ilovemynative: Facebook page wall posts in Tamil |
- முழங்கால் அளவு மழைநீரில் யார் மேலும் நீரை வாரி அடிக்காமல், அதே நேரம் எஞ்ஜின் ஆஃப...
- பால் விலை உயர்வுக்கு நாம் எழுப்பும் தொடர் கண்டன குரல்கள் ஆட்சியாளர்களை அசைத்ததோ...
- இதைப் போன்ற ஒரு Tea-Bag மட்டும் இங்கிலாந்துகாரனிடம் சிக்கி,ஒரு நல்ல வழக்கறிஞரும்...
- சிங்கள பௌத்த பேரினவாதிக்கு இந்தியா அரசு அஞ்சல் தலை வெளியிட்டது !! இந்திய அரசு த...
- Neolithic & Megalithic settlements have been found at Paiyampalli The habitatio...
- 'கத்தி' கட் அவுட் விபத்தில் இறந்த ரசிகர் குடும்பத்தினருக்கு விஜய் நேரில் ஆறுதல்!...
- கவித_கவித
- கலாச்சாரம் என்பது கட்டும் சேலையில் இல்லை. கட்டுக்கோப்பான மனதில் தான் இருக்கிறது....
- தமிழகத்தில் கைதுசெய்யப்பட்ட மூன்று மாணவர்களை விடுவிக்க கோரி லண்டனில் உள்ள இந்திய...
- தமிழக முதல்வருக்கு நல்ல மரியாதை தராங்க!
- அதியமான் கோட்டை ஏரி. படம்: Ajayadharth Photography
- தமிழக அரசியல்வாதிகள் பேச்சை கேட்டு வீணாகப்போகாதிர்கள்.... இல கணேசன். எவண்ண கேட்...
- அழகு தமிழ்நாடு! இடம் : உடையார்பாளையம், அரியலூர் மாவட்டம்
- எங்கையோ பார்த்த முகமா இருக்குன்னு நினைச்சேன்.. இவர்தானா அது.. :P
- பால்விலை உயர்வுக்கு ஆவின் நிர்வாகத்தைச் சரியாக நடத்தாத "கடந்த" ஆட்சியே காரணம் -ம...
- நடிகர் திலகம் சிவாஜிக்கு சிலை வைக்கும்போது விஜய்க்கு நாங்க சிலை வைக்க கூடாதா...?...
- சுய சிந்தனையுடன் செயல்படும் பல பெண்கள் இருக்கும் இந்த சமுதாயத்தில், புத்தியில்லா...
- தமிழனின் தலைவிதி! #கூத்தாடிகளுக்கு_வழிபாடு!
- நடிகர் விஜய்க்கு அவரது ரசிகர்கள் சென்னையில் இன்று 5''11 அடி உயர சிலை திறந்தனர்!...
- கதையல்ல; நிஜம்தான்யா, நம்புங்க:.......... அமெரிக்க அதிபர் ஒபாமாவும், அவரது துணை...
- கும்பகோணத்திலிருந்து சற்று தொலைவிலுள்ள நாச்சியார் கோயில் தாண்டிப் பூந்தோட்டம் செ...
- கர்நாடக எல்லையில் மீன் பிடித்த ஒரே காரணத்தை காட்டி பழனி என்ற தமிழரை கன்னட வனத்து...
Posted: 27 Oct 2014 09:08 PM PDT முழங்கால் அளவு மழைநீரில் யார் மேலும் நீரை வாரி அடிக்காமல், அதே நேரம் எஞ்ஜின் ஆஃப் ஆகாமல் பைக் ஓட்டினாலே அவர் முழு ஓட்டுனர். @பிரபின் ராஜ் |
Posted: 27 Oct 2014 10:44 AM PDT பால் விலை உயர்வுக்கு நாம் எழுப்பும் தொடர் கண்டன குரல்கள் ஆட்சியாளர்களை அசைத்ததோ இல்லையோ.. சில விவசாய பெருங்குடி மக்களை கோபப்படுத்தி இருக்கிறது... அதாவது... மாடுகளை பராமரித்தல், தீவனம், வைக்கோல் போன்றவற்றின் செலவு எவ்வளவு ஆகிறது தெரியுமா... பால் விலையை உயர்த்தியதை "நோகாமல் நோம்பு கும்பிடும்" நகரவாசிகள் எப்படி கண்டிக்கலாம் என்பது போன்ற ஆதங்கம் வெளிப்படுகிறது.... இது தவறான புரிதலின் வெளிப்பாடு.... பால் கொள்முதல் விலையை ஏன் உயர்த்தினீர்கள் என்று யாரும் கண்டனம் செய்யவில்லை.... கொள்முதல் விலையை 5 ரூபாய் உயர்த்திவிட்டு , விற்பனை விலையை 10 ரூபாய் உயர்த்தினால் அதுதான் "ஏன்" என்ற கேள்வி பிறக்க காரணமாகிறது.. கண்டனங்கள் வலுக்கிறது... ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் இயங்க பால் உற்பத்தியாளரோ (விவசாயியோ) நுகர்வோரோ காரணம் இல்லை.. முழுக்க முழுக்க ஆவின் நிர்வாகமும், அதில் பணி புரியும் ஊழிய புடுங்கிகளுமே காரணம்.. ஆரோக்கியா, ஹெரிடேஜ், அருணா,விஜய் போன்ற தனியார் பால் நிறுவன பண முதலைகளிடம் (இதில் சிலர் அரசியல்வாதிகள்) பணம் பெற்றுக்கொண்டு தம்முடைய கடமையை சரி வர செய்யாமலும், நிறுவன இயக்கத்தில் குளறுபடிகள் செய்தும் ஆவின் நிறுவனத்தை நஷ்டத்தில் தள்ளி விட்டு அதனை ஈடுகட்ட பொதுமக்களிடம் பிச்சை எடுப்பதை கூட அதிகாரமாய் செய்தால் கோபப்படாமல் என்ன செய்வார்கள்... தாம் பணி புரியும் நிறுவனத்திற்கு என்னால் லாபத்தை ஈட்ட முடியாவிட்டாலும் பரவாயில்லை.... நஷ்டத்தை ஏற்படுத்த கூடாது என்று எந்த ஊழியனும் நினைப்பதில்லை.... எவன் எப்படி நாசமாய் போனால் என்ன.. எனக்கு சம்பளம் ஒன்னாந்தேதியே வந்து விடும் என்ற இறுமாப்பு... அதுமட்டுமில்லாமல் போனஸ் என்ற பெயரில் ஊர் தாலியை அறுத்தாவது அரசாங்கம் கொடுத்து விடும்... கொடுப்பதில் கொஞ்சம் குறைந்தால் வேலை நிறுத்தம் செய்தாவது பிடுங்கி விடலாம் என்ற நம்பிக்கை... இவர்களின் தவறான நடவடிக்கைக்கு நாம் தண்டம் கட்ட வேண்டுமா என்ற கோபத்தின் வெளிப்பாடுதானே தவிர, விவசாயி பணக்காரன் ஆகி விட போகிறான் என்ற கெட்ட எண்ணம் இல்லை.... கொள்முதல் விலையை 5 ரூபாய் உயர்த்தினால் விற்பனை விலையை 7 ரூபாய் உயர்த்தலாம்.. இது நியாயம்... பத்து ரூபாய் உயர்த்துவது எவன் திருடியதை ஈடுகட்ட... என்பதுதான் கேள்வி...!!!! @Senthil K Nadesan |
Posted: 27 Oct 2014 10:12 AM PDT இதைப் போன்ற ஒரு Tea-Bag மட்டும் இங்கிலாந்துகாரனிடம் சிக்கி,ஒரு நல்ல வழக்கறிஞரும் கிடைத்தால், உடனடியாக Consumer Safety Concern என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து மில்லியன் கணக்கில் நஷ்ட்ஈடைக் கறந்து விடுவார்கள். தலையெழுத்தாக நமக்கு மட்டுந்தான் வாடிக்கையாளர்கள் உரிமைகளைப் பற்றியோ,பாதுகாப்பைப் பற்றியோ துளியும் தெரியாது.யாரேனும் அப்படியான உரிமைகளைப் பற்றி சிறிது பேசினாலே போதும், உடனடியாக அவனை "ரூல்ஸ் ராமானுஜம்" என்று நக்கலடித்து அந்தப் பிரச்சனையையே நீர்த்துப் போகச் செய்துவிடுவோம். Green Tea பருகலாம் என்று ஒரு பிரபல நிறுவனத்தின் Green Tea பைகளை வாங்கி வந்தேன்.பாக்கெட்டைப் பிரித்து-ஒரே ஒரு டீ பையை எடுத்து-கப்பில் போட்டேன்.போட்ட பின் தான் கவனித்தேன்,அந்த டீ-பையின் நுனியில் Pin அடித்து-அதில் நூலைக் கட்டியிருந்தார்கள்.அட பதர்களா!!!தவறுதலாக அந்த "பின்" டீக்குள் தவறி விழுந்து-அதைப் பார்க்காமல் அப்படியே குடித்திருந்தால்? Lipton Tea நிறுவனத்தில் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை குறித்து சிந்திக்க ஒரே ஒரு அறிவுள்ளவன் கூடவா இல்லை??? நம்ம அரசாங்கம் வேற நடு சாலையில் திறந்து கிடக்கும் பாதாள சாக்கடையையே கவனிக்காது... இதெல்லாம் எங்க!!! @துரை மோகன் ![]() |
Posted: 27 Oct 2014 07:38 AM PDT சிங்கள பௌத்த பேரினவாதிக்கு இந்தியா அரசு அஞ்சல் தலை வெளியிட்டது !! இந்திய அரசு தொடர்ந்து இலங்கையில் வாழும் தமிழினத்திற்கு எதிராக செயல்படுவது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் சிங்கள பௌத்த பேரினவாதத்தை கட்டி எழுப்பிய ஒரு பௌத்த பிக்குக்கு இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டு இந்த அளவிற்கு சிங்கள பாசத்தை காட்டும் என நாம் யாரும் அறிந்திருக்கவில்லை. இந்திய குடியரசு தலைவரும், பாஜக தலைவரும் சேர்ந்து பௌத்த பேரினவாதியான அநாகரிக தர்மபாலா என்னும் புத்த துறவிக்கு இந்தியாவின் சார்பில் அஞ்சல் தலை வெளியிட்டுள்ளனர். இந்தியா இலங்கை உடனான உறவை பலப்படுத்தவும் பௌத்த பண்பாட்டை இந்திய அரசு ஊக்குவிக்கவும் இந்த அஞ்சல் தலையை வெளியிடுவதாக இந்திய அரசு கூறியுள்ளது. சிங்கள பௌத்த தேசியத்தை வளர்த்தெடுக்க பாடுபட்ட ஒரு புத்த பிக்குவிற்கு இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட வேண்டிய அவசியம் என்ன ? தமிழ் மொழியையும் தமிழர் பண்பாட்டையும் மதிக்காத இந்திய அரசு சிங்களத்திற்கு வரிந்து கட்டுக் கொண்டு அவர்களது அடையாளங்களை பரப்புவதற்கு எல்லா வேலைகளையும் செய்வது வெட்கக்கேடு. தமிழர்களை கொன்று குவிக்கத் தூண்டிய சிங்கள பேரினவாதத்தை இந்திய அரசு மேன்மேலும் வளர்த்தெடுக்க முயற்சி செய்வது இதிலிருந்து அப்பட்டமாக தெரிகிறது. விரைவில் சு.சாமி கேட்டது போல கொலைகாரன் ராகபக்சேவிற்கு பாரத இரத்தினம் என்ற விருதை இந்திய அரசு வழங்கினாலும் வியப்பதற்கு இல்லை. இந்த மனநிலையில் இந்திய அரசு இருக்கும் வரை இந்தியா தமிழர்களுக்கு எந்த விதத்திலும் நன்மையை செய்யாது என்பது மேலும் உறுதியாகி உள்ளது ![]() |
Neolithic & Megalithic settlements have been found at Paiyampalli The habitatio... Posted: 27 Oct 2014 06:29 AM PDT Neolithic & Megalithic settlements have been found at Paiyampalli The habitation — cum burial site Paiyampalli (12° 30' N 78° 36'E) lies on Bangalore—Madras trunk road and about 5 km east of .Barugur. The excavations conducted in the years 1964-65 and 67-68 at Paiyampalli (Rao[8]) brought to light two cultural periods, viz., the Neolithic (period 1) and the megalithic (period II). The carbon-14 determinations of the charcoal samples indicated for period I A date at 1390±100 B.C and for period II at 315±100 BC. The excavation revealed two phases A (layers 9 and 8) and B (layers 7, 7a, 6, 6a and 5) in period I. The layers 6a, 6-and 5 of phase B in period I, yielded iron artefacts along with megalithic Black and red ware, neolithic Grey ware potteries and polished stone axes in one of the middle terrace (IAR: 1967-68:31). The absence of bone tools and the marked preference for built in huts with floors levelled with stone chips and plastered over with-ash- mixed earth showed improvement in the economy of the people in phase B than the earlier culture. The Neolithic settlers at Paiyampalli used to cultivate cereals and pulses. Charred grains of horse gram and green gram were found in those levels where a few sherds of megalithic pottery occurred in an essentially Neolithic habitation-level. The co-occurrence of Neolithic and megalithic elements in layers 6a, 6 and 5 with an occupational deposit of 30 CMS in period I illustrate the existence of these two cultures for a considerable period of time (200 years) befdre the emergence of iron using migrant as a single dominant culture in period II. "Period II represented the megalithic culture. The megalithic pottery of Paiyampalli is similar to that of other sites, except in respect of the abundance of a comparatively thin but coarse red ware painted in chocolate, -met with at the habitation. The Black and red ware, all black ware and the red ware formed main ceramic of the period II. Russet coated painted ware made its appearance in the late levels of period II. The megalithic people at Paiyampalli smelted iron and produced a large variety of tools and weapons locally, probably from the time of their arrival c. 500 BC, is indicated by the enormous quantity of iron slag and ore found all over the site. Sickles spears, 'chisels, nails, and axes were found in the habitation area (IAR[111: 1967-68:31). The excavation at Paiyampalli has provided a firm datum for the introduction of. iron in the Northwest part of Tamilnadu. " Courtesy: K Rajan Paiyampalli (Page 21) http://ignca.nic.in/pdf_data/rockart_2012/rockart_2012_brochure.pdf Paiyampalli Ancient Potsherds (Page 4) http://www.sciencedirect.com/science/article/pii/S1687850713000289 In Tamil http://usefullinkforsearcher.blogspot.in/2013/03/blog-post_1105.html ![]() |
Posted: 27 Oct 2014 06:14 AM PDT 'கத்தி' கட் அவுட் விபத்தில் இறந்த ரசிகர் குடும்பத்தினருக்கு விஜய் நேரில் ஆறுதல்! இனி இப்படிபட்ட கொலைகள்(விபத்து) நடக்காமல் இருக்க என்ன செய்ய போறீங்க?? |
கவித_கவித Posted: 27 Oct 2014 05:47 AM PDT |
Posted: 27 Oct 2014 05:37 AM PDT கலாச்சாரம் என்பது கட்டும் சேலையில் இல்லை. கட்டுக்கோப்பான மனதில் தான் இருக்கிறது. # இங்கு சேலையை கவர்ச்சியாய் உடுத்தும் பெண்களும் உண்டு. ஜீன்சை கண்ணியமாய் உடுத்தும் பெண்களும் உண்டு. @கனா காண்கிறேன் |
Posted: 27 Oct 2014 05:32 AM PDT தமிழகத்தில் கைதுசெய்யப்பட்ட மூன்று மாணவர்களை விடுவிக்க கோரி லண்டனில் உள்ள இந்திய தூதரகம் தமிழர்களால் முற்றுகை.... சர்வதேச நாடுகளின் முன்னே இந்தியாவின் போலி அகிம்சை முகமூடி கிழிந்து வருகிறது... |
Posted: 27 Oct 2014 04:57 AM PDT |
Posted: 27 Oct 2014 04:44 AM PDT |
Posted: 27 Oct 2014 04:31 AM PDT தமிழக அரசியல்வாதிகள் பேச்சை கேட்டு வீணாகப்போகாதிர்கள்.... இல கணேசன். எவண்ண கேட்குறான் கண்ட கண்ட நாயெல்லாம் அட்வைஸ் பண்ணும்னு அப்பவே சொன்னேன். |
Posted: 27 Oct 2014 04:00 AM PDT |
Posted: 27 Oct 2014 03:30 AM PDT |
Posted: 27 Oct 2014 03:13 AM PDT பால்விலை உயர்வுக்கு ஆவின் நிர்வாகத்தைச் சரியாக நடத்தாத "கடந்த" ஆட்சியே காரணம் -முதல்வர். ஓ.பன்னீர்செல்வம் # கடந்த ஜெயலலிதா ஆட்சியை தைரியமாக குறை சொல்லும் சிங்கமே! வாழ்க உமது புகழ்!! வளர்க உமது நல்லாட்சி! |
Posted: 27 Oct 2014 03:04 AM PDT நடிகர் திலகம் சிவாஜிக்கு சிலை வைக்கும்போது விஜய்க்கு நாங்க சிலை வைக்க கூடாதா...?? ஏன்டா, சிவாஜிக்கு சமாதி கூட இருக்கு.. விஜய்க்கும் சமாதி வச்சிட்டு அப்பறம் சிலை வைச்சிகுங்க... @பிரகாசம் |
Posted: 27 Oct 2014 12:12 AM PDT சுய சிந்தனையுடன் செயல்படும் பல பெண்கள் இருக்கும் இந்த சமுதாயத்தில், புத்தியில்லாத, மனிதர்களாக வாழ அருகதை இல்லாத சில பெண்களும் இருக்க தான் செய்றாங்க. நாமக்கல் மாவட்டம், பவித்திரம் அடுத்து 'வெள்ளாலப்பட்டி' என்ற கிராமத்தில் அச்சப்பன் கோயில்னு ஒன்னு இருக்கு. இந்த கோயிலில் ஒரு மூடத்தனமான பூஜை நடத்துறாங்க. அதாவது, அந்த ஊர் பெண்கள், கல்லூரி மாணவிகள் எல்லாம் கோயில் முன்னாடி வரிசையா முட்டி போட்டு உக்காந்து இருக்காங்க. அங்க ஒரு பூசாரி நீளமான ஒரு சாட்டையை எடுத்துக்கிட்டு கொலை வெறியோட வரான். மேளம் அடிக்க அடிக்க அவனுக்கு சாமி வந்து, முட்டி போட்டு உக்காந்து இருக்கிற பெண்களை 'சுளீர்...சுளீர்'னு அடிக்கிறான். அவங்க ரெண்டு மூனு அடியை வாங்கிட்டு சுரனையே இல்லாம எந்திரிச்சு போறாங்க. அடுத்து இன்னொரு பெண்கள் க்ரூப் வந்து முட்டி போட்டு அடி வாங்கிட்டு போறாங்க. பேட்டியில் ஒரு பெண் சொல்றாங்க, 'நம்ம உடம்பில் இருக்கும் கெட்ட ஆவிகளை விரட்ட தான் அடி வாங்குறோம். அடி வலிச்சா, கெட்ட ஆவி இருக்குன்னு அர்த்தம். அடி வலிக்கலைன்னா, கெட்ட ஆவி இல்லைனு அர்த்தம்'னு விளக்கம் சொல்றாங்க. இதில் ஒரு மாணவி, 'நான் இப்ப 'பிளஸ் டூ' படிச்சிக்கிட்டு இருக்கேன். எனக்கு அக்ரிகல்ச்சர் படிக்க ஆசை. அது நிறைவேற தான் பூசாரிக்கிட்ட அடி வாங்க வந்துருக்கேன்'னு சொல்றாங்க. # அடப்பாவிங்களா...இவங்கலாம் எந்த உலகத்துல இருக்காங்க...? ஆதிவாசி மக்களா இருந்தாக்கூட அறிவு இல்லைன்னு விட்டுவிடலாம். ஆனால் இந்த பெண்கள் பட்டு சேலை நகை நட்டு எல்லாம் போட்டுட்டு நாகரிகமா வந்து அடி வாங்குறாங்க.. படிப்பு வரலைன்னு வாத்தியார் அடிச்சா, அதை தப்புனு சொல்லி அவர் மேல கேசு போடுறாங்க. இங்க, பாஸ் ஆகனும்னு பூசாரிக்கிட்ட அடி வாங்குறதை சரின்னு சொல்லி பாராட்டுறாங்க.. எங்க போகுதுடா இந்த சமுதாயம்...? இன்னும் எத்தனை வருஷம்டா நீங்கலாம் இப்படியே இருப்பீங்க ? @Prãkãšãm Pãzhãñí |
Posted: 26 Oct 2014 11:46 PM PDT |
Posted: 26 Oct 2014 11:27 PM PDT |
Posted: 26 Oct 2014 11:11 PM PDT கதையல்ல; நிஜம்தான்யா, நம்புங்க:.......... அமெரிக்க அதிபர் ஒபாமாவும், அவரது துணைவியார் மிஷேல் ஒபாமாவும் சென்ற மாதம் நியூயார்க் உணவு விடுதிக்கு சென்று உணவருந்திய பின்னர், அதற்குரிய கட்டணம் செலுத்த, ஒபாமா தனது கிரிடிட் கார்டை உணவு பரிமாறிய பெண் மணியிடம் கொடுத்தார். திரும்பி வந்த பெண்மணி, உங்கள் கிரிடிட் கார்டு உங்களுடையதுதானா என்பதற்கு எந்தவித உறுதியும் இல்லை; அதனால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என திருப்பி தந்துவிட்டார். அந்த பெண்மணியிடம், இது தனது கிரிடிட் கார்டு தான் என ஒபாமா எடுத்துச் சொல்லியும், அந்த பெண்மணி, அதனை ஏற்க மறுத்த நிலையில், தனது துணைவியாரின் கிரிடிட் கார்டை தந்து, உணவுக்கான கட்டணத்தை செலுத்திவிட்டு வந்தார் அமெரிக்க அதிபர் ஒபாமா. இந்த தகவலை, கிரிடிட் கார்டு சம்பந்தமாக மக்களுக்கு ஏற்படும் அடையாளத் திருட்டு (IDENTITY THEFT) பிரச்சினைகள் குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட, அமெரிக்க அதிபர் ஒபாமா, அங்கே, இந்த தகவலைக் கூறியுள்ளார். அமெரிக்க நாட்டில் ஏறத்தாழ பத்து கோடி மக்களுக்கு இந்த அடையாளத் திருட்டின் காரணமாக, பல இடங்களில், இந்த கிரிடிட் கார்டு மறுக்கப்படும் பிரச்சினை உள்ளது. இதில் நானே, பாதிக்கப் பட்டுவிட்டேன் என்றார் உலக வல்லரசு நாட்டின் அதிபராக திகழும் பாரக் ஒபாமா. இதுவே, நமது "பாரத தேசம்'' என்றால், இந்த கதி இருக்குமா? முதலில், பிரதமரோ, முதல்வரோ, இது போன்று ஒரு உணவு விடுதியில் தனது குடும்பத்துடன் தனியே அமர்ந்து சாப்பிடும் நிலை கிடையாது. அப்படியே, அவர்கள் சென்றாலும், அந்த பகுதி முழுக்க, தோரணம் கட்டி, வாசலில் பூரண கும்ப மரியாதையுடன், அந்த உணவு விடுதியின் உரிமையாளர் சகிதம் நின்று வரவேற்பார்கள். அவர் சாப்பிடுவது இருக்கட்டும், அவரிடத்தில் யார் போய், நீங்கள் பணம் தாருங்கள் என சொல்லப்போகிறார்கள். நீங்கள் இங்கே, வந்ததே எங்கள் பாக்கியம் என விளம்பரம்படுத்தி விடுவார்கள். அப்படியே, பணம் தருவதற்கு முன்வந்து, இது போல், கிரிடிட் கார்டு செல்லாத நிலை ஏற்பட்டாலும், உணவு பரிமாறியவர், இது போல் காரணத்தைச் சொல்லி, திருப்பி தரும் தைரியம் வருமா? அவ்வாறு சொல்லிவிட்டு, பிறகு அவர் அங்கே வேலைதான் பார்க்க முடியுமா? ஆனால், அமெரிக்காவில் முடியும். அங்கே, அதிபரும் சரி, சாதாரணக் குடிமகனும் சரி, பொது இடத்தில் எல்லோரும் ஒன்றுதான். அலுவலகத்தில், ஒபாமா அதிபர். அவ்வளவுதான். வெளி இடத்தில் எங்கு வந்தாலும், மற்ற குடிமகன்போல, அவர் நடந்து கொள்ள வேண்டும். நடந்து கொள்வார்கள். இதுபோல் வாழ்ந்த தலைவர்களும் நமது மண்ணில் இருந்தார்கள். ஆனால், இப்போது, இன் றைய இளம் தலைமுறை காணும் முக்கிய மனி தர்கள், அப்படி இல்லையே. இங்கே, சென்னை விமான நிலையத்தில், கார் நிறுத்தக்கூடாத இடத்தில் நிறுத்தப்பட்ட அமைச்சரின் காரினை, காவல்துறை அதிகாரி, அப்புறப்படுத்தி, தனது கடமையை செய்ததற்கு, அவரை பாராட்டாமல், அந்த அதிகாரி, எப்படி அமைச்சரின் காரை அப்புறப்படுத்தலாம் என சொல்லி, அவருக்கு மாற்றல் உத்தரவு பிறப்பித்த, நமது ஊரில், ஒபாமாவிற்கு நடந்த சம்பவம் கதைபோல் தான் தெரியும். @@தினேஷ் குமார் ![]() |
Posted: 26 Oct 2014 10:48 PM PDT கும்பகோணத்திலிருந்து சற்று தொலைவிலுள்ள நாச்சியார் கோயில் தாண்டிப் பூந்தோட்டம் செல்லும் வழியில், சிறிது தொலைவில் உள்ளது 'துக்காச்சி'. 'துருக்கை ஆட்சி' என்றிருந்ததே தற்பொழுது துக்காச்சி என்று மருவிவிட்டது என்கின்றனர். முதலாம் குலோத்துங்கன், அதாவது அநபாயனது மகன் விக்கிரமச் சோழன் கட்டியதாகும் இக்கோயில். இவ்வூர் சோழர் காலத்தில் விக்கிரமசோழீச்வரம் என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. இன்றோ மாபெரும் கலைச் சின்னம் என்று UNESCOவினால் அறிவித்து, இந்தியத் தொல்லியல் துறையினரால் பராமரிக்கப்படும் தாராசுரத்திற்கு முன்னோடியே இக்கோயில். தாராசுரத்திற்குச் சற்றும் குறையாத அழகுமிளிரும் கலைச் சிற்பங்களையும், வேலைப்பாடுகளையும் கொண்ட இக்கோயிலின் தற்போதைய நிலை கண்களில் நீரை வரவழைக்கிறது. கோயிலின் உட்பிரகாரத்தில் குதிரையும், யானையும், சக்கரத்துடன் கூடிய ரதத்தினை இழுத்துச் செல்லுவதுபோல் அமைந்த மண்டபத்தின் எதிரேயுள்ள, தெற்குப்பக்க திருச்சுற்றுச் சுவரில் மனித முகத்தின் ஓவியமொன்று தலை உச்சியிலிருந்து கழுத்திலுள்ள ஆபரணங்கள் வரை முழுமையாகவும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் மிகவும் சிதைந்தும் உள்ளதாய்க் காணப்படுகிறது. தஞ்சைப் பெருங்கோயில் திரிபுராந்தகர் ஓவியக்காட்சியிலுள்ள கோடுகளின் தன்மையையும், வண்ணங்களின் வனப்பையும் ஒத்ததாய் இவ்வோவியம் அமைந்துள்ளது. மேலும் முகத்தில் நெற்றிக்கண் உள்ளதால் சிவனின் உருவமாக எண்ண முடிகிறது. ஓவியம் முழுமையாக இல்லாததால் தற்போது இக்காட்சியின் பொருளினை உறுதியாகக் கண்டறிய முடியவில்லை. கோயிலின் உட்பிரகாரத்தில் தென்மேற்கு மூலையிலுள்ள விநாயகர் சன்னதியின் முன் மண்டப விதானத்தில் நிறைய அலங்கார ஓவியங்கள் உள்ளன. இவற்றில் தாமரையை மையமாக கொண்ட சதுர வடிவிலான பகுதிக்குள் நீண்டு சுழன்றோடக் கூடிய தண்டுகளும் கொடிகளுமாகவும், விரிந்த மலர்களும் மொட்டுக்களுமாகவும் அவற்றுடன்அச்சுழல்களிலே வெளிப்படும் அன்னமும், அழகிய வண்ண ஓவியங்களாக வரைந்துள்ளனர். கோயிலின் வெளிப்பிரகாரத்தில் தெற்கு நோக்கிய அம்மன் சன்னதியிலுள்ள மண்டபத்தின் முன் முகப்புச் சுவற்றின் வலப்புறமும், இடப்புறமும் இருந்த ஓவியங்கள் இயற்கையின் பாதிப்புக்குள்ளாகி மிகவும் அழிந்துவிட்டன. ஆனால் உற்று நோக்கினால் இன்றும் செம்மையான கோடுகளின் சில பகுதிகளைக் கொண்டு இங்கும் சிறந்த ஓவியங்கள் இருந்தமையை உணரமுடிகிறது. அக்காலத்தில் கோயில் முழுவதும் வண்ணம் தீட்டியதற்கான சான்றாக இங்குள்ள ஓவியங்களையும், சில சிதைந்த பகுதிகளையும் கொள்ளலாம். பின்னொரு நாளில் இதுகுறித்து மேலும் தகவல்களை இத்துடன் இணைக்கிறேன். அதுவரையில் இப்புகைப்படன்களைக் கண்டு மகிழ்ந்திருங்கள் அல்லது கண்ணீர் உகுத்திருங்கள் நண்பர்களே. எமது வேண்டுகோளிற்கிணங்க இக்கோயிலைப் புகைப்படம் எடுத்தளித்த நண்பர் யுவராஜிற்கு எமது மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன். @புலி வம்சம் ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
Posted: 26 Oct 2014 10:25 PM PDT கர்நாடக எல்லையில் மீன் பிடித்த ஒரே காரணத்தை காட்டி பழனி என்ற தமிழரை கன்னட வனத்துறை பிடித்து, துன்புறுத்தி, அவரது கையை துண்டாக்கி, பின்னர் துப்பாக்கியால் சுட்டு கொடூரமாக கொன்றுள்ளனர். அவரது ஆணுறுப்பையும் அறுத்துள்ளனர்.. மேலும் இருவர் தாக்கப்பட்டு தப்பியுள்ளனர். அந்த கொடுஞ்செயலின் Modus Operandi முழுக்க முழுக்க தமிழ் மீனவர்கள் மீதான சிங்கள காடையர்களின் தாக்குதல் பாணியை ஒத்திருப்பது கவனிக்கத்தக்கது. மீனவர்கள் மீதான சிங்களர்களின் தாக்குதல் என்பது "வெளி விவகாரம்", "வெங்காய வியாபாரம்" என்றெல்லாம் இது நாள் வரை கதை கட்டி இங்குள்ள திராவிட அரசுகளுக்கு "ஞான ஸ்நானம்" அருளிய மண்டைவீங்கிகள் இதற்கு என்ன விதமான விளக்கம் அளிக்க போகிறார்கள்? இந்த கொலையிலும் தமிழக அரசுக்கு எந்த பங்கும் கிடையாதா? இல்லை இதுவும் சுப்பிரமணிய சாமியின் / ராஜபக்சேவின் சதியா? இதற்கும் சு.சாமியின் வீட்டை ஒரு முற்றுகை போட்டு விடலாமா? இந்த அயோக்கியர்களை மட்டுமே வைத்து இன்னும் எவ்வளவு தூரம் மக்களை திசை திருப்ப உத்தேசம்? நமக்கான குரலாக பல்வேறு மாநில அரசுகளிடமும், மத்திய அரசிடமும், அதன் மூலம் பன்னாட்டு அரசுகளிடமும், அமைப்புகளிடமும் மல்லுக்கட்ட தான் நமக்கான மாநில அரசே உள்ளது. அதற்காகவே வாக்களிக்கிறோம், வரி கட்டுகிறோம்.. @ சூரிய பிரகாஷ் |
You are subscribed to email updates from சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |