ilovemynative: Facebook page wall posts in Tamil |
- அழகு தமிழ்நாடு!
- அழகு தமிழ்நாடு!
- பாலுட்டி, சோறூட்டி வளர்த்த பெற்றோர்களை அணாதை ஆசிரமத்துக்கு அனுப்பிவிட்டு, வீட்டி...
- அவங்களே கையோட குப்பைய கொண்டு வந்து கொட்டி, அவங்களே கேமராவுக்கு போஸ் கொடுத்து குப...
- பனியாரம் செஞ்சேன்.. உங்க வீட்டுக்காரருக் கு புடிக்குமேனு கொண்டு வந்தேன்.. இவளுக...
- காதல் தோல்விதான் மிகப்பெரிய துன்பமென்று நினைத்துக்கொள்கிறார்கள், கல்யாணம் ஆகும்வ...
- ATM ல 5 தடவைக்கு மேல பணம் எடுத்தால் (அட நம்ம அக்கௌண்டேருந்து தாங்க ) 20 ருபாய் க...
- மௌனத்தால் சாதித்தது ஒன்றுமில்லையென்றாலும், இழந்தது இல்லை. @களவாணி பய
- சிங்கார சென்னை!
- தேனி மாவட்டம் தப்பித்தது, சிக்கபோவது திருப்பூர் மாவட்டம்.... கேரள அரசின் அநீதி:...
- # படித்ததில் பிடித்தது # கடவுளே நான் இதில் ஜெயித்து விட்டால் உனக்கு பொங்கல் வைக...
- ஜிம்முக்கு போன மொத ரெண்டு நாள் யாரயாவது புடிச்சு உதைக்கணும் போல இருக்கு, மூணாவது...
- " தமிழர் சாதித்த சிற்பக்கலை " இடம் : திருக்குறுங்குடி, திருநெல்வேலி மாவட்டம்
- ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பித்த 2 லட்சம் தமிழர்களின் விண்ணப்பங்களை அற்ப காரணம் க...
- 1 லிட்டர் தண்ணீர் 20 ரூபாய்.. யாரும் போராடவில்லை... மல்டி பிளெகஸ் தியேட்டர்களில...
அழகு தமிழ்நாடு! Posted: 06 Nov 2014 07:00 PM PST |
அழகு தமிழ்நாடு! Posted: 06 Nov 2014 10:40 AM PST |
Posted: 06 Nov 2014 09:43 AM PST பாலுட்டி, சோறூட்டி வளர்த்த பெற்றோர்களை அணாதை ஆசிரமத்துக்கு அனுப்பிவிட்டு, வீட்டில் ஒரு "நாயை"கட்டி போட்டு பாலூட்டி, சோறூட்டி வளர்க்கிறது சமுகம். @உஸ்மான் |
Posted: 06 Nov 2014 09:39 AM PST |
Posted: 06 Nov 2014 09:13 AM PST |
Posted: 06 Nov 2014 08:34 AM PST பனியாரம் செஞ்சேன்.. உங்க வீட்டுக்காரருக் கு புடிக்குமேனு கொண்டு வந்தேன்.. இவளுகளால நான் எத்தன தடவதான் நெலத்துக்கு ரத்தம் குடுக்கறது :( @N S Vel Rajan |
Posted: 06 Nov 2014 08:05 AM PST |
Posted: 06 Nov 2014 07:08 AM PST காதல் தோல்விதான் மிகப்பெரிய துன்பமென்று நினைத்துக்கொள்கிறார்கள், கல்யாணம் ஆகும்வரை..! - ஷிலா |
Posted: 06 Nov 2014 04:12 AM PST ATM ல 5 தடவைக்கு மேல பணம் எடுத்தால் (அட நம்ம அக்கௌண்டேருந்து தாங்க ) 20 ருபாய் கூடுதலாக சார்ஜ் பண்ணுவாங்களாம்.. !!!! அதனால நாம என்ன பண்ணனும்.. எல்லாருமே சிரமம் பார்க்காம ஒரு 5-6 தடவை.. ஒவ்வொருத்தரும்.. பேங்குக்கு போய் வெறும் 100- 100 ருபாயா Withdraw பண்ணனும்..!! இப்படியே ஒவ்வொரு 100 ருபாய்க்கும் பேங்க்ல கூட்டம் கூடணும்.. பேங்க்ல வேலை செய்யுறவங்க காண்டாகி அவங்களே போராட்டம் பண்ணனும்.. அந்த லெவலுக்கு போகணும்.. !! அப்பதான் இந்த சட்டம் மாறும்.. நம்ம சவுகரியத்துக்கு தான் ATM மிஷின் வச்சிருக்காங்க.. ATM ல பணம் எடுக்க கூடாதுன்னா சம்பளத்தை Cash ஆ குடுக்க சொல்லுங்க..! #இந்த விஷயத்தை நாம சீரியஸா எடுத்துக்கலேன்னா.. நம்ம தலைல மிளகாய் அரைப்பது தொடரும்..!! |
Posted: 06 Nov 2014 03:11 AM PST மௌனத்தால் சாதித்தது ஒன்றுமில்லையென்றாலும், இழந்தது இல்லை. @களவாணி பய |
சிங்கார சென்னை! Posted: 06 Nov 2014 02:49 AM PST |
Posted: 06 Nov 2014 02:14 AM PST தேனி மாவட்டம் தப்பித்தது, சிக்கபோவது திருப்பூர் மாவட்டம்.... கேரள அரசின் அநீதி: பாம்பாற்றில் புதிய அணை! ==================================================== திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்தில் அமராவதி அணை 1958 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள சுமார் 60 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. மேலும் 26க்கும் மேற்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கும் ஆதாரமாக விளங்குகிறது. இதற்கு ஆண்டுக்கு 15 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். ஆனால், பெரும்பாலான ஆண்டுகளில் சுமார் 8 டி.எம்.சி. தண்ணீர்தான் வருகிறது. பாம்பாறு, தேனாறு, சின்னாறு ஆகிய நதிகளின் மூலம் அமராவதி அணைக்கு தண்ணீர் வருகிறது. தற்சமயம், தமிழக - கேரள எல்லையில் உள்ள மறையூர் அருகே காந்தலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பட்டிசேரி என்ற இடத்தில் 26 கோடி செலவில் ஒரு புதிய அணை கட்ட திட்டமிட்டு, 03.11.2014 ஆம் நாள் திருவனந்தபுரத்தில் இருந்து காணொளிக் காட்சி மூலம் கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டி அவர்கள் அடிக்கல் நாட்டி உள்ளார். இந்த அணை கட்டப்பட உள்ள பட்டிசேரியில் நடந்த விழாவில், கேரள நீர் பாசனத்துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப், சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த அணை 75 அடி உயரத்தில், 440 அடி நீளத்தில் கட்டப்பட்டால் அமராவதி அணைக்கு வரும் தண்ணீரில் 2 டி.எம்.சி. அளவுக்கு பாதிக்கப்படும். காவிரி நடுவர் மன்றத்தில், காவிரியின் கிளை நதியான அமராவதியும் காட்டப்பட்டு இருப்பதால் காவிரி ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசும், கேரள அரசும் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், காவிரி ஆணையம், சுற்றுச்சூழல்துறை, நீர்வளம், மின்சாரத்துறை ஆகிய அமைப்புகளின் ஒப்புதலை பெறாமலேயே அணையைக் கட்ட முடிவு செய்துள்ளது சட்டவிரோதமான செயலாகும். கீழ் பாசனப்பகுதி அரசின் அனுமதி இல்லாமல் மேல் பகுதியில் அணை கட்டுவது சட்டவிரோதமாகும். கேரள அரசின் இந்தப் புதிய அணை கட்டும் திட்டத்தால் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 60ஆயிரம் ஏக்கர் பாசனப் பகுதி பாதிக்கப்படுவதுடன், பெரும்பகுதி பாலைவனமாகும் சூழ்நிலையும் ஏற்படும். அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையையும் இழுத்து மூட வேண்டிய நிலை ஏற்படும். தென்தமிழ்நாட்டின் வாழ்வாதாரமான முல்லை பெரியாறில், பென்னி குக் அணையை உடைத்து தமிழகத்துக்கு பெரும் கேடு செய்ய அனைத்து வழிகளிலும் முயன்று தோற்றுப்போன கேரள அரசு, கொங்கு மண்டலத்தின் வாழ்வாதாரங்களில் ஒன்றான பாம்பாற்றுக்குக் குறுக்கே புதிய அணை கட்ட முனைந்துள்ளது. இதை உடனடியாக தடுத்து நிறுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். @வைகோ ![]() |
Posted: 06 Nov 2014 02:14 AM PST |
Posted: 06 Nov 2014 01:59 AM PST # படித்ததில் பிடித்தது # கடவுளே நான் இதில் ஜெயித்து விட்டால் உனக்கு பொங்கல் வைக்கிறேன் எனக்கு மட்டும் கேட்டது கிடைத்து விட்டால் உனக்கு கிடா வெட்டுகிறேன் வருவோரெல்லாம் வியாபாரம் பேசுகிறார்கள்.. கடவுள் தீர்மானித்து விட்டார். நாளைக்கே கோவில் வாசலில் எழுதி ஒட்டிவிடவேண்டும் "வெற்றி விற்பனைக்கு அல்ல" என்று.. |
Posted: 06 Nov 2014 01:53 AM PST ஜிம்முக்கு போன மொத ரெண்டு நாள் யாரயாவது புடிச்சு உதைக்கணும் போல இருக்கு, மூணாவது நாள் நம்மள நாலு பேர் உதைச்ச மாதிரி இருக்கு.... @காளிமுத்து |
Posted: 06 Nov 2014 01:17 AM PST |
Posted: 06 Nov 2014 01:12 AM PST ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பித்த 2 லட்சம் தமிழர்களின் விண்ணப்பங்களை அற்ப காரணம் கூறி மத்திய அரசு நிராகரித்திருப்பது பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது..... மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் போது அளிக்கப்படும் சான்றிதழ் நகல்களுக்கு "சான்றொப்பம் (Attested) தேவையில்லை" என்று முதலில் கூறியது.தெற்கு ரயில்வே தேர்வுகளுக்கு வேலை கனவோடு தகுதியுள்ள பல லட்சம் தமிழர்கள் விண்ணப்பித்தார்கள். தேர்வு நேர சமயத்தில் "சான்றொப்பம்" (Attested) இல்லாததால் 2 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது" என்று தேர்வு வாரியம் அறிவிக்கிறது. தமிழ்நாட்டில் நிரப்பபடப்போகும் பணிகளுக்கு தமிழர்களால் தேர்வெழுத முடியாத நிலையை மத்திய அரசு வேண்டுமென்றே செய்துள்ளது..... தமிழ்நாட்டில் உள்ள காலியாக உள்ள பணியிடங்களுக்கு வெளி மாநிலத்துக்காரர்கள் எல்லாம் தேர்வெழுதுகிறார்கள்.அவர்களுக்கு தேர்வில் கூடுதல் நேரம் போன்ற சலுகைகள் எல்லாம் கொடுக்கப்படுகிறது. தமிழர்களாகிய நாம் வேடிக்கை மட்டுமே பார்க்கும் நிலையை மத்திய அரசு திட்டமிட்டு செய்துள்ளது..... @நல்ல சிவம் |
Posted: 06 Nov 2014 12:12 AM PST 1 லிட்டர் தண்ணீர் 20 ரூபாய்.. யாரும் போராடவில்லை... மல்டி பிளெகஸ் தியேட்டர்களில் 1/2 லிட்டர் தண்ணீர் 25 ரூபாய்.. யாரும் போராடவில்லை.. புட்டிகளில் அடைக்கப்பட்ட 300 மிலி குளிர்பானத்தின் விலை 70 ரூபாய்.. யாரும் போராடவில்லை.. திரையரங்குகளில் டிக்கெட் விலையுயர்த்தி மூன்று நாட்களுக்குள் கொள்முதலையும் லாபத்தையும் ஈட்டும் யுத்திக்கு எதிராக யாரும் போராடவில்லை... வணிக வளாகங்களில் ஒரு இட்லி 30 ரூபாய்.. யாரும் போராடவில்லை.. 100% விலையுயர்த்தி 30% தள்ளுபடியோடு விற்கும் துணிக்கடைகளுக்கு எதிராக யாரும் போராடவில்லை.. பால்விலையேற்றத்திற்கெதிராக போராட்டம்..! அநாவசியங்களுக்கு அதிகமாய்ச் செலவழிப்பவர்கள் அத்தியாவசியங்களுக்கு செலவழிக்கத் தயங்குவது பெருவணிகர்களின் சூத்திரங்கள் வெற்றி பெற்றிருப்பதன் சாட்சி.. சுருக்குக்கயிறை ஊஞ்சலெனவும் ஊஞ்சலை சுருக்கெனவும் பார்க்கும்படி குருடாக்கப்பட்ட சமுதாயமாய் மாறியாயிற்று.. பால்விலையேற்றம் மாடுகளை மட்டுமே நம்பிவாழும் ஏழை விவசாயிகளின் மனங்களில் சிறு மகிழ்ச்சியை எழுதியிருக்கிறது.. கொள்முதலுக்கும் வருவாய்க்கும் நட்டக் குறிகளையும் சமக்குறிகளையுமே சந்தித்துக்கொண்டிருக்கும் மாடுமேய்க்கும் விவசாயிக்கு கூட்டல்குறியை அறிமுகப்படுத்தியிருக்கிறது இந்தச் சிறிய பால் விலையேற்றம்.. போராடுபவர்களே அறிந்து போராடுங்கள்.. வேர்களின் மீது வெந்நீர் ஊற்றிக்கொண்டு இலைகள் செழித்திருக்க முடியாது... @காளி முத்து |
You are subscribed to email updates from சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |