Thursday, 13 November 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


எல்லா அரசியல்வாதிகளும் கிராமங்கள தத்து எடுத்துக்குற மாதிரி... . . . நானும்... பக...

Posted: 13 Nov 2014 09:48 PM PST

எல்லா அரசியல்வாதிகளும் கிராமங்கள
தத்து எடுத்துக்குற
மாதிரி...
.
.
.
நானும்... பக்கத்து வீட்டுக்காரனோட
ரெண்டு செண்டு... பிளாட்ட
தத்து.. எடுத்துக்கலாம்னு பாக்குறேன்
ஒத்துக்க மாட்டுறான்...

@ரிட்டயர்டு ரவுடி

நடிகர்களை விட திருட்டு விசிடி விற்பவர்களே வசதியாக வாழ்கிறார்கள். - விஷால் # அப்...

Posted: 13 Nov 2014 08:37 PM PST

நடிகர்களை விட
திருட்டு விசிடி விற்பவர்களே வசதியாக
வாழ்கிறார்கள்.
- விஷால்

# அப்றம் ஏன்
ராசா படத்துல
நடிச்சு கஷ்டப்பட்ற?
திருட்டு விசிடி வித்து வசதியா வாழ
வேண்டியதுதான?

அழகு தமிழ்நாடு! நாகர்கோயில்!

Posted: 13 Nov 2014 08:53 AM PST

அழகு தமிழ்நாடு! நாகர்கோயில்!


(இன்று காலை தெருவில் இரு சிறுவர்கள் பேசிக் கொண்டு சென்றது!) டேய்! நேத்து செம மழ...

Posted: 13 Nov 2014 08:32 AM PST

(இன்று காலை தெருவில்
இரு சிறுவர்கள் பேசிக்
கொண்டு சென்றது!)

டேய்! நேத்து செம
மழைடா! நம்ம boys high
school ground பூரா குளம்
போல
தண்ணி தேங்கி நிற்குது!

>> ஒரு காலத்தில்
குளந்தான்குளம் என்ற
குளம் சுருங்கி,
வறண்டு,
ஆக்கிரமிக்கப்பட்டு பின்
காணாமல் போன
இடத்தை ஒட்டித் தான்,
இன்று அந்த
groundடே இருக்கு என்ற
வரலாறு அவர்களுக்கு தெரிந்திருக்க
வாய்ப்பில்லை!

இயற்கை சுழற்சி!

@எழிலன்

உலகத் தலைவர்களெல்லாம் எந்த பக்கம் பார்த்து நிக்கிறாங்க?.நம ்மாளு மட்டும் வித்திய...

Posted: 13 Nov 2014 08:21 AM PST

உலகத் தலைவர்களெல்லாம்
எந்த பக்கம்
பார்த்து நிக்கிறாங்க?.நம
்மாளு மட்டும்
வித்தியாசமா போஸ்
கொடுக்கிறாரு பாருங்க.
விளம்பர விஷயத்துல நம்ம
ஆள அடிச்சிக்க
ஓரமா நிற்கும்
ஒபாமாவாலகூட
முடியாது.


தலைக்கொரு கிரீடம் எனக்கெதற்கு தலையே கிரீடம் தானெனக்கு. கேட்டதில் ரசித்தது.

Posted: 13 Nov 2014 07:47 AM PST

தலைக்கொரு கிரீடம்
எனக்கெதற்கு
தலையே கிரீடம்
தானெனக்கு.

கேட்டதில் ரசித்தது.

ஆண்கள் அநியாயத்துக்கு வெட்கப்படுவது சண்டை போட்டவனோடு ஒன்னு கூடும்போது தான் @விவ...

Posted: 13 Nov 2014 07:44 AM PST

ஆண்கள்
அநியாயத்துக்கு வெட்கப்படுவது சண்டை போட்டவனோடு ஒன்னு கூடும்போது தான்

@விவிகா சுரேஷ்

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட்டில் ரோகித் ஷர்மா உலக சாதனை. ஆகவே, தமிழக மீனவர்கள் ய...

Posted: 13 Nov 2014 07:37 AM PST

இலங்கைக்கு எதிரான
கிரிக்கெட்டில் ரோகித்
ஷர்மா உலக
சாதனை. ஆகவே, தமிழக
மீனவர்கள் யாரும்
கடலுக்கு செல்ல
வேண்டாம்.

மனநலம் பாதிக்கப்பட்ட மகளிரும் தாய்மையடைவது தவிர்க்கப்படும் வரை மனிதனை விலங்குகள்...

Posted: 13 Nov 2014 07:30 AM PST

மனநலம் பாதிக்கப்பட்ட
மகளிரும்
தாய்மையடைவது தவிர்க்கப்படும்
வரை மனிதனை விலங்குகள்
பட்டியலிலேயே வைத்திருப்போம்.

விலங்குகள்
தடை சொல்லாதவரை..!!

@காளிமுத்து

கும்பலா குட்டி செவுத்து மேல ஏறி ஒக்காந்துட்டு கதையடிச்ச சந்தோஷம், எந்த Whatsapp...

Posted: 13 Nov 2014 07:28 AM PST

கும்பலா குட்டி செவுத்து மேல
ஏறி ஒக்காந்துட்டு கதையடிச்ச
சந்தோஷம், எந்த Whatsapp
Group-ம், Facebook-ம்,
தருவதில்லை.!!

@காளிமுத்து

குழந்தை நலம்: 'கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள்!!' எனது நண்பரி...

Posted: 13 Nov 2014 02:54 AM PST

குழந்தை நலம்: 'கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள்!!'

எனது நண்பரின் நண்பர் மகனுக்கு நடந்தது. இதனால், அவரது வாழ்க்கை கடந்த முப்பது நாட்களாக 'ரோலர்கோஸ்டர்' போல மாறிவிட்டிருந்தது. என்ன நடந்தது என்று அவரே சொல்கிறார் இதோ கேளுங்கள்:

"வீட்டில் சாமி போட்டோவிற்கு முன் கற்பூரம் வைத்திருந்தோம். அதை 'கல்கண்டு' என்று நினைத்து மூடிவைத்திருந்ததை எப்படியோ திறந்து ஒரே ஒரு துண்டு கற்பூரத்தை கடித்து தின்றுவிட்டான். அதை உடனடியாக பார்த்த நான் கடித்திருந்த பாதியை வாயில் இருந்து எடுத்துவிட்டேன்.

'கற்பூரம் சாப்பிட்டால் என்ன ஆகும்?'- என்று மனைவி கூகுளில் பார்த்து தெரிவித்த அடுத்த நிமிடமே, என் மகனுக்கு இழுப்பு வந்துவிட்டது. அது நான்கு நிமிடம் நீடித்தது. உடனே ஆம்புலன்ஸ் 911 உதவிக் கேட்டேன். அவர்கள் வந்தபோது, இழுப்பு சரியாகிவிட்டது. முதலுதவிக்கு வந்தவர்கள் குழந்தை தூங்கினால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னார்கள்.

ஆனால், மீண்டும் கண்கள் செருக ஆரம்பித்துவிட்டன. உடனே 'எமர்ஜென்ஸி' பிரிவுக்கு குழந்தையை எடுத்துச் சென்றோம்.

கற்பூரத்திலிருக்கும் 'கேம்பர்' (Camphor) என்ற கொடிய நச்சுப் பொருள் கடுமையான பாதிப்புகளை உருவாக்கக் கூடியது – என்று 'நச்சுத் தடுப்பு' துறையினர் (பாய்ஸன் கண்ட்ரோல்) மூலம் அறிந்த எமர்ஜென்ஸி மருத்துவர்கள், உடனே அதற்கு தகுந்த சிகிச்சையில் இறங்கினார்கள்.

அதற்காக 'சலைன்' (டிரிப்) ஏற்ற ஊசி குத்தும் போது குழந்தை எந்த விதமான எதிர்ப்பையும் காட்டாதது எங்களுக்கு அடிவயிற்றைக் கலக்கியது. அதாவது அவன் சுயநினைவு இழந்த 'டிப்ரெஷன் மோடு'க்கு சென்றுவிட்டிருந்தான்.

உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மீண்டும் 'டாலஸ் மெடிக்கல் சென்டரின்' குழந்தை நல அவசர சிகிச்சைப் பிரிவுக்கு (சில்ரண்ஸ் ஐசியூக்கு) மாற்றப்பட்டான்.

ஆம்புலன்ஸில் இருந்து இறங்கும்போது "அப்பா!" – என்று ஈனஸ்வரத்தில் அவன் அழைத்தாலும் அது எனக்குத் தெம்பூட்ட தைரியமானேன்.

கேம்பர் என்னும் அந்த கொடிய நச்சுப் பொருளின் மூன்றாம் நிலை கோமாவுக்கு கொண்டு சென்றுவிடும். அதை என் மகன் குறைந்த அளவு சாப்பிட்டதால் கோமா நிலைக்கு செல்லாமல் தப்பித்துவிட்டான்.

இது ஒருவிதமான அதிஷ்டமேயானாலும் அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. தகுந்த நேரத்தில் கண்டதாலும், உடனே சிகிச்சைக்கு கொண்டு சென்றதாலும் இறையருளால் எங்கள் கண்மணியை எங்களால் காக்க முடிந்தது. அதுவும் கிட்டத்தட்ட 16 மணி நேர மருத்துவப் போராட்டத்துக்குப் பின்தான் அதுவும் சாத்தியமாயிற்று!"

கேட்டீர்களா... விபரீதத்தை?

அதனால், கற்பூரம் என்னும் கொடிய விஷப் பொருளை வீட்டில் வைப்பதை தவிருங்கள். குழந்தைகளுக்கு எட்டாமல் பாதுகாப்பாக வையுங்கள். அப்படி குழந்தைகள் ஏதாவது சாப்பிட்டதாக சந்தேகம் வந்தால்.. உடனே தாமதிக்காமல் தகுந்த மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள்.


பழந்தமிழரின் போர்க்கருவிகள் நமக்கு போர்க்கருவிகள் என்றதுமே கத்தி, வேல், வாள், க...

Posted: 13 Nov 2014 01:17 AM PST

பழந்தமிழரின் போர்க்கருவிகள்

நமக்கு போர்க்கருவிகள் என்றதுமே கத்தி, வேல், வாள், கேடயம், அரிவாள், வீச்சரிவாள்போன்றவையே நினைவுக்கு வரும். பழைய திரைப்படங்களை பார்த்தவர்களுக்கு "கட்டாரி'என்ற போர்க்கருவியையும் கூடுதலாக தெரிந்திருக்கலாம். அதையும் நாம் நேரில்பார்த்தவர்கள் கிடையாது. ஆனால் பழங்காலத்தில் போர்க்கருவிகள் இன்னும் பலஇருந்திருக்கின்றன.

வீரத்தில் சிறந்து விளங்கிய தமிழர்கள் இத்துணை போர்க் கருவிகளைபயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற செய்தி நமக்கெல்லாம் பெரும் வியப்பை தருவதாகஅமைந்துள்ளது.

பழந்தமிழரின் போர்க்கருவிகள்:-

1) வளைவிற்பொறி 2) கருவிரலூகம் 3) கல்லுமிழ் கவண் 4) கல்லிடுகூடை 5) இடங்கணி 6)தூண்டில் 7) ஆண்டலையடுப்பு 8) கவை 9) கழு 10) புதை 11) அயவித்துலாம் 12) கைப்பெயர்ஊசி 13) எரிசிரல் 14) பன்றி 15) பனை 16) எழு 17) மழு 18) சீப்பு 19) கணையம் 20) சதக்களி 21)தள்ளிவெட்டி22) களிற்றுப்பொறி 23) விழுங்கும் பாம்பு 24) கழுகுப்பொறி 25) புலிப்பொறி 26)குடப்பாம்பு 27) சகடப்பொறி 28) தகர்ப்பொறி 29) அரிநூற்பொறி 30) குருவித்தலை 31)பிண்டிபாலம் 32) தோமரம் 33) நாராசம் 34) சுழல்படை 35) சிறுசவளம் 36) பெருஞ்சவளம் 37)தாமணி 38) முசுண்டி 39) முசலம்

தமிழர்களின் போர்முறை அறப்போர்முறை ஆகும். அவர்களின் போர்முறை வஞ்சகம்,சூழ்ச்சி, அடுத்துக் கெடுத்தல் அற்றதாக நேரானதாக இருந்துள்ளது. காலை முரசறையத்தொடங்கும் அவர்களின் போர் மாலை முரசறைய நிறுத்தப்படுவதாக இருந்துள்ளது.முழுஇரவு ஓய்விற்குப்பின் மீண்டும் அடுத்தநாள் காலை தொடங்கும் அவர்களின்போர்முறை எதிரிகளுக்கு இரங்கும் நெஞ்சம் உடையதாக, எதிரிகளுக்குத் தக்கவாய்ப்பளிக்கும் போக்கினதாக அமைந்திருக்கிறது.

எதிர்குழுவினரையும் தம்மொடு ஒத்த மனித உள்ளமாக, மனித உடலாகக் கொண்டுதமிழர்கள் போர் செய்துள்ளனர். அவர்கள் தன் இரத்தம் வெளிப்படும் துன்பத்தைப் போலவேபிறன் இரத்தம் வெளிப்படும் துன்பத்தையும் கண்டுள்ளனர். இதன்மூலம் போர்க்களம் என்பதுகொலைக்களமாக மட்டும் விளங்காமல் துயரம் கண்டு இரங்கும் களமாகவும் இருந்துள்ளது.முல்லைப்பாட்டில் இறந்த உயிர்களுக்காகத் துன்புறும் மன்னனின் செயல் இதற்குத் தக்கஎடுத்துக்காட்டாகும். எடுத்து எறி எஃகம் பாய்தலின், புண் கூர்ந்து, பிடிக் கணம் மறந்த வேழம்வேழத்துப் பாம்பு பதைப்பன்ன பரூஉக் கை துமிய , தேம் பாய் கண்ணி நல் வலம் திருத்தி,சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும்; தோல் துமிபு வைந் நுனைப் பகழி மூழ்கலின், செவிசாய்த்து, உண்ணாது உயங்கும் மா சிந்தித்தும்; ஒரு கை பள்ளி ஒற்றி, ஒரு கை முடியொடுகடகம் சேர்த்தி, நெடிது நினைந்து (முல்லைப்பாட்டு 68-75). அஃறிணை உயிர்களுக்கு இரங்கும்மன்னவன் உள்ளம் இவ்வடிகளில் போர்க்களத்தை இரங்கு களமாகக் கண்டுள்ளது.

இவ்வகைப்பட்ட போரை நடத்திட தமிழர்க்குப் பல போர்க்கருவிகள், பல திட்டங்கள்உதவிபுரிந்திருக்க வேண்டும், அவர்கள் இவ்வகைக் கருவிகளை உருவாக்கி, அவற்றைப்பயன்படுத்திடக் கற்றுக் கொண்டிருக்கவேண்டும், தமிழர் இத்தகைய போர் அறிவியலில்குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருந்தமைக்கான சான்றுகள் பண்டை இலக்கண நூலானதொல்காப்பியம் முதலாக கிடைக்கப் பெறுகின்றன, பண்டைக்காலம் முதலாக, தொடர்ந்துவரும் காலங்களிலும் அவர்களின் போர் அறிவியல் ஆற்றல் மேம்பட்டிருந்ததற்கான பலசான்றுகள் தமிழிலக்கியங்கள் வாயிலாகக் கிடைக்கப் பெறுகின்றன


Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


அடப்பாவமே..! எனக்காக யாருமில்லையே! மரணப்படுக்கையில் கிடந்த அவரைச் சுற்றிலும் உற...

Posted: 13 Nov 2014 05:32 AM PST

அடப்பாவமே..! எனக்காக யாருமில்லையே!

மரணப்படுக்கையில் கிடந்த அவரைச் சுற்றிலும் உறவினர் கூட்டம் குழுமியிருந்தது. அவர் இனி பிழைக்க மாட்டார் என்று அனைவருக்கும் தெரிந்துவிட்டது. அவரது கட்டிலைச் சுற்றியும் மனைவி மக்கள், சொந்த பந்தங்கள் கண்ணீரும் கம்பலையுமாய் அமர்ந்திருந்தார்கள்.

கண் விழித்த அந்த மனிதர் லேசாக இருமினார். அழுது கொண்டிருந்தவர்கள் அமைதியாக அவரையே பார்த்தார்கள். அவர் சுற்றி பார்வையைச் செலுத்தி அடையாளம் கண்டு கொண்டார். தலையாலேயே சைகை செய்து அருகிலும் அழைத்தார்.

பக்கத்தில் வந்த தந்தையிடம், "அப்பா! நீங்கள் ஏன் அழுகிறீர்கள்..?" – என்று மெல்லியக் குரலில் கேட்டார்.

"மகனே! நீ போனபின் நான் தனி ஆளாகிவிடுவேனே? அதை நினைத்துதான் அழுது கொண்டிருக்கின்றேன்.' – என்று கண் கலங்கி நின்றார்.

"அம்மா, நீங்கள் ஏனம்மா அழுகிறீர்கள்?" – அம்மாவை அழைத்து கேட்டார்.

"வயதான காலத்தில் எங்களை காப்பாற்றுவாய் என்று நிம்மதியாய் இருந்தோம். இனி எங்களை யார் கவனித்துக் கொள்வார்கள்?" – அவரது அம்மா தேம்பி.. தேம்பி அழுதார்.

"நீ ஏன் அழுது புலம்பிக் கொண்டிருகிறாய்?"- என்று அவர் தனது மனைவியிடம் கேட்க,

"ஏங்க.. எம்பசங்களையும், என்னையும் அனாதையாக்கிட்டு போறீங்களே..! இனி எப்படி அவர்களைக் காப்பாற்றி ஆளாக்குவேன்!" – என்று தலையில் அடித்துக் கொண்டு அவர் அழ ஆரம்பித்தார்.

தனது குழந்தைகளை அருகில் அழைத்தவர், "கண் துடைச்சிக்குங்க செல்லங்களா! நீங்க ஏன் அழுகிறீங்க?" – என்று கேட்டார்.

"அப்பா, நாங்க கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்தீங்க. இப்போ நீங்க சாமிகிட்ட போயிட்டீங்கன்னா.. நாங்க யார் கிட்ட கேட்கறது? எங்களின் ஆசையை யார் நிறைவேத்துறது?" – என்றான் வளர்ந்த பிள்ளை.

"அடபாவமே! என்னுடைய முழு வாழ்க்கையையும் குடும்பத்துக்காக அர்ப்பணித்து உழைத்தேன். இன்றைக்கு மரணப்படுக்கையில் இப்போதோ… அப்போதோ என்று கிடக்கும் நான் இனி திரும்பி வர முடியாத இடத்துக்கு செல்லப் போகிறேன். அங்கே எனக்கு என்ன நடக்கப் போகிறது? எனக்காக என்ன காத்திருக்கிறது? என்று கவலைப்படாமல் என்னுடைய பிரிவுக்காகவும் அழாமல் அவரவர் தேவைகளை எண்ணி அல்லவா அழுது கொண்டிருக்கிறார்கள்!" – என்ற கவலையிலேயே அவர் நிரந்தரமாக கண்ணை மூடிவிட்டார்.

#ஆன்மிகச்_சிந்தனை


புரட்சியாளர் சேகுவேரா உடன் நேரு அவர்கள்..

Posted: 13 Nov 2014 05:23 AM PST

புரட்சியாளர் சேகுவேரா உடன் நேரு அவர்கள்..


பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ருபாய் 1.50 உயர்வு ! ! !

Posted: 13 Nov 2014 02:38 AM PST

பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ருபாய் 1.50 உயர்வு ! ! !


Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


எந்தவொரு நிகழ்ச்சிகளுக்குச் சென்றாலும் நாம் சாப்பிட்டுத்தான் வருகிறோம். சாப்பிடு...

Posted: 13 Nov 2014 05:30 AM PST

எந்தவொரு நிகழ்ச்சிகளுக்குச் சென்றாலும் நாம் சாப்பிட்டுத்தான் வருகிறோம். சாப்பிடும் முன் கொடுக்கப்படும் இலையில் தண்ணீர் தெளித்துக் கொள்கிறோம். இதற்க்குக் காரணம் என்ன என்று உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்தால் பகிரவும்.....

அத்துடன் உணவு பரிமாறும் முரை குறித்து உங்களுக்குத் தெரிந்த விளக்கங்களைக் கொடுக்கவும்....

இது பற்றி நான் விசாரிக்கும் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரியான விமர்சனங்கள் வெளிவருகின்றன. தெளிவான கருத்து தெரிந்தவர்கள் விரைவாகப் பதிவிடவும்.

பா விவேக்


இதனைப் பார்த்தவுடன் எந்தக் கோவில் என்று உங்களால் கூற முடியும் என நம்புகிறேன்....

Posted: 13 Nov 2014 02:30 AM PST

இதனைப் பார்த்தவுடன் எந்தக் கோவில் என்று உங்களால் கூற முடியும் என நம்புகிறேன்....


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


ஒரே ஒரு நிமிடம் யோசியுங்கள் நண்பர்களே !!! “தமிழன் தமிழில் எழுதினாலோ பேசினாலோ பா...

Posted: 13 Nov 2014 08:03 AM PST

ஒரே ஒரு நிமிடம் யோசியுங்கள் நண்பர்களே !!!

"தமிழன் தமிழில்
எழுதினாலோ பேசினாலோ பாராட்டுவது நாமாகத் தான் இருப்போம். நம்
மொழி யை நாம்
பேசவே பாராட்டுகிறோம்.
அந்தளவு போய்விட்டது நம்
மொழி. ஆனால் தமிழு க்குத்
தொடர்பே இல்லாத ரஷிய
நாடு தமிழைக் கொண்
டாடுகிறது. அங்கிருக்கும் ரஷிய
அதிபர் மாளிகையான கிரெம்ளின்
மாளிகையின் பெயரை அவர்கள்
அழகுத் தமிழில்
எழுதியுள்ளார்கள்
முதலாவதாக அவர்கள் தாய்
மொழியான ரஷிய மொழியிலும்,
இரண்டா வதாக
அண்டை நாட்டு மொழியான
சீனத்திலும், உலகத்
தொடர்பு மொழி என்ற
நோக்கில் ஆங்கிலத்திலும்,
நான்காவதாக தமிழிலும்
எழுதி யிருக்கிறார்கள் .
தமிழைவிட எத்தனையோ உலக
மொழிகள் பெரும்பாலான மக்களால் பேசப்படுகின்றன.
ஆனால், அவற்றையெல்லாம்
விட்டு விட்டு தமிழ் மொழியில்
அதிபர் மாளிகையின்
பெயரை எழுதியதற்கு அவர்கள் கூறும் காரணம், தமிழர்களாகிய
நம்மைச் சிந்திக்க வைப்பதாக
இருக்கி றது.
"உலகில் 6 மொழிகள்தான்
மிகவும் தொன்மையானவை.
அவை கிரேக்க ம், லத்தீன்,
எபிரேயம், சீனம், தமிழ்,
சம்ஸ்கிருதம். இந்த 6 மொழிகளில்
நான்கு மொழிகள்
இன்று வழக்கில் இல்லை. இலக்கிய, வரலாற்று செழுமையான
மொழி, எங்களுக்கு உலகில்
உள்ள முக்கிய மொழிகளான 642
மொழிகளிலும் சரியான,
தகுதியான மொழியாக
தமிழ்மொழி தென்பட்டது. அந்த
மொழியைச்
சிறப்பிக்கவே "கிரெம்ளின்
மாளிகை' எனத் தமிழில்
எழுதினோம்"
என்று கூறுகிறார்கள்.
மேலும்,
அங்கே வைக்கப்பட்டுள்ள அரிய
நூல்களுள் நமது திருக்குறளும்
ஒன்று.
வெளிநாட்டில்
உள்ளவர்களுக்குக் கூட நம்
தமிழின்
பெருமை தெரிந்துள்ளது.
ஆனால், நாமோ தமிழைக்
காப்பாற்ற கருத்தரங்கு நடத்திக்
கொண்டிருக்கிறோம்' .தமிழ்நாட்டில் பிறந்து வெறும் 500 வருடங்களுக்கு முன் தோன்றிய ஆங்கிலத்தை பேசுவதில் பெருமையாக நினைப்பதற்கு முன் சற்று ஒரு நிமிடம் யோசியுங்கள்... 10000 வருடங்களுக்கு முன் தோன்றி இன்றும் அழியாமல் கம்பிரமாய் இருக்கும் தமிழ் மொழி நம் தாய் மொழி என்று! இந்த உலகில் எந்த இனத்தவருக்கும் கிடைக்காத இந்த அரும்பெரும் வாய்ப்பு நம் தமிழர்களுக்கு மட்டுமே உண்டு...

ஆகவே தமிழை தமிழரோடு பேசுவதில் பெருமைக் கொள்வோம். நம் தமிழ் மொழி நமக்கு அவமானம் அல்ல, நமது 10000 வருட அடையாளம்!!!

தொகுப்பு : துரை ரவி

Relaxplzz

தோப்புக்கரணம்..... நம் நாட்டில் விநாயகரை வழிபடும் போதும்...., படிக்கும் வயதில்...

Posted: 13 Nov 2014 07:09 AM PST

தோப்புக்கரணம்.....

நம் நாட்டில் விநாயகரை வழிபடும் போதும்....,

படிக்கும் வயதில் ஆசிரியர் தண்டனையாக செய்ய சொல்வதும் "தோப்புக்கரணம்" . தோப்புக்கரணத்தின் பயன்கள்..

மூளைசெல்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன . நாடிகள் சுத்தம் பெறுகின்றன. . நம் உடலிலுள்ள நரம்பு மண்டலங்கள் அனைத்தும் சேருமிடம் காது மடல்கள். . தோப்புக்கரணம் செய்யும் போது காது மடல்களை இழுப்பதால் அனைத்து நரம்புகளும் தூண்டப்படுகின்றன. . செய்முறை: . முதலில் கால்களுக்கு இடையில் ஒரு ஜான் அளவு இடவெளி விட்டு நிற்க வேண்டும். . இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக்கொண்டு.. . மூச்சை இழுத்துக்கொண்டே அமரவும் அமர்ந்த நிலையில் ஒரு மூச்சு விட்டு..

பிறகு எழ வேண்டும் இப்பொழுது நின்ற நிலையில் ஒருமூச்சு விட வேண்டும்.

இவ்வாறு பத்து முறை தினமும் செய்தால் மாற்றம் உங்களுக்கே தெரியும்..

இதனை நம் முன்னோர்கள் பல வருடங்களுக்கு முன்னமே நமக்கு காட்டியுள்ளார்கள் ஆனால் நாம் அதை அலட்சியப்படுத்திவிட்டோம்.

இதனை வெள்ளைக்காரன் ஆராய்ச்சி செய்து அவன் பணம் சம்பாரிக்கிறான்.......

சந்தேகமெனில் Youtube- ல் super brain yoga -

https://www.youtube.com/watch?v=l6YxNZIZLLw

Relaxplzz


"தெரிந்து கொள்வோம்" - 2

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள்... உயர்நிலைக் கல்வியை முடித்தப் பின், தி...

Posted: 13 Nov 2014 06:15 AM PST

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள்...

உயர்நிலைக்
கல்வியை முடித்தப் பின்,
திருச்சியில் ஒரு கல்லூரியில்
இயற்பியல் துறையில் பயின்றார்.
எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியில்
ஏரோனாடிக்கல் பொறியியல்
துறையில் இடம் கிடைத்து, பணம்
கட்ட முடியாமல்
இருந்தபொழுது இவரின்
சகோதரிதான் நகைகளைக்
கொடுத்து படிக்க அனுப்பினார்.

கல்லூரி வந்த சில நாட்களிலேயே,
தொழிலில் ஏற்பட்ட பாதிப்பில் அப்பா,
திரும்ப
ஊருக்கு வரச்சொல்லியதால் தன்
புத்தகங்களை எடைக்கு போட்டு பணம்
திரட்டப்போன இடத்தில்
புத்தகங்களை வாங்காமல்
பணத்தை மட்டும்
கொடுத்து மேலே படிக்கச் சொன்ன
பேப்பர்காரரை இன்னமும்
நன்றியோடு குறிப்பிடுவார்
கலாம்.

கல்லூரியில் உணவுச்
செலவை குறைக்க
சைவத்துக்கு மாறினார்.
அதுவே இப்போதும் தொடர்கிறது.

பொறியியல் கல்வியை முடித்ததும்
விமானி ஆகவே ஆசைப்பட்டார்.
ஆனால், ஓர் இடம்
பின்தங்கி வாய்ப்பை இழந்தார்.

கண்ணீரோடு நின்றவரை சுவாமி சிவானந்தரின்
''இதைவிட பெரிதான ஒன்றுக்காக நீ
அனுப்பப்பட்டு இருக்கிறாய்'' என்ற
வரிகள் உத்வேகப்படுத்தின.

விக்ரம் சாராபாயின் ஊக்கத்தில்
இந்திய விண்வெளிக் கழகத்தில்
இணைந்தார். அங்கேதான் முதல்
சுதேசி விண்கலமான
எஸ்.எல்.வியை உருவாக்கினார்.

அதைத் தொடர்ந்து ரோகினி,
திரிசூல், ப்ரித்வி, ஆகாஷ் என
இந்தியாவின் விஞ்ஞான
வலிமையை உலகுக்கு உரக்கச்
சொல்லும்
ஏவுகணைகளை உருவாக்கி 'இந்தியாவின்
ஏவுகணைத் தொழில்நுட்பத் தந்தை'
என அழைக்கப்பட்டார்.

(y) (y)

Relaxplzz

பழி சொல்: குறுஞ்சி என்ற ஊரில் முனுசாமி என்ற ஒருவன் இருந்தான். அவன் ஒரு முறை தேவ...

Posted: 13 Nov 2014 05:38 AM PST

பழி சொல்:

குறுஞ்சி என்ற ஊரில் முனுசாமி என்ற ஒருவன் இருந்தான். அவன் ஒரு முறை தேவையில்லாமல் ஒரு கிராமவாசி மீது பழி சொல்லி பஞ்சாயத்தைக் கூட்டினான்.
பஞ்சாயத்திலும் கிராமவாசிக்குத் தண்டனை கிடைத்தது. பின், வீட்டிற்கு வந்த முனுசாமியின் மனசாட்சி அவனை உறுத்தியது. கிராமவாசி மீது தான் பழி சொன்னதை எண்ணி வருந்தினான். எனவே, தன் பாவத்திற்கு ஏதாவது பிராயச்சித்தம் உண்டா என்று தேடினான்.

என்ன பிராயச்சித்தம் செய்வதென்று அவனுக்குப் புரியவில்லை. எனவே, அந்த ஊரிலிருந்த ஒரு துறவியிடம் சென்றான். "துறவியாரே! நான் இந்தக் கிராமத்தில் வசிக்கும் ஒருவர் மீது வீண் பழி சொல்லிவிட்டேன். அது என் மனத்தை உறுத்துகிறது. அந்தப் பழி சொன்ன பாவத்தில் இருந்து தப்பிக்க எனக்கு வழி கூறுங்கள்!" என்று கேட்டான்.

துறவி சிறிது யோசித்துவிட்டு, "இன்று இரவு ஐந்து கிலோ இலவம்பஞ்சை எடுத்துப் போய் அந்த கிராமவாசியின் வீட்டுக்கு முன்பு பரப்பிப் போட்டுவிட்டு வந்து விடு. நாளை வந்து என்னைப் பார்," என்று கூறினார்.

முனுசாமியிடம் பஞ்சைக் கொண்டு சென்று கிராமவாசியின் வீட்டின் முன் பரப்பி விட்டான். பின் மறுநாள் சென்று துறவியைப் பார்த்தான். "துறவியாரே! என் பாவம் போய் இருக்குமா இந்நேரம்?" என்று கேட்டான்.
உடனே துறவி, "முனுசாமி! நீ இப்போது அந்த கிராமவாசியின் வீட்டிற்குச் செல். அவன் வீட்டு முன் நீ நேற்றிரவு பரப்பி வைத்த பஞ்சை மீண்டும் பொறுக்கிக்கொண்டு வா," என்று கூறினார்.

முனுசாமி மிகுந்த ஆவலுடன் ஓடினான். ஆனால், ஒரு விரல் அளவு பஞ்சு கூட அங்கு இல்லை. எல்லாம் காற்றில் பறந்துபோய் விட்டிருந்தது. அதனைக் கண்ட முனுசாமி திடுக்கிட்டான். மீண்டும் துறயிடம் ஓடி வந்தான்.
"துறவியாரே! நேற்றிரவு நான் கிராமவாசி வீட்டின் முன்னால் போட்டுவிட்டு வந்த பஞ்சில் ஒரு துளிப் பஞ்சாவது இப்போது அங்கு இல்லை. என்ன செய்வது?" என்று கேட்டான்.

துறவி சிரித்துவிட்டு, "முனுசாமி! நீ விரித்துப் போட்டுவிட்டு வந்த பஞ்சை இப்போது மீண்டும் எப்படி அள்ள முடியாதோ, அதே போல, நீ ஒருவர் மீது கூறிய பழியையும் அதனால் உனக்கு ஏற்பட்ட பாவத்தையும் மாற்ற முடியாது. திருப்பி வார முடியாத பஞ்சைப் போன்றது தான் உன் பழிச் சொற்களும். அவற்றையும் இனித் திருப்பி வார முடியாது. இறைவனிடும் உன் தவறுக்காக மன்னிப்பு கேள்," என்று கூறினார்.

முனுசாமிக்கு உண்மை புரிந்தது. அன்று முதல் மற்றவர்கள் மீது பழி சொல்லும் குணத்தையே விட்டுவிட்டான். பிறர் மீது வீண் பழி சுமத்துவதால் பலன் ஏதும் கிடைக்கப்போவதில்லை என்பதை உணர்ந்தான் முனுசாமி.

Relaxplzz

ஜென் கதை ------------------- அந்த மடத்தில் இருபது ஆண் துறவிகளோடு இஷுன் என்கிற ப...

Posted: 12 Nov 2014 11:13 PM PST

ஜென் கதை
-------------------
அந்த மடத்தில் இருபது ஆண் துறவிகளோடு இஷுன் என்கிற பெண் துறவியும் ஜென் மாஸ்டரிடம் தியானம் பயின்றாள். அவள் மிகவும் அழகாக இருந்ததால் பெரும்பாலான ஆண் துறவிகள் அவள் மீது காதல் கொண்டனர்.

மறைமுகமாக அவளுக்கு சைகை மூலம் வெளிப்படுத்தினர். ஒரு துறவி அவளுக்கு பெயரைத் தெரிவிக்காமலே காதல் கடிதம் எழுதி அவள் இடத்தில் வைத்து விட்டு வந்தார்.

மறு நாள் தியான வகுப்பு நடந்தது. காதலை மறைமுகமாக சொல்லியவர்கள் அவள் என்ன பதில் சொல்வாளோ என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.

அவள் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை.

வகுப்பு முடிந்ததும் இஷுன் சடாலென எழுந்து " என்னை உண்மையிலே காதலிப்பவர் இப்போது அனைவர் முன் தயக்கமின்றி வெளிப்படையாக என்னைக் கட்டிப் பிடியுங்கள். நான் இப்போதே உன்னுடன் வந்து விடுகிறேன் " என்று உரக்க கூறினாள்.

அப்புறம் என்னாச்சு? ;-)

ஆண்கள் மிரண்டு பதுங்கிட்டாங்க..

Relaxplzz

இசையரசி P.சுசீலாம்மாவின் 80ஆவது பிறந்தநாள் இன்று...! :)

Posted: 12 Nov 2014 10:42 PM PST

இசையரசி P.சுசீலாம்மாவின் 80ஆவது பிறந்தநாள் இன்று...! :)


மனிதாபிமானத்திற்கு மதமில்லை : சிறுமியின் கண் சிகிச்சைக்கு நிதி திரட்டிய முஸ்லீம்...

Posted: 12 Nov 2014 07:00 PM PST

மனிதாபிமானத்திற்கு மதமில்லை : சிறுமியின் கண் சிகிச்சைக்கு நிதி திரட்டிய முஸ்லீம் இளைஞர்கள்...!

மதங்களை கடந்த மனிதாபிமான நிகழ்வுகள் மனிதர்கள் தங்களின் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக செயல்பட உதவுகிறது .

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த முருகன் என்பவருடைய‌ மகளான சிறுமிக்கு கண் குறைபாடு ஏற்பட்டு உள்ளது இது பற்றி அங்குள்ள‌ கீழப்பள்ளிவாசல் இளைஞர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்கள் சிறுமியின் கண் சிகிச்சைக்கு நிதி திரட்டினர்.

திரட்டப்பட்ட நிதியை சிறுமியிடம் அளிக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

காவல்துறை துணை ஆய்வாளர் நிதியுதவியை வழங்கினார்.

Relaxplzz


Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


+++++மரணிக்காது மரணித்த நண்பனுக்காக+++++ இருபது வருடங்கள் வகுப்பறை, புத்தகம், ஆ...

Posted: 13 Nov 2014 05:30 AM PST

+++++மரணிக்காது மரணித்த நண்பனுக்காக+++++

இருபது வருடங்கள் வகுப்பறை, புத்தகம், ஆசிரியன், நட்பு, பகைமை, குடும்பம், சமுகம், கற்றுத்தராத பாடங்களை இரண்டே வருடத்தில் சேலைன், ஊசி, ரத்தம், Abiraterone,Cytoxen,Keoxifene எனக்கு கற்றுத்தந்தது.

நான் ஒன்றும் அவ்வளவு பெரிய தைரியசாலியில்லை இரவில் வெளிக்கு போவதற்கு கூட அம்மாவை எழுப்பும் ஜாதி, இன்று மலையை புரட்டும் மன தைரியத்தை உணர்கிறேன்.

நோயை உறுதிப்படுத்திய அந்நாள் குருவிக்கூட்டில் இடிவிழுந்த நாள், அன்றிலிருந்து அம்மாவின் விழியோரம் ஈரமில்லாமல் நான் கண்டதில்லை, அன்றுவரை தங்கையின் இதழோரம் சிரிப்பில்லாமல் நான் கண்டதில்லை.

எனது வீட்டை நான் பார்த்து மாதங்களாச்சு, வீட்டுக்கு போகனும் என்று நான் கேட்கும் போதல்லாம் கிடைக்கும் பதில் கவலை படாதீங்க சீக்கிரமே போயிடுவீங்க, அர்த்தம் புரியாமலா என்ன.

படிக்கும் மேசையில் பங்கு கேட்டழுத தம்பிக்கு இனி அழ வேண்டியிருக்காது முழுதுமே அவனுக்கு தான்.

அலுமாரியின் இடுக்கில் 500 ரூபாய் நோட்டும் கடிதம் ஒன்றும் இருக்கும், பணத்தில் தங்கைக்கு சிவப்பு ரோஜா இட்ட கைப்பை ஒன்று வாங்கிக்கொடுங்கள், அவள் என்னிடம் ஆசைப்பட்டு கேட்டது.
கடிதம்! நண்பனுக்கு கிடைத்த காதல் கடிதம் அவனிடம் பறித்துக்கொண்டது, அதை திருப்பிக்கொடுத்துவிடுங்கள் அவனே மறந்திருப்பான்.

கனவுகள் கருகிய வாலிபனாய் நான் இன்னும் பலர் என்னுடன் யார் முந்தப்போகிறோம் என்ற ஓட்டத்துடன்,
கட்டில் காலியாகும் வரை பார்த்திருக்கும் ஒரு கூட்டம், அதிசயம் நிகழும் என காத்திருக்கும் ஒரு கூட்டம்.

இடக்கையில் குத்திய ஊசியை விட இலக்கத்தை சுற்றும் ஊசி வலிக்கிறது,
பெயர் கூப்பிடும் வரை காத்திருக்கிறேன் ..............!!

நன்றி:- ஷகீக் அஹ்மத்


தமிழன் ! விடியற்காலை, பயிரிடும் பெண்மணிகள் ஒருபுறம் இருக்க ... ஏர் பூட்டி உழுத...

Posted: 13 Nov 2014 02:30 AM PST

தமிழன் !

விடியற்காலை,
பயிரிடும் பெண்மணிகள் ஒருபுறம் இருக்க ...
ஏர் பூட்டி உழுது வரும் உழவன்
நல்ல தமிழனடா

விழாக்காலங்களில்,
பொங்கல் வச்சு படைக்க,
பெண்மணிகள் ஒருபுறம் இருக்க ...
காப்பு கட்டி, மஞ்சள் வேட்டி கட்டி
கோயில் வேலைகளை எடுத்து செய்பவன் நல்ல தமிழனடா

மஞ்சு விரட்டன்று
கண்ணாடி வளையல், வெள்ளி கொலுசு, மல்லிகை பூ, காதுல ஜிமிக்கி, கழுத்தில் முத்துமாலை, தாவணி அணிந்து,
காத்திருக்கும் கன்னி பெண்கள் இருக்க ...
காளைகளை அடக்கி வீரத்திருமகனாக வருபவர் நல்ல தமிழனடா

வீட்டிர்க்கு வருகின்ற அனைவருக்கும்
சுவையான சமையல் செய்து,
வாழை இலையில்
பரிமாறி, நவரசமாக பேசும் பெண்மணிகள் இருக்க ...
கறைப்படாத வெள்ள வேட்டி கட்டி
அன்பு மழை காட்டி வருபவர் நல்ல தமிழனடா

- கண்ணன்


சமீபத்தில் வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படத்தில் ஒரு கிராம மக்கள் தங்கள் நிலத்தடி நீ...

Posted: 13 Nov 2014 12:07 AM PST

சமீபத்தில் வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படத்தில் ஒரு கிராம மக்கள் தங்கள் நிலத்தடி நீரை காக்க ஒரு நிறுவனத்தை எதிர்த்து போராடி வென்ற கதையை பார்த்து நம்மில் பலர் உணர்வுபூர்ணமாக அந்த படத்தின் இயக்குனரை பாராட்டினோம். அதை போன்ற ஒரு போராட்டம் தமிழகத்தில் திருச்சியை சேர்ந்த சூரியூரில் நடந்து கொண்டு இருப்பதை நம்மில் பலர் அறிந்து இருக்க மாட்டோம். ஆம், நம் உடல் நலத்தை கெடுக்கும் பெப்சி குளிர்பானம் தயாரிக்க சூரியூர் தண்ணீர் வளம் காணாமல் போய்க் கொண்டு இருக்கிறது. இந்த தொழிற்சாலை எந்த வித அனுமதியும் இன்றி செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதை எதிர்த்து கிராம மக்கள் போராடினால் வழக்கம் போல தவறு செய்த தொழிற்சாலையை காப்பாற்ற பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் அனைவரையும் காவல்துறை கைது செய்துள்ளது. தற்பொழுது மாவட்ட ஆட்சியர் அந்த மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டு இருக்கிறார்.

இவர்கள் அனைவரும் தற்பொழுது திருவெரும்பூர், ஏ.எஸ். மஹாலில் (சாந்தி தியேட்டர் அருகில்) அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த பதிவை அனைவரும் முடிந்த அளவு பகிரும்படிகேட்டுக் கொள்கிறோம். இயக்கத்தில் இருந்து அவர்களிடம் தொடர்பில் உள்ளோம். வேண்டிய உதவிகள் அனைத்தும் செய்ய தயாராக உள்ளோம். மேலும் அவர்களுக்கு உதவ விரும்புவோர் 8190849055, 9629093144, 9791702630, 9976163444, 9715940745, 9500189319 ஆகிய எண்களில் போராட ஒருங்கிப்பாளர்களை தொடர்பு கொள்ளலாம்.

via சட்ட பஞ்சாயத்து இயக்கம்
நன்றி:- Raja Ilaya Marudhu


Posted: 12 Nov 2014 11:47 PM PST


Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


Posted: 13 Nov 2014 02:57 AM PST


One day..... till now... Determination... !!!

Posted: 12 Nov 2014 04:31 PM PST

One day..... till now... Determination... !!!