Wednesday, 15 October 2014

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


இராஜகோபாலஸ்வாமி திருக்கோயில், மன்னார்குடி இராஜகோபாலஸ்வாமி திருக்கோயில் வளாகம், ச...

Posted: 15 Oct 2014 07:30 AM PDT

இராஜகோபாலஸ்வாமி திருக்கோயில், மன்னார்குடி இராஜகோபாலஸ்வாமி திருக்கோயில் வளாகம், சுமார் 23 ஏக்கர் பரப்பளவில் 24 சந்நிதிகள், 16 உயர்ந்த கோபுரங்கள், 7 முற்றங்கள், 7 கூடங்கள் மற்றும் 9 குளங்கள் ஆகியவற்றுடன் பரந்து விரிந்து காணப்படுகிறது. இக்கோயில் குலோத்துங்கச் சோழரின் ஆட்சிகாலத்தின் போது கட்டப்பட்டு, அவருக்குப் பின் வந்த பல்வேறு சோழ மன்னர்களால் புதுபிக்கப்பட்டுக் கொண்டே வந்துள்ளது. பின்னர், நாயக்க மன்னர்களின் ஆட்சிகாலத்தில் விரிவுபடுத்தப்பட்டது. இந்தக் கோயிலின் குளம் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோயில் குளங்களுள் ஒன்றாகும்.

#சோழர்கால பெருமை

பா விவேக்


கங்கை கொண்ட சோழபுரம், அரியலூர் சோழர்களின் உயர்தரமான கலை மற்றும் கட்டிடக்கலைக்கு...

Posted: 15 Oct 2014 06:30 AM PDT

கங்கை கொண்ட சோழபுரம், அரியலூர் சோழர்களின் உயர்தரமான கலை மற்றும் கட்டிடக்கலைக்கு சிறந்த சான்றாக திகழும் இந்தக் கோயில் சோழர்களால் கட்டப்பட்டதற்காக மட்டுமல்லாமல், தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய சிவலிங்கத்தைப் பெற்றிருப்பதற்காகவும் புகழ் பெற்றுள்ளது. இக்கோயில் கர்ப்பக்கிரகத்தில் வீற்றிருக்கும் சிவலிங்கம் 4 மீட்டர் உயரமுடையதாகும். கோயிலின் சுவர்களில் பதிக்கப்பட்டிருக்கும் செப்புப் பட்டைகளின் எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ள சோழ வம்சம் மற்றும் அவர்களின் அரசு பற்றிய வரலாற்று நிகழ்ச்சிகள், வேறந்த வரலாற்று நூல்களையும் விட சிறப்பான விளக்கங்களை தருவதாக இருக்கும்.

#சோழர்கால பெருமை

பா விவேக்


பிரகதீஸ்வரர் கோயில், தஞ்சாவூர் வட நாடெங்கும் பயணித்து பல வெற்றிகளை சுமந்து வந்த...

Posted: 15 Oct 2014 04:30 AM PDT

பிரகதீஸ்வரர் கோயில், தஞ்சாவூர் வட நாடெங்கும் பயணித்து பல வெற்றிகளை சுமந்து வந்த ராஜராஜ சோழன் தான் வழியில் கண்ட பல்வேறு சிற்பக்கலை மரபுகளைச் சேர்ந்த கோயில்களின் தோற்றத்தில் கவரப்பட்டு அவற்றினும் சிறந்த ஒரு உன்னத கலைப்படைப்பை தனது ராஜ்ஜியத்தில் நிர்மாணிக்க விரும்பி மிகுந்த முனைப்புடன் இந்தக் கோயிலை உருவாக்கியிருக்க வேண்டும் என்பது சில வரலாற்று ஆசிரியர்களின் கருத்து. வார்த்தைகளில் விவரிக்க முடியாத நுண்ணிய வடிவமைப்பு, கற்பனா சக்தி, மேலாண்மை துல்லியம், பொறியியல் நுணுக்கங்கள், அப்பழுக்கற்ற ஒழுங்கு, துளியும் பிசகாத கணக்கீடுகள் போன்ற அறிவியல் பூர்வமான நுட்பங்கள் இந்த ஒட்டுமொத்த கோயிலின் உருவாக்கத்தில் நிரம்பியுள்ளன என்றால் அது மிகையில்லை.

#சோழர்கால பெருமை

பா விவேக்


தியாகராஜஸ்வாமி திருக்கோயில், திருவாரூர் சோழ மன்னர்களால் கட்டப்பட்டு தமிழ்நாட்டின...

Posted: 15 Oct 2014 01:30 AM PDT

தியாகராஜஸ்வாமி திருக்கோயில், திருவாரூர் சோழ மன்னர்களால் கட்டப்பட்டு தமிழ்நாட்டின் மிகப் பழமையான கோயில்களுள் ஒன்றாக திகழ்ந்து வரும் தியாகராஜஸ்வாமி திருக்கோயில் 1-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோயிலின் மூலஸ்தானத்தை இரண்டாகப் பிரித்து, ஒரு பகுதியை "வன்மிகிநாதர்" என்ற பெயரில் வழங்கப்படும் சிவபெருமானுக்கும், மற்றொரு பகுதியை தியாகராஜருக்கும் அர்ப்பணித்துள்ளனர். வன்மிகிநாதருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள பகுதியானது, தியாகராஜருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள பகுதியைக் காட்டிலும் பழமை வாய்ந்ததாகும். வன்மிகிநாதரின் சந்நிதியில், வழக்கமான லிங்கத்துக்கு பதிலாக, ஒரு புற்று நிறுவப்பட்டுள்ளது.

#சோழர்கால பெருமை

பா விவேக்


நாடாண்ட சோழ வம்சத்தின் அடையாளச்சின்னங்களில் தில்லை நடராஜர் கோயிலுக்கு எப்போதும்...

Posted: 14 Oct 2014 10:30 PM PDT

நாடாண்ட சோழ வம்சத்தின் அடையாளச்சின்னங்களில் தில்லை நடராஜர் கோயிலுக்கு எப்போதும் தனி இடமுண்டு. இந்தக் கோயிலின் கோயிலின் கருவறை அற்புதமான கலையம்சம் நிரம்பிய கருங்கல் சிற்ப வேலைப்பாடுகளுடன் தங்கவிமானத்தோடு கட்டப்பட்டதாகும். ஆதித்ய சோழனின் மகனான பராந்தக சோழன் இந்த தங்கவிமானக்கூரையை அமைத்ததாக தெரியவருகிறது. இதன் மூலம் 'பொன்வேய்ந்த சோழன்' எனும் பட்டப்பெயரும் அவருக்கு கிடைத்திருக்கிறது. சிவராத்திரியின்போது நடராஜர் கோயிலில் நாட்டியாஞ்சலி எனும் நடன ஆராதனை நிகழ்ச்சி வெகு சிறப்பாக ஐந்து நாட்களுக்கு நடத்தப்படுகிறது.

#சோழர்கால பெருமை

பா விவேக்


ஐராவதீஸ்வரர் கோயில், தாராசுரம் கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் பிரகதீஸ்வரர் கோவில்கள...

Posted: 14 Oct 2014 08:02 PM PDT

ஐராவதீஸ்வரர் கோயில், தாராசுரம் கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் பிரகதீஸ்வரர் கோவில்களில் இருப்பதை விட சிறியதாக இருந்தாலும், மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்டதாக திகழ்கிறது ஐராவதம் கோவில் சிற்பங்கள்.

ஒரு தேரை, குதிரைகள் இழுத்துச் செல்வது போல அமைந்திருக்கும் ....

#சோழர்கால பெருமை

பா விவேக்


0 comments:

Post a Comment