ருசியால் விளையும் தீமைகள் ஆரோக்கியத்தை மறந்துவிட்டு ருசிக்காகவும், நறுமணத்துக்க... Posted: 24 Mar 2015 10:00 AM PDT ருசியால் விளையும் தீமைகள் ஆரோக்கியத்தை மறந்துவிட்டு ருசிக்காகவும், நறுமணத்துக்காவும் உணவை சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள் மனிதர்கள். அவ்வாறு, ருசியை கொடுக்கும் அஜினமோட்டோவில் ஏராளமான தீமைகள் மறைந்துள்ளன என்ற உண்மை பலருக்கும் தெரிவதில்லை. இதன் வேதிப் பெயர் 'மோனோ சோடியம் குளூட்டமேட் Mono Sodium Glutamate என்பதாகும். அஜினமோட்டோ கலந்த உணவை உண்டால், குழந்தைகளுக்கு ஆபத்து. தினமும் மூன்று கிராமுக்கு மேல் அஜினமோட்டோ கலந்த உணவை உண்டால் பெரியவர்களுக்குக் கூட கழுத்துப் பிடிப்பு, தலைவலி, நெஞ்சுவலி, தலைசுற்றல், மூச்சுத் திணறல் வர வாய்ப்பு உள்ளது. அஜினோமோட்டோ கலந்த உணவுப் பொருட்களை அடிக்கடி சாப்பிடும் குழந்தைகளுக்கு, உடல் வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன் சுரப்பது வெகுவாகக் குறையும். இதனால், உடல் வளர்ச்சி தடைப்பட்டு உயரம் குறைகிறது. மேலும் இந்த வேதிப் பொருள் மூளையில் 'ஆர்குவேட் நுக்ளியஸ்' என்னும் பகுதியைப் பாதிப்பதால் உடல் எடை தாறுமாறாக அதிகரிக்கும். மூளை மட்டுமின்றி இரைப்பை, சிறுகுடல், கல்லீரல் போன்ற உறுப்புகளிலும், அழற்சியையும், சிறு இரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது. இதனால் குழந்தைகளுக்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாத வயிற்று வலி அடிக்கடி ஏற்படும். ஒவ்வாமை உள்ள ஒரு சிலருக்கு இந்த வேதிப்பொருள் கலந்த உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே மார்பில் எரிச்சலும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டு, உடல் வியர்க்க ஆரம்பித்துவிடும். பல்வேறு விளம்பரங்களில் அஜினோ மோட்டோ ஒரு தாவர உணவு என்றும் அதனால் ஆபத்து எதுவுமில்லை என்றும் தவறான தகவலைப் பரப்புகிறார்கள். தாவரங்களிலும் உயிரைப் பறிக்கும் நச்சுத் தன்மை உண்டு என்பதே உண்மை. பெரிய பெரிய நட்சத்திர ஹோட்டல்கள் எல்லாம் தங்கள் உணவு வகைகளின் சுவைகளில் ஒரு பிரத்யேகத் தன்மை இருப்பதாக பீற்றிக்கொண்டாலும், அதற்கான இரகசியங்கள் அஜினோ மோட்டோவில்தான் இருக்கிறது. பிறப்புக் கோளாறு, உறுப்புகளில் வளர்ச்சியற்ற தன்மை, தலைவலி, வாந்தி, செரிமானச் சிக்கல், கெட்ட கனவு, தூங்குவதில் சிக்கல், சோம்பல், மிதமாகும் இதயத்துடிப்பு, முடிகொட்டுதல், ஆஸ்துமா மற்றும் சர்க்கரை வியாதி போன்றவை அஜினோமோட்டோவை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். Relaxplzz |
:) Relaxplzz Posted: 24 Mar 2015 09:55 AM PDT |
நேயாளியின் மனைவியைத் தனியே அழைத்த மருத்துவர், "உங்க கணவருக்கு 'ஹார்ட்அட்டாக்' ஆ... Posted: 24 Mar 2015 09:50 AM PDT நேயாளியின் மனைவியைத் தனியே அழைத்த மருத்துவர், "உங்க கணவருக்கு 'ஹார்ட்அட்டாக்' ஆயிருக்கு, இனிமே ரெம்பக் கவனமா பார்த்துக்கணும், குறிப்பா அதிர்ச்சி தரும் விசயங்களைச் சொல்லக் கூடாது, இனி அவர் அதிக நாள் உயிர் வாழறது உங்க கையிலதான் இருக்கு" என்றார். போகும்போது கணவன் கோட்டான், ஆமா, "டாக்டர் உன்கிட்ட தனியா ஏதோ சொன்னாரே அது என்னது? கண்டிப்பா ஏதோ சீரியஸ் விசயமாத்தான் இருக்கும், மறைக்காம சொல்லு" "ஒண்ணுமில்ல, நீங்க சாகப்போறீங்களாம்" :O :O Relaxplzz |
விஜய், அஜித்தின் ரசிகராக இருப்பதைவிட டோனியின் ரசிகராக மாற முயலுங்கள்.. தலைமைப்பண... Posted: 24 Mar 2015 09:45 AM PDT விஜய், அஜித்தின் ரசிகராக இருப்பதைவிட டோனியின் ரசிகராக மாற முயலுங்கள்.. தலைமைப்பண்பும், சாதுர்யமும் வளரும்.. - Ambuja Simi  |
:) Relaxplzz Posted: 24 Mar 2015 09:30 AM PDT |
மனைவி - ஏன் மாமா, என்னைப் பத்தி நீங்க நாலு வார்த்தை பாராட்டுதலா சொல்லுங்களேன்...... Posted: 24 Mar 2015 09:10 AM PDT மனைவி - ஏன் மாமா, என்னைப் பத்தி நீங்க நாலு வார்த்தை பாராட்டுதலா சொல்லுங்களேன்...! கணவர் - "ABCDEFGHIJK." மனைவி - அப்டீன்னா என்ன மாமா...? கணவர் - "Adorable, beautiful, cute, delightful, elegant, fashionable, gorgeous, and hot." மனைவி - வாவ்.. சூப்பர்.. தேங்க்யூ.... ஆனா, IJK சொல்லவே இல்லை...! கணவர் - அதுவா.. "I'm just kidding!"! :P :P Relaxplzz |
கான்ஸ்டபிளா போயிட்டு இன்ஸ்பெக்டரா வரான், அலர்ட் ஆகிக்கடா ஏகாம்பரம் அலர்ட் ஆகிக்க... Posted: 24 Mar 2015 08:50 AM PDT கான்ஸ்டபிளா போயிட்டு இன்ஸ்பெக்டரா வரான், அலர்ட் ஆகிக்கடா ஏகாம்பரம் அலர்ட் ஆகிக்க.. #IndvsAus  |
60 செகண்டுகளில் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டவர்களை காப்பாற்றும் வீட்டு மருந்து இயற... Posted: 24 Mar 2015 08:10 AM PDT 60 செகண்டுகளில் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டவர்களை காப்பாற்றும் வீட்டு மருந்து இயற்கை மருத்துவர் ஜான் கிறிஸ்டோபரின் 35 வருடங்கள் மருத்துவ சேவையில், ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு பாதிக்கபட்டவர்கள் இந்த எளிய மருத்துவத்தால் ஒரு நபர் கூட இறந்ததில்லை என்று சொல்கிறார். ஆனால் பாதிக்கப்பட்டவரின் மூச்சு நின்றுவிடாமல் இருக்க வேண்டும். இவருடைய மிளகாய் பொடி தேநீர் 60 செகண்டுகளில் பழைய நிலைக்கு திரும்ப கொண்டு வந்து, சில நிமிடங்களில் பாதிக்கப்பட்டவர்கள் நடமாட தொடங்கிவிடுவார்கள் என்கிறார். அதனால் வீட்டில் மிளகாய் பொடி தயாராக வைத்திருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார். எவ்வாறு செய்வது: ஒரு டீஸ்பூன் மிளகாய்பொடியை மிதமான சுடு தண்ணீரில் நன்றாக கலக்கி குடிக்க வைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர் நினைவுடன் இருந்தால் சிறிதளவு பொடியை விரல்களில் எடுத்து நாக்கின் அடியில் வைக்க வேண்டும். இது ஒரு முதலுதவி மருந்து போன்றது. மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்ல வேண்டும். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்துவிடாமல் உதவும். இவ்வாறு செய்வதால் அவர்களை காப்பாற்றுவது உறுதி என்கிறார். எவ்வாறு வேலை செய்கிறது: காரமான மிளகாய் பொடியில் 90,000 கார யூனிட் (H.U. heat unit) இருப்பதாகவும், இதுவே ஹாரட் அட்டாக் ஏற்பட்டவரை திரும்பவும பழை நிலைக்கு கொண்டு வருவதாக கூறுகிறார். Relaxplzz |
கடந்த காலங்களினால் பாடங்கள் கற்காதவன் வருங்காலத்தினால் தண்டிக்கப்படுவான்...!! Posted: 24 Mar 2015 06:46 AM PDT |
அபூர்வ தருணத்தில் ....... Posted: 24 Mar 2015 06:40 AM PDT |
ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்துச்சாம் ......... இரண்டு பேர் எதிரெதிரே நின்ற... Posted: 24 Mar 2015 05:41 AM PDT ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்துச்சாம் ......... இரண்டு பேர் எதிரெதிரே நின்று கை கோர்த்து உயர்த்திப் பிடித்திருப்பார்கள். மற்றவர்கள் வரிசையாக அந்த கைகளுக்குள் நுழைந்து வளைந்து நெளிந்து ஓடுவார்கள். முதல்முறை நுழையும்போது ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்துச்சாம் என்று பாடுவார்கள். அடுத்தமுறை நுழையும்போது இரண்டு குடம் தண்ணி ஊத்தி ரெண்டு பூ பூத்துச்சாம் என்று பாடுவார்கள். இப்படியே 10 முறை பாடுவார்கள். பத்தாம் முறை பாடி முடிக்கும்போது கைகளுக்குள் யார் இருக்கிறார்களோ அவர்களை பிடித்து நிறுத்தி விடுவார்கள். அவர் அவுட். விளையாடிய அனுபவம் உண்டா ............. Relaxplzz "நினைவுகள்" |
:) Relaxplzz Posted: 24 Mar 2015 05:23 AM PDT |
ஆசைதான் எனக்கு இன்று காதலியாய் இருக்கும் நாளை என் மனைவியை வாரம் ஒரு முறையாவது அ... Posted: 24 Mar 2015 12:10 AM PDT ஆசைதான் எனக்கு இன்று காதலியாய் இருக்கும் நாளை என் மனைவியை வாரம் ஒரு முறையாவது அவளுக்கு முன் எழுந்து அவள் துங்கும் அழகை ரசிக்க ஆசை! தினமும் மலர் சூடி அவள் நெற்றியில் என் இதழ் சேர்க்க ஆசை! அனைவரும் இருக்கும் நேரத்தில் கள்ளவனாய் அவள் இடைக்கில்ல ஆசை யாரும் இல்லா நேரத்தில் முத்தத்தில் அவளை நனைக்க ஆசை குழந்தையாய் அவள் செய்யும் தவறுகளை ரசிக்க ஆசை யாரும் இல்லா சாலையில் அவள் கைபிடித்து நடக்க ஆசை முதன் முதலில் நான் வாங்கும் வாகனத்தில் அவளோடு வெகுதுரம் செல்ல ஆசை! மழை நேரத்தில் ஒரு குடைக்குள் அவளுடன் இருக்க ஆசை! மழையில் நனைந்த என் தலையை அவள் புடவை நுனி கொண்டு துடைக்க ஆசை...!! என் உயிர் சுமக்கும் அவளை அன்று என் கண்ணுக்குள் வைத்து பார்க்க ஆசை! என் உயிர் பிறந்த பின்பும் அவள் முகம் முதல் பார்க்க ஆசை இப்படியே 60 ஆண்டு காலம் அவளோடு நான் வாழ ஆசை 60 ஆன பின்பும் அவள் முகத்தில் விழுந்த ரேகையையும் கன்னத்தில் விழுந்த குழியையும் மூக்கு கண்ணாடி போட்டு ரசிக்க ஆசை உயிர் பிரியும் வேலையில் உன் முகம் பார்த்து உன் மடியில் உயிர் பிரிய ஆசை.... ♥ ♥ "படித்ததில் பிடித்தது" Relaxplzz |
பாஸ் பண்ணிட்டியா? " மோனே ரிசல்ட் வந்ததே.. பாஸ் பண்ணிட்டியா..?" " என்னோட ஹெட்ம... Posted: 23 Mar 2015 11:10 PM PDT பாஸ் பண்ணிட்டியா? " மோனே ரிசல்ட் வந்ததே.. பாஸ் பண்ணிட்டியா..?" " என்னோட ஹெட்மாஸ்டரோட பையன் பெயிலுப்பா.." " நீ பாஸ் பண்ணிட்டியா..? " அந்த டாக்டரோட பொண்ணில்ல... அவளும் பெயிலுப்பா..." " உங்கதைய சொல்லுப்பா..." " அந்த வக்கீலோட பையனும் பெயிலுப்பா.. ஆனா கலக்டரோட பொண்ணு பாஸுப்பா... " "டேய்.. மூதேவி... நீ பாஸா அத சொல்லு....? * * * * * * * * * * "நீங்க மட்டும் கலக்டராகாம நான் எப்படி பாஸ் பண்றது...? :P :P Relaxplzz |
தமிழ் மொழியின் முதிர்ச்சி.... மொழி ஆராய்ச்சி மற்றும் அதன் முதிர்ச்சி அளவுகளில்... Posted: 23 Mar 2015 11:00 PM PDT தமிழ் மொழியின் முதிர்ச்சி.... மொழி ஆராய்ச்சி மற்றும் அதன் முதிர்ச்சி அளவுகளில் பார்த்தால்... தமிழின் முதல் பிள்ளை கன்னட மொழி. தமிழின் இரண்டாம் பிள்ளை தெலுங்கு மொழி. மூன்றாம் பிள்ளை மலையாள மொழி. இது இல்லாமல் மராட்டிய மொழி தமிழுடன் ஒத்து இருக்கும்... இது போல தமிழுக்கு ஏகப்பட்ட பிள்ளைகள் இருக்கிறார்கள்..... இன்று தாயை எட்டி உதைக்கும் இந்தி மொழியின் தாய் வேண்டுமெனில் சமஸ்கிருத மொழியாக இருக்கலாம். ஆனால் இந்தி தமிழின் கொள்ளு பேரன்.. எவ்வாறு? இந்தி > சமஸ்கிருதம் > இந்தோ இரானி > இரானி > சுமரு மொழி.. மொழி அறிவு உள்ளவர்கள் அறிவார் சுமரு மொழியும் தமிழும் ஒத்த மொழிகள் என்று. இவ்வாறு பார்க்கையில்... இன்று நாம் பேசும் ஆங்கிலம் முதற்கொண்டு அனைத்து மொழிகளும் தமிழின் பிள்ளையோ அல்லது பேரனோ தான். நன்றி : தியாபாரதி அனலிக்கா Relaxplzz |
பழைய கஞ்சியை உண்டு, பிரியாணி அரிசியை அறுவடை செய்கிறான் விவசாயி.. - தங்கராஜ் Posted: 23 Mar 2015 10:50 PM PDT பழைய கஞ்சியை உண்டு, பிரியாணி அரிசியை அறுவடை செய்கிறான் விவசாயி.. - தங்கராஜ்  |
ஒருவர்; என்னாங்க புதுகார் வாங்கியிருக்கீங்களாம் கார் என்ன கம்பெனிங்க மற்றொருவர்... Posted: 23 Mar 2015 10:45 PM PDT ஒருவர்; என்னாங்க புதுகார் வாங்கியிருக்கீங்களாம் கார் என்ன கம்பெனிங்க மற்றொருவர்; சரியா ஞாபகம் இல்லைங்க "T" ல ஸ்டார்ட் ஆகும்ங்க ஒருவர்; பார்ரா அதிசயமான காரால்ல இருக்கு எங்க காரெல்லாம் பெட்ரோல்லதான் ஸ்டார்ட் ஆவுது ;-) ;-) |
தெலுங்கு மொழியின் எழுத்துக்களால் ஆன அருமையான ஓவியம்.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங... Posted: 23 Mar 2015 10:40 PM PDT தெலுங்கு மொழியின் எழுத்துக்களால் ஆன அருமையான ஓவியம்.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)  |
:) Relaxplzz Posted: 23 Mar 2015 10:29 PM PDT |
:P Relaxplzz Posted: 23 Mar 2015 10:24 PM PDT |
#திருநங்கை! இறைவனவன் படைப்பினிலே எதற்கிந்த வேறுபாடு, இதுவரையில் அறியவில்லை என்... Posted: 23 Mar 2015 10:10 PM PDT #திருநங்கை! இறைவனவன் படைப்பினிலே எதற்கிந்த வேறுபாடு, இதுவரையில் அறியவில்லை என்ன அவன் ஏற்பாடு! தலைவனென்று துதித்திருந்தோம் தருவதுவோ இடர்ப்பாடு, தயவிருந்தால் தருவானோ தாழ்ந்த இந்த நிலைப் பாடு! ஆணினமும் பெண்ணினமும் அவனியிலே இரண்டு வைத்தான், அதற்குமென்ன தகுதி கண்டான் அந்நிலையை ஏன் மறுத்தான்? ஊனமென்று வந்துவிட்டால் உயர்வுமென்ன தாழ்வுமென்ன? உற்றவரே சொல்லுங்களேன் உண்மையிதை உணருங்களேன்! என்ன பிழை செய்துவிட்டோம், எதற்கு நாங்கள் சபிக்கப் பட்டோம்? எண்ணி எண்ணிப் பார்க்கையிலே எங்கள் உள்ளம் உடைந்துவிட்டோம்! கண்ணினிமைப் போல நின்று காத்து வந்தபெற்றோரும் கதறியதைக் கேளாமல் கை விடுத்தார் என் செய்வோம்? அபஸ்வரமாய் ஒலிக்கும் இசை அழகெனவே மாறாதோ? அபசகுனம் என்று சொல்லும் அவல நிலை அகலாதோ? அல்லலுற்று அவதிப் படும் அந்தரமாம் நிலைதனிலே, அடுத்து என்ன நிகழுமென்று அபயக் குரல் எழுகிறதே! அனுதாபம் தேவையில்லை ஆதரவே போதுமையா, பரிதாபப் பேச்சுக்களால் பலன் ஏதும் இல்லையையா! பரிகாசம் செய்வோரும் பங்கமென்று பழிப்போரும், பிறவிப் பிழை இதுவெனவே புரிந்துணர மாட்டாரோ? உலகினிலே எமது நிலை உயர்வதற்கே உதவிடுவீர், உறவுகளே உமது அன்பை உவந்தெமக்கு அளித்திடுவீர்! ஊனமென்று ஏதுமில்லை எழுந்திடவே கை கொடுப்பீர், உயர்வை நாங்கள் அடைந்திடவே உறுதுணையாய் இருந்திடுவீர்! Relaxplzz |
சிங்கையின் தந்தை லீ குவான் இயூ அவர்களுக்கு தமிழ்த் தேசத்தின் வீரவணக்கம் !! இந்த... Posted: 23 Mar 2015 10:00 PM PDT சிங்கையின் தந்தை லீ குவான் இயூ அவர்களுக்கு தமிழ்த் தேசத்தின் வீரவணக்கம் !! இந்திய அரசு தமிழ் மொழிக்கு கொடுக்க மறுத்த ஆட்சி மொழித் தகுதியை கொடுத்தவர் லீ குவான் இயூ. தமிழ் மொழிக்கு உலக அரங்கில் அடையாளம் தேடித் தந்தவர். சிங்கப்பூரின் அஞ்சல்தலை நாணயங்களில் தமிழ் மொழிக்கு இடமளிக்க செய்தவர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தவர். இனப்படுகொலை செய்த இராஜபக்சேவை இந்திய தலைவர்கள் யாரும் கண்டிக்க முன்வராத நிலையில் அவனை ஒரு அரக்கன் , தமிழின விரோதி என்பதை உலகிற்கு உரக்கச் சொன்னவர் இன்று நம்மை விட்டு பிரிந்தார். இலட்சக் கணக்கான தமிழர்களை சிங்கப்பூர் நாட்டில் தலை நிமிர்ந்து வாழச் செய்தவர். சிங்கப்பூர் என்னும் சிறிய ஊரை உலகமே வியக்கும் நாடாக மாற்றிக் காட்டிய லீ குவான் இயூ அவர்களுக்கு உலகத் தமிழர்கள் வீரவணக்கத்தை உரித்தாக கடமைப்பட்டுள்ளனர். வாழ்க அன்னாரின் புகழ் ! - இராச்குமார் பழனிசாமி Relaxplzz |
இயற்கையை நேசிக்கும் இவருடைய நல் உள்ளத்திற்கு கோடி நன்றிகள்.. - ஆம் நாங்கள் தமிழ... Posted: 23 Mar 2015 09:50 PM PDT இயற்கையை நேசிக்கும் இவருடைய நல் உள்ளத்திற்கு கோடி நன்றிகள்.. - ஆம் நாங்கள் தமிழர்கள்  |
அந்த காலத்தில் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் ஒரு டிவி ஓடும் இந்த காலத்தில் ஒவ்வொரு... Posted: 23 Mar 2015 09:45 PM PDT அந்த காலத்தில் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் ஒரு டிவி ஓடும் இந்த காலத்தில் ஒவ்வொரு டிவியிலும் ஒரு பஞ்சாயத்து ஓடுது. - Ashok kumar |
ஹாஸ்டல்ல படிச்சவங்களுக்கு தெரியும் இந்த ட்ரெங்க் பெட்டி அருமை ....... Posted: 23 Mar 2015 09:39 PM PDT ஹாஸ்டல்ல படிச்சவங்களுக்கு தெரியும் இந்த ட்ரெங்க் பெட்டி அருமை ....... அந்தக் காலத்தில |
:) Relaxplzz Posted: 23 Mar 2015 09:29 PM PDT |
:P Relaxplzz Posted: 23 Mar 2015 09:20 PM PDT |
;-) Relaxplzz Posted: 23 Mar 2015 09:17 PM PDT |
ஒரு ஜப்பானிய சுற்றுலாப் பயணி மிகவும் ஆர்வத்துடன் சிங்காரச் சென்னையில் வந்து இறங்... Posted: 23 Mar 2015 09:10 PM PDT ஒரு ஜப்பானிய சுற்றுலாப் பயணி மிகவும் ஆர்வத்துடன் சிங்காரச் சென்னையில் வந்து இறங்கினார். அவர் ரஜனி நடித்த முத்து படத்தை மூன்று தடவையும் பாபா படத்தைப் பத்துத் தடவையும் எந்திரன் படத்தை ஏழு தடவையும் சிவாஜிபடத்தைப் பதினொரு தடவையும் பார்த்தவர். சென்னை விமான நிலையத்தில் இறங்கி ஒரு ஆட்டோவில் ஏறி சென்னை நகரை சுற்றிப்பார்க்கத் தன்னைக் கொண்டு செல்லும்படி ஓட்டுனரிடம் கூறினார். அவனும் அவரை குலுக்கோ குலுக்கு என்று குலுக்கிய படி ஆட்டோவை ஓட்டினான். முதலில் ஒரு ஹொண்டா அவர்களை முந்திச் சென்றது oh Honda, made in Japan… going faster என்றார் அந்த ஜப்பானியர். :) சிறிது நேரம் கழித்து ஒரு யமாஹா அவர்களை முந்திச் சென்றது . oh Yamaha, made in Japan… going faster என்றார் அந்த ஜப்பானியர். ;-) சிறிது நேரம் கழித்து இன்னொரு டொயோட்டா அவர்களை முந்திச் சென்றது. oh Toyota, made in Japan… going faster என்றார் அந்த ஜப்பானியர். :O பயணம் முடிந்தது கட்டணம் எவ்வளவு என்றார் ஜப்பானியர். ஆட்டோ ஓட்டுனர் ஆயிரம் ரூபா என்றார். ஐயோ அத்தனை தொகையா என்றார் ஜப்பானியர். ஓட்டுனர் ஆட்டோ மீட்டரைக் காட்டி meter…….made in India…..going very very faster….என்றான்..... :P :P Relaxplzz |
ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கும் நல்லெண்ணைய்.! எள்ளில் இருந்து ஆட்டி எடுக... Posted: 23 Mar 2015 08:59 PM PDT ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கும் நல்லெண்ணைய்.! எள்ளில் இருந்து ஆட்டி எடுக்கப்படும் நல்லெண்ணைய்யை அதிகம் பயன்படுத்துபவர்கள் நாம். இது வெளிப்பூச்சுக்கும், உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. தென்னிந்தியாவில் அதிகமாக சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணை இதுதான். இந்தியா, சீனா, துருக்கி போன்ற நாடுகளில் எள் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. எள்ளில் வெள்ளை எள், கறுப்பு எள், சிவப்பு எள் என்ற மூன்று வகை உண்டு. மேலும் காட்டெள், சிற்றெள், பேரெள் போன்ற வகைகளும் உண்டு. * நல்லெண்ணைய், சற்றுக் கசப்பும், சிறிது இனிப்பும், காரத் தன்மையும் கொண்டது. எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக் கூடியது. அதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழ உதவுகிறது. * நல்லெண்ணைய், சருமத்தின் ஈரப்பதத்தைச் சமப்படுத்துகிறது. உடல் வெப்பத்தைத் தணிக்கிறது. ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கிறது. * நல்லெண்ணைய்யை, 'இயற்கை நமக்கு அளித்த கொடை' என்று தாராளமாகச் சொல்லலாம். அளவில்லாமல் தொடரும் இதன் நன்மைகளே அதற்குக் காரணம். நல்லெண்ணைய், புத்திக்குத் தெளிவு, விழிகளுக்குக் குளிர்ச்சி, உடல் பூரிப்பு, வலிமை ஆகியவற்றைத் தருகிறது. கண் நோய், தலைக் கொதிப்பு, சொரி, சிரங்கு, புண் முதலியவற்றைத் தணிக்கிறது. * நல்லெண்ணைய்யை தினமும் இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால் உடல் பூரிக்கும். கோழிமுட்டை வெண்கருவுடன் நல்லெண்ணைய் கலந்து பருக்களின் மீது பூசி வந்தால் கட்டிகளின் வலி நீங்கும். * நல்லெண்ணைய் தேய்த்துக் குளித்து வந்தால், கண் சிவப்பு, கண் வலி, கண்ணில் நீர் வடிதல், மண்டைக் குத்தல் போன்றவை நீங்கும் என்று பாரம்பரிய மருத்துவர்கள் கூறுகின்றனர். Relaxplzz "நலமுடன் வாழ" - 3 |