Friday, 5 December 2014

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


ஓட்ஸ் என்னும் அரக்கன் :- இன்றைய நவீன உணவு முறையில் ஓட்ஸ் என்பது அத்தியாவசிய உணவ...

Posted: 04 Dec 2014 10:19 PM PST

ஓட்ஸ் என்னும் அரக்கன் :-

இன்றைய நவீன உணவு முறையில் ஓட்ஸ் என்பது அத்தியாவசிய உணவு என ஆகிவிட்டது. அதுவும் நீரிழிவு நோயாளிகள்,உடல் எடை குறைப்பு முயற்சியில் உள்ளவர்கள் ஓட்ஸ் சாப்பிடுவதை பெருமையாக நினைக்கிறார்கள்.

10 ஆண்டுகளுக்கு முன்வரை நம்நாட்டில் ஓட்ஸ் இல்லை. ஆனால் இன்று ஆண்டுக்கு சில ஆயிரம் கோடிகளுக்கு விற்பனை ஆகிறது. இதற்கு பின்னால் பன்னாட்டு வணிக மோசடி உள்ளது.

ஓட்ஸ் ஆஸ்திரேலியாவில் பெரும்பான்மையாகவும் , ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிலும் விளையும் ஒரு பயிர் . அதை அப்படியே உணவாக சாப்பிட முடியாது . சில வழிமுறைகளில் தட்டையாக மாற்றப்படுகிறது . அதையும் கூட நம்ம ஊர் உணவு போல அதிக அளவில் எடுத்துக்கொள்ள முடியாது . சில கிராம் மட்டுமே ( ஸ்பூன் அளவு ) எடுத்து தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிடுகிறோம் . அதிலும் சத்து எதுவும் கிடையாது . பசியை கட்டுபடுத்தும் குணம் மட்டுமே இதற்கு உண்டு .

அதிக விலை கொடுத்து வாங்கும் ஓட்ஸ் -ஐ விட நம் ஊர் ராகியில் பல மடங்கு சத்து உள்ளது . சுமார் ஒரு கிலோ ராகி சாப்பிடுவது 4 கிலோ ஓட்ஸ் சாப்பிடுவதற்கு சமம் . ஒரு கிலோ ராகி மாவு வெறும் 35 ரூபாய் தான் . 4 கிலோ ஓட்ஸ் 140*4= 560 ரூபாய் . எவ்வளவு மடங்கு விலையில் வித்தியாசம் பாருங்கள் .

எங்கோ ஆஸ்திரேலியாவில் விளையும் ( அவர்கள் அதிகம் சாப்பிடுவது கிடையாது ) ஓட்ஸை நாம் சாப்பிடுவதில் MNC கொள்ளை அதிக அளவில் உள்ளது . சில ஆண்டுகளாக போலி விளம்பரங்கள் மூலமும் , மருத்துவர்கள் மூலம் கட்டாயப் படுத்தியும் நம்மை அடிமை ஆக்கி விட்டன . [ குறிப்பாக பெப்சி நிறுவனத்தின் QUAKER பிராண்ட் . குளிர்பான தொழிலில் இந்திய நிறுவனங்களை ஒழித்தது போல உணவில் இந்திய பாரம்பரிய உணவுகளை ஒழிக்கப் பார்க்கிறது . ]

அந்தந்த நாடுகளிருந்து இங்கு நம் இந்தியாவுக்கு வர ஆகும் எரிபொருள் செலவு , MNC நிறுவனங்களின் கொள்ளை லாபம் எல்லாம் சேர்த்து பயனற்ற பொருளை அநியாய விலைக்கு நம் தலையில் கட்டுகின்றன.

அதைவிட ராகி , கம்பு , சோளம் , திணை , வரகு , சாமை போன்ற நம் நாட்டு தானியங்கள் எல்லாம் பலமடங்கு சத்துள்ளவை . விலையும் குறைவு !!!

சத்துநிறைந்த நம் பாரம்பரிய உணவு இருக்க சக்கையை உண்டு நம் பணத்திற்கும் உடல்நலத்திற்கும் வேட்டு வைக்கலாமா !!! ?

இதை என்றென்றும் சிந்தையில் இருத்துங்கள் !!!
அந்நிய பொருட்களை அநியாய விலைக்கு வாங்குவதை அறவே நிறுத்துங்கள் !!!


குஜராத்தில் ... 6 மாத குழந்தையை பலாத்காரம் செய்த 32 வயது காமக் கொடூரன்! Wed, De...

Posted: 04 Dec 2014 09:48 PM PST

குஜராத்தில் ... 6 மாத குழந்தையை பலாத்காரம் செய்த 32 வயது காமக் கொடூரன்!

Wed, December 03, 2014, 18:30 [IST]

அகமதாபாத்: குஜராத்தில் ஆறு மாத பெண் குழந்தைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தைச் சேர்ந்த பவான்ஜி தாக்கூர் (32). சம்பவத்தன்று அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார் தாக்கூர்.

அங்கே, தங்களது ஆறு மாத பெண் குழந்தையைப் பார்த்துக் கொள்ளும்படி தாக்கூரிடம் கூறி விட்டு அக்குழந்தையின் குடும்பத்தார் அருகில் இருந்த கோவிலுக்குச் சென்றுள்ளார். மீண்டும் அவர்கள் வீடு திரும்பிய போது, அக்குழந்தை வீறிட்டு அழுத படி இருந்துள்ளது. அப்போது தாக்கூர் அங்கிருந்து வேகமாக வெளியேறியுள்ளார்.

முதலில் குழந்தை பசிக்கு அழுகிறது என நினைத்த தாய், பின்னர் அக்குழந்தையின் பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். என்ன நடந்தது என தாக்கூரிடம் குழந்தையின் பெற்றோர் விசாரித்துள்ளனர்.

அப்போது, குழந்தையைப் பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக் கொண்ட தாக்கூர், இந்த விவகாரத்தை வெளியில் கூறினால் குடும்பத்தோடு கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகத் தெரிகிறது.

உடனடியாக, குழந்தையை சிகிச்சைக்காக தர்புர் மருத்துவமனையில் சேர்த்த பெற்றோர், இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர்.

மருத்துவமனையில் குழந்தையின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிகிறது. தப்பியோடிய தாக்கூரைப் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம் தெரியாத உண்மை உபயோகமான தகவல்கள் !!! வாகனங்களை ஓட்டத...

Posted: 04 Dec 2014 09:41 PM PST

ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம் தெரியாத உண்மை உபயோகமான தகவல்கள் !!!

வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை.

* பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.

* சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லதுவாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.

* சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.

* ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.

* ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருதவேண்டும்.

* ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்தஅழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.

* கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.

* நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே "டிம்' செய்ய வேண்டும்.

* வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு "இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்' என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.

* கார்களில் செல்வோர் "சீட் பெல்ட்' அணியும்போது
சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.

* நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளிவராது.

இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் "அப்சர்வ்'செய்கிறது. விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.

* நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் "சிக்னல்' இல்லாத இடங்களிலும், மொபைலின் "கீ லாக்' செய்யப்பட்ட நிலையிலும், ஏன் "சிம்கார்டு' இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.

மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்


0 comments:

Post a Comment