Thursday, 6 November 2014

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


படித்ததில் பிடித்தது..! பில்கேட்ஸ் இறந்தபின் எமனுடைய அவையில் நிறுத்தப்பட்டிருந்...

Posted: 06 Nov 2014 07:30 AM PST

படித்ததில் பிடித்தது..!

பில்கேட்ஸ் இறந்தபின் எமனுடைய அவையில் நிறுத்தப்பட்டிருந்தார்.
எமன் சொன்னான்,
"நான் இந்த கேசில் மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன், உனக்கு சொர்க்கமா?.. நரகமா? ... எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த சமுதாயத்தில் ஏறக்குறைய அனைத்து வீடுகளிலும் கணினி உபயோகிக்க செய்து விட்டாய், அதோடு "படு பயங்கரமான விண்டோஸையும் " உருவாக்கிவிட்டாய்.அதனால் நான் இதற்குமுன் செய்யாத ஒன்றை உனக்காக செய்யப்போகிறேன்... உனக்கு சொர்க்கமா? நரகமா? என்பதை உன் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்."

"நல்லது கடவுளே!ஆனால் இரண்டுக்கும் என்ன வேறுபாடு?"
" ஒகே! இரண்டின் வேறுபாட்டையும் நீ நேரில் பார்த்து முடிவாக உன் பதிலை சொல்! , வா என்னோடு, முதலில் நரகத்தை பார்ப்போம்!"
"அப்படியே செய்வோம் எமதர்மராஜா ! வாருங்கள் போகலாம்"
நரகத்தைப் பார்த்ததும் ஆச்சர்யத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டார் பில்கேட்ஸ்.
இதுவா நரகம்? ... தெளிவான நீரோடு, வெண்மையான பெரிய கடற்கரை, கண்ணை கவரும் இளம் நங்கைகள் சிரித்துக்கொண்டும், விளையாடிக் கொண்டும் இருக்க, இதமான சூரிய ஒளி...
"ஆஹா ! அருமை !" இதுதான் நரகம் என்றால், எனக்கு சொர்கத்தை பார்க்க அவகாசமில்லை.." என்று பில்கேட்ஸ் சொன்னபோதும்
"வா சொர்கத்தை பார்க்கலாம்.." என சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றார் எமன்.
அங்கே,
நீல ஆகாயம், சிறு சிறு வெண் மேகங்கள், தேவதைகள் ஆடிப்பாடி களித்திருக்க .. அருமை. ஆனால் பில்கேட்ஸ்க்கு, நரகத்தை போல சொர்க்கம் அவரைக் கவரவில்லை..

நீண்ட யோசனைக்குப்பின்,
"தர்மராஜா!, நான் நரகத்திற்கே போக ஆசைபடுகிறேன்" என்றார் பில்கேட்ஸ்.
"உன் விருப்பம்", எமன்.
இரண்டு வாரங்களுக்குப்பின்,
பில்கேட்ஸின் நிலையை சோதிக்க எமன் நரகத்திற்கு போனார்.
அங்கே, இருண்ட குகையில், கை, கால்கள் இரும்பு சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு பெரிய தீ சுவாலைகளுக்கு நடுவே துடித்துக்கொண்டிருக்க, எம கிங்கரர்கள் பில்கேட்ஸை சித்திரவதை செய்து கொண்டிருந்தார்கள்.
"எப்படி இருக்கே பில்கேட்ஸ்?" என்றான் எமன்.
பில்கேட்ஸ் கடுமையான வேதனையோடு, ஈனமான குரலில்,
"முடியல... நான் அன்று பார்த்த அழகிய கடற்கரை, இளம் மங்கைகள் எல்லாம் எங்கே?"
எமன் சொன்னான்,
"அட லூசு பய புள்ள, அது SCREEN SAVER டா !"

ஆண்களே! தாடி வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா...? தாடி வைத்திருக்கும் ஒ...

Posted: 06 Nov 2014 06:00 AM PST

ஆண்களே! தாடி வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா...?

தாடி வைத்திருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதையை வைத்திருப்பார்கள். நம் ஊர்களில் பெரும்பாலானவர்கள் காதலில் தோல்வியுற்றால் தாடி வளர்ப்பார்கள். இருந்தாலும் இப்போதெல்லாம் நிறையப் பேர் ஸ்டைலுக்காகவே தாடி வளர்த்து வைத்திருக்கிறார்கள். தாடிகளில் மயங்கும் பெண்களும் உண்டு என்பது கூட உண்மை தான்!

இப்படி தாடி வளர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது என்று கூறப்படுகிறது. இப்போது தாடி வளர்ப்பதால் கிடைக்கும் 7 உடல் நல நன்மைகள் குறித்துப் பார்ப்போமா...!

சரும புற்றுநோயைத் தடுக்கும்
சமீபத்திய ஆய்வின்படி, சூரியனிலிருந்து வரும் 95 சதவீத புறஊதாக் கதிர்கள் நம் சருமத்தை நேரடியாகத் தாக்காதவாறு நம் தாடி பாதுகாக்கிறதாம். இதனால் தான் தாடி வைத்திருக்கும் ஆண்களுக்கு சரும புற்றுநோயின் தாக்கம் குறைவாக உள்ளதாம்.

ஆஸ்துமா, அலர்ஜிக்கு...
தூசி உள்ளிட்ட பல அலர்ஜிகளைத் தடுப்பதில் அல்லது ஃபில்ட்டர் செய்வதில் தாடியின் பங்கு முக்கியமானதாக உள்ளது. இதனால் ஆஸ்துமாவையும் தவிர்க்க முடிகிறதாம்!

இளமையாக இருக்க...
தாடி வளர்த்திருப்பதால், சூரியனின் தாக்கம் மிகவும் குறைவாக இருப்பதால், தாடி இல்லாதவர்களை விட நீண்ட ஆண்டுகளுக்கு இளமையான தோற்றத்துடனே இருக்கலாமாம். தாடி ஒரு வயோதிகத் தோற்றத்தை வேண்டுமானால் கொடுக்கலாம்; ஆனால், உண்மையில் தாடி வைத்திருப்பவர்கள் இளந்தாரிகள் தான்!

குளிரைத் தாங்க...
தாடி வைத்திருப்பதால் குளிரை அதிகம் தாங்கிக் கொள்ள முடியுமாம். எவ்வளவுக்கு எவ்வளவு தாடி அடர்த்தியாக உள்ளதோ, அந்த அளவுக்கு அது குளிருக்கு இதமானதாக இருக்குமாம்.

நோய்த் தொற்றுக்கள் குறைய...
பாக்டீரியா உள்ளிட்ட நோய்த் தொற்றுக்களைக் குறைப்பதற்கு தாடி மிகவும் உபயோகமாக இருக்கிறது. சுத்தமாக ஷேவ் செய்திருப்பவர்களை இந்த நோய்த் தொற்றுக்கள் எளிதாகத் தொற்றிக் கொள்ளுமாம்.

குறைகளில்லா சருமத்திற்கு...
ஷேவிங்கின் போது ஏற்படும் வெட்டுக் காயங்கள், பருக்கள் உள்ளிட்ட சருமக் குறைபாடுகள் தாடி வைத்திருப்பவர்களுக்குக் கிடையாது. அவை இருந்தாலும் தாடிக்குள் ஒளிந்து தான் கிடக்கும்!

இயற்கையான ஈரப்பதத்திற்கு...
தாடி வைத்திருப்பதால் உலர்ந்த சருமம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அது குளிர்ந்த காற்றையே எப்போதும் தக்க வைத்துக் கொண்டிருப்பதால், சருமம் பாதுகாக்கப்படுகிறது. இதனால், தாடி இருந்தாலும் எப்போது முகம் ஜிலுஜிலுவென்றுதான் இருக்கும்.

நீங்களும் தாடி வளக்குறீங்களா பாஸ்??? என்ன ரீசன் ???


கைக்குழந்தைகளுக்கு கலப்படமில்லாத இலவச பால்! மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத...

Posted: 06 Nov 2014 04:30 AM PST

கைக்குழந்தைகளுக்கு கலப்படமில்லாத இலவச பால்!

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு டீக்கடை முன்பு, ஏராளமான பெண்கள் திரண்டிருந்தனர். இதைப்பார்த்த நாம், என்னவென்று அருகில் சென்று பார்த்தோம்.
அங்கு ஒரு போர்டில் 'மற்ற ஊரில் இருந்து கைகுழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு தரமான பால் இலவசமாக வழங்கபடும், இப்படிக்கு R.குணா சுரேஷ்' என எழுதபட்டிருந்தது.

பாலில் கலப்படம், பால் விலை ஏற்றம் என இன்று தமிழ்நாடே போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும்போது, இதை பார்த்ததும் ' அட பரவாயில்லையே, இந்த காலத்தில் இப்படியும் ஒருவரா..?' என்ற வியப்பு மேலிட, குணாசுரேஷை சந்தித்து பேசினோம்.

''எனக்கு சொந்த ஊர் அருப்புகோட்டை பக்கத்துல ஒரு சின்ன கிராமம். இப்ப பொன்மனியில குடும்பத்தோட வசிக்கிறேன். எனது தம்பியின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு தன் கைக்குழந்தையுடன் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு நள்ளிரவு சென்றிருக்கிறார். அப்போது குழந்தை பசியால் அழுதிருக்கிறது. அந்த நள்ளிரவில் பேருந்து நிலையம் முழுவதும் அலைந்து ஒரு டீக்கடையில் பால் வாங்கி கொடுத்திருக்கிறார். அதை குடித்த கொஞ்ச நேரத்தில் அந்த குழந்தைக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த சம்பவம் எனக்கு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

இங்கும் சில டீக்கடைகளில் பாலில் பலவிதமான கலப்படம் செய்றாங்க. மேலும், பால் கெட்டியா இருப்பதற்காக கிழங்கு மாவு சேர்க்கிறாங்க. அது பெரியவங்களுக்கே ஒத்துக்காது. குழந்தைகளுக்கு எப்படி இருக்கும். எனவே, தான் கைக்குழந்தைகளோடு வருபவர்களுக்கு கலப்படம் இல்லாத தரமான பாலை இலவசமாக வழங்கி வருகிறேன். இதனால் எனக்கு நஷ்டம் ஏற்படவில்லை. இதற்கு எனது தம்பியும் உதவியா இருந்து வருகிறார்'' என்றவர்,

''என்னுடைய இந்த சேவையை கேள்விபட்ட மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாவட்ட மேயர், தமிழ்நாடு நுகர்வோர் மக்கள் இயக்க மகளிரணி என பலரும் பாராட்டினாங்க. இதுபோன்று எல்லா பேருந்து நிலையங்களிலும் தன்னார்வம் கொண்டவர்கள் செய்ய வேண்டும் என சொல்றாங்க. நான் இதை விளம்பரத்திற்காக செய்யல, இதுல எனக்கு பெரிய மன நிம்மதி கிடைக்குது. நாம போனாலும், நம்ம பேரு நிக்கனும்" என்கிறார்.

இவருக்கு இருக்கும் ஒரே ஆசை முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவை ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் என்பதுதானாம்.
வாழ்த்துக்கள்!

-ப.சூரியராஜ்


மாதவிடாய் நின்று போன பெண்களிடம் உறவு வைத்தால் அதை கற்பழிப்பு என கருத முடியாது -...

Posted: 06 Nov 2014 03:36 AM PST

மாதவிடாய் நின்று போன பெண்களிடம் உறவு வைத்தால் அதை கற்பழிப்பு என கருத முடியாது - டெல்லி உயர்நீதி மன்றம்!
.
.
3 , 4 வயது உள்ள குழந்தைகளை கூட விட்டு வைக்காத பன்னாடைகள் உலவும் நாட்டில், இந்த தீர்ப்பு அவர்களுக்கு சவுகரியமாக இருப்பது போல உள்ளது !!
.
பைத்தியகாரத்தனமான நியாயம்

0 comments:

Post a Comment