இப்படியும் சில மோசடிகள்... நான் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு திருமணத்திற்கு செ... Posted: 23 May 2015 04:00 AM PDT இப்படியும் சில மோசடிகள்... நான் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு திருமணத்திற்கு சென்று திருச்சியில் இருந்து setc கவர்மென்ட் பேருந்தில் சென்னை வந்து கொண்டு இருந்தேன். அந்தபேருந்து மாலை நாலு மணிக்கு கிளம்பியதால் இரவு உணவிற்காக விகிரவாண்டியில் நிப்பாடினார்கள்அங்கு தோசை கேட்டேன் கொண்டுவந்தார்கள் ஒரு தட்டில் இரண்டு ஆறிபோன தோசையை ஒன்று போதும் என்றேன் அதற்கு அவர்கள் இல்லை ஒரு ப்ளேட்டில் இரண்டுதான் வரும் ஒன்று தரமாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள் நானும் சரி என்று விட்டுவிட்டேன் என் உடன் பேருந்தில் வந்த ஒரு தம்பதியினர் இரண்டு தோசை என்று கேட்டு அவர்களுக்கும் ஒருப்ளேட்க்கு இரண்டு தோசை வைத்து விட்டான் அவர்களும் எவளவோ சொல்லியும் ஒருப்ளேடை திரும்ப எடுக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டான் நான் அந்தஇரண்டில் ஒன்றை சாப்பிட்டுவிட்டு எழுந்த வுடன் பில்லை கொண்டு வந்து வைத்தான் பார்த்தால் அறுபது ருபாய் என்று இருந்தது நான் திகைத்து மனதுக்குள் திட்டிக்கொண்டே கொடுத்துவிட்டு திரும்பினால் உள்ளே ஒரே சத்தம் அந்த தம்பதியினர் அவர்கள் பில்லை பார்த்துவிட்டு தயங்கி கையில் இருந்த நூறு ரூபாயை கொடுத்து அவ்வளவுதான் இருக்கிறது என்று சொல்ல அந்த உணவக கல்லாவில் இருந்தவர்தான் சத்தம்போட்டு கொண்டு இருந்தார் மீதம் இருபதுரூபாய்க்கு நான் சென்று அவர்களை சமாதன படுத்தி அந்த இருபது ரூபாயை நான் தருகிறேன் என்று சொன்னதற்கு அந்த பெண் மறுத்து விட்டு தன் பையில் இருந்து வீட்டிற்கு குழந்தைகளுக்காக வாங்கி வைத்து இருந்த பிஸ்கட் பாக்கெட் இரண்டை எடுத்து கொடுத்துவிட்டு வந்தார் அதையும் அந்த மனிதாபிமானமில்லாத கேஷியர் வாங்கி வைத்துக்கொண்டார். இப்படி பட்ட இரண்டு விதமான மனிதர்களை பார்த்து மனது வேதனை பட்டது அம்மா உணவகம் துவங்கி இருக்கும் அம்மா முதலில் தமிழ்நாடு முழுவதும் ஹைவே மோட்டல்களை திறந்து கவர்மென்ட் பேருந்துகள் அனைத்தும் கண்டிப்பாக அங்கு தவிர வேறு எங்கும் நிறுத்த கூடாது என்று கட்டளை பிறப்பிக்க வேண்டும். அவ்வாறுசெய்தால் நிறைய ஏழை நடுத்தர மக்கள் பயன் அடைவார்கள்.. Relaxplzz |
நாணயம்': நண்பர் ஒருவர் காலையில் சந்த்தித்தார், மிகவும் வருத்தப்பட்டு சொன்னார்:... Posted: 23 May 2015 12:10 AM PDT நாணயம்': நண்பர் ஒருவர் காலையில் சந்த்தித்தார், மிகவும் வருத்தப்பட்டு சொன்னார்: வர வர நாட்டில் நாணயமே கெட்டு விட்டது. நான்:அப்படி என்ன நடந்த்தது, இவ்வளவு விரக்தியாக பேசுகிறீர் நண்பர்: பின்ன என்னங்க, காலையிலே பால் வாங்குரப்போ பால்காரன் 10 ரூபாய் நோட் செல்லாததை தந்து ஏமாத்திட்டான். நான்,,: சரி, அதெனால என்ன, இப்ப தான் பேங்க்கில் கொடுத்தா மாற்றித்தருகிறார்களே.. நண்பர்: அது தேவையில்லை. நான் அப்புறமா வந்த கீரைக்காரியிடம் நைசா(?!) தள்ளி(!?) விட்டுட்டேன். இருந்த்தாலும்லும் சொல்றேன், வரவர நாட்டில் நாணயமே கெட்டு விட்டது.. #இப்படியாக_மனிதன் - Karuppiah manivannan Relaxplzz |
நம் உடலில் இரத்தத்தை சுத்தம் செய்வது எப்படி ? இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால... Posted: 23 May 2015 12:10 AM PDT நம் உடலில் இரத்தத்தை சுத்தம் செய்வது எப்படி ? இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் வரும். உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம். பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். இதுதவிர, செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும். முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும். நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் கூட இரத்தம் விருத்தி ஆகிறது. இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது. இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது. இன்றைய காலகட்டத்தில் பெரும் அச்சுறுத்தல் இரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரண தவிர்த்துவிடலாம் என்கிறது இயற்கை வைத்தியம். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும். இதற்கடுத்தது இரத்தம் அழுத்தம். இதனை முற்றிலுமாக போக்க வழி உண்டு. கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப் பொடி 12 நேரம் ஊறவைத்து குடித்து வந்தால் போதும். ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீர்படும். அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டால் வந்தாலும் இரத்தக் கொதிப்பு குணமாகும். இரத்தக்கட்டு, சுளுக்கு நிவர்த்தியாக, மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்றுபோட்டால் போதும். விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும் Relaxplzz |
புகையிலை கேன்சரை உருவாக்கும்... ஆனா, டாஸ்மாக்கோ டான்சரை உருவாக்கும்.! - ஜோதிடர... Posted: 22 May 2015 11:45 PM PDT புகையிலை கேன்சரை உருவாக்கும்... ஆனா, டாஸ்மாக்கோ டான்சரை உருவாக்கும்.! - ஜோதிடர் ஆனந்தகுமார் |
வாட்ஸப் வந்து பார்….(வைரமுத்து குரலில் படிக்கவும்) உன்னைச் சுற்றி நோடிபிகேஷன்... Posted: 22 May 2015 11:10 PM PDT வாட்ஸப் வந்து பார்….(வைரமுத்து குரலில் படிக்கவும்) உன்னைச் சுற்றி நோடிபிகேஷன் சத்தம் ஒலிக்கும் ... ராத்திரியின் 🌜 நீளம் விளங்கும் உனக்கும் கவிதை வரும் கண்ணுக்கடியில் கருவளையம் தோன்றும்… குரூப்பில் சேர்த்துவிடுபவன் எமனாவான்… செல்ஃபி போட்டே நண்பன் கொல்வான்…;-) லாஸ்ட் சீன் என்பது மரணவாக்குமூலமாகும் …. பன்னி குட்டியை படம் எடுத்து போட்டோகிராபி என்பாய் … போன் அடிக்கடி சார்ஜ் இழக்கும் …. அட்மின் கசாப்பு கடை ஆடாகி அடிபடுவான் … ஸ்மைலி மட்டுமே போடுபவன் மேல் கொலைவெறி தோன்றும் … நம்மை கலாய்க்கும்போது மட்டும் எல்லாம் ஆன்லைனில் அலைவார்கள் ... சிங்கில் டிக்கிற்க்கும் டபுள் டிக்கிற்க்கும் நடுவில் மாட்டி சிக்கிதவிப்பாய் ✔ …. 3G சிக்னல் தெய்வமாய் தெரியும் , ஓசி WI-FI மேல் ஆசை பிறக்கும். போன் Hang ஆகி கடுபேற்றும்…,History டெலிட் என்பது மகிழ்ச்சிதரும் . DP-யையும், ஸ்டேட்டசையும் டெய்லி மாற்றாவிட்டால் மண்டைவெடிக்கும் , இருக்கும் 9 குரூப்பிலும் ஒரே மெசேஜை பார்வேர்ட் பண்ண தோன்றும் , தனிமையை உணர்ந்தாலும் நண்பர்கள் குரூப்பில் வந்து கும்மி அடிப்பார்கள் 😎 தனியாய் சிரிப்பது பழகிபோகும் ,குரூப்புக்கு ஒரு உத்தமன் அட்வைஸ் செய்வான்…. இரண்டு மணிநேரம் வராவிட்டாலும் 400 unread மெசேஸ்கள் வந்து பயமுறுத்தும்…. வாட்ஸப் வந்து பார்… ;-) ;-) Relaxplzz |
படித்ததில் பிடித்தது!!! ஒரு இந்தியன்.. விமானத்தில் பயணித்து கொண்டிருந்தான்.. அவ... Posted: 22 May 2015 07:10 PM PDT படித்ததில் பிடித்தது!!! ஒரு இந்தியன்.. விமானத்தில் பயணித்து கொண்டிருந்தான்.. அவன் அருகே.. சீனன் ஒருவன் அமர்ந்திருந்தான்..! அவன் இந்தியனை எப்படியும்.. ஏமாற்றி பணம் பறித்து விட.. வேண்டும் என..எண்ணினான்..! இந்தியனிடம் மெதுவாக பேச்சை.. ஆரம்பித்தான்..! சீனன்;- " அன்பரே.. மிகவும் போர் அடிக்கிறது.. நமக்குள் போட்டி வைத்து.. நேரத்தை கடத்துவோமா..?" இந்தியன்;- "வேண்டாம்.. போட்டிக்கு நான் வர வில்லை..! எனக்கு தூக்கம் வருகிறது..!" சீனன்;- "அன்பரே.. கொஞ்சம் கேளுங்கள்.. போட்டியில் நான் தோற்று..நீங்கள் வெற்றி பெற்றால்.. நான் உங்களுக்கு 500 ரூபாய் தருகிறேன்..! மாறாக நான் வெற்றி பெற்று.. நீங்கள் தோற்றால் 500 ரூபாய்..நீங்கள் எனக்கு தரவேண்டும்..! போட்டிக்கு இப்போது சம்மதமா..? இந்தியன்;- "நான் தான் போட்டிக்கு வரவில்லை என்று சொன்னே'னே.. ஏன் என்னை தொந்தரவு செய்கிறீர்கள்..? நான் தூங்கப் போகிறேன்..! சீனன்;- (விடுவதாக இல்லை) "சரி.. இப்படி வைத்து கொள்வோம்.. போட்டியில் நீங்கள் வெற்றி பெற்று.. நான் தோற்றால்.. 500 ரூபாய் உங்களுக்கு நான் தருகிறேன்.. மாறாக நான் வெற்றி பெற்று.. நீங்கள் தோற்றால்.. 50 ரூபாய் நீங்கள் எனக்கு கொடுத்தால் போதும்.. இப்போது சம்மதமா..?? இந்தியன்;- "சரி..சம்மதம்..!" சீனன்;- " போட்டியை முதலில் நான் தொடங்குகிறேன்..! நன்றாக கவனியுங்கள்.. நிலவுக்கும்.. பூமிக்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு..?? இந்தியன்;- " தெரியவில்லை.. 50 ரூபாயை பிடியுங்கள்..!" சீனன்;- "மகிழ்ச்சி நண்பரே..!" இந்தியன்;- "நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா..?" சீனன்;- "கேளுங்கள்..!" இந்தியன்;- "ஒரு விலங்கு மலை ஏறிச் செல்லும் போது மூன்று கால்கள்.. இருக்கும்.. பின் மலையை விட்டு கீழே இறங்கும் போது நான்கு கால்கள் இருக்கும்.. அது என்ன விலங்கு..?? சீனன்;-( அதிர்ச்சியானான்.. நீண்ட நேரம் யோசித்து விட்டு ) "தெரியவில்லை..500 ரூபாயை பிடியுங்கள்..!" இந்தியன் ரூபாயை வாங்கி பாக்கெட்டில் வைத்து விட்டு.. தூங்க ஆரம்பித்தான்..! சீனன்;- "ஏய்.. ஒரு விலங்கு மலை ஏறிச் செல்லும் போது மூன்று கால்கள் இருக்கும்.. பின் மலையை விட்டு.. கீழே இறங்கும் போது நான்கு கால்கள் இருக்கும் விலங்கு எது..? இந்தியன்;- தெரியவில்லை..50 ரூபாயை பிடியுங்கள்..!! :D :D #இந்தியன்டா Relaxplzz |
மனித உறவுகள் மேம்பட.....!!! 1. தானே பெரியவன்,தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடு... Posted: 22 May 2015 07:10 PM PDT மனித உறவுகள் மேம்பட.....!!! 1. தானே பெரியவன்,தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள். (Ego) 2. அர்த்தமில்லாமிலும்,தேவையில்லாமிலும் பின் விளைவு அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள். (Loose Talks) 3. எந்த விடயத்தையும் பிரச்சனையும் நாசூக்காகக் கையாளுங்கள். (Diplomacy) 4. விட்டுகொடுங்கள். (Compromise) 5. சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துதான் ஆகவேண்டும் என்று உணருங்கள். (Tolerate) 6. நீங்கள் சொன்னதே சரி செய்வதே சரி என்று கடைசிவரை வாதாடதீர்கள். (Adamant Arguments) 7. குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள். (Narrow Mindedness) 8. உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள். (Carrying Tales) 9. மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வபடாதீர்கள். (Superiority Complex) 10. அளவுக்கு அதிகமாய்,தேவைக்கு அதிகமாய் ஆசைப்படாதீர்கள். (Over Expectation) 11. எல்லோரிடத்திலும் எல்லா விடயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். 12. கேள்விப்படுகிற எல்லா விடயங்களையும் நம்பிவிடாதீர்கள். 13. அற்ப விஷயங்களையும் பெரிதுபடுத்தாதீர்கள். 14. உங்கள் கருத்துகளில் உடும்புப்பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள். (Flexibility) 15. மற்றவர் கருத்துக்களை, செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். (Miss understanding) 16. மற்றவர்களுக்கு உரிய மரியாதையைக் காட்டவும், இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் தவறாதீர்கள். (Courtesy) 17. புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரமில்லாதது போல நடந்து கொள்ளாதீர்கள். 18. பேச்சிலும், நடத்தையிலும் திமிர்த்தனத்தையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும், பண்பாட்டையும் காட்டுங்கள். 19. பிணக்கு ஏற்படும்போது, அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவக்க முன் வாருங்கள். (Initiative) 20. தேவையான இடங்களில் நன்றியையும், பாராட்டையும் சொல்ல மறக்காதீர்கள். பாராட்டுக்கு மயங்காத மனிதனே இல்லை. அதுவே உங்களுக்கு வெற்றியாக அமையும்... Relaxplzz |
லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் திருக்குறள்....!!! 1.செல்போனில் சூப்பர்போன் ஸ்மார்ட்போன்... Posted: 22 May 2015 10:10 AM PDT லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் திருக்குறள்....!!! 1.செல்போனில் சூப்பர்போன் ஸ்மார்ட்போன், அப்போன் செல்போனில் எல்லாம் தலை... 2.தந்தை மகற்காற்றும் நன்றி, சேம்சங்கில் ஸ்மார்ட்போன் வாங்கித் தரல்... 3.மகன் தந்தைக்காற்றும் உதவி, அப்பாமுன் செல்போனை நோண்டாதிருத்தல்... 4. 2G யினால் ஸ்லோவாகும் டேட்டா, ஆகாதே 3G யில் போட்ட டேட்டா... 5.உடுக்கை இழந்தவன் கைபோல, ஆங்கே இடுக்கண் களைவதாம் சார்ஜர்... 6. பட்டனைத் தடவும் மணற்கேணி, மாந்தர்க்கு டச்ஸ்க்ரீன் தூறும் அறிவு... 7. முகநக நட்பது நட்பன்று, வாட்ஸப்பில் அகநக நட்பது நட்பு... 8.மிஸ்டு கால் செய்தாரை ஒறுத்தல், அவர் நாண கால் செய்து பேசி விடல்... 9. ரேட் கட்டரோடு வாழ்வாரே வாழ்வார், மற்றெல்லாம் பில் கட்டியே சாவார்... என்னமா யோசிக்கிறாங்கப்பா நம்ம தம்பிங்க... தம்பிங்களா, இந்த மூணாவது குறள்ல நாலாவது சீரை "அப்பாமுன்" என்பதை "அப்பாவின்" ன்னு மாத்னீங்கன்னா எனக்குப் பொருத்தமா இருக்கும். Relaxplzz |
பாப்கான் பற்றி அறிந்து கொள்வோமா? தியேட்டர்ல இன்டர்வெல் விட்டா நம்மாளுங்க நேரா... Posted: 22 May 2015 10:10 AM PDT பாப்கான் பற்றி அறிந்து கொள்வோமா? தியேட்டர்ல இன்டர்வெல் விட்டா நம்மாளுங்க நேரா பாப்கான் ஸ்டாலுக் குத்தான் போறாங்க.. இந்த பாப்கார்ன் எவ்வளவு ஆபத்தானது என்று யாருக்கும் தெரியறது இல்ல. பாப் கார்ன் கொறிப்பது ஒரு நல்ல யோசனை தான் என்றால் கூட இந்த பாப்கார்னுக்கு மறுபக்கமும் உள்ளது. இந்த பாப்கார்ன் எனும் சோளப் பொரி மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோளத்தில் இருந்து தயார் செய்யப் பட்டவை. அதுமட்டுமின்றி பதப்படுத்தப்பட்ட உப்பு, பதப்பொருட்கள் போன்றவை சோளப்பொரியின் சுவையை அதிகப்படுத்துவதற்காக சேர்க்கப்படுகின்றன. மேலும் அதிக அளவில் சோடியம் மற்றும் பிற வேதிப் பொருட்கள் உடலுக்குத் தீங்கு விளைவிப்பவை. வெண்ணெய் சேர்த்த சுவையூட்டப்பட்ட சோளப்பொரி மேலும் மோசமான விளைவுகளைத் தருபவை. சின்னப் பசங்க தியேட்டர்ல கேக்கிற முதல் ஐயிட்டமே இந்த பாப்கார்ன் தான்.. அதுவும் சில பேரு அடம்பிடிச்சு பட்டர் பாப்கார்ன் தான் வேனும்னு சொல்வாங்க. ஆனா இதுல சேர்க்கற வெண்ணைய் எங்கிருந்து வருதுன்னு கொஞ்சம் பார்த்தோமுன்னா பாப்கார்ன் வாங்கிக் கொடுக்கறதையே விட்டுடத்தோணும். பெரும்பாலான தனியார் வெண்ணைய் தயாரிப்பு நிறுவனங்கள் அசல் பாலில் தான் வெண்ணையை பிரித்தெடுத்து நமக்கு வழங்குகின்றார்கள் என நாம் இதுவரை நினைத்துக்கொண்டிருந்தால் நாம் உண்மையிலேயே ஏமாளிகள் தான். நமக்கு வருகின்ற பெரும்பாலான தனியார் நிறுவனங்களின் வெண்ணைய் பாக்கெட்டுகள் Margarine எனப்படும் செயற்கை வெண்ணெய் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? ஒரு சின்ன பரிசோதனையைக் கொண்டு நாம் வாங்கியது ஒரிஜினல் பட்டரா அல்லது Margarine பட்டரா என்பதை தெரிந்து கொள்ளமுடியும் . ஒரிஜினல் பட்டர் என்றால் அது கீழே சிந்தினால் உடனே எரும்புகள் வந்து மொய்க்கும். இந்த செயற்கை பட்டரில் எரும்புகள் மொய்க்காது.. எரும்புக்கு தெரிந்தது கூட நமக்குக் தெரியவில்லையே.. பாலில் இருந்து தயாரிக்கப்படும் வெண்ணெய்க்கு பதிலாக மார்க்ரைன் எனப்படும் செயற்கை வெண்ணெய் ஹைட்ரஜனேற்றப்பட்ட டிரான்ஸ் கொழுப்பு நிறைந்தது ஆகும். இது உடலில் கொழுப்பு அளவுகளை கணிசமாக அதிகப்படுத்தி, நோய் எதிர்ப்பு திறனை மட்டுப்படுத்துகிறது. பிரபல நிறுவனங்கள் கூட பட்டர் பிஸ்கெட் தயாரிக்கும்போது இந்த Margarine கொழுப்பைத்தான் பயன்படுத்துகின்றன என்பது கூடுதல் அதிர்ச்சித் தகவல். குழந்தைகளுக்குக் கொடுக்கும் போது நாளடைவில் இந்த கொழுப்பானது உடலில் படர்ந்து கேன்சர் செல்களை உற்பத்தி செய்யவும் வாய்ப்புண்டு சில மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இந்த Margraine கொழுப்பினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதோடு எல்.டி.எல். கொழுப்பானது உடலில் அதிகமாகச் சேர்ந்து இரத்த நாளங்களில் படிந்து அளவுக்கு அதிகமான எடை மற்றும் இதயம் சம்மந்தமான நோய்களை இந்த செயற்கை வெண்ணைய் நமக்கு பரிசாகத் தருகின்றது.. இதய நாளங்களில் இது படிவதால் இரத்தம் சீராக செல்வது கொஞ்சம் கொஞ்சமாக தடை படுகிறது.. இப்போது இந்தியச் சந்தையில் பெரும்பாலும் மரபணுமாற்றம் செய்யப் பட்ட உணவுப் பொருட்கள், செயற்கையாக இரசாயணம் கலந்து தயாரிக்கும் உணவுப்பொருட்கள் எவ்வித கட்டுபாடுமின்றி தாராளமாக புழக்த்தில் விடப்பட்டுவிட்டன. இவற்றை நாம் நம்மையறியாமலேயே வாங்கி உண்கின்றோம். கூடுமானவரை இந்த டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளையும் இப்படி இயற்கைக்கு மாறாக செயற்கையான பொருட்களை கொண்டு தயாரிக்கும் உணவுப்பொருட்களை வாங்கி உண்பதை தவிர்த்தாலே பல இனம் புரியாத நோய்கள் நம்மை தாக்குவதிலிருந்து தடுத்துக்கொள்ள முடியும்.. Relaxplzz |
உங்க வீட்டுல A/C இருக்கா...உபயோகமான தகவல்கள், நாளுக்கு நாள் வெயிலின் கொடுமை கூட... Posted: 22 May 2015 10:10 AM PDT உங்க வீட்டுல A/C இருக்கா...உபயோகமான தகவல்கள், நாளுக்கு நாள் வெயிலின் கொடுமை கூடிக்கொண்டே போக... இனி, குடிசைகளிலும் கூட ஏ.சி. மெஷின் பொருத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிற அளவுக்கு நிலைமை போய்க் கொண்டிருக்கிறது. விடிந்துவிட்டாலும் கூட, ஏ.சி. மெஷினை அணைக்க மனமில்லாமல், குதூகல தூக்கத்தில் குறட்டை விட்டுக் கொண்டிருக்கிறார்கள் பலரும். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு வந்த பத்திரிகை செய்தி, ஏ.சி-க்கார பார்ட்டிகளை எல்லாம் திகிலில் ஆழ்த்தியிருக்கிறது. சென்னை, சிட்லபாக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீவள்ளி, முதல் நாள் இரவு தன் இரண்டு குழந்தைகளுடன், ஏ.சி. அறையில் தூங்கச் சென்றதுதான் தெரியும். மறுநாள் காலையில் அந்த வீட்டிலிருந்து புகை மட்டும் வந்து கொண்டிருக்க... ஆள் அரவம் எதையும் காணோம். அக்கம் பக்கத்தினர் ஓடோடி வந்து, கதவை உடைத்துக் கொண்டு போய் பார்த்தால்... ஸ்ரீவள்ளியும் அவர் மகனும் மயங்கிக் கிடக்க.. ஒன்றரை வயது பெண் குழந்தை மோனிஷா கட்டிலிலேயே பரிதாபமாக இறந்து கிடக்க... இந்தக் காட்சியைக் கண்ட அத்தனை பேருமே அதிர்ந்துதான் போனார்கள். 'ஏ.சி-யில் ஏற்பட்ட கோளாறுதான் காரணம்' என்று சொல்லியிருக்கிறது போலீஸ். இந்தச் செய்தியையும், புகைப்படங்களையும் பார்த்த பலரும், அந்தக் குடும்பத்துக்கு இரண்டு நிமிட அனுதாபத்தை வஞ்சகம் இல்லாமல் செலுத்திய அதேநிமிடம், 'ஆகா... ஏ.சி. மேல ஒரு கண் வெச்சிக்கிட்டேதான் தூங்கணும் போல...' என்று பதைபதைக்க ஆரம்பித்துவிட்டார்கள். எலெக்ட்ரானிக்ஸ் அயிட்டங்கள் என்றாலே எச்சரிக்கை தேவைதான். அதற்காக நிம்மதியான உறக்கத்தை தரும் ஏ.சி., உயிருக்கே உலை வைக்கும் சாதனமாக மாறுமா? இந்தக் கேள்விக்கு... ஏ.சி. மெஷின்களைப் பொருத்துவது, பராமரிப்பது போன்ற பணிகளைச் செய்துவரும் சென்னையைச் சேர்ந்த 'ஃபெர்ஃபெக்ட் ஏ.சி. சர்வீஸ்' நிறுவனத்தின் உரிமையாளர் மைக்கேல் பதில் சொல்கிறார்... ''அந்தச் செய்தியை படிச்சதும் எனக்கும் திக்னு ஆயிடுச்சு. எரிஞ்சு போனது ஸ்பிலிட் ஏ.சி. எனக்கு தெரிஞ்சு, ஸ்பிலிட் ஏ.சி. கோளாறு காரணமா இப்படி ஒரு சோக சம்பவம் நடந்ததுங்கிறதே இதுதான் முதல் தடவை. ஸ்பிலிட் ஏ.சி-யில்மூணு விதமான ஒயர் கனெக்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். அது சரியா பொருத்தப்படாம இருந்தா, ஒண்ணோட ஒண்ணு உரசி விபத்து நடந்திருக்கலாம். பொதுவா... ஸ்பிலிட்டைவிட, விண்டோ ஏ.சி-யி லதான் பாதிப்பு அதிகம்'' என்று சொன்னவர், ஏ.சி. மெஷின்களை பயன்படுத்துவோருக்கு உதவும் வகையில் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு டிப்ஸ்களை வாரி வழங்கினார்... புதிதாக ஏ.சி. வாங்குபவராக இருந்தால் உங்கள் வீட்டில் ஏ.சி. பொருத்தப்படவிருக்கும் அறையின் அளவை மனதில் வைத்துக் கொண்டு தேர்வு செய்யுங்கள். 1.5 டன், 2 டன், 3 டன் என்று நம் பயன்பாட்டுக்கு ஏற்ற ஏ.சி. மெஷின்கள் உள்ளன. 150 சதுர அடி கொண்ட அறையாக இருந்தால் 1.5 டன் அளவுள்ள ஏ.சி. போதுமானது. பெரிய ஹால் என்றால் 3 டன் தேவைப்படும். உதிரிபாகங்களை குறைந்த விலையில் வாங்காதீர்கள். நல்ல விலையில் தரமானவற்றை வாங்குங்கள். ஏ.சி. வாங்கியதும், அதற்கேற்ற தரமான 'ஃப்யூஸ் ஒயர்', 'டிரிப்பர்' போன்றவற்றை பொருத்தவேண்டும். மலிவான விலைகளில் வாங்கினால், உங்கள் உயிருக்கு ஆபத்தாக முடியும். உதாரணத்துக்கு ஸ்பிலிட் ஏ.சி. 1.5 டன் எனில், 20 ஆம்ப்ஸ் ஒயரினால் ஆன ஃப்யூஸை பொருத்துங்கள். இதேபோல் டிரிப்பரும் 20 ஆம்ப்ஸ் கொண்டதாக இருக்க வேண்டும். அப்போதுதான் மின் சப்ளையில் கோளாறு எற்பட்டாலும் டிரிப்பர் தானாக ஆஃப் ஆகி ஏ.சி-யைக் காப்பாற்றி விடும். ஏ.சி. வாங்கும்போது இலவசமாகக் கொடுக்கப்படும் ஸ்டெபிலைசர்கள் தரம் குறைந்தவையாக இருக்கக் கூடும். தரமான நிறுவனங்களின் ஸ்டெபிலைசர்களை வாங்குங்கள். எல்லா ஏ.சி. நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு சொல்லும் அட்வைஸ்... ஏ.சி. வாங்கி பொருத்தியதும், அது எப்போதும் 23 டிகிரிக்கு கீழ் வைக்கக்கூடாது. அதற்கும் குறைவாகக் கொண்டு போகும்போது ஏ.சி. அதிக பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படும். அப்போது கம்ப்ரஸர், காயில், ஏ.சி-க்கு செல்லும் ஒயர் என எல்லா பகுதியும் சூடாகிவிடும். இதனாலும் தீப்பிடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. எக்காரணம் கொண்டும் 16 டிகிரியில் ஏ.சி-யை கொண்டு போகாதீர்கள். வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏ.சி-க்களை முன்று மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் சர்வீஸ் செய்யவேண்டும். ஸ்பிலிட் ஏ.சி. எனில் 15 நாட்களுக்கு ஒரு முறை ஃபில்டரை கழற்றி தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து மாட்டுங்கள். இதனால், எந்தவித இடையூறும் இல்லாமல் குளுமையாக காற்று வரும். ஏ.சி. ஓடிக் கொண்டிருக்கும்போதே ரூம் ஸ்ப்ரே அடிப்பது மிகவும் தவறு. பெர்ஃப்யூம்கள் ஏ.சி.யின் உள்ளே இருக்கும் காயிலை பழுதாக்கி, சீக்கிரத்தில் மெஷினை ரிப்பேராக்கிவிடும். நல்ல குளுமை வேண்டும் என்பதற்காக ஏ.சி. ஓடிக்காண்டிருக்கும்போதே ஃபேனை போடாதீர்கள் Relaxplzz |
நீங்கள் வாங்கும் ரெடிமேட் உணவுகள் மற்றூம் பதபடுத்தபட்ட உணவுகள், மிக்ஸ்களில் உள்ள... Posted: 22 May 2015 10:10 AM PDT நீங்கள் வாங்கும் ரெடிமேட் உணவுகள் மற்றூம் பதபடுத்தபட்ட உணவுகள், மிக்ஸ்களில் உள்ள அபாயத்தை உணர்த்தும் ஃபிளேவர் என்ஹான்சர்ஸ் கோட்கள் "விழிப்புணர்வு பதிவு" - படித்து பகிரவும் நம்மில் பல பேருக்கு நாம் என்னத்தை சாப்பிடறோம்னு தெரியாம முழுங்கும் பல பொருட்கள் தான் உங்களை வயது கூட்டி காட்டும் உண்மை. அது மட்டுமல்ல பல மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளுக்கு வாடிக்கையாளர்களாகவும் அமைத்து கொடுக்கும் இந்த கொடுமைக்கு காரணம் நாம் ஒன்னு உணவை கண்டபடி வெளியில் வாங்கி உண்பது அல்லது டயட்னு அந்த காலொரி சார்ட்டை பார்த்து ஒகே இதுல காலரி கம்மினு நிறைய நோயை வாங்குவது. எவ்வளவு பேருக்கு தெரியும் நீங்கள் சாப்பிடும் சிப்ஸ் / குர்குரே / நூடுல்ஸில் "எம் எஸ் ஜி -- " என்னும் அஜினோமோட்டைவை ஃபிளேவர் என்ஹான்ஸர் என்னும் ஸ்மார்ட் வார்த்தை மூலம் உண்ண வைக்கின்றனர். இது போல இல்லை நான் வாங்கும் பொருள் ஃபிளேவர் என்ஹான்சர் இல்லாமல் தான் வங்குகிறேன் என்று சத்தியம் செய்தால் இந்த வகை ஃபார்முலாவை போட்டிருப்பார்கள் (E631) இதுவும் அதே அஜினமோட்டோ கருமம் பிளஸ் விலங்குகளின் கொழுப்பு மற்றூம் விலங்குகளின் எலும்பில் உள்ள மஜ்ஜையில் இருந்து தயாரிக்கபடுவது தான். பல பச்சை நிறம் கொண்ட சுத்த வெஜிட்டேரியன் உணவு பொருட்கள் இன்னும் இந்த பொருட்கள் மற்றும் ஃபிளேவர்ஸ் மற்றூம் என்ஹான்சர்ஸ் இந்த எண்களை கொன்டிருந்தால் அதிக கவனம் தேவை. 4 மில்லி கிராம் உப்பே ஆபத்து - இன்று பலர் ரத்த அழுத்தம் வரக்காரணம் இந்த வகை நச்சு பொருட்களால் தான். இந்த வகை எண்கள் அல்லது flavor Enhancers என்று போட்டிருக்கும் உணவை அடியோடு தவிர்க்கவில்லை எனில் உங்களுக்கு மரணம் கொஞ்சம் கொஞ்சமாய் நெருங்கி கொண்டிருக்கிறது. E542 Bone phosphate - எலும்பில் இருந்து தயாரிக்கபடும் இந்த கருமம் பல கேக்கு மிக்ஸ் அல்லது ரெடிமேட் கேக்குகளில் உள்ளது. இது போல இந்த எண்கள் அனைத்தும் கொடிய கெமிக்கல் / நச்சு / விலங்குகளின் எக்ஸ்ட்ராக்ட் ஆகும்...... E570 Stearic acid (Fatty acid) E572 Magnesium stearate, calcium stearate E585 Ferrous lactate - பால் பொருட்களில் அதிகம் இருக்கும் E620 Glutamic acid - குழந்தை மற்றும் ஊட்டச்சத்து பானங்களில் அதிகம் தென்படும். E621 Monosodium glutamate E631 Disodium inosinate E635 Disodium 5'-ribonucleotides E640 Glycine and its sodium salt E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252, E270, E280, E325, E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440, E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493, E494, E495, E542, E570, E572, E631, E635, E904. - அபாயகர கோட்ஸ் மேல் கூறிய சேம்பிள் ஃபிளேவர் என்ஹான்சர்ஸ் எண்கள் இல்லாத ஒரு பொருளும் நீங்கள் தின வாழ்வில் உண்ணவே முடியாது அப்படி உண்ண வேண்டும் எனில் வீட்டு சமையல் மற்றூம் கல் உப்பு தான் ஒரே சொல்யூஷன். குளிர்பான கோலாக்கள், சர்க்கரைக்கு பதிலா ஸ்வீட்னர்ஸ் மிக மிக ஆபத்தான ஷ்த்ரூக்கள். கவனமா இருங்க வயதை குறைத்து காட்டி வாழ்ந்தாலே நீங்கள் ஆரோக்யமாய் இருப்பதாய் அர்த்தம். Thanks - Ravi Nag Relaxplzz |
நேர்முகத்தேர்வு செய்பவர்: வாட் இஸ் தி மீனிங் ஆப் மைக்ரோசாப்ட் எக்சல் ? கலந்து க... Posted: 22 May 2015 09:50 AM PDT நேர்முகத்தேர்வு செய்பவர்: வாட் இஸ் தி மீனிங் ஆப் மைக்ரோசாப்ட் எக்சல் ? கலந்து கொண்டவர்: இட் இஸ் தி ப்ரொடக்ட் ஆப் சர்ப் எக்சல். நேர்முகத்தேர்வு செய்பவர்: கொய்யாலே ?( நீ நம்ம காலேஜா ?) யு ஆர் செலக்டட் . :P :P |
பத்து லட்சம் செலவு செய்து சாக்கடையை அள்ள ஒரு மெசின் கண்டுபிடிக்க முடியல, செவ்வா... Posted: 22 May 2015 09:46 AM PDT பத்து லட்சம் செலவு செய்து சாக்கடையை அள்ள ஒரு மெசின் கண்டுபிடிக்க முடியல, செவ்வாய் கிரகத்துல என்ன வெங்காயத்த கண்டுபிடிக்க மங்கள்யான்.. கிரகம் புடிச்சவங்களா.! #பபி  |
ஹார்ட்டின் வரையப்பட்டிருக்கவில்லை! ஐ லவ் யூக்களில்லை! பெண்மார்புகள் வரையப்பட்ட... Posted: 22 May 2015 09:10 AM PDT ஹார்ட்டின் வரையப்பட்டிருக்கவில்லை! ஐ லவ் யூக்களில்லை! பெண்மார்புகள் வரையப்பட்டிருக்கவில்லை! ஆணுறுப்புகள் வரையப்பட்டிருக்கவில்லை! பிடிக்காதபெண்ணை வேசியாக்கிய கவிதைகளில்லை! விலைமகளின் தொடர்பெண் கிறுக்கப்பட்டிருக்கவில்லை! வசவுவார்த்தைகளில்லை! அவ்வளவுசுத்தமாயுள்ளது மனநோயாளிமருத்துவமனையின் கழிப்பறை! #முரண் - ஃபீனிக்ஸ் பாலா Relaxplzz |
#மனைவி <3 எங்க ஊருல ஒரு பெரிய மனனுசன் இருந்தாரு. அவர் பேச்சுலயும் நடையுலயும் ஒர... Posted: 22 May 2015 09:10 AM PDT #மனைவி ♥ எங்க ஊருல ஒரு பெரிய மனனுசன் இருந்தாரு. அவர் பேச்சுலயும் நடையுலயும் ஒரு #கம்பீரம் இருக்கும் (y) மிக மரியாதைக வாழ்ந்த மனிதர். அவருக்கு முன்று மகன்கள் மருமகள்கள் பேரன் பேத்திகளும் உள்ளனர். திடீரென ஒருநாள் அவர் மனைவிக்கு #பக்கவாதம் வந்து, படுத்த படுக்கை ஆகிவிட்டார் :( அதன்பின் அவர் கம்பீரம் குறைந்து, அவர் பேச்சு வலுவிழந்தது. சிறிது நாள்களில் அந்த பெரிய மனிதர் இறந்துவிட்டார் :( வயதானகாலத்தில் ஒரு பெண்ணை, வேறு ஒரு பெண் பார்த்துக்கொள்வாள். ஆனால் ஆணை, அவன் மனைவியைதவிர வேறு யாரும் சிறப்பாக பார்த்துக்கொள்ள முடியாது முதுமையில் மனைவி குழந்தைபோல் கணவனை பாரத்துக்கொள்வதால், அவள் #இரண்டாம்_தாய் எனப்படுகிறாள். காமம் கசந்தபின்பும் வாழ்க்கை இருக்கிறது. அதை கருத்தில்கொண்டு துணையை தேர்ந்தெடுங்கள். வாழுங்கள் Relaxplzz |