ilovemynative: Facebook page wall posts in Tamil |
- ஜல்லிக்கும் குப்பைக்கும் வித்தியாசம் தெரியாம அப்ரானியா வளந்துட்டாங்களே திரிஷா......
- இந்தியாவில் மருத்துவ கல்வி பயில தடை விதிக்கப்பட்ட ஈழ அகதி மாணவி நந்தினிக்கு சீனா...
- அழகு தமிழ்நாடு! சுருளி!
- யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில்
- தமிழன் எந்த அளவுக்கு முட்டாளா இருக்கான்னு பாருங்க இவன் இரண்டாம் பென்னிகுக்குன்னா...
- இந்தியாவில் ரஷ்யா உதவியுடன் மேலும் பத்து அணுஉலைகள் அமைக்கப்படும் - பிரதமர்... ப...
- விளம்பரத்தில வராத பொருள நீங்க சாப்பிடுறீங்களா?? #அப்ப நீங்க சாப்பிடுவது பெரும்ப...
- கனடா வரையில் தமிழில் சேவை கிடைக்கிறது, இந்தியாவில் தான் சரியாக அங்கீகரிக்கப்படவி...
- மடியில தூங்கிட்ருக்ற குழந்தையை தூக்கம் கலையாம தொட்டிலுக்கு ஷிப்ட் பண்றதுலாம் பெண...
- கொடுமையின் உச்சம்...
- என்னை பாதித்த ரஜினி:- காவேரி நதிநீர் பிரச்சனை உச்சகட்டமாய் இருந்த நேரம். இரு மா...
- உலகில் பிரபலமானவர்களின் பட்டியலில் பிரதமர் மோடிக்கு முதலிடம் வழங்கி டைம்ஸ் பத்தி...
- Rajapakshe and my visit to Thirupathi on 9 Dec 2014 - a bliss or bane? I went t...
- தமிழன் எந்த அளவுக்கு முட்டாளா இருக்கான்னு பாருங்க இவன் இரண்டாம் பென்னிகுக்குன்னா...
- கண்கள் இழந்த தமிழன்! #ஆசிரியர்: தங்கர் பச்சான் திரைப்படக்கலை உருவானப்பின் உலக வ...
- படத்தில் நியாங்களுக்காக குரல் கொடுக்கும் கூத்தாடிகள் நிஜ வாழ்கையில் அதை பற்றி பே...
- இந்தியாவில் மருத்துவ கல்வியை தொடர மறுத்த நந்தினிக்கு சீனா பல்கலையில் அனுமதி 11.1...
- இன்று பெரும்பாலான பத்திரிக்கைகள் இந்த நடிகரின் வீர வரலாற்றை பாராட்டித் தள்ளியிரு...
- சல்யூட் சந்திரபாபு நாயுடு:- நாட்டின் மிகப்பெரிய நதிகள் கோதாவரியும் கிருஷ்ணாவும்...
- தாடி இல்லாமல் மழித்த தலையுடன் வித்தியாசமான திருவள்ளுவர் சிலை தஞ்சை கரந்தையில் உள...
Posted: 12 Dec 2014 05:35 PM PST |
Posted: 12 Dec 2014 10:35 AM PST |
Posted: 12 Dec 2014 09:14 AM PST இந்தியாவில் மருத்துவ கல்வி பயில தடை விதிக்கப்பட்ட ஈழ அகதி மாணவி நந்தினிக்கு சீனாவில் மருத்துவம் பயில அனுமதி ## ஈழத் தமிழ்ப் பெண் இந்தியாவில் படிக்க சட்டத்தில் இடமில்லையாம்; சீனாவில் உண்டாம். தமிழன், இந்தியனாக இருக்கும் வரை இந்த இழிநிலைதான்! |
Posted: 12 Dec 2014 08:32 AM PST |
Posted: 12 Dec 2014 07:58 AM PST |
Posted: 12 Dec 2014 06:03 AM PST தமிழன் எந்த அளவுக்கு முட்டாளா இருக்கான்னு பாருங்க இவன் இரண்டாம் பென்னிகுக்குன்னா அப்புடி என்னடா தமிழ்நாட்டுக்கு கிழிச்சான்....... அந்த பென்னிகுக் இங்கிலாந்தில் இருந்த தனது சொத்துக்களை வித்து தன்னால் கட்டப்பட்ட அணை இடையில் விட்டுவிடக்கூடாது என்று இங்கயே கிடந்தது கட்டி முடிச்சு அஞ்சு மாவட்ட மக்கள் இன்னைக்கு மான மரியாதையோட சோறு தின்ன காரணமா ஆனாரு.. இந்த கன்னட நாயி தமிழ்நாட்டில் கூத்தாடி உழைச்சி கர்நாடகாவில் சொத்துக்கள் கம்பெனிகள் அலுவலகங்கள் என்று வாங்கி போட்டு கன்னடனுக்கு தானே வேலை கொடுத்தான்... அவன் பொறந்தநாளைக்கு இங்க நாலு பேருக்கு வேட்டி, சேலை கொடுத்துட்டா அவன் பென்னிகுக்கா??? அடேய் நாசமா போவனனுகளா அவன் மேல தப்பு இல்லடா நடிகனை கண்டா ஏன்டா சாமிய கண்டமாரி துடிக்கிரிங்க.. அட சோத்துல உப்புபோட்டுதான் தின்னுரின்களா??? அவன் நடிப்பா பாரு பாராட்டு வேணாம்னு சொல்லல!! கஞ்சிக்கு வழியில்லை என்றாலும் கூத்தாடிகளுக்கு கோயில் கட்டும் மண்சோறு தின்னும் மனித இழி ஜென்மங்கள் நிறைந்திருப்பது தமிழகத்தில் மட்டும்தான். நானும் இவனுக்கு ரசிகனா இருந்தேன். இவன் படம் வந்தா தவமா கிடந்து பாத்துட்டுதான் வீட்டுக்கே போவேன். இவன் சுயரூபம் தெரிஞ்சபின்னாடி இவனில்ல எவனுக்கும் ரசிகனில்ல நான்... @ரகுநந்தன் ![]() |
Posted: 12 Dec 2014 05:03 AM PST இந்தியாவில் ரஷ்யா உதவியுடன் மேலும் பத்து அணுஉலைகள் அமைக்கப்படும் - பிரதமர்... போபல் விஷவாயு விபத்தை ஏற்படுத்தியவனை தனி விமானத்தில் தப்ப வைத்த தேசம்... அந்தக் கொடூர விபத்தில் அப்பாவி மக்களைக் கொலைக்கு கொடுத்த தேசம்... அந்த மக்களுக்கான இழப்பீடை இந்த நிமிடம் வரை வழங்காத இந்த தேசம்... அதை விட ஆயிரம் மடங்கு கொடூரமான விளைவுகளை ஏற்படுத்தும் அணுஉலைகளை மக்கள் தலையில் திணிப்பதேன்... நீங்கள் கோடிகளை கமிசனாகவும்., ஊழல்களாகவும் பெற்று விட... அதன் எதிர்வினைக்கு சோதனை எலிகளாகி இறப்பதென்னவோ அப்பாவி மக்களல்லவா...? மண்ணுக்கான., மக்களுக்கான அரசியலைச் செய்யாது... பணம் என்ற ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் அரசியல்வியாதிகளே... நீங்கள் செத்தால் அழுவதற்காகவாவது எங்களை மிச்சம் வையுங்கள்... உங்களுக்காக ஒப்பாரி கூட வைக்காது அந்தப் பணம்... @அரு கரு ஆனந்தன் ![]() |
Posted: 12 Dec 2014 03:50 AM PST |
Posted: 12 Dec 2014 03:50 AM PST |
Posted: 12 Dec 2014 03:38 AM PST |
Posted: 12 Dec 2014 02:29 AM PST |
Posted: 12 Dec 2014 02:28 AM PST என்னை பாதித்த ரஜினி:- காவேரி நதிநீர் பிரச்சனை உச்சகட்டமாய் இருந்த நேரம். இரு மாநிலங்களிலும் ஏகப்பட்ட போராட்டங்கள். கன்னட திரையுலகம் பெங்களுரில் திரண்டு தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என்று தர்ணா செய்தனர். அதற்கு பதிலடி தர பாரதிராஜா தலைமையில் நெய்வேலியில் இருந்து கர்நாடகத்திற்கு மின்சாரம் தரக்கூடாதுனு போராட்டம் முடிவு செய்யப்பட்டது. அதற்கு ரஜினிக்கும் அழைப்பு தரப்பட்டது. அதை ரஜினி நிராகரித்து விட்டார். பின்னர் பல தரப்பில் கண்டனம் குவியவே விஜயகுமாரை கையில் வைத்துக் கொண்டு மெரினாவில் ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தார். எப்படியும் நதிகளை தேசிய மயம் செய்ய மாட்டார்கள் என்று தெரிந்தே நதிகள் இணைப்புக்கு திட்டம் தீட்டினால் ஒரு கோடி தருகிறேன் என்று அறிவிப்பு வெளியிட்டார். அவரை இருதரப்பிற்கும் பொதுவான ஆளாக காட்டிக்கொண்டு தான் திறமை வாய்ந்த நடிகர் என உணர்த்தினர். நிஜ வாழ்க்கையிலும் அவர் சிறந்த நடிகர் தான்.. @வெங்கடேசன் பாலகிருஷ்ணன் |
Posted: 12 Dec 2014 02:12 AM PST உலகில் பிரபலமானவர்களின் பட்டியலில் பிரதமர் மோடிக்கு முதலிடம் வழங்கி டைம்ஸ் பத்திரிகை கடந்த டிசம்பர் -5 தேதி தகவல் வெளியிட்டது. இந்த செய்தியை அனைத்து ஊடகங்களும் முதல் பக்கத்தில் தலைப்பு செய்தியாக வெளியானது.ஆனால் டிசம்பர் -9 டைம்ஸ் டைம்ஸ் நடத்திய கணக்கெடுப்பில் ஃபேக் ஐடிக்களை வைத்து மோடி ஆதரவாளர்கள் கள்ள ஓட்டு பதிந்துள்ளதாகவும் ஒவ்வொரு போலி வாக்காளர்களும் 7500 கள்ள ஓட்டு போட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டதால் மோடியை டைம்ஸ் பர்சன் பட்டியலில் இருந்து நீக்கியது டைம்ஸ். ##தட்_அசிங்கப்பட்டான்_ஆட்டோகாரன்_மொமெண்ட். @தனபால் ஆறுமுகம் |
Rajapakshe and my visit to Thirupathi on 9 Dec 2014 - a bliss or bane? I went t... Posted: 12 Dec 2014 02:07 AM PST Rajapakshe and my visit to Thirupathi on 9 Dec 2014 - a bliss or bane? I went to Thirupathi to attend a betrothal on 9 Dec 2014 by 6-7 PM and wedding on 10 Dec 2014 at Thiruamalai. When I reached the Thirumalai entrance by 4.50 pm, there was a big queue of vehicles in 6 rows, we were made to wait without any reason known. I got down and inquired and came to know that Srilankan President is about to cross the Thirumalai entrance. people are waiting and waiting, he came and crossed the entrance by around 6.15 pm, after that also the queue is made to wait for another 45 minutes, citing the reason that he should reach Thirumalai due to security reasons. By the time we reached the Thirumalai, it was around 7.30 pm, after that betrothal started and finished by 8.30 PM. All those who came to attend wedding had registered for 8 PM dharsan with Rs. 50 ticket. By the time we reached the Rs. 50 dharsan gate, it was 8.50 PM. The information counter and security closed the gate saying 8 PM ticket was closed by 8.30 PM. We were made to delay because of Rajapakshe visit for more than 1.30 hrs, but the TTD authorities doesn't know that the same delay had to be admitted in the gate entry for the tickets obtained? Are they people friendly, or they are friendly to the powerful people and murderers? Do TTD really respect the people who faithfully obtain tickets two months in advance or they are only doing business? They told me that they will follow strict rules and will not allow even a minute beyond. I asked them today there is no crowd and why not relaxation of rules for the common man who sincerely went and obtained tickets at the TTD ticket counter established all over the country two months in advance by registering their finger tips with the desire to have a dharsan of Lord Venkatachalapathi. The security said, no we will only follow rules, no relaxation to any body. I asked one question, if you relax rules for VIP like Srilankan President, who were reported to be committed a crime of killing 1.5 lakh innocent srilankan tamil citizens, who is today standing in the UN Human Rights commission's accusation internationally. to have a dharsan on his arrival, even though he was delayed as per the scheduled arrival. Why don't you relax rules for 30 minutes for the ordinary devotees who are not having any criminal background or murder charges and having valid tickets. Security said, for that you have ask Mr. Chandrababu Naidu. They asked us to go to have a free dharsan waiting for more than 7 hours, after having a ticket for the dharsan. I decided not to have a Dharsan, of a God, who is managed by the ruthless administration having no regard for the ordinary common man and allow big people, who is in power irrespective of what kind of person he or she is infront of God. I felt, administration opens the gate to have a Dharsan of Lord Thirupathi Venkatachalam for those who have a power and this God is not for common man - but only give the respect of "Jarugandi, Jarugandi and Jarugandi". My friend, used to say, whenever he went to Thirupathi, he got promotion and I used to hear many stories like this and it may be true also for many. People goes to God with a belief to get their wish fulfilled. Rajapakshe came to Thirupathi to pray to Lord twice recently to save himself from the UN Human rights commission, and get reelected to continue the unitary form of government setting aside the aspirations of its own citizen for establishing the federal form of govt. insisted by many nations including India at least. He also prayed twice night and early morning standing in front of God. I also prayed to Lord Venkatachalapathy standing outside looking at the direction of deity - not to accept the request of Rajapakshe and prayed to give a solution to the Srilankan Tamils and fulfill their genuine aspirations at the earliest. I don't know which request Lord Venkatachalapathi will accept? It is left to him. Let us see? I went to Thirupathi twice earlier officially, we were directly taken to the dharsan with the tight security. Hence, I didn't know the flight of the ordinary common man. Now, when I went personally to attend a wedding, what I experienced has made lot of revelations. I think every day, a ordinary common devotee is facing such issues regularly whenever VVIP. Govt may change, but no change in the plight of the TTD Administration. The machinery is a machinery, who deals millions of ordinary devotees everyday for the benefit of common man, doesn't bother about the faith of the ordinary common man and keeps the God away from the poor and common man. @V. Ponraj Vellaichamy ![]() |
Posted: 12 Dec 2014 02:03 AM PST தமிழன் எந்த அளவுக்கு முட்டாளா இருக்கான்னு பாருங்க இவன் இரண்டாம் பென்னிகுக்குன்னா அப்புடி என்னடா தமிழ்நாட்டுக்கு கிழிச்சான்....... அந்த பென்னிகுக் இங்கிலாந்தில் இருந்த தனது சொத்துக்களை வித்து தன்னால் கட்டப்பட்ட அணை இடையில் விட்டுவிடக்கூடாது என்று இங்கயே கிடந்தது கட்டி முடிச்சு அஞ்சு மாவட்ட மக்கள் இன்னைக்கு மான மரியாதையோட சோறு தின்ன காரணமா ஆனாரு... இந்த கன்னட நாயி தமிழ்நாட்டில் கூத்தாடி உழைச்சி கர்நாடகாவில் சொத்துக்கள் கம்பெனிகள் அலுவலகங்கள் என்று வாங்கி போட்டு கன்னடனுக்கு தானே வேலை கொடுத்தான் அவன் பொறந்தநாளைக்கு இங்க நாலு பேருக்கு வெட்டி சேலை கொடுத்துட்டா அவன் பென்னிகுக்கா??? அடேய் நாசமா போவனனுகளா!! அவன் மேல தப்பு இல்லடா! நடிகனை கண்டா ஏன்டா சாமிய கண்டமாரி துடிக்கிரிங்க... அட சோத்துல உப்புபோட்டுதான் தின்னுரின்களா அவன் நடிப்பா பாரு பாராட்டு வேணாம்னு சொல்லல... நானும் இவனுக்கு ரசிகனா இருந்தேன். இவன் படம் வந்தா தவமா கிடந்து பாத்துட்டுதான் வீட்டுக்கே போவேன். இவன் சுயரூபம் தெரிஞ்சபின்னாடி இவனில்ல எவனுக்கும் ரசிகனில்ல. கஞ்சிக்கு வழியில்லை என்றாலும் கூத்தாடிகளுக்கு கோயில் கட்டும் மண்சோறு தின்னும் மனித இழி ஜென்மங்கள் நிறைந்திருப்பது தமிழகத்தில் மட்டும்தான் @ரகுநந்தன் ![]() |
Posted: 12 Dec 2014 01:57 AM PST கண்கள் இழந்த தமிழன்! #ஆசிரியர்: தங்கர் பச்சான் திரைப்படக்கலை உருவானப்பின் உலக வரலாற்றிலேயே சினிமாவுக்குள்ளேயே வாழ்க்கையை குழிதோண்டி புதைத்துக் கொண்டவன் தமிழன் மட்டுமே. நூறு ஆண்டுகள் கடந்தும் இன்னும் சினிமாவின் போதை மயக்கத்திலிருந்து எழுந்திருக்கவில்லை. சினிமாக்காரர்களுக்கு வாடகைக்கு வீடு கொடுக்கத் தயங்குபவர்கள் மகிழ்ச்சியோடு நாட்டைக் கொடுப்பார்கள். ஐந்து முதலமைச்சர்களை நாற்காலியில் அமர்த்தி அழகு பார்த்தவர்கள் ஆறாவதாக ஒரு ஆளைத் தேடி விடுவார்களோ என்பதில் குழப்பத்திற்கும், அச்சத்திற்கும் இடமிருப்பதாகவேத் தோன்றுகிறது. சென்ற ஆண்டு தேசிய திரைப்பட விருதுக்குழுவில் இருந்தபோது மற்ற மாநிலத்து உறுப்பினர்களால் ஒரு நாள் அளவுக்கதிமாக இதற்காகவே நையாண்டி செய்யப்பட்டேன். உங்கள் அறிவியல் அறிவு, இலக்கிய அறிவு, அரசியல் அறிவு, கலை அறிவு அத்தனையையும் சொல்ல உங்களுக்குத் தகுதியில்லை என்றார்கள். பழம் பெருமைகளைப் பேசி காலந்தள்ளுவதை விட்டுவிட்டு நிகழ்கால வாழ்க்கைக்கு வாருங்கள் எனச் சொன்னார்கள். அன்றைக்கு நான் வேட்டியில்தான் படம் பார்க்க அரங்குக்கு சென்றிருந்தேன். சொல்லி வைத்த மாதிரி எல்லோரிடமிருந்தும் ஒரே முகபாவம். அந்த சிரிப்பில் ஏளனம் ஒட்டிக்கொண்டிருந்தது. விவரம் புரியாமல் நான் விழித்தபோது அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அந்த படைப்பாளி எனக்கு அதற்கான காரணத்தைச் சொல்லி, மென்மையாக இதனை எடுத்து கொள்ளுங்கள் எனச்சொன்னபோது வெட்கித் தலை குனிந்துபோனேன். அதன்பின் திரையில் என் மனது ஒன்றுவதற்கு நெடுநேரம் எடுத்துக்கொண்டது. அன்றைய இரவும் அதே நண்பர்களிடம் வெளிப்படையாகவே இதுபற்றி உரையாடினேன். வேட்டியைப் பார்த்தாலே எங்களுக்கு தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்தான் நினைவுக்கு வருகிறது. ஊழலை இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கற்றுக்கொடுத்தது அவர்கள்தான். ஆனால் அதைப்பற்றி எந்த குற்றவுணர்வும் இல்லாமல் பெருமையோடு அலைவதுதான் வேதனையாக இருக்கிறது எனச் சொன்னார்கள். நாங்கள் வேட்டியை மடித்துக்கட்டாமல் கட்டுகிறோம். நீங்கள் வளைத்து முறுக்கி விதம் விதமாகக்கட்டி அதே ஊழலைச் செய்யவில்லையா என நானும் பதிலுக்குக் கேட்டேன். அதன் பிறகும் பல நாட்கள் வேட்டியுடன்தான் படங்களைப் பார்த்தேன். நான் அவர்களுடன் இருந்த ஆறு வாரங்களில் நம்மைப்பற்றிய மதிப்பீடு அவர்களின் மனதில் என்னவாக இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டேன். 'மொழி வெறியர்கள்' என ஒற்றை வரியில் எல்லாரும் சொல்கிறார்கள். அவ்வாறு உண்மையிலேயே நாம் இருந்தால் என்னைவிட மகிழ்ச்சி அடைய யார் இருக்கிறார்கள்? அப்படித்தானடா ஒரு காலத்தில் இருந்தோம்! இப்போது நாம் இருக்கிற நிலையை நெருங்கி வந்து பார்த்தால் பொறாமைப்பட்டு வயிறு எரிந்தவர்கள் மகிழ்ச்சியில் மூழ்கிப் போவார்கள். இந்தியை எதிர்த்த ஒரே காரணத்துக்காக மட்டுமே நம்மை எதிரியாக பார்க்கிறார்கள். தமிழர்களில் 99 விழுக்காடு மக்களுக்கு தமிழில் பெயர்கள் கூட இல்லை என்பதும், தமிழில் தங்கள் குழந்தைகள் பேசுவதையோ, தமிழைப் படிப்பதையோ அவர்கள் விரும்புவதில்லை என்பதும், தமிழில் பேசிவிட்டால் குழந்தைகள் பள்ளிகளில் தண்டிக்கப்படுகிறார்கள் என்பதும், ஒரு தமிழன் இன்னொரு தமிழனிடம் தமிழில் பேசுவதை இழிவாக நினைக்கிறான் என்பதும் குடும்ப நிகழ்ச்சிகளுக்கும், விழாக்களுக்குமான அழைப்பிதழில் கூட தமிழை ஒதுக்கிவிட்டான் என்பதும், கோவில்களில் தமிழில் வழிபாடு செய்யச்சொல்லி வற்புறுத்தாமல் சமஸ்கிருதத்தில் சொல்லப்படும் மந்திரத்தையே விரும்புகிறான் என்பதும் தன் வாழ்வில் தமிழுக்காக எந்த இடத்தையும் தராமல் மகிழ்ச்சியோடு தமிழன் என நினைத்து வாழ்கிறான் எனவும், நீதிமன்றங்களில் தமிழில் வாதாடுவதற்காக மனுபோட்டு கெஞ்சிக் கொண்டிருக்கிறான், அதுமட்டுமா ஒரே ஒரு நிமிடம் ஆங்கிலத்தையோ, சமஸ்கிருதத்தையோ கலக்காமல் தமிழில் பேசச்சொன்னால் எல்லா தமிழனும் தோற்றுப் போகிறான் என்பதும் அவர்களுக்குத் தெரியவாய்ப்பில்லை. ஆனால் எங்களுக்காக ஒரு மாநிலம் வேண்டும் எனச்சொல்லி 72 நாட்கள் உண்ணாநிலையிலிருந்து போராடி சங்கரலீங்கனார் உயிர் நீத்தார். நாங்களும் எங்கள் மாநிலம் தமிழ்நாடு எனவும், எங்கள் அரசு தமிழ்நாடு அரசு எனவும் அழைத்துக்கொண்டு வருகிறோம். நாங்கள் தமிழர்கள்தான் என்பதை காட்டிக்கொள்ள ஒரு தமிழர் அவமானப்படுத்தப்பட்டதற்காக கொதித்து எழுந்து உடனடியாக சட்டமன்றத்தில் வேட்டிகட்ட உரிமை வாங்கித்தந்து சட்டம் இயற்றினோம். இந்தப் பெருமை எந்த மாநிலத்துக்காவது இருக்கிறதா? உடனடியாக ஊடங்கள் முழுக்க அதற்கு பாராட்டு தெரிவித்து கொண்டாடினார்கள். இதைவைத்து வியாபாரம் செய்யும் ஆடை நிறுவனமும் மலையாள நடிகர் வேட்டி கட்டி வணக்கம் செலுத்தும் படத்தைப்போட்டு பத்திரிக்கைகளில் முதல் பக்கத்திலேயே தமிழர்களின் மானத்தை மீட்டுத்தந்தததற்காகப் பாராட்டும் நன்றியும் தெரிவிக்கும் விதமாக 'தமிழக அரசுக்கு' சல்யூட் என்றார்கள். உலகம் முழுக்க முக்கால்வாசி நாடுகளுக்கு சென்று வந்திருக்கிறேன். தமிழன் தன் தாய்மொழியைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்ட அவல நிலை உலகத்தில் எங்குமே இல்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இலக்கணத்தை வகுத்த செம்மொழி இன்று தமிழனின் நாக்கில் ஒரு நிமிடம் பேச முடியாமல் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. எல்லாருமே சூப்பர் தமிழராகிவிட்டோம். தன் தாய்மொழி, தன் இசை, தன்கலை, தன் இலக்கியம், தன் மருத்துவம், தன் அறிவியல் என எல்லாவற்றையும் வெளிநாட்டவர்கள் தங்களின் பிள்ளைகளுக்குத் தொடக்கத்திலேயே கற்றுக்கொடுக்கிறார்கள். பின் உலகத்திலுள்ள அவர்கள் விரும்பிய மொழியை எல்லாம் கற்கிறார்கள். இதனால் அவர்களின் அடையாளங்கள் பாதுகாக்கப்படுகின்றன. அவனது இனத்தையும் மொழியையும் நாட்டையும் கண்களாக கருதுகிறார்கள். அறிவுக்காக உருவாக்கப்பட்ட கல்வி இன்னும் வயிற்றுப்பிழைப்புக்காக என மாறிப்போயிருக்கிறது. நான் அரசமரத்தடியில் தரையில் அமர்ந்து படித்த சிறிய கிராமத்துப் பள்ளிகளில் கூட இன்று தமிழ் வழியில் படிக்க ஆள் இல்லை. என் கிராமத்தில் அரசுப்பள்ளித்தவிர மூன்று ஆங்கிலப் பள்ளிகள் தொடங்கப்பட்டுவிட்டன. இதுபோக பக்கத்து சிறு நகரங்களிலிருந்தும் பேருந்துகள் வந்து அதிகாலை ஆறரை மணிக்கே குழந்தைகளை அள்ளிக்கொண்டு போய்விடுகின்றன. எல்லாருமே இன்று டாக்டர், எஜ்ஜினியர் ஆக வேண்டும் என பெற்றோர்கள் அலைந்துகொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலையில்லை. அவர்களுக்கு வேலைத்தர அனைவருமே மறுக்கிறார்கள். இதனால் அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன. இதுபற்றிய எந்தக் கவலையும் நம்மை ஆண்டவர்களுக்கும்,ஆள்பவர்களுக்கும் இல்லை. தமிழில் படிப்பவர்களுக்கு வேலைத்திட்டங்களை உருவாக்கித் தரவும் முயலவில்லை. பெயரளவிற்கே தொலைக்காட்சிகளும், வானொலிகளும் தமிழை இணைப்பு மொழியாக ஆங்கிலத்தோடும், சமஸ்கிருதத்தோடும் பயன்படுத்தி தமிழ்மொழியை சிதைத்து கொலை செய்துகொண்டிருக்கின்றன. சட்டமன்றத்திலிருந்து கீரை விற்கும் பாட்டி வரைக்கும் சூப்பர் எனச்சொல்லத் தொடங்கிவிட்டார்கள். தமிழ்த்திரைப்படத்துறையில் பலபேருக்கு வெளியில் காட்டிக்கொள்ள முடியாத கோபமிருக்கிறது. எதற்காக நாம் தமிழில் படத்தின் பெயரை சூட்டவேண்டும் என நினைக்கிறார்கள். பிறமொழிகளில் பெயர் சூட்டக்கடாது தமிழிலேயேதான் இருக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட விதியின்படி வெளியாகியிருக்கிற படங்களில் எழுபது விழுக்காடுப் படங்கள் சமஸ்கிருதத்தைத் தலைப்பாகக் கொண்டவைகள்தான். தமிழை நன்கறிந்தவர்களுக்கும், தமிழறிஞர்களுக்கும் மட்டுமே இதுத் தெரியும். மக்களுக்கும், மற்றவர்களுக்கும் இந்த சூழ்ச்சி புரிவதில்லை. அரசாங்கமும் இதனைக்கண்டு கொள்லாமல் வரிச்சலுகை வழங்கிவிடுகிறது. சமஸ்கிருதத்தில் தலைப்பு வைக்கும் போது ஆங்கிலத்திலேயே சூட்டி விடலாமே! பிறகு ஏன் இதற்கு ஒரு விதி, வரிச்சலுகை அதற்கு சான்றிதழ் வழங்க ஒரு அமைச்சரகம்? நம் இளம் படைப்பாளிகளும், தயாரிப்பாளர்களும் பத்திரிகைகளில் வெளியிகின்ற சில விளம்பரங்களில் படத்தின் தலைப்பு மட்டுமே தமிழில் இருக்கின்றன. மற்ற விவரங்கள் குறிப்பாக தொழில் நுட்பக்கலைஞர்கள் பற்றிய விவரங்கள் ஆங்கிலத்தில் இருப்பதையே பெருமையாகக் கருதுகிறார்கள். போராட்டம், எதிர்ப்பு என்றால் அது ஈழத்தமிழர் அரசியல்தால் என்றாகிவிட்டப் பிறகு இதனையெல்லாம் கேட்க யார் இருக்கிறார்கள்? தமிழர்கள், தமிழில் தங்கள் குழந்தைகளை படிக்க வைப்பதிலோ, தமிழைப் பேசுவதிலோ, வேலைவாய்ப்பை பெருவதிலோ, வாழ்வியலில் தமிழர்களின் அடையாளத்தை மீட்டெப்பதிலோ தமிழில் பெயர் சூட்டுவதிலோ காட்டுவதில்லை. வேட்டிக்கு நேர்ந்த அவமானத்தை தமிழனுக்கு நேர்ந்த அவமானமாக கருதிய அரசு தமிழ்படிக்காதப் பிள்ளைகளை தமிழில் படிக்க வைக்கவும், அவர்களுக்கு வேலை தரவும் ஏன் சட்டங்களையும், திட்டங்களையும் உருவாக்க மறுக்கிறது? தமிழ்நாடு எனும் பெயரில் தமிழர்களாக தமிழ் இனமாக வாழ்ந்துகொண்டிருக்கும் எங்களுக்கு தமிழில் கல்வி கொடுங்கள், தமிழில் படித்தவர்களுக்கு மட்டுமே உயர்நிலை பதவி கொடுங்கள், எங்களுக்கு 80 விழுக்காடு வேலை கொடுத்ததுபோக மீதியை மற்றவர்களுக்குக் கொடுங்கள். அப்பொழுதுதான் தமிழர் வேட்டிக்கட்டுவது பொருத்தமாகவும், பெருமையாகவும் இருக்கும். அதுவரை வேட்டி கட்டும் மலையாளியைப் பார்த்து ஏங்கிக் கொண்டிருக்க வேண்டியதுதான். ஏனென்றால் வேட்டியிருந்தும் மொழியிழந்த கண்களிழந்த குருடர்கள்தான் இந்தத் தமிழர்கள். - இன்னும் சொல்ல தோணுது… ![]() |
Posted: 12 Dec 2014 01:52 AM PST படத்தில் நியாங்களுக்காக குரல் கொடுக்கும் கூத்தாடிகள் நிஜ வாழ்கையில் அதை பற்றி பேசுவது இல்லை .ஆனால் அவனை கொண்டாடும் கூமுட்டை ரசிகர்களை நினைத்தால் பரிதாபம்தான் வருகிறது. @களவாணி பய |
Posted: 12 Dec 2014 01:52 AM PST |
Posted: 12 Dec 2014 01:08 AM PST இந்தியாவில் மருத்துவ கல்வியை தொடர மறுத்த நந்தினிக்கு சீனா பல்கலையில் அனுமதி 11.12.2014 இந்தியாவில் மருத்துவ கல்வியை தொடர தடை விதிக்கப்பட்ட ஈழ அகதி நந்தினிக்கு சீனா பல்கலைக்கழகத்தில் அனுமதி கிடைத்துள்ளது. 1990ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழகத்துக்கு அகதியாக குடும்பத்துடன் சென்ற இவர் அரச்சலூர் நவரசம் மெட்ரிக் பாடசாலையில் சென்ற வருடம் நல்ல மதிப்பெண் பெற்று மருத்துவ கல்விக்கு தெரிவானார். இருப்பினும் இந்திய மருத்துவ சபையின் சட்டத்திட்டபடி அகதியாக வருபவர்கள் மருத்துவ கல்வி கற்க முடியாது. என்பதனால் பொறியியல் கல்வியை கற்க முடியுமென கூறப்பட்டது. ஆனால் அதற்கு நந்தினி மறுப்பு தெரிவித்துவிட்டார். இந்த நிலையில் இலங்கையை சேர்ந்த தனியார் அறக்கட்டளை நந்தினியின் நிலைமையை இணைய தளம் மூலம் அறிந்து கொண்டு. அவர்களை குடும்பத்துடன் இலங்கைக்கு திருப்பி அழைத்தனர். அதனை தொடர்ந்து சீனா நாட்டில் சென்னியாங் நகரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் குறித்த நிறுவனத்தின் உதவியுடன் மருத்துவ கல்வியை கற்று வருகின்றார். ![]() |
Posted: 12 Dec 2014 12:56 AM PST இன்று பெரும்பாலான பத்திரிக்கைகள் இந்த நடிகரின் வீர வரலாற்றை பாராட்டித் தள்ளியிருக்கின்றன. காரணம் ? இவர் சுதந்திர போராட்ட வீரர்! வவுசியுடன் சேர்ந்து சிறையில் செக்கிழுத்தார்! விவசாயிகளுக்காக போராட்டம் நடத்தினார்! இவரது சேவையை பாராட்டி ,"இவருக்கு பாரத் ரத்னா விருது கொடுக்க வேண்டும்"னு ரசிகர்கள் போராட்டம் செய்தால் கூட நாம் ஆச்சர்யப்படக்கூடாது. ஏன்னா பெரியாரை விட இவர் நாட்டுக்கு அதிகமாக சேவை செய்துவிட்டார். விடுதலைக்காக பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்து போராடிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்ன ஆனார் என்றே இன்று வரை தெரியாத இந்த நாட்டில், இந்த நடிகரின் பிறந்த நாளையும் பிறந்த நேரத்தையும் நட்சத்திரத்தையும் துள்ளியமாக வெளியிடுகின்றன நம் பத்திரிக்கைகள்,. இவருக்கு பிடித்த உடை என்ன, பிடித்த உணவு என்ன, என்ன கார் உபயோகிக்கிறார்னு பத்திரிக்கைகளில் விபரம் கொடுக்குறாங்க. இவர் எத்தனை படத்துல நடித்திருக்கிறார், அதில் தமிழ் எத்தனை கன்னடம் எத்தனை, எத்தனை ஹிட்டு எத்தனை ஃப்ளாப்னு புள்ளிவிவரம் கொடுக்குறாங்க. சரி. இதுவரை எத்தனை மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக்கொன்றுள்ளதுனு கேட்டா, அது... அது வந்து… ஒரு நானூறோ ஐநூறோ இருக்கும்னு தோராயமா சொல்றாங்க. கடந்த ஒரு மாசமா, இந்த படத்தோட ட்ரெய்லரை டீசரை பல நூறு தடவை தொலைக்காட்சிகள்ல வெளியிட்டாங்க. சரி. நம்ம பக்கத்து நாட்டுல, ஆயிரக்கணக்கானவங்கள கொன்னு குவிச்சாங்களே. அந்த சமயம், போர்க்காட்சிகள ஒரு முறை கூட இவர்கள் தொலைக்காட்சிகள்ல வெளியிடவில்லையே, ஏன் ? இன்று ஒரு பத்திரிக்கையின் நடுபக்க செய்தி: "லிங்கா படத்தின் டிக்கெட் விலை 500 ரூபாய். ரசிகர்கள் பெருமிதம்". 500 ரூபா கொடுத்து ஒரு படத்த பாக்கணுமா ? ஏன்னு கேட்டா, தலைவராம் அடுத்த முதல்வராம். ஒரு படத்துல முதல்வரா நடிக்கவே பயந்து ஒதுங்கிய ஒருவர் எப்படி தமிழ்நாட்டை ஆள முடியும் ? @கார்த்திக் பாலாஜி ![]() |
Posted: 12 Dec 2014 12:45 AM PST சல்யூட் சந்திரபாபு நாயுடு:- நாட்டின் மிகப்பெரிய நதிகள் கோதாவரியும் கிருஷ்ணாவும் மிக விரைவில் இணைய போகிறது. இதுவொரு நேரிடையான நதிநீர் இணைப்பு திட்டமாகும். ஆந்திர அரசு அதற்கான திட்டத்தை தீட்டி நிதியும் ஒதுக்கி விட்டது. அடுத்தாண்டு தொடக்க காலத்தில் பணிகள் துரிதமாக நடக்க போகிறது. கோதாவரி நாட்டின் மூன்றாவது பெரிய நதியாகும். தக்காண பீடபூமியை வளமாக்கியத்தில் கோதாவரியின் பங்கு மிகப்பெரியது. கங்கைக்கு பிறகு நீர்வழித்தடம் கொண்ட நதியும் இதுதான். அதாவது கோதவரியின் வெள்ள பெருக்கு காலத்தில் ஒருநாளின் ஓடும் நீரின் அளவு லண்டன் தேம்ஸ் நதியில் ஆண்டுதோறும் ஓடும் நீரின் அளவை விட அதிகமாகும். இத்தனை ஆண்டு காலம் வங்களா விரிகுடாதான் கோதாவரியின் உபரிநீரை விழுங்கி கொண்டுருக்கிறது. இப்போது அதை கிருஷ்ணாவில் கலக்க கால்வாய் எடுக்க போகிறார்கள். இதனால் தமிழகமும் மறைமுகமாக பயன் பெறபோகிறது என்பது குறிப்பிடதக்கது. கிருஷ்ணா நதிநீர் தமிழகத்தின் நீர்தேக்கத்துடன் இணைப்பு பெற்றுள்ள நிலையில் கோதவரியும் இதில் இணையும் பட்சத்தில் உபரிநீர் நமக்கும் கிடைக்க வரபிரசாத வாய்ப்பிருக்கிறது. நாட்டின் மிகப்பெரிய நதிகளை இணைக்கும் வழிகளை ஆராய சொல்லி உச்சநீதி மன்றம் பலமுறை மத்திய அரசு காதுகளில் சங்கு ஊதியும் அதை ஆமை வேகத்தில் நகர்த்தும்போது ஒரு மாநில முதல்வர் இதை முன்னெடுப்பது சவால் தான். அதற்குதான் அவருக்கு சல்யூட் @வெங்கடேசன் பாலகிருஷ்ணன் ![]() |
Posted: 11 Dec 2014 11:38 PM PST |
You are subscribed to email updates from சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |