Tuesday, 28 April 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


தமிழக மீனவர்களை, காங்கிரஸ் காப்பாத்தல காப்பாத்தல ன்னு திட்டிட்டு இருந்தவங்களுக்க...

Posted: 28 Apr 2015 08:38 AM PDT

தமிழக மீனவர்களை,
காங்கிரஸ் காப்பாத்தல
காப்பாத்தல ன்னு
திட்டிட்டு
இருந்தவங்களுக்கெல்லாம் இப்போ
ஒண்ணுமே
சொல்லலையா ??

தமிழக மீனவர்கள் கடத்தல்
தொழிலில்
ஈடுபடுகிறார்கள் என்று
இலங்கையே சொல்லாத
குற்றங்களை மீனவர்கள்
மீது சுமத்தி இருக்கே
நம்ம மத்திய அரசு..!!

@சர்மிளா

பந்தக்கால் நடுறதுல இருந்து பந்திக்கு அப்புறம் நடக்குற பார்ட்டி வரைக்கும் பசங்க ப...

Posted: 28 Apr 2015 06:28 AM PDT

பந்தக்கால் நடுறதுல
இருந்து பந்திக்கு
அப்புறம் நடக்குற
பார்ட்டி வரைக்கும்
பசங்க பாப்பாங்க...

ஆனா
பொண்ணுங்க பந்தில
வைக்குற பாதி சாப்பாட
வேஸ்ட் பண்ணிட்டு
ஸ்டேஜ்ல வந்து மேக் அப்
ஒகேவா கேப்பாங்க...

இதான் நட்புல
பொண்ணுங்களுக்கும்
பசங்களுக்கும் உள்ள
வித்தியாசம்...

@மோனிக்கா

நெடுநல்வாடையால் அறியலாகும் பண்டைத் தமிழகம் சங்க இலக்கியங்கள் ஒவ்வொன்றிலும் அக்க...

Posted: 28 Apr 2015 05:00 AM PDT

நெடுநல்வாடையால் அறியலாகும் பண்டைத் தமிழகம்

சங்க இலக்கியங்கள் ஒவ்வொன்றிலும் அக்கால மககளின் வாழ்க்கையினைப் பார்க்க முடிகிறது. அதுபோல் நெடுநல்வாடையிலும், அன்றைய தமிழ் மன்னரும், மக்களும் வாழ்ந்த முறையினைக் காண முடிகின்றது. அதுவும் குளிர்காலத்தில் நடந்த நிகழ்ச்சிகள் இன்றும் நம் கண் முன்னே காணும் இனிய காட்சிகளாகவே காட்சி தருகின்றன. ஒவ்வொரு காட்சியும் ஒப்பிலா தமிழகத்தின் உண்மை பிரதிபலிப்புகள். காலம் காட்டும் கண்ணாடியாய் நின்று அக்காலத் தமிழகத்தை நமக்குக் காட்டிக் கொண்டிருக்கும் இலக்கியமாகிய நெடுநல்வாடை வழி சங்கத் தமிழரைக் காண்போம்.

குளிர்காலத்தில் கோவலரின் நிலை

மழை பெய்தலால் இடையர்கள், ஆநிரைகளை மழை வெள்ளம் வாராத மேட்டுப்பகுதிக்கு இட்டுச் சென்றனர். பழகிய இடத்தை விட்டு புதிய பகுதிக்குச் செல்லும்போது ஏற்படும் அலுப்பும் சலிப்பும் அவர்களுக்கும் இருந்தது போலும். பாடல் வரிகளே காட்சியைக் காட்டுகின்றன.
ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்,
ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பி,
புலம்பெயர் புலம்பொடு கலங்கி, (3 - 5)
என்கிறது நெடுநல்வாடை.

மாலை வழிபாடு

பெண்கள் மாலைக்காலத்தில் விளக்கேற்றுவதும், நெல்லையும் மலரையும் தூவிக் கைத் தொழுது அதனை வணங்குவதும் வழக்கமாகக் கொண்டிருந்தமையினை,
இரும்பு செய் விளக்கின் ஈர்ந்திரி கொளீஇ,
நெல்லும் மலரும் தூஉய், கை தொழுது, (42 - 43)
என்ற அடிகள் காட்டுகின்றன.
வாடைக்காலத்து பயன்படுத்தாத பொருட்கள்

கோடைக்காலத்து விசிறி பயன்படுத்தியுள்ளார்கள். அது ஆலவட்டம் என்று அழைக்கப்பட்டுள்ளது.
கைவல் கம்மியன் கவின் பெறப் புனைந்த
செங்கேழ் வட்டம் சுருக்கி; கொடுந்தறி
சிலம்பி வால் நூல் வலந்தன தூங்க; (57 - 59)

கோடைக்காலத்து அரைத்துப் பூசிய சந்தனத்தையும் குளிர்க் காலத்து நாடவில்லை. இதனால் வடநாட்டிலிருந்து வாங்கி வந்த சந்தனக்கல்லும், தென்திசையிலிருந்து பெற்ற சந்தனக் கட்டைகளும் பயன்படுத்தப்படாமல் கிடந்தன.

வடவர் தந்த வான் கேழ் வட்டம்
தென்புல மருங்கில் சாந்தொடு துறப்ப, (51 - 52)
குடிப்பதற்கும் குவிந்த வாயையுடைய குடத்திலிருந்த குளிர்ந்த நீரினைப் பருகவில்லை.
கல்லென் துவலை தூவலின், யாவரும்
தொகுவாய்க் கன்னல் தண்ணீர் உண்ணார், (64 - 65)

இவற்றை நோக்க கோடைக்காலத்து விசிறியும், சந்தனமும், தொகுவாய்க் கன்னலில் இருக்கும் குளிர்ந்த தண்ணீரும் பயன்படுத்தும் பழக்கம் இருந்தமையினை அறியமுடிகிறது. அதோடு தமிழரின் காலம் அறிந்து உடல்நலம் போற்றி வாழ்ந்த அருமையும் புலப்படுகிறது.
வாடைக் காலத்து பயன்படுத்தும் பொருட்கள்

வாசனை மர விறகில் நெருப்பூட்டி தூயமூட்டியில் ஏற்படுத்திய வாசனைப் புகையும் நெருப்பும் குளிருக்கு இதமாயின.

தண் நறுந் தகர முளரி நெருப்பு அமைத்து,
இருங்காழ் அகிலொடு வெள் அயிர் புகைப்ப, (55 - 56)
பகுவாய்த் தடவில் செந்நெருப்பு ஆர; (66)

என்பதும் இச்செய்திகளைப் பகருகின்றன. மேனியில் பூசுதற்கு குற்றேவல் செய்வோர், கொள்ளின் நிறத்தை ஒத்த கத்தூரி முதலிய வெப்பம் தரும் நறுமணப்பொருள்களை அரைத்தனர்.

காலம் காட்டும் இயற்கைக் கருவி

மாலைக்காலம் வந்துவிட்டது என்பதை அறியவே முடியாதவாறு மழைக்காலம் விளங்கியது. விளக்கு ஏற்றி வழிபட மாலைக் காலத்தைப் பெண்கள் அறிவதற்குத் தாம்பாளத்தில் (தட்டு) மலரும் பருவத்து பிச்சியின் அரும்புகளை இட்டு வைத்திருந்தனர். மாலையும் வந்தது; மலரும் மலர்ந்தது; வந்தது மாலையென மகளிரும் அறிந்தனர் ; வழிபாடும் இயற்றினர்.

இயற்கையினைக் காலக்கருவியாய் பயன்படுத்திய தமிழரின் அறிவினை என்னவென்பது? இதனினும் மேலாய் பொழுதினை அறிவித்த மலரும் பருவத்து மலரினைப் 'போது' என்று பெயரிட்ட புலமையும் வியந்து போற்றுதற்குரியது.

விளக்கு

யவனர்களால் செய்யப்பட்ட பாவை விளக்கினையும் (102) இரும்பால் செய்யப்பட்ட விளக்குகளையும் (42) பயன்படுத்தியுள்ளனர் அன்றைய தமிழர். பாண்டில் விளக்கும் போர்ப்பாசறையில் எரிந்தது (175). பாண்டியரின் போர் பாசறை என்பதால் அங்கே எரியும் விளக்கு பாண்டில் ஆனதோ?
வீடுகள்
மக்கள் வாழ்கின்ற பல மாடிகளைக் கொண்ட வீடுகளும் (29) இருந்தன. மன்னனின் அரண்மனை பல உறுப்புக்களைக் (72 - 92) கொண்டு விளங்கியது.

பயிறு வகைகள்

நெல் (43)
கொள் (50)
அரிய சொற்கள்
அர்ப்பனி - கண்ணீர் (164)
தொகுவாய் கன்னல் - குறுகிய வாயுடைய பாத்திரம் (65)
பிடகை - பூந்தட்டு (39)
விளக்கம் - மோதிரம் (144)
வட்டம் - விசிறி (58)
வம்பு - கச்சு (150)
வடசொற்கள்
தசநான்கு (115)
சாலேகம் (125)
உரோகிணி (163)
'வீழ்' தாலியா?
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்துப்
பின் அமை நெடுவீழ் தாழ, (136 - 137)

பிரிவுத் துயரோடு கட்டிலில் இருக்கும் தலைவியைப் பற்றிய வர்ணனை இது. இதற்கு உரை வகுத்த உரையாசிரியர் நச்சினார்க்கினியர், 'பின்னமை நெடு வீழ் - குத்துதல் அமைந்த நெடிய தாலி' என்று உரை வகுத்துள்ளார். முதுகிலே கிடந்த (பின்புறம்) கூந்தல், கட்டிலில் வீற்றிருக்கும் தலைவியின் மார்பிலே, கிடந்தது, முத்துமாலை கிடந்த மார்பிலே கூந்தல் தாழ்ந்து தொங்கியது என்பதே பொருள், சிறுபாணாற்றுப்படையிலும், பிடிக்கை யன்ன பின்னும்வீழ் சிறுபுறத்து (191) என்ற வரியினை நோக்க 'வீழ்' என்பது கூந்தல் வீழ்ந்து கிடந்த பின்புறம் என்ற பொருளையே தருகிறது. வீழ் என்ற சொல் வேறு எந்தப் பாடலிலும் 'தாலி' என்ற பொருளினைத் தரவில்லை என்பதும் நாம் சிந்தித்துத் தெளிதல் அவசியமாகிறது. எனின், நெடுநல்வாடையில் கூறப்பட்ட 'வீழ்' என்ற சொல், தாலி என்ற பொருளைத் தரவில்லை என்ற முடிவினைப் பெற வைப்பதாகக் கொள்ளலாம்.

@முனைவர் இரா.ருக்மணி


ராகுல் மாட்டுக்கறி சாப்பிட்டு, கேதார்நாத் போனதால் நிலநடுக்கம்: சாக்ஷி மகாராஜ்...

Posted: 28 Apr 2015 12:59 AM PDT

ராகுல் மாட்டுக்கறி
சாப்பிட்டு, கேதார்நாத்
போனதால்
நிலநடுக்கம்:
சாக்ஷி மகாராஜ்

# சென்னை ல நான் இப்போ மட்டன் சாப்பிட்டேன் சுனாமி ஏதுனா வருங்களா அய்யா...

நம்மகிட்ட முப்பதாயிரம் ரூபா பீச வாங்கிட்டு "உங்க பிள்ளை ஏன் சரியா படிக்கிறதில்லன...

Posted: 28 Apr 2015 12:54 AM PDT

நம்மகிட்ட முப்பதாயிரம் ரூபா
பீச வாங்கிட்டு "உங்க
பிள்ளை ஏன் சரியா
படிக்கிறதில்லன்னு" நம்மகிட்டயே கேள்வி கேக்குறானுங்க!!

அடேய்!!

@காளிமுத்து

பெங்களூர் மாநாகராட்சியை பிரித்தால் பெங்களூர் தமிழர்கள் வசமாகிடும்...... கிருஷ்ணா...

Posted: 27 Apr 2015 11:37 PM PDT

பெங்களூர்
மாநாகராட்சியை
பிரித்தால் பெங்களூர்
தமிழர்கள் வசமாகிடும்......
கிருஷ்ணாப்பா கதறல்
தமிழ்நாட்டின் அருகில்
இருப்பதால் அந்த
பகுதியை சேர்ந்தவர்கள்
தமிழ்நாட்டுடன் இணைக்க
வேணடும் என்று
கோரிக்கை விடுக்கும்
வாய்ப்பும் உள்ளது. 1990ம்
ஆண்டிற்கு முன்பு
பெங்களூரு கேஆர் மார்க்
கெட், கலாசிபாளையம்
உள்ளிட்ட அனைத்து
மார்க்கெட் மற்றும்
ராமபுரம் போன்ற
பகுதியில் தமிழர்கள்
ஆக்கிரமிப்பு
செய்திருந்தனர். அதாவது
அனைத்து பகுதியிலும்
தமிழர்களின் ஆதிக்கமே
காணப் பட்டது. காவிரி
கலவரத்தின் போது
அப்போது முதல்வராக
இருந்த பங்காரப்பா, தமிழர்
களின் ஆதிக்கத்தை
கட்டுப்படுத்தினார். அதன்
மூலம் தமிழர்களுக்கு
உரிய பாடம் கற்பிக்கப்பட்டத
ு.
ஒரு காலத்தில் ராமபுரம்
போன்ற பகுதியில்
கன்னடர்கள் நுழைய
முடியாது. பாகிஸ்தான்
நாட்டிற்குள் செல்வது
போன்ற நிலையில்
இருந்தது. 1990ம்
ஆண்டிற்கு பிறகே அந்த
நிலையில் மாற்றம்
ஏற்பட்டு ,தமிழர்களிடம்
பயம் ஏற்பட்டது.
தற்போதுள்ள நிலையில்
பெங்களூரில் வசிக்கும்
கன்னடர்களின் சதவீதம் 32
சதவீதம் மட்டுமே.
பெங்களூரு மூன்றாக
பிரிக்கப்பட்டால் , கன்னட
மொழி மற்றும் கன்னடர்கள்
சிறுபான்மையாகிவ
ிடுவோம். எனவே,
மறுபடியும் தமிழர்களின்
தனி ராஜ்ஜியம்
ஏற்பட்டுவிடும் என்பதால்
கன்னட மொழி மற்றும்
கன்னடர்களின் நலனை
முன்னிட்டு அகண்ட
பெங்களூரே
அவசியமாகும். இவ்வாறு
கிருஷ்ணப்பா கூறினார்.

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


உண்மை வரிகள்..... 1. ஒரு நாளைக்கு ஐந்து ட்ரெஸ் மாற்றவேண்டுமென்றால், பணக்காரனாக இ...

Posted: 28 Apr 2015 09:03 AM PDT

உண்மை வரிகள்.....
1. ஒரு நாளைக்கு ஐந்து ட்ரெஸ் மாற்றவேண்டுமென்றால், பணக்காரனாக இருக்கவேண்டிய அவசியமில்லை.. கைக்குழந்தையாக இருந்தாலே போதும் !
2. நேர்மையாக இருந்து என்ன சாதித்தாய் என எவரேனும் கேட்டால், நேர்மையாக இருப்பதே இங்கு சாதனை தான் எனசொல்ல வேண்டியுள்ளது..
3. பெண்கள் அதிகம் கேள்வி கேட்பவர்கள் என்பதை ஔவையாரின் பெயரிலிருந்தே அறியலாம் = How ? Why ? யார் ?
4. பெண்களுடைய தைரியங்களுக்கு ஆண்கள் "அகராதி" யில் திமிர் எனப் பெயருண்டு..
5. ஸ்பென்சர் பிலாசா ல 1998ரூ பில்லுக்கு 2000ரூபாய் தருகிர நாம், பிச்சைகாரனுக்கு 1 ரூபாய் தர தயங்குகிரோம்.
6. மெசேஜ் அனுப்பினா உடனே ரிப்ளை அனுப்புறது கஸ்டமர்கேர் மட்டும் தான்..
7. காதலித்து பார்… கழிவறையில் கவிதை வரும்… காதலிக்காமல் இருந்து பார்… அங்கே வர வேண்டியது நிம்மதியாக வரும்…!!
8. இலங்கையில் எண்ணை கிணறு இருந்து இருந்தால் இன்று ராஜ பக்சே தூக்கில் போடபட்டு இருப்பார் அமெரிக்காவால்..!
9. இலவசத்தை நம்பி ஒட்டு போடும் மக்களுக்கு விலை ஏற்றத்தில் ரோஷம் வருவது என்பது பிச்சைகாரன் சுடுசோற்றை எதிர்பார்ப்பது போல…..

பிடிச்சு இருந்தா எங்கள் பக்கத்தை லைக் பண்ணுங்கள்

Posted: 28 Apr 2015 09:00 AM PDT

பிடிச்சு இருந்தா எங்கள் பக்கத்தை லைக் பண்ணுங்கள்


இதுவும் கடந்து போகும்னு எனக்கு தெரியும். ஆனா ஏன் இவ்வளவு மெதுவா கடந்து போகுதுன்ன...

Posted: 28 Apr 2015 08:13 AM PDT

இதுவும் கடந்து போகும்னு எனக்கு தெரியும். ஆனா ஏன் இவ்வளவு மெதுவா கடந்து போகுதுன்னு தான் தெரியல..


unknown number க்கு SMS செய்யும் பெண்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய குறும்படம் ! ஒ...

Posted: 28 Apr 2015 08:10 AM PDT

unknown number க்கு SMS செய்யும் பெண்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய குறும்படம் ! ஒரு SMS ஆல் வந்த மரணம்


unknown number க்கு SMS செய்யும் பெண்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய குறும்படம் !
www.indiasian.com
dont send sms or call unknown number

உடல் அரிப்பாக உள்ளதா? இதோ குணமாக்கும் மூலிகை உடல் அரிப்பு என்பது குழந்தைகள் முத...

Posted: 28 Apr 2015 07:02 AM PDT

உடல் அரிப்பாக உள்ளதா? இதோ குணமாக்கும் மூலிகை

உடல் அரிப்பு என்பது குழந்தைகள் முதல் பெரியவர் வரை யாரையும் விட்டு வைப்பதில்லை.
இதனால் அடிக்கடி மருத்துவரை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. ஆனால் வீட்டிலிருந்தபடியே இந்த அரிப்பை விரட்ட அற்புதமான மூலிகை தாவரம் கீழாநெல்லி.

இது பல நோய்களை தீர்க்ககூடிய வல்லமை படைத்தது. இது ஒரு சிறு தாவர வகையை சேர்ந்தது.

இதன் இலையின் அடிக்காம்பில் வரிசையாக காய்கள் காய்ப்பதால் கீழ்காய்நெல்லி என தமிழர் பெயரிட்டு அழைத்தனர்.

இதை பேச்சு வழக்கில் கீழாநெல்லி, கீழ்வாய் நெல்லி, கீட்காநெல்லி எனவும் அழைக்கின்றனர்.

இந்த செடியின் தண்டு, வேர் மற்றும் இலைகள் என அனைத்தும் பயன்தரக் கூடியவை.

கீழாநெல்லியின் மகத்துவங்கள்

கீழாநெல்லியினால் தயாரித்த தையலம் கை,கால் எரிச்சல், கண்களின் உஷ்ணத்தன்மை, தலைசுற்றல் மயக்கம், பித்தக் கிறுகிறுப்பு, அதிக போகத்தினால் உண்டான அசதி அகியவற்றை நீக்கும் குணமுடையது.

குளிர் காய்ச்சலுக்கு கீழாநெல்லி ஒரு பங்கும், மிளகு அரை பங்கும், வெள்ளைப் பூண்டு அரை பங்கும் சேர்த்து நன்றாக கரைத்து மிளகளவு மாத்திரைகளாகச் செய்து காலை மாலை கொடுக்க காய்ச்சல் குணமாகும்.

ரத்த குறைவினால் ஏற்படும் சோகை வியாதிக்கும் கீழாநெல்லி ஒரு நல்ல மருந்தாக பயன்படுகிறது.

கல்லீரல், மண்ணீரல், சிறு நீரகங்களின் வீக்கத்தையும் குறைத்து இரத்தத்தை சுத்தமடைய செய்கிறது.

குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று மாந்தம், சீதபேதி முதலிய நோய்களுக்கும் கீழாநெல்லி உதவுகிறது.

இதை சுண்டைக்காயளவு பாலோடு அல்லது நீரிலோ கொடுத்தால் எந்த நோய்களும் அண்டாமல் இருக்கும்.

இதன் இலைகளை தேவயான அளவு அரைத்து உடம்பில் தேய்த்து குளித்தால், உடலில் ஏற்படும் அரிப்பு மற்றும் சிறு புண்கள் ஒழிந்து விடும்


பிடிச்சு இருந்தா எங்கள் பக்கத்தை லைக் பண்ணுங்கள்

Posted: 28 Apr 2015 07:00 AM PDT

பிடிச்சு இருந்தா எங்கள் பக்கத்தை லைக் பண்ணுங்கள்


என் மேல் ஏனடா அதிகமாய் கோவபடுகிறாய் என்று அடிக்கடி நீ கேப்பாய் கோவத்தைவிட உன்...

Posted: 28 Apr 2015 06:13 AM PDT

என் மேல் ஏனடா
அதிகமாய் கோவபடுகிறாய்
என்று அடிக்கடி நீ கேப்பாய்
கோவத்தைவிட உன்மேல்
நான் அதிக பாசம் வைத்திருப்பது
தெரியாமல்........


ஒவ்வெரு இந்தியனும் பார்க்க வேண்டிய வீடியோ ! பிறர் உயிர் காப்போம்

Posted: 28 Apr 2015 05:10 AM PDT

ஒவ்வெரு இந்தியனும் பார்க்க வேண்டிய வீடியோ ! பிறர் உயிர் காப்போம்


ஒவ்வெரு இந்தியனும் பார்க்க வேண்டிய வீடியோ ! பிறர் உயிர் காப்போம்
www.indiasian.com
based on true life events

படித்ததில் ரசித்தது "ரவி இருக்காங்களா....?" "இல்லீங்க....அவரு நேத்து நைட்டுதான்...

Posted: 28 Apr 2015 05:09 AM PDT

படித்ததில் ரசித்தது
"ரவி இருக்காங்களா....?"
"இல்லீங்க....அவரு நேத்து நைட்டுதான் இறந்து போனாரு....."
"ஓ...மை காட்....!"
"ஆமா...நீங்க யாருங்க...?"
"ரவியும் நானும் ஒரு வருசமா நல்ல பிரண்ட்ஸ்... ஃபேஸ்புக் மூலமாத்தான் நண்பரானோம்....போன வாரந்தான் நேர்ல சந்திப்போம்னு சொல்லி அட்ரஸ்ஸ குடுத்தாரு...அதுக்குள்ளே இப்படி ஆகிடுச்சே...ச்சே..."
"என்னது ப்ரண்ட்ஸா.....இப்படியொரு அழகான பொண்ணு ப்ரண்டா இருக்குறதா...தாத்தா சொல்லவே இல்லையே...."
"என்னது தாத்தாவா.....????????????!!!!!!!!!!!!!!!!!!

பிடிச்சு இருந்தா எங்கள் பக்கத்தை லைக் பண்ணுங்கள்

Posted: 28 Apr 2015 05:00 AM PDT

பிடிச்சு இருந்தா எங்கள் பக்கத்தை லைக் பண்ணுங்கள்


Posted: 28 Apr 2015 04:13 AM PDT


வெளிநாட்டு வாழ்க்கை... வெளிநாட்டில் இருக்கும் தொழிலாளிகள் அவரவர் நாட்டிற்கு விடு...

Posted: 28 Apr 2015 03:36 AM PDT

வெளிநாட்டு வாழ்க்கை...
வெளிநாட்டில் இருக்கும் தொழிலாளிகள் அவரவர் நாட்டிற்கு விடுமுறைக்கு செல்லும்போது கடைகளில் பொருட்கள் வாங்கும் விதம்...
சீனக்காரன் வாங்கும் பொருட்கள்: அவனுக்கு தேவையான ஆடம்பர உடைகள், வாசனை திரவியங்கள் அப்புறம் அவனோட பெண்தோழிக்கு தேவையான ஆடம்பர பொருட்கள்.
ஜப்பான்காரன்: அவனுக்கும் அவனோட தோழிக்கும் தேவையான செல்போன்களும், எலட்ரிக் பொருட்களும்.
ஆனா நம்ம ஆளுங்க வாங்குற பொருட்கள பாருங்க:இந்த தைலம் பாட்டில் யாருக்குங்கனு கேட்டா அவர் சொல்லுவாரு இது எங்க ஊர்ல உள்ள வயசானவங்களுக்கு கொடுக்க,கழுத்துல ரெண்டு செயின் போட்டுருப்பாரு.. என்ன வசதியான்னு கேட்டா அவரு உடனே "இல்லைங்க ஒன்னு அம்மாவுக்கு இன்னொன்னு மனைவிக்குன்னு சொல்லுவாரு.
"அப்புறம் இந்த கேமரா போன் அது என் அக்காவுக்கு,ஏன் இவளோ சாக்லேட்டுன்னு கேட்டா சொந்தகார பசங்க சின்னபுள்ளைங்க நிறைய இருக்குன்னு சொல்லுவாங்க.
ஏன் எவளோ கோல்டு வாட்ச்ன்னு கேட்டா ஊர்ல அப்பா, பெரியப்பா, சித்தப்பா, மாமா, மச்சான், அண்ணன், தம்பின்னு ஒரு பெரிய லிஸ்டே போகும்..
அப்புறம் உங்க நண்பர்களுக்குனு கேட்ட சரக்கும், செண்டுபாட்டிலும் இருக்குனு சொல்லுவாரு.கடைசியா எல்லாம் வாங்கிட்டு மூட்ட கட்டிவிட்டு அவரு ஊருக்கு போவதற்காக போடும் துணி போன தீபாவளிக்கு வீட்டில் இருந்து எடுத்து அனுப்பனதா இருக்கும்!
கைல சாதாரண நோக்கியா 1100., இப்படி முகம் மலர தாய்மண்ணில் காலடி எடுத்து வைக்கும் சந்தோஷத்தில் வருபவரே வெளிநாட்டு தொழிலாளி... தன் நலம் மறந்து வீட்டுக்காக நாடு விட்டு நாடு சென்று உழைத்து தனக்காக ஒன்றும் சேர்க்காமல் வருபவரே...
----------வெளிநாட்டு வாழ் நண்பர்களுக்கு சமர்ப்பணம்


Posted: 28 Apr 2015 03:22 AM PDT


மயூரன் சுகுமாருக்கு இன்னும் சில மணி நேரங்களில் மரண தண்டனை? இறப்பதற்கு சில மணி நே...

Posted: 28 Apr 2015 03:22 AM PDT

மயூரன் சுகுமாருக்கு இன்னும் சில மணி நேரங்களில் மரண தண்டனை? இறப்பதற்கு சில மணி நேரம் முன் திருமணம்

போதைப்பொருள் கடத்தல் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த அவுஸ்திரேலியரான மயூரன் சுகுமாரன் சில மணித்தியாலங்களில் மரண தண்டனைக்குள்ளாகப் போகிறான்.
போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக மயூரன் சுகுமாரன், அன்ட்ரூ சான் ஆகியோர் இந்தோனேசிய பொலிசாரால் கைது செய்யப்பட்டு மரண தண்டனையும் விதிக்கப்பட்டாயிற்று.

இன்று இரவு இவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவிருப்பதாக மயூரனின் குடும்பத்தாருக்கு இந்தோனேசிய அதிகாரிகளினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு இறுதிவிடை கொடுக்கும் சந்தர்ப்பத்தினை அவர் குடும்பத்தினருக்கும் நண்பர்களிற்கும் இந்தோனேசிய அரசு வழங்கியுள்ளது.

அதன் பின்னர் அவர்கள் வேறாக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. பின்னர் சிறைக்கு வெளியே காத்திருக்கும் அவர்களது குடும்பத்தினரிடம் உடல்கள் ஒப்படைக்கப்படும்.

தன் வாழ்வின் முற்றுப்புள்ளி இன்று எனத் தெரிந்தும் மயூரனின் இறுதி விருப்பங்களைக் கேட்கையில் கலங்காத கண்களும் குளமாகும்.

எவ்வித சலனமும் இல்லை மயூரனின் கண்களில். தூரிகையினால் துளையிடும் இதயத்தினை வரைந்து நாழிகைகளை நகர்த்தி அமைதி தேடும் இவன் கரங்கள்.

அந்தக் கரங்கள் அவன் விழிநீரை துடைத்து துடைத்து தோல்வி கண்டதாலோ என்னவோ இன்று ஓவியம் தீட்டுவதில் மட்டும் கவனம் செலுத்துகிறது.

மயூரன் சுகுமாரன் தனது இறுதி மணித்தியாலங்களை ஓவியம் தீட்டுவதில் செலவிட விருப்பம் தெரிவித்துள்ளார்.

மயூரன் தனக்கு பாய்ச்சப்படும் குண்டுகளை செலுத்தும் ஆயுததாரியை நேரடியாக பார்த்துக் கொண்டே மரணத்தை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று மரணதண்டனை எதிர்கொள்ளும் மயூரன் சுகுமாரன் உட்பட ஏழு பேர் குறித்து மனித உரிமை வழக்கறிஞர் ஜியோபிரி ராபர்ட்சன், சிட்னி மார்ட்டின் பிளேஸ் ஊர்வலத்தில் பேசவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்தோனேசியா அரசாங்கம் விதிக்கும் மரண தண்டனையானது, உயிர்களையும் நாட்டு சட்டத்திட்டங்களையும் அவமதிப்பது போல் காணப்படுவதாக குறித்த மனித உரிமை வழக்கறிஞர் ஜியோபிரி ராபர்ட்சன் தெரிவித்துள்ளார்


மயூரன் சுகுமாருக்கு மரண தண்டனை? இறப்பதற்கு சில மணி நேரம் முன் திருமணம்
www.indiasian.com
mayuran married his lover in jail

Posted: 28 Apr 2015 03:21 AM PDT


இந்த ஓவியம் பிடித்திருந்தால் ஒரு லைக் போடுங்க...

Posted: 28 Apr 2015 03:13 AM PDT

இந்த ஓவியம் பிடித்திருந்தால் ஒரு லைக் போடுங்க...


பிடிச்சு இருந்தா எங்கள் பக்கத்தை லைக் பண்ணுங்கள்

Posted: 28 Apr 2015 03:00 AM PDT

பிடிச்சு இருந்தா எங்கள் பக்கத்தை லைக் பண்ணுங்கள்


சென்னைப் பெண்களின் அசத்தலான டான்ஸ்! வீடியோ இணைப்பு

Posted: 28 Apr 2015 01:41 AM PDT

சென்னைப் பெண்களின் அசத்தலான டான்ஸ்! வீடியோ இணைப்பு


சென்னைப் பெண்களின் அசத்தலான டான்ஸ்! வீடியோ இணைப்பு
www.indiasian.com
amazing Dance floor chennai express

தொட்டால்சினுங்கி தொட்டுதான் பாருங்களேன்.... எச்சரிக்கை: இந்த பக்கத்தை லைக் செய்ய...

Posted: 28 Apr 2015 01:09 AM PDT

தொட்டால்சினுங்கி
தொட்டுதான் பாருங்களேன்....
எச்சரிக்கை: இந்த பக்கத்தை லைக் செய்ய வேண்டாம்,சிரித்தே செத்து போக கூடும்.'s photo.


பிடிச்சு இருந்தா எங்கள் பக்கத்தை லைக் பண்ணுங்கள்

Posted: 28 Apr 2015 01:00 AM PDT

பிடிச்சு இருந்தா எங்கள் பக்கத்தை லைக் பண்ணுங்கள்


சமந்தா பிறந்த நாள் இன்று #HappyBirthdaySamantha #Samantha

Posted: 28 Apr 2015 12:45 AM PDT

சமந்தா பிறந்த நாள் இன்று
#HappyBirthdaySamantha #Samantha


பிடிச்சு இருந்தா எங்கள் பக்கத்தை லைக் பண்ணுங்கள்

Posted: 28 Apr 2015 12:00 AM PDT

பிடிச்சு இருந்தா எங்கள் பக்கத்தை லைக் பண்ணுங்கள்


நாம படிச்ச படிப்புதான் நம்மை பல வேலைகளை செய்ய விடாமல் தடுக்கிறது அதுல ஒன்னு விவ...

Posted: 27 Apr 2015 11:13 PM PDT

நாம படிச்ச படிப்புதான் நம்மை பல வேலைகளை செய்ய விடாமல் தடுக்கிறது

அதுல ஒன்னு விவசாயம்...


கொத்துக் கறி புலாவ் புலாவ் உணவு என்பது அனைவருக்கு பிடித்த உணவாகும், இந்த புலாவ்...

Posted: 27 Apr 2015 11:02 PM PDT

கொத்துக் கறி புலாவ்
புலாவ் உணவு என்பது அனைவருக்கு பிடித்த உணவாகும், இந்த புலாவ் உணவுனை விதவிதமாக செய்து சாப்பிடலாம்.
அதில் ஒருவகையான கொத்துக்களி புலாவ் இதோ,
என்னென்ன தேவை?
கொத்துக் கறி - அரைக் கிலோ
சாதம் - 2 கப்
வெங்காயம் - ஒன்று (நீளமாக நறுக்கவும்)
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
புதினா - கைப்பிடி
பச்சைமிளகாய் - 4 (நீளமாக நறுக்கவும்)
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய்
பிரிஞ்சி இலை
பட்டை
எப்படிச் செய்வது?
குக்கரில் கொத்துக்கறியுடன் சிறிது உப்பு, மஞ்சள் தூள் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கால் கப் தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வேக வைக்கவும். சாதத்தை சிறிது உப்பு போட்டு உதிரியாக வடித்து வைக்கவும்.
ஒரு கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து நீளமாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். அதனுடன் நீளமாக நறுக்கிய பச்சைமிளகாய் மற்றும் நறுக்கிய புதினா இலைகளை சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும்.
பின்னர் அதனுடன் வேக வைத்த கொத்துக் கறி தேவைப்பட்டால் உப்பு போட்டு நீர் சுண்டும் வரை கிளறவும். கொத்துக் கறி கலவையுடன் வடித்த சாதத்தை சேர்த்து அதனுடன் சிறிது மிளகாய்த்தூளை போட்டு கிளறி இறக்கவும்.
சுவையான கொத்துக் கறி புலாவ் ரெடி. சூடாக பரிமாறவும்


பிடிச்சு இருந்தா எங்கள் பக்கத்தை லைக் பண்ணுங்கள்

Posted: 27 Apr 2015 11:00 PM PDT

பிடிச்சு இருந்தா எங்கள் பக்கத்தை லைக் பண்ணுங்கள்


இந்திய அணி செய்த காரியத்தைப் பார்த்தால் நீங்கள் கண்டிப்பாய் சிரிப்பீர்கள்

Posted: 27 Apr 2015 10:42 PM PDT

இந்திய அணி செய்த காரியத்தைப் பார்த்தால் நீங்கள் கண்டிப்பாய் சிரிப்பீர்கள்


இந்திய அணி செய்த காரியத்தைப் பார்த்தால் நீங்கள் கண்டிப்பாய் சிரிப்பீர்கள்
www.indiasian.com
Shikhar Dhawan

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே உலகமே சொலலுதே உண்ண பாத்தாலே தங்கம் உருகுதா அங்கம்...

Posted: 27 Apr 2015 10:23 PM PDT

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே உலகமே சொலலுதே உண்ண பாத்தாலே தங்கம் உருகுதா அங்கம் கறையுதா



துருக்கி நாட்டில் நடந்த உண்மை சம்பவம்… இரண்டு வயதே ஆன தங்கள் பெண் குழந்தைக்கு த...

Posted: 27 Apr 2015 10:13 PM PDT

துருக்கி நாட்டில் நடந்த உண்மை சம்பவம்…

இரண்டு வயதே ஆன தங்கள் பெண் குழந்தைக்கு திடீரென்று நோய் ஏற்பட்டதால் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்து விட்டு குழந்தையை காப்பாற்றுவது சற்று கடினமே என்றனர்.ஆனால் இதே நோயால் இதற்கு முன்னர் பாதிக்கப்பட்ட ஒருவரின் இரத்தம் பெறப்பட்டு குழந்தைக்கு ஏற்றப்படவேண்டும் அப்படி செய்தால் குணமாவதற்கு வாய்ப்புகள் உண்டு.இரத்தத்திற்கு நீங்கள் உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பெற்றோரிடம் தெரிவித்தனர்.

பெற்றோர்களின் முகத்தில் உடனே ஒரு நம்பிக்கை ஒளி பிறந்தது. தற்போது ஐந்து வயதிலுள்ள அவர்களது இன்னொரு மகன் குழந்தைப் பருவத்தில் அதே நோய்க்குள்ளாகி அபூர்வமாக குணமடைந்திருந்தான். இதை மருத்துவர்களிடம் சொன்ன போது மருத்துவர்களுக்கும் நம்பிக்கை அதிகரித்தது.

மருத்துவர்கள் சிறுவனை உட்கார வைத்துவிட்டு அன்பாக நிலமையை எடுத்து சொல்லி "உனது தங்கையின் உயிரைக் காப்பாற்றுவதற்காக இரத்தம் வழங்க விருப்பமா?" என்று கேட்டனர்.

சிறுவன் சிறிது நேரம் மௌனமாக யோசித்துக் கொண்டிருந்தான். பிறகு என் ரத்தம் எடுத்து அவளுக்கு கொடுப்பதின் மூலம் அவள் காப்பாற்றப்படுவாள் என்றால் தாராளமாக எடுத்து கொள்ளுங்கள் என்றான்.

சிறுவனிடமிருந்து இரத்தம் பெறப்பட்டு நேரடியாக குழந்தைக்கு ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. சிறுவனுக்குப் பக்கத்தில் பெற்றோரும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். பெற்றோர் சிறுவனை தைரியமூட்டி கொண்டிருந்தனர் ,பின்னர் இரத்தப் பரிமாற்றம் ஆரம்பமானது.சிறுவன் புன்முறுவலுடன் தனது தங்கையுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

நேரம் செல்லச்செல்ல குழந்தையிடமிருந்து அசைவுகள் தெரிய ஆரம்பித்தன. ஆனால் சிறுவனது முகம் வாடிக்கொண்டே சென்றது.

சிறுவன் மருத்துவரை பார்த்து "டாக்டர், இறக்கும் போது கஷ்டமாக இருக்குமா!?" என்று சோகமான குரலில் கேட்டான்.

சிறுவனின் இந்த கேள்வியால் பெற்றோர்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே டாக்டர், 'ரத்தம் கொடுப்பதால் இறப்பதற்கு வாய்ப்பு இல்லை' என்பதை சிறுவனிடம் எடுத்துக் கூறினார்.

"சிறுவன், ஆரம்பத்தில் தனது உடம்பிலிருந்து முழு இரத்தத்தையும் எடுக்கப்போவதாக நிணைத்திருந்தான், தன் தங்கைக்காக தனது உயிரையே தியாகம் செய்ய முன்வந்திருந்தான்." யாருக்கு வரும் இந்த தியாக உணர்வு.

அவன் தியாக உணர்வை கண்டு பெற்றோரும்,செவிலியர்களும் மருத்துவரும் கண்ணீர் சிந்தினர்.


Posted: 27 Apr 2015 09:21 PM PDT


ஆரோக்கியத்தின் அடிச்சுவடுகளை நாகரீகத்தின் பெயரால் ஓரங்கட்டிவிட்டோம்.. உண்மை தான...

Posted: 27 Apr 2015 09:13 PM PDT

ஆரோக்கியத்தின் அடிச்சுவடுகளை
நாகரீகத்தின் பெயரால் ஓரங்கட்டிவிட்டோம்..
உண்மை தானே..?