Relax Please: FB page daily Posts |
- இங்குள்ள பல பேருக்கு இவர் யார் என்று தெரிய வாய்ப்பில்லை! உண்மையில் விளையட்டு து...
- காதலிக்க... அறிவு முக்கியமா...??? அழகு முக்கியாமன்னு கேக்குறாங்க.. !! கண்டிப்பா...
- இந்த கட்டத்தில் விடப்பட்டிருக்கும் எண் எது..?
- (y)
- கிராமத்தில் அந்த டீக்கடை மிகவும் பிரபலம். அதிகாலை நேரமானதால் டீக்கடையைச் சுற்றிக...
- மனைவியை எப்போதும் அன்பாய் வைத்திருக்க ! * நீங்கள் வேலைக்கு செல்பவர் என்றாலும் ச...
- #ரிலாக்ஸ்_நறுக்ஸ் நாலு பேரு போற கார்ல சீட் பெல்ட் போடாம போனா தப்புன்னு சொல்றாங்...
- கல்லணை - கழுகுப்பார்வையில்!
- :)
- அப்பா சொன்ன கதை ரெண்டு விஷயங்களை ஞாபகத்தில் வைத்துக் கொள் என்றார். (1) எப்பவு...
- வெள்ளைக் கதருக்குள் கறுப்பாய் ஒரு பச்சைத் தமிழன் . நீ கல்விச்சாலையில் கற்றது கை...
- #ரிலாக்ஸ்_நறுக்ஸ் இந்தியாவிற்கு ராசயன உரம் விற்கும் எந்த நாட்டிற்கும் நம்மால் ர...
- கர்நாடகாவில் உள்ள மருதீஸ்வரர் கோவில்.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)
- (y)
- நீதிமன்றம் ...விவாகரத்து வழக்கு.. ஜட்ஜ் : ஏப்பா நீ உன் மனைவியே அடிச்சி துன்புறு...
- தலைவலிக்கு செலவில்லாத நிவாரணி! நம் மூக்கில், இரண்டு துவாரங்களையும் சுவாசிக்க /...
- #ரிலாக்ஸ்_நறுக்ஸ் தமிழ் நாட்டில் கர்நாடகா பேங்க் இருக்கு, ஆந்திரா பேங்க் இருக...
- என்ன ஒரு புத்திசாலித்தனம்" :P
- :)
- மாப்ளே இங்கிலீஷ் படம்னா இங்கிலீஷ் படம் தான்டா ;-) என்னடா சொல்ற ? . . . .. . .....
- வீட்டுல அம்மாவுக்கு உடம்பு சரி இல்லை..... தெரு குழாய்ல தண்ணிர் வருது.... நான்...
- #ரிலாக்ஸ்_நறுக்ஸ் பெண்ணே ! நீயெல்லாம் மேக்கப் போட்டாதான் அழகு. நானெல்லாம் பொறந்...
- சிறு வயதில் இது போன்று கல் வீடு கட்டி விளையாடி அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க....
- :)
- வழக்காடு மன்றத்தில் ஒரு வழக்கு நீதிபதி முன் வந்தது. ஒரு மூதாட்டி, சாட்சி கூண்டுக...
- 108 பற்றி தெரியும் 104 பற்றி தெரியுமா..? +++++++++++++++++++++++++++++++++ 104‘...
- #ரிலாக்ஸ்_நறுக்ஸ் காதல் தோல்விதான் மிகப்பெரிய துன்பமென்று நினைத்துக்கொள்கிறார்க...
- நீங்களும் ஷேர் செய்யுங்கள் உங்களால் ஒரு உயிர் காப்பாற்றப்படலாம். கட்டாயம் பகிர...
- (y)
- பழைய சாதத்துல இவ்வளவு விஷயமா?--உணவே மருந்து. திரைப்படங்களில் கிராமத்து சீன். கத...
Posted: 06 Nov 2014 09:01 AM PST இங்குள்ள பல பேருக்கு இவர் யார் என்று தெரிய வாய்ப்பில்லை! உண்மையில் விளையட்டு துறைக்கு என்று ஒருவருக்கு விருது வழங்க வேண்டுமானால்! அதற்கு இவரை தான் முதல் ஆளாக பரிசீலிக்க வேண்டும்! *ஹாலந்து நாட்டில் இவரது ஹாக்கி மட்டையை உடைத்து அதில் காந்தம் ஏதும் வைத்து இருக்கிறாரா என சோதித்து இருக்கிறார்கள்! *1932 இல் 37 போட்டிகளில் 133 கோல் , 1934 -35 இல் 43 போட்டிகளில் 201 கோல் என இவர் அசுரத்தனமாக அடிப்பதை பார்த்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டான் பிராட்மேன் 'நீங்கள் ஹாக்கி வீரர் என்று சொல்லி ஒரு கிரிக்கெட் வீரரை அணியில் சேர்த்து விட்டீர்கள்! இவர் ரன்களை போல அல்லவா கோல்கள் அடிக்கிறார்!' என்று சொல்லி இருக்கிறார்! *சில வெளிநாட்டு பத்திரிக்கைகள் 'இவர் மட்டையில் பசையை தடவி வைத்திருப்பார் போலும்! பந்து அவர் மட்டையுடனே செல்கிறதே!' என எழுதின! *ஆஸ்திரிய நாட்டில் இவர் நான்கு கைகளுடன் இருப்பது போல சிலை வைக்கப்பட்டு உள்ளது! அந்த நான்கு கைகளும் தலா ஒரு ஹாக்கி மட்டையை கையில் பிடித்த வண்ணம் இருக்கும்! *1905 இல் பிறந்து 1979 இல் மறைந்த தியான் சந்தின் பிறந்தநாளான ஆகஸ்ட் 29 தான் இந்திய நாட்டின் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது! *ஹாக்கி விளையாட்டின் மந்திரவாதி என அந்தக் காலத்து பத்திரிக்கைகள் இவரை வர்ணித்தன! 'ஹாக்கியின் கடவுள் " என்றும் வர்ணிக்கப்படுகிறார்! இவரைப்போல அசுரத்தனமாக எந்த வீரரும் இன்று வரை ஹாக்கி ஆடியதில்லை! *ஒருமுறை வளைதடிப் பந்தாட்டமொன்றில் என்ன முயன்றும் தியான் சந்தினால் கோல் அடிக்க முடியவில்லை; பலமுறை தவறியபின்னர் தியான் சந்த் நடுவரிடம் இரு கோல் வலைகளுக்கும் இடையே உள்ள தூரம் சரியில்லை என்று முறையிட்டார். அளவெடுத்துப் பார்த்தபோது பன்னாட்டு விதிகளின்படி இடைத்தூரம் சரியாக இல்லை என்றறிந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. *தியான் சந்தின் திறமையை பார்த்த ஹிட்லர் ஜெர்மன் குடியுரிமையுடன், ராணுவத்தில் கலோனல் பதவியும் தருவதாக சொல்லி இருக்கிறார்! அந்த சலுகையை தயான் சந்த் மறுத்து விட்டார்! *சர்வதேச ஹாக்கியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோல்களை இவர் அடித்துள்ளார். இவர் பெயர் "தியான் சந்த்". Relaxplzz ![]() |
Posted: 06 Nov 2014 08:50 AM PST காதலிக்க... அறிவு முக்கியமா...??? அழகு முக்கியாமன்னு கேக்குறாங்க.. !! கண்டிப்பா அழகு தான் முக்கியம்..!! . . . . . . . . . . . # அறிவு இருக்குறவன் எதுக்கு காதலிக்க போறான்...? :P :P Relaxplzz |
Posted: 06 Nov 2014 08:40 AM PST |
Posted: 06 Nov 2014 08:30 AM PST |
Posted: 06 Nov 2014 08:15 AM PST கிராமத்தில் அந்த டீக்கடை மிகவும் பிரபலம். அதிகாலை நேரமானதால் டீக்கடையைச் சுற்றிக் கூட்டம் கூடியிருந்தது. ''அண்ணே! நாலு டீ போடுங்கண்ணே? அதுல ஒண்ணு சீனி கம்மியா ஸ்டாங்கா இருக்கட்டும்.'' ''ஒரு ரெண்டு டீ போடு.'' குரல் நாலாபுறம் இருந்தும் வந்தது. டீக்கடைக்காரர் கூட்டம் அதிகமாக இருந்தும் பதட்டப்படாமல் டீ போட்டுக் கொண்டிருந்தார். அப்போது, ''ஐயா! சாமி ஒரு சாயா தாங்கய்யா.'' _எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். அழுக்கு உடையில் காவிப் பற்களுடன் துண்டை இடுப்பில் கட்டியவாறு அந்த நபர் தெரிந்தார். டீக்கடைக்காரர் எல்லோருக்கும் கண்ணாடி டம்ளரில் டீ கொடுத்து விட்டு, அந்த அழுக்கு நபருக்கு, அலுமினிய டம்ளரில் டீ போட்டு தன் விரல் அந்த நபர் கையில் பட்டு விடாதபடி டம்ளரை நீட்டினார். எல்லோரும் காசு கொடுக்க _ அந்த நபரும் காசு கொடுக்க கல்லாவில் போட்டார் கடைக்காரர். டீ கொடுத்து, அதைக் குடித்து விட்டு கடைக்காரரை ஏறிட்டு மெதுவாகச் சொன்னார் அந்த அழுக்கு ஆசாமி. ''ஐயா, நான் தாழ்த்தப்பட்ட சாதிக்காரன்னு எனக்குத் தனியா வேற ஒரு டம்ளரில் டீ தாரீங்க. ஆனா நான் கொடுத்த காசையும் அவங்க கொடுத்த காசையும் ஒரே கல்லாவில் போடுறீங்களே!'' பதில் சொல்லத் தெரியவில்லை டீக்கடைக்காரருக்கு. சாதிக்குப் பிறந்த எவனும் தமிழனே அல்ல சாதிக்க பிறந்தவனே உண்மைத்தமிழன்!!!! (y) (y) Relaxplzz |
Posted: 06 Nov 2014 07:59 AM PST மனைவியை எப்போதும் அன்பாய் வைத்திருக்க ! * நீங்கள் வேலைக்கு செல்பவர் என்றாலும் சரி, தொழில் செய்பவர் என்றாலும் சரி, 2-3 மணி நேரங்களை மனைவியுடன் மகிழ்ச்சியாக பேசுவதற்கு என்றேசெலவிடுங்கள். * முடிந்து களைப்பாக வீடு திரும்பினால் டி.வி.யும், ரிமோட்டுமாகஇருந்து விடா தீர்கள். மனைவியை அருகே அழைத்து, அன்று வீட்டில் நடந்தவிஷயங்களை பற்றிக் கேளுங்கள். அரட்டை அடித்துப் பேசுங்கள். இருவரும்ஒன்றாக டி.வி. பார்த்துக்கொண்டிருந்தால், அதில் வரும்கதாபாத்திரங்களிலேயே மூழ்கிவிடாதீர்கள். பக்கத்தில்மனைவிஇருக்கிறாள்என்பதை மனதில் வைத்துக்கொண்டு அவளிடமும் கலகலப்பாக பேசுங்கள். * எடுத்துக்கொண்டால், பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதுகூட தெரி யாமல்கடலை' போட்டுக்கொண்டிருப்பார்கள். அவர்கள் பேசும் விஷயத்தில் பல நேரங்களில் ஒன்றுமே இருக்காது. ஒன்றுமே இல்லாத விஷயத்தைக்கூடபலமணிநேரம் பேசு வார்கள். அதே போன்று நீங்களும்பேசுங்கள். அதற்காக, ஒன்றும்இல்லாத விஷயத்தை பேசுங்கள்என்று அர்த்தம் இல்லை. உங்கள்குடும்பத்துக்குதேவையான நல்ல விஷயங்களை ஆரோக்கியமாக விவாதியுங்கள். இந்தவிவாதத்தில் உங்கள் குடும்ப பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வு கிடைக்கலாம். * பூக்கள் பிடிக்காத பெண்களே இருக்க முடியாது. அடிக்கடி அந்த பூக்களை உங்கள்அன்பான மனைவிக்கு வாங்கிக்கொடுத்து அசத்துங்கள். * சம்பளம் பெறுவோர், சம்பளம் வாங்கிய நாள் அன்று மல்லிகைப்பூவுடன் மனைவிக்கு பிடித்தஸ்வீட்டையும்வாங்கிக்கொண்டு கொடுத்தால் அவர்களதுமனைவி அடை யும் ஆனந்தத்திற்கு அளவே இருக்காது. * உங்கள் மனைவியை எப்போதும் காதலியாகவே நினைத்திருங்கள். ஒருகாதலன் காதலியிடம் எப்படி அன்பாகநடந்துகொள்வானோ, அதே போன்றுநடந்து கொள்ளுங்கள். இல்லையென்றால், முயற்சியாவது செய்யுங்கள். * உன்னுடைய ஆசைகள் எல்லாவற்றையும் நான் நிறைவேற்றி விட்டேனா? நிறைவேறாத ஆசைகள் இருந்தால் சொல். அதை நான் நிறைவேற்றுகிறேன்' என்று அவ்வப்போது மனைவியிடம் சொல்லிப்பாருங்கள். நீங்கள்இப்படிகேட்டமாத்திரத்திலேயே உள்ளம் குளிர்ந்து போவாள் உங்களவள். * மனைவி கஷ்டப்பட்டு சில வேலைகளை செய்யும்போது, அதில் நீங்களும் பங்கெடுத்துப் பாருங்கள். அந்தநேரம், அவள்மனதிற்குள் ஆனந்த மழைச்சாரலேபொழியும். மொத்தத்தில், நீங்கள் மனைவியிடம் எந்த அளவுக்கு அன்பாக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு அவளும் உங்களிடம்அன்பாகஇருப்பாள். நீங்கள் அவளிடம் ஒரு காத லனாய் பழகும்போது அவளும் உங்கள் காதலியாய் மாறிவிடுவாள்! அதனால் காதலியுங்கள், மனைவியை :) Relaxplzz ![]() குடும்பஸ்தன்_பாடசாலை |
Posted: 06 Nov 2014 07:50 AM PST #ரிலாக்ஸ்_நறுக்ஸ் நாலு பேரு போற கார்ல சீட் பெல்ட் போடாம போனா தப்புன்னு சொல்றாங்க .. அப்பிடின்னா 50 பேரு போற பஸ்ல சீட் பெல்ட் ஏன் இல்லை... - களவாணி பய |
Posted: 06 Nov 2014 07:40 AM PST |
Posted: 06 Nov 2014 07:30 AM PST |
Posted: 06 Nov 2014 07:15 AM PST அப்பா சொன்ன கதை ரெண்டு விஷயங்களை ஞாபகத்தில் வைத்துக் கொள் என்றார். (1) எப்பவுமே வெளியில் செல்லும்போது உன்னோடு ஒரு துணையை அழைத்துச் செல். (2) முகம் தெரியும் வரை மாமியார் வீட்டில் இருக்காதே! (1) ஒரு நாள் அவசரமாய் வெளியூர் செல்லும் வேலை ஒன்று இருந்தது. சுற்றியுள்ள பங்காளிகள் யாரும் அந்த நேரத்தில் இல்லை. நண்பர்களும் அவரவர்கள் வேலை விஷயமாய் எங்கெங்கோ சென்று விட்டனர். வீட்டிலிருந்த நாய் குட்டியை துணைக்கு அழைத்துச் சென்றேன். வழியில் பயணக் களைப்பில் ஒரு மரத்தடியில் படுத்து உறங்கி விட்டேன். விழித்துப் பார்க்கையில் ஒரு பாம்பு இறந்து கிடந்தது. நாய் அதனை கடித்துக் குதறி இருந்தது. அப்பா சொன்னதில் ஒரு உண்மை கற்றுக் கொண்டேன். (2) கல்யாணம் முடிந்து மாமனார் வீட்டுக்கு அழைக்கப் பட்டிருந்தேன். முதல் நாள் ஏக தட புடல். இலை நிறைய பட்சணங்களும், சாப்பாடும் வயிறு நிறைந்து போனது. இரண்டாம் நாள் முதல் நாளில் பாதி உணவு தான் கவனிப்பும் சுமார் தான். மூன்றாம் நாள் மீதி இருந்ததில் தண்ணீர் ஊற்றி, நீரும் சோறும் தட்டில் காட்சியளித்தது. குனிந்து கையால்அள்ளப் போன போது, ப்ளேட்டில் முகம் தெரிந்தது. அப்பா சொன்ன உண்மைகள் ப்ளேட்டில் உணர்த்தியது. Relaxplzz |
Posted: 06 Nov 2014 06:59 AM PST வெள்ளைக் கதருக்குள் கறுப்பாய் ஒரு பச்சைத் தமிழன் . நீ கல்விச்சாலையில் கற்றது கைமண் அளவு ஆனால் கல்வி சாதனையில் கடந்தது கடல் அளவு. விருது நகரின் விழுது வெள்ளந்தி மனது. நீ சம்சாரக் கடலில் மூழ்காத கட்டைப் பிரம்மச்சாரி. உன்னிடம் பந்தமும் இல்லை பந்தாவும் இல்லை. நீ ஏழைக் குழந்தைகளுக்குக் கூட்டானவன் ஆனால் ஏட்டுச் சுரைக்காய்களுக்கு வேட்டானவன். பலமான அணைகளைப் பரிசாகத் தந்தவன் - பல பாலங்கள் கட்டத் தானே பாலமாய் இருந்தவன். அறம் பேசிய உன் வாய் புறம் பேசியதில்லை அடுக்கு மொழி தெரியா உன் நாக்கு என்றும் தடம் புரண்டதில்லை. வெட்டும் துண்டும் உன் வார்த்தையில் மட்டும்தான் வாழ்க்கையில் இல்லை. நீ செவிக்கும் வயிற்றுக்கும் சேர்ந்தே ஈய்ந்தவன் சமுக நீதிக்கே சருகாய்த் தேய்ந்தவன். உன்னிடம் வார்த்தை ஜாலமும் கிடையாது உனக்கு வாரி சுருட்டவும் தெரியாது. நீ விடியலுக்கு வித்து கல்விக் கதிரவன் என்பதைக் காலத்தே கண்ட தொலை நோக்கி. நீ கையூட்டு பெறும் அரசியல்வாதிகள் தொடக்கூடாத கையேடு. நீ நான்கு வேட்டி மட்டுமே சொத்தாய்க் கொண்ட நல்லவன் நாடாளும் வித்தையில் கரை கண்ட வல்லவன். நீ ஒரு நாளும் தலை தாழ்ந்ததில்லை அதனால்தானோ என்னவோ உம்மைத் தோற்கடித்த நாங்கள் இன்னமும் தலை நிமிரவே இல்லை !! - ஈ ரா Relaxplzz ![]() "காமராஜர் ஒரு சகாப்தம்" |
Posted: 06 Nov 2014 06:50 AM PST #ரிலாக்ஸ்_நறுக்ஸ் இந்தியாவிற்கு ராசயன உரம் விற்கும் எந்த நாட்டிற்கும் நம்மால் ராசயன உரத்தில் விளைந்த காய்கறிகளை ஏற்றுமதி செய்திட முடியாது - நம்மாழ்வார். |
Posted: 06 Nov 2014 06:40 AM PST |
Posted: 06 Nov 2014 06:30 AM PST |
Posted: 06 Nov 2014 06:15 AM PST நீதிமன்றம் ...விவாகரத்து வழக்கு.. ஜட்ஜ் : ஏப்பா நீ உன் மனைவியே அடிச்சி துன்புறுத்துவதா உன் மனைவி விவாகரத்து கேட்டு வழக்கு வந்துருக்காங்க.... கணவன்: என் மனைவி என் உரிமை ( கல்யாண் ஜீவல்லர்ஸ்) நீதிபதி: உன் மனைவி பேச்சி கேட்டு நடந்தா ஆஹா இல்லன சுவாஹா ( லலிதா ஜீவல்லர்ஸ்) மனைவி: ஐயா அடிச்சி நொறுக்கி என்ன சேதாரம் பண்றாருங்க ஜட்ஜ் ஐயா (அடித்து நொறுக்கப்பட்ட சேதாரம் கல்யாண் ஜீவல்லர்ஸ்) ஜட்ஜ்: ஏப்பா மனைவி தங்கமான உறவு இல்லயா.. (ஜோஸ் ஆலுக்காஸ் இது தங்கமான உறவு) மனைவி : ஐயா அவரோடு இனி என்னால குடும்பம் நடத்த முடியாது பிரிச்சி விட்டுடுங்க ஐயா நீதிபதி : நாங்க இருக்கோம் (வாசன் ஐ கேர்).. மனைவி : இனி இவர் தான் என் புது வாழ்கை துணை ( சன் லேண்டு ரீபைண்டு சன் பிளவர் ஆயில்) ;-) ;-) Relaxplzz |
Posted: 06 Nov 2014 06:00 AM PST தலைவலிக்கு செலவில்லாத நிவாரணி! நம் மூக்கில், இரண்டு துவாரங்களையும் சுவாசிக்க / காற்றை வெளியிட உபயோகிக்கிறோம். தலைவலி வரும் போது, வலது துவாரத்தை மூடி, இடது துவாரம் வழியாக சுவாசிக்கவும். ஐந்தே நிமிட நேரத்தில் தலைவலி காணாமல் போய் விடும். மிகவும் களைப்பாக இருக்கிறதா? இடது துவாரத்தை மூடி, வலது துவாரம் வழியாக சுவாசிக்கவும். சிறிது நேரத்தில் களைப்பு போய் விடும். Relaxplzz ![]() |
Posted: 06 Nov 2014 05:50 AM PST #ரிலாக்ஸ்_நறுக்ஸ் தமிழ் நாட்டில் கர்நாடகா பேங்க் இருக்கு, ஆந்திரா பேங்க் இருக்கு, பேங்க் ஆப் பரோடா இருக்கு அலகபாத் பேங்க் இருக்கு "பேங்க் ஆப் தமி்ழ்நாடு" ஏன் இல்லை ...? - களவாணி பய |
Posted: 06 Nov 2014 05:40 AM PST |
Posted: 06 Nov 2014 05:30 AM PST |
Posted: 06 Nov 2014 05:15 AM PST மாப்ளே இங்கிலீஷ் படம்னா இங்கிலீஷ் படம் தான்டா ;-) என்னடா சொல்ற ? . . . .. . .. . .. . .. . . . . . . . . அதுல பாருடா சமையல்காரன் கூட பேசுறான்டா இங்கிலீஷ்லயே. :P :P Relaxplzz |
Posted: 06 Nov 2014 05:00 AM PST வீட்டுல அம்மாவுக்கு உடம்பு சரி இல்லை..... தெரு குழாய்ல தண்ணிர் வருது.... நான் போய் தண்ணிர் புடிக்கிறேன்... ஒரு நண்பன் அந்தவழியை கடந்து செல்கிறான்... போகும் பொழுது... " என்னல மக்கா பொம்பளையலு போல தண்ணி எடுக்குற "..... ////////// அவனுக்கு என்ன பதில் சொல்லன்னு எனக்கு தெரியல... ஏன்னா அவனுக்கு நல்லாவே தெரியும் எங்க அம்மாவுக்கு உடம்புக்கு சரி இல்லை என்று.... இப்போ தண்ணி புடிக்கனும்னா ஒன்னு எங்க அப்பா புடிக்கணும் இல்ல நான் புடிக்கணும் இல்ல தண்ணி வேண்டாம்னு சும்மா இருக்கணும்.... இவை அனைத்தும் அவனுக்கும் தெரியும்... இருந்தும் இவ்வாறு வினவும் நண்பனிடம் என்ன பதில் கூற.... இருந்தும் கூறினேன்... தண்ணி பிடிக்கறதால ஒருத்தன் பொம்பளையா உலகிற்கு தெரிந்தால்.... அந்த உலகில் நான் பெண்ணாகவே வாழ்துவிட்டு போகிறேன்.... படுத்த படுக்கையாய் தாயோ தாரமோ இருக்கும் பொழுதும் வீராப்போடு உதவாமல் இருப்பதுதான் ஆண்கள் என்றால் அப்படி பட்ட ஆணாக இருக்கவும் விரும்பவில்லை.... Relaxplzz ![]() |
Posted: 06 Nov 2014 04:50 AM PST #ரிலாக்ஸ்_நறுக்ஸ் பெண்ணே ! நீயெல்லாம் மேக்கப் போட்டாதான் அழகு. நானெல்லாம் பொறந்ததுலருந்தே அழகு.. ;-) - #களவாணி பய |
Posted: 06 Nov 2014 04:40 AM PST |
Posted: 06 Nov 2014 04:30 AM PST |
Posted: 06 Nov 2014 04:15 AM PST வழக்காடு மன்றத்தில் ஒரு வழக்கு நீதிபதி முன் வந்தது. ஒரு மூதாட்டி, சாட்சி கூண்டுக்கு அழைக்கப்பட்டார். வழக்கறிஞர், மூதாட்டியை நோக்கி, "திருமதி.மரகதம், என்னை உங்களுக்குத் தெரியும் தானே?" மூதாட்டி, "உன்னைத் தெரியாமல் என்ன, பிரகாஷ் ? சின்ன வயதிலிருந்தே உன்னைத் தெரியும், ஆனால் சிலாக்கியமாக ஒன்றுமில்லை! நீ பொய் சொல்கிறாய், மனைவியை ஏமாற்றுகிறாய், பிறரை உபயோகப்படுத்திக் கொண்ட பின் அவர்களை தூற்றுகிறாய், உன்னை பெரிய மேதாவி என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்! ஆகவே, உன்னை எனக்கு மிக நன்றாகவேத் தெரியும்!" என்றார். மூதாட்டியின் பதிலில் வழக்கறிஞர் ஆடிப்போய் விட்டார்! எப்படி வழக்கைத் தொடர்வது என்று புரியாத குழப்பத்தில், அவர் எதிர்தரப்பு வக்கீலை சுட்டிக் காட்டி, "திருமதி.மரகதம், இவரை உங்களுக்குத் தெரியுமா?" என்று வினவினார்! அதற்கு அம்மூதாட்டி,"ஏன், ரமேஷை பல வருடங்களாக எனக்குத் தெரியும்! அவன் ஒரு சோம்பேறி, நல்லது சொன்னால் கேட்க மாட்டான், நிறைய குடிப்பான். அவனுக்கு யாரிடமும் நல்லுறவு கிடையாது. சட்டத்தை பற்றி ஒரு எழவும் தெரியாமல், வக்கீலாகி விட்டவன்! அவனுக்கு மூன்று பெண்களிடம் தொடர்பு இருக்கிறது. அதில் ஒருத்தி உன் மனைவி!?!" என்று கூறியதில் ரமேஷ் என்ற அந்த எதிர்தரப்பு வக்கீல் மூர்ச்சையாகும் நிலைக்கு போய் விட்டார்! அவசர அவசரமாக, இரண்டு வழக்கறிஞர்களையும் தன்னருகே வருமாறு அழைத்த நீதிபதி, மெல்லிய குரலில், "உங்கள் இருவரில் எந்த ராஸ்கலாவது அந்த கிழவியிடம் என்னை கை காட்டி 'என்னைத் தெரியுமா' என்று கேட்டால் நிச்சயம் அந்த ஆளை தூக்கு மேடைக்கே அனுப்பி விடுவேன்!" என்றார். :P :P Relaxplzz |
Posted: 06 Nov 2014 04:00 AM PST 108 பற்றி தெரியும் 104 பற்றி தெரியுமா..? +++++++++++++++++++++++++++++++++ 104''நாங்க இருக்கோம்''இலவச அழைப்பு உதவி மையம் 104 மருத்துவ உதவி மையத்துக்கு ஓர் அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசியவர், 'நான் ஒரு விவசாயி... எனக்கு கடன் தொல்லை தாங்கலை, நான் ரயில் தண்டவாளத்தில் தலைவைச்சு சாகப்போகிறேன்...' என்றார். அந்த அழைப்பை எதிர்கொண்ட தகவல் மைய அலுவலர் பதற்றம் அடையாமல், அவரிடம் ஆறுதலாகப் பேச்சுக் கொடுத்தபடியே அவரது வயது, குடும்பத்தைப் பற்றி நிறையக் கேட்டார். பின்னர், 'கண்ணை மூடி ரெண்டு நிமிஷம் அமைதியா இருங்க... நீங்க, இப்போ இறந்துட்டதா நினைச்சுக்குங்க... உங்க குடும்பம் என்ன செய்யும்? உங்க பசங்க நிலைமை என்ன ஆகும்?' என்றார். எதிர்த்தரப்பில் அமைதி. சிறிது நேரத்தில் அந்த விவசாயி அழ ஆரம்பிக்க, அவரை ஆறுதல்படுத்தி, தற்கொலை எண்ணத்திலிருந்து மீட்டது 104 சேவை. இரண்டு நாட்கள் கழித்து, 'நான் மிகப் பெரிய தவறு செய்ய இருந்தேன். நல்ல வேளையாக என் மனதை மாற்றி உண்மை நிலையைப் புரியவைத்தீர்கள்' என்று நன்றி தெரிவித்தார் அந்த விவசாயி. 100, 101, 108 என பல்வேறு சேவைகளைப் பற்றி நமக்குத் தெரியும். போலீஸ், தீ விபத்து, மருத்துவ உதவி போன்றவைகளுக்கு இந்த எண்களைத் தொடர்புகொண்டு உதவிகளைப் பெறலாம். அதில் புதிதாக இணைந்திருப்பதுதான் 104 சேவை. பலரது பிரச்னைகளைக் காது கொடுத்துக் கேட்டு, அதற்கான தீர்வைச் சொல்லும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது இந்த அற்புத சேவை மையம். அரசு உதவியோடு, எமர்ஜென்சி மேனேஜ்மென்ட் அண்டு ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஜி.வி.கே (Emergency Management and Research Institute & GVK) என்ற நிறுவனம் இந்தச் சேவையை இயக்குகிறது. தமிழ்நாட்டு மக்கள் எந்த பகுதியிலிருந்தும், வாரத்தில் 7 நாட்களும், 24 மணி நேரமும் (24/7) இந்தச் சேவையை இலவசமாகப் பெறலாம். இந்த மையத்தின் மேலாளர் பிரபுதாஸிடம் பேசினோம். '104க்கு அழைப்பு வந்ததும், உடனடியாக தகவல் சேகரிக்கப்பட்டு, அது மனநல ஆலோசனைக்கா, மருத்துவ ஆலோசனைக்கா, அரசு மருத்துவ சேவைகளுக்கா என்று அழைப்புகளைத் தனித்தனியே பிரித்து, அதற்கான வல்லுநர்களிடம் அழைப்பை மாற்றி விடுவோம். பிறகு, தொடர்பு கொண்டவரின் பிரச்னைகளைக் கேட்டறிந்து அவருக்கான முதலுதவியும், ஆலோசனைகளும் வழங்கப்படும். உடல்நலப் பிரச்னைக்கான முதலுதவி மற்றும் ஆலோசனை காய்ச்சல், சளி, இருமல், வயிற்று வலி, வலிப்பு, வயிற்றுப் போக்கு, மாதவிலக்கு பிரச்னை, பிரசவ வலி, நாய்க்கடி, பாம்பு, தேள், பூரான் போன்ற விஷ ஜந்துகளின் கடிக்கான முதலுதவி, இரவில் திடீரெனத் தோன்றும் உடல் உபாதைகள், குழந்தைகளுக்கு ஏற்படும் உடல்நலப் பிரச்னைகள், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், விபத்துகள் போன்ற அனைத்துப் பிரச்னைகளுக்கும் முதலுதவிகளையும், மருத்துவ ஆலோசனைகளையும் பெறலாம். * மனநல ஆலோசனை சோர்வு, பயம், கோபம், தேர்வு பயம், மன அழுத்தம், மனச் சோர்வு, தற்கொலை எண்ணம், குடி மற்றும் புகைப் பழக்கத்துக்கு அடிமையானோருக்கான ஆலோசனை, தீய பழக்கத்தில் இருந்து தன் துணையைச் சரிசெய்வதற்கான ஆலோசனை, தாம்பத்ய உறவில் சிக்கல், துணையின் தவறான போக்கு, டென்ஷன், தம்பதியர்களின் உறவில் பிரச்னை, தூக்கமின்மை, குழந்தைகளின் நடவடிக்கைகளில் மாற்றம் போன்ற அனைத்து மனப் பிரச்னைகளுக்கும் மனநல ஆலோசகர்கள் ஆலோசனைகளை வழங்குவர். * தகவல் மற்றும் விளக்கங்கள் முதலுதவி பற்றிய தகவல்கள், ரத்ததானம், கண்தானம், ப்ளூ கிராஸ் குறித்த உதவிகள், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள வசதிகள், சந்தேகங்கள், லேப் ரிப்போர்ட் விளக்கங்கள், மருந்்தகச் சீட்டிலுள்ள மருந்துகளின் தகவல்கள், மருத்துவமனைகள் அதைச் சார்ந்த சிறப்பு வல்லுநர்கள் போன்ற அனைத்துக்குமே 104 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். அரசு தொடர்பான புகார் அரசு மருத்துவமனைகளில் ஏதேனும் சேவையில் பிரச்னையோ, குறையோ என்றால்கூட, 104க்கு அழைக் கலாம். அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை, மருத்துவ வசதிகள் இல்லை, மருந்துகள் இல்லை போன்ற அனைத்துப் புகார்களுக்கும் இந்த 104ஐ தொடர்பு கொள்ளலாம். பிரச்னைகளைப் பதிவு செய்ததும், உடனடியாக அந்தப் பிரச்னைக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இங்கு வரும் அழைப்புகளில் 90 சதவிகிதம் குடிப்பழக்கம் மற்றும் தாம்பத்ய உறவு சார்ந்த பிரச்னைகளே. மாணவர்கள் சிலர் பரீட்சை குறித்த பயத்துக்கும் அழைப்பது உண்டு. இந்த இலவச அழைப்பு உதவித் திட்டத்தினால் பல உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. மருத்துவத் தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதால், மக்களுக்கு உடல் மற்றும் மனநலப் பிரச்னைகளிலிருந்து தீர்வுகள் கிடைக்கின்றன. சேவை அலுவலகம் 104 அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் அனைவரும் டாக்டர் கோட், தலையில் ஹெட்போனுடனேயே தொலை பேசியில் அழைத்தோருக்கு ஆலோசனைகளை வழங்கி கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் மருத்துவம் தொடர்பான அனுபவத்தைப் பெற்றவர்கள். இந்த மையத்தில் 50 முதல் 60 பணியாளர்கள் வேலை செய்கின்றனர். மூன்று ஷிஃப்டாகப் பிரித்து, 24 மணி நேரமும் (24/7) மக்களுக்கு முதலுதவிகளையும், ஆலோசனை களையும் வழங்கி வருகின்றனர் என்பது சிறப்பு. 104க்கு ஒரு சல்யூட்! கட்டாயம் பகிருங்கள் விழிப்புணர்வு தருவோம்... பொறுப்பும்! பொதுநலமும்! Relaxplzz ![]() |
Posted: 06 Nov 2014 03:50 AM PST #ரிலாக்ஸ்_நறுக்ஸ் காதல் தோல்விதான் மிகப்பெரிய துன்பமென்று நினைத்துக்கொள்கிறார்கள், கல்யாணம் ஆகும்வரை..! :P - Sheila Chowdry |
Posted: 06 Nov 2014 03:40 AM PST |
Posted: 06 Nov 2014 03:30 AM PST |
Posted: 06 Nov 2014 03:15 AM PST பழைய சாதத்துல இவ்வளவு விஷயமா?--உணவே மருந்து. திரைப்படங்களில் கிராமத்து சீன். கதாநாயகி பித்தளைத் தூக்கில் பழங்கஞ்சி எடுத்துக் கொண்டு போய் கதாநாயகனுக்குத் தருவாள். நீரும் சோறுமாக அதை அள்ளி அவன் உண்பான். இன்றைய நிஜ கிராமங்களில் கூட இந்தக் காட்சியைப் பார்க்க முடியாது. ஆனால் முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர். தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்! கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது! பழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி அமெரிக்காவில் வசிக்கும் நம் இந்திய விஞ்ஞானி ப்ரதீப் கூறியதில் இருந்து சில.... 1. "காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது. 2. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது. 3. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும். 4. அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது. 5. இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது." என்கிறார். 6. மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது. 7. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும். 8. அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும். 9. எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது. 10. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம். Relaxplzz |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment