Sunday, 17 August 2014

FB Posts by Araathu அராத்து

FB Posts by Araathu அராத்து

ஓட்டுநர் நண்பர்களிடம் ஆலோசனை செய்து , ரிவ்யூ படித்து அலசி ஆராய்ந்து நல்ல காரை தேர்ந்தெடுத்து விடலாம்.காருக்கான டிரைவர் தேவை வரும்போது நண்பர்களிடம் கேட்டால் ப்ச் என்ற அலுப்புச்சத்தத்துடன் தான் ஆரம்பிப்பார்கள்.நல்ல டிரைவர் இப்பல்லாம் கிடைக்கறதே இல்லை , நானே 2 வருஷத்துல 7 டிரைவர் மாத்திட்டேன். இப்ப கூட நல்ல டிரைவர் தேடிட்டுதான் இருக்கேன் என கூறி திகில் கிளப்புவார்.டிரைவர் வக்கிறதெல்லாம் சாதரணம் இல்ல மாப்ள , அவனுங்கதான் இப்ப நம்ம வீட்டை நோட்டம் பார்த்து திருடனுங்களுக்கு போட்டு கொடுக்கறது, குழந்தையை கடத்த ஐடியா குடுக்குறது என்றெல்லாம் கூறி அடி வயிற்றில் ஐஸ்கத்தியை சொருகுவார்கள். ஒரு காலத்தில் டிரைவர் என்பவர் வீட்டின் ஒரு அங்கம்.குழந்தைக்கு அவர் மாமா , அப்பாவுக்கு தம்பி , மனைவிக்கு அண்ணே .தன் வீட்டு டிரைவரை பார்த்து மரியாதையாக தம்'மை தூக்கிப்போடும் இளசுகள் எல்லாம் ஒரு காலத்தில் இருந்தார்கள்.அவரும் காரை தன் தெய்வம் போல பார்த்துக்கொள்வார்.குடும்பத்துக்கு மிக நம்பிக்கையான ஆளாக இருப்பார். ஒரு குடும்பத்திற்கோ அல்லது ஒரு கம்பனிக்கோ மட்டுமே வாழ்க்கை முழுக்க டிரைவராக இருந்த அனுபவமெல்லாம் பலருக்கு உண்டு.வேலை செய்யுமிடத்தில் பள்ளிக்கூடம் படிக்கும் மாணவியை இழுத்துக்கொண்டு ஓடுவதெல்லாம் சமீப காலத்தில் டிரைவர்கள் ஆரம்பித்து வைத்த வேல்யூ ஆடட் சர்வீஸஸ். இந்த அவசர யுகத்தில் டிரைவர்களும் அவசர குடுக்கைகளாக மாறி நம்மை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர்.கால் டாக்ஸி டிரைவர் , ஆட்டோ டிரைவர் , ஆம்னி பஸ் டிரைவர் மற்றும் நம் சொந்த வண்டியின் டிரைவர் என பலரும் பல விதங்களில் நம்மை டென்ஷனாக்கி அவ்வப்போது நரகவாசலை கண்ணில் காட்டி விடுகின்றனர். டிரைவர் தொழிலுக்கு படிப்பு தேவையில்லை என்ற எண்ணமே பலருக்கு இருக்கிறது. சாலையின் ஓரத்தில் இருக்கும் சைன் போர்டுகளை படிக்க தெரிந்தால் போதும் என்ற அளவிலேயே எதிர் பார்க்கின்றனர். படிப்பு ஒருவனை பண்படுத்தும். கல்வி ஒருவனை மனமுதிர்ச்சி கொண்டவனாக்கும் என நான் கண்டு கொண்டது இந்த டிரைவர்களை பார்த்துதான்.சாலையில் நடக்கும் பெரும்பாலான விபத்துக்கள் டிரைவர் ஓட்டும் வண்டியின் மூலமாக நடப்பதை காணலாம். விசாரித்துப்பார்த்தால் அந்த டிரைவருக்கு போதுமான கல்வி அறிவு இருக்காது.கார் ஓனர் வண்டி ஓட்டுகையில் நடக்கும் விபத்துக்கள் டிரைவர் ஓட்டும்போது நடப்பதை விட மிக மிக குறைவு. நகரத்தில் இரண்டு கார்கள் உரசிக்கொண்டு சண்டை பிடித்துக்கொண்டு இருக்கையில் பார்த்தால் கண்டிப்பாக ஒரு காரை 'டிரைவர்" ஓட்டியிருப்பார். கார் ஓட்டும்போது மனம் எப்போதும் ஒரு கணக்கு போட்டுக்கொண்டேயிருக்க வேண்டும்.மூளை சுறுசுறுப்பாக ஃபிரஷ்ஷாக இருக்க வேண்டும். முந்துவது , லேன் மாறுவது , நிறுத்துவது என சகலத்தையும் கணக்கு போட்டு நிதானமாக செய்ய வேண்டும். கல்வி அறிவு இல்லாத அரைகுறை டிரைவர்களுக்கு இது ஏதும் தெரியாது.வெளியூர் ஹைவேஸ் பயணங்களின் போது மன முதிர்ச்சி இல்லாமல் தெனாவட்டாக ஆக்ஸிலேட்டரையும் ஹாரனையும் அழுத்திக்கொண்டு ஒழுங்கில்லாமல் அடுத்தவரைப்பற்றி கவலைப்படாமல் பூந்து பூந்து சென்றுகொண்டிருப்பார்கள்.பின் சீட்டில் ஊளை சதை முதலாளி இதை ஏதும் கவனிக்காமல் ஒரு சைடாக தலை சாய்த்த வண்ணம் சிம்பாலிக்காக பிணம் போலவே அமர்ந்து தூங்கிக்கொண்டு இருப்பார்.செல்லுமிடம் வந்ததும் டிரைவர் எழுப்பியதால் எழுந்து கடிகாரத்தை பார்ப்பவர் , சீக்கிரம் கொண்டு வந்து விட்டதற்காக , விபரீதமாக ஓட்டி வந்தது தெரியாமல் பாராட்டி விட்டு செல்வார். நண்பர்கள் எதிரிலும் நம்ம டிரைவர் பறப்பாரு என பெருமையாக சொல்வார்.இப்படியே ஏத்தி விட்டு ஏத்தி விட்டு என்றாவது ஒரு நாள் கார் ஒரு திசையிலும் இவரும் டிரைவரும் ஆளுக்கொரு திசையில் பறக்கும் போது போட்டோ எடுத்து வீட்டில் மாட்ட வேண்டும். இப்போது கால் டாக்ஸிக்கள் , பிரைவேட் கேப்கள் பெருகி விட்டதாலும் பலரும் கார்கள் வாங்குவதாலும் நல்ல டிரைவர்களுக்கு பஞ்சம் நிலவுகிறது.அரைகுறையாக கற்றுக்கொண்டு அனுபவமே இல்லாமல் பல டிரைவர்கள் சுற்றுவதை பார்க்க முடிகிறது.கஸ்டமரிடம் எப்படி பேச வேண்டும் என்பது கூட தெரியாமல் பலர் டிரைவர்களாகி விடுகின்றனர்.கால் டாக்ஸி புக் செய்து விட்டு , அது குறித்த நேரத்திற்கு நம்மை வந்து பிக் செய்வதற்குள் இந்த காமடி டிரைவர்களிடம் பேசி பைத்தியக்கார அனுபவத்தை பெறலாம்.கால் டாக்சி புக் செய்தவுடன் அவர்கள் நமக்கு டிரைவர் நம்பரை அனுப்புவார்கள்.நாம் அவரை அழைத்தால் , அவர் ஹலோ ஹலோ ஹலோ என உச்ச ஸ்தாதியில் கத்திக்கொண்டேயிருப்பார்.நாமும் கொஞ்ச நேரம் ஹலோ ஹலோ என கத்தியபடி கத்தும் யோகா செய்து முடித்த பின் , ஹலோ ஆங், கால் டாக்ஸி புக் பண்ணியிருக்கோம், என்னாது ? இல்லீங்க கால் டாக்ஸி புக் பண்ணி இருக்கோம் , உங்க நம்பர்தான் அனுப்பி இருக்காங்க , டீ நகர் பிக்கப் , இன்னும் 30 நிமிசம் தான் இருக்கு வர முடியுமா? டீ நகரா ? ஆமாங்க , பிக்கப்பா ? ஆமாங்க, புக் பன்ணி இருக்கீங்களா? அட ஆமாங்க , வறீங்களா இல்லையா? ஆஃபீஸ்ல பேசிட்டீங்களா? எதுக்குங்க ஆஃபீஸ்ல பேசணும் ? கொழப்பறீங்களா ? வர முடியுமா முடியாதா? நான் ராஜ கீழ்ப்பாக்கத்தாண்ட இருக்கேன் , உங்களுக்கு பிக்கப் போட்டுருக்காங்களா ? 2 அவர் ஆகும் வரதுக்கு , பரவால்லையா? நாம் கடுப்பாகி போனை கட் செய்துவிடுவோம். சில சமயம் போனை அட்டெண்ட் செய்து பவ்யமாய் பேசி , இன்னும் அரை மணி நேரத்துல வந்துடுவேன் சார் என சொல்பவர் அதற்குப்பிறகு போனையே அட்டென்ட் செய்ய மாட்டார். அட்டெண்ட் செய்தாலும் எத்தனை முறை கேட்டாலும் அதே அரை மணி நேரத்தை மெயிண்டெயின் செய்பவர்களும் இருக்கிறார்கள்.மீட்டர் போட மறப்பார்கள்.வழி தெரியாமல் முழிப்பார்கள்.என்ன இப்படி? வழி கூட தெரியலையா எனக் கேட்டால் சென்னை வந்து 1 வாரம்தான் சார் ஆகுது என அப்பாவியாக சொல்வார்கள்.இந்த வழியில போனா டிராஃபிக் இருக்காது என சொல்லி , வாலண்டியராக போய் கடும் டிராஃபிக்கில் பார்க் செய்து எஃப் எம் மாற்றிக்கொண்டு இருப்பார்கள்.நாம் விமானத்தை பிடிக்க செல்கையில் ஹாயாக விசிலடித்த படி பெட்ரோல் போட்டு , காத்து பிடிக்க லைன் கட்டி நிற்பார்கள்.சிலர் விடிகாலை 6 மணிக்கு பிக் அப் செய்வதற்கு அதிகாலை 3 மணியிலிருந்து கால் செய்து வழி கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.கடைசியில் வராமல் கழுத்தறுப்பார்கள். ஆட்டோ டிரைவர்கள் பற்றி ஒரு தொடரே எழுதலாம்.மற்ற தொழில்களில் எல்லாம் கஸ்டமருக்கு மரியாதை கொடுப்பது போல நடிக்கவாவது செய்வார்கள்.ஆட்டோ டிரைவர்கள் மட்டுமே எனக்குத்தெரிந்து கஸ்டமர்களை மரியாதைக்குறைவாக நடத்துவது , நக்கலாக பேசுவது , சமயங்களில் திட்டுவது என எகிடு தகிடாக நடந்து கொள்கிறார்கள்.அதனால் பெண்கள் தனியாக ஆட்டோ பிடிக்கவே பயப்படுகின்றனர். பேரம் பேசினால் பொதுவில் சத்தமாக திட்டி அசிங்கப்படுத்தி விடுகிறார்கள். அசோக் பில்லரிலில் இருந்து செண்ட்ரல் செல்ல 300 ரூபாய் கேட்பார் ஆட்டோ டிரைவர். நாம் 200 தரேன் , அதுவே அதிகம்தான் என கேட்டால் , யேய் , இங்க பாருடா செண்ட்ரலுக்கு 200 ரூவா தாராராம் , விலை வசில்லாம் தெரியாதா? எத்தனை வருஷம் தூங்கி எழுந்து வறீங்க ? அப்படியே டீ குடிச்சிட்டி நடந்தே போங்க என தேவையில்லாமல் பல கமெண்டுகளை அள்ளி வீசுவார்.என்னதான் ரேட் பேசி பக்காவாக அமர்ந்தாலும் இறங்கும்போது ஏதேதோ காரணங்களை கிரியேட்டிவாக கண்டு பிடித்து எக்ஸ்ட்ரா அமௌண்ட் வாங்குவதில் குறியாக இருப்பார்.இந்திய சாஃப்ட்வேர் கம்பனிகள் தங்கள் ஃபாரின் கிளையண்டிடம் ப்ராஜக்ட்டை இழுத்து இழுத்து பேசப்பட்ட தொகையை விட அதிக தொகையை கறப்பதற்கு ஆட்டோ டிரைவர்களே இன்ஸ்பிரேஷனாக இருக்கக்கூடும். எங்கே சென்றாலும் காரை நானேதான் ஓட்டிசெல்வது வழக்கம் . நண்பர்களுடன் ஒரு கன்னா பின்னா டூர் போகலாம் என முடிவெடுத்து எந்த திட்டமும் இல்லாமல் சுற்றலாம் என்று கிளம்பியபோது மட்டும் டிரைவர் வைத்துத்தான் பார்ப்போமே , நாம் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கலாம் என தெரிந்தவர் மூலம் ஒரு டிரைவரை தேர்ந்தெடுத்தோம். சொக்கத்தங்கம் என சர்டிஃபிகேட் கொடுக்கப்பட்ட டிரைவர் தாம்பரத்தில் காத்திருந்து காரை கைப்பற்றினார்.நைட் டிரைவிங்க் செய்ய வேண்டும் , அதனால்தான் டிரைவரே வைக்கிறோம்.நன்கு தூங்கிவிட்டு வரச்சொல்லுங்கள் என கூறி இருந்தேன். மாலை ஐந்து மணி சுமாருக்கு தாம்பரத்திலிருந்து காரை கிளப்பியவர் கூடுவாஞ்சேரியிலேயே டீ குடிக்கலாமா சார் என்றார். திண்டிவனம் தாண்டியதும் ஒரு மாதிரி சீற ஆரம்பித்தார். கார் ஒரே லேனில் நேர்க்கோடாக செல்லாமல் பிசிறு தட்டியது. டிரைவரை பார்த்தால் கஷ்டப்பட்டு விறுவிறுவென கண் சிமிட்டியபடியே இருந்தார். அடப்பாவி அதுக்குள்ளவா என நினைத்தபடி , ஏங்க தூக்கம் இல்லையா என கேட்டேன். இல்ல சார் , பசி என்றார். பொய் சொல்கிறார் என தெரிந்தாலும் விழுப்புரம் நெருங்கும் சமயத்தில் நிறுத்தி சாப்பிட்டுக்கோங்க என்றேன். அப்படியாவது ஒரு ஃப்ரெஷ்நெஸ் வருகிறதா பார்ப்போம் என்ற நப்பாசைதான் காரணம். நாங்கள் யாரும் சாப்பிடவில்லை.அவர் மட்டும் சாப்பிட்டார். மீண்டும் கார் கிளம்பியது. 45 நிமிடம் ஓரளவுக்கு ஓட்டியிருப்பார். திரும்பவும் கார் சீறியது. டிரைவரிடம் பேச்சு கொடுத்தேன். சார் கொஞ்சம் தண்ணி கொடுங்க என்றார். தண்ணீர் பாட்டில் அவருக்கென அவர் வைத்துக்கொள்ள வில்லை. நாம்தான் அவருக்கு உதவியாளர். அப்போது எடுத்துக்கொடுக்க ஆரம்பித்தது, டிரிப் முடியும் வரை அந்த எடுபிடி வேலைகளை செய்ய வேண்டியதாகிப்போனது. திருச்சிக்கு முன்னால் ஒரு இடத்தில் நிறுத்தி மறைவாக போய் தம் அடித்தார். மரியாதையாம். திருச்சி நெருங்குவதற்கு முன்னமே அன்னார் சொக்க ஆரம்பித்தார்.பேசி பேசி ஓரளவுக்கு அவரை உற்சாகப்படுத்தியபடி இருந்தோம். எங்கள் டூர் உற்சாகம் போயே போய் டிரைவரை உற்சாகப்படுத்துவதுதான் எங்கள் முழு நேரப்பணி ஆனது.திருச்சி நெருங்கியதும் அவரால் கண்ட்ரோல் செய்ய முடியாவண்ணம் தூங்க ஆரம்பித்தார். வேறு வழியில்லாமல் , சரிங்க நான் கொஞ்ச நேரம் ஓட்டட்டுமா என கேட்டதுதான் தாமதம். நடுரோட்டில் அப்படியே சடன் பிரேக் போட்டுவிட்டு தாவிக்குதித்து பின் சீட்டுக்கு வந்து அடுத்த செகண்டே குறட்டை விட்டு தூங்க ஆரம்பித்தார்.நாங்கள் தென்காசி வரை செல்ல வேண்டும். நான் ஓட்ட ஆரம்பித்தேன். எங்களுக்கான இரவு உணவிற்கு ஒரு உயர் ரக உணவு விடுதியில் காரை நிறுத்தினேன். மெனுவை பார்த்துக்கொண்டிருக்கையில் டிரைவர் பல நாள் நண்பர் போல கேஷுவலாக எங்கள் டேபிளில் வந்து அமர்ந்தார்.மெனுவை பார்க்காமலேயே வச வச வென ஏதேதோ ஆர்டர் செய்தார். இப்பதான 2 மணி நேரத்துக்கு முன்னால சாப்பிட்டாரு என நினைத்துக்கொண்டோம். உணவு வேண்டுமென்றால் நம்மிடம் காசு கேட்க வேண்டும். நாமே என்றாவது ஒரு நாள் டூர் போகையில் உயர் ரக ஓட்டலில் உணவு சாப்பிடுகிறோம்.இவரும் சர்வ சாதாரணமாக எப்படி நம்முடன் வந்து அமர்கிறார் என குழப்பமாக இருந்தது. சாப்பிட்டுவிட்டு ஒரு பேச்சுக்கு கூட கேட்காமல் ஒரு தம் அடித்து விட்டு திரும்பவும் பின் சீட்டில் ஏறி நிம்மதியான உறக்கம்.நான் தென்காசி வரை ஓட்டி வந்தேன்.எங்களுக்கு உற்சகமாக இருக்கவேண்டும் என்பதற்காக பாட்டை கொஞ்சம் சத்தமாக வைத்தால் , அரைத்தூக்கத்தில் எங்களிடம் பாழ்ட்டை கொழ்ஞ்சம் சவுழ்ண்ட் கம்மி பழ்ண்ணு சார் என்பார். வழியில் எங்காவது டீ குடிக்க நிறுத்தினால் மட்டும் கில்லி மாதிரி எழுந்து வந்து பிஸ்கட் , வாழைப்பழம் சாப்பிட்டு , டீ குடித்து விட்டு , ஒரு தம் அடித்து விட்டு சமர்த்தாக திரும்பவும் படுத்து தூங்க ஆரம்பிப்பார். குற்றாலத்தில் 3 இரவுகள் தங்கினோம். வழக்கமாக டிரைவர்கள் கார்களிலேயே படுத்துக்கொள்வார்கள். எனக்கு அது மிகக் கொடூரமானதாக தோன்றும். நான் எங்கள் ரெஸார்ட் மேனேஜரிடம் பேசி காலியாக இருக்கும் ஒரு சுமாரான அறையை கொஞ்சம் கம்மி காசுக்கு பேசி எடுத்துக்கொடுத்தேன். அருவியில் குளித்து விட்டு மாலை ரெஸார்டுக்கு திரும்பி வந்து பார்த்தால் படு வேடிக்கையாக இருந்தது. வேறு ஒரு டிரைவரையும் சேர்த்துக்கொண்டு நான் ஏற்பாடு செய்து கொடுத்த அறையில் நன்கு குடித்து விட்டு என் கார் சிஸ்டமில் ஜாலியாக பாட்டு கேட்டுக்கொண்டு இருந்தனர்.நடனம் ஆடியிருப்பார்கள் போல , வியர்த்து ஊற்றியிருந்தது. எங்களை பார்த்ததும் நிறுத்தியிருக்கக்கூடும். நானும் , இப்போ அவரை மூட் அவுட் செய்ய வேண்டாம் என நினைத்தபடியால் , ஜாலியா எஞ்சாய் பண்றீங்களா என்றேன். நீங்க சாப்டீங்களா சார் என்றார். என்னடா நம்ம மீது பாசம் காட்றாரே என நினைத்தபடி , இல்லீங்க இனிமேதான் வெளில போய் சாப்பிடணும் என்றேன். சார் அப்பிடியே எனக்கு 4 பரோட்டாவும் 1 சிக்கன் பிரியாணியும் வாங்கிட்டு வந்துடுங்க. இவரு நம்ம ஃபிரண்டுதான் இவருக்கு ஒரு மட்டன் பிரியாணி. அவரு காசை அவரு கொடுத்துடுவாரு என்றார். இதையெல்லாம் விடக்கூடாது என ஏறு ஏறு என ஏறினேன்.ரோஷம் வந்தவராக , நானே போய் வாங்கிக்கிறேன் என்றபடி முகத்தை திருப்பிக்கொண்டார்.இப்படியே மூன்று இரவுகள் ஒரு பகல் நன்றாக ஹாலிடேவை எஞ்சாய் செய்தார். நாளை காலை கேரளா செல்ல வேண்டும் தயாராகிக்கொள்ளுங்கள். இன்று இரவு குடிக்க வேண்டாம் என்று சொன்னதை காதில் வாங்கிக்கொள்ள வில்லை.அதெல்லாம் மொறையா பண்ணிடுவேன் சார் என்றார்.அவருக்கு பேசப்பட்ட தொகையை தினம் தினம் என்னிடமிருந்து வாங்கி மொத்த காசையும் வாங்கி விட்டிருந்தார். காரில் ஏறலாம் என பார்க்கையில்தான் தெரிந்தது . காரை சுத்தமே செய்யவில்லை. ஏங்க மூணு நாள் சும்மாதானே கிடந்தது, சுத்தம் பண்ணி இருக்கலாமே என்றதும் அவசர அவசரமாக கடமைக்கு கண்ணாடியை மட்டும் துடைத்து காரை கிளப்பினார்.நீண்ட பயணம் என்றபடியால் இம்முறையும் நானும் அவரும் மாறி மாறி ஓட்டினோம். குமுளி வந்தடைந்து இங்கும் அவருக்கு ஒரு அறை ஏற்பாடு செய்து கொடுத்து இங்கே சாப்பிட்டுக்கொள்ளுங்கள் என ஒரு ஹோட்டலிலும் சொல்லி விட்டு வந்து விட்டேன். மறுநாள் காலை பில் செட்டில் செய்தபோதுதான் தெரிந்தது , குமுளியில் இவருக்கு நண்பர்கள் இருந்திருக்கிறார்கள். அனைவரையும் அழைத்து வந்து பின்னி எடுத்திருக்கிறார்.பில் எகிறியது. நாம டென்ஷன் ஆயி பயணத்தை மூடை கெடுத்துக்கொள்ளக்கூடாது என அமைதியாக பில் செட்டில் செய்து கவி ஈகோ டூரிஸம் , வாகமன் என டூரை முடித்து வழக்கம் போல மாற்றி மாற்றி ஓட்டி வந்தோம். சென்னை திரும்ப இரவு ஆகிவிட்டிருந்தது.நான் தான் ஓட்டிகொண்டு இருந்தேன். கிண்டி கத்திப்பாராவில் காரை நிறுத்தி அவரை எழுப்பினேன்.கண்ணை கசக்கிக்கொன்டே இறங்கியவர் , வீட்ல டிராப் பண்ணுங்க சார் என்றார். நன்றி : இங்கு பஞ்சர் போடப்படும் , மோட்டார் விகடன்.

Posted: 17 Aug 2014 12:11 AM PDT

CEO க்கெல்லாம் 12 நாட்களில் மலையாளம் போல , எப்படி வெற்றிகரமான சீஈஓவாக இருப்பது என்ற டிப்ஸெல்லாம் வேலைக்காகுமா? https://in.finance.yahoo.com/news/8-ways-rookie-ceos-succeed-191500350.html

Posted: 16 Aug 2014 11:57 PM PDT

CEO க்கெல்லாம் 12 நாட்களில் மலையாளம் போல , எப்படி வெற்றிகரமான சீஈஓவாக இருப்பது என்ற டிப்ஸெல்லாம் வேலைக்காகுமா? https://in.finance.yahoo.com/news/8-ways-rookie-ceos-succeed-191500350.html

படுகேவலமான ஆன்லைன் புக்கிங்க் சிஸ்டம் வைத்திருப்பவர்கள் inoxmovies.com . final year project செய்யும் மாணவனின் ப்ராஜகட் இதைவிட பெட்டராக இருக்கும்.

Posted: 16 Aug 2014 10:28 AM PDT

படுகேவலமான ஆன்லைன் புக்கிங்க் சிஸ்டம் வைத்திருப்பவர்கள் inoxmovies.com . final year project செய்யும் மாணவனின் ப்ராஜகட் இதைவிட பெட்டராக இருக்கும்.

சேலஞ்ச் - போட்டி - நம்மால் முடியும் - நத்திங்க் ஈஸ் இம்பாஸிபிள். நண்பர்களே , வகை தொகை இல்லாமல் அனைவரும் அஞ்சானை போட்டு மிதிக்கிறார்கள். ஃபேஸ்புக் பழக்கத்தால் நாளை முதல் சூர்யா , லிங்கு , சமந்தா கூட அஞ்சானை மரண மொக்கை என சொல்ல ஆரம்பித்து விடுவார்கள் போலிருக்கிறது. இதுவரை படம் பார்த்தவர்களை விட்டு விடுவோம். இனி படம் பார்க்கப்போகிறவர்கள் (!) பக்கா பாசிடிவாக , இலக்கியத்தரமாக , காவிய நயமாக விமர்சனம் எழுத வேண்டும்.இதுதான் சேலஞ்ச். நான் அப்படித்தான் எழுதப்போகிறேன். நம்மால் முடியாதது எதுவும் இல்லை.

Posted: 16 Aug 2014 10:14 AM PDT

திரைக்கதை வசனம் இயக்கம் இடைவேளை வரை சுத்தமா போர் அடிக்கலை. இடைவேளைக்கு அப்புறம் கொஞ்சம் இழுவை. அப்புறம் கொஞ்சம் கல கல . படம் முடிஞ்சி வெளிய வந்ததும் சுத்தமா எல்லாமும் மறந்து போச்சி.

Posted: 16 Aug 2014 09:40 AM PDT

திரைக்கதை வசனம் இயக்கம் இடைவேளை வரை சுத்தமா போர் அடிக்கலை. இடைவேளைக்கு அப்புறம் கொஞ்சம் இழுவை. அப்புறம் கொஞ்சம் கல கல . படம் முடிஞ்சி வெளிய வந்ததும் சுத்தமா எல்லாமும் மறந்து போச்சி.

பெரும்பாலான மேட்டுக்குடி பெண்கள் கூட பேண்டியை பேண்டி என சொல்லாமல் ஏன் பேண்டீஸ் என்றே சொல்கின்றனர்?

Posted: 16 Aug 2014 05:07 AM PDT

பெரும்பாலான மேட்டுக்குடி பெண்கள் கூட பேண்டியை பேண்டி என சொல்லாமல் ஏன் பேண்டீஸ் என்றே சொல்கின்றனர்?

உயர்தர சைவ ஓட்டல்னு பேர் வச்சி புளிச்ச மாவுல ஊத்தாப்பம் ஊத்தி , மீந்த மாவ சாம்பார்ல கலந்து பொழைப்பு ஓட்டிட்டு இருந்தீங்க , சரி . வயசான டிக்கட் இழுத்து இழுத்து பாடற கர்நாடிக் பஜனை பாட்டை ஓட்டணும்னு யார்ரா உங்களுக்கு ஐடியா குடுத்தது ? சகிக்க முடியலை ! ஊசிப்போன மசால் தோசைக்கும் ,கர்நாடக சங்கீதத்துக்கும், கடவுள் பக்திக்கும் என்னங்கடா சம்மந்தம் ?

Posted: 16 Aug 2014 03:20 AM PDT

ஏர்டெல் கஸ்டமர் கேருக்கு இப்போதெல்லாம் கால் செய்தால், பெண் சேவை அதிகாரி பேசுகிறார் .பின்னணியில் குழந்தை அழும் குரல் கேட்கிறது , கிரைண்டர் மிக்ஸி ஓடும் ஓசை கேட்கிறது.புருஷனோ கள்ள ....எதுக்கு ஒம்பு ? காதலனோ கராங் முராங் ன்னு கத்திட்டு இருக்கான். கஸ்டமர் கேரையும் வொர்க் ஃப்ரம் ஹோம் ஆக்கிட்டாங்களா? இல்ல ஆஃபீஸுக்கு புள்ள குட்டிங்களை தூக்கிட்டு வந்து வடை சுட்டு சாப்டுகிட்டே கஸ்டமர் சர்வீஸ் பண்றாங்களா?

Posted: 16 Aug 2014 03:16 AM PDT

ஃபேஸ்புக்கில் விமர்சனம் எழுதுவதால் படத்தின் வியாபாரம் பாதிக்கிறது என ஷேர் ஹோல்டர்கள் போல பதறுபவர்கள் பலர் உள்ளனர். அஞ்சான் படத்தைப்பற்றி எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அந்த அளவு படம் பார்த்தவர்கள் நேற்றிலிருந்து பிரித்து மேய்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் நான் படத்தைப் பார்க்கத்தான் போகிறேன். என்னைப்போலவே பலரும் பார்க்கத்தான் போகிறார்க்ள். நாளை வரை மல்டிஃப்ளெக்ஸ்களில் ஃபுல். திங்கட்கிழமையும் கிட்டத்தட்ட அதே நிலைதான். என்னதான் காரித் துப்பினாலும் இந்த படம் ஒரு வாரம் ஃபுல்லாக போகும் என்றே தெரிகிறது. அதுதான் ஸ்டார் பவர் + குட்டி ஜட்டி பவர். கொஞ்சம் நஞ்சம் இருந்த நம்பிக்கையும் படத்தின் போஸ்டர் மூலமே கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கியவரக்ள் படக்குழுவினர்தான். ஃபேஸ்புக் விமர்சனத்தால் லோ பட்ஜட் படங்களை ஓரளவு ஓட வைக்க முடியுமே தவிர ஹை பட்ஜட் படங்களை குப்புற அடிக்க வைக்க முடியாது ! ஓலம் வேண்டாம் !

Posted: 16 Aug 2014 03:05 AM PDT