Friday, 7 November 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


Ancient and rare rock murals reflecting the pre-historic character of the distri...

Posted: 07 Nov 2014 09:31 PM PST

Ancient and rare rock murals reflecting the pre-historic character of the district have been discovered in the Tirumayyam Fort premises, an official said today.

The existence of rock paintings which depict dances that existed in 5000 BC was known earlier, historian and District Chief Educational Officer N Arulmurugan said.

The paintings, made with red colour painting material, were found during a study of the Fort by a team of historians, including himsef, he told reporters.

"The rock paintings at the Fort reflect the pre-historic character of the district... They are older than the murals of Sithannavasal, painted between 7th and 9th AD," he said.

The painting on one side of the cap shaped rock near the entrance of the fort had faded. But on the other side one can see row of paintings including one depicting man and a woman lying down in reclining posture.

Another painting is a dance programme wherein a couple are playing some musical instruments and another couple dancing holding their hands. This type of dance was mentioned in ancient Tamil literature 'Tolkapiam' as "Undattu" (a dance), he said adding a spectator, probably the queen or the chief of the area, had been separately drawn in a big size.

On the northern side of rock also many images had been painted. One of them showed several men following a woman in a queue.

Paintings had also been found on the roof of the cave between the Shiva and Vishnu temples in the fort. Some paintings show about the use of animals as a mode of transport and use of weapons made from rock for hunting animals.

Arulmurugan urged the archaeological department to protect the paintings.

The district was one of home of pre-historic man. A very large number of burial sites have been found.

In and around Pudukkottai, there are many vestiges of the oldest habitations of man and some of the lithic records known in the south.

http://www.ndtv.com/article/south/ancient-rock-murals-found-in-tamil-nadu-s-pudukottai-district-449669

http://www.thehindu.com/news/national/tamil-nadu/ancient-rock-paintings-discovered-at-tirumayam-fort/article5380407.ece

In Tamil:

http://nadainamathu.blogspot.com/2013/11/blog-post_24.html

http://anikartick.blogspot.in/2014/01/thirumayam-rock-arts-and-rock-paintings.html


அழகு தமிழ்நாடு! சுந்தரபாண்டியபுரம்!

Posted: 07 Nov 2014 08:24 PM PST

அழகு தமிழ்நாடு!
சுந்தரபாண்டியபுரம்!


சிங்கப்பூரில் தமிழ் எழுத்துக்களால் உருவான நவீனத்துவ கலைச் சிற்பம்!

Posted: 07 Nov 2014 08:05 PM PST

சிங்கப்பூரில் தமிழ்
எழுத்துக்களால் உருவான
நவீனத்துவ
கலைச் சிற்பம்!


மு.வ உரை: பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், கால...

Posted: 07 Nov 2014 05:54 PM PST

மு.வ உரை:
பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது அதன் குத்து போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.

#Translation:
As heron stands with folded wing, so wait in waiting hour;
As heron snaps its prey, when fortune smiles, put forth your power.

#Explanation:
At the time when one should use self-control, let him restrain himself like a heron; and, let him like it, strike, when there is a favourable opportunity.


அழகு தமிழ்நாடு! கன்னியாகுமரி!

Posted: 07 Nov 2014 08:38 AM PST

அழகு தமிழ்நாடு! கன்னியாகுமரி!


இந்தி மொழியை பரப்ப நாடு முழுவதும் ஆராய்ச்சி மையங்கள்-மத்திய அமைச்சர்! @ஹிந்தி ப...

Posted: 07 Nov 2014 08:24 AM PST

இந்தி மொழியை
பரப்ப
நாடு முழுவதும்
ஆராய்ச்சி மையங்கள்-மத்திய அமைச்சர்!

@ஹிந்தி படிச்சா பானிபுரி தான்
விக்கமுடியும்.

# படித்ததில் பிடித்தது # எங்க அப்பாவின் ப்ரெண்ட் ஒருத்தர் சொல்வர், நாம் குழந்தை...

Posted: 07 Nov 2014 07:38 AM PST

# படித்ததில் பிடித்தது #

எங்க அப்பாவின் ப்ரெண்ட் ஒருத்தர் சொல்வர், நாம் குழந்தைகளை எப்படி வளர்க்கணும் என்று :

1 லிருந்து 3 வயது வரை சுவாமி போல கொண்டாடனும்
4 லிருந்து 7 வயது வரை ராஜா போல நடத்தனும்
8 லிருந்து 12 வயது வரை குழந்தையாக பாவிக்கணும்
13 லிருந்து 19 வயது வரை ஒற்றன் போல கண்காணிக்கணும்
20 வயது வந்து தோளுக்கு உசந்துட்டா தோழன் போல வெச்சுக்கணும் என்பர்.

ரொம்ப சத்தியமான நான் உடன்படும் வார்த்தைகள் இவை...


#என்னுடைய முதல் பிரசவத்தின் பொழுது அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுக்க என்னை...

Posted: 07 Nov 2014 07:04 AM PST

#என்னுடைய முதல் பிரசவத்தின் பொழுது அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுக்க என்னை ஆபரேஷன் தியேட்டரில் படுக்க வைத்திருந்தார்கள் . மயக்க மருந்து கொடுக்க ஒரு அனஸ்திஷ்யன் வரவழைக்கப்பட்டார் . அவர் கூடவே குட்டி டாக்டர் அதாவது பயிற்சி டாக்டர் வந்தார் . எல்லோருக்கும் இருக்கும் அதே இனம் புரியாத ஒரு உணர்ச்சிதான் எனக்கும் .

#அந்த பெரிய டாகடர் என் கையை பற்றி ஐ வியில் மருந்து செலுத்த ஆயுத்தமானார். அப்பொழுது அந்த பயிற்சி டாக்டர் , " டாக்டர் நான் போடவா" என்று கேட்க இவரும் ஊசியை அவரிடம் கொடுத்தார். மயக்க மருந்து செலுத்துவது என்பது கொஞ்சம் ரிஸ்கானது, தவறாக செலுத்தினால் மயக்கத்தில் இருந்து மீள முடியாது. சங்கு தான்... .. . அந்த குட்டி டாக்டர் மருந்து செலுத்தும் பொழுது எனது கை வீங்க ஆரம்பித்தது . பெரிய பல்ஜ் ..." சாரி டாக்டர் "என்று கூறிவிட்டு செலுத்திய மருந்தை ஊசியின் மூலம் சிரிஞ்சுக்கு இழுத்துக்கொண்டு மறுபடியும் செலுத்த எனது கை மறுபடியும் பல்ஜ் ...மூன்றாவது முறை அவர் என் கையை பற்றும் பொழுது ...நான் பெரிய டாக்டரை பார்த்து," டாக்டர் தவறாக நினைக்க வேண்டாம் உங்கள் பயிற்சி வகுப்பை பிரசவத்திற்கு வந்திருக்கும் என்னிடம் தான் காட்ட வேண்டுமா ?. நான் நல்லபடியாக குழந்தையொடு வருவேன் என்றும் நீங்கள் நல்ல படியாக பிரசவம் பார்ப்பீர்கள் என்று வெளியே என் உறவினர்கள் பெரும் நம்பிக்கையோடு காத்து இருக்கிறார்கள் என்றேன் .உடனே பெரிய டாக்டர் குட்டி டாக்டரின் கையில் இருந்த ஊசியை வாங்கி கொண்டு மருந்தை செலுத்த ஆரம்பித்தார் .

#இந்த அனுபவத்தை நான் ஏன் பகிர்கிறேன் என்றால் எந்த நிலையிலும் உங்களது உடல் உங்களின் சொத்து...சில நேரங்களில் நீங்கள் தனித்து விடப்படலாம் அப்பொழுது உங்களை சுற்றி இருப்பவர்களால் உங்களை பாதுகாக்க முடியாது . நீங்கள் தான் சூதனமாக இருந்துக்கொள்ளவேண்டும் .

#சொல்ல_வேண்டியதை_சொல்ல_வேண்டியவர்களிடம்_சொல்ல_தயங்காதீர்கள் .
#சொல்ல_கூடாததை_சொல்லக்கூடாதவர்களிடம்_செத்தாலும்_சொல்லாதீர்கள்.

@D Latha Prabhu


'ப்ளீஸ் க்ளோஸ் த டோர்', 'செகன்ட் ப்ளோர்' என elevator(Lift) நம்முடன் பேசும் அளவு...

Posted: 07 Nov 2014 05:25 AM PST

'ப்ளீஸ் க்ளோஸ் த டோர்',
'செகன்ட் ப்ளோர்' என
elevator(Lift) நம்முடன்
பேசும் அளவு கூட பல
அபார்ட்மெண்ட்களில்
மனிதர்கள்
பேசுவதில்லை.!

#நகரங்களில்

@காளிமுத்து

Posted: 07 Nov 2014 04:34 AM PST


எங்கள நம்பி விவசாயக்கடன் கொடுக்க ஒரு அரசாங்க வங்கியில் எத்தனை கேள்வி கேக்குறிங்க...

Posted: 07 Nov 2014 02:52 AM PST

எங்கள
நம்பி விவசாயக்கடன்
கொடுக்க ஒரு அரசாங்க
வங்கியில்
எத்தனை கேள்வி கேக்குறிங்க,
நாங்க
பொறுமையா பதில்
சொல்றோம்...

உங்கள
நம்பி நாட்டையே கொடுத்துட்டு,
"யாரு அக்கௌன்ட்ல
எவ்வளவு கருப்பு பணம்
இருக்கு?"ன்னு ஒரே ஒரு கேள்வி தான்
கேட்டோம்...

இப்படி சுத்தி வளைக்கிறிங்க...

@பூபதி

தமிழில் உலகத்தைப் பார்க்கலாம்! 'ஆஸம் ஆஸம்’, 'ஃபென் டாஸ்ட்டிக் பெர்ஃபார்மென்ஸ்’...

Posted: 07 Nov 2014 02:14 AM PST

தமிழில் உலகத்தைப் பார்க்கலாம்!

'ஆஸம் ஆஸம்', 'ஃபென் டாஸ்ட்டிக் பெர்ஃபார்மென்ஸ்' 'யூ கய்ஸ் ராக்' என்றெல்லாம் தமிழ் சேனல்கள் ஆங்கிலத்தில் வெளுத்துக் கட்டும்போது, ''இப்போ இந்தக் கூம்பு வடிவத் தக்கையை மிதக்கவிட்டுதான் நான் அமேஸான் காட்டிலிருந்து தப்பிப் பிழைக்கப்போகிறேன்'' என்று தமிழில் பேசுகிறார் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியின் நாயகன் பியர் க்ரில்ஸ். இது எப்படி சாத்தியமானது என டிஸ்கவரி சேனலின் தெற்கு ஆசியாபசிபிக் பிராந்தியத்தின் துணைத் தலைவர் ராகுல் ஜோரியிடம் கேட்டதில்...

''டிஸ்கவரி சேனல் உலகின் நம்பர் ஒன் கட்டண சேனலாக இருக்கிறது. உலகின் 220 நாடுகளில் 2.5 பில்லியன் மக்களால் பார்க்கப்படும் இந்த சேனலை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் முனைப்போடுதான் தெற்கு ஆசியாவில் காலடித்தடம் பதித்தது. பார்வையாளர்களின் வசதிக்கேற்ப டி.எல்.சி, அனிமல் பிளானெட், இன்வெஸ்டிகேஷன் டிஸ்கவரி அண்ட் சயின்ஸ், டிஸ்கவரி டர்போ மற்றும் டிஸ்கவரி கிட்ஸ் என சேனல்களைப் பிரித்து அளித்து வந்தோம். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் முழு முயற்சியாக ஒளிபரப்பலாம் என 2011ல் தொடங்க உத்தேசித்து குறிப்பிட்ட பிராந்தியங்களில் ப்ரைம் டைம் நேரத்தில் மட்டும் ஆங்கிலத்துக்குப் பதில் அந்தந்த மொழிகளில் அளித்து வந்தோம்.

அதற்குக் கிடைத்த வரவேற்பை வைத்து டிஸ்கவரி சேனலை பிராந்திய மொழிகளில் அளிக்க மும்பையிலும் குர்கவானிலும் விசேஷமாக ஸ்டுடியோவை உருவாக்கி ஒளிபரப்பைத் தொடங்கினோம். தமிழில் நாங்கள் எதிர்பார்த்ததைவிட நல்ல வரவேற்பு கிடைத்தது. காரணம் நாங்கள் ஆரம்பத்தில் தீர்மானித்த விஷயம், உலகை அவர்கள் மொழியில் காட்ட வேண்டும் என்பதுதான். உலகின் நம்பர் ஒன் ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் ஹாக்கிங் பேசும் பிரபஞ்சம் குறித்த பார்வை தமிழில் வந்ததையும் பியர்ல் க்ரில்ஸ் காடு, பாலைவனம், கடல் பிராந்தியத்தில் தமிழ் மொழி பேசித் திரிவதையும் வெகுவாக ரசித்தார்கள். இப்போது, 'ஹவ் டூ தே டூ இட்?' எனப்படும் அன்றாடம் நாம் பயன்படுத்தப்படும் பொருட்கள் எப்படித் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகிறது என்ற நிகழ்ச்சிக்கும் ஏக வரவேற்பு. டிஸ்கவரி தமிழ் எங்களுக்கே ஆச்சர்யம் கலந்த சந்தோஷம். அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்லும் விதமாக இன்னும் கூடுதலான புதுப்புது வீடியோக்களை எங்களது பிரத்யேக லைப்ரரிக்கு உலகின் பல பாகங்களில் இருந்தும் தருவிக்கிறோம். அதை மும்பையில் இருக்கும் எங்கள் ஸ்டுடியோவில் அழகான தமிழில் தர மெனக்கெடுகிறோம். டப்பிங் ஆர்ட்டிஸ்ட்கள், ஸ்க்ரிப்ட் ரைட்டர்கள் எல்லோரும் பல கட்டத் தேர்வுக்கு உட்படுத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். சில நேரங்களில் அவுட் சோர்ஸிங் முறையில் ஆட்களை வைத்து மொழியாக்கம் செய்கிறோம். சென்னைக்கு வராமலே சென்னையைத் தொடாமலே மொழி மாற்றம் இப்படித்தான் சாத்தியமாகிறது. சென்னையில் இருந்தும்கூட ஸ்கைப் வழியாக சமயங்களில் டப்பிங் செய்து வாங்கிய சம்பவங்கள் முன்பு நடந்தன.

எங்கள் நிகழ்ச்சிகள் ரிப்பீட் ஆனால், தமிழ் ரசிகர்கள் சேனல் மாற்றி விடுவார்கள் என்பது நன்கு தெரியும். அதேபோல பிடித்துப்போனால் அவர்களை எந்த சக்தியாலும் ரிமோட்டிலிருந்து மாற்ற முடியாது என்றும் நம்புகிறோம். அண்மையில் இந்திய அம்சங்களோடு பல நிகழ்ச்சிகளைத் தமிழில் வழங்கியதற்கு நல்ல ஆதரவு. 'காஷ்மீர்: லைன் ஆஃப் கன்ட்ரோல்' மற்றும் 'எப்படி இந்தியாவில் தேர்தல் நடத்தப்பட்டது?' என்ற இரண்டு நிகழ்ச்சிகளும் வரவேற்பைப் பெற்றதால் அடுத்து என்ன மாதிரியான நிகழ்ச்சிகளை இந்திய ரசிகர்களுக்காகத் தரலாம் என யோசித்து வருகிறோம்'' என்கிறார் உற்சாகமாக!

- ஆர்.சரண்
விகடன்


அழகு தமிழ்நாடு! இடம்: மேகமலை,தேனி மாவட்டம்.

Posted: 07 Nov 2014 01:17 AM PST

அழகு தமிழ்நாடு!

இடம்: மேகமலை,தேனி மாவட்டம்.


Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


தேசத்தை நாசமாக்கும் ஒரே சொல் இலவசம்..... பிறந்தபோது அரசு மருத்துவமனை இலவசம் ......

Posted: 07 Nov 2014 04:31 AM PST

தேசத்தை நாசமாக்கும் ஒரே சொல் இலவசம்.....

பிறந்தபோது அரசு மருத்துவமனை இலவசம் ...

குழந்தையா இருக்கும்போது போலியோ சொட்டு மருந்து இலவசம் ....

பள்ளி பருவத்தில் சாதி சலுகையின் அடிப்படையில் படிப்பு இலவசம் ...

பள்ளில் சீருடை இலவசம் , பல்பொடி இலவசம் , சத்துணவு இலவசம்...

பள்ளி படிப்பிற்கு பிறகு இடஒதிக்கீடு அடிப்படையில் கல்லூரி படிப்பு இலவசம் ...

கல்லூரி படிப்பு செலவுக்கு ,ஊக்கத்தொகை இலவசம்...

படிப்பு முடிந்து வேலை கிடைக்கலைனா நிவாரண பணம் இலவசம்...

யாரும் நம்மை தண்ட சோறுன்னு சொல்லுறதுக்கு முன்னாடி ஒரு ரூபாய் அரிசியோட காஸ் அடுப்பு இலவசம் ...

வயுறு முட்ட சாப்பிட்டபின் பொழுது போகலைனா பொழுது போக தொலைக்காட்சி இலவசம் ...

பண்டிகை காலங்களில் உடுத்த வேட்டி சேலை இலவசம்...

நாதியற்று இருந்தாலும் நாலு சுவற்று அறையில் தங்க சமத்துவ புர வீடு இலவசம் ...

அதோட இரண்டு ஏக்கர் நிலமும்
இலவசம் ...

தேர்தலின்போது மது இலவசம் ...

அப்படியே மது அருந்தி நோய் வந்தா
மருத்துவ காப்பீடு திட்டத்துல சிகிச்சை இலவசம் ...

கல்யாணம்னா திருமண உதவிதிட்டதுல சலுகையும் அதோட பணமும் இலவசம் ...

பெண்குழந்தை பிறந்தா
தங்க சங்கிலியோட ஊக்கத்தொகை இலவசம் ...

அவ திருமணத்துக்கு, உதவிதிட்டதுல பணம் இலவசம் ..

கால காலத்துல கண் மூடும்போது ,
பிணத்தை எடுத்துட்டு போக அமரர் ஊர்தி இலவசம் ...

நகராட்சி சுடுகாடும் இலவசம்...

நம் அறிவினை முடக்க இப்படி செய்தால் நம்மால் என்ன செய்ய முடியும்?

நீங்கள் தான் சொல்ல வேண்டும்........

Posted: 07 Nov 2014 01:30 AM PST


துப்பாக்கி வைத்திருப்பவர்கள் எல்லாம் தீவிரவாதிகளும் அல்ல... கதர் சட்டை அணிந்து அ...

Posted: 06 Nov 2014 05:54 PM PST

துப்பாக்கி வைத்திருப்பவர்கள் எல்லாம் தீவிரவாதிகளும் அல்ல...
கதர் சட்டை அணிந்து அரசியல் செய்பவர்கள் எல்லாம் நல்லவர்களும் அல்ல....

அனைத்திலும் நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். மற்றவர்கள் செய்யும் குற்றத்திற்காக அனைவரையும் சாடுவது தவறு........

படம்: முஸ்லீம் இனத்தவர்கள் மிதவாதத்தினை ஆதரித்து வெளியிட்டிருக்கும் சுவரொட்டி

இடம்: திருநெல்வேலி

பா விவேக்


Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


குடித்துவிட்டு உளறுபவர்கள் திருமணமாகாதவர்கள் உளறிக்கொண்டே குடிப்பவர்கள் திருமணமா...

Posted: 07 Nov 2014 09:33 AM PST

குடித்துவிட்டு உளறுபவர்கள் திருமணமாகாதவர்கள் உளறிக்கொண்டே குடிப்பவர்கள் திருமணமான்வர்கள்..

Be yourself :)

Posted: 07 Nov 2014 09:10 AM PST

Be yourself :)


A legend who has acted with three generations. .. salute to him..

Posted: 07 Nov 2014 08:32 AM PST

A legend who has acted with three generations. .. salute to him..


Posted: 07 Nov 2014 08:22 AM PST


True

Posted: 07 Nov 2014 03:36 AM PST

True


தன்னம்பிக்கை இல்லாமல் தன்(கடவுள்) நம்பிக்கை கொள்பவனுக்கு கடவுள் தரும் பரிசு ஏமாற...

Posted: 06 Nov 2014 06:18 PM PST

தன்னம்பிக்கை இல்லாமல்
தன்(கடவுள்)
நம்பிக்கை கொள்பவனுக்கு
கடவுள் தரும் பரிசு ஏமாற்றம்
மட்டுமே!!

வணக்கம் மக்களே!

Good night have a peaceful dreams

Posted: 06 Nov 2014 10:33 AM PST

Good night have a peaceful dreams


பூக்கள் மேல் நாம் உறங்கினால் நமக்கு #முதலிரவாம், நம்மேல் பூக்கள் உறங்கினால் அத...

Posted: 06 Nov 2014 09:09 AM PST

பூக்கள் மேல் நாம் உறங்கினால் நமக்கு
#முதலிரவாம்,

நம்மேல் பூக்கள் உறங்கினால் அது தான் நமக்குக்
#கடைசிஇரவாம்.

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


Posted: 07 Nov 2014 09:06 AM PST


இந்த மலையின் பெயர் எத்தனை பேருக்குத் தெரியும்? (y)

Posted: 07 Nov 2014 09:05 AM PST

இந்த மலையின் பெயர் எத்தனை பேருக்குத் தெரியும்? (y)


யார் மிகச்சிறந்த(?!) சோம்பேறி என்று போட்டி. கடைசில 2 பேருக்கு இடையில் டை ஆகிப்போ...

Posted: 07 Nov 2014 05:30 AM PST

யார் மிகச்சிறந்த(?!) சோம்பேறி என்று போட்டி. கடைசில 2 பேருக்கு இடையில் டை ஆகிப்போச்சு. பரிசளிப்பு விழாவில் ஜட்ஜ் முதல் நபரை அழைத்தார்.
அவன் சென்று பரிசு வாங்கினான். அடுத்து 2வது நபரின் பெயரை சொல்லி அழைத்தார்கள்.

2வது நபர் சொன்னான்: "அட யாருங்க அங்க வரைக்கும் பரிசு வாங்கரதுக்காக வர்றது. அதான் என் ஃப்ரண்ட் அங்க இருக்கானே, அவன்கிட்ட‌யே கொடுத்திருங்க. நான் அப்புறமா எப்பவாவது அவனிடமிருந்து வாங்கிக்கிறேன்."
குஷியில் துள்ளி குதித்த ஜட்ஜ் சொன்னார்: "ஆஹா, நீ தான்யா மிகச்சிறந்த(?!) சோம்பேறி நம்பர் 1. இந்தா உனக்குத்தான் முதல் பரிசு."
(நன்றி: கருப்பையா மணிவண்ணன்)

அட அட என்னமா பீல் பண்றாங்கப்பா...!! காலையில் அவளை முத்தமிட்டு எழுப்பி ஒரு காஃபி...

Posted: 07 Nov 2014 12:30 AM PST

அட அட என்னமா பீல் பண்றாங்கப்பா...!!

காலையில் அவளை முத்தமிட்டு எழுப்பி ஒரு காஃபி கொடுத்தால் போதும்,
இரவு நான் உறங்கும் வரை எனக்குத் தேவையானதைச் செய்ய பம்பரமாய் சுழல்வாள்..!!!
பின்னிருந்து அணைத்தபடியே அவளுக்கு சமையல் கற்றுக் கொடுக்கிறேன்,
என் ஆசையெல்லாம் அவள் கற்றுக்கொள்ளக் கூடாது என்பதுதான்.!!
பசிக்கிறது என்று நான் சொன்னதும் என்னை அவள் முத்தமிடுகிறாள் என்றால் ,இன்னும் சமையல் தயாராகவில்லை என்று அர்த்தம்..!!
சமைத்ததை கையில் கொடுத்து ருசி பார்க்கச் சொல்லியிருந்தால் உப்பில்லை என்று சொல்லியிருப்பேன்,
ஊட்டிவிட்டுக் கேட்கும் அவளிடம் எப்படிச் சொல்வது ..?
தோட்டத்தில் நீ நின்றிருந்த போது
உன்னை உரசிச் சென்ற வண்டு , மற்றொரு வண்டிடம் கேட்டது.... வாசனை புதிதாய் இருக்கிறதே இது என்ன பூ என்று !!!
மழைக்காக அவளும் இடிக்காக நானும் காத்திருக்கிறோம்,
இதோ மின்னல் தென்படுகிறது,..
அவள் என்னைத் தழுவிக்கொள்ள இன்னும் சில விநாடிகளே உள்ளது.!!
என் போர்வையைத் துவைக்கும்போது மட்டும் ஏன் இவ்வளவு அக்கரை என்றேன் ,
என் இடத்தை நிரப்பும் அனைத்தின் மீதும் அப்படித்தான் என்கிறாள் !!!.
உன் குரல் கேட்காத நாட்களில்,
நான் கேட்ட எதுவும் என் நினைவில் இருப்பதில்லை ..!!
என்னை வீழ்த்த அம்பு செலுத்த தேவையில்லை
அன்பு செலுத்தினால் போதும் அன்பே..

பக்கத்து கிராமத்தில் நடந்த தீமிதி திருவிழாவிற்கு நானும் என் அக்காவும் போகலாமென ந...

Posted: 06 Nov 2014 09:30 PM PST

பக்கத்து கிராமத்தில் நடந்த தீமிதி திருவிழாவிற்கு நானும் என் அக்காவும் போகலாமென நினைத்து வீட்டிலிருந்து கிளம்பினோம்.
கிட்டதட்ட இரண்டுகிலோமீட்டர்களுக்கு தார்சாலையில் நடக்கவேண்டும்.
என்னிடம் செருப்பில்லை.
அக்கா, தன்னுடைய செருப்பைக்கொடுத்து போட்டுக்கொள்ளசொல்ல
நானும் போட்டுக்கொண்டேன்.
அந்தவூரிலிருந்த என் பள்ளிநண்பர்கள் என்னடா பொம்பள செருப்பு போட்டிருக்கே என்று கிண்டலடிக்க,
நான் வெட்கப்பட்டுக்கொண்டு அக்காவை தேடிப்பிடித்து செருப்பை மீண்டும் தந்துவிட்டேன்.
வீட்டிற்கு திரும்பவரும்போது மீண்டும் போட்டுக்கொண்டேன்.
வீட்டிற்கு வந்துபார்த்தால் அக்காவின் கால்கள் கொப்புளித்துவிட்டன.
அம்மா கேட்டபோது தீக்குழிக்கருகிலிருந்த கரியில் கால்வைத்துவிட்டேனென அக்கா சொன்னார்கள்.
அப்போது நான் சிறுவனென்பதால் அக்காவின் பாசம் விளங்கவில்லை.
ஆனால் பின்னர்தான் தெரிந்தது.
கால் கொப்புளித்ததன் காரணம்,
அக்கா வெறுங்கால்களுடன் தார் சாலையில் நடந்ததுதானென்று.
அக்காவோ அண்ணனோ..!
உறவுகளின் பாசம் உன்னதமானது.

- ஃபீனிக்ஸ் பாலா.

தானாகீனா ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார் ­. ஹோட்டலை காலி செய்து விட்டு, கொஞ்சதூரம்...

Posted: 06 Nov 2014 07:30 PM PST

தானாகீனா ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார் ­.
ஹோட்டலை காலி செய்து விட்டு, கொஞ்சதூரம் சென்றதும் தான் நினைவு வந்தது, அவர் தன் குடையை ஹோட்டல் அறையிலேயே ­ மறந்து விட்டு வந்து விட்டார் என்பது....

திரும்பிவந்து பார்க்கும் போது அந்த அறை ஒரு புது மணத் தம்பதிகளால் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தது.
கதவும் சாத்தியிருந்தது ­....

சாவித் துவாரம் வழியாக உள்ளே என்ன பேசுகிறார்கள் என்று கேட்டார் தானாகீனா
கணவன்: அன்பே, இந்த கண்கள் யாருடையவை?
மனைவி: உன்னுடையது தான் அன்பே
கணவன் : இந்த உதடுகள் யாருடையவை?
மனைவி : உன்னுடையது தான் அன்பே
கணவன் : இந்த கன்னம் யாருடையது?
மனைவி : உன்னுடையது தான் அன்பே
தானாகீனா பொறுக்க முடியாமல் வெளியிலிருந்து கத்தினார்.... "அந்த மஞ்சள் கலர் கைப்பிடிபோட்டகுடை மட்டும் என்னுடையது..... ­"

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


ATM ல 5 தடவைக்கு மேல பணம் எடுத்தால் (அட நம்ம அக்கௌண்டேருந்துதாங்க ) 20 ருபாய் கூ...

Posted: 07 Nov 2014 09:10 AM PST

ATM ல 5 தடவைக்கு மேல பணம் எடுத்தால் (அட நம்ம அக்கௌண்டேருந்துதாங்க ) 20 ருபாய் கூடுதலாக சார்ஜ் பண்ணுவாங்களாம்.. !!!!

அதனால நாம என்ன பண்ணனும்.. எல்லாருமே சிரமம் பார்க்காம
ஒரு 5-6 தடவை.. ஒவ்வொருத்தரும்..
பேங்குக்கு போய் வெறும் 100- 100 ருபாயா Withdraw பண்ணனும்..!!

இப்படியே ஒவ்வொரு 100 ருபாய்க்கும் பேங்க்ல கூட்டம் கூடணும்..

பேங்க்ல வேலை செய்யுறவங்க காண்டாகி அவங்களே போராட்டம் பண்ணனும்..
அந்த லெவலுக்கு போகணும்.. !!

அப்பதான் இந்த சட்டம் மாறும்.. நம்ம சவுகரியத்துக்குதான் ATM மிஷின் வச்சிருக்காங்க..
ATM ல பணம் எடுக்க கூடாதுன்னா சம்பளத்தை Cash ஆ குடுக்க சொல்லுங்க..!

# இந்தவிஷயத்தை நாம சீரியஸா எடுத்துக்கலேன்னா..
நம்ம தலைல மிளகாய் அரைப்பது தொடரும்..!!

- Parthi Ban

Relaxplzz

தாய் பால் கொடுக்கும் பொது கோபப்பட கூடாதாம்-ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்,,! கோபத்தி...

Posted: 07 Nov 2014 08:58 AM PST

தாய் பால் கொடுக்கும் பொது கோபப்பட கூடாதாம்-ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்,,!

கோபத்தின் உச்சத்தில் இருக்கும் தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அந்த கோப உணர்ச்சியினால் ஏற்படும் கெடுதல்கள் அந்த பாலையே நஞ்சாக்கி, குழந்தை இறக்கும் வாய்ப்பை
கூட ஏற்படுத்துகிறதாம். எனவே தாய்மார்கள் பாலூட்டும் போது அமைதியான சூழ்நிலையில் தாய்ப்பாலுட்ட வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

கோபம் என்பது ஒரு உணர்வு. எரிச்சல், மனக்கடுப்பு, வருத்தம், சீற்றம், ஆத்திரம், ஆவேசம், பெரும்சினம் இவை எல்லாம் கோபத்தின் பெருவகைகள். கோபம் என்பது ஒரு சில இடங்களில் அவசியம்தான் அதேசமயம் எதற்கெடுத்தாலும் கோபம், எப்போதும் கோபம் என்று இருக்கக் கூடாது.

கோபம் ஏற்படும் போது மனதை அமைதியாக வைத்திருக்க பழகவேண்டும். கோபம் வரக்கூடாது. வந்தாலும்கூட நீண்ட நேரம் இருக்கக் கூடாது. அவ்வாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கோபம் உடனே மறைந்து விட வேண்டும். திரும்ப திரும்ப பேசியதைப் பேசி கேட்பவரையும் கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்று தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடாது. கோபம் உடலில் பல கெடுதல்களை ஏற்படுத்துகிறது.

கோபத்தோடு தன் குழந்தைக்கு தாய்பால் அந்த கோப உணர்ச்சியானது பாலையே நஞ்சாக்கிவிடுமாம்.கோபத்தினால் நம்முடைய சக்தி வீணாகிறது. நரம்பு மண்டலம் முழுவதும் சீர்குலைகிறது. உடல் பதறுகிறது. உடலில் சோர்வு ஏற்படுகிறது. மறுபடியும் உடல் தன்னிலைக்கு வர பல மணி நேரங்கள் ஆகின்றன. எனவே உங்கள் உடலை நோய்களில் இருந்து காப்பாற்றிக்கொள்ளவும்.

தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கவும் கோபம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். கோபம் வரும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் நம்முடைய மூச்சுக்காற்றை கவனிக்க வேண்டும். மூச்சு உள்ளே போவதையும், வெளியே வருவதையும் சில நிமிடங்கள் கவனித்து வந்தீர்களானால் கோபம் வராது வந்தாலும் அடங்கிவிடும் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் கோபத்தை கட்டுப்படுத்த தியானம் சிறந்த வழி என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

Relaxplzz


"பெண்கள் பக்கம்"

:)

Posted: 07 Nov 2014 08:47 AM PST

கூட்டமான பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸூக்குள் இருவர் பேசிக்கொண்டது ஒருவர் : சார்...இது என...

Posted: 07 Nov 2014 08:40 AM PST

கூட்டமான பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸூக்குள் இருவர் பேசிக்கொண்டது

ஒருவர் : சார்...இது என் சீட்.....டவல் போட்டு இருக்கேன் பாருங்க.....

மற்றொருவர் : அப்போ பஸ் மேலே என் வேஷ்டிய அவுத்து போட்டுட்டா பஸ் எனக்கு சொந்தமாயுடுமா...?? திருந்துங்கடா.....

:P :P

(y)

Posted: 07 Nov 2014 08:30 AM PST

(y)


ஒரு நாள் விவசாயி தான் கட்டி இருந்த கை கடிகாரத்தை மோட்டார் கொட்டகையில் தொலைத்து வ...

Posted: 07 Nov 2014 08:15 AM PST

ஒரு நாள் விவசாயி தான் கட்டி இருந்த கை கடிகாரத்தை மோட்டார் கொட்டகையில் தொலைத்து விட்டார்.அது அவரது திருமணத்தின் போது மனைவி அவருக்கு ஆசையாக பரிசளித்த கைகடிகாரம்.அவர் அந்த இடத்தை சுற்றி தேடி பார்த்துவிட்டார்,அவருக்கு அந்த கைகடிகாரம் கிடைக்கவில்லை.

நிலத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தனர்.அவர்களை அழைத்து தன் கைகடிகாரம் தொலைந்துவிட்டது ,அதை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு நல்ல பரிசு ஒன்று கொடுப்பேன் என்றார்.

சிறுவர்கள் ஆர்வமுடன் மோட்டார் கொட்டகைக்குள் சென்று தேட ஆரம்பித்தனர் .சிறிது நேரத்தில் அவர்கள் வெளியே வந்து தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டனர்.

ஒரு சிறுவன் மட்டும் மீண்டும் வந்து எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள் நான் தேடி தருகிறேன் என்றான்.விவசாயியும் சரி போய் தேடிப்பார் என்றார்.

மோட்டார் கொட்டகைக்குள் சென்ற சிறுவன் சிறிது நேரத்தில் கைகடிகாரத்துடன் வெளியே வந்தான்.அதை பார்த்த விவசாயி ஆச்சரியத்துடன் எப்படி உன்னால் மட்டும் கண்டுபிடிக்க முடிந்தது என்று கேட்டார்.

நான் உள்ளே சென்று தரையில் அமைதியாக உட்கார்ந்து காதுகளை கூர்மையாக்கி கேட்டேன்.,எந்த திசையில் இருந்து டிக் டிக் சத்தம் வருகிறது என்று . பிறகு சுலபமாக கண்டுபிடித்து எடுத்து வந்தேன் என்றான்.

நீதி: அமைதியான மனநிலையில் எந்த ஒரு வேலை செய்தாலும் அது வெற்றிகரமாக முடியும்.தினந்தோறும் காலை எழுந்தவுடன் அமைதியாக தியானம் செய்து பாருங்கள், பிறகு உங்கள் மூளை எவ்வளவு கூர்மையாக வேலை செய்கிறது என்பது தெரியும்.

Relaxplzz

கமல்ஹாசன் சில தகவல்கள் :: 1. உலகிலேயே ரசிகர் மன்றங்களை மக்களுக்கு சேவை செய்யும்...

Posted: 07 Nov 2014 08:09 AM PST

கமல்ஹாசன் சில தகவல்கள் ::

1. உலகிலேயே ரசிகர் மன்றங்களை மக்களுக்கு சேவை செய்யும் நற்பணி மன்றங்களாக மாற்றிய முதல் நடிகர் கமல்ஹாசன்!.

2. கமலஹாசன் 'கலைஞானி' என்று கலைஞரால் அழைக்கப்பட்டார்!

'உலக நாயகன்' என்றழைத்தவர் K.S.ரவிக்குமார்!

3. கமலின் நூறாவது படமான ராஜபார்வையில் நடிக்கும்போது இவரது வயது 27 தான்!.

4. நீங்க அரசியலுக்கு வருவீங்களா?

கமல் : எனக்கு ஓரளவுக்கு தான் நடிக்கத் தெரியும், அதிகம் நடிக்க வராது.!!

5. தமிழில் மார்பிங் தொழில் நுட்பம் முதன்முறையாக பயன்படுத்தப் பட்டது கமல்ஹாசன் நடித்த மைக்கேல் மதன காமராஜனில் தான்!

6. ஹாலிவுட்டில் இருந்து மேக்கப் மேன் வரவழைத்து மேக்கப் போடப்பட்ட முதல் இந்தியப் படம் "இந்தியன்"!.

7. உடல்தானம் செய்த முதல் நடிகர் டாக்டர் கமல்ஹாசன் தான்!

சென்னை மருத்துவக் கல்லூரியில் ஆகஸ்டு 15, 2002 அன்று இதைச் செய்தார்!

8. தமிழ் சினிமாவ கோலிவுட் என்பதை கமல் விரும்புவதில்லை!

தமிழ்த் திரையுலகம் என அழைப்பதையே விரும்புகிறார்!!

9. இந்தியத் திரைப் படங்களிலேயே முதன் முறையாக அனிமேஷன் தொழில் நுட்பம் பயன்படுத்தப் பட்டது கமல்ஹாசனின் 100வது படமான ராஜ பார்வையில்!

10. கமலுக்கு 34 முறை படப் பிடிப்புகளில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது.

டூப் போட்டு கும்மி அடிக்கும் நடிகர்களில் வித்தியாசமானவர் கமல்!.

11. கமலுக்கு தனது பிறந்த நாளான நவம்பர் 7ஐ கொண்டாடுவதில் ஒரு சங்கடம் உண்டு.

ஏனெனில் இதே தேதியில் தான் அவரது தந்தையார் மறைந்தார்.

12. தமிழ் திரையுலக சகாப்தங்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி மூன்று பேருடனும் நடித்தவர் கமல்ஹாசன்!

13. டைம்ஸ் பத்திரிகை கமலஹாசன் நடித்த நாயகன் திரைப்படத்தை உலகின் சிறந்த 100 படங்களுக்குள் வகைப்படுத்தி யிருக்கிறது!

14. கமல்ஹாசனின் சொந்தப் பட நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் இதுவரை 450 மில்லியனுக்கும் மேல் வர்த்தகம் செய்திருக்கிறது!!

#KamalHaasan60

via தெரிந்து கொள்வோம்

Relaxplzz


தகவல் துணுக்குகள்

கடைகளில் டீ குடிப்பவரா? எச்சரிக்கை ! +++++++++++++++++++++++++++++++++ நம்மவர்க...

Posted: 07 Nov 2014 08:01 AM PST

கடைகளில் டீ குடிப்பவரா? எச்சரிக்கை !
+++++++++++++++++++++++++++++++++

நம்மவர்களில் பல பேர்கள் டீக்கடைக்கு போன உடனே கேக்குறது, "நல்ல ஸ்ட்ராங்க் டீ ஒண்ணு கொடுங்க"ன்னுதான்! அந்த ஸ்ட்ராங் டீ பிரியர்கள் மனசும் ஸ்ட்ராங்கா இருந்தா இந்தப் பதிவை படிக்கலாம்.

படத்தில் இருக்கின்ற இரண்டு டீ டம்பளரில், நமக்கு வலதுபுறம் இருப்பது நல்ல டீ. இடது புறம் இருப்பது கலப்படமான ஹேர் டை கல்ந்த டீ. இதனை எப்படிக்கண்டுபிடிக்கலாம்?.

மிகவும் எளிது. பரிசோதனை செய்ய நினைக்கின்ற தேயிலையை ஒரு ஸ்பூனில் எடுத்துக்கொண்டு. ஒரு கண்ணாடி டம்ளரில், சாதாரண தண்ணீரை ஊற்றிவிட்டு, அதில் அந்த தேயிலையைத் தூவவேண்டும். நல்ல தேயிலையாயிருந்தால், தேயிலையின் சாறு மட்டும் இறங்கி தண்ணீரின் நிறம் சிறிது மட்டுமே மாறும்.

கலர் சேர்த்த கலப்பட தேயிலையாயிருந்தால், தேயிலை தண்ணீரில் மூழ்கத்துவங்கும்போதே, கலர்கள் அந்த நீரில் வர்ண ஜாலமடிக்கும். கொஞ்ச நேரத்தில், அந்த டம்ளர் தண்ணீர் முழுவதுமே, இடது பக்க டம்ளரில் உள்ளதுபோல் கலராகிவிடும்.

எப்படி தயாரிக்கிறார்கள் இந்த கலப்படத்தேயிலையை?

கடைகளில் டீ போடப்பயன்படுத்தியபின் தூர எறியப்படும் சக்கை டீ தூள் தான் கலப்படத்தேயிலைக்காரர்களை சக்கைப்போடு போடவைக்கின்றது.

ஆம், அந்த சக்கைத்தேயிலையை சேகரித்து, அவற்றில் ஹேர்டைக்குண்டான ரசாயன நிறமிகளைக்கலந்து, நல்லா ஸ்ட்ராங்கான டீ கிடைக்கும்னு பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து அந்தக் கலப்படத்தேயிலையை சந்தைப்படுத்துகிறார்கள்.

பொதுமக்களாகியா நாம் விழிப்புணர்வை அடையத்தவறினால் அல்ஸர் என்ற வயிற்றுப் புண், சொறி,சிரங்கு போன்ற தோல் உபாதைகளுக்கு ஆளாகி அல்லல் பட நேரும். எச்சரிக்கையுடன் சாதாரண கடைகளில் பெரும்பாலும் டீ அருந்துவதனை தவிருங்கள். மேலும் தாங்கள் வாங்கி உபயோகிக்கும் தேயிலையினை பரிசோதித்து தரமான தேயிலை நிறுவனம் விற்பனை செய்யும் கலப்படமில்லாத தேயிலையிற்கு மாறுங்கள்.

Relaxplzz


"விழிப்புணர்வு"

#ரிலாக்ஸ்_நறுக்ஸ் ராமர் பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திர திட்டம் ... #கட்காரி.....

Posted: 07 Nov 2014 07:50 AM PST

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

ராமர் பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திர திட்டம் ... #கட்காரி...

#சிறந்த முறையில் இங்கு முட்டையை உடைக்காமல் ஆம்ப்லேட் போட்டு தரப்படும். :P :P

- Kalimuthu.

போதை பொருள் கடத்தியதாக, தமிழக மீனவனுக்கு தூக்கு தண்டனை...! போதை பொருள் விற்றுக...

Posted: 07 Nov 2014 07:40 AM PST

போதை பொருள் கடத்தியதாக,
தமிழக மீனவனுக்கு தூக்கு தண்டனை...!

போதை பொருள் விற்றுக்கொண்டிருக்கும் தமிழக அரசுக்கு என்ன தண்டனை...??!!

- Kalimuthu


:)

Posted: 07 Nov 2014 07:30 AM PST

:)


தமிழ் சினிமாவில்.. ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும்..!!! * 50 பேர்....

Posted: 07 Nov 2014 07:15 AM PST

தமிழ் சினிமாவில்.. ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும்..!!!

* 50 பேர்.. அருவா,, கத்தியோட வந்தா.. அது "ஹரி" படம்..!!

* இதே போல 50 பேர்.. ஆரவாரமா லாரில.. கத்திக்கிட்டே வந்தா அது "தரணி" படம்..!!

*இதுவே 50 பேரும் கோட்சூட் போட்டுக்கிட்டு.
வந்தா.. அது "முருகதாஸ்" படம்..!!!

* 50 பேரும் 50 கார்ல வந்தா.. அது "K.S. ரவிக்குமார்" படம்..!!
இதே போல.. 50 பேர் பத்து ஹெலிகாப்டர்ல வந்து..இறங்கினா.. அது
"ஷங்கர்" படம்..!!

* இதுவே 50 பேரும் சும்மா.. வீட்டை சுத்தியே நின்னாங்கன்னா அது "லிங்குசாமி" படம்..!!

* இதே போல.. 50 பேரும் அழுதுக்கிட்டே இருந்தா அது.. "இராசு மதுரவன்" படம்..!!

* இதுவே 50 பேரும் வேட்டி.. சட்டை எல்லாம் கிழிந்து.. பார்ப்பதற்கு பரிதாபமா இருந்தா.. அது பாலா படம்..!!

* இதே போல 50 பேர்.. வெளிச்சத்துக்கே வராம.. இருட்டிலேயே இருந்தாங்கன்னா அது "மணிரத்னம்" படம்..!!

;-) ;-)

Relaxplzz

திரு அஜித்குமார் அவர்களை நடிகராக பார்க்காமல் நல்ல மனிதராக பார்க்கிறேன் ---------...

Posted: 07 Nov 2014 07:00 AM PST

திரு அஜித்குமார் அவர்களை நடிகராக பார்க்காமல் நல்ல மனிதராக பார்க்கிறேன்
-----------
பணத்துக்காக எதையும் செய்யும் நடிகர்களின் மத்தியில், வெளிநாட்டு விஷ(குளிர்)பான நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்து அதை ஊக்கப்படுத்தாமல், இருந்தமைக்காகவே இவரை பாராட்டி பகிரலாமே!

குளிர்பான விளம்பரத்தில் நடிக்க மறுத்த அஜீத்..!!

பிரபல குளிர்பான நிறுவனம் ஒன்று சமீபத்தில் அஜீத்தை அணுகி தங்கள் குளிர்பான விளம்பர படத்தில் நடிக்க வேண்டும் என்றும்,
அதற்காக பல கோடிகள் சம்பளமாக தர தயாராக இருப்பதாகவும் அவரிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஆனால், ''எத்தனை கோடி கொடுத்தாலும் வெளிநாட்டு குளிர்பான நிறுவன விளம்பரத்தில் நடிக்க முடியாது'' என்று கூறி அஜீத், அந்த குளிர்பான விளம்பரத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம்.

ஐந்தே நாட்கள் படபிடிப்பில் கலந்துகொண்டிருந்தால் பல கோடிகள் கிடைக்கும் என்ற நிலையிலும், பணத்திற்காக தனது கொள்கையை விட்டுக்கொடுக்காமல் வாழும் அஜீத்தை கோலிவுட்டில் பெருமையாக பேசி வருகின்றனர்.

- Saravanakumar Velusamy

Relaxplzz


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் கழுத்துல கால்கிலோ பவுடர அப்பிட்டு வரவன் பூராம் நம்மபய தேன்......

Posted: 07 Nov 2014 06:54 AM PST

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

கழுத்துல கால்கிலோ பவுடர அப்பிட்டு வரவன் பூராம் நம்மபய தேன்...

விவிகா சுரேஷ்

:)

Posted: 07 Nov 2014 06:40 AM PST

:)


:)

Posted: 07 Nov 2014 06:30 AM PST

:)


திருமணமான ஒரு அப்பாவியின் வேண்டுதல்... ஆண்டவரே... எனக்கு குழந்தை பருவத்தை கொடு...

Posted: 07 Nov 2014 06:15 AM PST

திருமணமான ஒரு அப்பாவியின் வேண்டுதல்...

ஆண்டவரே...

எனக்கு குழந்தை பருவத்தை கொடுத்தாய்...அதை நீ எடுத்துக் கொண்டாய்.

எனக்கு வாலிபத்தை கொடுத்தாய்...அதையும் எடுத்துக் கொண்டாய்.

மனைவியை கொடுத்தாய்.........ரொம்ப வருஷம் ஆயிடுச்சு
.
.
.
.
.
.
.
.

ஒன்றும் இல்லை நியாபகப் படுத்தினேன் ஆண்டவரே...

:P :P

Relaxplzz

வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் மட்டுமே அனுபவிக்கும் உணர்வு இது.. "நீ அனுப்புன பண...

Posted: 07 Nov 2014 06:00 AM PST

வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் மட்டுமே அனுபவிக்கும் உணர்வு இது..

"நீ அனுப்புன பணத்தை எடுத்துட்டேண்டா"
என்று வீட்டிலிருந்து அம்மா / அப்பா/மணைவி போனில் சொல்லும்போது
ஒரு மாதம் உழைத்த அத்தனை உடல் வலியும்,மன வேதனையும் சட்டென ஒற்றை நொடியில் காணாமல் போய் புது உற்சாகம் மனதில் பாயும்...

அந்த உற்சாகம் அடுத்த சம்பள தேதி வரை சோர்வடையாமல் உழைக்க வைக்கும்.....

Relaxplzz


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் ஜிம்முக்கு போன மொத ரெண்டு நாள் யாரயாவது புடிச்சு உதைக்கணும் ப...

Posted: 07 Nov 2014 05:50 AM PST

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

ஜிம்முக்கு போன மொத ரெண்டு நாள் யாரயாவது புடிச்சு உதைக்கணும் போல இருக்கு, மூணாவது நாள் நம்மள நாலு பேர் உதைச்ச மாதிரி இருக்கு....

மனநிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம். ஆடம்பரம் என்பது நாம் தேடிக்கொள்...

Posted: 07 Nov 2014 05:40 AM PST

மனநிறைவு என்பது இயற்கையாக
நம்மிடம் உள்ள செல்வம்.
ஆடம்பரம் என்பது நாம்
தேடிக்கொள்ளும் வறுமை..,


:)

Posted: 07 Nov 2014 05:30 AM PST

:)


சமீபத்தில், என் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவருடைய மூன்று வயது குழந்தை, ப...

Posted: 07 Nov 2014 05:15 AM PST

சமீபத்தில், என் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவருடைய மூன்று வயது குழந்தை, பிரிஜ்ஜிலிருந்து இரண்டு லிட்டர் கோக் பாட்டிலை எடுக்க முயன்ற போது, கை தவறி, கீழே விழுந்து, அதிலிருந்த கோக் முழுவதும் கொட்டி விட்டது.

நண்பரின் மனைவி, தன் குழந்தையை கண்டித்து அடிக்கப் போகிறார் என்று நினைத்து, நான் பயந்து கொண்டிருந்தேன்; ஆனால், நடந்ததோ வேறு…

"பளுவை தூக்கறதுக்கு அப்படி தான் முயற்சி பண்ணணும். கொட்டினது பரவாயில்லை. அதில கொஞ்ச நேரம் உன் இஷ்டத்துக்கு விளையாடிக்கோ…' என்றார். குழந்தையும் அதில் கைகளை அலசி விளையாட ஆரம்பித்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு, "இதை கொட்டினது யாரோ, அவங்க தான் துடைக்கணும். இந்த சின்ன டவலால கவனமா துடைச்சுடு…' என்று, குழந்தையிடம் டவலை கொடுத்தாள்.

தன்னிடம் முழுப் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்ட பெருமை முகத்தில் ததும்ப, அந்த குழந்தை தரையை சுத்தமாக துடைத்து, பெருமிதத்துடன் அம்மாவைப் பார்த்தது. அதோடு, "இதே பாட்டில்ல குழாயிலிருந்து முழுதும் தண்ணி பிடிச்சு, கொட்டாம பிரிஜ்ஜில கொண்டு வைக்க இப்ப பழகிக்கோ…' என்று சொல்லி, குழந்தையை குழாயின் அருகில் அழைத்துப் போனார்.

அந்த தாயை நான் ஆச்சரியத்துடன் பார்த்தேன். "குழந்தைகளை வளர்க்கும் முறைகளை விளக்கும் ஒரு புத்தகத்தில் படித்ததை, நான் நடைமுறையில் பயன்படுத்துகிறேன். இந்த முறைகளை பின்பற்றுவதால், குழந்தை, தான் செய்த தவறை உணர்கிறது. தவறு செய்தால், துடைப்பது போன்ற தண்டனையை தான் அனுபவிக்க வேண்டும் என்று மென்மையாக குழந்தையை உணர வைக்க முடிகிறது.

மீண்டும், அதே தவறை செய்யாமலிருக்க, பெற்றோராகிய நாம் தான் குழந்தையை பழக்க வேண்டும். அதற்கு தான் குழாயில் தண்ணீர் பிடித்து பழகச் சொன்னேன்…' என்று, அவர் விளக்கிய போது, ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகள் வளர்ப்பில் இம்மாதிரி மென்மையான முறைகளை பின்பற்றலாமே என்று தோன்றியது. புத்தகங்களை படித்தால் மட்டும் போதாது…

படிக்கும் நல்ல விஷயங்களை, தக்க தருணத்தில் நடைமுறைப்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும் என்ற உண்மை புரிந்தது.

Relaxplzz

தங்கை தந்த உறவு தாய்மாமன் உறவு #தாய்மாமன் உறவு திருமணம், காது குத்து தொடங்கி இ...

Posted: 07 Nov 2014 05:00 AM PST

தங்கை தந்த உறவு தாய்மாமன் உறவு

#தாய்மாமன் உறவு

திருமணம், காது குத்து தொடங்கி இறப்பு வரை குடும்பத்தின் ஒவ்வொரு நிகழ்விலும் கூடவே வருவது தாய்மாமன்தான்.

அதற்கு தமிழ்ச் சமூகம் கொடுத்து வைத்திருக்கும் மதிப்பும், மரியாதையும் மிகப்பெரியது. எல்லோருமே "மாமன்" என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

உண்மையில் "அம்மான்" என்பதுதான் சரியான பதம். அதாவது, அம்மாவுடன் பிறந்தவன் என்பதைக் குறிக்கும் வகையிலான சொல் அது.

Relaxplzz


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் பலநேரங்கள்ல இந்த மனசும் மணிபர்ஸும் ஒன்னுதான்! சில்லரத்தனமானவி...

Posted: 07 Nov 2014 04:50 AM PST

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

பலநேரங்கள்ல
இந்த மனசும் மணிபர்ஸும் ஒன்னுதான்!
சில்லரத்தனமானவிஷயங்களை சேர்க்கசேர்க்க கனமாகிடுது!
இனிமே பெருசாசேர்ப்போம்!

- ஃபீனிக்ஸ் பாலா

சில்லரை காசு என்றால் சத்தம் வரத்தான் செய்யும் அதுபோல வாழ்க்கை என்றால் கஷ்டம் வரத...

Posted: 07 Nov 2014 04:40 AM PST

சில்லரை காசு என்றால் சத்தம் வரத்தான் செய்யும்
அதுபோல வாழ்க்கை என்றால் கஷ்டம் வரத்தான் செய்யும்
கஷ்டங்களை கடப்போம் வாழ்க்கையை ரசிப்போம்


:)

Posted: 07 Nov 2014 04:30 AM PST

:)


லீவு லெட்டர் to எச்.ஒ.டி இப்படி ஒரு லீவ் லெட்டர் எழத முடியுமா...? உங்களால்..?....

Posted: 07 Nov 2014 04:15 AM PST

லீவு லெட்டர் to எச்.ஒ.டி
இப்படி ஒரு லீவ் லெட்டர்
எழத முடியுமா...? உங்களால்..?.

From
நான் தான்,
உன் டிபார்ட்மென்ட் தான்,
உன் காலேஜ் தான்,
உன் சிட்டி தான்,

To,
உனக்கு தான்,
இந்த டிபார்ட்மென்ட் தான்,
இந்த காலேஜ் தான்,
இந்த சிட்டி தான்.

Respected Sir,
என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ, நான் இன்னிக்கு வர மாட்டேன் ....

Thanking you
Date: இன்னிக்கு தான்
Place : இந்த ஊர் தான்

Yours sincerely
நான்ந்தேன்..

Mudiumma?

:P :P

Relaxplzz

1 லிட்டர் தண்ணீர் 20 ரூபாய்.. யாரும் போராடவில்லை... மல்டி பிளெகஸ் தியேட்டர்களில...

Posted: 07 Nov 2014 04:00 AM PST

1 லிட்டர் தண்ணீர் 20 ரூபாய்..
யாரும் போராடவில்லை...

மல்டி பிளெகஸ் தியேட்டர்களில்
1/2 லிட்டர் தண்ணீர் 25 ரூபாய்..
யாரும் போராடவில்லை..
புட்டிகளில் அடைக்கப்பட்ட
300 மிலி குளிர்பானத்தின் விலை
70 ரூபாய்..
யாரும் போராடவில்லை..

திரையரங்குகளில்
டிக்கெட் விலையுயர்த்தி
மூன்று நாட்களுக்குள்
கொள்முதலையும் லாபத்தையும்
ஈட்டும் யுத்திக்கு எதிராக
யாரும் போராடவில்லை...

வணிக வளாகங்களில்
ஒரு இட்லி 30 ரூபாய்..
யாரும் போராடவில்லை..
100% விலையுயர்த்தி
30% தள்ளுபடியோடு விற்கும்
துணிக்கடைகளுக்கு எதிராக
யாரும் போராடவில்லை..

பால்விலையேற்றத்திற்கெதிராக
போராட்டம்..!

அநாவசியங்களுக்கு
அதிகமாய்ச் செலவழிப்பவர்கள்
அத்தியாவசியங்களுக்கு
செலவழிக்கத் தயங்குவது
பெருவணிகர்களின் சூத்திரங்கள்
வெற்றி பெற்றிருப்பதன் சாட்சி..

சுருக்குக்கயிறை ஊஞ்சலெனவும்
ஊஞ்சலை சுருக்கெனவும் பார்க்கும்படி
குருடாக்கப்பட்ட சமுதாயமாய் மாறியாயிற்று..

பால்விலையேற்றம்
மாடுகளை மட்டுமே நம்பிவாழும்
ஏழை விவசாயிகளின் மனங்களில்
சிறு மகிழ்ச்சியை எழுதியிருக்கிறது..

கொள்முதலுக்கும் வருவாய்க்கும்
நட்டக் குறிகளையும்
சமக்குறிகளையுமே
சந்தித்துக்கொண்டிருக்கும்
மாடுமேய்க்கும் விவசாயிக்கு
கூட்டல்குறியை அறிமுகப்படுத்தியிருக்கிறது
இந்தச் சிறிய பால் விலையேற்றம்..

போராடுபவர்களே
அறிந்து போராடுங்கள்..

வேர்களின் மீது
வெந்நீர் ஊற்றிக்கொண்டு
இலைகள்
செழித்திருக்க முடியாது..

- Kali Muthu ·

Relaxplzz


எந்த மாவட்ட தமிழ் கேட்க இனிமையாக இருக்கும் ..???

Posted: 07 Nov 2014 03:50 AM PST

எந்த மாவட்ட தமிழ் கேட்க இனிமையாக இருக்கும் ..???