Wednesday, 17 September 2014

FB Posts by Araathu அராத்து

FB Posts by Araathu அராத்து

//நான் எழுதுவதற்கு இனி ஒருக்காரணமும் இல்லை.நான் எழுதுவதை, கோப்பை நிரம்பி வழியும்போது பைப்பை நிறுத்துவது போல நிம்மதியாக நிறுத்திவிடலாம்.லவ் யூ.// இப்படி ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தேன். இதில் ஏதாவது சோகமோ , கடுப்போ , இல்லை நான் எழுதுவதை நிறுத்தப்போகிறேன் என்ற எனது நேரடியான ஸ்டேட்மெண்டோ தெரிகிறதா ? ஜாலியான ஸ்டேட்டஸ் இது. நிறைவான மகிழ்ச்சியான ஃபீலிங்க் தெரியவில்லையா ? ஸ்டேட்டஸின் கடைசியில் லவ் யூ என்பதற்கு பதில் லவ் யூ டீ என போட்டிருந்தால் புரிந்திருக்கலாம். என் நெருங்கிய தோழர்கள் கொஞ்சம் புரிந்துகொண்டு கமெண்ட் இட்டிருந்தனர். நான் உண்மையிலேயே இனிமே எழுதமாட்டேன் என உங்களிடம் சொல்ல நினைத்தால் , இப்படியா சீன் போடுவேன் ? பலரும் ஃபேஸ்புக்கில் சீன் போட்டதால் என்னையும் அப்படி நினைத்து விட்டீர்கள் ! என் நண்பர்கள் வட்டத்திலும் இல்லாமல் , என்னை ஃபாலோவும் செய்யாமல் , தினமும் பல் தேய்ப்பதற்கு முன்பே தினமும் ஊத்த வாயோடு ஃபேஸ்புக்கில் என் பக்கத்துக்கு வந்து மென்க்கெட்டு என்னைப் படித்து வெறி கொண்டு தன்னைத்தானே கடித்துக்கொள்ளும் பல பேர் இருக்கிறார்கள்.அது எனக்குத் தெரியும். அவர்கள் வழக்கம் போல எனது போஸ்டில் வாந்தி எடுத்ததும் ஆச்சரியமல்ல. சக அராத்துக்களாக இருக்கும் என் நண்பர்கள் கமெண்டிலும் , அதிகமாக இன்பாக்ஸிலும் நிறுத்தாதீங்க என சொன்னதுதான் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.திரும்பவும் கேட்கிறேன், இவ்வளவு நாட்கள் என் போஸ்டை படித்து வருகிறீர்கள் ? இப்படியெல்லாம் எமோஷனல், செண்டிமெண்டல் ,வெத்து சீன் எப்போதாவது போட்டிருக்கிறேனா :-) என் காதலிக்கு இன்பாக்ஸுக்கு அனுப்ப வேண்டிய மெசேஜை, காதல் ஓவராக பீறிட்டு அடித்ததால் போஸ்டாக போட்டேன். அவளுடன் சேர்ந்து நீங்களும் எஞ்சாய் செய்வீர்கள் என்று நினைத்தேன். எஞ்சாய் ! லவ் யூ டீ & லவ் யூ ஆல் !

Posted: 16 Sep 2014 09:08 PM PDT

பாஷாங்குசன் : பிரபோ மகிழ்ச்சி தானே பெரிது ? பிரபு சங்காட்சகன் : குசா , மகிழ்ச்சியின் ஆயுள் மிகவும் குறைவு.அதிக பட்சம் சில நிமிடங்களே நீடித்து இருக்கும். மகிழ்ச்சியை முழுவதும் உணரவும் முடியாது.மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள முடியும். சோகம்தான் கலப்பில்லாதது.மிகவும் அடர்த்தியானது. நாடி நரம்பு முழுக்க பரவி உடலாலும் மனதாலும் முழுமையாக உணர்ந்து கொள்ள வல்லது.நீடித்த ஆயுளை கொண்டது. நல்ல முழுமையான சோகம் ஒரு மனிதனை தனக்குள்ளே கரைத்துக்கொண்டு அவனே சோகமாகவும் , சோகமே அவனாகவும் உன்னத நிலைக்கு சென்று விடுவான்.அந்த உன்னத சோகத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாது.சோகத்தை முழுமையாக அனுபவிக்கக் கற்றுக்கொண்டால் , மகிழ்ச்சி ஒன்றுமேயில்லை என்பது விளங்கி விடும்.என்ன ஒன்று , உண்மையான, முழுமையான சோகம் ஒருவருக்கு வாய்ப்பது அரிது.

Posted: 16 Sep 2014 07:45 AM PDT