Wednesday, 30 July 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


#திருக்குறள் குறள் பால்: #அறத்துப்பால். குறள் இயல்: #துறவறவியல். அதிகாரம்: #வெகு...

Posted: 30 Jul 2014 06:45 PM PDT

#திருக்குறள்
குறள் பால்: #அறத்துப்பால். குறள் இயல்: #துறவறவியல். அதிகாரம்: #வெகுளாமை.

மு.வ உரை:
பலிக்காத இடத்தில் (தன்னை விட வலியவரிடத்தில்) சினம் கொள்வது தீங்கு. பலிக்கும் இடத்திலும் (மெலியவரித்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறு இல்லை.

#Translation:
Where power is none to wreak thy wrath, wrath importent is ill;
Where thou hast power thy will to work, 'tis greater, evil still.

#Explanation:
Anger is bad, even when it cannot injure; when it can injure; there is no greater evil.

@ Puducherry * புதுச்சேரி * Pondichéry


நல்ல தமிழ் பெயர்கள் சில...

Posted: 30 Jul 2014 05:10 AM PDT

அன்றைக்கு ராஜேந்திரன் மாளிகை இருந்த இடத்தில் இருந்து 50 அடி தூரத்தில்! காலை சூரி...

Posted: 30 Jul 2014 04:00 AM PDT

அன்றைக்கு ராஜேந்திரன் மாளிகை இருந்த இடத்தில் இருந்து 50 அடி தூரத்தில்! காலை சூரியன் உதயத்தின் போது ராஜேந்திரன் தன்னுடைய மாளிகை மேல் நின்று பார்த்திருந்தால் இப்படி தான் தெரிந்திருக்கும்.

இடம் :கங்கைகொண்ட சோழபுரம்

@சசி தரன்


இந்தி கற்றுக்கொள்வதற்கு பதிலா சைனீஸ் கத்துக்க சொல்லுங்க அப்புரசண்டிகளா! ஏற்கனவே...

Posted: 30 Jul 2014 03:00 AM PDT

இந்தி கற்றுக்கொள்வதற்கு பதிலா சைனீஸ் கத்துக்க சொல்லுங்க அப்புரசண்டிகளா!
ஏற்கனவே சீனாக்காரன் காஷ்மீர்ல 25% புடிச்சிட்டான்.இப்போ இந்திய எல்லைக்குள்ள அடிக்கடி உள்ளே வந்து கூடாரம் போட்டு தங்குறான்.ஒருநாள் இல்ல ஒருநாள் டெல்லி வரைக்கும் வரப்போறான்.
அப்போ நம்ம வட ஹிந்திய பாவ் பாஜிகள் 'க்கியா? க்கியா?'ன்னு கேட்பானுக.
சப்ப மூக்கு சைனாக்காரன் 'சங்கீ மங்கீ போடாங்கோ'ன்னு சொல்லப் போறான்.அப்போ அவன்கிட்ட பேச நமக்கு சைனீஸ் தெரிந்சிருக்கனும்ல?

இப்போ ஒரு குரூப் கிளம்பும் 'உனக்கு தேச பக்தியே இல்லையா?'ன்னு கேட்கும்.

வருசா வருசம் பாதுகாப்பு துறைக்கு பல லட்சம் கோடி கொட்டி கொடுத்தும் நாட்டை பாதுகாக்க துப்பில்லாத 23ம் புலிகேசிகளை இவனுக கேள்வி கேட்காம பல்பொடியிலேர்ந்து ஷேவிங் பிளேடு வரைக்கும் வரி கட்டும் நம்மக்கிட்ட தேசபக்தி சொம்பை தூக்கிட்டு வருவானுக.

#ஆப்_கி_பார்_சைனாக்காரன்_உள்ளே_வந்துட்டான்_பார்

@நம்பிக்கை ராஜ்

”இசுலாமிய மதத்தினை கொச்சைப்படுத்துகிறார்கள்” என்று பலசமயங்களில் பொங்கி எழுந்த எந...

Posted: 30 Jul 2014 12:45 AM PDT

"இசுலாமிய மதத்தினை கொச்சைப்படுத்துகிறார்கள்" என்று பலசமயங்களில் பொங்கி எழுந்த எந்த ஒரு இசுலாமிய மத அடிப்படைவாத குழுவோ அல்லது 'அல்கொய்தாவோ' பாலஸ்தீன மக்களை காக்க லட்சக்கணக்கில் இசுலாமியரை திரட்டவில்லை, போராடவில்லை.

'இந்து தர்மம் காப்போம், இந்து தேசம் அமைப்போம், இந்துவினை காப்போம்' என்கிற ஆர் எஸ்.எஸ்-பாஜகவோ ஈழ (இந்து) தமிழர்கள் பல லட்சம் கொலை செய்யப்பட்டபொழுது ஒரு சுண்டுவிரலைக் கூட உயர்த்தவில்லை .

தமது மதத்தினை நம்புகிறவர்களைக் கூட கைவிடுபவர்களே இந்த மத அடிப்படைவாதிகள். பாலஸ்தீனமும், ஈழமும் தேசிய இனங்களாகவே போராடுகின்றன. மதங்களாக அல்ல.

யூத மத-இனவெறிக்கு இந்துத்துவ அடிப்படைவாதமும், கிருத்துவ மத அடிப்படைவாதமும் துணை போகின்றன. இசுலாமிய மத அடிப்படைவாதிகள் மெளனம் காக்கிறார்கள்.

பெளத்த சிங்கள் இனவெறிக்கு, இந்துத்துவவாதிகள் துணை போகிறார்கள்.இசுலாமிய மத அடிப்படைவாதிகள் மெளனம் காத்தார்கள்.

கொலை செய்யப்படும் மக்களுக்காக , மத-இன வெறியை-அடிப்படைவாதத்தினை மறுத்த பொதுமக்களே இன்று பல்வேறு தேசங்களில் போராடுகிறார்கள்.

மதம் மக்களை ஒருபொழுதும் காக்காது.
சக மக்களே தம்மை காக்க குரல்கொடுப்பார்கள் என்று அம்மக்களுக்கு தெரியும். இன்று இவர்களுக்கு நாம் குரல் கொடுத்தால் நாளை நமக்கென்று குரல் கொடுக்க சிலர் மிச்சம் இருப்பார்கள் என்கிற சுயநலம் தவறு கிடையாது.

- திருமுருகன் காந்தி


Therinthu Kolvom: Tamil Facebook Wall posts (30/07/2014)

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts
Posted: 30 Jul 2014 10:12 AM PDT
மரங்கள் மட்டும் "WIFI" சிக்னல் தருமானால் மரங்களாக நட்டுத் தள்ளி யிருப்போம்.

ஆனால் பாவம் மரங்களால் சுவாசிக்க "ஆக்சிஜன்" மட்டுமே தர முடிகிறது.



Tamil History and Culture Facebook Posts(30/07/2014)

Tamil History and Culture Facebook Posts

Posted: 29 Jul 2014 10:30 PM PDT
காமன்வெல்த் விளையாட்டு : 6-வது நாளில் 9 பதக்கங்களை வென்று இந்தியா அபாரம் , 10 தங்கம் உட்பட 36 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 5-வது இடத்தில உள்ளது இந்தியா...



Relax Please: FB page daily Posts (30/07/2014)

Relax Please: FB page daily Posts

Posted: 30 Jul 2014 09:15 AM PDT
நடைபாதை...ஓர் இளைஞன். கையில் பாட்டில்.

"இது சுறுசுறுப்பு டானிக்… காலையில் ஒரு ஸ்பூன்… மாலையில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும்… நாள் பூராவும் சுறுசுறுப்பு கிடைக்கும்!" என்று கூவி விற்றான்.

நிறைய பேர் வந்தார்கள். வாங்கினார்கள்… சாப்பிட்டார்கள்…

சுறுசுறுப்பாகத்தான் இருந்தது. கொடுத்த காசு வீண் இல்லை. மருந்து தீர்ந்ததும் மறுபடியும் அந்த வியாபாரியைத் தேடினார்கள். கிடைக்கவில்லை.

இரண்டு ஆண்டுகள் கழித்து… அதே வியாபாரி பலூன் விற்றுக் கொண்டிருந்தான்.

"அடடா! உங்களை எங்கேயெல்லாம் தேடுவது… அந்த சுறுசுறுப்பு டானிக் இன்னும் தேவை… எங்கே இருந்தீர்கள் இதுவரைக்கும்….?"

"சிறையிலே இருந்தேன்!"

"ஏன்?"

"போலி மருந்து விற்பனை பண்ணினதுக்காக இரண்டு வருடம் தண்டனை!"

"உங்க மருந்து போலி மருந்தா? யார் சொன்னது அப்படி? உங்க மருந்தை சாப்பிட்டு நான் சுறுசுறுப்பு பெற்றது உண்மை!"

"அப்படி இல்லே! நான் வெறும் தண்ணியிலே உப்பு, மிளகு, சீரகம், வெந்தயத்தைப் பொடி பண்ணி கலந்து வித்தேன்."

"அப்படின்னா… எங்களுக்கு சுறுசுறுப்பு கொடுத்தது…?"

"அது உங்கள் நம்பிக்கை! நம்பிக்கை தான் வாழ்க்கையின் உந்து சக்தி, மருந்து மாத்திரை அல்ல‌!" (y)

ஆங்கிலத்தில் ரிலாக்ஸ் ப்ளீஸ் Relaxplzz

குழந்தைகள்,வீடு வரைந்தால் பக்கத்திலே ஒரு மரத்தையும் வரையறாங்க, ஆனா பெரியவனாகி வீ...
Posted: 30 Jul 2014 09:11 AM PDT
குழந்தைகள்,வீடு வரைந்தால் பக்கத்திலே ஒரு மரத்தையும் வரையறாங்க, ஆனா பெரியவனாகி வீடு கட்டும் போது,மரம் வைக்க மறந்துடுறாங்க...

- Ilayaraja Dentist.



FB Posts by Araathu அராத்து : 30/07/2014