Saturday, 4 April 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


1502'ல ஆரம்பிச்சு.. 1503'ல நாலாவது முறையா கொலம்பஸ் அமெரிக்கா போறார் அங்க இருந்த...

Posted: 04 Apr 2015 08:21 AM PDT

1502'ல ஆரம்பிச்சு.. 1503'ல நாலாவது முறையா கொலம்பஸ் அமெரிக்கா போறார் அங்க இருந்த சிகப்பிந்தியர்களை ஏமாற்றி அவங்க மாலுமிகளுக்கு தேவையான உணவு, உடைன்னு ஏகப்பட்டதை ஆட்டைய போட்டுட்டு அவங்க பெண்களையும் கற்பழிக்கிறாங்க கொலம்பஸ் கூட்டம்.

டென்ஷனான சிகப்பிந்தியர்கள் இனிமே இவங்க என்ன கேட்டாலும் குடுக்கறதில்லைன்னு முடிவு பண்ணிடறாங்க, சாப்பாட்டுக்கே வழி இல்லாம போக என்ன பண்றதுன்னு முழிச்ச கொலம்பஸ் ஒரு தில்லாலங்கடி வேலை செய்றாரு..

கொலம்பஸ் கிட்ட வானவியல் அறிஞர் ரெஜியோமோன்டானஸ் எழுதிய புத்தகம் இருந்திருக்கு அதுல குறிப்பிட்ட நாளில் லூனார் எக்லிப்ஸ் (நிலவை ராகு முழுங்குவது) 48 நிமிஷம் நடக்க போகுதுன்னு கணிச்சதை பயன்படுத்தி இந்தியர் கூட்ட தலைவனை கூப்பிட்டு, 'எங்க கடவுள் உங்க மேல கோபமா இருக்காரு நீங்க எங்களுக்கு கேட்டதை குடுக்கலைன்னா உங்க நிலாவை அவர் முழுங்கிடுவாரு அதுக்கப்புறமும் நீங்க குடுக்கலைன்னா உங்க எல்லோரையும் தண்டிப்பாரு'ன்னு சொல்றாரு.

சரியான நேரத்துக்கு நிலா மறைய.. நாலா பக்கம் இருந்தும் மக்கள் பயந்து போய் கையில கிடைச்சதெல்லாம் கொண்டு போய் கொலம்பஸ் காலடில போட்டுட்டு நீங்க சொல்றதெல்லாம் கேக்குறோம்ன்னு சரணடைஞ்சிருக்காங்க. இவரும் உடனே நான் கடவுள் கிட்ட வேண்டி உங்களை மன்னிக்க சொல்றேன்னு சொல்லிட்டு ரூமுக்குள்ள போய் நேரத்தை அளந்திருக்கார்.. 48 நிமிசம் கழிச்சு கடவுள் உங்களை மன்னிச்சுட்டார் நிலா இப்போ வந்திடும்ன்னு சொல்ல அதே மாதிரி வந்திருச்சாம்... அதுல இருந்து சிகப்பிந்தியர்கள் இவருக்கு அடிமை.

இதே மாதிரி கணித, வானவியல் அறிவு கிடைச்ச அந்த காலத்து அறிவாளிகள் க்ரூப் தான்... சரி விடுங்க வரலாற்று கதை நல்லாருந்துச்சா... போய் புள்ள குட்டிய படிக்க வைங்க...

@Sarav Urs


திருநள்ளாறுக்கு நேர் மேலே வரும்போது செயற்கைகோள்கள் தடுமாறுகின்றன... ராமர் கட்டிய...

Posted: 04 Apr 2015 05:15 AM PDT

திருநள்ளாறுக்கு நேர் மேலே வரும்போது செயற்கைகோள்கள் தடுமாறுகின்றன... ராமர் கட்டிய பாலத்தை அமெரிக்காவின் நாஸா கண்டுபிடித்துள்ளது... என்றெல்லாமும் பதிவுகளைப் படித்திருப்பீர்கள். அந்த வரிசையில் லேட்டஸ்ட் வர்சன் இது. படித்து ரசித்து சிரியுங்கள்...

"நம் முன்னோர் பெருமையை உலகறிய செய்வோம்..!

"வாகனங்களுக்கு முன்னால் எலுமிச்சம்பழம், மிளகாய் கட்டும் பழக்கம் மூடநம்பிக்கை இல்லை. விஞ்ஞானபூர்வமானது.

எலுமிச்சையில் உள்ள சிட்ரோனிக் அமில்கா (Cidronic amilga) என்னும் அமிலமானது மிளகாயில் உள்ள பென்னியோசிட் (Benniyocid) என்னும் காரத்துடன் இரசாயனப் பகுப்பாகி, மிதீரியட் (methiriyed) என்னும் ஒருவகை உந்து வாயுவை வெளியிடுகிறது.

அந்த வாயுவை வாகனத்தின் பானட்டில் இருந்து ஸ்டியரிங் வரை செல்லும் எத்ஹோயிட் (Ethgoid) என்னும் கலப்பு மூலகத்திலான உலோகக்கம்பி வாகனத்தின் உட்பகுதிவரை கடத்துகிறது.

அது ஓட்டுனரை நித்திரை கொள்ளாமலும், உற்சாகத்துடனும் இருக்கச் செய்வதுடன், பிரேக் ஆயிலையும் வற்றாமல் பாத்துக்கொள்கிறது.

இந்த வாயுவானது மேற்சொன்ன இரசாயனப் பகுப்பால் ஒரு வாரம் மட்டுமே கிடைக்கிறது.அதனால்தான் வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் ஏற்கனவே கட்டப்பட்ட எலுமிச்சை மற்றும் மிளகாய்கள் அகற்றப்பட்டு புதிதாகக் கட்டப்படுகின்றது..!

வெள்ளிக்கிழமைகளில் இதனைச் செய்வதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. பூமியானது சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் இடையில் வடமத்திய ரேகையில் கடக்கக் கோட்டுக்கு தெற்கே 5 டிகிரி மேல்நோக்கி ஏறி, 3 டிகிரி கீழ்நோக்கி இறங்குவதால் இந்த இரசாயன பகுப்பு அதிகம் நடக்கிறது ..!!!

நம் முன்னோர்கள் மூடர்கள் அல்ல..!

விஞ்ஞான அடிப்படையில் தான் செயல்பட்டிருக்கிறார்கள்..!

நம் முன்னோர் பெருமையை உரக்க சொல்வோம்..!"

# அதுசரி.. லாரிய நம்ம நாட்டுல பயன்படுத்த ஆரம்பிச்சி எம்பது நூறு வருசம் இருக்குமா.. அதுக்கு எலுமிச்ச கட்டணும்னு எந்த முன்னோர்யா சொன்னான்??

@டி.வி.எஸ். சோமு


பகவத் கீதையை அடிப்படையாகக் கொண்ட போட்டி ஒன்றில் இஸ்லாமிய மாணவி ஒருவர் முதலிடத்தை...

Posted: 04 Apr 2015 04:19 AM PDT

பகவத் கீதையை அடிப்படையாகக் கொண்ட போட்டி ஒன்றில் இஸ்லாமிய மாணவி ஒருவர் முதலிடத்தை வென்றுள்ளார். வாருங்கள் நாமும் வாழ்த்துவோம் ...

மும்பையைச் சேர்ந்த மாணவி மரியம் ஆசிப் சித்திகு 6 ஆம் வகுப்பு மாணவி. மும்பையில் நடந்த கீதை சேம்பியன் லீக் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றார். ஒரு இஸ்லாமிய பெண் கீதை போட்டியில் முதல் பரிசு பெற்றது அனைவரையும் ஆச்சரியம் அடைய வைத்து உள்ளது.

மும்பையில் கிருஷ்ணா சர்வதேச சங்கமான இஸ்கான், கீதை சேம்பியன் லீக் போட்டியை நடத்தியது. பகவத் கீதை குறித்து எழுத்து தேர்வு மூலம் போட்டி நடத்தப்பட்டது. இதில் 195 பள்ளிகளைச் சேர்ந்த 4 ஆயிரத்து 617 பேர் பேர் கலந்து கொண்டனர். இதில் மும்பை மீரா ரோடு காஸ்மோபாலிட்டன் பள்ளியைச் சேர்ந்த மரியம் ஆசிப் சித்திகு என்ற முஸ்லீம் மாணவி முதல்பரிசு பெற்றார். இவர் பைபிளும் படித்து வருகிறார். குரான் விரிவுரையாற்ற படித்து உள்ளார். மேலும் தற்போது மொழிபெயர்க்கப்பட்ட கீதையைப் படித்து முடித்து உள்ளார்.இந்நிலையில், இஸ்கான் வைத்த போட்டி தேர்வில், மரியம் 100 மதிப்பெண்கள் எடுத்து சாதனைப் படைத்துள்ளார்.

இது தொடர்பாக மரியம் கூறுகையில்," எனக்கு எப்போதும் மதங்கள் குறித்த ஆர்வம் இருக்கும் . அடிக்கடி மத சம்பந்தமான புத்தகங்களை ஓய்வு நேரத்தில் படித்து வந்தேன். இந்த போட்டி குறித்து எனது ஆசிரியர் என்னிடம் தெரிவித்தார். புத்தகத்தில் படித்ததை புரிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக நான் கருதினேன். இந்த போட்டியில் கலந்து கொள்ள எனது பெற்றோரும் ஆதரவும் ஊக்கமும் அளித்தனர்' என்றார்.

மாணவியின் தந்தை ஆசிப் சித்திகு கூறும் போது," எங்கள் குடும்பம் மரியாதையான குடும்பம் நாங்கள் அனைத்து மதத்தையும் ஏற்று கொள்வோம் எங்களிடம் எந்த மத வெறுப்போ தவறான உபதேசமோ கிடையாது " என்று கூறினார்.

- விகடன்


மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர் மனித வெடிகுண்டுக்கு சமம் -நீதிமன்றம். அரசாங...

Posted: 04 Apr 2015 04:07 AM PDT

மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர் மனித வெடிகுண்டுக்கு சமம் -நீதிமன்றம்.

அரசாங்கமே வெடி மருந்து சப்ளை பண்ணுது,அவுங்க மேல ஏதாவது நடவடிக்கைஎடுங்க 'கனம் கோர்ட்டார் அவர்களே'.

- இளையராஜா டென்டிஸ்ட்

படத்தில் இருப்பவர் ஶசிரீதரன் சரத்...தமிழக கிரிக்கெட் வீரர். நாம் பெருமைப்பட வேண...

Posted: 04 Apr 2015 04:02 AM PDT

படத்தில் இருப்பவர் ஶசிரீதரன் சரத்...தமிழக கிரிக்கெட் வீரர்.
நாம் பெருமைப்பட வேண்டிய விஷயம் :
139 போட்டிகள்,
8700 ரன்கள்,
27 முறை 100 ரன்கள்,
42 முறை 50 ரன்கள்,
ஆவரேஜ் 51.17
100 ரஞ்சி போட்டி ஆடிய ஒரே தமிழக வீரர்.
நாம் வெக்கப்பட வேண்டிய விஷயம் :
இவர் ஒருமுறை கூட இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை.இவரை விட குறைவான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிறைய பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

"இங்கிலாந்துக்கு தேசிய விளையாட்டு,
இந்தியாவுக்கு ஜாதிய விளையாட்டு.."

- பூபதி முருகேஷ்


சுமார் 500 கோடிக்கும் அதிகமாக வருமான வரி செலுத்தாத 18 கம்பெனிகளில் சுமார் 280 கோ...

Posted: 04 Apr 2015 02:11 AM PDT

சுமார் 500 கோடிக்கும் அதிகமாக வருமான வரி செலுத்தாத 18 கம்பெனிகளில் சுமார் 280 கோடி அளவிலான வரி செலுத்தாத 11 நிறுவனங்கள் பாரதப் பிரதமர் மோடி ஐயாவின் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவை!

இதில் ஆச்சர்யம் நிறைய நிறுவனங்களின் முகவரிகளை கண்டுபிடிக்க முடியவில்லையாம்!

சமையல் எரிவாயு மானியம் வேண்டாமென வசதியானவர்கள் தானே முன்வந்து எழுதி கொடுத்தால் கல்விக்காக அரசு அதிகம் செலவிட முடியும்னு ரெண்டு நாள் முன்னாடி மோடிஜி உருக்கமா உரையாடினாரு!

இந்த 11 நிறுவனத்தின் வருமான வரியை வசூலித்தாலே ஓராண்டுக்கு மேல்நிலைப்பள்ளி வரைக்கும் கல்வியை அரசு இலவசமா கொடுக்கலாம்!

@மணி தனுஸ்கோடி

0 comments:

Post a Comment