Relax Please: FB page daily Posts |
- ஒரே ஒரு நிமிடம் யோசியுங்கள் நண்பர்களே !!! “தமிழன் தமிழில் எழுதினாலோ பேசினாலோ பா...
- தோப்புக்கரணம்..... நம் நாட்டில் விநாயகரை வழிபடும் போதும்...., படிக்கும் வயதில்...
- முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள்... உயர்நிலைக் கல்வியை முடித்தப் பின், தி...
- பழி சொல்: குறுஞ்சி என்ற ஊரில் முனுசாமி என்ற ஒருவன் இருந்தான். அவன் ஒரு முறை தேவ...
- ஜென் கதை ------------------- அந்த மடத்தில் இருபது ஆண் துறவிகளோடு இஷுன் என்கிற ப...
- இசையரசி P.சுசீலாம்மாவின் 80ஆவது பிறந்தநாள் இன்று...! :)
- மனிதாபிமானத்திற்கு மதமில்லை : சிறுமியின் கண் சிகிச்சைக்கு நிதி திரட்டிய முஸ்லீம்...
Posted: 13 Nov 2014 08:03 AM PST ஒரே ஒரு நிமிடம் யோசியுங்கள் நண்பர்களே !!! "தமிழன் தமிழில் எழுதினாலோ பேசினாலோ பாராட்டுவது நாமாகத் தான் இருப்போம். நம் மொழி யை நாம் பேசவே பாராட்டுகிறோம். அந்தளவு போய்விட்டது நம் மொழி. ஆனால் தமிழு க்குத் தொடர்பே இல்லாத ரஷிய நாடு தமிழைக் கொண் டாடுகிறது. அங்கிருக்கும் ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகுத் தமிழில் எழுதியுள்ளார்கள் முதலாவதாக அவர்கள் தாய் மொழியான ரஷிய மொழியிலும், இரண்டா வதாக அண்டை நாட்டு மொழியான சீனத்திலும், உலகத் தொடர்பு மொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும், நான்காவதாக தமிழிலும் எழுதி யிருக்கிறார்கள் . தமிழைவிட எத்தனையோ உலக மொழிகள் பெரும்பாலான மக்களால் பேசப்படுகின்றன. ஆனால், அவற்றையெல்லாம் விட்டு விட்டு தமிழ் மொழியில் அதிபர் மாளிகையின் பெயரை எழுதியதற்கு அவர்கள் கூறும் காரணம், தமிழர்களாகிய நம்மைச் சிந்திக்க வைப்பதாக இருக்கி றது. "உலகில் 6 மொழிகள்தான் மிகவும் தொன்மையானவை. அவை கிரேக்க ம், லத்தீன், எபிரேயம், சீனம், தமிழ், சம்ஸ்கிருதம். இந்த 6 மொழிகளில் நான்கு மொழிகள் இன்று வழக்கில் இல்லை. இலக்கிய, வரலாற்று செழுமையான மொழி, எங்களுக்கு உலகில் உள்ள முக்கிய மொழிகளான 642 மொழிகளிலும் சரியான, தகுதியான மொழியாக தமிழ்மொழி தென்பட்டது. அந்த மொழியைச் சிறப்பிக்கவே "கிரெம்ளின் மாளிகை' எனத் தமிழில் எழுதினோம்" என்று கூறுகிறார்கள். மேலும், அங்கே வைக்கப்பட்டுள்ள அரிய நூல்களுள் நமது திருக்குறளும் ஒன்று. வெளிநாட்டில் உள்ளவர்களுக்குக் கூட நம் தமிழின் பெருமை தெரிந்துள்ளது. ஆனால், நாமோ தமிழைக் காப்பாற்ற கருத்தரங்கு நடத்திக் கொண்டிருக்கிறோம்' .தமிழ்நாட்டில் பிறந்து வெறும் 500 வருடங்களுக்கு முன் தோன்றிய ஆங்கிலத்தை பேசுவதில் பெருமையாக நினைப்பதற்கு முன் சற்று ஒரு நிமிடம் யோசியுங்கள்... 10000 வருடங்களுக்கு முன் தோன்றி இன்றும் அழியாமல் கம்பிரமாய் இருக்கும் தமிழ் மொழி நம் தாய் மொழி என்று! இந்த உலகில் எந்த இனத்தவருக்கும் கிடைக்காத இந்த அரும்பெரும் வாய்ப்பு நம் தமிழர்களுக்கு மட்டுமே உண்டு... ஆகவே தமிழை தமிழரோடு பேசுவதில் பெருமைக் கொள்வோம். நம் தமிழ் மொழி நமக்கு அவமானம் அல்ல, நமது 10000 வருட அடையாளம்!!! தொகுப்பு : துரை ரவி Relaxplzz |
Posted: 13 Nov 2014 07:09 AM PST தோப்புக்கரணம்..... நம் நாட்டில் விநாயகரை வழிபடும் போதும்...., படிக்கும் வயதில் ஆசிரியர் தண்டனையாக செய்ய சொல்வதும் "தோப்புக்கரணம்" . தோப்புக்கரணத்தின் பயன்கள்.. மூளைசெல்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன . நாடிகள் சுத்தம் பெறுகின்றன. . நம் உடலிலுள்ள நரம்பு மண்டலங்கள் அனைத்தும் சேருமிடம் காது மடல்கள். . தோப்புக்கரணம் செய்யும் போது காது மடல்களை இழுப்பதால் அனைத்து நரம்புகளும் தூண்டப்படுகின்றன. . செய்முறை: . முதலில் கால்களுக்கு இடையில் ஒரு ஜான் அளவு இடவெளி விட்டு நிற்க வேண்டும். . இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக்கொண்டு.. . மூச்சை இழுத்துக்கொண்டே அமரவும் அமர்ந்த நிலையில் ஒரு மூச்சு விட்டு.. பிறகு எழ வேண்டும் இப்பொழுது நின்ற நிலையில் ஒருமூச்சு விட வேண்டும். இவ்வாறு பத்து முறை தினமும் செய்தால் மாற்றம் உங்களுக்கே தெரியும்.. இதனை நம் முன்னோர்கள் பல வருடங்களுக்கு முன்னமே நமக்கு காட்டியுள்ளார்கள் ஆனால் நாம் அதை அலட்சியப்படுத்திவிட்டோம். இதனை வெள்ளைக்காரன் ஆராய்ச்சி செய்து அவன் பணம் சம்பாரிக்கிறான்....... சந்தேகமெனில் Youtube- ல் super brain yoga - https://www.youtube.com/watch?v=l6YxNZIZLLw Relaxplzz ![]() "தெரிந்து கொள்வோம்" - 2 |
Posted: 13 Nov 2014 06:15 AM PST முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள்... உயர்நிலைக் கல்வியை முடித்தப் பின், திருச்சியில் ஒரு கல்லூரியில் இயற்பியல் துறையில் பயின்றார். எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியில் ஏரோனாடிக்கல் பொறியியல் துறையில் இடம் கிடைத்து, பணம் கட்ட முடியாமல் இருந்தபொழுது இவரின் சகோதரிதான் நகைகளைக் கொடுத்து படிக்க அனுப்பினார். கல்லூரி வந்த சில நாட்களிலேயே, தொழிலில் ஏற்பட்ட பாதிப்பில் அப்பா, திரும்ப ஊருக்கு வரச்சொல்லியதால் தன் புத்தகங்களை எடைக்கு போட்டு பணம் திரட்டப்போன இடத்தில் புத்தகங்களை வாங்காமல் பணத்தை மட்டும் கொடுத்து மேலே படிக்கச் சொன்ன பேப்பர்காரரை இன்னமும் நன்றியோடு குறிப்பிடுவார் கலாம். கல்லூரியில் உணவுச் செலவை குறைக்க சைவத்துக்கு மாறினார். அதுவே இப்போதும் தொடர்கிறது. பொறியியல் கல்வியை முடித்ததும் விமானி ஆகவே ஆசைப்பட்டார். ஆனால், ஓர் இடம் பின்தங்கி வாய்ப்பை இழந்தார். கண்ணீரோடு நின்றவரை சுவாமி சிவானந்தரின் ''இதைவிட பெரிதான ஒன்றுக்காக நீ அனுப்பப்பட்டு இருக்கிறாய்'' என்ற வரிகள் உத்வேகப்படுத்தின. விக்ரம் சாராபாயின் ஊக்கத்தில் இந்திய விண்வெளிக் கழகத்தில் இணைந்தார். அங்கேதான் முதல் சுதேசி விண்கலமான எஸ்.எல்.வியை உருவாக்கினார். அதைத் தொடர்ந்து ரோகினி, திரிசூல், ப்ரித்வி, ஆகாஷ் என இந்தியாவின் விஞ்ஞான வலிமையை உலகுக்கு உரக்கச் சொல்லும் ஏவுகணைகளை உருவாக்கி 'இந்தியாவின் ஏவுகணைத் தொழில்நுட்பத் தந்தை' என அழைக்கப்பட்டார். (y) (y) Relaxplzz |
Posted: 13 Nov 2014 05:38 AM PST பழி சொல்: குறுஞ்சி என்ற ஊரில் முனுசாமி என்ற ஒருவன் இருந்தான். அவன் ஒரு முறை தேவையில்லாமல் ஒரு கிராமவாசி மீது பழி சொல்லி பஞ்சாயத்தைக் கூட்டினான். பஞ்சாயத்திலும் கிராமவாசிக்குத் தண்டனை கிடைத்தது. பின், வீட்டிற்கு வந்த முனுசாமியின் மனசாட்சி அவனை உறுத்தியது. கிராமவாசி மீது தான் பழி சொன்னதை எண்ணி வருந்தினான். எனவே, தன் பாவத்திற்கு ஏதாவது பிராயச்சித்தம் உண்டா என்று தேடினான். என்ன பிராயச்சித்தம் செய்வதென்று அவனுக்குப் புரியவில்லை. எனவே, அந்த ஊரிலிருந்த ஒரு துறவியிடம் சென்றான். "துறவியாரே! நான் இந்தக் கிராமத்தில் வசிக்கும் ஒருவர் மீது வீண் பழி சொல்லிவிட்டேன். அது என் மனத்தை உறுத்துகிறது. அந்தப் பழி சொன்ன பாவத்தில் இருந்து தப்பிக்க எனக்கு வழி கூறுங்கள்!" என்று கேட்டான். துறவி சிறிது யோசித்துவிட்டு, "இன்று இரவு ஐந்து கிலோ இலவம்பஞ்சை எடுத்துப் போய் அந்த கிராமவாசியின் வீட்டுக்கு முன்பு பரப்பிப் போட்டுவிட்டு வந்து விடு. நாளை வந்து என்னைப் பார்," என்று கூறினார். முனுசாமியிடம் பஞ்சைக் கொண்டு சென்று கிராமவாசியின் வீட்டின் முன் பரப்பி விட்டான். பின் மறுநாள் சென்று துறவியைப் பார்த்தான். "துறவியாரே! என் பாவம் போய் இருக்குமா இந்நேரம்?" என்று கேட்டான். உடனே துறவி, "முனுசாமி! நீ இப்போது அந்த கிராமவாசியின் வீட்டிற்குச் செல். அவன் வீட்டு முன் நீ நேற்றிரவு பரப்பி வைத்த பஞ்சை மீண்டும் பொறுக்கிக்கொண்டு வா," என்று கூறினார். முனுசாமி மிகுந்த ஆவலுடன் ஓடினான். ஆனால், ஒரு விரல் அளவு பஞ்சு கூட அங்கு இல்லை. எல்லாம் காற்றில் பறந்துபோய் விட்டிருந்தது. அதனைக் கண்ட முனுசாமி திடுக்கிட்டான். மீண்டும் துறயிடம் ஓடி வந்தான். "துறவியாரே! நேற்றிரவு நான் கிராமவாசி வீட்டின் முன்னால் போட்டுவிட்டு வந்த பஞ்சில் ஒரு துளிப் பஞ்சாவது இப்போது அங்கு இல்லை. என்ன செய்வது?" என்று கேட்டான். துறவி சிரித்துவிட்டு, "முனுசாமி! நீ விரித்துப் போட்டுவிட்டு வந்த பஞ்சை இப்போது மீண்டும் எப்படி அள்ள முடியாதோ, அதே போல, நீ ஒருவர் மீது கூறிய பழியையும் அதனால் உனக்கு ஏற்பட்ட பாவத்தையும் மாற்ற முடியாது. திருப்பி வார முடியாத பஞ்சைப் போன்றது தான் உன் பழிச் சொற்களும். அவற்றையும் இனித் திருப்பி வார முடியாது. இறைவனிடும் உன் தவறுக்காக மன்னிப்பு கேள்," என்று கூறினார். முனுசாமிக்கு உண்மை புரிந்தது. அன்று முதல் மற்றவர்கள் மீது பழி சொல்லும் குணத்தையே விட்டுவிட்டான். பிறர் மீது வீண் பழி சுமத்துவதால் பலன் ஏதும் கிடைக்கப்போவதில்லை என்பதை உணர்ந்தான் முனுசாமி. Relaxplzz |
Posted: 12 Nov 2014 11:13 PM PST ஜென் கதை ------------------- அந்த மடத்தில் இருபது ஆண் துறவிகளோடு இஷுன் என்கிற பெண் துறவியும் ஜென் மாஸ்டரிடம் தியானம் பயின்றாள். அவள் மிகவும் அழகாக இருந்ததால் பெரும்பாலான ஆண் துறவிகள் அவள் மீது காதல் கொண்டனர். மறைமுகமாக அவளுக்கு சைகை மூலம் வெளிப்படுத்தினர். ஒரு துறவி அவளுக்கு பெயரைத் தெரிவிக்காமலே காதல் கடிதம் எழுதி அவள் இடத்தில் வைத்து விட்டு வந்தார். மறு நாள் தியான வகுப்பு நடந்தது. காதலை மறைமுகமாக சொல்லியவர்கள் அவள் என்ன பதில் சொல்வாளோ என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். அவள் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. வகுப்பு முடிந்ததும் இஷுன் சடாலென எழுந்து " என்னை உண்மையிலே காதலிப்பவர் இப்போது அனைவர் முன் தயக்கமின்றி வெளிப்படையாக என்னைக் கட்டிப் பிடியுங்கள். நான் இப்போதே உன்னுடன் வந்து விடுகிறேன் " என்று உரக்க கூறினாள். அப்புறம் என்னாச்சு? ;-) ஆண்கள் மிரண்டு பதுங்கிட்டாங்க.. Relaxplzz |
Posted: 12 Nov 2014 10:42 PM PST |
Posted: 12 Nov 2014 07:00 PM PST மனிதாபிமானத்திற்கு மதமில்லை : சிறுமியின் கண் சிகிச்சைக்கு நிதி திரட்டிய முஸ்லீம் இளைஞர்கள்...! மதங்களை கடந்த மனிதாபிமான நிகழ்வுகள் மனிதர்கள் தங்களின் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக செயல்பட உதவுகிறது . ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த முருகன் என்பவருடைய மகளான சிறுமிக்கு கண் குறைபாடு ஏற்பட்டு உள்ளது இது பற்றி அங்குள்ள கீழப்பள்ளிவாசல் இளைஞர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் சிறுமியின் கண் சிகிச்சைக்கு நிதி திரட்டினர். திரட்டப்பட்ட நிதியை சிறுமியிடம் அளிக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. காவல்துறை துணை ஆய்வாளர் நிதியுதவியை வழங்கினார். Relaxplzz ![]() |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment