Wednesday, 15 October 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


மனிதனின் எல்லா முன்னேற்றத்தையு ம் முடக்கவல்லது அவனுடைய சோம்பேறித்தனம். நன்றாக கவ...

Posted: 15 Oct 2014 07:58 PM PDT

மனிதனின்
எல்லா முன்னேற்றத்தையு
ம்
முடக்கவல்லது அவனுடைய
சோம்பேறித்தனம்.
நன்றாக கவனித்துப்
பாருங்கள் இந்த
உலகத்தில் உள்ள
எல்லா வெற்றியாளர்களுமே சுறுசுறுப்பானவர்கள்...!

@விஜய்

வேலைக்கு ஆள் எடுக்கறாங்களா இல்லே பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கறாங்களா??

Posted: 15 Oct 2014 07:27 PM PDT

வேலைக்கு ஆள்
எடுக்கறாங்களா இல்லே பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கறாங்களா??


ஒரு நாள் இரவு 12 மணி நான் உங்க வீட்டுக்கு கையில் காயத்தோட வாரேன். அப்போ உங்க வீட...

Posted: 15 Oct 2014 10:55 AM PDT

ஒரு நாள் இரவு 12
மணி நான் உங்க
வீட்டுக்கு கையில்
காயத்தோட வாரேன்.
அப்போ உங்க வீட்டுல
யாருமே இல்லை.
நான் வரும்போது கரண்ட்
கட்டாயிடுச்சு.
அதனால நாம
இரண்டு பேரும்
மாடிக்கு போய்
பேசிக்கிட்டு இருக்கம்.
அப்போ கீழே phone ரிங்
பன்னுது.
நீ மட்டும் கேண்டில்
எடுத்துட்டுப்
போய் போனை
அட்டன் பன்ர.

போன்ல எங்க வீட்டுல
இருந்து நான்
ஆக்சிடண்ட்ல
இறந்துட்டேன்
என்று சொல்ராங்க.

#அப்போ நீ மறுபடியும்
மேல
வருவியா மாட்டியா

அழகு தமிழ்நாடு! இடம் : தேங்காபட்டணம், குமரிமாவட்டம்

Posted: 15 Oct 2014 10:52 AM PDT

அழகு தமிழ்நாடு!

இடம் : தேங்காபட்டணம்,
குமரிமாவட்டம்


ஒரு கூட்டம் அதன் தலைவன்/தலைவி இல்லாத போது எப்படி நடந்துக் கொள்கிறது என்பதே, அந்த...

Posted: 15 Oct 2014 07:40 AM PDT

ஒரு கூட்டம் அதன் தலைவன்/தலைவி இல்லாத போது எப்படி நடந்துக் கொள்கிறது என்பதே, அந்த தலைவனின் தலைமைக்கும் வழிநடத்தலுக்குமானச் சான்று!

##????

- கனா காண்கிறேன்

தமிழகத்தின் வேறெந்த பகுதியை சேர்ந்தவர்களையும் விட மதுரை மண்ணை சேர்ந்தவர்களிடம் வ...

Posted: 15 Oct 2014 07:30 AM PDT

தமிழகத்தின் வேறெந்த பகுதியை சேர்ந்தவர்களையும் விட மதுரை மண்ணை சேர்ந்தவர்களிடம் வாயால் வடை சுடும் திறமை கொஞ்சம் அதிகம் தான் என்கிறேன்.

நீங்கெல்லாம் என்ன சொல்லுறீங்க!

யாதார்த்தை பேசுகிறேன்... வன்மத்தில் அல்ல...

அதே நேரத்தில் மதுரை மண்ணை சேர்ந்தவர்களிடம் பழகினால் (சாதி மாச்சரியங்களை தவிர்த்து) இருதய நோய் வராது... அவ்வளவு நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள்.... மிக இறுக்கமான சூழலையும் மென்மையாக்கி விடும் திறன் அவர்களிடம் உண்டு...

@Anthony Fernando

பெரும்பாலான தமிழ்ப்படங்களில் கன்டிப்பாக இடம்பெறும் ஒரு காட்சி,"ரிஜிஸ்டர் மேரேஜ்"...

Posted: 15 Oct 2014 07:00 AM PDT

பெரும்பாலான தமிழ்ப்படங்களில் கன்டிப்பாக இடம்பெறும் ஒரு காட்சி,"ரிஜிஸ்டர் மேரேஜ்".வேலை வெட்டி எதுவுமின்றி தறுதலையாய்த் திரியும் கதாநாயகன்,ஒரு காதல் ஜோடிக்கு,"ரிஜிஸ்டர் மேரேஜ்"-அதையும் பதிவாளர் அலுவலகத்திலேயே ,நண்பர்கள் புடைசூழ,மாலை,தாலி சகிதம்-செய்வித்து-காதலை வாழவைப்பதாகக் காட்டுவார்கள்.முன் வழுக்கை விழுந்த அந்த "ரிஜஸ்டராரும்" ரிஜிஸ்டரார் அலுவலகமுமே காதலின் கடைசித் துருப்புச்சீட்டாகவும் உருவகப்படுத்தப்பட்டிருக்கும்.மேலோட்டமாகப் பார்த்தால்,அந்தக் காட்சி-பயங்கர புல்லரிப்புகளை ஏற்படுத்தும்.

ஆனால் உண்மையில் அப்படி-பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்விக்க இயலாது.ஏதோ ஒரு மத,கலாச்சார வழக்கப்படி ஏற்கனவே நடந்த திருமணத்தை-அது சுயமரியாதைத் திருமணமாக இருந்தாலும்-நடந்த அந்த திருமணத்தைச் சட்டபடி பதிவு செய்ய மட்டுமே ரிஜிஸ்டராரல் முடியும்.அதற்கும் திருமணம் நடந்ததற்கான ஆதாரம்,மணமக்களில் எவரேனும் ஒருவருடைய-"இருப்பிடச் சான்றிற்கான" ஆதாரம்,வயதுச் சான்றிதழ்,சாதிச் சான்றிதழ்,சமயங்களில் கொஞ்சம் லஞ்சம்-போன்ற ஆதாரங்களைத் தந்தால் மட்டுமே,பதிவாளர் திருமணத்தைப் பதிவு செய்து சான்றிதழைத் தருவார்.எந்தச் சூழ்நிலையிலும் சினிமாவில் காட்டுவது போல,மாலையை தந்து கழுத்தில் போடச் சொல்லி கையைத் தட்ட மாட்டார்.

ஆகவே-சில குப்பை சினிமாக்களைக் கண்டு, "காதலர்கள்" ரிஜிஸ்டரார் ஆபிஸில் சென்று இன்ஸ்டன்ட் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நம்பி,ஏமாற வேண்டாமென்று,பொது நலன் கருதி கேட்டுக் கொள்கிறோம்.

(மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த "அலைபாயுதே" படத்தில் இந்த நடைமுறையை மிகச் சரியாக காட்டியிருப்பார்)

@G Durai Mohanaraju

எல்லாவகையான உணவுகளையும் தின்று பார்த்துவிட்டு மிகையூண் நோயாளராகி இறுதியில் கம்பு...

Posted: 15 Oct 2014 05:29 AM PDT

எல்லாவகையான உணவுகளையும் தின்று பார்த்துவிட்டு மிகையூண் நோயாளராகி இறுதியில் கம்பும் கேழ்வரகும் பழஞ்சோறும் நீராகாரமுமே சிறந்தது என்று உணர்ந்தோம்.

எல்லாவகையான உலோகங்களிலும் பண்ட பாத்திரங்கள் செய்துவிட்டு இறுதியில் மண்சட்டியும் மண்பானையுமே பக்க விளைவுகளற்றவை என்ற பக்குவத்திற்கு வந்திருக்கிறோம்.

எல்லாவகையான சொகுசுந்துகளிலும் நோகாது பயணித்துவிட்டு இறுதியில் கைகால் வீசி நடப்பதுதான் உயிராற்றலைக் காப்பது என்று தெரிந்துகொண்டோம்.

எல்லாவகையான செருப்புகளையும் அணிந்து பார்த்துவிட்டு இறுதியில் வெறுங்காலோடு நடப்பதே சுரப்பிகளை ஊக்குவது என்று கண்டுபிடித்திருக்கிறோம்.

எல்லாவகையான ஈருருளிகளையும் வாங்கி ஓட்டிப் பார்த்துவிட்டு இறுதியில் மிதிவண்டிதான் உடலுக்கும் சுற்றுச் சூழலுக்கும் ஏற்றது என்று புரிந்துகொண்டோம்.

எல்லாவகையான செயற்கை உரங்களையும் வேதிப்பொருள்களையும் பயன்படுத்தி மண்ணைக் கெடுத்துவிட்டு இறுதியில் இலைதழை உரங்களும் பசுஞ்சாணமும் பஞ்சகவ்யமுமே உரமூட்டுவது என்று அறிந்துகொண்டோம்.

எல்லாவகையான அறிவியல் கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்திவிட்ட நாம் புதிதாய் ஒரு விதையை உருவாக்க முடியாது என்பதில் திகைக்கிறோம்.

இப்படி நிறையவே சொல்லலாம். இதில் இன்னும் ஒன்றேயொன்று மீதமிருக்கிறது.

எல்லாவகையான மாட மாளிகைகளையும் ஆடம்பரக் கட்டடங்களையும் கட்டுவதற்காக மலைகளையும் மரங்களையும் விளைநிலங்களையும் ஆற்றையும் காற்றையும் வரம்பின்றி அழித்த நாம், இனி நம் மூதாதையர் வாழ்ந்ததுபோல் கீற்றுவேய்ந்த கூரைவீடுகள்தாம் சிறப்பு என்ற இடத்திற்கும் அவற்றில் வசிப்பதற்கும் வந்தேயாகவேண்டும். எல்லாவற்றுக்கும் இறுதியில் இது நடக்கும் !


கைலாஷ் சத்யார்த்தியை பற்றி நோபல் பரிசு பெறும் வரை வாய் திறக்காத தினமலர் இன்று ஒர...

Posted: 15 Oct 2014 05:13 AM PDT

கைலாஷ் சத்யார்த்தியை பற்றி நோபல் பரிசு பெறும் வரை வாய் திறக்காத தினமலர் இன்று ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.

கைலாஷ் சத்யார்த்தியின் மாவட்டத்திலேயே இன்னும் நிறைய குழந்தைத் தொழிலாளர்கள் இருக்காங்களாம்.

-ஒரு மனிதரைப் பற்றி எப்படி குறை கூறலாம் என உங்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும் தினமலர் ஆசிரியர்களே...

@சதீஷ் குமார் தேவகோட்டை

பிரதமர் மோடி, அமெரிக்கா செல்வதற்கு முன்னதாக அந்நாட்டின் மருந்துக் கம்பெனிகளை மகி...

Posted: 15 Oct 2014 05:08 AM PDT

பிரதமர் மோடி, அமெரிக்கா செல்வதற்கு முன்னதாக அந்நாட்டின் மருந்துக் கம்பெனிகளை மகிழ்விக்கும் விதமாக, தேசிய மருந்து விலை நிர்ணய அமைப்பின் 'விலைக் கட்டுப்பாட்டு அதிகாரத்தை' நீக்கினார்.
அதாவது, உயிர்காப்பு மருந்துகள் உள்ளிட்ட 108 வகையான மருந்துகள் மீதான விலைக் கட்டுப்பாட்டை மோடி அரசு ஒரேயடியாக ரத்து செய்துள்ளது.
இதைத் தொடர்ந்து உயிர்காக்கும் மருந்துகளின் விலை மிகக் கடுமையாக, 14 மடங்கு உயர்ந்துள்ளது.
புற்றுநோய் மருந்தின் விலை 8500 ரூபாயிலிருந்து 1,10,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இது உலகிலேயே எந்த நாட்டிலும் நடைபெறாத கொடூரமான அராஜகமாகும் என சுகாதாரத் துறையில் பணியாற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டணம் தெரிவித்துள்ளனர்.

விலை விபரம் :
_________________
₹ புற்றுநோய் மருந்தான 'கில்வெக்' மாத்திரை... ரூ. 8500லிருந்து 1 லட்சட்த்து 8000மாக உயர்வு. (உலகில் எந்த நாட்டிலும் இதுபோல் 14 மடங்கு உயர்ந்ததில்லை)
₹ ரத்தக் கொதிப்பிற்கான 'பிளேவிக்ஸ்' மாத்திரை... 147 ரூபாயிலிருந்து 1,615 ரூபாய் வரை உயர்வு.
₹ வெறிநாய்க் கடிக்கான ஊசியின் விலை... 2,670 ரூபாயிலிருந்து 7000 ரூபாய் வரை உயர்வு.
(இதேபோல்தான் 108 வகையான மருந்துகளுக்கும் விலைக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.)

இன்னொரு பக்கம்
______________________
மருந்து விலைகளின் கட்டுப்பாட்டை நீக்கியதைத் தொடர்ந்து...
₹ சன் பார்மா மற்றும் ரான்பாக்ஸி மருந்துக் கம்பெனிகளின் லாப விகிதம் 0.7 விழுக்காடு கூடியுள்ளது. இவைகளின் பங்குகளின் விலையும் 2 விழுக்காடு கூடியுள்ளது.
₹ டோரண்ட் மற்றும் லுர்ப்பின் மருந்துக் கம்பெனிகளின் லாபங்கள், முறையே 1.5 விழுக்காடும், 0.7 விழுக்காடும் அதிரித்துள்ளது.
₹ ஜிஎஸ்கே பார்மா மற்றும் டேவிஸ் லேப் ககம்பெனிகளின் பங்குகளின் விலை 1 விழுக்காடும் கிளென்மார்க் பங்கின் விலையும் கூடியுள்ளது.


பிரதமர் மோடி, அமெரிக்கா செல்வதற்கு முன்னதாக அந்நாட்டின் மருந்துக் கம்பெனிகளை மகி...

Posted: 15 Oct 2014 05:08 AM PDT

பிரதமர் மோடி, அமெரிக்கா செல்வதற்கு முன்னதாக அந்நாட்டின் மருந்துக் கம்பெனிகளை மகிழ்விக்கும் விதமாக, தேசிய மருந்து விலை நிர்ணய அமைப்பின் 'விலைக் கட்டுப்பாட்டு அதிகாரத்தை' நீக்கினார்.
அதாவது, உயிர்காப்பு மருந்துகள் உள்ளிட்ட 108 வகையான மருந்துகள் மீதான விலைக் கட்டுப்பாட்டை மோடி அரசு ஒரேயடியாக ரத்து செய்துள்ளது.
இதைத் தொடர்ந்து உயிர்காக்கும் மருந்துகளின் விலை மிகக் கடுமையாக, 14 மடங்கு உயர்ந்துள்ளது.
புற்றுநோய் மருந்தின் விலை 8500 ரூபாயிலிருந்து 1,10,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இது உலகிலேயே எந்த நாட்டிலும் நடைபெறாத கொடூரமான அராஜகமாகும் என சுகாதாரத் துறையில் பணியாற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டணம் தெரிவித்துள்ளனர்.

விலை விபரம் :
_________________
₹ புற்றுநோய் மருந்தான 'கில்வெக்' மாத்திரை... ரூ. 8500லிருந்து 1 லட்சட்த்து 8000மாக உயர்வு. (உலகில் எந்த நாட்டிலும் இதுபோல் 14 மடங்கு உயர்ந்ததில்லை)
₹ ரத்தக் கொதிப்பிற்கான 'பிளேவிக்ஸ்' மாத்திரை... 147 ரூபாயிலிருந்து 1,615 ரூபாய் வரை உயர்வு.
₹ வெறிநாய்க் கடிக்கான ஊசியின் விலை... 2,670 ரூபாயிலிருந்து 7000 ரூபாய் வரை உயர்வு.
(இதேபோல்தான் 108 வகையான மருந்துகளுக்கும் விலைக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.)

இன்னொரு பக்கம்
______________________
மருந்து விலைகளின் கட்டுப்பாட்டை நீக்கியதைத் தொடர்ந்து...
₹ சன் பார்மா மற்றும் ரான்பாக்ஸி மருந்துக் கம்பெனிகளின் லாப விகிதம் 0.7 விழுக்காடு கூடியுள்ளது. இவைகளின் பங்குகளின் விலையும் 2 விழுக்காடு கூடியுள்ளது.
₹ டோரண்ட் மற்றும் லுர்ப்பின் மருந்துக் கம்பெனிகளின் லாபங்கள், முறையே 1.5 விழுக்காடும், 0.7 விழுக்காடும் அதிரித்துள்ளது.
₹ ஜிஎஸ்கே பார்மா மற்றும் டேவிஸ் லேப் ககம்பெனிகளின் பங்குகளின் விலை 1 விழுக்காடும் கிளென்மார்க் பங்கின் விலையும் கூடியுள்ளது.


தமிழர்கள் இவ்வளவு பழமையானவர்களா? - முனைவர் தெ.தேவகலா ---------------------------...

Posted: 15 Oct 2014 03:45 AM PDT

தமிழர்கள் இவ்வளவு பழமையானவர்களா?
- முனைவர் தெ.தேவகலா
----------------------------------------------------------------------------
தமிழன் என்றாலே கீழானவன். தமிழ் மொழியோ மிகவும் கேவலமான கீழான மொழி என்று கூறப்பட்டு. தமிழும் தமிழரும் இழிவுபடுத்தப்பட்டு வருவதை நாம் நடைமுறையில் பார்க்கின்றோம். இதனால்தான் தமிழக அரசால் அர்ச்சகர் பயிற்சி பெற்ற 200க்கும் மேற்பட்ட தமிழின அர்ச்சகர்கள். அரசு கொடுத்த அர்ச்சகர் சான்றிதழுடன் 'அம்போ' என்று வெளியில் நிற்கின்றனர். தமிழர்கள் கட்டிய தமிழர் சமயக் கோவில்களுக்குள் தமிழுக்கும் இடமில்லை. தமிழனுக்கும் இடமில்லை. இப்படிப்பட்ட கொடுமையான காலத்தில் வாழும் நமக்கு. தமிழினம் மிகவும் பழமையான இனம். உலக மொழிகளில் மிகவும் பழமையான மொழி தமிழ் மொழி. உலக மொழிகளை ஆராய்ந்தால் தமிழ்ச் சொற்களும். பெயர்களும் வெவ்வேறு வடிவங்களில் அவற்றில் இருக்கின்றன எனும் புதிய ஆராய்ச்சிக் கருத்துகள் உண்மையில் நம்மை வியக்க வைக்கின்றன.

புதிய இந்த ஆய்வுக் கருத்துகளை நாம் அறிந்து கொள்ளும் முன். நம் நாட்டிலேயே மிகவும் பழமை வாய்ந்த சிந்துவெளிக்கும் பழந்தமிழருக்குமுள்ள நெருக்கமான உறவை அறிஞர்கள் எடுத்துக்காட்டியுள்ளனரே. இவற்றையாவது முதலில் தெரிந்து கொள்ள வேண்டாமா? அறிஞர்கள் கூறுவது என்ன என்பதைக் காண்போம்.

சிந்துவெளி நாகரிகம்:

சிந்துவெளி நாகரிகம் தமிழரின்/ திராவிடரின் நாகரிகம் என்பதை ஆய்வுகள் பல வெளிப்படுத்தி வருகின்றன.

நான்கு வேதங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒன்றுதான் சிந்துவெளி நாகரிகம் என்றும் அது ஆரியர்களுடையது என்றும் கருதுவோர் பலர் உள்ளனர். ஆனால். சிந்துவெளி நாகரிகம் பற்றிய சர். ஜான் மார்ஷல் செய்த ஆராய்ச்சிக் கருத்துகள் இதற்கு முரணாக உள்ளது.

சிந்துவெளி நாகரிகம் பற்றி அவர் கூறுவன:

1. ஆரியர் நகர வாழ்க்கை குறித்து அறியாதவர்கள். இதற்கு மாறாக மொஹன்சதாரோ. ஹரப்பாவில் உள்ள மக்கள் நகர வாழ்க்கையில் இருந்தனர். நன்கு வசதி பெற்ற செங்கல் வீடுகள் கட்டினர். கிணறு, குளியலறை, கழிவு நீர் வடிகால் உள்ள வீடுகளால் அவர்கள் நகரம் நிறைந்திருந்தது.
2. ரிக் வேதத்தில் இரும்பு பயன்பாட்டில் இருந்தமை அறியப்படுகிறது. சிந்துவெளியில் வெள்ளி உபயோகத்தில் இருந்தது. கற்களால் செய்யப்பட்ட பாத்திரங்கள் பயன்பாட்டில் இருந்தன. ஆனால் இரும்பு பயன்பாட்டில் இல்லை.
3. வேதங்கள் மூலம் வில், அம்பு, கோடாரி, ஈட்டி போன்ற ஆயுதங்களும் தலைக் கவசங்களும் பயன்பாட்டில் இருந்தமை அறியப்படுகிறது. சிந்துசமவெளியில் ஆயுதங்கள் இருந்தன. ஆனால் தற்காப்புக் கருவிகள் காணப்படவில்லை.
4. மீன் பற்றி வேதங்களில் அதிக அளவில் குறிப்பிடப்படவில்லை. சிந்து சமவெளியில் மீன் அதிக அளவில் உள்ளது.
5. வேதங்களில் குதிரைகள் பயன்பாட்டில் இருந்தமை சுட்டப்பட்டுள்ளது; சிந்துசமவெளியில் குதிரை பற்றிய ஆதாரம் கிடைக்கவில்லை.
6. வேதத்தில் பசுவிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது; பசுவிற்கு, சிந்துசமவெளியில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை; எருது முக்கிய இடம் பெற்றது.
7. வேதத்தில் புலி பற்றி சொல்லப்படவில்லை; யானை பற்றி மிகச் சிறிதளவே சொல்லப்பட்டுள்ளது. சிந்துவெளியில் இவை இரண்டும் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன.
8. சிந்துவெளி கடவுளர் கொம்புகளுடன் காட்டப்பட்டுள்ளனர்; ஆனால் வேதங்களில் அப்படி காணப்படவில்லை. (Sir John Marshall. Mohenjo-daro and the Indus Civilization.Vol.I. 1973. Pp.109- 112. Mr. I. Mahadevan. Indian Express. August 1994.)
9. சிந்துவெளியில் சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை வேதங்களில் இழிவாகச் சொல்லப்படுகின்றன.
10. சிந்துவெளியில் காணப்படும் களிமண் முத்திரையில் உள்ள வண்டிகளில் ஆரங்களுடன் கூடிய சக்கரங்கள் காணப்படவில்லை. ஆனால் வேதங்களில் குறிப்பிடப்படும் இரதங்களின் சக்கரங்கள் ஆரங்களுடன் உள்ளன. (Mr. I. Mahadevan. 'Review - An Encyclopaedia of the Indus Script' by Asco Parpola. Internation Journal of Dravidian linguistics. Vol.XXVI number 1. January 1997. P.110 )
11. சிந்துவெளியில் சுவத்திக (Swastik) அடையாளம் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றது. ஆனால் வேதங்களில் அதைப் பற்றிய குறிப்புகள் கூட காணப்படவில்லை.
12. சிந்துவெளியில் கடவுளைப் பெண்ணுருவில் கண்டு மிகவும் சிறப்பித்துள்ளனர். ஆனால் வேதங்களில் பெண்கள் மிகவும் குறைவான இடத்தையே பெற்றுள்ளனர்.

'சிந்துவெளி நாகரிகத்தை ஆராய்ச்சி செய்த மார்ஷல். ஹீராஸ். கமில்சுவலபில் மற்றும் இரஷ்ஷிய. பின்லாந்து. அமெரிக்க அறிஞர்கள் பலர் இது 'திராவிட நாகரிகம்' எனக் கூறியுள்ளனர்.

கணிப்பொறி ஆய்வு (Computer analysis) சிந்துவெளி மொழி அமைப்பு திராவிட மொழி அமைப்பே என்பதை உறுதிபடுத்தியுள்ளது என்கிறார் ஐராவதம் மகாதேவன். (Indian Express - Madras - 5 August 1994).

சிந்துவெளி மொழி குறித்து ஆழ்ந்து ஆய்வு செய்த அறிஞர் அஸ்கோ பர்ப்போலா இது திராவிட மொழி என்று விளக்குவது குறிப்பிடற்குரியது.

அண்மைக் காலங்களில். டாக்டர் ஆர். மதிவாணன். திரு. பூரணச்சந்திர ஜீவா ஆகியோர் சிந்துவெளி எழுத்துகள் தமிழே என்ற தம் ஆய்வு முடிவைத் தெரிவித்துள்ளனர்.

சிந்துவெளி நாகரிகம் திராவிடரின் நாகரிகம் என்று கூறும் ஐராவதம் மகாதேவன், சிந்துவெளியின் காலம் 'ரேடியோ கார்பன் ஆய்வுப்படி' (Radio carbon dating) கி.மு. 7000க்கு முற்பட்டது எனக் கூறியுள்ளார். (ndian Express - Madras - 5 August 1994)

Fr. ஹீராஸ் 'Studies in Proto - Indo - Mediterranean Culture' எனும் புத்தகத்தில் சிந்துவெளி திராவிட நாகரிகத்திற்கும் சுமேரிய, எகிப்திய நாகரிகங்களுக்கும் இடையேயுள்ள தொடர்புகளை விளக்கிச் செல்கிறார். சிந்துவெளிக்கும் சங்க இலக்கியத் தமிழருக்கும் உள்ள உறவை அவர் எடுத்துக்காட்டியிருப்பது குறிப்பிடற்குரியது. (Rev. Fr. Heras. Studies in Proto Indo Mediterranean Culture. Vol-I. Indian Historical Research Institute. Bombay. 1953). 1953இல் வெளியிடப்பட்டுள்ள அவருடைய Studies in Proto Indo Mediterranean Culture' எனும் இந்த நூலுக்குப் பின் சிந்துவெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அறிஞர்கள் பலரும் சிந்துவெளிக்கும் பழந் தமிழருக்கும் உள்ள நெருக்கமான தொடர்புகளைப் பல கோணங்களிலும் எடுத்துக்காட்டி வருகின்றனர்.

தமிழர்கள் உலகில் எங்கு சென்றாலும் தம்முடைய தொன்மையான வாழ்விடமான பழந்தமிழக ஊர்ப் பெயர்களையும் தமிழ்ச் சொற்களையும் வழிபாட்டையும், ஆன்மீகக் கருத்துகளையும் எடுத்துச் சென்று கொண்டேதான் இருக்கின்றனர் என்பதை அவர்கள் பரவியுள்ள நாடுகளிலும் இடங்களிலும் உள்ள பெயர்களும் சொற்களும் வெளிப்படுத்துவதை. 'சொல்லாய்வுஃ. 'பெயராய்வுஃகள் வெளிப்படுத்துகின்றன.

சிந்துவெளி மக்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வந்துள்ளனர் எனும் கருத்து அறிஞர்கள் பலராலும் கூறப்பட்டு வருகின்றபோதிலும் பூம்புகார் குறித்த ஆய்வு தமிழர்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரவில்லை. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதாய் அமைந்துள்ளது.

பூம்புகார் ஆய்வுகள் குறித்து 'குமரிக்கண்டம்' என்னும் தம் நூலில் வெளியிட்டுள்ள ஆசிரியர் ம.சோ. விக்டர் அவர்களின் எழுத்துகளும் உலக நாடுகளில் காணப்படும் தமிழ்ப் பெயர்களையும் தமிழ்ச் சொற்களையும் எடுத்துக்காட்டும் ஆசிரியர் ஆர். பாலகிருஷ்ணனின் ஆய்வுகளும் தமிழின், தமிழரின் தொன்மையை அறிந்து கொள்ளப் பெருந் துணை புரிகின்றன. அவர்களுடைய ஆய்வுகளை முழுவதும் படிப்பதற்கு முன்னோட்டமாக அவர்கள் எழுதியவற்றிலிருந்து சில பகுதிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பாலகிருஷ்ணன் (முன்னாள் ஒரிசா மாவட்ட ஆட்சியர்) அவர்கள் 'சிந்துசமவெளி நாகரிகமும் சங்கத் தமிழ் இலக்கியமும்ஃ எனும் தலைப்பில் அளித்த ஆய்வுக் கட்டுரையிலிருந்து சில பகுதிகள் வருமாறு:

1. சிந்துவெளி மற்றும் ஹரப்பாவில் ''கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகம்"

புலப் பெயர்வுகளும் ஊர்ப் பெயர்களும்

'நாகரிகங்கள் தோன்றுவதற்கு முன்பே தோன்றிவிட்ட ஊர்ப் பெயர்கள், அந்நாகரிகங்கள் பல்வேறு காரணங்களால் நலிவடைந்து வீழ்ந்த பின்னும் பிழைத்திருக்கின்றன. காலப் போக்கில் மொழி மாற்றங்கள்,புலப் பெயர்வுகள், புதிய மக்களின் குடியேற்றங்கள் என்று எத்தனை நிகழ்வுகள் நிகழ்ந்தாலும் அவற்றையும் மீறி. தொன்மக் காலங்களின் உறைந்த தடயங்களாய் உயிர்த்திருக்கும் சாகாத் தன்மை ஊர்ப் பெயர்களுக்கு உண்டு. அந்த வகையில், ஊர்ப் பெயர்கள் பழங்காலப் புலப் பெயர்வுகளின் நம்பிக்கைக்குரிய தடயங்களாய் விளங்குகின்றன.

சிந்துவெளி நாகரிகம் குறித்த திராவிடக் கருதுகோளுக்கு வலுசேர்க்கும் முயற்சியில் ஊர்ப் பெயர்ச் சான்றுகளை அல்ச்சின்ஸ், ஸங்காலியா, பர்ப்போலா, ஐராவதம் மகாதேவன் மற்றும் எப்.சி. சவுத் வொர்த் போன்ற ஆய்வறிஞர்கள் பயன்படுத்தியுள்ளனர். ஹரப்பாவின் மொழியைக் கண்டறிய ஹரப்பா இடப் பெயர்கள் பெரிதும் உதவக்கூடும் என்று நம்புகிறார் பர்ப்போலா. சிந்துவெளி மக்கள் எழுதிவைத்துச் சென்றுள்ள தொடர்களின் தொடக்கச் சொற்களில் ஊர்ப் பெயர்கள் இடம் பெற்றிருக்கக்கூடும் என்று கருதுகிறார் ஐராவதம் மகாதேவன்.

புலம் பெயர்ந்து செல்லும் மக்கள் புதிய ஊர்களுக்குத் தங்களது பழைய ஊர்களின் பெயர்களை மீண்டும் பயன்படுத்துவது உலகின் பல பகுதிகளிலும் நிகழ்ந்திருக்கிற. நிகழ்கிற நடைமுறையாகும். இதற்குச் சமூக உளவியல் சார்ந்த அடிப்படைக் காரணம் உண்டு.

சிந்துவெளி மக்கள் திராவிடர்கள் என்பது உண்மையானால். அவர்களில் ஒரு பகுதியினர் புலம் பெயர்ந்து சென்றபோது விட்டுச்சென்ற பழைய பெயர்கள் சிந்துவெளிப் பகுதியிலேயே இன்னும் உறைந்திருக்க வேண்டும். அதைப் போலவே. புலம் பெயர்ந்து சென்றவர்கள் எடுத்துச் சென்றிருக்கக்கூடிய சிந்துவெளிப் பெயர்கள் அவர்களது புதிய தாயகங்களில் பயன்படுத்தப்பட்டு அவ்விடங்களில் இன்றும் வழக்கில் இருக்க வேண்டும்.

எனவே. சிந்துவெளி மக்களுக்கும் சங்கத் தமிழ் முன்னோடிகளுக்கும் தொன்மத் தொடர்புகள் இருந்திருக்கக் கூடும் என்ற வாதத்தை நிறுவ வேண்டும் என்றால். சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஊர்ப் பெயர்களுக்கும் வடமேற்குப் புலங்களில் தற்போது வழங்கும் ஊர்ப் பெயர்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்று ஆராயவேண்டிய அவசியம் இருக்கிறது.

சிந்துவெளியில் சங்கத் தமிழரின் துறைமுகங்கள், தலைநகரங்கள் மற்றும் ஊர்களின் பெயர்கள்

பாகிஸ்தானிலுள்ள கொற்கை (Gorkai. Gorkhai), வஞ்சி (Vanji), தொண்டி(Tondi), மத்ரை (Matrai), உறை (Urai), கூடல் கட் (Kudal Garh) மற்றும் கோளி (Koli); ஆப்கானிஸ்தானிலுள்ள கொற்கை (Korkay. Gorkay). பூம்பகார் (Pumbakar) ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தலைநகரங்கள் மற்றும் துறைமுக நகரங்களின் பெயர்களான கொற்கை. வஞ்சி. தொண்டி. மதுரை. உறையூர். கூடல். கோழி. பூம்புகார் ஆகியவற்றை நினைவுபடுத்துகின்றன.

பழந்தமிழர்களின் முக்கியத் துறைமுகங்களான கொற்கை. தொண்டி மற்றும் பூம்புகாரையும், மதுரை, கூடல்,வஞ்சி போன்ற பெரு நகரங்களின் பெயர்களையும் நினைவுபடுத்தும் ஊர்ப் பெயர்கள் சிந்து, ஹரப்பா உள்ளிட்ட வடமேற்கு நிலப் பகுதிகளில் இன்றும் நிலைத்திருப்பதைப் புறக்கணிக்க முடியாது. கொற்கை. வஞ்சி. தொண்டி போன்ற பெயர்கள் பழந்தமிழர் பண்பாட்டின் முகவரிகள். சங்க இலக்கியங்கள் கொண்டாடிப் போற்றும் இப்பெயர்கள் வேதங்கள் மற்றும் வடமொழி இலக்கியங்கள் மற்றும் வட மரபுகள் எதிலும் பதிவு செய்யப்பட வில்லை. வரலாற்றுக் காலத்தில் இப் பெயர்ப்பெயர்வு நிகழ்ந்திருந்தால் அது தமிழ் மற்றும் வட மொழி இலக்கியங்கள் மற்றும் வரலாற்று ஆவணங்களில் பதிவாகியிருக்கும்.

எனவே. சிந்து வெளிக் கொற்கை, தொண்டி, வஞ்சி வளாகத்தை, பழந்தமிழ்த் தொன்மங்களோடு தொடர்புபடுத்துவதைத் தவிர்க்க இயலாது. இது. சிந்துவெளி நாகரிகத்தின் பழந்தமிழ்த் தொடர்பிற்கு அரண் சேர்ப்பதோடு சங்க இலக்கியத்தின் சிந்துவெளித் தரவுத் தகுதிக்கு அடிக்கல்லும் நாட்டுகிறது. பாகிஸ்தானில் இன்றும் வழக்கிலுள்ள அம்பர் (Ambar). தோட்டி(Toti). தோன்றி (Tonri). ஈழம் (Illam). கச்சி (Kachi). காக்கை (Kakai). கானம் (Kanam). களார் (Kalar). கொங் (Kong). நாலை (Nalai). நேரி (Neri). ...ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுள்ள ஊர்ப் பெயர்களான அம்பர். தோட்டி. ஈழம். கச்சி. காக்கை. கானம். கழாஅர். கொங்கு. நாலை. நேரி ஆகியவற்றை அப்படியே நினைவுக்குக் கொண்டு வருகின்றன.

நதிகள், மலைகளின் பெயர்கள்

நதிகளின் பெயர்கள் ஊர்ப் பெயர்களாகவும் வழங்குவது உலகமெங்கும் உள்ள நடைமுறை. ஆப்கனிஸ்தானிலுள்ள காவ்ரி (Kawri). பொர்னை (Porni). மற்றும் பொருன்ஸ் (Poruns); பாகிஸ்தானிலுள்ள காவேரி வாலா (Kaweri Wala), பொர்னை (Phornai), புரோனை (Puronai), காரியாரோ (Khariaro) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காவேரி, பொருநை, காரியாறு ஆகிய நதிப் பெயர்களை நினைவுறுத்துகின்றன.

கொற்கை என்பது பாகிஸ்தானில் ஊர்ப் பெயராக மட்டுமின்றி ஒரு நதியின் பெயராகவும் விளங்குகிறது. சங்க காலத்துச் சமகால நதிகளின் பெயர்களை மட்டுமின்றி. கடல் கோளில் காணாமல் போன தொன்ம நதியான பöறுளியாற்றின் பெயரையும் வட மேற்கு மற்றும் மேற்கு இந்திய ஊர்ப்பெயர்களில் மீட்டுருவாக்கம் செய்யமுடிகிறது.

பொஃரு (Pohru) என்பது பாகிஸ்தானில் பாயும் சட்லெஜ் நதியின் கிளை நதியாகும். வட இந்தியாவில் இமயமலைப் பகுதியிலுள்ள உத்திராஞ்சல் மாநிலம் கடுவால் மாவட்டத்தில் 'பக்ரோலி' (Bakroli). என்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது. இதையொட்டியுள்ள ருத்திரப்ப்ரயாகை மாவட்டத்தில் 'குமரி' என்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது.

தமிழரின் வரலாற்றுக்கு முற்பட்ட தொன்மங்களோடு தொடர்புடைய பஃறுளியாற்றின் பெயரையும் குமரிக் கோட்டின் பெயரையும் ஒரு சேர நினவுறுத்தும் இப்பெயர்கள் அளிக்கும் வியப்பு. உத்திரப்பிரதேசத்தில் பரெய்லி மாவட்டத்தில் உள்ள பஹ்ரொலி (Bahroli); குஜராத்தில் நான்கு இடங்களில் வழங்கும் பக்ரொல் (Bakrol) என்ற ஊர்ப் பெயர்களைக் கண்டு மேலும் அதிகமாகிறது.

இதைப் போலவே, ஆப்கனிஸ்தானிலுள்ள பொதினே (Podineh), பரம்பு டராஹெ (Parambu Darahe) மற்றும் ஆவி (Awi); பாகிஸ்தானிலுள்ள பொதியன் (Potiyan), பளனி (Palani), தோட்டி (Toti) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் பொதினி, பழனி மற்றும் தோட்டி என்ற மலைப் பெயர்களை நினைவுறுத்துகின்றன. மேலும், பல பழந்தமிழ் ஊர்ப் பெயர்களை நினைவுறுத்தும் ஊர்ப் பெயர்களை தன்னகத்தே கொண்ட ஈரானில் வழங்கும் பொதிகே (Potikeh) பழந்தமிழ் மரபில் மிக முக்கிய இடம் வகிக்கும் பொதிகை மலையை நினைவுறுத்துகிறது.

இவ்வாறு ஆசிரியர் பாலகிருஷ்ணன் தமிழ்ப் பெயர்களையும் சொற்களையும் பல நாடுளிலும் களப்பணி மேற்கொண்டு ஆய்ந்து எடுத்துக்காட்டி வருவது ஆழ்ந்து நோக்கற்குரியது.

தமிழர்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரவில்லை. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதாய் அமைந்துள்ள பூம்புகார் ஆய்வுகள் குறித்து 'குமரிக்கண்டம்' என்னும் தம் நூலில் வெளியிட்டுள்ள ஆசிரியர் ம.சோ.விக்டர் அவர்களின் நூலிலிருந்து சில பகுதிகள் வருமாறு:

2 - பூம்புகார்

அண்மையில் பூம்புகார் கடற்பகுதியில் அகழ்வாய்வு மேற்கொண்ட (2000) கிரஹாம் ஹான்காக் என்ற இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர். தனது முறையான ஆய்வுகளுக்குப் பிறகு அதிர்ச்சி தரும் செய்திகளை வெளியிட்டார்.

18-12-2002 நாளன்று தினமலர் நாளேடு வெளியிட்ட செய்தி.

''நாகை மாவட்டம் பூம்புகார் அருகே சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய ஒரு பிராமண்ட நகரம் தான் உலகில் முதன்முதலில் தோன்றிய நவீன நகர நாகரிகமாக இருக்கக்கூடும் என்று இங்கிலாந்தைச் சார்ந்த ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் கிரஹாம் ஹான் காக் என்பவர் கண்டறிந்துள்ளார்.

இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு, பூம்புகார் கடற்பகுதியில் மேற்கண்ட தீவிர ஆழ்கடல் ஆராய்ச்சியின் மூலம் இந்த உண்மையைக் கண்டறிந்துள்ளார். இந்த ஆராய்ச்சிக்குத் தற்போதைய வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தான ''மெசபடோமியா' (தற்போதைய ஈராக்) பகுதியில் சுமேரியர்களால் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நகர நாகரிகம் தோற்றுவிக்கப்பட்டது என்பது தவறானது எனத் தெரிவிக்கிறது.

கிரஹாம் ஹான் காக் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற ஆழ்கடல் ஆராய்ச்சியாளர். இவரது பல கண்டுபிடிப்புகள் வரலாற்று உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவை. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் கோவாவில் அமைந்துள்ள ''தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம்' என்ற நிறுவனம். கடந்த 1990ஆம் ஆண்டு வாக்கில் வரலாற்றுப் புகழ் பெற்ற பூம்புகார் நகர கடற்பகுதியில் ஒரு ஆய்வினை மேற்கொண்டது.

இந்த ஆய்வுகள் 1993ஆம் ஆண்டுவரை தொடர்ந்து நடைபெற்றன. இந்த ஆய்வின் போது, பூம்புகார் கடற்பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிற்குள் பல வட்ட வடிவமான கிணறுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தக் கிணறுகள் பூம்புகார் முதல் தரங்கம்பாடி வரையிலான கடற்பகுதியில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. இது தவிர சங்க காலத்தைச் சார்ந்தது எனக் கருதப்படும் சுட்ட செங்கற்களால் ஆன ''ட" வடிவ கட்டடம் ஒன்றும் கண்டறியப்பட்டது.

இத்துடன் நீரில் சுமார் 25அடி ஆழத்தில் குதிரை குளம்பு வடிவில் 85அடி நீளமும், 2 மீட்டர் உயரமும் கொண்ட பல பொருட்கள் கண்டறியப்பட்டன. இவை அனைத்தும் பூம்புகார் கடற்பகுதியில் ஒரு பெரிய நகரம் மூழ்கியிருக்கக்கூடும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்த போதிலும் தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் தன்னுடைய ஆய்வினை நிதி பற்றாக்குறை காரணமாக பாதியில் நிறுத்திவிட்டது.

இந்நிலையில் கடந்த 2000ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த கிரஹாம் ஹான் காக். தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தினரிடம் பூம்புகார் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார். நிதிப் பற்றாக்குறை காரணமாக ஆராய்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது என்பதை அறிந்த அவர், இங்கிலாந்தைச் சார்ந்த ''சானல் 4" என்ற பிரபல தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் அமெரிக்காவைச் சார்ந்த ''லர்னிங் சானல்" என்ற தொலைக்காட்சி நிறுவனம் ஆகியவற்றின் நிதியுதவி மற்றும் இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தின் ஒத்துழைப்புடன் 2001ஆம் ஆண்டு ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். இந்த ஆராய்ச்சிக்கு அதி நவீன ''சைடு ஸ்கேன் சோனார்" என்ற கருவி பயன்படுத்தப்பட்டது. இந்தக் கருவி பூம்புகார் கடற் பகுதியில் குறுக்கும் நெடுக்குமாக நீண்ட அகலமான தெருக்களுடன், உறுதியான கற்களால் கட்டப்பட்ட கட்டடங்களின் இடிபாடுகளுடன் கூடிய ஒரு பிரம்மாண்ட நகரம் மூழ்கியிருப்பதைத் துல்லியமாகக் காட்டியது. பின்னர் அக்காட்சிகளை, கிரஹாம் ஹான் காக் நவீன காமிராக்கள் மூலம் படம் எடுத்தார்.

இந்த மூழ்கிய நகரம் குறித்த தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்த ஹான்காக் இந்த நகரம் கடலில் சுமார் 75 அடி ஆழத்தில் புதையுண்டிருப்பதைக் கண்டறிந்தார். இன்றைக்கு சுமார் 17 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ''ஐஸ் ஏஜ்" எனப்படும் பனிக்கட்டி காலத்தின் இறுதி பகுதியில் தட்பவெப்ப மாறுதல்கள் காரணமாக, பனிப்பாறைகள் உருகியதன் விளைவாக பல நகரங்கள் கடலுள் மூழ்கியதாக வரலாறு தெரிவிக்கின்றது.

இத்தகைய பனிக்கட்டி உருகும்நிலை, சுமார் 7 ஆயிரம் ஆண்டுகாலம் தொடர்ந்ததாக வரலாறு தெரிவிக்கின்றது. பூம்புகார் அருகில் இருந்த இந்நகரம், சுமார் 75 அடி ஆழம் புதையுண்டு கிடப்பதைப் பார்க்கும்போது, இந்த நகரம் சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கியிருக்கக் கூடும் என்று ஹான்காக் கருதினார். தனது ஆராய்ச்சியைப் பற்றி விபரங்களை அவர் இங்கிலாந்து நாட்டு மில்னே என்பவரிடம் தெரிவித்தார். அதன்மீது ஆராய்ச்சி மேற்கொண்ட கிலன்மில்னே, ஹான் காக்கின் கருத்து சரிதான் என உறுதிப்படுத்தினார்.

சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல்மட்டம் 75 அடி உயர்ந்திருக்கக் கூடும் என்றும். அதனை வைத்துப் பார்க்கும்போது இந்த நகரம் 11 ஆயிரத்து 500 ஆண்டுகால பழமை வாய்ந்தது என்ற முடிவினையும் அறிவித்தார்.

மேலும் பூம்புகார் நகர நாகரிகம் ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய நாகரிகங்களை விட மிகவும் மேம்பட்ட ஒன்று என்றும் கிரஹாம் ஹாக் தெரிவிக்கின்றனர். பூம்புகாரில் இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் படங்கள், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில். ''அண்டர்வேர்ல்ட்" என்ற தலைப்பில் தொலைக்காட்சித் தொடராக ஒளிபரப்பப்பட்டது. இந்தத் தொலைக்காட்சித் தொடர், உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் படங்களை பெங்களுரில் நடந்த கண்காட்சி ஒன்றில் கிரஹாம் ஹான்காக் வெளியிட்டார்.

மேலைநாட்டு வரலாற்று மற்றும் கடல் ஆராய்ச்சியாளர்களின் கவனம் பூம்புகாரின் பக்கம் திரும்பியுள்ள போது. இந்திய ஆராய்ச்சியாளர்கள் மட்டும் பூம்புகார் பற்றித் தெரிந்து கொள்ள எந்த விருப்பமும் கொள்ளவில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை. மூழ்கிப் போனது பூம்புகார் நகரம் மட்டுமல்ல. தற்போது இருக்கும் வரலாற்றுப் புகழ்பெற்ற பூம்புகார் நகரமும். அரசால் அலட்சியப்படுத்தப்பட்ட நிலையில்தான் உள்ளது. சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் புகழ்பெற்ற துறைமுக நகரமாக விளங்கிய பூம்புகார். பண்டைக் காலத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றாலும் போற்றப்பட்டுள்ளது.

சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகள் நடைபெற்றதாகக் கருதப்படும் பூம்புகார் பற்றி கோயில் கல்வெட்டுகள் பலவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹான்காக்கின் ஆராய்ச்சிகள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் இத்தகைய வசதிகள் பூம்புகாரில் அவசியம் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பூம்புகார் அகழ்வாய்வு தரும் செய்திகள்

1. கி.மு. 10000 ஆண்டுகளில் நகரிய நாகரிகத்தில் தமிழர் சிறந்திருந்தனர்.
2. மிக உயர்ந்த மாட மாளிகைகளும் அகன்ற தெருக்களும்அறியப்படுவதால் திட்டமிட்டு நகரம் உருவாக்கப்பட்டிருந்தது.
3. சுட்ட செங்கற்கள் கிடைத்துள்ளதால் செங்கல்லைச் சுடும் நடைமுறை இருந்துள்ளது.
4. கடல் நீர் 75 அடி உயர்ந்துள்ளதாக அறியப்படுகின்றது. (400 அடி என்றும் கூறப்படுகின்றது)
5. குமரிக்கண்ட அழிவும் இச்செய்தியால் உறுதி செய்யப்படுகின்றது.
6. கி.மு. 10000 ஆண்டுகளில் குமரிக்கண்டம் இறுதியாக அழிந்ததை இச் செய்தி உறுதி செய்கிறது.
7. புதிய தமிழகமும் இலங்கையும் இக்கால அளவில் இருவேறு நாடுகளாகப் பிரிந்தன.
8. இந்தியப் பெருங்கடல். வங்க அரபிக் கடல்கள் தோற்றம் பெற்றன.
9. உலக வரைபடம் ஏறக்குறைய இன்றுள்ள அளவில் வடிவம் பெற்றது.
10. கி.மு. 17000 - 10000 ஆண்டுகளில் பனிப்பாறைகள் உருகியதால். கடல் நீர் உயர்ந்து. உலகின் பல நாடுகள் அழிந்துபோயின.
11. 7000 ஆண்டுகள் தொடர்ந்து பனிப்பாறை உருகல் நிகழ்வு, குமரிக் கண்டத்தை இக்கால அளவில் சிறிது சிறதாக அழித்தொழித்தது.
12. சிந்துவெளிக்கு முற்பட்டதும். உயர்ந்ததுமான நாகரிகம் குமரிக் கண்டத்தில் அறியப்பட்டது.
13. இயற்கையின் மாறுபாடுகளால். நில நீர்ப் பகுதிகளில் மாற்றங்கள் தோன்றிய செய்தி ஏற்றுக் கொள்ளப்பட்டது.


இந்திய அரசே இனி எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறினால் துணித்து பதில் தாக்குதல் நடத்...

Posted: 15 Oct 2014 03:40 AM PDT

இந்திய அரசே இனி எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறினால் துணித்து பதில் தாக்குதல் நடத்துங்கள்,ஆயுத பற்றாக்குறையை பற்றி கவலை வேண்டாம்...

எங்க வீட்ல தீபாவளிக்கு பலகாரம் சுட ஆரமிச்சுட்டாங்க...

-பூபதி முருகேஷ்

சமையல் குறிப்பு பார்த்து சமைக்கிறதைக் கூட பொறுத்துக்கிறோம்... ஆனா தீபாவளி மலர்க...

Posted: 15 Oct 2014 02:06 AM PDT

சமையல்
குறிப்பு பார்த்து சமைக்கிறதைக்
கூட
பொறுத்துக்கிறோம்...

ஆனா தீபாவளி மலர்களைப்
பார்த்து புதுப் பலகாரம்
என்ற பெயரில் நீங்க பண்ற
கொடுமையைலாம்
பொறுத்துக்க
முடியல... :(

@சதீஷ் குமார்
தேவகோட்டை

தந்தையின் காதல் என்பது வெளியூரில் வேலை தேடும் மகனின் வங்கி கணக்கில், மாதம் தவறாம...

Posted: 15 Oct 2014 12:45 AM PDT

தந்தையின் காதல் என்பது வெளியூரில் வேலை தேடும் மகனின் வங்கி கணக்கில், மாதம் தவறாமல் செலவுக்குப் பணம் போடுவது.

தந்தையின் கண்டிப்பு என்பது, மகன் ATM ல் பணம் எடுக்கும் போது வங்கியில் இருந்து வரும் நோட்டிபிகேசன் மெசேஜ்க்கு மகன் நம்பரைத் தராமல் தன் நம்பரைத் தந்திருப்பது..

# எங்க எப்ப எம்புட்டு பணம் எடுக்கறான்னு கவனிக்கிறாங்கலாம்..

- கனா காண்கிறேன்

ஜெ விடுதலை ஆக, போட்டோகிராபரிடம் அதிமுகவினர் மனமுருக வேண்டுதல்! அண்ணே! சாமி சிலை...

Posted: 15 Oct 2014 12:25 AM PDT

ஜெ விடுதலை ஆக,
போட்டோகிராபரிடம்
அதிமுகவினர் மனமுருக
வேண்டுதல்!

அண்ணே!
சாமி சிலை அந்த பக்கம்
இருக்கு!

@எழிலன்


உண்டியலில் போடுகிற ஆயிரம் ரூபாயை விட இயலாதவர்களுக்கு கொடுக்கும் பத்து ரூபாய்க்கு...

Posted: 14 Oct 2014 11:23 PM PDT

உண்டியலில் போடுகிற
ஆயிரம் ரூபாயை விட
இயலாதவர்களுக்கு
கொடுக்கும்
பத்து ரூபாய்க்கு பலன்
அதிகம்!

@விவிகா சுரேஷ்

அடிக்சன் கில்லர் சாப்பிட்டால் எல்லா கெட்ட பழக்கத்தையும் விட்டுவிடலாம், ஆனா அடிக்...

Posted: 14 Oct 2014 11:16 PM PDT

அடிக்சன் கில்லர்
சாப்பிட்டால்
எல்லா கெட்ட
பழக்கத்தையும்
விட்டுவிடலாம்,
ஆனா அடிக்சன் கில்லர்
சாப்பிடுவதை விட
முடியாது. :(

@பிரபின் ராஜ்

"ஜெயலலிதாவிற்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்" - முன்னாள் மத்திய மந்தி...

Posted: 14 Oct 2014 11:02 PM PDT

"ஜெயலலிதாவிற்கு நல்ல
தீர்ப்பு கிடைக்கும் என
நம்புகிறேன்" - முன்னாள்
மத்திய
மந்திரி நாராயணசாமி...

//15 நாள்ல ஜாமீன் கிடைச்சுடுமா தல???

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


http://www.puthiyathalaimurai.tv/ புதிய தலைமுறை டிவியின் இந்த லிங்கில் சென்று கா...

Posted: 15 Oct 2014 09:02 AM PDT

http://www.puthiyathalaimurai.tv/ புதிய தலைமுறை டிவியின் இந்த லிங்கில் சென்று காவலர் சுட்டது ஆணவம் என்பதை கிளிக் பண்ணுங்கள் சகோதரர்களே இரவு இது சம்மந்தமான விவாதத்தின் போது புள்ளி விபரத்தை குறிப்பிடுவார்கள் அப்போது இது பதியவைக்கப்படும்.


லாஸ்ட் பெஞ்ச் Vs பர்ஸ்ட் பெஞ்ச் 1. முதல் பெஞ்ச்ல உட்கார்ந்து நீங்க நோட்ஸ் எடுப்ப...

Posted: 15 Oct 2014 06:15 AM PDT

லாஸ்ட் பெஞ்ச் Vs பர்ஸ்ட்
பெஞ்ச்
1. முதல் பெஞ்ச்ல
உட்கார்ந்து நீங்க நோட்ஸ்
எடுப்பதற்காகவே பாடத்தை கவனிச்சிங்க,
நாங்க நல்லா தூக்கம்
வருமேன்னு பாடத்த
கவனிச்சோம்.
2. அப்சர்வேஷன்
நோட்டையும், ரெக்கார்ட்
நோட்டையும்,
அசைன்மென்டையும்,
எழுதின
உடனே முன்னாடி கொண்டு போய்
வாத்தியார்ட்ட
நீட்டுவிங்க.
நாங்க நண்பன்
காப்பி அடிச்சிட்டு கொடுக்கற
வரை காத்திருப்போம்.
3. பரீட்சைக்கு என்ன
கேள்வி வரும்ன்னு நீங்க
யோசிச்சிட்டு இருக்கப்ப,
பரிட்சையே வராமா இருக்க
என்ன
செய்யலாம்ன்னு நாங்க
யோசிச்சிட்டு இருந்தோம்.
4. ஜூனியர்
பசங்களுக்கு நீங்க நோட்ஸ்
கொடுத்து உதவி செஞ்சிங்க.
நாங்க எந்த வாத்தியார
எப்படி சாமாளிக்கனும்னு
டிப்ஸ்
கொடுத்து உதவி செஞ்சோம்.
5. லைப்ரேரில நெறைய
புக்ஸ் எடுத்து நீங்க
சாதனை செஞ்சிங்க.
நாங்க
நாலு வருசமா லைப்ரேரி பக்கமே போகலன்ற
சாதனையை செஞ்சோம்.
6. கேண்டின் ல
சாப்பாட்டுக்கு லேட்
ஆனா, ஐயையோ லேப்
ஸ்டார்ட் ஆக
போவுதுன்னு சாப்புடாம
ஓடுவிங்க.
எங்களுக்கு எப்பவுமே சோறு தான்
பர்ஸ்ட், லேப்லாம் நெக்ஸ்ட்.
7. நீங்க பாடம்
புரியலைன்னா கேள்வி கேப்பிங்க;
நாங்க எங்களுக்கு போர்
அடிச்சா கேள்வி கேட்டு நேரத்தை ஓட்டுவோம்.
8. நீங்க காலேஜ் டே,
ஹாஸ்டல்டே லாம் டைம்
வேஸ்ட்
ன்னு சொன்னிங்க.
நாங்க
அதுக்காகவே வருசம்பூரா வெயிட்
பண்ணோம்.
9. பர்ஸ்ட் மார்க் வேணும்
ன்னு பரிட்சை டைம்
டேபிள் வந்த
உடனே படிக்க
ஆரம்பிசிருவிங்க.
நாங்க பாஸ்
ஆனா போதும்ன்னு பரீட்சைக்கு முதநாள்
தான்
புக்கையே எடுப்போம்.
10. வாத்தியார்
பனிஸ்மென்ட்
கொடுத்து வெளிய
அனுப்பிட்டா,
அவமானமா நினைச்சி மூஞ்ச
தொங்க போட்டுபிங்க.
நாங்க
வாத்தியாரே ரெஸ்ட்
எடுக்க
சொன்னதா நினைச்சி ஆனந்தப்
படுவோம்.
11. எக்ஸாம்
க்கு முக்கியமா சிலபஸ்
தெரிஞ்சி இருக்கணும்னு நீங்க
நினைச்சிங்க.
சீட்டிங் அரெஞ்ச்மென்ட்
தெரிஞ்சபோதும்ன்னு நாங்க
நினைச்சோம்
# மொத்தத்துல நீங்க
வாழ்க்கைய
தேடிட்டு இருந்தப்பவே,
நாங்க வாழ
ஆரம்பிச்சிட்டோம்

கழுத்தை அறுத்து காட்டும் வீடியோவில் மட்டும் தீவிரவாதி இல்லை காவல் நிலையத்திற்க...

Posted: 15 Oct 2014 06:08 AM PDT

கழுத்தை அறுத்து காட்டும் வீடியோவில் மட்டும் தீவிரவாதி இல்லை

காவல் நிலையத்திற்கு விசாரணை என்ற பெயரில் சுட்டு கொள்வதும் தீவிரவாதித்தனமே

வன்மையான கண்டனங்கள்

தினசரி மோட்டார் வாகனம் ஓட்டும் அனைவரும் மோட்டர் வாகனச் சட்டத்தையும், அபராததையும்...

Posted: 15 Oct 2014 04:33 AM PDT

தினசரி மோட்டார் வாகனம் ஓட்டும் அனைவரும் மோட்டர் வாகனச் சட்டத்தையும், அபராததையும் தெரிந்திருக்க வேண்டும் இதோ உங்களுக்காக

1.உரிமம் இல்லதவர்களை வண்டி ஓட்ட அனுமதிப்பது/section 180. Rs.50 fine
2. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் 18 வயதிற்க்கு கீழ் உள்ளவர் வண்டி ஓட்டுதல் section 181. Rs.500 fine
3.உரிமம் சார்ந்த குற்றங்கள் , ஓட்டுநர் தகுதி இழ்ந்தவர்கள் வண்டி ஓட்டுதல் section 182(1). Rs.500 fine
4.அதிவேகத்தில் வண்டி ஓட்டுதல் section 183(1) Rs.400 fine
5..மிகுதியான வேகத்தில் வண்டி ஓட்டுதல் .முதலானவை (ஓட்டுவதற்க்கான காரணம் வேகத்தின் அளவை தாண்டுதல் ) section 183(2).Rs.300 fine
6..அபாயகரமாக ஓட்டுதல் section 184. Rs.1000 fine
மற்றும் சென்போன் பேசிக் கொண்டு ஓட்டுதல் CMV R21(25) section 177.RS.100 fine
7..குடிப் போதையில் வண்டி ஓட்டுதல் section 185 .Rs.court
8. மன நிலை ,உடல் நிலை சரியில்லாத் நிலையில் வண்டி ஓட்டுதல் .section 186. Rs.200 fine
9..போட்டி போட்டுக் கொண்டு வண்டி ஓட்டுதல்..வாகன சோதனை மேற்க் கொள்ளுதல் section 189. Rs 500 fine
10..அதிகமான அளவில் கரும்புகை வெளியிடுவது section 190(2) .Rs.50 fine
11..அனுமதியில்லாத மாற்றத்துடன் கூடிய சைலன்சர் section 190(2).Rs.50 fine .
12..காற்று ஓலிப்பான் .பல்லிசை ஓலிப்பான் section 190 (2) .Rs.50 fine
13..பதிவு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல் section 192. Rs.500 fine
14..அனுமதிக்கப்பட்ட எடைக்குக் கூடுதல் எடைய்யுடன் ஓட்டுதல் section 194.Rs.100 fine
15..காப்பீடு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல்( uninsured ) section 196 .Rs.1000 fine
16..வண்டியில் அனுமதியின்றி மாறுதல் செய்தல் section 198 .Rs.100 fine
17..போக்குவரத்திற்க்கு இடையூர் செய்தல் section 201 .Rs.50 fine


அப்பாவி முஸ்லிம் வாலிபரை சுட்டுக் கொன்ற இன்ஸ்பெக்டர் காளிதாசை கைது செய்ய வெண்டும...

Posted: 15 Oct 2014 12:13 AM PDT

அப்பாவி முஸ்லிம் வாலிபரை சுட்டுக் கொன்ற இன்ஸ்பெக்டர் காளிதாசை கைது செய்ய வெண்டும்.

அவர் இஸ்லாமியர் என்பதால் அவரை தீவிரவாதி என்ற சொல்லும் காவல்துறையின் போக்கு கேவலமானது.

தமிழக போலீசின் கொலைவெறிக்கு இது ஒரு உதாரணம் .
இறந்தவர் குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

- மருத்துவர் ராமதாஸ்.

ராமநாதபுரம் எஸ்.பி.பட்டினம் காவல்நிலையத்தில் சையது முகம்மது சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

- விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்

"சமூக வலைத்தளமான பேஸ்புக், பாரம்பரிய ஊடகங்களின் மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறியு...

Posted: 14 Oct 2014 07:19 PM PDT

"சமூக வலைத்தளமான பேஸ்புக், பாரம்பரிய ஊடகங்களின் மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இன்று பல இணையப் பாவனையாளர்கள், தமது பேஸ்புக் டைம் லைனில் போதுமான அளவு தகவல்கள் கிடைப்பதாக கூறுகின்றனர்." இவ்வாறு பெல்ஜிய ஊடக நிறுவனமான De Persgroep இன் தலைமை நிர்வாகி Christian Van Thillo தெரிவித்துள்ளார்.

(நன்றி: Het Financieele Dagblad, 8 oct. 2014)
via kalay

பிச்சை எடுக்காமல்,கோணிப்பையில் குப்பையை சேகரித்து சுயதொழில் செய்து பிழைப்பவனை தா...

Posted: 14 Oct 2014 11:33 AM PDT

பிச்சை எடுக்காமல்,கோணிப்பையில் குப்பையை சேகரித்து சுயதொழில் செய்து பிழைப்பவனை தான் #பூச்சாண்டி என்று சொல்லி குழந்தைகளுக்கு சோறூட்டுகிறோம்...

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


இராஜகோபாலஸ்வாமி திருக்கோயில், மன்னார்குடி இராஜகோபாலஸ்வாமி திருக்கோயில் வளாகம், ச...

Posted: 15 Oct 2014 07:30 AM PDT

இராஜகோபாலஸ்வாமி திருக்கோயில், மன்னார்குடி இராஜகோபாலஸ்வாமி திருக்கோயில் வளாகம், சுமார் 23 ஏக்கர் பரப்பளவில் 24 சந்நிதிகள், 16 உயர்ந்த கோபுரங்கள், 7 முற்றங்கள், 7 கூடங்கள் மற்றும் 9 குளங்கள் ஆகியவற்றுடன் பரந்து விரிந்து காணப்படுகிறது. இக்கோயில் குலோத்துங்கச் சோழரின் ஆட்சிகாலத்தின் போது கட்டப்பட்டு, அவருக்குப் பின் வந்த பல்வேறு சோழ மன்னர்களால் புதுபிக்கப்பட்டுக் கொண்டே வந்துள்ளது. பின்னர், நாயக்க மன்னர்களின் ஆட்சிகாலத்தில் விரிவுபடுத்தப்பட்டது. இந்தக் கோயிலின் குளம் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோயில் குளங்களுள் ஒன்றாகும்.

#சோழர்கால பெருமை

பா விவேக்


கங்கை கொண்ட சோழபுரம், அரியலூர் சோழர்களின் உயர்தரமான கலை மற்றும் கட்டிடக்கலைக்கு...

Posted: 15 Oct 2014 06:30 AM PDT

கங்கை கொண்ட சோழபுரம், அரியலூர் சோழர்களின் உயர்தரமான கலை மற்றும் கட்டிடக்கலைக்கு சிறந்த சான்றாக திகழும் இந்தக் கோயில் சோழர்களால் கட்டப்பட்டதற்காக மட்டுமல்லாமல், தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய சிவலிங்கத்தைப் பெற்றிருப்பதற்காகவும் புகழ் பெற்றுள்ளது. இக்கோயில் கர்ப்பக்கிரகத்தில் வீற்றிருக்கும் சிவலிங்கம் 4 மீட்டர் உயரமுடையதாகும். கோயிலின் சுவர்களில் பதிக்கப்பட்டிருக்கும் செப்புப் பட்டைகளின் எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ள சோழ வம்சம் மற்றும் அவர்களின் அரசு பற்றிய வரலாற்று நிகழ்ச்சிகள், வேறந்த வரலாற்று நூல்களையும் விட சிறப்பான விளக்கங்களை தருவதாக இருக்கும்.

#சோழர்கால பெருமை

பா விவேக்


பிரகதீஸ்வரர் கோயில், தஞ்சாவூர் வட நாடெங்கும் பயணித்து பல வெற்றிகளை சுமந்து வந்த...

Posted: 15 Oct 2014 04:30 AM PDT

பிரகதீஸ்வரர் கோயில், தஞ்சாவூர் வட நாடெங்கும் பயணித்து பல வெற்றிகளை சுமந்து வந்த ராஜராஜ சோழன் தான் வழியில் கண்ட பல்வேறு சிற்பக்கலை மரபுகளைச் சேர்ந்த கோயில்களின் தோற்றத்தில் கவரப்பட்டு அவற்றினும் சிறந்த ஒரு உன்னத கலைப்படைப்பை தனது ராஜ்ஜியத்தில் நிர்மாணிக்க விரும்பி மிகுந்த முனைப்புடன் இந்தக் கோயிலை உருவாக்கியிருக்க வேண்டும் என்பது சில வரலாற்று ஆசிரியர்களின் கருத்து. வார்த்தைகளில் விவரிக்க முடியாத நுண்ணிய வடிவமைப்பு, கற்பனா சக்தி, மேலாண்மை துல்லியம், பொறியியல் நுணுக்கங்கள், அப்பழுக்கற்ற ஒழுங்கு, துளியும் பிசகாத கணக்கீடுகள் போன்ற அறிவியல் பூர்வமான நுட்பங்கள் இந்த ஒட்டுமொத்த கோயிலின் உருவாக்கத்தில் நிரம்பியுள்ளன என்றால் அது மிகையில்லை.

#சோழர்கால பெருமை

பா விவேக்


தியாகராஜஸ்வாமி திருக்கோயில், திருவாரூர் சோழ மன்னர்களால் கட்டப்பட்டு தமிழ்நாட்டின...

Posted: 15 Oct 2014 01:30 AM PDT

தியாகராஜஸ்வாமி திருக்கோயில், திருவாரூர் சோழ மன்னர்களால் கட்டப்பட்டு தமிழ்நாட்டின் மிகப் பழமையான கோயில்களுள் ஒன்றாக திகழ்ந்து வரும் தியாகராஜஸ்வாமி திருக்கோயில் 1-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோயிலின் மூலஸ்தானத்தை இரண்டாகப் பிரித்து, ஒரு பகுதியை "வன்மிகிநாதர்" என்ற பெயரில் வழங்கப்படும் சிவபெருமானுக்கும், மற்றொரு பகுதியை தியாகராஜருக்கும் அர்ப்பணித்துள்ளனர். வன்மிகிநாதருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள பகுதியானது, தியாகராஜருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள பகுதியைக் காட்டிலும் பழமை வாய்ந்ததாகும். வன்மிகிநாதரின் சந்நிதியில், வழக்கமான லிங்கத்துக்கு பதிலாக, ஒரு புற்று நிறுவப்பட்டுள்ளது.

#சோழர்கால பெருமை

பா விவேக்


நாடாண்ட சோழ வம்சத்தின் அடையாளச்சின்னங்களில் தில்லை நடராஜர் கோயிலுக்கு எப்போதும்...

Posted: 14 Oct 2014 10:30 PM PDT

நாடாண்ட சோழ வம்சத்தின் அடையாளச்சின்னங்களில் தில்லை நடராஜர் கோயிலுக்கு எப்போதும் தனி இடமுண்டு. இந்தக் கோயிலின் கோயிலின் கருவறை அற்புதமான கலையம்சம் நிரம்பிய கருங்கல் சிற்ப வேலைப்பாடுகளுடன் தங்கவிமானத்தோடு கட்டப்பட்டதாகும். ஆதித்ய சோழனின் மகனான பராந்தக சோழன் இந்த தங்கவிமானக்கூரையை அமைத்ததாக தெரியவருகிறது. இதன் மூலம் 'பொன்வேய்ந்த சோழன்' எனும் பட்டப்பெயரும் அவருக்கு கிடைத்திருக்கிறது. சிவராத்திரியின்போது நடராஜர் கோயிலில் நாட்டியாஞ்சலி எனும் நடன ஆராதனை நிகழ்ச்சி வெகு சிறப்பாக ஐந்து நாட்களுக்கு நடத்தப்படுகிறது.

#சோழர்கால பெருமை

பா விவேக்


ஐராவதீஸ்வரர் கோயில், தாராசுரம் கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் பிரகதீஸ்வரர் கோவில்கள...

Posted: 14 Oct 2014 08:02 PM PDT

ஐராவதீஸ்வரர் கோயில், தாராசுரம் கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் பிரகதீஸ்வரர் கோவில்களில் இருப்பதை விட சிறியதாக இருந்தாலும், மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்டதாக திகழ்கிறது ஐராவதம் கோவில் சிற்பங்கள்.

ஒரு தேரை, குதிரைகள் இழுத்துச் செல்வது போல அமைந்திருக்கும் ....

#சோழர்கால பெருமை

பா விவேக்