இந்தியாவும் ரோல்ஸ்ராய் காரும் :
பாட்டியாலாவை சேர்ந்த மஹாராஜா பூபிந்தர் சிங் புத்தம் புதிய ரோல்ஸ்ராய்ஸ் காருக்கு ஆர்டர் செய்திருக்கிறார். ஆனால், அந்த ஆர்டரை ஏதோ காரணம் காட்டி ரோல்ஸ்ராய்ஸ் தட்டிக் கழித்துள்ளது. இதனால், ஆத்திரம் அடைந்த அவர் 10 ரோல்ஸ்ராய்ஸ் கார்களை குதிரை சாணம் அள்ள பயன்படுத்தினார்...தன்னிடம் இருந்த பழைய ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் அனைத்தையும் பாட்டியாலா நகரத்தில் குப்பை வண்டிகளாக்கினார். இங்கிலாந்து ராணி பயன்படுத்தும் அதே ரக கார்களை இந்திய மகராஜா குப்பை வண்டியாக பயன்படுத்தியது .இங்கிலாந்து செய்தித்தாள்களில் வந்து பெரும் அவமானத்தை கொடுத்தது..இங்கிலாந்து அரசே நேரடியாக ரோல்ஸ்காரை வழங்கி,மன்னிப்பும் கேட்டது...
பரத்பூரிலும் அதே கதைதான்:
இதேபோன்று, பரத்பூரை சேர்ந்த மஹாராஜா ஒவ்வொரு முறையும் 3 ரோல்ஸ்ராய்ஸ் கார்களை இறக்குமதி செய்து வாங்குவார். ஒரு முறை கார் பழுதடைந்ததை சரிசெய்ய ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்துக்கு தகவல் அனுப்பியிருக்கிறார். ஆனால், மெக்கானிக்குகளை அனுப்ப ரோல்ஸ்ராய்ஸ் நிர்வாகம் மறுத்துவிட்டது. . பாட்டியாலா போன்றே பழுது ஏற்பட்ட கார்களை குப்பை வண்டிகளாக்கப் போவதாக பரத்பூர் மஹாராஜா மிரட்டினார். இதனால், அதிர்ந்து போன ரோல்ஸ்ராய்ஸ் உடனடியாக மெக்கானிக் குழு ஒன்றை அனுப்பி கார்களை சரிசெய்து கொடுத்தது.
அல்வார் மஹாராஜா:
புதிய ரோல்ஸ்ராய்ஸ் கார் வாங்குவதற்கு விற்பனை பிரதிநிதியை அணுகியுள்ளார். ஆனால், புதிய காரை வழங்க முடியாது என அந்த ஆங்கிலேயர் ஏளனமாக தெரிவித்ததால் சினங்கொண்டார்ஜெயசிங் ராஜா. உடனடியாக, 10 ரோல்ஸ்ராய்ஸ் கார்களை ஆர்டர் போட்டார்.10 கார்கள் என்ற சந்தோஷத்தில் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனமும் சம்மதித்து கார்களை அனுப்பியிருக்கிறது. அந்த 10 புதிய கார்களும் கையில் கிடைத்தவுடன் அரண்மனையின் ஆஸ்தான ஆசாரிகளை கூப்பிட்டார். அனைத்து கார்களிலும் இருக்கும் கூரையை பிடுங்கி எறிந்துவிட்டு குப்பை வண்டியாக மாற்றினார். இது ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்துக்கு அடுத்த அதிர்ச்சி வைத்தியத்தை கொடுத்த சம்பவம்.
செருப்பு கலரில் ரோல்ஸ் கார்:
ஜாம்நகர் மஹாராஜா செய்த காரியம் அனைவரையும் திகைக்க வைக்கிறது. டிரெஸ் கலருக்கு தகுந்தவாறு பொட்டு, வளையல் போட்டுக் கொள்வது போன்று தனது மனைவியின் செருப்பு கலரில் கார் வேண்டும் என்று ரோல்ஸ்ராய்ஸ்க்கு ஆர்டர் செய்துள்ளார். செருப்பு கலரில் கொஞ்சமும் வித்தியாசம் தெரியக் கூடாது என்பதற்காக, ராணியின் செருப்பை ரோல்ஸ்ராய்ஸ் ஆலைக்கு அனுப்பி காரை வாங்கியிருக்கிறார்.
-வி. ராஜமருதவேல்

0 comments:
Post a Comment