறைத்துக் கொண்டு மேடை நாடகம் ஒன்றில் நகைச்சுவை வேடத்தில் பதினான்கு வயதில் தோன்றி அந்த குட்டிப் பையன் நடிக்கிறான் நாடகம் தோல்வியடைகிறது. அந்த சிறுவனின் நடிப்பு மட்டும் பிரமாதம் என பத்திரிகைகள் புகழ்கின்றன. அந்த சிறுவன் சாப்ளின்.

அப்துல் கலாம்
----------------------
உலகப்போர் சமயம் அது, வீட்டில் வறுமை தாண்டவமாட தினமணி செய்தித்தாள்களை தொடர்வண்டியில் இருந்து வீசும் பொழுது அதைப்பெற்று ஊரெல்லாம் விநியோகம்
செய்து வீட்டின் வறுமை போக்க உதவுகிறான் அந்த சுட்டிப்பையன் கூடவே செய்திகளை ஊரில் பலருக்கு படித்து காண்பிக்கவும் செய்கிறான். வருங்காலத்தில் செய்திதாள்களெல்லாம் கொண்டாடப்போகும் அந்த பொறுப்பான சிறுவன் அப்துல் கலாம்

மலாலா
--------------
தாலிபான்கள் முதலிய தீவிரவாதிகளின் அச்சுறுத்தலால் பெண் குழந்தைகள் படிக்க முடியாமல் தடுக்கப்படும் அவலத்தை உலகுக்கு தன் எழுத்தின் மூலம் எடுத்து சொன்னவரும் அவர்களின் கல்விக்காக தொடர்ந்து போராடியவரும் ஆன மலாலாவுக்கு அவரின் பதினான்காம் வயதில் பாகிஸ்தானின் முதல் தேசிய இளைஞர் அமைதி விருது வழங்கப்பட்டது.

சுவாமி விவேகானந்தர்
-----------------------------------
பதினான்கு வயதில் ராய்பூரை நோக்கி சொந்த ஊரான கல்கத்தாவில் இருந்து அப்பாவின் பணிமாறுதல் காரணமாக படிக்க போன நரேந்திரன் அங்கே நல்ல பள்ளிகள் இல்லாததால் பள்ளிக்கு போகாமல் வீட்டில் இருந்த பொழுது விளையாடி பொழுது போக்காமல் அப்பாவுடன் பல்வேறு ஆழமான தலைப்புகளில் அனுதினமும் பேசி பேசி அறிவை விரிவு செய்து கொண்டான். உலகமே சுவாமி விவேகானந்தர் என புகழும் மாமனிதரே அந்த சிறுவன்

ஷேக்ஸ்பியர்
----------------------
தந்தை பல்வேறு கடன்கள் வாங்கி திருப்பி செலுத்ததால் சிறையில் தள்ளப்படுகிறார், தங்கை இறந்து போகிறார், பள்ளியை விட்டு நிறுத்தப்படுகிறார், சொந்த வீடும் பறிபோகிறது. அந்த பதினான்கு வயது சிறுவன் அதை யெல்லாம் மறக்க தானே தனியாக முயற்சி செய்து தலை சிறந்த நூல்களை தேடித்தேடி படிக்கிறான். உலகின் தலைசிறந்த நாடகாசிரியர் ஷேக்ஸ்பியர் தான் அந்த சிறுவன்.

விஸ்வநாதன் ஆனந்த்
-----------------------------------
பதினான்கு வயதில் தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டார் அந்த சிறுவன் யாருமே செய்யாத சாதனையான ஒன்பதிற்கு ஒன்பது என அனைத்து போட்டிகளிலும் வென்று தேசிய சாம்பியன் ஆனார். மின்னல் வேகத்தில் அவனின் மூவ்கள் இருந்தன. அந்த மின்னல் வேக ஆட்டக்காரர் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்

மைக்கேல் பாரடே
---------------------------
அந்த சிறுவனின் அப்பா கொல்லராக இருந்தார், சாப்பாட்டிற்கே வீட்டில் கஷ்டம், பள்ளி கல்வியே கிடைக்காமல் தானே முயன்று கற்க வேண்டிய சூழல், சிறுவன் புத்தக பைண்டிங் செய்யும் ஒரு கடையில் வேலைக்கு சேர்ந்து அங்கே வரும் புத்தகங்களை அந்த வயதில் படித்து தேறினான். அவன் பிற்காலத்தில் அறிவியல் உலகின் தலைசிறந்த சோதனையாளர் என புகழப்பட்ட மைக்கேல் பாரடே.

பீலே
---------
சா பாலோ மாநில கால்பந்து போட்டிகளில் கலந்து கொண்டான் அந்த பதினான்கு வயது பொடியன், இருந்தவர்களிலே நான் தான் மிகவும் குட்டிப்பையன் புல் தரையில் இல்லாமல் செயற்கை மைதானத்தில் ஆடுவது பயத்தை தந்தது. ஆனால் பந்து காலில் பட்டதும் மீன் நீரில் நீந்துவதை போல ஆடுவோம் என முடிவு செய்து ஆடினேன் என்று அதை இன்று விவரிக்கும் அவன் அந்த தொடரில் அதிகபட்சமாக பதினைந்து கோல்கள் அடித்தேன். வயதிற்கும் சாதனைக்கும் சம்பந்தம் இல்லை என நான் புரிந்து கொண்ட வயது பதினான்கு. அவர் தான் உலகின் தலை சிறந்த கால்பந்தாட்ட வீரர் என புகழப்படும் பீலே. (மூன்று உலகக்கோப்பையை பிரேசில் வெல்ல காரணமானவர்).

மொசார்ட்
----------------
மிட்ரிடேட் ரி டி போன்ட்டோ எனும் இசைக்கோர்வை மொசார்ட் எனும் தலைசிறந்த இசைமேதை எழுதிய பொழுது வயது பதினான்கு. பதினான்கு வயது சிறுவன் ஆயிற்றே என சந்தேகத்தோடு வல்லுனர்கள் அதை இசைத்தார்கள் எந்த மாற்றமும் இல்லாமல் மக்களால் மாபெரும் வரவேற்பை பெற்றது. இருபத்தோரு முறை மக்கள் முதல் முறை இசைத்த பொழுது மீண்டும் மீண்டும் இசைக்க செய்தார்கள். ரோமை மீட்க போராடும் மிட்ரிடேட் எனும் மன்னனின் கதையை சொல்லும் இசைக்கோர்வையே அது.

பில் கேட்ஸ்
-------------------
எப்படி டைம் டேபிள் போடுவது என திணறிக்கொண்டு இருந்த பள்ளிக்கு பதினான்கு வயதில் செயல்பாட்டு திட்டத்தை கச்சிதமாக ப்ரோக்ராமிங் மூலம் நண்பர் பால் ஆலனோடு இணைந்து வடிவமைத்து கொடுத்து பள்ளியில் நான்காயிரத்து இருநூறு டாலர் வருமானம் பார்த்த அந்த சாகசக்கார பையன் பில் கேட்ஸ்.

பாப்லோ பிகாசோ
----------------------------
லோலா என்கிற தன் தங்கையை இழந்த சோகத்தில் முதல் கம்யூனியன் என்கிற அவள் நினைவாக ஒரு ஓவியத்தையும், ஆன்ட் பெப்பா என்கிற இன்னொரு ஓவியத்தையும் அந்த பதினான்கு வயது சிறுவன் தீட்டினான். அகோரமாக இருக்கிறது, ஒன்றும் புரியவில்லை என ஏளனம் செய்தார்கள் பலர். ஆனால் அந்த ஆன்ட் பெப்பா ஸ்பெயினின் தலைசிறந்த ஓவியங்களில் ஒன்றாக பிற்காலத்தில் குறிக்கப்பட்டது. அந்த சிறுவன் தான் நவீன ஓவியங்களின் தந்தை என போற்றப்பட்ட பாப்லோ பிகாசோ.

பகத் சிங்
---------------
பதினான்கு வயதிற்கு முன்னமே விடுதலை போரில் பங்குகொள்ள ஆரம்பித்து இருந்த அந்த தைரியம் மிகுந்த சிறுவன் பல்வேறு அப்பாவி மக்கள் கொல்லபடுவதற்கு காரணமான குரு கிரந்த்தசாஹிப் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து அமைதி வழியில் போராடிய குழுவினர் ஊர் ஊராக சென்று ஆதரவு திரட்டிய பொழுது தன் ஊரில் முன்னணியில் நின்று அவர்களை ஆங்கிலேயருக்கு அஞ்சாமல் பதினான்கு வயதில் வரவேற்றான். அந்த வீரச்சிறுவன் பகத் சிங்.

தாமஸ் அல்வா எடிசன்.
------------------------------------
படிக்க லாயக்கில்லை என பள்ளியை விட்டு ஐந்து வயதில் துரத்தப்பட்டு அம்மாவின் கவனிப்பில் மற்றும் கற்பிப்பில் வளர்ந்த அந்த சிறுவன் தன் பதினான்காம் வயதில் நாடு முழுக்க உள்நாட்டு போர் நடந்துகொண்டு இருந்த பொழுது சுடச்சுட செய்திகளை தானே முழுக்க முழுக்க தொடர் வண்டியிலேயே அச்சிட்டு அங்கேயே தி வீக்லி ஹெரல்ட் என்கிற பெயரில் விற்றும் காண்பித்தான் அந்த புத்திசாலி சிறுவன். அந்த செய்திதாளில் கிசுகிசுக்களையும் இணைத்து வெளியிட்டு குறும்பு செய்தான் அவன். அவனின் பெயர் தாமஸ் அல்வா எடிசன்.

சச்சின்
-----------
மும்பை கிரிக்கெட் சங்கம் வருடா வருடம் தேர்ந் தெடுக்கும் சிறந்த இளம் ஆட்டக்காரர் விருது கிடைக்காமல் சோர்ந்து போயிருந்த சச்சினுக்கு அவரின் பதினான்காம் வயதில் கவாஸ்கரிடம் இருந்து ஒரு கடிதம் வந்து இருந்தது. போன சீசனில் நீ நன்றாக விளை யாடினாய் விருதுகளை பற்றி கவலைப்படாதே, பிற வீரர்கள் சரியாக ஆடாத பொழுது நீ மட்டும் போராடியது எனக்கு பிடித்து இருந்தது. பின் குறிப்பு: விருது கிடைக்காததற்கு வருந்தாதே அந்த விருதை வாங்காத ஒரு இளைஞன் டெஸ்டில் குறிப்பிடத்தகுந்த சாதனைகள் புரிந்தான். (கவாஸ்கர் தன்னை குறிப்பிடுகிறார்) இக்கடிதமே தன்னை கவாஸ்கரை போல சாதிக்க தூண்டியது என்கிறார் சச்சின்..

Relaxplzz

முருங்கை வேர் சாறில் இருக்கு முதுகுவலியை போக்கும் மருந்து முதுகு வலி என்பது தாங...

Posted: 10 Apr 2015 06:10 AM PDT

முருங்கை வேர் சாறில் இருக்கு முதுகுவலியை போக்கும் மருந்து

முதுகு வலி என்பது தாங்கிக்கொள்ள முடியாத வலி என்பது பலரும் அறிந்ததுதான். நவீன மையமான, அவசரமான இந்த உலகத்தில் தற்போது மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் முதுகு வலியால் பாதிக்கப்படுகின்றனர். இந்த முதுகு வலி நோய் எதிர்ப்பு சக்தி மட்டுமல்ல நீண்ட நேரம் கார், இருசக்கர வாகனம் ஓட்டுதல், மணிக்கணக்கில் கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருத்தல், உடல் உழைப்பின்மை போன்ற காரணங்களால் சிறு வயது முதலே ஆண், பெண் இருபாலரும் முதுகுவலியால் அவதிப்படுகின்றனர். இந்த வலி எவ்வாறு ஏற்ப டுகிறது, இதற்கான தீர்வுதான் என்ன?

முதுகு பகுதியில் 33 எலும்புகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கிய நிலையில் வலுவாக பிணைத்து வைக்கப்பட்டதுதான் 'முதுகெலும்புத் தொடர்'. இதில் எலும்புகளுக்கு இடையில் உர £ய்வை தடுக்கும் விதமாக வட்ட வில்லைகள் (டிஸ்க்) எனப்படும் ஜெல்லி போன்ற மிருதுவான பாகங்கள் உள்ளன. இது பைக்குகள் உள்ளிட்ட வாகனங்களில் அதிர்வுகளை தாங்குவதற்கு பயன்படும் 'ஷாக் அப்சர்வர்' போன்ற அமைப்பு போன்றது.

துளையுடனான முதுகெலும்புகளுக்கு நடுவே பாதுகாப்பான நிலையில் தண்டுவட நரம்புகள் உள்ளன. உடல் உறுப்புகள் அனைத்தையும் கட்டுப்படுத்தக்கூடிய மூளையின் உத்தரவுகளை கடத்தி செல்லும் முக்கிய பணியை செய்வது இந்த தண்டுவட நரம்புகள்தான். முதுகெலும்புகளுக்கு மத்தியில் உள்ள டிஸ்க் நகர்ந்து இந்த நரம்புகள் நசுக்கப்படும்போது முதுகு வலி ஏற்படுகிறது.

காரணங்கள்

முதுகெலும்பு கோளாறுகள் இடுப்பு பிடிப்பை தூண்டும். முதுகெலும்பின் வட்ட வில்லைகள் தேய்ந்து போய், ஹெர்னியாவால் பாதிக்கப்படும். அப்போது வட்ட வில்லைகள் ஸியாடிகா நரம்புகளை அழுத்தும். இதனால் முதுகுவலி ஏற்படும். வலி இருக்கும்போது அதிக எடை தூக்குதல், நடப்பது, ஓடுவது, மாடிப்படிகள் ஏறுவதால் வலி மேலும் அதிகமாகும். ஆஸ்டியோ ஆர்த்தரைடிஸால் எலும்புகளில் பிதுக்கம் ஏற்படும்.

இந்த ஏறு மாறான பிதுக்கங்களால் இடுப்பு பிடிப்பை உண்டாக்கலாம். சுளுக்கால் ஏற்படும் தசைநார்களில் வீக்கமும் காரணமாகலாம். சர்க்கரை வியாதியில் ஏற்படும் நரம்பு சேதத்தாலும் முதுகுவலி ஏற்படும். ரத்த கட்டிகள், வீக்கங்கள், அதிக உடல் பருமன், அழற்சி இவைகளையும் காரணமாக சொல்லலாம்.

முதுகுவலியை தடுக்க

அதிக உயரமில்லாத காலணிகளை அணியலாம். பெட்டி, கைபைகள் போன்றவற்றை தூக்கிக் கொண்டு செல்லும்போது பெட்டியை ஒரு கையிலிருந்து இன்னொரு கைக்கு மாற்றிக்கெண்டு நடக்கலாம். நிற்கும் போது நிமிர்ந்து நிற்கவும். ஒரு காலிலேயே நிற்காமல், கால் மாற்றி நிற்கவும். அதிக நேரம் நின்று கொண்டிருக்க வேண்டாம். உட்காரும்போது, முதுகை தாங்கி கொள்ளுபடியாக சாய்ந்து உட்காரவும். கால்கள் தரையை தொடுமாறு உள்ள நாற்காலியில் அமர்வது நல்லது. கால் மேல் கால் போட்டு உட்கார வேண்டாம்.

அதிக நேரம் உட்கார நேர்ந்தால், அடிக்கடி எழுந்து நடக்கவும். கார் ஓட்டும்போது நடுமுதுகை தாங்கிக் கொள்ள சிறிய தலையணைகளை உபயோகிக்கலாம்.
தூங்கும்போது, குப்புற படுக்க வேண்டாம். பக்கவாட்டில் திரும்பிப்படுப்பது நல்லது. மல்லாந்து படுக்க வேண்டியிருந்தால் முழங்காலில் தலையணை வைத்துக் கொள்ளவும். படுக்கை அதிக மிருதுவாக இல்லாமல் கெட்டியாக இருக்க வேண்டும்.

சிகிச்சை முறைகள்

* முதுகுவலி ஏற்பட்டால் விளக்கெண்ணையை சூடுபடுத்தி கால் பாதங்களில் தடவலாம். இதை தொடர்ந்து செய்தால் பலன் கிடைக்கும்.

* பூண்டு 5 பற்களை எடுத்து 50 மி.லி. நல்லெண்ணையில் இட்டு, நன்கு காய்ச்சி ஆற வைத்து, இளம் சூட்டில், வலியுள்ள இடங்களில் தடவலாம்.

* புளி சாறெடுத்து, உப்பு போட்டு கொதிக்கவிட்டு, களிம்பு போல் தயாரிக்கவும். இந்த களிம்பை தடவலாம்.

* சூடான நல்லெண்ணெய்யுடன் உப்பு கலந்து மசாஜ் செய்தால் வலி குறையும். மசாஜ் அழுத்தி செய்யாமல், மிதமாக செய்ய வேண்டும்.

* ஆடாதொடா வேரை கஷாயம் வைத்து குடித்தால் உடல் வலி சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.

* ஆல மொட்டுகளை பொடி செய்து சாப்பிட்டால் இடுப்பு வலி குணமாகும்.

* உப்பை வறுத்து ஒரு துணியில் கட்டி மிதமான சூட்டில் வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும்.

* முருங்கை வேரில் இருந்து சாறு எடுத்து அதில் சம அளவு பால் சேர்த்து சாப்பிட்டால் உள் உறுப்புகளில் உள்ள வீக்கம், முதுகு வலி குணமாகும்.

புரூட்டி மில்க் ஷேக்

ஒரு கப் பாலுடன் ஒரு பச்சை வாழை பழத்தை சேர்த்து மிக்சியில் அரைத்து அதில் மாதுளையை உரித்துப் போட்டு வெல்லம் சேர்த்து அரைக்க வேண்டும். இதில் மாதுளை லேசாக மட்டுமே உடைந்திருக்க வேண்டும். இந்த கிரஞ்சி மில்க் ஷேக் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உகந்தது.

பீட்ஸ் உருண்டை

கேழ்வரகு மாவு ஒரு கப் எடுத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு நெய் சேர்த்து மாவை பதமாக வறுத்துக் கொள்ளவும். அதில் பாதாம், முந்திரி மற்றும் உலர்ந்த திராட்சை சேர் க்கவும். அத்துடன் வெல்லத்தை பொடித்து சேர்க்க வேண்டும். இவற்றுடன் பால் சேர்த்து ஒன்றாக பிசைந்து பீட்ஸ் உருண்டை தயாரித்து சாப்பிட்டு வந்தால் முதுகு வலிக்கு நல்ல பலன் கிடைக்கும். இதில் உள்ள கால்சியம் சத்து எலும்பை உறுதியாக்கும்.

Relaxplzz

:) Relaxplzz

Posted: 10 Apr 2015 05:13 AM PDT

:) Relaxplzz

Posted: 09 Apr 2015 10:57 PM PDT

:D Relaxplzz

Posted: 09 Apr 2015 10:49 PM PDT

நீ கருப்பா அழகா இருக்கல்ல அதான் ஒரு முத்தம் மட்டும் கொடுத்துக்கிறேன்...

Posted: 09 Apr 2015 09:50 PM PDT

நீ கருப்பா அழகா இருக்கல்ல

அதான் ஒரு முத்தம் மட்டும் கொடுத்துக்கிறேன்...


எடையைக் குறைக்க ஓர் எழிய வழி..! ஒரு நாளைக்கு 4 கப் காப்பி குடித்தால் அவர்களின்...

Posted: 09 Apr 2015 09:00 PM PDT

எடையைக் குறைக்க ஓர் எழிய வழி..!

ஒரு நாளைக்கு 4 கப் காப்பி குடித்தால் அவர்களின் எடை குறைய வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். காப்பி குடிப்பது என்பது உலகம் முழுவதும் பரவலாக நடப்பது ஒன்றாக உள்ளது. அதேபோல் பெண்களின் எடையை குறைக்க உதவும் ஒரு வழியில் இதுவும் ஒன்றாக உள்ளது.

இதற்காக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கடந்த 26 வருடங்களாக 86 ஆயிரம் நர்ஸ்களை கணக்கில் கொண்டு அவர்களை கண்காணித்தனர். ச்சரியப்படும் வகையில் அதிக அளவில் காபியை குடித்தவர்களுக்கு குறைந்த அளவே சதை போட்டிருந்தது.

தினந்தோறும் 4 கப் காப்பி குடித்து வந்த பெண்களில் 57 சதவீதத்தினர் குறைந்த அளவே எடை கொண்டிருந்ததையும், 2 முதல் 3 கப் காப்பி குடித்தவர்களில் 22 சதவீத அளவே எடை குறைந்திப்பதையும் கண்டறிந்தனர்

Relaxplzz


கிராமத்து 'வாஷிங் மிஷின்'... இன்னும் நம் அம்மாக்கள் தான் :(

Posted: 09 Apr 2015 08:50 PM PDT

கிராமத்து 'வாஷிங் மிஷின்'...

இன்னும் நம் அம்மாக்கள் தான் :(


பாசிடிவ் திங் 1.தப்பு செஞ்சா கடவுள் தண்டிப்பார்னு சொல்றத விட,நல்லது செய் கடவுள்...

Posted: 09 Apr 2015 08:15 PM PDT

பாசிடிவ் திங்

1.தப்பு செஞ்சா கடவுள் தண்டிப்பார்னு சொல்றத விட,நல்லது செய் கடவுள் உன்ன பாதுகாப்பார்னு சொல்லி பழகுங்க.

2.என்னை யாருமே கண்டுகொள்ளவில்லை என்று நினைப்பதை விட நான் யாரையும் கண்டுகொள்ளநேரமில்லை என்று சொல்லி பாருங்கள்.

3.தொப்பைய குறைக்க முடியலனு கவலைபடாதிங்க.குப்புற விழுந்தாலும் அடி விழாம காப்பாதுமே.

4.மாசமாசம் கரண்ட் பில் கட்டி மக்கள் கஷ்டப்பட கூடாதுன்னு ஒரு நல்ல எண்ணத்துல தான் கரண்ட் கட் பண்றாங்க.

5..வழுக்கை விழுந்தாலும் கவலைப்படாமல் ஷாம்பு எண்ணெய்ச் செலவு மிச்சம்னு நினைச்சுகங்க.

6.வெயில் காலத்தில்மரம் வளர்ப்பின் முக்கியத்தை உணர்த்தவே கரண்ட் கட் செய்யபடுகிறது

7.ச்சே ஒரு பொண்ணு கூட கெடைக்கலன்னு வருத்தப்படாதிங்க . . நம்மள எந்த பொண்ணும் கரக்ட் பன்ன முடியல நினைங்க

8.எல்லாத்தையும் பாசிட்டிவா எடுத்துக்கறேனு நெகடிவ் இரத்தம் தேவைப்படுறவன் பாசிட்டிவ் இரத்தம் ஏத்திக்க முடியாது, நெகடிவ்தான் ஏத்திக்கனும்.

9.பெட்ரோல் விலையேற்றங்களே மக்களை நடக்க வைத்து நலம் பேண வைப்பதற்கான மத்தியசுகாதார அமைச்சகத்தின் ரகசிய திட்டம்தான்....!

10.நல்லவேளை சரக்கு கசப்பா இருக்கு!இனிப்பா மட்டும் இருந்துருந்தா முக்காவாசிபேர் சக்கரை நோய் வந்தே செத்துருப்பான்

பாதகங்களை சாதகங்களாகவும், பலவீனங்களை பலமாகவும் மாற்றிக் கொள்வதும் பாசிடிவ் திங்கிங் தான்.இத சொன்னா நீ இப்பிடியே பேசிகிட்டு இரு நம்ம ஊரு நாய்புடிக்கிற வண்டில உன்ன ஏத்திவிட்டுரேன் என்கிறது இந்த சமூகம்...

:) :)

Relaxplzz

முதிய வயதிலும் சுய உழைப்பில்.,,,, வாழ்த்துக்கள் தாத்தா.. (y)

Posted: 09 Apr 2015 07:50 PM PDT

முதிய வயதிலும் சுய உழைப்பில்.,,,,

வாழ்த்துக்கள் தாத்தா.. (y)


சுட்ட சோள கருது சாப்பிட பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 09 Apr 2015 07:40 PM PDT

சுட்ட சோள கருது சாப்பிட பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


எப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே. இது சரியா ? *************** "கல்லைக் கண்ட...

Posted: 09 Apr 2015 07:10 PM PDT

எப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே.
இது சரியா ?
***************
"கல்லைக் கண்டால் நாயைக் காணோம்!
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!!"
சரியானா பழமொழி :
********************
"கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்,
நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்".
விளக்கம் :
************
இங்கு நாயகன் என்பது கடவுளை குறிக்கிறது.
கல்லால் செதுக்கப்பட்ட ஒரு கடவுள் சிலையை நீங்கள் பார்க்கிறீர்கள். அதை கல்லாகப் பார்க்கும் போது அங்கே கடவுளை பார்க்கமாட்டீர்கள். அதையே நீங்கள் கடவுளாக பார்க்கும்போது கல்லை பார்க்கமாட்டீர்கள்.
இதில் நாயகன் என்ற வார்த்தை மறுவியே நாய் என்றாகிவிட்டது.
கடவுளை நாயாக்கிய பெருமை தமிழர்களையே சேரும்.
மற்றும் சில பழமொழிகள்:
********************
ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு - தவறு.
******
ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு - சரி.
*******************
படிச்சவன் பாட்டை கெடுத்தான், எழுதுனவன் ஏட்டை கெடுத்தான் - தவறு.
*********
படிச்சவன் பாட்டை கொடுத்தான் , எழுதுனவன் ஏட்டை கொடுத்தான் - சரி.
*******************
ங)
ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன். - தவறு.
*******
ஆயிரம் வேரை (மூலிகை வேரை ) கொன்றவன் அரை வைத்தியன் - சரி.
***************
ச).
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு - தவறு.
*****
நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு - சரி.
***********
(சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு...
அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்தது...
ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகு்.)
***************
ரூ)
அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை புடிப்பான் - தவறு.
********
அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான். - சரி
***************
நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற உபயோகிக்கிறோம்.
மாறுவோம்...பிறரை மாற்றுவோம்...

Relaxplzz

உண்மையென உணர்ந்தவர்கள் லைக் பண்ணுங்க.. (Y)

Posted: 09 Apr 2015 07:00 PM PDT

உண்மையென உணர்ந்தவர்கள் லைக் பண்ணுங்க.. (Y)


:) Relaxplzz

Posted: 09 Apr 2015 06:52 PM PDT

பெருங்காயத்தின் மருத்துவக் குணங்கள் பெருங்காயத்தை நாம் பெரும்பாலும் சமையலில் நற...

Posted: 09 Apr 2015 06:42 PM PDT

பெருங்காயத்தின் மருத்துவக் குணங்கள்

பெருங்காயத்தை நாம் பெரும்பாலும் சமையலில் நறுமணம் ஊட்டக்கூடிய பொருளாகவே பயன்படுத்துகிறோம், ஆனால் இதற்கென்று பிரத்யேகமான மருத்துவப் பயன்கள் உண்டு.

பெருங்காயம், உஷ்ணத்தைத் தரக்கூடியது; உணவை செரிப்பிக்கிறது ; சுவையை அதிகப்படுத்துகிறது. இது கூர்மையானதும் ஊடுருவும் தன்மையுமுடையதாகும், இது வாதத்தையும், கபத்தையும் கண்டிக்கிறது ; பித்தத்தை உயர்த்துகிறது. இது வயிறு உப்பல், கிருமி ஆகியவைகளின் சிகிச்சைக்கும் குடற் புழுவகற்றியாகவும் பயன்படும்.

உபயோகங்கள் : இது ஒரு நல்ல வாய்வகற்றி; உணவுப் பொருள்களைச் சீரணம் செய்வதில் உதவி செய்கிறது. இது அதிகமாக வாத நோய்களில் உபயோகிக்கப்படுகிறது. இது, வழக்கமான அதாவது எப்போதும் உள்ள இருமலுக்கு கோழையகற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும்,
நீரேற்றத்தையும் - சவ்வுகளின் வீக்கத்தையும், காசத்தையும் நீக்குகிறது. சுவாச நோயில் இசிவகற்றியாகவும், வயிற்றில் ஏற்படும் பாதிப்புகட்கும், குடற் கிருமிகளை வெளிப்படுத்தவும் பயனுடையதாகிறது.

இது, குடலின் உப்புதலை குறைக்கிறது. இதன் சிறப்புச் செய்கையினால் வலி உள்ள மாத விடாயின்போது தீட்டை அதிகமாக்குவதற்காகக் கொடுக்கப்படுகிறது.

நரம்புத் தளர்ச்சியால் ஏற்படும் மூர்ச்சை நோயிலும், வலிப்பு நோயிலும், இது சம்பந்தமான நரம்புக் கோளாறுகளிலும் மிகவும் பயனுடையதாகிறது.
பிரசவத்திற்குப் பிறகு நஞ்சக் கொடியை வெளியேற்ற கொடுக்கப்படுகிறது. இதை ( பெருங்காயத்தை ) எண்ணெயில் கரைய வைத்துக் காயங்கட்கு மேலே பூசுவதற்கும், காது நோய்களில் பழக்கமான நேர் மருந்தாகக் காது வலியைக் குறைக்க பயன்படுகிறது.

இதைப் பொரித்து உபயோகப்படுத்தலே நலம். பச்சையாக உபயோகித்தால் வாந்தியுண்டாகும்.

இதை நீர் விட்டு உரைத்து மார்பின் மீது பற்றிட குழந்தைகட்கு உண்டாகும் கக்குவான் குணப்படும்.

பிரசவத்தின் பின், அழுக்கை வெளிப்படுத்தக் காயத்தைப் பொரித்து, வெள்ளைப் பூண்டு, பனை வெல்லத்துடன் சேர்த்துக் காலையில் கொடுக்கலாம்.

கோழி முட்டை மஞ்சட் கருவுடன் காயத்தைக் கூட்டிக் கொடுக்க வறட்டிருமல், பக்க வலி நீங்கும். எண்ணெயிலிட்டுக் காய்ச்சி காதுக்கிட, காது வலி தீரும்.

Relaxplzz


"உணவே மருந்து" - 2

:) Relaxplzz

Posted: 09 Apr 2015 06:30 PM PDT

மரித்து விடும் மனித நேயம்... மழைக்கு ஒதுங்க முடியாத மாற்றுதிறனாளி.. :(

Posted: 09 Apr 2015 06:20 PM PDT

மரித்து விடும் மனித நேயம்...
மழைக்கு ஒதுங்க முடியாத மாற்றுதிறனாளி.. :(


உண்மையான தலைவர் (y)

Posted: 09 Apr 2015 06:10 PM PDT

உண்மையான தலைவர் (y)


மனைவி அமைவதெல்லாம்! (முழுவதும் படிக்கவும் ) <3 <3 திருமணம் நிச்சயம் ஆனதிலிருந்த...

Posted: 09 Apr 2015 06:00 PM PDT

மனைவி அமைவதெல்லாம்! (முழுவதும் படிக்கவும் ) ♥ ♥

திருமணம் நிச்சயம் ஆனதிலிருந்தே எல்லா ஆண்களையும் போல நானும் ஒரு வித உற்சாகத்துடனும்,பரவசத்துடனும் நாட்களை கடத்தினேன். கனவுகள் வராத நாள் கிடையாது. வரும் பெண்ணை பற்றிய எதிர்பார்ப்புகளும்,கற்பனைகளும் சுவாரஸ்யத்தை கூட்டியது. நெறைய பாலகுமாரன் புத்தகங்களை சேமித்து வைத்து இருந்தேன் வருகிறவளுக்கு படிக்க கொடுக்க வேண்டும் ஒருவேளை அவளும் பாலகுமாரன் ரசிகையாக இருந்தால் ..? நினைக்கவே சிலிர்ப்பாய் இருந்தது.

கிரிக்கெட்டில் நான் வாங்கிய பரிசுகளை எல்லாம் தூசு தட்டி எடுத்து பார்வையில் படும்படி வைத்தேன் . இளையராஜா பாடல்கள் தொகுப்புகளை வாங்கி வைத்தேன்.எஸ் .ஜானகி பாடல்களை தனியே பதிவு செய்து வைத்தேன்.கேரம் ,செஸ் போர்டு எல்லாம். இன்னும் பல விஷயங்கள் . ஒரு பெரிய கற்பனை கோட்டையில் வாழ துவங்கி இருந்தேன் .

ஒரு சுபயோக சுபதினத்தில் திருமணம் இனிதே நடந்தது..!
விருந்து முதற்கொண்ட சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்தது.

கீழ்க்கண்ட உரையாடல்கள் சில தினங்களில் சில தினங்கள் இடைவெளியில் நடந்தது.

புத்தகம் எல்லாம் படிக்கும் பழக்கம் இருக்கா ?

இல்லங்க நான் எந்த புக்கும் படிச்சது இல்ல..!

எந்த புக்கும் படிச்சது இல்லையா ?

ஆமாங்க எனக்கு இந்த புத்தகம் ஏதும் படிக்க புடிக்காது..!

இந்த குமுதம் ,ஆனந்த விகடன் இதெல்லாம் கூட படிச்சது இல்லையா ?

நான் + 2 படிச்சப்போ படிச்ச பாட புத்தகம் தான் நான் கடசியா படிச்சது அதுக்கப்புறம் எந்த புக்கும் படிச்சது இல்ல...!

எதோ ஜோக் சொன்னதுபோல அவள் சொல்லி சிரிக்க நான் வெளிறிபோனேன் ..!

எனக்கு மண்டை காய்ந்துபோனது எந்த ஒரு புத்தகமும் படிகாதவளிடம் போய் பாலகுமாரனை பற்றி பேச முடியுமா..? சேர்த்து வைத்து இருந்த புத்தகங்கள் ...?ஒரு அட்டைப்படத்தில் பால குமரன் என்னை கவலையுடன் பார்ப்பதாக தோன்றியது ..!

கிரிக்கெட்டில் நான் வாங்கிய பரிசுகளை பார்வையில் படும்படிதான் வைத்து இருந்தேன்..! அதை பற்றி அவள் கேட்கவேண்டும் நான் பீற்றி கொள்ளவேண்டும் இதுதான் திட்டம் .

ஆனால் ..? எதோ வீட்டில் உள்ள காலண்டரை பார்ப்பது ,வால் கிளாக்கை பார்ப்பதுபோல அந்த பரிசுகளை கோப்பைகளை அவள் கண்டுகொள்ளவே இல்லை.

அப்புறம் வேறு வழி இல்லாமல் நானே சொல்ல ஆரம்பித்தேன் ..!

இந்த கப் எல்லாம் நான் வாங்கினது தெரியுமா ..?

எதுக்கு வாங்குனீங்க..?

இதெல்லாம் நான் கிரிக்கெட் வெளையாடி வாங்கினது
ஒனக்கு கிரிக்கெட் புடிக்குமா ..? கிரிக்கெட் பார்ப்பியா ..?

எங்க வீட்டுல எல்லாரும் கிரிக்கெட் பார்ப்பாங்க எனக்கு மட்டும் கிரிக்கெட் சுத்தமா புடிக்காது ..!

(அதானே எனக்குன்னு இப்படித்தான் வாய் க்கனும்னு இருக்கும்போது எப்படி கிரிக்கெட் புடிக்கும் )

யாரோ பின் மண்டையில் பேட்டால் அடித்தது போல இருந்தது..! நொந்துபோனேன்..!

இந்த பாடகர் - பாடகிகள்ல உனக்கு யார புடிக்கும்..?

ம்ம்... இவங்களத்தான் புடிக்கும்னு சொல்ல முடியாது பொதுவா எல்லா பாட்டும் கேப்பேன்..!

உனக்கு புடிச்ச பாட்டு ஒன்னு சொல்லேன்..!

அட போங்க திடீர்னு இப்படி கேட்டா எப்படி சொல்லுறது ..?

சரி எஸ் .ஜானகி புடிக்குமா ?

யாரு கெழவி போல இருக்குமே அதுவா ?

எஸ் .ஜானகியை கெழவி ன்னு சொன்னதும் எனக்கு செம கோவம் ...!எனக்கு புடிச்ச பாடகி அவரை கிழவின்னு சொன்னதும் என்னால அதை பொறுத்துக்க முடியல. என்ன செய்ய எல்லாம் விதி...!

என்னை நானே நொந்து கொள்வதை தவிர வேறு வழியில்லை அவள்மேல் கோபப்பட முடியவில்லை ஆனால்..? அவளுக்கு கோவம் அதிகம் வரும் முன்கோபி என் பாதுகாப்பும் முக்கியமில்லையா எதுவும் எனக்கு பிடிக்கவில்லை.

மனைவி விசயத்தில் மிகுந்த ஏமாற்றம் ...!துளியும் எனக்கு எந்த விதத்திலும் பொருத்தமில்லை .

ஆணித்தரமாய் எனக்கு தோன்றியது இதுதான்

இவள் எனக்கு ஏற்ற ஜோடிஇல்லை .

கணவன் மனைவி இருவரும் இரட்டை மாட்டு வண்டியைபோல என்று சொல்வார்கள் ஒரு மாடு சரியில்லாமல் போனாலும் குடும்ப வண்டி சரியாக ஓடாது என்று. உண்மைதான். நான் இப்படி முடிவு எடுத்தேன் பேசாமல் அவளையும் வண்டியில் தூக்கி உட்கார வைத்துவிட்டு ஒற்றை மாடாக வண்டியை ஓட்ட வேண்டியதுதான். வேறு என்ன செய்வது ? எங்களுக்குள் எந்த கெமிஸ்ட்ரியும் ஒர்க் அவுட் ஆகவில்லை..!

பெரிய சுவாரசியம் ஏதுமின்றி நகர்ந்தன நாட்கள் சில மாதங்களில் மனைவி கர்பவதியகவே நிலைமை மாற தொடங்கியது. வீடு உற்சாகத்தில் திளைத்தது ஆளாளுக்கு அவளை கொண்டாட ஆரம்பித்தோம்.

மாசமா இருக்கும்போது என்னவெல்லாம் புடிக்குமோ அதெல்லாம் வாங்கி கொடுக்கணும் புடிச்சத சமைச்சு போடணும் - இது என் அம்மா

நானும் அவளிடம் கேட்கிறேன்

உனக்கு என்னவெல்லாம் சாப்பிட புடிக்கும் சொல்லு

அதெல்லாம் ஒன்னும் வேணாம்

இல்ல சொல்லு நான் வற்புறுத்தி கேட்கிறேன்

பிடிக்குமென சிலதை சொல்ல

முன் சமயங்களில் என்ன சமையல் செய்யலாம் என்ற விவாதம் வரும்போது இதையெல்லாம் சொல்லி இருக்கிறாள் நானும் சாதாரணமாய் அதையெல்லாம் மறுத்து இருக்கிறேன் ஆனால் அவளுக்கு பிடிக்குமென சொன்னதில்லை.

இதெல்லாம் உனக்கு புடிக்குமா இதுவர சொன்னதே இல்ல ..?

ம்ம்ம் இப்போதானே கேக்குறீங்க.

அவள் சிரித்து கொண்டே சொல்ல எனக்குள் சுளீரென ஒரு குற்ற உணர்ச்சி ஏற்பட்டது.

பிரசவம் நெருங்க இயல்பாய் ஒரு பதற்றம் தொற்றி கொண்டது இன்னும் சில தினங்களில் இங்கே ஒரு குழந்தை இருக்கும் என்ற எண்ணமே ஆனந்த கூத்தாட வைத்தது.

நாங்கள் விரும்பிய படியே அழகிய பெண் குழந்தை நார்மல் டெலிவரிதான் .

நான் நினைத்து இருந்தேன் பிரசவம் ஆன பெண்கள் ஒரு வாரம் பத்துநாள் என படுக்கையிலேயே இருப்பார்கள் என ஆனால் இவள் மறுநாளே சாதரணமாக நடமாட ஆரம்பித்தாள் யாராவது பெரியவர்கள் குழந்தையை பார்க்க வந்தால் சொல்ல சொல்ல கேட்காமல் கட்டிலிலிருந்து இறங்கி எழுந்து நின்று கொள்வாள் மரியாதையை நிமித்தமாய்.

இவளில் இந்த செய்கை குறித்து உறவினர்கள் புகழ்ச்சியாய் பேச எனக்கோ மிகவும் பெருமையாய் இருந்தது.

பெண்களின் குணம் எப்படி இருந்தாலும் தாய் ஆன பிறகு எல்லா பெண்களும் ஒரேமாதிரித்தான் இருக்கிறார்கள். கோபம்,ஆத்திரம் இவைகள் எல்லோருக்கும் பொதுவானதுதான் ஆனால் குழந்தை கவனிப்பில் எப்போதும் பொறுமை மட்டுமே காட்டுகிறார்கள் நள்ளிரவில் குழந்தை அழுதாலும், மலம் கழித்தாலும் கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் கவனிக்கும் தன்மை இயல்பாகவே வந்து விடுகிறது.

குழந்தையையும் கவனித்துகொண்டு எனக்கு செய்யும் பணிவிடைகளிலும் எந்த குறையும் வைக்கவில்லை .

தாய்மை என்ற விசயத்தை என் தாயிடம் உணர்ந்ததைவிட மனைவியிடமே அதிகம் தெரிந்து கொள்ள முடிந்தது . இப்போது அவள்மேல் ஒரு மரியாதையை ஏற்பட துவங்கியது .

வீட்டு வேலைகள் குழந்தை வளர்ப்பு என அவள் சுமை எனக்கு புரிந்தது..!

சில வருடங்கள் போக...! இப்போது இரண்டாவது குழந்தை...! முதல் குழந்தை நார்மல் டெலிவரி ஆனால் இரண்டாவது சிசேரியன்.

இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் மயக்கத்தில் இருக்கும் அவளை பார்க்க செல்கிறேன் தூக்கம் போலவும் இல்லாமல் ,மயக்கம் போலவும் இல்லாமல் மூக்கில் எதோ ஒரு குழாய் இருக்க அவள் இருந்த நிலை என்னை ஒரு மாதிரி ஆக்கிவிட்டது. அப்போது நினைத்து கொண்டேன் இவளிடம் இனி எதற்கும் கோபப்பட கூடாது என்ன சொன்னாலும் பொறுத்து கொள்ள வேண்டும் என்று ..!

சில பெண்கள் நினைத்து கொள்ளலாம் கணவன் தன்னிடம் அடங்கி போகிறான் என்று ..! அப்படி அல்ல...! சில நேரங்களில் மனைவி செய்த தியாகங்களுக்காகவும் அவள் அடைந்த சிரமங்களுகாகவும் மனைவிக்கு செலுத்தும் நன்றி கடனே அந்த அடங்கி போதல். மனைவியை ஜெயிக்க விட்டு அதனால் அவள் அடையும் சந்தோசத்தை ரகசியமாய் பார்த்து ரசித்து கொள்ளுதல் எல்லாம் ஒரு நன்றி கடன்தான் .

இரண்டு குழந்தைகள், வீட்டு வேலைகள், குழந்தை படிப்பு, பாடம் சொல்லி கொடுத்தல், இதற்க்கு இடையே நான் செய்யும் அலும்புகள் எல்லாவற்றையும் சமர்த்தாக கவனித்துகொள்ளும் அவளிள் அந்த மனைவி ,இல்லத்தரசி என்ற ஸ்தானத்தின் பிரம்மாண்ட விஸ்வ ரூபத்தின் முன் ''நான்'' கொஞ்ச கொஞ்சமாக நலிந்து கொண்டு இருந்தேன். பால குமாரன் ,கிரிக்கேட் எஸ் .ஜானகி எல்லாம் என் கவனிப்பில் இருந்து விலகி செல்ல ..!

ஒற்றை மாட்டு வண்டியாக குடும்பத்தை ஓட்ட நினைத்தேன் ஆனால் சில சமயங்களில் அவள் ஒற்றை மாடாக வண்டியை இழுக்க நான் அதில் பயணம் செய்வதாக உணர்ந்தேன்.!

எங்களுக்குள் எந்த கெமிஸ்ட்ரியும் ஒர்க் அவுட் ஆகவில்லை என நினைத்தேன்

ஆனால்...! இப்போது எங்களுக்குள்...!

தமிழ் ,ஆங்கிலம் ,வரலாறு ,புவியியல்,இயற்பியல்,தாவரவியல் ,விலங்கியல் வேதியல் எல்லாம் ஒர்க் அவுட் ஆகி போனது .. ♥ ♥

# படித்ததில் பிடித்தது #

Relaxplzz

நட்பிலும் அன்பிலும் நேரம் கரையட்டுமே... "In Friendship, Time Dissolves." ~Rumi <3

Posted: 09 Apr 2015 05:45 PM PDT

நட்பிலும் அன்பிலும் நேரம் கரையட்டுமே...

"In Friendship, Time Dissolves."
~Rumi ♥


இனிய காலை வணக்கம் நண்பர்களே.. :)

Posted: 09 Apr 2015 05:30 PM PDT

இனிய காலை வணக்கம் நண்பர்களே.. :)