Relax Please: FB page daily Posts |
- இன்னைக்கு இரவு 12.00 மணிக்கு கிருஸ்துமஸ் தாத்தா உங்க வீட்டுக்கு வந்து என்ன பரிசு...
- ஐ அம் வெயிட்டிங். ------------------------------------ பொண்ணு பாக்க வந்தப்பயே ச...
- இப்படியும் ஒரு பெண்ணா? ............................................................
- நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.. :)
- எப்போதெல்லாம் மகள் அழகாய் தெரிவாள் அப்பாக்களுக்கு?? * பிறந்தவுடன் கைகளில் சுமக்...
- பாபர் மசூதிச் சுவரில் ஓடிப்பிடித்து விளையாடுகின்றன ராமர் அணில்கள்! (படித்ததில்...
- குசும்பு... ஒரு சமயம் ஸ்பெயினில் இருந்து இளைஞர் ஒருவர் தூதுவராக பக்கத்து நாட்ட...
- குளத்தில் விழுந்து மிதந்த மலரொன்று அதிலிருந்த மீனிடம் கேட்டது. “சுதந்திரத்துடன...
- ஆணின் சிரிப்பினை விட பெண்ணின் சிறு புன்னகை அழகானது!! பெண்ணின் அழுகையை விட ஆணின்...
- :) Relaxplzz
- என்னங்க, இவ்வளவு நேரமாவா தூங்குவிங்க, எந்திரிங்க ! "குளிச்சிட்டு பாத்ரூம் பைப்ப...
- # படித்ததில் பிடித்தது # ஒரு நா(தா)யின் கண்ணீர்.... மத்திய தர வகுப்பினர் அதிகம...
- ”கோழி மிதித்து குஞ்சு சாகாது” ஆனால் குஞ்சு மிதித்து முடமான கோழிகள் -’முதியோர் இ...
- கேக்கின் மீது கையால் அழகிய ஓவியம்.. திறமைக்கு நம் வாழ்த்துக்கள்..
- :) Relaxplzz
- நான் சுத்தி வளச்சி பேச விரும்பல., என்ன unfriend பண்றவங்கள பாத்து நேரடியாவே கேக்க...
- காடு கழனி வரப்பெல்லாம் கட்டிடமா மாறுதுங்க அடுக்குமாடி கட்டிடமா மாறுதுங்க! குழம...
- இதலெல்லாம் பேசவேண்டாம்
- 1000 வருடம் பழமையான Yew மரம், வேல்ஸ் நகரம்.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)
- (y) Relaxplzz
- சுடுகாடு தானேன்னு சும்மா நினைக்காதிங்க பாஸ்...... அங்க போறதுக்காக அவனவன் உயிரைய...
- இது ஒரு கசப்பான உண்மை.. ************************* பள்ளி இறுதித் தேர்வில் முதன்ம...
- மாதுளம்பழம்த்தின் மருத்துவ குணங்கள்...! மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்த...
- இரண்டு வரி கதை சுடச் சுட டிக்கட் கேட்ட கண்டக்டரிடம் போலிஸ்கிட்டேவா? என்றான் பள...
- இளநீர் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)
- :) Relaxplzz
- என ஆளா தான படம் புடிக்குற , மரியாதையா எனக்கும் கொஞ்சம் காட்டு, இல்ல காத கடிச்சி...
- விவேகானந்தர் பேசி முடித்துவிட்டு மேடையில் இருந்து இறங்கி வந்தார். அவரால் வசீகரி...
- (ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து...) 10 வயதில் : நானும் அவனும் வீட்டுப்பாடம் படித...
- TNAGAR ரங்கநாதன் தெரு..
Posted: 24 Dec 2014 07:40 AM PST |
Posted: 24 Dec 2014 07:15 AM PST ஐ அம் வெயிட்டிங். ------------------------------------ பொண்ணு பாக்க வந்தப்பயே சம்மையா சீன் போட்டான் அவன். பால்கனிக்கு கூட்டிட்டு போய் சம்ம ஹீரோய்க் எஃபக்ட் குடுத்தான். பட் அவன் பேசுறத கேட்டுட்டே இருக்கலாம். அப்டி பேசுனான். காபி குடுக்க அவன் முன்னாடி போய் நிக்குறேன். இல்ல காபி குடிக்குற மூட் இல்ல. ஐஸ் வாட்டர் வேனும்ங்கறான். அந்த பாடி லாங்குவேஜ். அவன் பெர்ஃப்யூம் ஸ்மெல்லோட சேர்ந்து மேன்லியா ஒரு ஸ்மெல். என்னவோ நிக்கவே டைம் இல்லாத மாதிரி அவன் iPhone எடுத்து அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு தடவ பாத்துட்டு இருந்தது..... எல்லாமே சம்ம்ம்ம சீன். ஆனா அந்த சீன் தான் அவனுக்கு ரொம்ப அழகா இருந்தது. லைட்டா திமிரான பார்வ. அது இன்னும் அழகு. கண்ண மூடிட்டு ஓகே சொல்லிட்டேன். இன்னைக்கு என்கேஜ்மென்ட்-ம் முடிஞ்சுது. ஒரு ட்ரான்ஸ்பரன்ட் வொய்ட் ஷர்ட். ப்ளூ ஃபேடட் ஜீன். போன் வெளில தெரியற மாதிரி வெச்சுருந்தான். பிரவுன் ஷூஸ். அப்பப்ப தலைய கோதிட்டே இருந்தான். என்னவோ அவன் லைட்டா தலைய சிலுப்பி முடில கை வெக்ரப்பலாம் என்னால சிரிக்காம இருக்க முடில. அவனுக்கு நான் செஞ்சுவிடனும் போல இருந்துச்சு. பெரியவங்கலாம் சேர்ந்து ஏதேதோ படிச்சாங்க. டௌரி பத்தி பேச்சு வந்துச்சு. மடார்னு எந்திரிச்சான். நான் பொண்ணுட்ட பேசனும்னான். என் பேர் சொல்லிருந்தான்னா நல்லா இருந்துருக்கும். பட் பொண்ணுன்னு தான் சொன்னான். "அதான் அன்னைக்கே பேசிட்டியே டா"-ன்னாரு அவன் அப்பா. "இல்ல டௌரி விஷயமா 'அனு'க்கிட்ட பேசனும்"-னான். அவன் என் பேரு சொன்னப்ப அப்டியே ஜிவ்வுன்னு ஒரு ஷாக் தலைலேர்ந்து கால் வர போச்சு. பர்ஸ்ட் டைம்.. ஒரு பையனுக்காக ஒரு படபடப்பு வரதெல்லாம். அதே பால்கனி. "ஹே.. எப்டி இருக்க" கை குடுத்தான். சத்தியாமா எனக்கு எப்டி சொல்றதுன்னு தெரியல. கைல ஒரு நடுக்கம். காதுலாம் ஏதோ பண்ணுச்சு அவன் தொட்டப்ப. கூஸ்பம்ப்ஸ். "ஹ்ம்ம்.... நீ......ங்க.... "ங்க மட்டும் தான் என் வாய்லேந்து வந்துச்சு. கண்டின்யு பண்ணினான். "என்ட டௌரி பத்திலாம் வீட்ல பேசல. லைக்... bachelor-ஆ வாழறதுக்கு அல்மோஸ்ட் எல்லாமே என்கிட்ட இருக்கு. பேமிலிக்கு என்ன தேவைன்னு ஐ டோன்ட் ஹாவ் எனி ஐடியா.. உனக்கு என்ன வேணும் நெனைக்கறியோ அத உன் அப்பாட்ட நீயே சொல்லிடு. டௌரி விஷயத்ல எதாச்சு கேட்டாலும் தப்பா நெனப்பாங்க. கேக்கலன்னா பையனுக்கு எதாச்சு கொரையோனு நெனப்பாங்க. இந்த பிரச்சினையே வேணாம் . நான் வெளில போயிட்டு அனுக்கு என்ன விருப்பமோ அதே பண்ணுங்க. என் வீட்ல டிமான்ட் ஏதும் இல்லனு சொல்லிடறேன்.. சரியா?? " நான் அவன் கண்ணையும். அவன் அப்பப்ப முடி கோதுறதையுமே பாத்துட்டிருந்தேன். "ஹே..." "ம்ம்ம்... ம்ம்ம்...கேட்டுற்றுக்கேன் " "ஹ ஹா. நான் சொல்லியே முடிச்டேன்." அழகா ஒரு அசட்டு சிரிப்பு சிரிச்சான். நக்கலா இருந்துச்சு. அவன் என்ன நீ, போ, வான்னு பேசுனது இன்னும் சூப்பரா இருந்துச்சு. வெளில போனோம். "நாங்க போன பின்னாடி அனுவே சொல்லுவா. ஆல் டன். (All Done)" "என்ன டா இதெல்லாம்" – இது அவன் அம்மா. "புதுசா இதெல்லாம்?? "- அவன் அப்பா. எல்லாரும் ஸ்டார்ட் சொன்னது மாதிரி ஒரு தடவ சிரிச்சாங்க. அவனும். அழகா சிரிச்சான். அவனுக்கு ஒரு கிஃப்ட் வாங்கி வெச்சுருந்தேன். "தம்பி. அனு உங்களுக்கு ஏதோ கிஃப்ட் வெச்சுருக்கா"- இது என் அப்பா. "ஓ. சூப்பர். "- ஸ்டைலா சொன்னான். R சைலென்ஸ். போய் குடுத்தேன். வாங்கினதுமே தொட்டுப்பாத்துட்டு கேட்டான். "iPhone 5?" "5 – S " "கூல்.. நான் கூட உனகொன்னு வாங்கினேன். " எனக்கு சம்ம ஹாப்பி. பாக்கெட்குள்ள இருந்து ஒரு டைரி மில்க் சில்க் எடுத்து குடுத்தான். இதான் கிப்ட்டான்னு கேக்க முடில. எனக்கு அதும் கிஃப்ட் தான். அகைன் ஒரு சிரிப்பு. கார்ல ஏறுற முன்னாடி அந்த கண்ணாலேயே ஒரு bye சொன்னான். க்யூட்டா இருந்துச்சு. 45 டேஸ்ல மேரேஜ். ஐ அம் வெயிட்டிங். -மனோ பாரதி Relaxplzz |
Posted: 24 Dec 2014 07:00 AM PST இப்படியும் ஒரு பெண்ணா? ...................................................................................... 8 பேர் அடங்கிய ஒரு கும்பலால் கற்பழிக்கப்படுகிறார், சுனிதா கிருஷ்ணன். அப்போது அவருக்கு வயது 15. வாழ்க்கை போச்சே என்று இடிந்து போய் முடங்கி விடவில்லை. அன்றே முடிவெடுத்தார், தன்னை போல் பாலியல் வன்முறைக்கு ஆளான குழந்தைகள், பெண்களை மீட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்க வேண்டும் என்று. களத்தில் இறங்கவும் செய்தார். மாலினி என்கிற 15 வயது சிறுமியை, அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர், விபச்சார விடுதியில் விற்றுவிடுகிறார். ஒரு வாடிக்கையாளருக்கு ரூ 6000 என்ற கணக்கில், நாளொன்றுக்கு ரூ.50,000 சம்பாதித்துக் கொடுக்க வேண்டும் அந்த பிஞ்சு உடல். கேட்கவே மனம் பதறுகிறது. சிறைக் கைதியைப் போன்று அடைத்து வைக்கப்பட்ட அந்த குழந்தை வெளியே தப்பித்து வர 3 முறை முயன்றும், தோற்றுப் போன அந்தச் சிறுமி, இறுதியாக சுனிதா கிருஷ்ணனின் திறமையான செயல்பாடுகளால் காப்பாற்றப்பட்டு, ஐதராபாத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறாள். ஒரு முறை, சமூக விரோதிகளிடமிருந்து சிறுமிகளைக் காப்பாற்றப் போன இடத்தில் வாங்கிய அடி உதையால், இவரது வலது காது கேட்கும் திறனை இழந்திருக்கிறது. பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட 3000 க்கும் மேற்பட்ட குழந்தைகளை மீட்டெடுத்து மறுவாழ்வு அளித்துள்ளார். வாழ்க நவீன புரட்சி நாயகி. Share this and salute her! (இதை பகிர்ந்து அவரது செயலுக்கு ஊக்கமும், ஆதரவும், மரியாதையும் தாருங்கள் !) Relaxplzz ![]() |
Posted: 24 Dec 2014 06:40 AM PST |
Posted: 24 Dec 2014 06:00 AM PST எப்போதெல்லாம் மகள் அழகாய் தெரிவாள் அப்பாக்களுக்கு?? * பிறந்தவுடன் கைகளில் சுமக்கையில் அழகு.. * முகம் பார்த்து சிரிக்கையில் அழகு... * கை பிடித்து நடக்கையில் அழகு... * தரை கூட்ட பட்டுப்பாவாடை கட்டி தத்தி தத்தி நடக்கையில் அழகு... * ரெட்டை சடையிட்டு துள்ளி துள்ளி வருகையில் அழகு... * தவறு செய்துவிட்டு தன் சிரிப்பால் தவறை மறைக்கையில் அழகு... * தாவணி கட்டியபோது வந்த நாணத்திலும் அழகு... * கைகளை சுட்டுக்கொண்டு எனக்காக சமைக்கையில் அழகு... * என் மகளாய் இருந்து வேறொருவர் மனைவியான போதும் அழகு... * என் மகள் என்னும் குட்டி தேவதை அவளின் குட்டி தேவதையை பெற்றெடுத்தபோதும் அழகு... அப்பாக்களுக்கும் மகள்கள் என்றுமே அழகு ♥ Relaxplzz ![]() |
Posted: 24 Dec 2014 05:50 AM PST |
Posted: 24 Dec 2014 05:10 AM PST குசும்பு... ஒரு சமயம் ஸ்பெயினில் இருந்து இளைஞர் ஒருவர் தூதுவராக பக்கத்து நாட்டுக்கு அனுப்பப்பட்டார். அவரைக் கண்ட அந்நாட்டு அரசர் ,''ஸ்பெயினில் பெரிய மனிதர்கள் இல்லை போல அதனால் தான் தாடி கூட முளைக்காத ஒரு சிறுவனை அனுப்பியுள்ளார்கள்'' என்று சொன்னார் கிண்டலுடன். அதற்கு அந்த இளைஞர் ,''அரசே,அறிவு என்பது தாடியில் இருப்பது என்பது எங்கள் மன்னருக்குத் தெரியாது.தெரிந்திருந்தால் எனக்குப் பதிலாக ஒரு வெள்ளாட்டையே அனுப்பியிருப்பார்.''என்று பதிலடி கொடுத்தார். :D :D Relaxplzz |
Posted: 24 Dec 2014 05:00 AM PST குளத்தில் விழுந்து மிதந்த மலரொன்று அதிலிருந்த மீனிடம் கேட்டது. "சுதந்திரத்துடன் இந்தக் குளத்தில் சுற்றிச் சுற்றி நீந்துகிறாயே, உனக்கு இந்தக் குளம் நிறைய உரிமை கொடுத்திருக்கிறதா?" மீன் சொன்னது. "இந்தக் குளத்திலிருக்கும் அழுக்கையெல்லாம் நான் சுத்தம் செய்கிறேன். அந்த வகையில் இந்தக் குள்த்தில் எனக்கு நிறைய கடமை உண்டு. கடமையை செய்பவர்களுக்கே உரிமை அதிகம்" என்றது மீன். சுதந்திரமாய் இயங்க சரியான வழி கடமையைச் செய்வதுதான். Relaxplzz ![]() |
Posted: 24 Dec 2014 04:50 AM PST |
Posted: 24 Dec 2014 04:30 AM PST |
Posted: 24 Dec 2014 04:10 AM PST என்னங்க, இவ்வளவு நேரமாவா தூங்குவிங்க, எந்திரிங்க ! "குளிச்சிட்டு பாத்ரூம் பைப்ப அடைசீங்களா?" "தோசை ஊத்துனதுக்கு அப்புறம் மாவ fridge ல வைங்க " "ஏங்க கேஸ் அடுப்ப ஆப் செஞ்சிங்களா?" "கதவ நல்லா பூட்டுங்க, பூட்டிட்டு இழுத்து பாருங்க !" ஏங்க எங்க இருக்கீங்க? டைம் என்னாகுது தெரியுமா ? "சீக்கிரம் வீட்டுக்கு போங்க, ஏரியாவுல திருட்டு பயம் ஜாஸ்தி " "சாப்பிட்டிங்களா? மிச்ச சாப்பாட்டுள தண்ணி ஊத்துங்க " "இவ்வளவு நேரம் முழிச்சு இருக்கிங்களா ? தூங்குங்க ! "டிவி லைட்டை எல்லாம் போட்டுட்டு தூங்காதிங்க " #ஊரில் இருந்தாலும் போனில் வாழ்கிறார்கள் மனைவிகள். :P :P Relaxplzz |
Posted: 24 Dec 2014 04:00 AM PST # படித்ததில் பிடித்தது # ஒரு நா(தா)யின் கண்ணீர்.... மத்திய தர வகுப்பினர் அதிகம் வசிக்கும் சென்னை குரோம்பேட்டை, பாரதிதாசன் சாலையின், ஒரு முட்டுச் சந்தில் உள்ள குப்பைத்தொட்டி அருகே பெண் நாய் ஒன்று எப்போதும் ஒண்டிக் கிடக்கும். அநாயவசியமாக குலைப்பது, தெருவில் போவோரை மிரட்டுவது, சைக்கிளில் வருவோரை விரட்டுவது, புதிதாக வருபவர்களை பயமுறுத்துவது என்று தெரு நாய்களுக்கு உரிய எந்த குணமும் இல்லாமல் சாதுவாக முடங்கிக்கிடக்கும். தெருவில் உள்ளோர் குப்பைத் தொட்டியில் வீசியெறியும் குப்பைகளில் தனக்கான உணவு இருந்தால் எடுத்துவந்து சாப்பிட்டுவிட்டு சாதுவாக படுத்துக்கொண்டு இருக்கும்.இந்த நாய் கடந்த சில நாட்களுக்கு முன் இரண்டு குட்டிகளை போட்டது. இரண்டு குட்டிகளுமே ஆண் குட்டிகள், தெரு நாய்க்குட்டிகள் என்றே சொல்ல முடியாதபடி அடர்த்தியான ரோமங்களுடன் படு சுறு, சுறுப்பாக காணப்பட்டன, அந்த குட்டிகளோடு தாய் நாய் பாசத்தோடு விளையாடுவதை பார்த்து, மனம் பறிகொடுத்து எதிர்வீட்டு மாணவி அஸ்வினி என்பவர் தனது அண்ணன் சுரேஷ் மூலமாக, குட்டி நாய்களுக்கு பால், மற்றும் ரொட்டி போன்ற உணவுகளை கொடுத்துவிட்டார். தங்கைக்காக உணவு கொண்டு போன அண்ணன் சுரேஷ் தாயும், சேயும் விளையாடும் அழகையும், அதன் பாசத்தையும் பார்த்துவிட்டு தனது வீட்டில் இருந்த குடையை கொண்டுவந்து நாய்குட்டிகள் மீது வெயில் படாதவாறு பாதுகாப்பாக நிறுத்திவைத்தார். போதும் போதாதற்கு வீட்டில் இருந்த சாக்குகளை கொண்டு போய் விரிப்பாகவும் விரித்துவைத்தார். கீழே விரிப்பு, மேலே குடை, சாப்பிட பால், ரொட்டி என்று படு குஷியான குட்டிகள் அதிக சந்தோஷத்துடன் விளையாடின. அவைகளின் சந்தோஷம் அதிக நாள் நீடிக்கவில்லை, ஒரு நாள் காலை தனது குட்டிகளுக்கு உணவு தேடி நீண்ட தொலைவு ஒடிப்போய், எதையோ கவ்விக் கொண்டு திரும்பிய தாய் நாய்க்கு அதிர்ச்சி. காரணம் குட்டிகள் இரண்டையும் காணவில்லை. கொண்டுவந்த சாப்பாடை கீழே போட்டுவிட்டு, யாராவது குட்டிகளை கொன்று புதைத்து விட்டதாக எண்ணி, அப்படி ஒரு ஆக்ரோஷத்துடன் மண்ணைத் தோண்டி, தோண்டி தேடிப் பார்த்தது. பிறகு குப்பைத்தொட்டி, அதன் இண்டு இடுக்குவிடாமல் குட்டிகளை தேடி, தேடி ஒடியது, ண்ணீர்விட்டு அழுதது. இத்தனை நாளும் சங்கீதமாக இருந்த நாய்குட்டிகளின் சத்தத்திற்கு பதிலாக ஒருவித ஈனஸ்வர ஒலம் வரவும், சுரேஷ் என்னவென்று எட்டிப்பார்த்தார், கொஞ்ச நேரத்தில் நாய் குட்டிகள் மீது ஆசைப்பட்ட ஒருவரோ அல்லது இருவரோ, தாய் நாய் இல்லாத சமயமாக பார்த்து தூக்கிக் கொண்டு (திருடிக் கொண்டு) போய் இருக்கவேண்டும் என்பதை புரிந்துகொண்டார். சுரேஷ்க்கு இரண்டு நாளில் திருமணம், தலைக்கு மேல் ஏகப்பட்ட வேலைகள் காத்துகிடந்தன, ஆனாலும் தாய் நாயின் வேதனை எந்த வேலையையும் செய்யவிடாமல் மனதை போட்டு பிசைந்தது. சரியா, தவறா, நடக்குமா, நடக்காதா, என்பதை பற்றியெல்லாம் யோசிக்காமல், ஒரு "சார்ட்' வாங்கி வந்து, நாயை எடுத்தவர்கள் தயவு செய்து திரும்ப கொண்டுவந்து ஒப்படைக்கவும் என்று, தாய் நாயே எழுதியது போல எழுதி நாய் திருடுபோன இடத்தில் ஒட்டிவிட்டார். தாய் நாய்க்கு என்ன நடந்தது, என்ன நடந்து கொண்டு இருக்கிறது எனத்தெரியாது, ஆனால் ஏதோ நடக்கப் போகிறது என்பது மட்டும் புரிந்தது, எழுதப்பட்ட சார்ட் முன் சாப்பிடாமல் கண்ணீர் விட்டபடியே பகல், இரவு, குளிர், வெயில் பாராது நின்று கொண்டு இருந்தது. என்ன ஒரு ஆச்சர்யம் இருள் விலகாத ஒரு அதிகாலை வேளையில் நாயை எடுத்தவர், போஸ்டர் வாசகத்தால் மனம் மாறி, யாருமறியாமல் கொண்டுவந்து விட்டுவிட்டு போய்விட்டார், தாயை பார்த்து சந்தோஷத்தில் குட்டிக்கு ஏக சந்தோஷம், குட்டியைப்பார்த்த சந்தோஷத்தில் தாய் நாய்க்கு அதைவிட அதிக சந்தோஷம், தங்களது சந்தோஷத்தை சத்தமாக குரைத்து பகிர்ந்து கொள்ள, மீண்டும் இந்த சங்கீத குரைப்பு சத்தம் கேட்டு மனம் துள்ளிக்குதித்தபடி வந்த சுரேஷ்க்கு மனம் முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம். இரண்டு குட்டிகளில் ஒன்றாவது கிடைத்ததே என்ற சந்தோஷம் தாய் நாயின் கண்களில் அப்பட்டமாக தெரிந்தது, நீண்ட நாள் பிரிந்து பின் கூடிய சந்தோஷத்தை உருண்டுபுரண்டு விளையாடி இரண்டும் வெளிப்படுத்தியது. பாசம் காட்டுவதில் மனிதர்களை மிஞ்சிய இந்த தாய் நாயைப்பார்த்து இப்போது சுரேஷின் கண்களில் கண்ணீர் ஆனால் இது ஆனந்த கண்ணீர். ![]() |
Posted: 24 Dec 2014 03:50 AM PST |
Posted: 24 Dec 2014 03:40 AM PST |
Posted: 24 Dec 2014 03:30 AM PST |
Posted: 24 Dec 2014 03:10 AM PST நான் சுத்தி வளச்சி பேச விரும்பல., என்ன unfriend பண்றவங்கள பாத்து நேரடியாவே கேக்குறன்.. . அட.,எதோ ஒரு ஆர்வத்துல நாலு மொக்க ஸ்டேடஸ் போட்ருப்பன்., அது பிடிக்கலனா நீ என்ன பண்ணியிருக்கனும்..? "லைக்" போடாம போயிருக்கனும்.. அட.,அதானங்க ஒலக வழக்கம்.. . அத.,விட்டுட்டு நீ என்ன பண்ணியிருக்க., என்ன unfriend பண்ணியிருக்க., ஏதோ.,நாலஞ்சு ரெக்வஸ்ட் பென்டிங்-ல இருக்கவும் சமாளிச்சாச்சி.. இல்லனா.,ரவுண்டா 5000 பேர எப்பிடி கொண்டு வரது., அப்புறம்.,இந்த ஐடிய எப்பிடி மைன்டய்ன் பண்றது.. . போன வாரங்கூட இதே மாதிரி சம்பவம் பீகார்ல நடந்துச்சி., ஆனா.,அவன் unfriend பண்ணல., பையன் பாவமேனு., லைக்க போட்டுட்டு., கமெண்ட்ல நாலு "நல்ல" வார்த்த சொல்லிட்டு போயிருக்கான்.. அந்த நாகரிகம் ஒனக்கு தெரியல.. . உன் இஷ்டத்துக்கு பழகி வெளையாட்றதுக்கு., இது என்ன ஐடியா இல்ல.... Be Careful... :P :P வடிவேலு ஸ்டைலில் நீங்க இதை வாசிச்சிருந்தா லைக் பன்ணுங்க... (y) (y) Relaxplzz |
Posted: 24 Dec 2014 03:00 AM PST காடு கழனி வரப்பெல்லாம் கட்டிடமா மாறுதுங்க அடுக்குமாடி கட்டிடமா மாறுதுங்க! குழம்புக்குள்ள உழவு மாடு மிதக்குதுங்க இறைச்சி கறித்துண்டா மிதக்குதுங்க! காட்டை அழிச்சி வீடு கட்டி ரோடு போட்டீங்க தாரு ரோடு போட்டீங்க! தண்ணி ஊற வழி இல்லாம கலந்து போச்சிதுங்க மழத்தண்ணி கடலுக்குள்ள கலந்து போச்சுதுங்க! பெய்யும் மழையத்தேக்கி வெக்க வக்கு இல்லீங்க நமக்கு வக்கு இல்லீங்க! அடுத்த ஊருல தண்ணி கேட்டு மல்லு கட்டுறீங்க நீங்க மல்லு கட்டுறீங்க! மின்விளக்குபோட்டு நகரமங்கே பளபளக்குதுங்க இரவு கூட பகலைப்போல பளபளக்குதுங்க! தண்ணி பாய்ச்ச வழியில்லாம பயிரு வாடுதுங்க இங்கே விவசாயி வயிறு வாடுதுங்க! உழவுதனை மதிக்காமல் அரசு நடத்துறீங்க! என்ன அரசு நடத்துறீங்க! உழவனுக்கு உதவாமல் காலம் கடத்துறீங்க! வீணே காலம் கடத்துறீங்க! மரணமதன் விளிம்புலதான் நிக்கவெச்சிட்டீங்க! உழவையும், உழவனையும் நிக்கவெச்சிட்டீங்க! ---வெண்ணிலா Venn Nilaa. ![]() |
Posted: 24 Dec 2014 02:50 AM PST |
Posted: 24 Dec 2014 02:40 AM PST |
Posted: 24 Dec 2014 02:30 AM PST |
Posted: 24 Dec 2014 02:20 AM PST |
Posted: 24 Dec 2014 02:10 AM PST இது ஒரு கசப்பான உண்மை.. ************************* பள்ளி இறுதித் தேர்வில் முதன்மையாக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறுபவர்கள் பொறியாளர்களாகவோ,மருத்துவர்களாகவோ ஆகிறார்கள். இரண்டாம் நிலையில் மதிப்பெண்கள் பெறுபவர்கள் தேர்ச்சி அடைந்து ,M.B.A. படித்து மேலாளர்கள் பதவி பெற்று முதல் தரத்தில் தேறியவர்களுக்கு மேல் அதிகாரிகளாக வருகிறார்கள். மூன்றாம் நிலையில் தேர்ச்சி அடைபவர்கள் அரசியலில் நுழைந்து அமைச்சர்களாக ஆகி முதல் இரண்டு நிலைகளில் தேறியவர்களை தங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்துக் கொள்கிறார்கள். படிப்பே ஏறாமல் தேர்வில் தோல்வி அடையும் சிலர் ரவுடிகள்,,தாதாக்கள் ஆகி மேலே உள்ள மூன்று தரப்பினரையும் நடுநடுங்க வைக்கின்றனர். பள்ளிக்கூடம் பக்கம் மழைக்குக் கூட ஒதுங்காதவர்கள் பெரிய சுவாமிகளாகவும்,குருக்களாகவும் ஆகிறார்கள்.எல்லாத் தரப்பினரும் அவர்கள் சொல்லும் வழியில் செல்கிறார்கள். Relaxplzz |
Posted: 24 Dec 2014 02:00 AM PST மாதுளம்பழம்த்தின் மருத்துவ குணங்கள்...! மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. #மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம். வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். பித்த சம்மந்த மான அனைத்து உடல்நல குறை பாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம். மாதுளம் பழத்தின் தோலை அம்மியில் மை போல் வைத்து அரைத்து அதில் எலுமிச்சம்பழம் அளவு எடுத்து அரை ஆழாக்கு எருமை தயிரில் கலந்து மூன்று நாள் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிற மருந்துகள் கொடுத்தும் குணமாகாத சீதபேதி உடன் நிற்கும். Relaxplzz ![]() |
Posted: 24 Dec 2014 01:50 AM PST இரண்டு வரி கதை சுடச் சுட டிக்கட் கேட்ட கண்டக்டரிடம் போலிஸ்கிட்டேவா? என்றான் பள்ளியில் போலிஸாக மாறுவேடமிட்டு செல்லும் சிறுவன். இதை பார்த்த போலிஸ் காண்ஸ்டபிள் நம்மை பார்த்துதான் எதிர்கால தலைமுறை வளரும் என உணர்ந்து சில்லரையை கண்டக்டரிடம் நீட்டினார் டிக்கட் வாங்க. Relaxplzz ![]() |
Posted: 24 Dec 2014 01:40 AM PST |
Posted: 24 Dec 2014 01:30 AM PST |
Posted: 24 Dec 2014 01:20 AM PST |
Posted: 24 Dec 2014 01:10 AM PST விவேகானந்தர் பேசி முடித்துவிட்டு மேடையில் இருந்து இறங்கி வந்தார். அவரால் வசீகரிக்கப் பட்டவளாய் அந்த அழகிய இளம்பெண் அருகில் வந்தாள். நீங்கள் என்னை மணந்து கொள்கிறீர்களா? என்று கேட்டாள். என்னைப் பார்த்ததும் திடீரென்று ஏன் இந்த எண்ணம் வந்தது? என்று கேட்டார் ஸ்வாமிஜி. அதற்கு அந்த பெண், உங்களைப் போலவே ஞானமும்,ஆற்றலும் நிரம்பிய மகனைப் பெறவேண்டும் என விரும்பிகிறேன் எனவேதான் உங்களை மணக்க விரும்புகிறேன் என்றாள். அதற்கு ஸ்வாமிஜி உடனே சொன்னார்.என்னை மணந்து என்னைப்போலவே மகனை பெற்றுக்கொள்வதை விட என்னையே மகனாக ஏற்றுக்கொண்டு விடேன். இன்று முதல் நான் உன்னை "தாயே" என்றே அழைக்கிறேன் என்று கூறினார்.. இதுதான் அறிவின் முதிர்ச்சி..... ஒருவரது கருத்தை மறுதலிக்கும் பொழுதுகூட,அவரது மனத்தைக் காயப் படுத்தாமல் மாறாக அவரை மகிழ்விக்கும் மாண்பு.. Relaxplzz |
Posted: 24 Dec 2014 01:00 AM PST (ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து...) 10 வயதில் : நானும் அவனும் வீட்டுப்பாடம் படித்துக்கொண்டிருந்தபோது அவன் வேண்டுமென்றே என் கைகளைத் தொட்டுப் பேனா வாங்கும்போது எனக்கு ஏற்பட்ட உணர்வுதான் காதல் என்பதோ? ஒரு நிமிடம் பரவசத்தில் உடல் சிலிர்க்க, அதை மறைத்துக்கொள்ளப் பெரும் பிரயத்தனப்பட்டேன். அப்போது என் கண்களில் நான் உணர்ந்த்துதான் ஒருவேளை சந்தோஷக் கண்ணீராக இருக்குமோ? 15 வயதில் : நானும் அவனும் தனியாக இருந்த ஒரு சமயத்தில் கொஞ்சம் எல்லை மீறிப் பிடிபட்டுக்கொண்டோம். சற்றும் தயங்காமல் அவன் பழியைத் தன்மேல் போட்டுக்கொண்டு மரண அடி விழுந்தபோதும் மற்றவர்களின் முன்னால் என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவன் ரத்தம் பார்த்து என் விழிகளில் கண்ணீர் ரத்தமாக வழிந்தது. 18 வயதில் : பள்ளிப் பிரிவுபச்சார விழா முடிந்ததும் மனம் முழுதும் இறுக்கமும் தவிப்புமாக நான் அவனிடம் குட்பை சொல்ல முயற்சித்தபோது அவன் என்னை இறுக அணைத்து 'என்னை மறந்து விடுவாயா?' என்று கலங்கிய கண்களுடன் கேட்டான். என் கண்கள் ஏற்கனவே கண்ணீர் சாகரத்தில் நனைந்திருந்தன. 21 வயதில் : நானும் அவனும் கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டு நீண்ட பயணத்துடன் கூடிய டேட்டிங் செய்தோம். எத்தனையோ வாய்ப்புக்கள் இருந்தும், ஏன் நானே ஒருவகையில் தயாராக இருந்தும் எண்ணற்ற முறை என்னை முத்தமிட்டிருந்த அவன் அன்று ஏனோ என்னைத் தொடக்கூட இல்லை. சாதகமான சூழ் நிலையில் கூடச் சுயக் கட்டுப்பாடுடன் நடந்துகொள்ளும் அவனைப் புரிந்து கொண்ட என் கண்கள் பெருமிதத்தில் வெளியிட்ட கண்ணீரை அவனுக்குத் தெரியாமல் துடைத்துக் கொண்டேன். 26 வயதில் : அந்த நாள் வந்தே விட்டது. கையில் சிவப்பு ரோஜாவுடன் முழந்தாளிட்டு அவன் என்னை ப்ரபோஸ் செய்தான். அவனை அவனே முட்டாளாக்கிக் கொண்டதைப்போல அப்படியொரு அறியாமையான வேண்டுதல். அப்போது சொன்னான்: "நான் உன்னை விரும்புகிறேனென்று நீயும் அறிந்திருப்பாய்". உன்னதப் புன்னகை புத்த என் இதழ்களின் சிருங்காரத்தை உணரவில்லை அப்போதும் கண்களில் வழிந்த அதே சந்தோஷக் கண்ணீர். 35 வயதில் : நான் களைப்பாக இருப்பதைப் பார்த்தால் எனக்குக் காஃபி போட்டுக்கொடுத்துத் தூங்க வைத்துவிட்டு அவர் வீட்டுவேலைகளை முழுமையாகச் செய்து முடிப்பார். கடைசியில் அவர் என்னருகில் படுத்துக்கொள்ளும்போது நான் விழித்திருப்பதை அறியாமல் நெற்றியில் முத்தமிட்டுக் 'குட் நைட்' என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்வார். என் மூடிய விழிகளுக்குள் நன்றியின் கண்ணீர் தளும்பும். 50 வயதில் : சிக்கலான சமயங்களில் அவர் ஆஃபீஸ் கவலையில் அல்லது உடல் நிலை சரியில்லாமல் இருந்தாலும் என்னைச் சிரிக்க வைப்பதற்காக ஜோக்கடித்து என் சிரிப்பை ரசிப்பார். ஆனால்,பாவம் அப்போதும் என் ஆனந்தக் கண்ணீரை அவர் உணர முடியாமல் துடைத்துக் கொள்வேன். அவரும் சிரித்துக்கொண்டிருப்பார். 60 வயதில் : தனது கடைசி மூச்சின் சுவாசத்தின்போது அவர் சொன்னார் : "... எனக்கு எல்லையில்லாத காதலைக் கொடுத்தாய். என் ஆண்மையைப் பெருமிதத்துடன் வாழ் நாள் முழுக்க உணரச் செய்தாய். ஒரு காதலின் பின்னால் எனக்கு இவ்வளவு உன்னதமான வாழ்வு கிடைக்குமென்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. நன்றி..." என் கைகளைப் பற்றியிருந்த அவரின் கரங்கள் இறுதியாகத் துவண்டுவிட்டன. என் விழிகளில் நிரந்தரக் கண்ணீர்த்துளிகளைப் பரிசளித்துவிட்டு எப்போதும் எங்கேயும் என்னைக் கூடவே அழைத்துச்செல்லும் அவர் இப்போது முதல்முறையாக என்னை விட்டுவிட்டுச் சென்றார். இந்தமுறை நான் கண்ணீரைத் துடைக்கவில்லை. வழி-பரிமேலழகர் பரி Relaxplzz ![]() |
Posted: 24 Dec 2014 12:50 AM PST |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment