Wednesday, 17 December 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


Posted: 17 Dec 2014 05:51 PM PST


மார்கழி காலைதோரும் வாசல் கோலமிடுவோம். பசுமாட்டு சானம் பிடித்து பூசணி பூ நடுவோம்....

Posted: 17 Dec 2014 05:48 PM PST

மார்கழி காலைதோரும்
வாசல் கோலமிடுவோம்.
பசுமாட்டு சானம்
பிடித்து பூசணி பூ நடுவோம்.
பனியின் வெண்மையுடன்
வெண்கோலம்
பூத்திடுவோம்.
வருவது உழவனின் "தை"
அதனை அன்போடு வரவேற்றிடுவோம்.


நீ வரைந்த கோலத்தை காட்டிலும் கால் மடித்து அமர்ந்து நெற்றியில் விழும் முடி ஒதுக்க...

Posted: 17 Dec 2014 05:16 PM PST

நீ வரைந்த
கோலத்தை காட்டிலும்
கால்
மடித்து அமர்ந்து நெற்றியில்
விழும்
முடி ஒதுக்கி வியர்வை பூத்து கோலமிடும்
உன் கோலம் இன்னும்
அழகு!

@காளிமுத்து


மகளிர் சுய உதவிக்குழுக்களை கலைக்க மத்திய அரசு முடிவு.

Posted: 17 Dec 2014 08:22 AM PST

மகளிர்
சுய உதவிக்குழுக்களை கலைக்க மத்திய
அரசு முடிவு.

ஜாதகத்தின் பக்கத்தை புரட்ட, புரட்ட ஜோதிடர் முகத்தில் ஏற்படும் முகபாவத்தை ஜோதிகாவ...

Posted: 17 Dec 2014 08:01 AM PST

ஜாதகத்தின்
பக்கத்தை புரட்ட, புரட்ட
ஜோதிடர் முகத்தில்
ஏற்படும்
முகபாவத்தை ஜோதிகாவினாலும்
கொடுக்க முடியாது..

@பிரபின் ராஜ்

போட்டோ பிடித்தால் ஆயுசு குறையும் எனக்கூறிய சமூவத்தில் பிறந்த நாமதான் இப்ப செல்ஃப...

Posted: 17 Dec 2014 07:56 AM PST

போட்டோ பிடித்தால்
ஆயுசு குறையும்
எனக்கூறிய சமூவத்தில்
பிறந்த நாமதான் இப்ப
செல்ஃபில கூட
கலக்குறோம்...

@பிரபின் ராஜ்

மீத்தேன் ஆள்துளை கிணற்றில் இருந்து வெறியேற்றப்படும் கதிரியக்க தன்மையுடைய அமில கர...

Posted: 17 Dec 2014 07:42 AM PST

மீத்தேன்
ஆள்துளை கிணற்றில்
இருந்து வெறியேற்றப்படும் கதிரியக்க
தன்மையுடைய அமில
கரைசல் கழிவு நீர்!

#புல், பூண்டு கூட
மண்ணில்
முளைக்காது..


விக்கலில் நான் தண்ணீர் குடிப்பதில்லை... நினைப்பது நீயாக இருந்தால் நீடிக்கட்டுமே....

Posted: 17 Dec 2014 07:13 AM PST

விக்கலில் நான் தண்ணீர்
குடிப்பதில்லை...
நினைப்பது நீயாக
இருந்தால்
நீடிக்கட்டுமே..!!

@காளிமுத்து

அழகு தமிழ்நாடு! ஆழ்வார்குறிச்சி!

Posted: 17 Dec 2014 07:05 AM PST

அழகு தமிழ்நாடு!
ஆழ்வார்குறிச்சி!


அழகு தமிழ்நாடு! இராமேஸ்வரம்!

Posted: 17 Dec 2014 07:00 AM PST

அழகு தமிழ்நாடு!
இராமேஸ்வரம்!


Rock arts of Iron Age (Megalithic period), believed to be 4,000 years old, have...

Posted: 17 Dec 2014 05:29 AM PST

Rock arts of Iron Age (Megalithic period), believed to be 4,000 years old, have been discovered at Kudumianmalai in Pudukottai district.

J. Raja Mohamad, president, Pudukkottai Historical and Cultural Research Centre, and Rajendran, secretary, have found these painting during the field study in the area.

Kudumianmalai and its surrounding areas are rich in Megalithic excavations. The Tamil Brahmi inscription of third century AD, rock beds of Jain monks, cave temple of the Pandyas, and the inscription of musical treatise of 9th century A.D, temples built by Cholas, Pandyas, Vijayanagar kings, Nayaks, Thondaimans, are some of the antiquarian remains at Kudumianmalai. The discovery of the ancient rock art attests further to the posterity of human activity in the area, according to Dr. Raja Mohamad.

The paintings are found in a rock about 30 feet high, behind the Kudumianmalai temple.

The paintings in red, black, and yellow are found in about 20 spots throughout the length of the rock on its eastern face.

Man with a bow (in red), human figure, and an animal (in black), trees and creepers are a few of the legible paintings in the group. Since the paintings are drawn in the near vertical rock, most of them have been damaged because of vagaries of the weather and vandalism. However, the vestiges of these ancient paintings are evidence to the remote past of the place.

The paintings are executed with the natural colour pigments such as red and yellow ochre, hematite stone and charcoal, in water medium. The slow action of water on the siliceous rock fixes the pigments firmly on the rock rendering them immune to the solvent action of water.

The chronology of the rock art in South India is believed to be about 4,000 to 5,000 years old, Dr. Raja Mohamad says.

The paintings at Kudumianmalai resemble other paintings found at places such as Alampadi in Villupuram and Sirumalai in Dindigal.

Dr. Raja Mohamad who is engaged in a project study on the ancient history and culture of Pudukottai is hopeful of bringing more such new evidences on the early history of the region

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/iron-age-rock-arts-found-at-kudumianmalai/article6239637.ece

http://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/iron-age-rock-arts-found-at-kudumianmalai/article6254348.ece

In Tamil

http://www.dinamani.com/tamilnadu/2014/07/24/புதுகை-4000-ஆண்டுகளுக்கு-முந்த/article2346296.ece


Indus-like inscription on South Indian pottery from Thailand A fragmentary pott...

Posted: 17 Dec 2014 04:36 AM PST

Indus-like inscription on South Indian pottery from Thailand

A fragmentary pottery inscription was found during excavations conducted by the Thai Fine Arts at Phu Khao Thong in Thailand about three years ago. (Dr. Berenice Bellina of the Centre National de la Recherche Scientifique, France, sent me a photograph of the object: Figure 1)

The discovery of a Tamil-Brahmi pottery inscription of about the second century CE at the same site was reported earlier ( The Hindu, July 16, 2006). One can presume that the present inscription is also from the Tamil country and belongs approximately to the same period. The two characters incised on the pottery now reported are not in the Brahmi script. They appear to be graffiti symbols of the type seen on the South Indian megalithic pottery of the Iron Age-Early Historical Period (second century BCE to third century CE).

What makes the discovery exciting is that the two symbols on the pottery resemble the Indus script, and even the sequence of the pair can be found in the Indus texts, especially those from Harappa.

The symbol looking vaguely like an 'N' appears to be the same as the Indus signs 47 or 48 (in Figure 3). Professor B.B. Lal, former Director-General of the Archaeological Survey of India, showed that these Indus signs have a remarkable resemblance to the megalithic symbol occurring at Sanur, near Tindivanam, and elsewhere in Tamil Nadu (Figure 2). More recently, the same symbol has turned up on two pottery fragments from Pattanam in Kerala (probably the same as Musiri of the Sangam Age). I have compared the symbols with the Indus signs depicting a seated anthropomorphic deity.

The symbol on the Thai pottery resembles a diamond. It occurs in the Indus script in diamond or oval forms (Signs 261 and 373 in Figure 3).

What is extraordinary about the present find is the occurrence of the two symbols on the pottery in the same sequence as found in the Indus texts (see for example texts 4589 and 5265 from Harappa, Figure 3). The Thai pottery has only two symbols. Another symbol might have been lost owing to the fragmentary state of the pottery.

Sequences such as this on the Thai pottery and those reported on the inscribed Neolithic stone axe from Sembiyan Kandiyur and on megalithic pottery from Sulur (near Coimbatore in Tamil Nadu) provide evidence for the survival of the Indus script in South India during the megalithic age, and for the possibility that the languages of the Indus Civilisation and South India belong to the same family, namely Dravidian.

(The sign and text numbers are cited from The Indus Script: Texts, Concordance and Tables, by Iravatham Mahadevan (1977). The author is Honorary Consultant of the Indus Research Centre at Roja Muthiah Research Library in Chennai.)

http://www.thehindu.com/todays-paper/article746147.ece


தாய்மையின் சிறப்பு இரவு 12 மணிக்கு சாலையில் ஓர் வாடகை கார் வேகமாகச் சென்று கொண்...

Posted: 17 Dec 2014 03:27 AM PST

தாய்மையின் சிறப்பு

இரவு 12 மணிக்கு சாலையில் ஓர் வாடகை கார் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, அந்த காரை கையசைத்து நிறுத்தினார்.
"தம்பி ஆஸ்பத்திரி போகணும்"
"நான் வரமுடியாது. சாப்பிட்டுட்டு, படுக்கப் போறேன்".
"என் மகளுக்கு பிரசவவலி வந்து விட்டது, தயவுசெய்து வரமாட்டேன்னு சொல்லிடாதேப்பா" என்றார் அப்பெண்மணி.
"நீங்க இவ்வளவு சொல்றதாலே வர்றேன். 500 ரூபா ஆகும்" என்றான் அந்த கார் ஓட்டும் இளைஞன்.
அப்பெண்மணி 500 ரூபா என்ன 1000 ரூபாய் கேட்டால் கூட தர சம்மதம் என்பதுபோல் வேகவேகமாக தலையாட்டி சம்மதிக்க, கார் அவர்களுடன் மருத்துவமனைக்கு விரைந்தது.
கார் ரெயில்வே கேட்டை நெருங்கவும், எச்சரிக்கை மணி ஒலிக்க கேட் மூடப்பட்டது. அக்கர்ப்பிணியின் முனகல் சற்று அலறலாக மாறியது. இரண்டு ரெயில் வண்டிகள் எதிர் எதிர் திசையில் கடக்க, பத்து நிமிடத்தில் கேட் திறந்தது.
இப்போது கார் இன்னும் சற்று வேகமாக ஓடி மருத்துவமனையில் நின்றது. நடுநிசியின் நிசப்தத்தைக் கிழித்தது அப்பிரசவத் தாயின் அலறல். மூடிய விழிகளில் நீர் மல்க, அந்த நடுத்தர வயதுப் பெண்மணி கைகளைக் கூப்பி மகளுக்காக இறைவனிடம் வேண்டினாள்.
அந்த கார் இளைஞனும் அமைதியாக அங்கே நின்றிருந்தான்.
சற்று நேரத்தில் மருத்துவர் வந்து சுகப்பிரசவம் நடந்துள்ளது. ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த தாய் கார் இளைஞரிடம் "தம்பி! ரொம்ப நன்றிப்பா. இந்தா நீ கேட்ட பணம்" என பணத்தை நீட்டினாள் அப்பெண்மணி.
"வேணாம்மா. எங்கம்மா என்னைப் பெற எவ்வளவு வேதனைப்பட்டிருப்பாங்கன்னு இறைவன் எனக்கு புரிய வச்சிட்டார். பணத்தை நீங்களே வைங்க" என்று சொன்னபடி நடக்க ஆரம்பித்தான்.
ஏதோ யோசிக்க போனை எடுத்து ஒரு நம்பரை கண்டுபிடித்து டயல் பண்ணினான்.
"ஹலோ முதியோர் இல்லமா?"
"ஆமா என்ன இந்த நேரத்துல போன் பண்ணுறீங்க?"
"மன்னிக்கவும். நாளு நாளைக்கி முன்னாடி அனாதைன்னு சொல்லி ஒருத்தவங்கள உங்க இல்லத்துல சேர்த்தேன்.. இல்லையா?
அவுங்க அனாதை இல்லை என்ன பெத்த தாய். நாளைக்கு காலையிலே வர்றேன் அவுங்கள கூட்டிட்டு போக" முதியோர் இல்ல பொறுப்பாளரின் அனுமதியைக் கூட கேட்காமல் மொபைலை கட் பண்ணி விட்டு வண்டியை தீர்க்கமான முடிவோடு ஸ்டார்ட் செய்தார் .
'ஆம். நிஜத்தை தரிசிக்கும் ஒவ்வொரு இதயமும்... ஒரு மனிதனைப் பிரசவிக்கிறது'.

- மாலை மலர்


பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவேண்டிய தருணம் இது.. கச்சா எண்ணெய் மிகவும் விலை...

Posted: 17 Dec 2014 01:46 AM PST

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவேண்டிய தருணம் இது.. கச்சா எண்ணெய் மிகவும் விலை குறைந்துள்ள தருணத்தில், பிரதமரோ, துறை அமைச்சர்களோ கண்டுகொள்ளாத அல்லது காணாமல் நகர்கின்ற தருணத்தில், ஊடகங்கள் கை கோர்த்துக்கொண்டு, தேசிய நூலாக பகவத் கீதை என்ற சப்பை மேட்டரை ஊதிப்பெரிதாக்கிக் காட்டுகின்றன..

மக்கள் முட்டாளாகவும், எமோஷனல் இடியட்ஸ்களாகவும், கூட்டம் கூட்டமாய் கத்திக்கொண்டுள்ளனர்.. இதற்கு பக்கம் பக்கமாய் தலையங்கங்கள் வேறு..

@ரா புவன்

கத்தி படம் பார்த்துட்டு விஜய் விவசாய நிலங்களை காப்பாத்துவார்ன்னு நம்புறதும்.. லி...

Posted: 17 Dec 2014 01:46 AM PST

கத்தி படம் பார்த்துட்டு விஜய் விவசாய நிலங்களை காப்பாத்துவார்ன்னு நம்புறதும்..
லிங்காவை பார்த்துட்டு ரஜினி விவசாய செய்றதுக்கு தண்ணி கொண்டுவருவார்ன்னு நம்புறதும்தான் உலகின் ஆகச்சிறந்த முட்டாள்தனம்...

யார் வேனும்னா அரசியலுக்கு வரலாம்தான்..அனால் படத்தை பார்த்துட்டு உணர்ச்சிவசபட்டு தலைமையேற்க அழைப்பதும் அறிவுடைமை இல்லை... அதேப்போல நடிகர்கள் எங்களுக்கு எதுவும் செய்யவில்லைன்னு எப்பபாரு புலம்பிட்டு இருப்பதும் தேவையில்லாதது..
நம் எல்லோரையும் போல அவர்களும் பணத்துக்காக உழைக்கிறார்கள்.. அவ்வளவே ..
முதலில் யாருக்கு ஓட்டுபோட்டீங்களோ அவங்கள கேள்வி கேளுங்கப்பா...

நம்ம பிரச்சினைக்கு வேற எவனா வேலையில்லாதவன் போராடட்டும்.. நம்ம வீட்ல உட்கார்ந்திருப்போம்ன்னு நினைச்சீங்கனா உங்க வருங்கால சந்ததியினர யாரும் காப்பாத்த முடியாது...

@Vikkranth

மீத்தேன் அழிவு திட்டத்தை நிறுத்த கோரி ஒரு கோடி கையெழுத்து இயக்க படிவம் அனைவரும்...

Posted: 17 Dec 2014 01:23 AM PST

மீத்தேன் அழிவு திட்டத்தை நிறுத்த கோரி ஒரு கோடி கையெழுத்து இயக்க படிவம் அனைவரும் இதை டவுன் லோ லோட் செய்து இதில் கையொப்பம் இட்டு அனுப்பவும்

மீத்தேன் அழிவு திட்டத்தை நிறுத்த படிவம் அனைவரிடமும் தகவலை பரப்பவும்

https://docs.google.com/…/15ajykYtHr_wZOEZfJ42jzGomJ4…/edit…

https://docs.google.com/…/1X_y-Gj3ky-XzIux-VtDACBMRd6…/edit…

@மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு - முகநூல்


குருடாயிலு. பேரல்.. 150 டாலர் வித்தப்ப பெட்ரோல் விலை 77 ரூவா.. . . இன்னிக்கு 60...

Posted: 17 Dec 2014 01:09 AM PST

குருடாயிலு. பேரல்.. 150 டாலர் வித்தப்ப பெட்ரோல் விலை 77 ரூவா..
.
.
இன்னிக்கு 60 டாலர் விக்கிரப்ப.. பெட்ரோல்.. 66 ரூவா....
.
எப்புடின்னே..?


சில பேர் இருக்கிறார்கள்.அடுத்தவர்கள் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்தாலே இவர்களுக்கு...

Posted: 17 Dec 2014 01:03 AM PST

சில பேர் இருக்கிறார்கள்.அடுத்தவர்கள் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்தாலே இவர்களுக்கு பொறுக்காது.

வாடகை வீட்டில் இருப்பவர்கள் இதை அனுபவித்து இருப்பார்கள்..ஹவுஸ் ஓனர் ஒரு போர்ஷனிலும் வாடகைக்கு இருப்பவர் இன்னொரு போர்ஷனிலும் இருந்தால் கேட்கவே வேண்டாம்.கடைக்கு போய் ஏதாவது டிவி கிரைண்டர் என்று வாங்கி விட்டால் போதும்...ஹவுஸ் ஓனர் தடாலென்று வாடகையை ஏற்றி விடுவார்..

அவர்கள் வீட்டு பிள்ளையை விட வாடகை தருபவரின் பிள்ளை நன்றாக படித்து நிறைய மார்குகள் வாங்கி விட்டால் போதும்...இரவு பத்து மணிக்கே விளைக்கை எல்லாம் அணைக்க சொல்லி ஆர்டர் பறக்கும்..

இப்படி அடுத்தவர் சந்தோஷமாக இருப்பதையோ வாழ்வில் முன்னேறுவதையோ சிலரால் சகித்துக் கொள்ளவே முடிவதில்லை..

ஒரு ஜோக் நினைவிற்கு வருகிறது..

ஒரு கம்பெனி வளாகத்தில் இருக்கும் ஸ்டோர் ரூமில் ஸ்டோர் கீப்பர் ஒரு பழைய விளக்கைக் கண்டு பிடிக்கிறார்..தன் மேனேஜரிடம் கொண்டு வந்து காட்டுகிறார்..அதன் மேல் படிந்த தூசை துடைக்க கையை அதில் தேய்க்கும் போது ஒரு பூதம் வருகிறது..உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க ஒரு வாரம் ஆனந்தமாக ஊட்டியில் தங்கி செலவிடவேண்டும் என்று கேட்கிறார்..பூதமும் அப்ரூவ் செய்ய அவர் மறைந்து விட்டார்..இதைப் பார்த்த மேனேஜரின் காரியதரிசி தான் சிம்லா செல்லவேண்டும் என்று பூதத்திடம் கேட்க அவளும் மறைந்து விடுகிறாள்..

மேனேஜர் மட்டும் ஒன்றுமே கேட்காமல் இருக்க பூதம் கேட்கிறது" நீ ஏன் எதுவும் கேட்கவில்லை ..உனக்கு என்ன வேண்டும்?" என்று.

மேனேஜர் சொல்கிறார்"ஊட்டிக்கு போன ஸ்டோர் கீப்பரும் சிம்லாவுக்கு போன காரிய தரிசியும் இப்பவே இங்கே வரணும்"

இது எப்டி இருக்கு?

அடுத்தவர் சந்தோஷத்தைக் கெடுத்தால் எப்போதுமே நமக்கு சந்தோஷம் கிடைக்காது என்று புரிந்து கொள்ள வேண்டும்..இத்தகைய நபர்களை பார்த்து நாம் எரிச்சல் அடைந்தால் அவர்களின் எண்ணம் ஈடேற நாமே வழி ஏற்படுத்தி கொடுத்ததாகி விடும்..

#கொசுறு இந்த பொறாமைக் குணமும் நமக்கு ஈகுவல் தகுதி உடையவரிடம் தான் வருகிறது..
அம்பானி 20 ரோல்ஸ் ராய்ஸ் வைத்திருந்தால் அவரைப் பார்த்து பொறாமை வராது..அடுத்த வீட்டு அம்மானி தன் ஓட்டை டிவிஎஸ் 50 அ வித்துட்டு நானோ கார் வாங்கிட்டா போதும் டாப் டு பாட்டம் பத்திக்குமே..!

@Chelli Sreenivasan


உலகில் லட்சக்கணக்கான மரங்கள், அணில்கள் மூலம் தான் #தற்செயலாக நடப்படுகிறதாம். அண...

Posted: 16 Dec 2014 10:33 PM PST

உலகில் லட்சக்கணக்கான
மரங்கள், அணில்கள்
மூலம் தான்
#தற்செயலாக
நடப்படுகிறதாம்.

அணில்கள்
பழத்தை சாப்பிட்டு விட்டு, கொட்டைகளை பிறகு சாப்பிடலாம்
என்றெண்ணி மண்ணை தோண்டி மூடி வைக்குமாம். பிறகு, எங்கே மூடி வைத்தோம்
என்பது தெரியாமல்
விட்டு விடுமாம்...

@இளையராஜா

வேடிக்கை நமது வாடிக்கை:- அயல் நாட்டு பிரச்சனை என்று செஞ்சோலையை வேடிக்கை பார்த்த...

Posted: 16 Dec 2014 10:28 PM PST

வேடிக்கை நமது வாடிக்கை:-

அயல்
நாட்டு பிரச்சனை என்று செஞ்சோலையை வேடிக்கை பார்த்தவர்கள்
தான் பாலஸ்தீனத்துக்கு கண்ணீர் விட்டவர்கள்.

பாலஸ்தீனத்தை வேடிக்கை பார்த்தவர்கள்தான்
பெஷாவருக்கு கண்ணீரும்
விடுகிறார்கள்.

பெஷாவரை வேடிக்கை பார்த்துக்
கொண்டு இருப்பவர்கள்
நாளை ஓவென
கதறி அழலாம்.

@வெங்கடேஷ்

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தா...

Posted: 17 Dec 2014 04:17 AM PST

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.

தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.

'ஈ மெயிலா? எனக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே' என்றான் துடைக்க வந்தவன். 'கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லையா? ச்சே!' என்று அவனை அனுப்பி விட்டார்கள்.

வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 டாலர்கள் இருந்தன. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 டாலர் லாபம் கிடைத்தது. மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பனை. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.

இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்ப சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார்.

வியாபாரி, 'ஈமெயில் முகவரி இல்லை' என்று பதிலளிக்க, 'ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா..? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்…?' என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.

'அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைத்துக் கொண்டிருப்பேன்' என்றார் வியாபாரி...!

நீதி: வாய்ப்புக்கள் விலகும்போது கவலைபடாதே..எல்லாம் நன்மைக்கே என்று எண்ணி தொடர்ந்து முயற்சி செய்தால் மிகபெரிய வெற்றி உனக்காக காத்திருக்கும்...!

நன்றி: தினகரன்.


இந்தியாவின் அழகை பறைசாற்றும் படம்.

Posted: 16 Dec 2014 05:53 PM PST

இந்தியாவின் அழகை பறைசாற்றும் படம்.


தெரு தெருவா கூட்டுவது பொதுநல தொண்டு..அதை படம் பிடித்து காட்டுவதில் சுயநலம் உண்டு...

Posted: 16 Dec 2014 05:42 PM PST

தெரு தெருவா கூட்டுவது பொதுநல தொண்டு..அதை படம் பிடித்து காட்டுவதில் சுயநலம் உண்டு...!


Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


டிஸ்கவரியில் தமிழ் வந்துவிட்டது. தி ஹிந்து தமிழ் வந்துவிட்டது. ஆப்பில் போனில்...

Posted: 17 Dec 2014 08:23 AM PST

டிஸ்கவரியில்
தமிழ் வந்துவிட்டது.

தி ஹிந்து
தமிழ் வந்துவிட்டது.

ஆப்பில் போனில் கூட
தமிழ் வந்துவிட்டது.

தமிழன் நாக்கில் மட்டும்
தமிழ் வர மறுக்கிறது.

தமிழா திருந்து!

இனிய இரவாகட்டும் ...
...
@ Indupriya MP
...


இனி யாருக்காக காத்து நிற்பேன்..? என்ன தவறு செய்தோம் - இறைவா எங்களுக்கு ஏன் இந்த...

Posted: 17 Dec 2014 06:02 AM PST

இனி யாருக்காக காத்து நிற்பேன்..?
என்ன தவறு செய்தோம் - இறைவா
எங்களுக்கு ஏன் இந்த தண்டனை
ஐந்து வேளை வணங்கியதற்கு - இறைவா
எங்களுக்கு நீ கொடுத்த தண்டனை
என் கன்னத்தில்
முத்த ஈரம் காய்வதற்குள்
என் கைகளில்
ரத்த ஈரமாய் கொடுத்துவிட்டாய்..!
என் பூக்கள்
மொட்டு விட்டு மலர்வதற்குள்
என் தோட்டத்தில்
சுட்டு போட்டு உதிர்த்துவிட்டாய்..!
மதம்பிடித்த யானைகளே - நீங்கள்
வேதம் படித்து என்ன பயன்..?
வேதம் ஒன்றை படித்திருந்தால் - உங்கள்
தீவிர வாதம் அன்றோ செத்திருக்கும்..!
பார்த்து பார்த்து செய்த சோறு
பானையிலே பழைய சோறாய் ஆயிடிச்சு
காத்து காத்து நிற்பேனே - ஆசையாய்
இனி யாருக்காக காத்து நிற்பேன்..?
-தினேஷ்

#IndiawithPakistan


Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


வெள்ளை என்பது அழகல்ல, நிறம்... ஆங்கிலம் என்பது அறிவல்ல, மொழி...!!

Posted: 17 Dec 2014 07:01 AM PST

வெள்ளை என்பது அழகல்ல, நிறம்...
ஆங்கிலம் என்பது அறிவல்ல, மொழி...!!

ஏன் கூட்டுகிறாய் விலையை? எதற்காக அடிக்கிறாய் குடிகாரர்கள் வயிறை?- மதுபான விலை உய...

Posted: 17 Dec 2014 04:55 AM PST

ஏன் கூட்டுகிறாய் விலையை? எதற்காக அடிக்கிறாய் குடிகாரர்கள் வயிறை?- மதுபான விலை உயர்வை எதிர்த்து சென்னையில் 'குடி'மகன்கள் உண்ணாவிரத போராட்டம்!


என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா

Posted: 16 Dec 2014 11:31 PM PST

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா


31 ஆவது முறையாக இடிந்து விழுந்த சென்னை விமானநிலைய மேற்கூரை.. அடேய் நீங்க என்னடா...

Posted: 16 Dec 2014 08:14 PM PST

31 ஆவது முறையாக இடிந்து விழுந்த சென்னை விமானநிலைய மேற்கூரை..

அடேய் நீங்க என்னடா பண்ணுறீங்க..
சும்மா எண்ணிக்கிட்டு இருக்கோம்.. பாஸ்.

சின்ன விஷயங்கள்!!! சிறந்த வாழ்க்கை!!! 1. இன்றே செய்து முடிக்கக் கூடியதை ‘நாளை’...

Posted: 16 Dec 2014 07:14 PM PST

சின்ன விஷயங்கள்!!! சிறந்த வாழ்க்கை!!!

1. இன்றே செய்து முடிக்கக் கூடியதை 'நாளை' என்று ஒத்திப் போடாதீர்கள்.

2. நீங்களே செய்துக் கொள்ளக்கூடிய விஷயத்திற்காக இன்னொருவரைத் தொந்தரவு செய்யாதீர்கள்.

3. பணம் கைக்கு வரும்முன்னே அதற்கான செலவுகளைச் செய்யாதீர்கள்.

4. விலை மலிவாய்க் கிடைக்கிறது என்பதற்காக, வேண்டாத ஒன்றை வாங்காதீர்கள்.

5. பசி, தாகத்தை விட சுயமரியாதை பெரிது என்பதை மறவாதீர்கள்.

6. எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைவாய்ச் சாப்பிடுங்கள்.

7. விரும்பிச் செய்யும் எதற்காகவும் பின்னால் வருத்தப்படாதீர்கள்.

8. கற்பனையில் உருவாகும் கவலைகளை எண்ணி நிஜத்தில் வருந்தாதீர்கள்.

9. மென்மையாக அணுகுங்கள், மேன்மையாக முடிவெடுங்கள்.

10. கோபமாயிருக்கும் போது, பேசுவதற்கு முன்னால் பத்து வரை எண்ணுங்கள். இன்னும் கோபமாயிருந்தால் நூறுவரை எண்ணுங்கள்..

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


மிகவும் அவசரம் .. இரத்தம் தேவை .. அறிய வகை இரத்தம் என்பதால் அதிகம் SHARE பன்னவு...

Posted: 17 Dec 2014 05:39 AM PST

மிகவும் அவசரம் ..
இரத்தம் தேவை ..

அறிய வகை இரத்தம் என்பதால் அதிகம் SHARE பன்னவும் ...

பெயர் ; Albert raj
வயசு ; 28

Blood group ; AB + VE
( AB + positive )
4 unit தேவை .

தேதி ; 18 / 12 / 2014 காலை 10 மணிக்குள் .

இடம் ; KMC மருத்துவமனை ..
( திருச்சி )

தொடர்புக்கு

Sri Vatsha ; 9381005254

வாழ்க !! வளமுடன் !!


கிராமங்களை நோக்கித் தேடுங்கள். கிரிக்கெட்டை தாண்டி ஏனைய விளையாட்டுகள் தெரிந்த அத...

Posted: 16 Dec 2014 06:45 PM PST

கிராமங்களை நோக்கித்
தேடுங்கள்.
கிரிக்கெட்டை தாண்டி ஏனைய
விளையாட்டுகள் தெரிந்த
அத்லெட்டிக் வீரர்கள் நிறையக்
கிடைப்பார்கள்.
கிராமங்களை நோக்கித்
தேடுங்கள்.
இயற்கை வேளாண்மை பற்றிய
தெளிவு கொண்ட விஞ்ஞானிகள்
நிறையக் கிடைப்பார்கள்.
கிராமங்களை நோக்கித்
தேடுங்கள். மதிய உணவிற்காக
மட்டுமே பள்ளிக்குச் சென்றும்,
அறிவியலில் சாதிக்கும்
குழந்தைகள் நிறையக்
கிடைப்பார்கள்.
கிராமங்களை நோக்கித்
தேடுங்கள். சிலம்பாட்டம் முதல்
கரகாட்டம் வரையிலான தமிழர்
கலைகள்
இரத்தத்திலேயே ஊறிப்போன
கலைஞர்கள் நிறையக்
கிடைப்பார்கள்.
என்று இந்த
நாடு கிராமங்களை நோக்கி தேட
ஆரம்பிக்கிறதோ..
என்று இந்த
நாடு கிராமங்களிலும் எல்லாம்
இருக்கிறது என்பதை நம்புகிறதோ..
என்று இந்த நாடு திறமையுள்ள
எல்லா மனிதர்களையும்
ஒரே மாதிரி அங்கீகரிக்கிறதோ..
அன்றே அறிவியல், கலை,
விளையாட்டு என
அத்தனை துறைகளிலும்
இதுவரை இல்லாத மாபெரும்
வளர்ச்சியைக் காண முடியும


என்ன பதில் சொல்ல முடியும் இந்த கேள்விகளை நம் பிள்ளைகள் கேட்டால்.!! # # # # நான்...

Posted: 16 Dec 2014 05:35 PM PST

என்ன பதில் சொல்ல முடியும்
இந்த கேள்விகளை நம்
பிள்ளைகள்
கேட்டால்.!!
#
#
#
#
நான் காட்டில்
வேலை செய்வதை கேவலமாகவும்
அதே கணினியில்
வேலை செய்வதை
கௌரவமாக நீ நினைப்பது ஏன்?
ஏர் பிடிக்க கற்றுக்கொடுக்க
மறுக்கும் நீ
எனக்கு கார்
பிடித்து கற்றுக்கொடுக்க
துடிப்பது ஏன்?
உழுது வாழ கற்றுக்கொடுப்பத
ை விட்டுவிட்டு உழைக்காமல்
வாழ்வது எப்படி என்று கற்றுத்தருவது ஏன் ?
ஆசா, பாசம், நேசம்,
அண்ணன்,தம்பி,அக்கா,
தங்கைகளுடன் பிறந்து வளர்ந்த
நீ என்னை மட்டும்
ஒற்றை பிள்ளையாய்
பெற்றது ஏன்?
தாத்தா பாட்டின்
கை பிடித்து நடக்க
கற்றுக்கொண்ட நீ
என்னை மட்டும்
பெரியோர்களுடன் சேரவிடாமல்
தவிர்ப்பது ஏன் ?
மணல் வீடு கட்டி விளையாடிய நீ
என்னை மட்டும்
பெரியவனாகியதும் மாட
மாளிகைதான் கட்ட வேண்டும்
என்று கட்டளை இடுவது ஏன்?
கம்மஞ்சசோறும், கேப்பையும்
கூழும் குடித்து வளர்ந்த நீ
எனக்கு மட்டும் "பெப்சியும்,
கோக்கையும் கொடுத்து என்
ரத்தத்தில்
விஷத்தை கலந்தது ஏன்?
மன்டியிட்டு மண்ணில்
விளையாடிய நீ
மார்பிலில்தான்
எங்களை விளையாடவேண்டும்
என்று சொல்லி முப்பதே வயதில்
மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு என்னை அனுப்ப
துடிப்பது ஏன் ?
அரச, ஆல, வேப்ப,
புங்கமரக்காற்றை
ஓசியில் சுவாசித்து வளர்ந்த நீ,
ஏசி காற்றை மட்டுமே நான்
சுவாசிக்க வேண்டும்
என்று நினைப்பது ஏன்?
நான் பண்ணையம்
பார்ப்பதை ஏளனமாகவும்,
பன்னாட்டு கம்பெனியில்
அடிமையாக வேலை பார்ப்பதை நீ
பெருமையாகவும்
நினைப்பது ஏன்?
நீர் நிலம் காற்று அத்தனையும் நீ
மாசுபடுத்தி விட்டு இவை அனைத்தயும்
காசு கொடுத்து வாங்க
துடிப்பது ஏன்?
எங்களுக்கு ஓர்
கனவு இருக்கும் ஆனால் அந்த
கனவை காவு வாங்கிவிட்டு நீ
காசை மட்டுமே சம்பாதித்து குவித்து வைப்பது ஏன் ?
இனியாவது நாம் சிந்திப்போமா?
நம்
பிள்ளைகளுக்கு நல்லது கெட்டதை சொல்லிக்கொடுக்க
ும் ஒரு நல்ல நண்பனாக இருக்க
கற்றுக்கொள்வோம்
.அதுவே நாம்
அவர்களுக்கு விட்டுச்செல்லும்
பெரிய சொத்து ஆகும்...
சுயநலம் கொண்ட மனிதர்களே !
நாம் வாழ்வது ஒரே ஒரு வாழ்க்கை,
அதை அர்த்தமுள்ளதாக
வாழ்ந்து விட்டு போவோம்..!