Saturday, 25 April 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


சுருளி அருவி!

Posted: 25 Apr 2015 09:49 PM PDT

சுருளி அருவி!


நேபாளத்தில் இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய கடவுளிடம் வேண்டுமாறு சிலர் பதிவிடுகின...

Posted: 25 Apr 2015 11:25 AM PDT

நேபாளத்தில்
இறந்தவர்களின் ஆத்மா
சாந்தியடைய
கடவுளிடம்
வேண்டுமாறு சிலர்
பதிவிடுகின்றனர்.

அவ்வுளவு
இரக்கமுடைய இறைவன்
அவர்களை ஏன் இப்படி
கொடுரமாக கொல்ல
வேண்டும் ??

இறந்த ஆயிரக்கணக்கான
பேருமா பூர்வ
ஜென்மத்துல பாவம்
பண்ணிட்டாங்க??

@விக்ராந்த்

பள்ளிக்கூடம் நடத்துறது தமிழ்நாட்டுல! ஆனால் தமிழ் பிறமொழி! இது தான் நம் நிலைமை! :(

Posted: 25 Apr 2015 10:53 AM PDT

பள்ளிக்கூடம் நடத்துறது
தமிழ்நாட்டுல!

ஆனால் தமிழ் பிறமொழி!

இது தான் நம் நிலைமை! :(


கணவன்மார்களின் கடைக்கண் பார்வை பட்டால் காஜல் அகர்வால் கூட விழுந்துடுவா நினைக்கிற...

Posted: 25 Apr 2015 07:59 AM PDT

கணவன்மார்களின்
கடைக்கண் பார்வை
பட்டால் காஜல் அகர்வால்
கூட விழுந்துடுவா
நினைக்கிறது இந்த
மனைவிமார்களின் உச்ச
பட்ச மூட நம்பிக்கை...

@Abdul vahab

சென்னைல நிலநடுக்கம் வந்தாலாவது மக்கள் முதல்வர் வீட்டை விட்டு வெளிய வருவாங்களா ??...

Posted: 25 Apr 2015 05:13 AM PDT

சென்னைல நிலநடுக்கம்
வந்தாலாவது மக்கள்
முதல்வர் வீட்டை விட்டு
வெளிய
வருவாங்களா ????

#நீலாம்பரி

@கவின்

லீவு விட்டதும் தாத்தா பாட்டி வீட்டுக்கு போறதுக்கும் ஒரு கொடுப்பினை வேணும்... போய...

Posted: 25 Apr 2015 05:00 AM PDT

லீவு விட்டதும் தாத்தா பாட்டி வீட்டுக்கு போறதுக்கும் ஒரு கொடுப்பினை வேணும்... போய் இறங்கினதும் அது வரைக்கும் வீட்டை சுத்தி ஓடிக்கிட்டிருந்த கோழில ஒன்னு மண்டைய போட்டிரும்..

அப்படியே நாட்டு கோழி சாறெடுத்து நல்லெண்ணை ஊத்தி தாளிச்சு குடல் தனியா, இரத்தம் தனியான்னு ஒரு பொரியல போடுவாய்ங்க... சப்பு கொட்டி சாப்ப்டுகிட்டே விவரம் இல்லாம 'சூப்பி எங்க அம்மத்தா'ன்னு கேட்டுருவோம்... ஐயையோ புள்ள ஆசை பட்டுருச்சுன்னு அடுத்த நாள் ஆட்டை கொன்னுருவாய்ங்க...

காலையில எந்திரிச்சதும் பல்லு விளக்காம 'பருத்தி பால்' கிடைக்கும்... அதை எதுல செஞ்சிருப்பாய்ங்கன்னே தெரியாது. நாக்குல தேங்காய் துருவலும் மண்ட வெல்லமும் தட்டுபடும், கொஞ்சமா ஏலக்காய் வாடையோட நுனி நாக்கும் தொண்டையும் சுட சுட பால் உள்ள இறங்கும்.

அப்படியே எந்திருச்சு காலாற நடந்து போய் வேப்பங்குச்சில பல்ல தேய்ச்சுட்டு.. கிணத்துல முங்கினா உள்ள இருக்கிற நண்டு, தவளை எல்லாம் விட்றுங்க விட்றுங்கன்னு கதறனும்... கண்ணெல்லாம் செவந்து, உடம்புல இருக்கிற மொத்த பலமும் போய் வெளியே வர படிக்கட்டுல ஏறுனா காலெல்லாம் நடுங்கும்..

தவந்துகிட்டே வீடு வந்து சேர்ந்தா உச்சி வெயில்ல குச்சி ஐஸ்.. ஜவ்வரிசி, சேமியா, பால் ஐஸ்ன்னு வெரைட்டியா உள்ள தள்ளிட்டு மறுபடி ஆடோ கோழியோ... ஒரு பிடி பிடிச்சிட்டு பாட்டி வச்சிருக்கிற வெத்தலைய வாங்கி ரோஜா பாக்கை போட்டம்ன்னா எப்போ தூங்குனோம், எங்க தூங்குனோம்ன்னு தெரியாது... இத்தனைக்கும் ஃபேன் இருக்காது, துளி காத்து இருக்காது...

டீவின்னா என்னன்னே தெரியாது... சாயந்தரமா எந்திருச்சு, சாவடி பக்கம் போனா பெரிசுங்க கிட்ட கதை கேக்கலாம்... ராமாயணம் சொல்றதா சொல்லிட்டு, கெட்ட வார்த்தை கதையா சொல்வாரு ஒரு தாத்தா... பாதி புரியும் பாதி புரியாது.. "என்ன மாப்ள முழிக்கிற.. நீயெல்லாம் நாளைக்கு என்ன தான் பண்ண போறியோன்னு".. கிண்டலும் தூக்கும்...

ஓரமா சில பெருசுங்க ஆடு புலி ஆட்டம் ஆட நமக்கு இருக்கவே இருக்கு... திருடன் போலீஸ், ஐஸ் பால், கபடி, பம்பரம்... எவ்ளோ நேரம் ஆடுனோம்ன்னு யோசிக்கிறதுக்குள்ள இருட்டிரும்.. வீட்டுக்கு போனா, கருப்பட்டி பனியாரமும் பால் கொலக்கட்டையும் அப்படியே சூடா ஒரு வர காப்பி... சொர்க்கம் யா...

இருக்கிற ஒரு விளக்கையும் அணைச்சுட்டு நிலா வெளிச்சத்துல தாத்தா சொல்ற விக்ரமாதித்யன் கதை... அவர் சொல்ற விதத்துல அவதார் எல்லாம் தோத்து போகும். எப்படா கதையை முடிப்பார்ன்னு அரண்டு மிரண்டு படுத்திருப்போம்.

இப்படி ஒவ்வொரு நாளும் திருவிழா தான், இதுல நடுவில மாரியம்மன் கோயில் திருவிழா வேற வரும்.. சேத்தாண்டி வேஷம், தாரை தப்பட்டை, தீச்சட்டி, ராட்டினம்... அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம்யா அது... 30 நாள் லீவு முடிஞ்சு தாத்தா வீட்ல இருந்து வீட்டுக்கு வந்தா கன்னம் புஷ்டியா இருக்கும்.

இப்போ பசங்க சொந்தகாரங்க வீட்டுக்கு போறது எல்லாம் குறைத்துவிட்டது.

@Sarav Urs


சமஸ்கிருதம் தெரியாதவர்கள் இந்துகளே இல்ல - சு.சாமி முதல் முறையாக உண்மைய பேசியிரு...

Posted: 25 Apr 2015 04:37 AM PDT

சமஸ்கிருதம்
தெரியாதவர்கள்
இந்துகளே இல்ல -
சு.சாமி

முதல் முறையாக உண்மைய பேசியிருக்கான் இவன்...

தெரியாமல் அவள் மேல் கைபட்டு விட்டது மன்னிக்கவும் என்றேன் இன்னொரு முறை மன்னிக்கட்...

Posted: 25 Apr 2015 03:51 AM PDT

தெரியாமல்
அவள் மேல்
கைபட்டு விட்டது
மன்னிக்கவும் என்றேன்
இன்னொரு முறை
மன்னிக்கட்டுமா
என்கிறாள்.

@காளிமுத்து


5 ஏக்கர் வைத்திருக்கும் ஒரு ஆள் மாதத்திற்கு ரூ.20,000 தமிழ்நாட்டின் எந்த மூலையில...

Posted: 25 Apr 2015 03:34 AM PDT

5 ஏக்கர் வைத்திருக்கும்
ஒரு ஆள் மாதத்திற்கு
ரூ.20,000 தமிழ்நாட்டின்
எந்த மூலையில்
இருந்தாலும் சம்பாதிக்க
வாய்ப்பு இருப்பின்,
விவசாயத்தை விட்டு
வெளியேறுவானா ?

லாபமே இல்லாத தொழிலை செய்து அவன் ஏன் கஷ்டப்பட வேண்டும்??

பிராமணர் அல்லாதவர்கள் ஆண்மையிருந்தால் கோவில் கருவரைக்குள் நுழைந்துபாருங்கள்.- சு...

Posted: 25 Apr 2015 03:11 AM PDT

பிராமணர் அல்லாதவர்கள் ஆண்மையிருந்தால்
கோவில் கருவரைக்குள்
நுழைந்துபாருங்கள்.-
சுப்ரமணிய சாமி

கருவறைக்குள்
முதன்முதலில்
நுழைந்தவன்
கொத்தனார்.
இரண்டாவது சாமி
சிலையை நேர்த்தியா
வைத்தானே அந்த
வேலையாட்கள்.
மூணாவதான் நீ
சு.சாமி!

@ஆர்.தியாகு

வெளிப்படையாக இருக்காதே , வேட்டி உறுவப்பட்டு ரோட்டுல் அலையவிடப்படுவாய்... @காளிம...

Posted: 24 Apr 2015 11:08 PM PDT

வெளிப்படையாக
இருக்காதே ,
வேட்டி உறுவப்பட்டு
ரோட்டுல்
அலையவிடப்படுவாய்...

@காளிமுத்து


சண்டை முடிந்த உடனே சமாதானம் ஆவதை குழந்தைகளிடமிருந்தே கற்றுக்கொள்ள வேண்டும்.! @க...

Posted: 24 Apr 2015 11:02 PM PDT

சண்டை முடிந்த உடனே
சமாதானம் ஆவதை
குழந்தைகளிடமிருந்தே
கற்றுக்கொள்ள
வேண்டும்.!

@காளிமுத்து


Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


"சிறுகதை" - துளிர். அந்த ஒற்றையடிச் செம்மண் பாதைக்குள் சைக்கிளைத் திருப்பிய குமா...

Posted: 25 Apr 2015 04:04 AM PDT

"சிறுகதை" - துளிர்.
அந்த ஒற்றையடிச் செம்மண் பாதைக்குள் சைக்கிளைத் திருப்பிய குமாரசாமிக்கு 65 வயதுக்கு மேலிருக்கலாமென்று அவருடைய தோற்றம் சொன்னது. உழைப்பினால் உரமேறிய தேகம், இந்த வயதிலும் மிதிவண்டியிலேயே எங்கும் சென்றுவரும் கடின உழைப்பாளி.
குமாரசாமி அந்தக் கிராமத்தின் விவசாயி. பரம்பரையான விவசாய நிலம் அவருக்கு இருந்தது. ஆணும், பெண்ணுமாய் இரு பிள்ளைகள்.
பெண்ணைப் பக்கத்து ஊரில் திருமணம் செய்துகொடுத்துவிட்டார். மகன் மோகனுக்கு சிறுவயதிலிருந்தே விவசாயத்தில் ஈடுபாடில்லை.
சேறு, சகதிக்குள் நான் வேலை செய்யமாட்டேன் என்று பிடிவாதமாய்ப் படித்து முடித்த கையோடு சிங்கப்பூரிலும் வேலை ஒன்றைத் தேடிக்கொண்டு சென்றுவிட்டான்.
மகனிடம் தன்னுடைய ஆசையைக் கூற மனமில்லாமல் பேசாது இருந்துவிட்டார் குமாரசாமி.
இப்போது அவரால் முன்னைப் போல் அதிகமாக கழனியில் வேலைசெய்ய முடியவில்லை. தள்ளாமை, யாருக்கு உழைக்கவேண்டுமென்ற வெறுமை அவரை நிலத்தை விற்றுவிடலாமென்ற முடிவுக்கு வரவைத்தது. மனைவியின் கெஞ்சலையும் பொருட்படுத்தாமல் டவுனிலிருந்த ரியல் எஸ்டேட்காரரிடம் நிலத்தை வந்து பார்க்குமாறு சொல்லிவிட்டுத் தான் இப்போது திரும்பிக்கொண்டிருக்கிறார்.
அந்தச் செம்மண் சாலைக்குள் திரும்பியதும் கண்ணில்படுவது அவரின் வயல்தான். அறுப்பு முடிந்த வயல் அடுத்த நடுதலுக்காய்க் காத்துக்கிடந்தது. கரகரவென்று கண்ணில் நீர் சொரிய ஆரம்பிக்க, சைக்கிளை விட்டிறங்கி மேல்துண்டால் கண்களைத் துடைத்துவிட்டு, வயலைப் பார்த்தபடியே வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
எதிரில் வரும் தணிகாசலத்தைப் பார்த்துவிட்டு என்ன இவ்வளவு தூரம் வந்திருக்கே தம்பி என்று கேட்டதும்,
அண்ணே உங்க வீட்டுக்குத் தான் போய்ட்டு வாறேன் இவன் என்னோட அண்ணன் பையன் கதிரவன்.. பட்டணத்துல படிச்சுப் போட்டு வயக்காட்டுல வேலை செய்யப் போறானாம்.
உங்களுக்கே தெரியும் நானே குத்தகை நிலத்துல வாழ்க்கையை ஓட்டுறவன். திடுதிப்புன்னு நிலத்துக்கு எங்க போக.. அதாண்ணே உங்க நினைப்பு வந்திச்சு உங்களுக்கும் தள்ளாமை. இவ்வளவு காலம் நமக்குச் சோறு போட்ட தாய்பூமி. அவளைக் காயப்போடாம, என் அண்ணன் பையனுக்கு குத்தகைக்குக் குடுத்திடுங்கண்ணே..
அவனுக்கும் தொழில், உங்களுக்கும் வருமானம், அதுக்கும் மேலா, பெரிய படிப்பும் விவசாயத்துல படிச்ச இவனை போல பசங்களுக்கு நாம ஒரு சந்தர்ப்பத்தைக் குடுக்கலாமே. என்ன சொல்றீங்கண்ணே.
ஒரே மூச்சாய்ப் பேசி முடித்த தணிகாசலத்தைக் கண்கலங்கப் பார்த்த குமாரசாமி விருட்டென்று சைக்கிளையும் கைவிட்டுவிட்டு கதிரவனை வாஞ்சையாக அணைத்துக் கொண்டார்.
தம்பி, உன்னைப் போல இளம்பசங்க இந்தமாதிரி வயக்காட்டு வேலைக்கு வரணும். பரந்துபோய்க் கிடக்குது நிலம், நீச்சு. பயன்படுத்தத் தான் ஆளில்லாம.
இனி எனக்குக் கவலையில்லை. இந்த வயக்காடு என்னைக்கும் வறண்டுகிடக்காது என்ற நம்பிக்கை உன்னைப் பார்த்ததுக்குப் பிறகு வந்திருக்கு.
இது உன் சொந்த நிலம். நல்லாப் பார்த்துக்கோ. வியர்வை சிந்து. அன்னை உனக்கு பொன்னாய்த் தருவா. நாற்றை நட்டு நாட்டை உயர்த்து. சொல்லிக்கொண்டு ஒரு இளைஞனின் உற்சாகத்தோடு சைக்கிளை எடுக்கும் போது பொட்டென்று ஒரு மழைத்துளி அவர்மேல் விழுந்தது.
இப்போதும் கண்ணில் நீர்.. ஆனால் அது துக்கத்தினால் அல்ல!
இன்றைய சில இளைஞர்கள் விவசாயம் பக்கம் தங்கள் கவனம் திருப்பி இருப்பது நாளைய விடியலுக்கான புது துளிர்.

நன்றி : புவனேஷ் மகேந்திரன்

பா விவேக்

நோயற்ற வாழ்விற்கு 30 குறிப்புகள்..... 1. தண்ணீர் நிறைய குடியுங்கள். 2. காலை உணவ...

Posted: 24 Apr 2015 06:45 PM PDT

நோயற்ற வாழ்விற்கு 30 குறிப்புகள்.....

1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.
2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.
3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.
4. உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.
5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.
6. நிறைய புத்தகம் படியுங்கள்.
7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.
8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.
9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள்.அவர்கள் பயணிக்கும் /மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.
11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.
12. உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.
13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.
14. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.
15. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.
16. கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.
17. வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.
18. எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
19. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும்,பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
20. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.
21. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும்,வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.
22. மன்னிக்கப் பழகுங்கள்.
23. 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.
24. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.
25. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.
26. உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.
27. ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.
29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ,நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.
30. எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.

நன்றி : புவனேஷ் மகேந்திரன்

பா விவேக்

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


எறும்பு நினைச்சா யார் காதை வேணும்னாலும் கடிக்கலாம். யார் நினைச்சாலும் எறும்பு க...

Posted: 25 Apr 2015 09:03 AM PDT

எறும்பு நினைச்சா
யார் காதை வேணும்னாலும்
கடிக்கலாம்.
யார் நினைச்சாலும்
எறும்பு காதை
கடிக்க முடியுமா?

Posted: 25 Apr 2015 08:30 AM PDT


இது உண்மையா

Posted: 25 Apr 2015 07:30 AM PDT

இது உண்மையா


Posted: 25 Apr 2015 07:24 AM PDT


Posted: 25 Apr 2015 06:47 AM PDT


Posted: 25 Apr 2015 06:00 AM PDT


பஸ்சு மேலே நாம ஏறலாம்...தப்பில்ல... பஸ்சு நம்ம மேல ஏறினால்....நாம தப்புவமா...???

Posted: 25 Apr 2015 05:03 AM PDT

பஸ்சு மேலே நாம ஏறலாம்...தப்பில்ல...

பஸ்சு நம்ம மேல ஏறினால்....நாம தப்புவமா...???

பெண்ணின் சேலையை உருவுவதற்க்கும் உழவனிடமிருந்து, நிலத்தை பிடுங்குவதற்கும் ஏதாவது...

Posted: 25 Apr 2015 04:56 AM PDT

பெண்ணின் சேலையை உருவுவதற்க்கும் உழவனிடமிருந்து,
நிலத்தை பிடுங்குவதற்கும் ஏதாவது வித்தியாசம் உள்ளதா?????


என்னையும் ,என் விவசாய நிலங்களையும் விற்று அமெரிக்கா சென்ற மகனே என் கடைசி செங்கல...

Posted: 25 Apr 2015 03:56 AM PDT

என்னையும் ,என் விவசாய நிலங்களையும் விற்று அமெரிக்கா சென்ற மகனே

என் கடைசி செங்கலும் உதிரும் முன் உன்னை காண ஆசை...


Posted: 25 Apr 2015 03:23 AM PDT


Posted: 25 Apr 2015 01:56 AM PDT


டோனிக்கு காதலை தெரிவித்த பெண் ! வெட்கப்பட்ட டோனி! வீடியோ

Posted: 25 Apr 2015 01:32 AM PDT

டோனிக்கு காதலை தெரிவித்த பெண் ! வெட்கப்பட்ட டோனி! வீடியோ


டோனிக்கு காதலை தெரிவித்த பெண் ! வெட்கப்பட்ட டோனி! வீடியோ
www.indiasian.com
Dhoni In Live Match

பல்லு வலின்னா பல்ல பிடுங்கலாம்............ கண்ணு வலின்னா கண்ண பிடுங்க முடியுமா?

Posted: 25 Apr 2015 01:03 AM PDT

பல்லு வலின்னா

பல்ல பிடுங்கலாம்............

கண்ணு வலின்னா

கண்ண பிடுங்க முடியுமா?

ஐயோ இப்படியுமா ? ஓர் அதிர்ச்சித் தகவல்..மேட்டுப்பாளையம் வனபத்திரகாளியம்மன் கோவி...

Posted: 25 Apr 2015 12:25 AM PDT

ஐயோ இப்படியுமா ?

ஓர் அதிர்ச்சித் தகவல்..மேட்டுப்பாளையம் வனபத்திரகாளியம்மன் கோவிலுக்கு செல்பவர்கள் ஆற்றில் குளிக்க வேண்டாம் என வேண்டுகிறோம்.காரணம் அங்குள்ள சிலர் திட்டமிட்டு நடு ஆறு வரை சென்று குளிப்பவர்களை நீருக்கடியில் இழுத்து,கால்களைக் கட்டி பாறையிடுக்குகளில் திணித்து விடுகின்றனர்.பின்னர் காணமல் போனவர்களை நீருக்கடியில் தேடித் தருவதாக பேரம் பேசுகின்றனர்.ரூ.25000க்கும் குறையாமல் மனசாட்சியின்றி வாங்குகின்றனர்.பின்னர்,இருள் கவியும் நேரத்தில் ஒளித்து வைத்த இடத்திலிருந்து பிணமாக மீட்டு வருகின்றனர்.இதற்கு பல குழுக்கள் உள்ளார்கள்.எனவே,குழந்தைகள்,இளைஞர்கள் மிக கவனமாக இருக்க வேண்டுகிறோம்.


ரமேசுதான் டீச்சர் எங்கள கேலி செஞ்சான்...,அவனுக்கு பனிஸ்மென்ட் கொடுக்கிறவர நாங்க...

Posted: 24 Apr 2015 11:56 PM PDT

ரமேசுதான் டீச்சர் எங்கள கேலி செஞ்சான்...,அவனுக்கு பனிஸ்மென்ட் கொடுக்கிறவர நாங்க கிளாஸ்குள்ள வரமாட்டோம்...


கிழவனுடன் கவர்ச்சி உடையில் இலியானா அதிர்ச்சி வீடியோ

Posted: 24 Apr 2015 10:34 PM PDT

கிழவனுடன் கவர்ச்சி உடையில் இலியானா அதிர்ச்சி வீடியோ


கிழவனுடன் கவர்ச்சி உடையில் இலியானா அதிர்ச்சி வீடியோ
www.indiasian.com
leana DCruz pretty Dress PhotoShoot Party HD

உச்சிவெயிலில் ஒத்தபனை...

Posted: 24 Apr 2015 10:00 PM PDT

உச்சிவெயிலில் ஒத்தபனை...


மாஸ்

Posted: 24 Apr 2015 09:55 PM PDT

மாஸ்



எம்மை பெற்றவர்கள் மனம் வெறுத்து சாபமிடாத வாழ்க்கையை வாழ்ந்து விட வேண்டும் கடைசி...

Posted: 24 Apr 2015 09:43 PM PDT

எம்மை பெற்றவர்கள் மனம் வெறுத்து சாபமிடாத வாழ்க்கையை வாழ்ந்து விட வேண்டும் கடைசி வரை ...

Posted: 24 Apr 2015 09:32 PM PDT


" கண்ணா.... நல்லாக் கேட்டுக்க..... ஃபிகரோட கடல் மணலில் வீடு கட்டி விளையாடினதோட அ...

Posted: 24 Apr 2015 09:03 PM PDT

" கண்ணா.... நல்லாக் கேட்டுக்க..... ஃபிகரோட கடல் மணலில் வீடு கட்டி விளையாடினதோட அருமை, ஃபிகரோட அண்ணன் 'வூடு கட்டி' அடிக்கும் போது தான் தெரியும்! ஸோ நீ உஷாரா இரு தம்பி!

Posted: 24 Apr 2015 09:01 PM PDT


யாரெல்லாம் எங்க வீட்டுக்கு மீன் கொழம்பு சாப்பிட வரீங்க ?

Posted: 24 Apr 2015 08:00 PM PDT

யாரெல்லாம் எங்க வீட்டுக்கு மீன் கொழம்பு சாப்பிட வரீங்க ?


உங்களுக்கெல்லாம் தூக்கம் வரலயாப்பா ?

Posted: 24 Apr 2015 06:00 PM PDT

உங்களுக்கெல்லாம் தூக்கம் வரலயாப்பா ?


கணவ‌ன் தேவை கணவன் தேவை என விளம்பரம் கொடுத்தாள் ஒரு பெண். "என் கணவனை எடுத்துக்...

Posted: 24 Apr 2015 05:03 PM PDT

கணவ‌ன் தேவை

கணவன் தேவை என விளம்பரம் கொடுத்தாள் ஒரு பெண்.

"என் கணவனை எடுத்துக் கொள்" என பல நூறு கடிதங்கள் வந்தது.

வெளியூர் போயிட்டு வீடு வந்து சேர்ந்தபோது, எல்லாரும் நான் என்ன வாங்கிட்டு வந்துரு...

Posted: 24 Apr 2015 04:00 PM PDT

வெளியூர் போயிட்டு வீடு வந்து சேர்ந்தபோது, எல்லாரும் நான் என்ன வாங்கிட்டு வந்துருக்கேன்னு பேக்க திறந்து பாக்குறாங்க.. அம்மா மட்டும் பேக்ல இருக்குற அழுக்கு துணிய எடுக்குறாங்க..

அம்மாவின் உலகம் ரொம்ப சின்னது..


அப்பாவும், மகளும் உணவு மேஜையில் உட்கார்ந்திருந்தார்கள். அம்மா சுட்டு வந்த தோசை த...

Posted: 24 Apr 2015 03:01 PM PDT

அப்பாவும், மகளும் உணவு மேஜையில் உட்கார்ந்திருந்தார்கள்.
அம்மா சுட்டு வந்த தோசை தீய்ந்திருந்தது.
"நல்ல முறுகலா இருக்கே" என்று ரசித்துச் சாப்பிட்டார் அப்பா.
அடுத்த தோசை சுட அம்மா அடுக்களைக்கு போனதும், மகள் கேட்டாள்,
"அப்பா தோசை தீய்ந்து போயிருக்கிறது, முறுகல் என்கிறீர்களே?".
அப்பா சொன்னார், "உன் அம்மாவுக்கு இன்று களைப்பாக இருந்திருக்கும்,
கவனக்குறைவால் நிகழ்ந்திருக்கும்.
ஒரு தோசை தீய்ந்து போனதை சுட்டிக்காட்டி அவள் மனம் தீய்ந்து போவதை நான் விரும்பவில்லை".
அடுத்த தோசை நிஜமாகவே முறுகலாக வந்தது.
குறைகளை நிறைகளாய்க் கொள்ளும்போது குறைகள் தாமாகவே மறைகின்றன.

வெற்றிலை... இது வெற்று இலை இல்லை... வெற்றி இலை... மனிதன் தோன்றிய காலத்தில் இருந...

Posted: 24 Apr 2015 02:30 PM PDT

வெற்றிலை... இது வெற்று இலை இல்லை... வெற்றி இலை...

மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலை பயன்பாட்டில் இருந்து வருகிறது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம். அரைடம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.

நரை, திரை, மூப்பு, சாக்காடு போன்றவற்றை நீக்கி உடலை என்றும் நோயின்றி காக்கும் தன்மை கொண்டதுதான் கற்ப மூலிகை.

கற்ப மூலிகைகளில் வெற்றிலையும் ஒன்று. வெற்றிலையை அறியாதவர் எவரும் இருக்க முடியாது. திருமணம் முதல் அனைத்து விசேஷ நிகழ்வுகளில் வெற்றிலை முக்கிய பங்கு வகிக்கிறது.

வெற்றிலை தொன்றுதொட்டு நாம் உபயோகித்து வரும் மருத்துவ மூலிகையாகும். நம் முன்னோர்களிடம் வெற்றிலை பயன்பாடு அதிகம் இருந்து வந்தது.

வெற்றிலையை உபயோகிக்கும் முறை:

வெற்றிலை பயன்படுத்தும்போது அதன் காம்பு, நுனி, நடுநரம்பு இவற்றை நீக்கி உபயோகிக்க வேண்டும்.

வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச் சத்தும், 0.8% கொழுப்புச் சத்தும் நிறைந்துள்ளது. இதில் கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி உள்ளது. கலோரி அளவு 44.

தற்போதைய ஆராய்ச்சியில், வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் பொருள் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது. வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். நன்கு பசி உண்டாகும். வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும்.

வெற்றிலைக்கு நாக இலை என்ற மற்றொரு பெயரும் உண்டு. பாம்பின் விஷத்தைக் கூட மாற்றும் தன்மை கொண்டதால் இதனை நாக இலை என்றும் அழைக்கின்றனர்.

நுரையீரல் பலப்பட:

வெற்றிலைச்சாறு 5 மி.லி. யுடன் இஞ்சிச் சாறு 5 மி.லி. கலந்து தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் அணுகாது. இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் அருந்தி வருவது நல்லது.

வயிற்றுவலி நீங்க:

2 தேக்கரண்டி சீரகத்தை மூன்று தேக்கரண்டி வெண்ணெய் விட்டு நன்கு மைபோல் அரைத்து, 5 வெற்றிலை எடுத்து காம்பு, நுனி, நடுநரம்பு நீக்கி வெற்றிலையின் பின்புறத்தில் அந்த கலவையைத் தடவி சட்டியிலிட்டு வதக்கி பின்பு 100 மிலி நீர்விட்டு நன்றாக கொதிக்க வைத்து ஆறியபின்பு வடிகட்டி கசாயத்தை அருந்தி வந்தால் வயிற்றுவலி நீங்கும். மாந்தம் குறையும்.

சர்க்கரையின் அளவு கட்டுப்பட:

வெற்றிலை – 4

வேப்பிலை – ஒரு கைப்பிடி

அருகம் புல் – ஒரு கைப்பிடி

சிறிது சிறிதாக நறுக்கி 500 மி.லி. தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து 150 மி.லி.யாக வற்ற வைத்து ஆறியவுடன் வடிகட்டி தினமும் மூன்று வேளை உணவுக்கு முன் 50 மி.லி. குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு சீராகும்.

வயிற்றுவலி:
இரண்டு தேக்கரண்டியளவு சீரகத்தினை மைபோல் அரைத்து மூன்று தேக்கரண்டி வெண்ணெயில் போட்டு கலக்கி 5 வெற்றிலையை எடுத்து அதன் பின் புறத்தில் இந்தக்கலவையை கனமாக தடவி, மருந்து தடவிய பாகத்தை சட்டியில் படும்படி வைத்து வதக்க வேண்டும். ஒவ்வொரு வெற்றிலையையும் வதக்கிய பின் ஒரு டம்ளர் தண்ணீரை விட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி அந்த கசாயத்தை ஒரு வேளை மட்டும் சாப்பிட்டால் வயிற்றுவலி நீங்கி விடும்.

தலைவலி:
வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.

தேள் விஷம்:
இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.

சர்க்கரை வியாதி:
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரை கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும்.

அல்சர்:
அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.

விஷக்கடி குணமாக:

உடலில் உள்ள விஷத்தன்மையை மாற்ற வெற்றிலை சிறந்த மருந்தாகும். சாதாரணமான வண்டுக்கடி, பூச்சிக்கடி இருந்தால் வெற்றிலையில் நல்ல மிளகு வைத்து மென்று சாறு இறக்கினால் விஷம் எளிதில் இறங்கும்.

இருமல் குறைய:

வெற்றிலைச் சாறுடன் கோரோசனை சேர்த்து சாப்பிட்டு வந்தால் தொண்டையில் சளிக்கட்டு, இருமல், மூச்சுத் திணறல் குணமாகும்.

அஜீரணக் கோளாறு அகல:

வெற்றிலை 2 அல்லது மூன்று எடுத்து அதனுடன் 5 நல்ல மிளகு சேர்த்து நீர்விட்டு காய்ச்சி குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் சிறுவர் களுக்கு உண்டாகும் செரியாமை நீங்கும். வெற்றிலை இரண்டு எடுத்து நன்றாக கழுவி அதில் சிறிது சீரகத்தையும், உப்பையும் சேர்த்து நன்கு மென்று விழுங்கி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.

தோல் வியாதிக்கு:

100 மி.லி. தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு சூடாக்கி வெற்றிலை சிவந்தவுடன் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு சொறி, சிரங்கு படை இவைகளுக்கு தடவி வந்தால், எளிதில் குணமாகும்.

தலைவலி நீங்க:

வெற்றிலைக்கு மயக்கத்தைப் போக்கும் குணமுண்டு. மூன்று வெற்றிலைகளை எடுத்து அதைக் கசக்கி சாறு எடுத்து கிடைக்கும் சாறில் கொஞ்சம் கற்பூரத்தைப் போட்டு நன்றாக குழைத்து, நெற்றிப் பகுதியில் பற்று போட்டால் தலைவலி பறந்துபோகும்.

தீப்புண் ஆற:

தீப்புண்ணின் மீது வெற்றிலையை வைத்து கட்டலாம்.

பிற உபயோகங்கள்:

வெற்றிலையை எண்ணெயில் நனைத்து விளக்கில் வாட்டி மார்பின்மேல் ஒட்டி வைக்க இருமல், மூச்சுத் திணறல், கடினமான சுவாசம், குழந்தைகளுக்கு இருமல் நீங்கும்.வெற்றிலைச் சாறுடன் சுண்ணாம்பு கலந்து தொண்டையில் தடவினால் தொண்டைக்கட்டு நீங்கும்.

தேள் கடி விஷம் இறங்க வெற்றிலைச் சாறை அருந்தியும், கடிவாயில் தடவி வந்தால் விஷம் எளிதில் நீங்கும். இரண்டு அல்லது மூன்று வெற்றிலையை எடுத்து சாறு பிழிந்து, அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து தினமும் அருந்தினால் நரம்புகள் பலப்படும். புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்குண்டு. வெற்றிலையை கற்ப முறைப்படி உபயோகித்து வந்தால் நல்ல ஆரோக்கியத்தைப் பெறலாம்.


அப்பாட ஒரு வழியா போயிட்டாங்க...

Posted: 24 Apr 2015 02:00 PM PDT

அப்பாட

ஒரு வழியா போயிட்டாங்க...


Posted: 24 Apr 2015 01:13 PM PDT




Vijay & Vadivel #DubsmashTamil