பெண்களுக்கு பிடிச்ச கணவனாக 25 டிப்ஸ்
"வெறும் 25 விஷயங்களை சரி செய்து விட்டாலே போதும், பெண்கள் உற்சாகமாக இருப்பர்கள்!' என்கிறார் ஒரு விவரம் தெரிந்த வித்தகர். இதோ அந்த விஷயங்கள்:
1. சமஉரிமை:
வருமானம் முழுவதும் கணவனிடமே இருந்தால், மனைவியை மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும். (ஆகவே 'அவ்வளத்தையும்' அவங்க கையிலேயே கொடுத்து விட்டு-(அவங்க சம்பாதிப்பவங்களாக இருந்தாலும்) உங்களுக்கு தேவைப் பட்டதை மட்டும் கேட்டு வாங்கிக் கொள்ளுங்க! (என் நண்பர் ஒருவர் இப்படி தான் செய்வார்) இப்படி செய்வதில் ஒரு பிளசும் இருக்கு. செலவுகள் குறைய வாய்ப்பிருக்கு!
2. சமையலை கணவர் பாராட்ட வேண்டும்:
உங்கள் அம்மா போல் யாராலும் சமைக்க முடியாதுதான். ஆனாலும், மனைவியின் சமையலை ஆகா, ஓகோ என புகழ்ந்து பாராட்ட வேண்டும். அவர்களும் நன்றாக சமையலை கற்றுக் கொள்ள கொஞ்சம் நாட்கள் ஆகுமில்லையா?? (உங்களுக்கு பாராட்டவா சொல்லிக் கொடுக்கணும்! அசத்திடுங்க!!)
3. ஊமை அல்ல:
வாய் பேச முடியாத வேலைக்காரி போல மனைவி இருக்க வேண்டும் என ஆசைப்படக் கூடாது. சினிமா/சீரியலில் தான் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை எதிர்பார்க்க முடியும். உண்மையான வாழ்க்கையில் மனைவியையும் சரி சமமாக நடத்த வேண்டும். (ஜமாய்ச்சிடுங்க!!)
4. ஆண் மகன்:
சிறந்த ஆண் மகனாக, எல்லாராலும் பாராட்டப்படக் கூடியவராக இருக்க வேண்டும். திறமையை வெளிப்படுத்து பவராக இருக்க வேண்டும்.(பயந்திடாதீங்க! தைரியமா இருங்க சார்!)
5. பொறுப்பு:
காலையில் வேலைக்குச் செல்லும் போது, கண்ணாடி எங்கே, சாவி எங்கே என்றெல்லாம் கேட்டு, தொந்தரவு செய்யக் கூடாது. அப்பதானே அவங்களும் பொறுப்பா நடந்துக்க முடியும்.
6. கட்டுப்பாடு:
உணவில் கட்டுப்பாடு வேண்டும். எப்போதும், ஏதாவது நொறுக்கு தீனிகளை உள்ளே தள்ளிக் கொண்டே அவங்களுக்கு சிரமம் தரக் கூடாது .(அப்பதானே அவங்க சீரியல் பார்க்க முடியும்!)
7. விடுமுறை:
விடுமுறை நாட்களில் அவங்க விரும்பியபடி ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும். அன்றும் விசேஷமாக சமையல் செய்ய வேண்டும் என வற்புறுத்தக் கூடாது. (நாமே சமையல் செய்து அசத்தலாம் என்ற விபரீத முடிவெல்லாம் ப்ளீஸ் வேணாம்ங்க! ஹோட்டலுக்கு அழைத்துப் போயோ அல்லது அங்கிருந்து வாங்கி வந்தோ அசத்தி விடுங்கள்!)
8. தொந்தரவு:
எல்லாவற்றையும் அவசர, அவசரமாக செய்ய வேண்டும் என தொந்தரவு செய்யக் கூடாது. (அதுக்காக நமக்கு ஏன்யா வம்பு என்று சும்மாவும் இருந்து விடக்கூடாது!.... புரியுதா???)
9. உதவி:
சமையல் அறையில் மனைவிக்கு கணவரும் உதவ வேண்டும். (இது கொஞ்சம் மனசுக்கு 'பக்' என்று பட்டாலும், வேறு வழியில்லை! முதலில் பெண் குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு வேணுமின்னா இதிலிருந்து எக்ஸ்சம்சன் கிடைக்கலாம்)
10. பாராட்டு:
"இந்த டிரஸ் உனக்கு நன்றாக இருக்கிறது…' என பாராட்ட வேண்டும். (நமக்கு பாராட்டவா சொல்லிக் கொடுக்கணும். அள்ளி விடுங்க!)
11.பொழுது போக்கு:
விடுமுறை தினங்களில் இரவு உறவினர்களை பார்க்க அல்லது அவர்கள் வீட்டுக்கு விருந்துக்கு செல்வது, என்பதில் இருவேறு கருத்து கூடாது. "வேலை இருக்கிறது, "டிவி'யை பார்த்துக் கொண்டு தூங்கு!' என கணவர்கள் சொல்லக் கூடாது.
12. டிரைவிங்:
கணவன் கார் ஓட்டும் போது மனைவியோ, மனைவி கார் ஓட்டும் போது கணவனோ பின் சீட்டில் உட்காரக் கூடாது. (பைக்/சைக்கிள் ஓட்டும்போதும் இதே ரூல்ஸ் தான்.. ஃபாலலோ அப்!)
13. ஒத்துழைப்பு:
குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்றால் மனைவியை திட்டக் கூடாது. குழந்தையை பராமரிக்கும் பொறுப்பு இருவருக்கும் உண்டு.
14. நல்ல முடிவு:
தினமும் ஒரு முறையாவது இரண்டு பேரும் சேர்ந்து விவாதித்து, நல்ல முடிவை எடுக்க வேண்டும். (அவங்க எடுக்கிற முடிவுதான் 'நல்ல முடிவு' என்பதை நினைவில் நிறுத்திக் கொள்க!!)
15. கொழுப்பு குறைய வேண்டும்: (வாய்க் கொழுப்பு என்று எடுத்துக் கொள்ளக்கூடாது!)
உங்கள் உடம்பில் சதைப் போட்டால் பிடிக்கும். ஆனால் அவங்க உடம்பில் சதை போடுவது சுத்தமாய் பிடிக்கவே பிடிக்காது. ஆகவே கொழுப்பு/சதையை குறைக்க ஒரு மருந்து கிடைத்தால் அது எங்கு கிடைத்தாலும் வாங்கி கொண்டுவந்து கொடுத்து விடுங்கள்.
16. அவசரம் கூடாது:
படுக்கப் போகுமுன், படுக்கை அறையில் போர் அடிக்கும் வகையில் கணவர் பேசி நடந்து கொள்ளக் கூடாது. (புரியுதா??)
17. ஆச்சர்யம்:
வைர மோதிரம் வேண்டும் என பெண்கள் விரும்புவது கிடையாது. ஆனால், பெண்களை மகிழ்விக்கும் வகையில் திடீரென சிறு சிறு பரிசுகளை கொடுத்தாலே போதும். (என்னது பரிசா? அதுக்கு என்கிட்டே ஏது காசு? எல்லாத்தையும் தான் அவங்ககிட்ட கொடுக்கச் சொல்லிட்டீங்களே என்று நீங்க கேட்பது காதில் விழுது! OT பார்த்த காசில் எல்லாம் கள்ளனா பூந்துட்டான். விடுங்க! விடுங்க!!)
18. புது டிரஸ்:
அவங்க ஒரே மாதிரி டிரஸ்களையே தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்க முடியாது. அவங்களுக்கு புதுப்புது டிரஸ்களை எடுத்து கொடுக்க வேண்டும்.(அப்படியே உங்களுக்கும் புது டிரஸ் எடுத்துக் கேட்டு 'பிழைக்கத் தெரிந்த பிள்ளையாய்' நடந்துக்கணும். நீங்க நடப்பீங்க பாஸ்!)
19. குழந்தைகள்:
நன்றாக, சிரித்த முகத்துடன் குழந்தைகள் படுக்கைக்குச் செல்ல வேண்டும். குழந்தைகளை அடிமை போல் நடத்தக் கூடாது. இதில் கணவர்களின் பங்கு முக்கியம்.
20. பொருத்தம்:
நாம் அணியும் டிரஸ் எப்போதும் பொருத்தமாக இருக்க வேண்டும். உள்ளாடை வெளியே தெரியும் படி அவலட்சணமாக இருக்கக் கூடாது.
21. பெண்கள் எப்போதும் அதிகம் பேசுவர்:
"ஐயோ… டெலிபோன் பில் அதிகமாகி விட்டதே!' அல்லது எவ்வளவு டாப்பப் பண்றது என்று அங்கலாய்த்து கூச்சல் போடக் கூடாது.
22. சுற்றுலா:
அவ்வப்போது குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வேண்டும். திருப்தியான, கை நிறைய சம்பாதிக்கும் வேலை வேண்டும்.
23. சுத்தம்:
படுக்கை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அடிக்கடி அதை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அதே போல் ÷ ஷோகேசில் உள்ள பொம்மைகள், பொருட்களையும் சுத்தம் செய்ய வேண்டும். (இதையெல்லாம் யார் செய்வது மறுகேள்வி கேள்வி கேட்காதீங்க! லீவு நாட்களில் நாமதாங்க செய்யணும்!)
24. சிக்கல்:
பெண்களுக்கு தலை வலி தருவதே, டிரெஸுக்கு ஏற்ற செருப்பு முதல் ஜாக்கெட் வரை எதுவும் கிடைக்காதது தான். (கூடமாட சென்று நீங்களும் உதவ வேண்டும்.)
25. இளமை:
நாம் எப்போதும் இளமையாக இருக்க மாட்டோம். அதை நினைவில் கொள்ள வேண்டும்
பெண்கள் விரும்புவது இவ்வளவு தான். இவற்றை கணவரோ, பெற்றோரோ, குழந்தைகளோ நிறைவேற்றி னால் போதும். அந்த குடும்பம் மகிழ்ச்சியான குடும்பம் தான்.
* நாங்கல்லாம் அப்பவே இப்படியெல்லாம் செஞ்சு பார்த்தாச்சு! நீங்களும் ட்ரை பண்ணிப் பாருங்க!!
-R P Karthik
Relaxplzz
குடும்பஸ்தன்_பாடசாலை