ilovemynative: Facebook page wall posts in Tamil |
- அனைவருக்கும் இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துகள்..
- உண்மையை சொல்லுகின்றான் கோத்தபாய ராஐபக்சே என்ற அரக்கன்....! இறுதிக்கட்ட போரில் 6...
- "" மிதி வெடி''' ஜெனி பிறந்த கதை! -----------------------------------------------...
- செஞ்சி கோட்டை!
- Kilvalai (or) Kizhvalai is a hamlet in Tirukkoyilur taluk in Villuppuram distric...
- நண்பேன்டா... ‘‘மச்சான், நீ முன்னால தியேட்டருக்குப் போ... நான் பின்னாலயே தண்ணி ப...
- கற்பழிக்கப் படாமல் இருப்பது எப்படி? கை பையை களவு கொடுக்காமல் இருப்பது எப்படி? தன...
Posted: 24 Dec 2014 09:43 PM PST |
Posted: 24 Dec 2014 05:51 PM PST |
Posted: 24 Dec 2014 08:41 AM PST |
Posted: 24 Dec 2014 08:03 AM PST உண்மையை சொல்லுகின்றான் கோத்தபாய ராஐபக்சே என்ற அரக்கன்....! இறுதிக்கட்ட போரில் 6000 சிங்களப்படை விடுதலைப்புலிகளின் தாக்குதலில் உயிர் இழப்பு என்றும் 25000 படை அங்கங்களை இழந்து இருப்பதை ஒப்புக்கொண்டான் இந்த உயிர் இழப்பு கிளிநொச்சியில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை நடந்த போரிலாம் அது போக திருகோணமலையில் இருந்து எத்தனை சிங்களப்படையின் டிவிசன்கள் வந்தது அதன் இழப்பு இறப்பு சொல்லவில்லை ஓமந்தையில் இருந்து மங்களம் கருப்பட்ட முறிப்பு ஊடாக ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பை தாக்கிய படை நடவடிக்கையில் எத்தனை சிக்களப்படை இழப்பு இறப்பு என்பதையும் சொல்லவில்லை இதை நாம் கூட்டி கழித்து பார்ப்போமானல் இது இன்னும் இரு மடங்காக தான் இருக்கும் பட்டியில் இருந்து விடுபட்ட மாடுகள் போல் கும்பல்கள் கும்பல்களாக வந்த சிங்களப்படை அழிந்து தான் போனது விடுதலைப்புலிகள். இறுதி வரை கைகட்டி வரும் சிங்களப்படையை பார்த்துக்கொண்டு இருக்கவில்லை கொன்றொழித்தார்கள் சிங்களப்படை வாங்கிய அடியில் களமுனை எங்கும் மகே அம்மே, மகே அம்மே என்ற சிங்களப்படையின் கூக்குரலையும் கேட்டார்கள். புலிகள் அதன் பிறகு தான் சிங்களவன் தடை செய்யப்பட்ட பாஸ்பரஸ் குண்டுகளையும் கொத்துக்குண்டுகளையும் இந்தியாவின் சொல் கேட்டு பாவித்தான் இந்தியாவும் சரி சிறிலங்கவும் சரி புலிகளிடம் வாங்கிய அடியை மறக்க மாட்டார்கள்... இறுதிக்கட்ட போரில் இந்தியா மட்டும் சிங்களவனுக்கு துணை போகாமல் இருந்திருந்தால் இன்று எமது தமிழீழத்தில் சிங்கள படையே இருந்திருக்காது இந்திய வல்லாதிக்க சக்திகளும் வெளியுலக வல்லாதிக்க சக்திகளும் தமிழர்களை புரிந்து கொள்ளும் காலம் விரைவில் வரும். @யாளிமுகன் யாழ்ப்பாணம் |
Posted: 24 Dec 2014 07:50 AM PST "" மிதி வெடி''' ஜெனி பிறந்த கதை! --------------------------------------------------- கொக்குவில் பிரம்படி வீதியில் இருந்த தலைவரின் பாசறையை இலக்கு வைத்து, இந்தியப் படையின் சிறப்புக் கொமாண்டோக்கள் தாக்குதலைத் தொடுத்தனர். அவர்களின் முயற்சி வெற்றிபெறவில்லை. ஆனாலும் தலைவர் தனது பாசறையை இடம் மாற்றிக்கொண்டார். 'ஒப்பறேசன் பவான்' என்ற பெயரில் புகழ் பெற்ற யாழ்ப்பாணச் சமரை இந்தியப் படைகள் தொடர்ந்தன. "ஓரிரு நாட்களுக்குள் எல்லாம் முடிந்து விடும்" என்றார்கள் இந்தியத் தலைவர்கள்.ஆனால் 'யாழ்ப்பாணச் சமர்' ஒரு மாதம் நீடித்தது.போரைத் தொடர்ந்து வழிநடாத்துவதற்காக தலைவர் தளத்தை மாற்றிக்கொண்டார். சில வாரங்கள் கழித்து இந்திய தளபதிகளும் இதை அறிந்து கொண்டுவிட்டனர். ஆனால் யாழ்ப்பாணத்தைவிட்டு தலைவர் எங்கு சென்றிருப்பார் என்பது, இந்திய தளபதிகளுக்கு புதிராகவே இருந்தது. அல்லது மன்னார் பெருங்காட்டிற்குச் சென்று விட்டாரா? அல்லது கொக்கிளாய் ஆற்றைக் கடந்து திருகோணமலைக்குச் சென்று விட்டாரா? வரைபடத்தை விரித்துவைத்துவிட்டு இந்தியத் தளபதிகள் குழம்பத் தொடங்கினர்.தலைவரின் இருப்பிடத்தைக் கண்டறிந்து சொல்வதில் சிங்களப் புலனாய்வுத் துறையும் பெருமுயற்சி செய்தது. ஆனாலும், தலைவரின் இருப்பிடம் தொடர்பான ஊகங்களைத் தவிர, சான்றுகளைப் பெறமுடியவில்லை. தலைவரைத் தேடி இந்தியப் படைகள் வன்னிப் பெருநிலத்திலும், தென் தமிழீழத்திலும் மோப்பம் பிடித்துத் திரிந்தன. இதேவேளை தமிழ்நாட்டில் தங்கியிருந்த கிட்டண்ணை, இந்தியப் படையுடன் போர்நிறுத்தம் ஒன்றைக் கொண்டுவந்து பேச்சுவார்த்தை நடாத்த முயன்றபடி இருந்தார். இந்திய அரசின் சம்மதத்தைப் பெற்று லெப்.கேணல் ஜொனியை தலைவரிடம் அனுப்பி, அவரின் கருத்துக்களையும்-பணிப்புக்களையும் பெற கிட்டண்ணை முடிவெடுத்தார். கிட்டண்ணையின் வேண்டுகோளை இந்தியப் படை ஏற்றது. ஆனால் ஜொனி இரகசியமாக தமிழீழத்திற்குச் செல்வதை அது தடுத்தது. ஜொனி செல்லவிரும்பும் இடத்திற்கு தாங்களே கூட்டிச்சென்று பாதுகாப்பாக விட்டுவிடுவதாக இந்தியத் தளபதிகள் பாசாங்கு செய்தனர்.ஜொனியின் பயணத்தைப் பயன்படுத்தி தலைவரின் இருப்பிடத்தை அறிந்துகொள்ள அவர்கள் திட்டமிட்டனர். இந்தியத் தளபதிகளின் நோக்கம் தெரியாத ஒன்றல்ல. ஆயினும் அவர்களது கட்டளையை ஏற்கவேண்டிய தேவையும் நிர்ப்பந்தமும் இருந்தன.இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தார்கள். இந்தியப் படை வவுனியாவரை ஜொனியைக் கூட்டிச்சென்று விட்டுவிடுவது என்றும், அதன்பின் ஜொனி தானாகவே தலைவரைத் தேடிச்சென்று சந்தித்து மீண்டும் வவுனியா இந்தியப்படை முகாமுக்கே திரும்பி வந்துவிடுவது என்றும், இணக்கம் காணப்பட்டது. இந்தியத் தளபதிகளும் இதற்கு இணங்கினர். ஜொனியை வவுனியா கொண்டுசென்று இறக்கிவிடு முன்னரே, வன்னிப் பெருநிலத்தில் ஜொனியின் பயணத்தைக் கண்காணிக்க இந்தியத் தளபதிகள் ஏற்பாடுகளைச் செய்தனர். ஜொனி வவுனியா கொண்டுவந்து விடப்பட்டார். தேசவிரோதக் கும்பல்களினதும், அவர்களது உளவாளிகளினதும் மற்றும் பதுங்கியிருக்கும் இந்தியச்சிப்பாய்களினதும் கண்களில் படாது சுற்றிச் சுழன்று, தலைவரின் இருப்பிடத்திற்கு விரைந்தார். தலைவரைச் சந்தித்தார்-கிட்டண்ணையிடம் சொல்லவேண்டிய விடயங்களை மனதில் பதித்தார். மீண்டும் வவுனியா நோக்கிப் பயணத்தை தொடங்கினார். பயணத்தின் ஒரு கட்டத்தில் புதுக்குடியிருப்புக்கு வந்து, அங்கிருந்து சைக்கிள்மூலம் விஸ்வமடுவரை செல்ல முயன்றுகொண்டிருந்தார்.தேவிபுரத்திற்கு அருகே உள்ள காட்டாறு ஒன்றிற்குள், ஜொனியின் பயணப் பாதையை அறிந்துகொள்ளப் பதுங்கிக்கிடந்த இந்தியச் சிப்பாய்களின் துப்பாக்கி வீச்செல்லைக்குள், ஜொனியின் சைக்கிள் சென்றுவிட்டது.ஜொனி மீண்டும் வவுனியா திரும்பும்வரை வன்னிப் பெருநிலப்பரப்பில் இராணுவ நடவடிக்கைகள் எதையுமே செய்யமாட்டோம் என்ற இந்தியத் தளபதிகளின் வாய்மொழி வாக்குறுதியையும் மீறி, ஜொனி சுட்டுக்கொல்லப்பட்டார். ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்தும் தந்திரோபாயத்தை இந்தியத் தளபதிகள் கடைப்பிடித்தனர். ஜொனியின் பயணத்தைப் பயன்படுத்தி தலைவரின் இருப்பிடத்தை சரியாகக் கண்டறிவது ஒன்று; மற்றையது புலிகளின் தளபதியை தந்திரோபாயமாககக் கொன்றுவிடுவது. இரண்டையுமே இந்தியத் தளபதிகள் அடைந்துவிட்டனர். வவுனியாவுக்கு மேற்குப் புறத்தில் இருக்கும் மன்னாரிலோ அல்லது கொக்கிளாய் வாவிக்கு அப்பாலுள்ள தென் தமிழீழத்திலோ தலைவர் இல்லை; அவர் மணலாற்றுக் காட்டிற்குள்தான் பாசறை அமைத்து இருக்கின்றார் என்பதை ஜொனியை தடயமாக வைத்து அறிந்து கொள்ள, இந்தியத் தளபதிகளுக்கு வெகுநேரம் பிடிக்கவில்லை. 'இராசா' கண்டுபிடிக்கப்பட்டுவிட்டார். ஆகவே இராசா இனி நகர முடியாது என்று நினைத்துக்கொண்டு, இந்தியப் படைகள் 'செக்மேற்' சொன்னார்கள். ஜொனி சுட்டுக்கொல்லப்பட்டதும் அடுத்து என்ன நடக்கவிருக்கின்றது என்பதை தலைவர் ஊகித்தறிந்துகொண்டுவிட்டார்.இன்னும் சில வாரங்களில் இந்தியப் படைகள் மணலாறு மீது ஒரு பெரும் இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளுவார்கள் என்று தலைவர் எதிர்பார்த்தார்.வெள்ளம்போல் காட்டுக்குள் நுழையப் போகும் இந்தியச் சிப்பாய்களுடன் மரபுவழிச் சமரை நடாத்துவது எளிதல்ல என்பதும், தலைவருக்குத் தெரியும். அதற்காக பின்வாங்கிச் செல்லவும் – அவர் விரும்பவில்லை. ஏனெனில் அது புலிகள் இயக்கத்தை இராணுவ ரீதியாக அழித்துவிடும் என்று, அவர் உறுதியாக நம்பினார். தமிழீழ தேசியத்திற்குக் கவசமாக இருக்கும் புலிகளின் இராணுவ பலம் சிதைக்கப்பட்டால், தமிழினம் அரசியல்ரீதியாக ஒடுக்கப்பட்டுவிடும் என்று தலைவர் அஞ்சினார். ஆகவே இந்தியப் படையுடனான போரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லவேண்டிய வரலாற்றுக் கடமை தன்மீதே இருக்கின்றது என்பதை நன்குணர்ந்த தலைவர் அவர்கள், சாதிக்க அல்லது சாக முடிவெடுத்தார். மணலாற்றைத் தளமாக்கிய அடுத்த கணத்திலிருந்தே ஒரு பெரும் காட்டுச் சமருக்காக காட்டையும் – போராளிகளையும் ஏற்கனவே தலைவர் தயார்ப்படுத்தியிருந்தார். இப்போது, முல்லைத்தீவு மாவட்டத்திலும்-மணலாற்றுக் காட்டிற்குள்ளும் இருந்த சில நூறு புலிவீரர்களை, ஒரு பெரும் சண்டைக்குத் தயாராக்கினார். காட்டிற்குள் நுழையப்போகும் இந்தியப் படைகளின் சுதந்திரமான நகர்வைக் குழப்புவதன் மூலம் சில இராணுவ சாதனைகளைப் படைக்க முடியும் என்றும், இவ்விதம் பல இராணுவ சாதனைகளை நிகழ்த்துவதன் மூலம் இந்தியப் படையின் இராணுவ நடவடிக்கையை முறியடிக்க முடியும் என்றும், தலைவர் எண்ணினார். இந்த இராணுவ சாதனைகள் ஒரு உளவியல் போருடன் கலந்து செய்யப்படுமானால், அது இரட்டிப்புப் பலனைக் கொடுக்கும் என்றும் அவர் எதிர்பார்த்தார். ஒரு தரைப்படை வீரனை கனவிலும் அச்சுறுத்துவது மிதிவெடிகளும்-பொறிவெடிகளும்,கண்ணிகளும்தான். இப்படியான சந்தர்ப்பங்களில், தூக்கிய ஒருகாலைக் கீழே வைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒரு படைவீரன் செத்துப் பிழைக்கின்றான்.இந்த மிதிவெடிகளை, எறும்புக்கூட்டம்போல வரவிருக்கும் இந்தியச் சிப்பாய்களுக்கு எதிராகப் பயன்படுத்தினால் நல்ல பலனைக் காணலாம். ஆனால் உயர் தொழில்நுட்பத்துடன் உற்பத்திசெய்யப்பட்டு இறக்குமதி செய்யப்படும் இத்தகைய மிதிவெடிகளுக்கு நாம் எங்கே போவது? தலைவரது கனவிலும்-நினைவிலும் இந்தக் கேள்வியே உதித்து விடைதேடப் போராடியது. ஒரு நாள் அதிகாலை நான்கு நான்கரை மணியிருக்கும்- காட்டுப் பாசறையில் தனது படுக்கையில் இருந்தபடி சிந்தித்துக் கொண்டிருந்த தலைவர் அவர்கள் திடீரென எழுந்து, சில நூறுயார் தள்ளி இருந்த பாசறையில் தங்கியிருந்த இராணுவ தொழில்நுட்பப்பிரிவின் பொறுப்பாளர்களைத் தேடிச் சென்றார். தனது மனதில் தோன்றிய மிதிவெடித் தயாரிப்புப் பொறிமுறைபற்றி அவர்களுக்கு அப்போதே விளக்கிக்கூறினார். காட்டிலேயே கிடைக்கக்கூடிய மரத்தடி-ரின் பால்ப்பேணி, மற்றும் றபர்பான்ட்' என்பவற்றைக் கொண்டு, சிறுபிள்ளைகள் விளையாடும் 'கெற்றப்போலின்' தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி மிதிவெடிகளைத் தயாரிக்கமுடியும் என்று தலைவர் விளக்கி நம்பிக்கையூட்டிக்கொண்டிருந்தார். பரீட்சார்த்த முயற்சிகள் தொடங்கின. சிறுதொகையில் வெடிமருந்தும், 'பென்டோச்' பற்றரியும், டெற்றொனேற்றரும்' தவிர மிகுதி அனைத்துப் பொருட்களும் உள்ளூர்ப் பொருட்கள்.இறுதியில் முயற்சி வெற்றிகண்டது. இப்போது இந்தியப் படைகள் மணலாற்றுக் காட்டைச் சூழ பல்லாயிரக் கணக்கில் விரைவாகக் குவிக்கப்பட்டனர். அதற்கு ஒப்பறேசன் செக்மேற் எனப் பெயரிட்டனர். மெதுவான வேகத்தில் மிதிவெடி தயாரிப்புத் தொடங்கியது. அந்த மிதிவெடிக்குத் தலைவர் பெயரிட்டார் ஜொனி மிதிவெடி. இந்தியப் படைகள் காட்டுச் சமரைத் தொடங்கிவிட்டன. ஜொனிக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டு காட்டுக்குள் நுழைந்த இந்தியப் படைக்கு, 'ஜொனி மிதிவெடி'கள் நம்பிக்கைத் துரோகம் செய்யத் தொடங்கிவிட்டன. ஜொனியின் பயணத்தை நயவஞ்சகமாகப் பயன்படுத்தி 'பாதை' கண்டுபிடித்த இந்தியப் படைகளுக்கு இப்போது, ஜொனி மிதிவெடிகள் பாதத்தைக் கழற்றிக் கொண்டிருந்தன. இந்தியப் படைகள் எண்ணியதைப்போல தலைவரை அழிக்க முடியவில்லை. செக்மேற் 1……2……3 என இராணுவ நடவடிக்கை தொடர்ந்தது. 100……200……300 என இந்தியப் படைகளின் கால்களும் கழற்றப்பட்டன. 'செக்மேற்' அவமானத்துடன் முடிந்தது. ஜொனி மிதிவெடிகள் புத்துயிர் பெற்று புதுவேகம் கண்டன. செக்மேற் முறியடிப்பின் முதுகெலும்பு ஜொனி மிதிவெடிகள். ஒரு பெரிய வரலாறு இம் மிதிவெடிக்குள்ளும் இப்பெயர் சூட்டலுக்குள்ளும் ஒளிந்து கிடக்கிறது! ![]() |
செஞ்சி கோட்டை! Posted: 24 Dec 2014 07:36 AM PST |
Kilvalai (or) Kizhvalai is a hamlet in Tirukkoyilur taluk in Villuppuram distric... Posted: 24 Dec 2014 05:29 AM PST Kilvalai (or) Kizhvalai is a hamlet in Tirukkoyilur taluk in Villuppuram district in the Indian state of Tamil Nadu. Kilvalai is located 24 kilometres (15 mi) northwest of Villupuram, 38 kilometres (24 mi) southeast of Thiruvannaamalai. Another important rock art site of Tamil Nadu, Settavarai is located 18 km northwest of Kilvalai. Kilvalai village has 3000 years old heritage. The historical importance of the village is the presence of 1000 B.C.E. rock paintings. The kilvalai rock paintings consists mainly of human images with bird headed. The rock paintings in kilvalai, are found in three rocky areas and are painted in red ochre. Among them, two are very weak and difficult to resolve. Also, very few paintings are seen here. The third one which contains majority of the paintings is clear. This rock art site is called as "Ratha Kudaikkal"(Tamil: இரத்த குடைக்கல்) by the local villagers, which means Blood Carvings. The first picture depicts three human beings postured side by side; one man seated on a horse, another holding its bridle and the third man standing with outstretched hands in a way of welcoming them. These men's faces resemble the beak of a bird. The second picture consists of four human beings standing on a boat. The third human image holding a long stick, probably sailing the boat. Paintings of some graffiti consisting of combined triangles, addition, multiplication markings, drawn inside the circles, stacked lines are seen. These images are similar to the graffiti found in Indus Valley Civilization. A Sun image with 17 rays is also seen here. The first symbol indicates, rainfall with thunder; second one, going as a group along with the head of the group; third one, going towards the north direction; fourth one, the production of musical sound; and the fifth one, festival time. Video: Kilvalai Rock Painting http://www.youtube.com/watch?v=UEgUvq759Uk http://www.youtube.com/watch?v=2zJcYkXCm2Q&feature=related In Tamil http://www.tnarch.gov.in/cons/paint/paint1.htm ![]() |
Posted: 24 Dec 2014 04:13 AM PST நண்பேன்டா... ''மச்சான், நீ முன்னால தியேட்டருக்குப் போ... நான் பின்னாலயே தண்ணி பாட்டில் வாங்கிட்டு வந்துடுறேன்''னு நண்பன் சொன்னா, நாம சினிமா டிக்கெட் எடுக்கணும்னு அர்த்தம். * ''மாப்ள, கிளம்பிட்டேன். உங்க தெரு முக்குலதான் இருக்கேன்''னு நண்பன் சொன்னா, அந்த டபேரா தலையன் இன்னமும் அவன் வீட்ட விட்டுக் கிளம்பலன்னு அர்த்தம். * ''மச்சி, ஃப்ரீயா இருக்கியா? ஒரு முக்கியமான விஷயம்''னு நண்பன் பேச்சை ஆரம்பிச்சா, ஏதோ ஒரு அமவுன்ட் கடன் கேட்கப் போறான்னு அர்த்தம். * ''பங்காளி, வாடா சரக்கடிப்போம்''னு தின்ன வடையில இருக்கிற எண்ணெய தலையில தேய்க்கிற கஞ்சப் பிசினாரி நண்பன் பாசமா கூப்பிட்டா, அவன் காதல் கதைய சொல்லப் போறான்னு அர்த்தம். * ''மச்சான், உன் போனக் கொடு... ஒரு கால் பேசிட்டுத் தர்றேன். என் நம்பர்ல இருந்து கூப்ட்டா ஃப்ரெண்டு போன எடுக்க மாட்டேங்கறான்''னு நண்பன் நம்ம போன வாங்குனா, நம்ம பேலன்ஸ கழுவி கவுத்தப்போறான்னு அர்த்தம். * ''பங்கு, உன் பைக்க கொடுடா, அம்மாவ ரேஷன் கடையில விட்டுட்டு வந்துடுறேன்''னு நண்பன் சொன்னா, அவன் ஆளோட எங்கயாவது ஊர் சுத்தப் போறான்னு அர்த்தம். * ''மச்சி, இதெல்லாம் ஒரு பாரா? நான் உனக்கு ஒரு நாள் வைக்கறேன் பாரு ட்ரீட்டு''ன்னு பில்லு வர்றப்ப நண்பன் சொன்னா, இன்னைக்கு செலவு நம்மோடதுன்னு அர்த்தம். * ''பரவாயில்ல மச்சான்... நான் வெளியவே நிக்கிறேன். நீ சொல்லிட்டு வா''ன்னு நம்ம வீட்டுக்கு வெளிய நின்னுக்கிட்டு நண்பன் சொன்னா, நம்ம வீட்டுல அவனுக்கு பூசை நடந்திருக்குன்னு அர்த்தம். * ''அவ ரொம்ப திமிர் பிடிச்சவ மச்சி, ரொம்ப ஹெட்வெயிட்டு''ன்னு ஒரு பொண்ணப் பத்தி நண்பன் சொன்னா, அந்தப் பொண்ணுகிட்ட ஏற்கனவே லவ் லெட்டர் கொடுத்து திட்டு வாங்கியிருக்கான்னு அர்த்தம். * ''மாப்ள, இது ரொம்ப ஷார்ட் கட்டுடா''ன்னு சந்து சந்தா நண்பன் நம்மளக் கூட்டிட்டுப் போனா, அந்த சந்துல ஏதோ ஒரு பொந்துல அவன் ஆளு இருக்குன்னு அர்த்தம். - யாரோ? யாருக்கோ?? ![]() |
Posted: 24 Dec 2014 03:03 AM PST கற்பழிக்கப் படாமல் இருப்பது எப்படி? கை பையை களவு கொடுக்காமல் இருப்பது எப்படி? தனியாய் இருக்கையில் வீட்டில் பாதுகாப்பாய் இருப்பது எப்படி, என்று தான் சொல்லித் தரப்படுகிறது. இன்றைய உலகில் திருடாதே, பெண்ணை அவமதிக்காதே, பொய் சொல்லாதே, வன்முறை செய்யாதே, மொத்தத்தில் தவறு செய்யாதே என்று சொல்லப்படுவதில்லை. தவறு நடந்துக் கொண்டே தான் இருக்கும். நாம தான் நம்மை தவறிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவேண்டும். @கனா காண்கிறேன் |
You are subscribed to email updates from சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |