ilovemynative: Facebook page wall posts in Tamil |
- தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே அது கால கா...
- பாம்புகளும், பனை மரங்களும், மலை மிருகங்களும், காட்டாறுகளும் பல கடந்துவந்த பட்டிக...
- இந்திய நாட்டில் ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும், அப்பாவிகளுக்கும் நீதி எப...
- பழைய படம்! ராமேஸ்வரம்!
- இந்த ''செல்போன்'' வந்தாலும் வந்திச்சு.. ★ கையில கடிகாரம் கட்டுறது போச்சு.!! ★...
Posted: 05 Dec 2014 08:55 AM PST |
Posted: 05 Dec 2014 08:42 AM PST பாம்புகளும், பனை மரங்களும், மலை மிருகங்களும், காட்டாறுகளும் பல கடந்துவந்த பட்டிக்காட்டுச் சிறுவன் இன்று படித்து முடித்து பட்டணத்தில் பணச்செருக்கில் பதறினான் அய்யோ! கொசு!!! @சிவ சிவா |
Posted: 05 Dec 2014 07:39 AM PST இந்திய நாட்டில் ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும், அப்பாவிகளுக்கும் நீதி எப்போதும் மறுக்கப்படும் நிலையில் இந்திய அரசின் கொள்கைகளை அதன் அரசியல் அமைப்பின் சட்டத்திற்கு உட்பட்டே எதிர்த்து வந்த நீதியரசர் கிருஷ்ணையர் அவர்களுக்கு புகழ் அஞ்சலி செலுத்துவது நம் அனைவரின் கடமையாகும். மரண தண்டனையில் இன்னும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ள இந்திய சர்வாதிகார அரசுக்கு பல முறை சவுக்கடி தந்துள்ளார் கிருஷ்ணையர் அவர்கள். இன்று சிறையில் வாடும் மூன்று தமிழர்களின் மரண தண்டனை ஒத்திவைக்கப் பட்டிருப்பதற்கு முக்கிய காரணியாக இருந்தவர் இந்த நீதியரசர். முல்லைப் பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்று மலையாளிகள் போராடிய போது அவர்கள் போராட்டத்திற்கும் ஆதரவு வழங்கி அப்போராட்டதில் கலந்து கொண்டு தன்னுடைய தேசிய இன நலத்தையும் விட்டுக் கொடுக்காமல் இருந்தவர் கிருஷ்ணையர். அவருடைய இனப்பற்றையும் தமிழர்கள் நாம் பாராட்டியே ஆகவேண்டும். நீதியரசர்கள் தங்கள் இனத்தை, மண்ணை, மொழியை, பண்பாட்டு உரிமைகளை இந்திய அரசின் கோரப்பிடியில் இருந்து பாதுகாக்கும் படியான செயல்களில் ஈடுபட்டால் தான் மக்கள் இந்த நாட்டில் நிம்மதியாக வாழ முடியும். மொழி உரிமையும் , இன உரிமையும் மறுக்கப்பட்ட இந்நாட்டில் கிருஷ்ணையர் போன்ற நெஞ்சுரம் வாய்ந்த நீதியரசர்கள் மூலமாகவே நீதி நிலைநாட்டப்படுகிறது. நீதியரசர் கிருஷ்ணையர் அவர்களின் மறைவிற்கு தமிழ் கூறும் நல்லுலகம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்க வேண்டியது அவசியமாகும். வாழ்க கிருஷ்ணையர் அவர்களின் புகழ் ! ![]() |
Posted: 05 Dec 2014 07:38 AM PST https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/p100x100/10846042_10154839115535198_9003762585373647287_n.jpg?oh=30220799b552ca8bdd76f490911e7b01&oe=54FFBE70&__gda__=1427382987_8d217b8fb5d15fe10634f9eb651553e4 தூய தமிழ்ச்சொற்கள் புதரில் கேட்பாரற்று கிடக்கும் கலைச் சிற்பங்கள். அரசு மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்!நண்பர் Vimal Sekar விமல் சேகர் என்பவர் பாளையம்புதூர் பெருமாள் கோவிலில் அருகில் கேட்பாரற்று புதரில் இருக்கும் புலிகுத்திகல், வீரன் கல், ஆநிரை மேய்ப்பன்கல் ஆகிய கற்சிலைகளை கண்டுபிடித்து படங்களை அனுப்பியுள்ளார்.ஒவ்வொரு சிற்பங்களும் நம் வரலாற்றை, பண்பாட்டை சொல்லக் கூடியவை. இவைகள் ஏன் இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது, யாரால் உருவாக்கப்பட்டது, எந்த நூற்றாண்டை சேர்ந்தது போன்ற ஆய்வுகளை தொல்லியல் துறை மேற்கொள்ளவேண்டும். நாம் தொல்லியல் துறையை தொடர்பு கொண்டு பேசினோம். அவர்கள் நாங்கள் மீட்க முடியாது என்றும், அரசு அருங்காட்சியகம் தான் மீட்க வேண்டும் என்று கைவிரித்து விட்டனர். அதனால் தருமபுரி வருவாய்த் துறை அதிகாரியை தொடர்பு கொண்டு பேசினோம். அவர்கள் தாசில்தார் தான் சிலைகளை மீட்க வேண்டும் என்று கூறினார் . இது குறித்து அவரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். இருப்பினும் உடனடியாக இப்புதரில் இருக்கும் சிலைகளை அரசு அருங்காட்சியகம் கையகப்படுத்தி அடுத்த கட்ட ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கிறோம்.சிலை குறிப்புகள் : மொத்தம் 5 சிலைகள் 2 சிலைகள் 10அடி அருகில் உள்ள பெருமாள் கோவிலில் உள்ளது (பார்க்க முழு ஆல்பம் ) மற்ற 3 சிலைகளும் புதரில் உள்ளது ,2 சிலைகள் 1 1/2 அடி உயரம் 1 1/4 அடி அகலம் ,புளிகுத்தி கல் 2 அடி அகலம் 2 1/4அடி உயரம்.இடம் :தோப்பூர் சுங்கசாவடியில் இருந்து 2கி மீ பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை தர்மபுரி செல்லும் வழி. |
Posted: 05 Dec 2014 02:03 AM PST |
Posted: 04 Dec 2014 10:30 PM PST இந்த ''செல்போன்'' வந்தாலும் வந்திச்சு.. ★ கையில கடிகாரம் கட்டுறது போச்சு.!! ★ கால்குலேட்டர் போச்சு.!! ★ கடிதம் எழுதுறது போச்சு..!! ★ கேமரா போச்சு..!! ★ காலண்டர் போச்சு..!! ★ அலாரம் வைக்கும் கடிகாரம் போச்சு..!! ★ ரேடியோ,.டேப் ரெக்கார்டர் போச்சு..!! ★ சி.டி போச்சு... |
You are subscribed to email updates from சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |