Relax Please: FB page daily Posts |
- ATM ல 5 தடவைக்கு மேல பணம் எடுத்தால் (அட நம்ம அக்கௌண்டேருந்துதாங்க ) 20 ருபாய் கூ...
- தாய் பால் கொடுக்கும் பொது கோபப்பட கூடாதாம்-ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்,,! கோபத்தி...
- :)
- கூட்டமான பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸூக்குள் இருவர் பேசிக்கொண்டது ஒருவர் : சார்...இது என...
- (y)
- ஒரு நாள் விவசாயி தான் கட்டி இருந்த கை கடிகாரத்தை மோட்டார் கொட்டகையில் தொலைத்து வ...
- கமல்ஹாசன் சில தகவல்கள் :: 1. உலகிலேயே ரசிகர் மன்றங்களை மக்களுக்கு சேவை செய்யும்...
- கடைகளில் டீ குடிப்பவரா? எச்சரிக்கை ! +++++++++++++++++++++++++++++++++ நம்மவர்க...
- #ரிலாக்ஸ்_நறுக்ஸ் ராமர் பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திர திட்டம் ... #கட்காரி.....
- போதை பொருள் கடத்தியதாக, தமிழக மீனவனுக்கு தூக்கு தண்டனை...! போதை பொருள் விற்றுக...
- :)
- தமிழ் சினிமாவில்.. ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும்..!!! * 50 பேர்....
- திரு அஜித்குமார் அவர்களை நடிகராக பார்க்காமல் நல்ல மனிதராக பார்க்கிறேன் ---------...
- #ரிலாக்ஸ்_நறுக்ஸ் கழுத்துல கால்கிலோ பவுடர அப்பிட்டு வரவன் பூராம் நம்மபய தேன்......
- :)
- :)
- திருமணமான ஒரு அப்பாவியின் வேண்டுதல்... ஆண்டவரே... எனக்கு குழந்தை பருவத்தை கொடு...
- வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் மட்டுமே அனுபவிக்கும் உணர்வு இது.. "நீ அனுப்புன பண...
- #ரிலாக்ஸ்_நறுக்ஸ் ஜிம்முக்கு போன மொத ரெண்டு நாள் யாரயாவது புடிச்சு உதைக்கணும் ப...
- மனநிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம். ஆடம்பரம் என்பது நாம் தேடிக்கொள்...
- :)
- சமீபத்தில், என் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவருடைய மூன்று வயது குழந்தை, ப...
- தங்கை தந்த உறவு தாய்மாமன் உறவு #தாய்மாமன் உறவு திருமணம், காது குத்து தொடங்கி இ...
- #ரிலாக்ஸ்_நறுக்ஸ் பலநேரங்கள்ல இந்த மனசும் மணிபர்ஸும் ஒன்னுதான்! சில்லரத்தனமானவி...
- சில்லரை காசு என்றால் சத்தம் வரத்தான் செய்யும் அதுபோல வாழ்க்கை என்றால் கஷ்டம் வரத...
- :)
- லீவு லெட்டர் to எச்.ஒ.டி இப்படி ஒரு லீவ் லெட்டர் எழத முடியுமா...? உங்களால்..?....
- 1 லிட்டர் தண்ணீர் 20 ரூபாய்.. யாரும் போராடவில்லை... மல்டி பிளெகஸ் தியேட்டர்களில...
- எந்த மாவட்ட தமிழ் கேட்க இனிமையாக இருக்கும் ..???
Posted: 07 Nov 2014 09:10 AM PST ATM ல 5 தடவைக்கு மேல பணம் எடுத்தால் (அட நம்ம அக்கௌண்டேருந்துதாங்க ) 20 ருபாய் கூடுதலாக சார்ஜ் பண்ணுவாங்களாம்.. !!!! அதனால நாம என்ன பண்ணனும்.. எல்லாருமே சிரமம் பார்க்காம ஒரு 5-6 தடவை.. ஒவ்வொருத்தரும்.. பேங்குக்கு போய் வெறும் 100- 100 ருபாயா Withdraw பண்ணனும்..!! இப்படியே ஒவ்வொரு 100 ருபாய்க்கும் பேங்க்ல கூட்டம் கூடணும்.. பேங்க்ல வேலை செய்யுறவங்க காண்டாகி அவங்களே போராட்டம் பண்ணனும்.. அந்த லெவலுக்கு போகணும்.. !! அப்பதான் இந்த சட்டம் மாறும்.. நம்ம சவுகரியத்துக்குதான் ATM மிஷின் வச்சிருக்காங்க.. ATM ல பணம் எடுக்க கூடாதுன்னா சம்பளத்தை Cash ஆ குடுக்க சொல்லுங்க..! # இந்தவிஷயத்தை நாம சீரியஸா எடுத்துக்கலேன்னா.. நம்ம தலைல மிளகாய் அரைப்பது தொடரும்..!! - Parthi Ban Relaxplzz |
Posted: 07 Nov 2014 08:58 AM PST தாய் பால் கொடுக்கும் பொது கோபப்பட கூடாதாம்-ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்,,! கோபத்தின் உச்சத்தில் இருக்கும் தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அந்த கோப உணர்ச்சியினால் ஏற்படும் கெடுதல்கள் அந்த பாலையே நஞ்சாக்கி, குழந்தை இறக்கும் வாய்ப்பை கூட ஏற்படுத்துகிறதாம். எனவே தாய்மார்கள் பாலூட்டும் போது அமைதியான சூழ்நிலையில் தாய்ப்பாலுட்ட வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். கோபம் என்பது ஒரு உணர்வு. எரிச்சல், மனக்கடுப்பு, வருத்தம், சீற்றம், ஆத்திரம், ஆவேசம், பெரும்சினம் இவை எல்லாம் கோபத்தின் பெருவகைகள். கோபம் என்பது ஒரு சில இடங்களில் அவசியம்தான் அதேசமயம் எதற்கெடுத்தாலும் கோபம், எப்போதும் கோபம் என்று இருக்கக் கூடாது. கோபம் ஏற்படும் போது மனதை அமைதியாக வைத்திருக்க பழகவேண்டும். கோபம் வரக்கூடாது. வந்தாலும்கூட நீண்ட நேரம் இருக்கக் கூடாது. அவ்வாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கோபம் உடனே மறைந்து விட வேண்டும். திரும்ப திரும்ப பேசியதைப் பேசி கேட்பவரையும் கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்று தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடாது. கோபம் உடலில் பல கெடுதல்களை ஏற்படுத்துகிறது. கோபத்தோடு தன் குழந்தைக்கு தாய்பால் அந்த கோப உணர்ச்சியானது பாலையே நஞ்சாக்கிவிடுமாம்.கோபத்தினால் நம்முடைய சக்தி வீணாகிறது. நரம்பு மண்டலம் முழுவதும் சீர்குலைகிறது. உடல் பதறுகிறது. உடலில் சோர்வு ஏற்படுகிறது. மறுபடியும் உடல் தன்னிலைக்கு வர பல மணி நேரங்கள் ஆகின்றன. எனவே உங்கள் உடலை நோய்களில் இருந்து காப்பாற்றிக்கொள்ளவும். தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கவும் கோபம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். கோபம் வரும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் நம்முடைய மூச்சுக்காற்றை கவனிக்க வேண்டும். மூச்சு உள்ளே போவதையும், வெளியே வருவதையும் சில நிமிடங்கள் கவனித்து வந்தீர்களானால் கோபம் வராது வந்தாலும் அடங்கிவிடும் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் கோபத்தை கட்டுப்படுத்த தியானம் சிறந்த வழி என்றும் அவர்கள் கூறுகின்றனர். Relaxplzz ![]() "பெண்கள் பக்கம்" |
Posted: 07 Nov 2014 08:47 AM PST |
Posted: 07 Nov 2014 08:40 AM PST கூட்டமான பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸூக்குள் இருவர் பேசிக்கொண்டது ஒருவர் : சார்...இது என் சீட்.....டவல் போட்டு இருக்கேன் பாருங்க..... மற்றொருவர் : அப்போ பஸ் மேலே என் வேஷ்டிய அவுத்து போட்டுட்டா பஸ் எனக்கு சொந்தமாயுடுமா...?? திருந்துங்கடா..... :P :P |
Posted: 07 Nov 2014 08:30 AM PST |
Posted: 07 Nov 2014 08:15 AM PST ஒரு நாள் விவசாயி தான் கட்டி இருந்த கை கடிகாரத்தை மோட்டார் கொட்டகையில் தொலைத்து விட்டார்.அது அவரது திருமணத்தின் போது மனைவி அவருக்கு ஆசையாக பரிசளித்த கைகடிகாரம்.அவர் அந்த இடத்தை சுற்றி தேடி பார்த்துவிட்டார்,அவருக்கு அந்த கைகடிகாரம் கிடைக்கவில்லை. நிலத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தனர்.அவர்களை அழைத்து தன் கைகடிகாரம் தொலைந்துவிட்டது ,அதை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு நல்ல பரிசு ஒன்று கொடுப்பேன் என்றார். சிறுவர்கள் ஆர்வமுடன் மோட்டார் கொட்டகைக்குள் சென்று தேட ஆரம்பித்தனர் .சிறிது நேரத்தில் அவர்கள் வெளியே வந்து தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டனர். ஒரு சிறுவன் மட்டும் மீண்டும் வந்து எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள் நான் தேடி தருகிறேன் என்றான்.விவசாயியும் சரி போய் தேடிப்பார் என்றார். மோட்டார் கொட்டகைக்குள் சென்ற சிறுவன் சிறிது நேரத்தில் கைகடிகாரத்துடன் வெளியே வந்தான்.அதை பார்த்த விவசாயி ஆச்சரியத்துடன் எப்படி உன்னால் மட்டும் கண்டுபிடிக்க முடிந்தது என்று கேட்டார். நான் உள்ளே சென்று தரையில் அமைதியாக உட்கார்ந்து காதுகளை கூர்மையாக்கி கேட்டேன்.,எந்த திசையில் இருந்து டிக் டிக் சத்தம் வருகிறது என்று . பிறகு சுலபமாக கண்டுபிடித்து எடுத்து வந்தேன் என்றான். நீதி: அமைதியான மனநிலையில் எந்த ஒரு வேலை செய்தாலும் அது வெற்றிகரமாக முடியும்.தினந்தோறும் காலை எழுந்தவுடன் அமைதியாக தியானம் செய்து பாருங்கள், பிறகு உங்கள் மூளை எவ்வளவு கூர்மையாக வேலை செய்கிறது என்பது தெரியும். Relaxplzz |
Posted: 07 Nov 2014 08:09 AM PST கமல்ஹாசன் சில தகவல்கள் :: 1. உலகிலேயே ரசிகர் மன்றங்களை மக்களுக்கு சேவை செய்யும் நற்பணி மன்றங்களாக மாற்றிய முதல் நடிகர் கமல்ஹாசன்!. 2. கமலஹாசன் 'கலைஞானி' என்று கலைஞரால் அழைக்கப்பட்டார்! 'உலக நாயகன்' என்றழைத்தவர் K.S.ரவிக்குமார்! 3. கமலின் நூறாவது படமான ராஜபார்வையில் நடிக்கும்போது இவரது வயது 27 தான்!. 4. நீங்க அரசியலுக்கு வருவீங்களா? கமல் : எனக்கு ஓரளவுக்கு தான் நடிக்கத் தெரியும், அதிகம் நடிக்க வராது.!! 5. தமிழில் மார்பிங் தொழில் நுட்பம் முதன்முறையாக பயன்படுத்தப் பட்டது கமல்ஹாசன் நடித்த மைக்கேல் மதன காமராஜனில் தான்! 6. ஹாலிவுட்டில் இருந்து மேக்கப் மேன் வரவழைத்து மேக்கப் போடப்பட்ட முதல் இந்தியப் படம் "இந்தியன்"!. 7. உடல்தானம் செய்த முதல் நடிகர் டாக்டர் கமல்ஹாசன் தான்! சென்னை மருத்துவக் கல்லூரியில் ஆகஸ்டு 15, 2002 அன்று இதைச் செய்தார்! 8. தமிழ் சினிமாவ கோலிவுட் என்பதை கமல் விரும்புவதில்லை! தமிழ்த் திரையுலகம் என அழைப்பதையே விரும்புகிறார்!! 9. இந்தியத் திரைப் படங்களிலேயே முதன் முறையாக அனிமேஷன் தொழில் நுட்பம் பயன்படுத்தப் பட்டது கமல்ஹாசனின் 100வது படமான ராஜ பார்வையில்! 10. கமலுக்கு 34 முறை படப் பிடிப்புகளில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. டூப் போட்டு கும்மி அடிக்கும் நடிகர்களில் வித்தியாசமானவர் கமல்!. 11. கமலுக்கு தனது பிறந்த நாளான நவம்பர் 7ஐ கொண்டாடுவதில் ஒரு சங்கடம் உண்டு. ஏனெனில் இதே தேதியில் தான் அவரது தந்தையார் மறைந்தார். 12. தமிழ் திரையுலக சகாப்தங்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி மூன்று பேருடனும் நடித்தவர் கமல்ஹாசன்! 13. டைம்ஸ் பத்திரிகை கமலஹாசன் நடித்த நாயகன் திரைப்படத்தை உலகின் சிறந்த 100 படங்களுக்குள் வகைப்படுத்தி யிருக்கிறது! 14. கமல்ஹாசனின் சொந்தப் பட நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் இதுவரை 450 மில்லியனுக்கும் மேல் வர்த்தகம் செய்திருக்கிறது!! #KamalHaasan60 via தெரிந்து கொள்வோம் Relaxplzz ![]() தகவல் துணுக்குகள் |
Posted: 07 Nov 2014 08:01 AM PST கடைகளில் டீ குடிப்பவரா? எச்சரிக்கை ! +++++++++++++++++++++++++++++++++ நம்மவர்களில் பல பேர்கள் டீக்கடைக்கு போன உடனே கேக்குறது, "நல்ல ஸ்ட்ராங்க் டீ ஒண்ணு கொடுங்க"ன்னுதான்! அந்த ஸ்ட்ராங் டீ பிரியர்கள் மனசும் ஸ்ட்ராங்கா இருந்தா இந்தப் பதிவை படிக்கலாம். படத்தில் இருக்கின்ற இரண்டு டீ டம்பளரில், நமக்கு வலதுபுறம் இருப்பது நல்ல டீ. இடது புறம் இருப்பது கலப்படமான ஹேர் டை கல்ந்த டீ. இதனை எப்படிக்கண்டுபிடிக்கலாம்?. மிகவும் எளிது. பரிசோதனை செய்ய நினைக்கின்ற தேயிலையை ஒரு ஸ்பூனில் எடுத்துக்கொண்டு. ஒரு கண்ணாடி டம்ளரில், சாதாரண தண்ணீரை ஊற்றிவிட்டு, அதில் அந்த தேயிலையைத் தூவவேண்டும். நல்ல தேயிலையாயிருந்தால், தேயிலையின் சாறு மட்டும் இறங்கி தண்ணீரின் நிறம் சிறிது மட்டுமே மாறும். கலர் சேர்த்த கலப்பட தேயிலையாயிருந்தால், தேயிலை தண்ணீரில் மூழ்கத்துவங்கும்போதே, கலர்கள் அந்த நீரில் வர்ண ஜாலமடிக்கும். கொஞ்ச நேரத்தில், அந்த டம்ளர் தண்ணீர் முழுவதுமே, இடது பக்க டம்ளரில் உள்ளதுபோல் கலராகிவிடும். எப்படி தயாரிக்கிறார்கள் இந்த கலப்படத்தேயிலையை? கடைகளில் டீ போடப்பயன்படுத்தியபின் தூர எறியப்படும் சக்கை டீ தூள் தான் கலப்படத்தேயிலைக்காரர்களை சக்கைப்போடு போடவைக்கின்றது. ஆம், அந்த சக்கைத்தேயிலையை சேகரித்து, அவற்றில் ஹேர்டைக்குண்டான ரசாயன நிறமிகளைக்கலந்து, நல்லா ஸ்ட்ராங்கான டீ கிடைக்கும்னு பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து அந்தக் கலப்படத்தேயிலையை சந்தைப்படுத்துகிறார்கள். பொதுமக்களாகியா நாம் விழிப்புணர்வை அடையத்தவறினால் அல்ஸர் என்ற வயிற்றுப் புண், சொறி,சிரங்கு போன்ற தோல் உபாதைகளுக்கு ஆளாகி அல்லல் பட நேரும். எச்சரிக்கையுடன் சாதாரண கடைகளில் பெரும்பாலும் டீ அருந்துவதனை தவிருங்கள். மேலும் தாங்கள் வாங்கி உபயோகிக்கும் தேயிலையினை பரிசோதித்து தரமான தேயிலை நிறுவனம் விற்பனை செய்யும் கலப்படமில்லாத தேயிலையிற்கு மாறுங்கள். Relaxplzz ![]() "விழிப்புணர்வு" |
Posted: 07 Nov 2014 07:50 AM PST #ரிலாக்ஸ்_நறுக்ஸ் ராமர் பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திர திட்டம் ... #கட்காரி... #சிறந்த முறையில் இங்கு முட்டையை உடைக்காமல் ஆம்ப்லேட் போட்டு தரப்படும். :P :P - Kalimuthu. |
Posted: 07 Nov 2014 07:40 AM PST |
Posted: 07 Nov 2014 07:30 AM PST |
Posted: 07 Nov 2014 07:15 AM PST தமிழ் சினிமாவில்.. ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும்..!!! * 50 பேர்.. அருவா,, கத்தியோட வந்தா.. அது "ஹரி" படம்..!! * இதே போல 50 பேர்.. ஆரவாரமா லாரில.. கத்திக்கிட்டே வந்தா அது "தரணி" படம்..!! *இதுவே 50 பேரும் கோட்சூட் போட்டுக்கிட்டு. வந்தா.. அது "முருகதாஸ்" படம்..!!! * 50 பேரும் 50 கார்ல வந்தா.. அது "K.S. ரவிக்குமார்" படம்..!! இதே போல.. 50 பேர் பத்து ஹெலிகாப்டர்ல வந்து..இறங்கினா.. அது "ஷங்கர்" படம்..!! * இதுவே 50 பேரும் சும்மா.. வீட்டை சுத்தியே நின்னாங்கன்னா அது "லிங்குசாமி" படம்..!! * இதே போல.. 50 பேரும் அழுதுக்கிட்டே இருந்தா அது.. "இராசு மதுரவன்" படம்..!! * இதுவே 50 பேரும் வேட்டி.. சட்டை எல்லாம் கிழிந்து.. பார்ப்பதற்கு பரிதாபமா இருந்தா.. அது பாலா படம்..!! * இதே போல 50 பேர்.. வெளிச்சத்துக்கே வராம.. இருட்டிலேயே இருந்தாங்கன்னா அது "மணிரத்னம்" படம்..!! ;-) ;-) Relaxplzz |
Posted: 07 Nov 2014 07:00 AM PST திரு அஜித்குமார் அவர்களை நடிகராக பார்க்காமல் நல்ல மனிதராக பார்க்கிறேன் ----------- பணத்துக்காக எதையும் செய்யும் நடிகர்களின் மத்தியில், வெளிநாட்டு விஷ(குளிர்)பான நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்து அதை ஊக்கப்படுத்தாமல், இருந்தமைக்காகவே இவரை பாராட்டி பகிரலாமே! குளிர்பான விளம்பரத்தில் நடிக்க மறுத்த அஜீத்..!! பிரபல குளிர்பான நிறுவனம் ஒன்று சமீபத்தில் அஜீத்தை அணுகி தங்கள் குளிர்பான விளம்பர படத்தில் நடிக்க வேண்டும் என்றும், அதற்காக பல கோடிகள் சம்பளமாக தர தயாராக இருப்பதாகவும் அவரிடம் கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால், ''எத்தனை கோடி கொடுத்தாலும் வெளிநாட்டு குளிர்பான நிறுவன விளம்பரத்தில் நடிக்க முடியாது'' என்று கூறி அஜீத், அந்த குளிர்பான விளம்பரத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம். ஐந்தே நாட்கள் படபிடிப்பில் கலந்துகொண்டிருந்தால் பல கோடிகள் கிடைக்கும் என்ற நிலையிலும், பணத்திற்காக தனது கொள்கையை விட்டுக்கொடுக்காமல் வாழும் அஜீத்தை கோலிவுட்டில் பெருமையாக பேசி வருகின்றனர். - Saravanakumar Velusamy Relaxplzz ![]() |
Posted: 07 Nov 2014 06:54 AM PST #ரிலாக்ஸ்_நறுக்ஸ் கழுத்துல கால்கிலோ பவுடர அப்பிட்டு வரவன் பூராம் நம்மபய தேன்... விவிகா சுரேஷ் |
Posted: 07 Nov 2014 06:40 AM PST |
Posted: 07 Nov 2014 06:30 AM PST |
Posted: 07 Nov 2014 06:15 AM PST திருமணமான ஒரு அப்பாவியின் வேண்டுதல்... ஆண்டவரே... எனக்கு குழந்தை பருவத்தை கொடுத்தாய்...அதை நீ எடுத்துக் கொண்டாய். எனக்கு வாலிபத்தை கொடுத்தாய்...அதையும் எடுத்துக் கொண்டாய். மனைவியை கொடுத்தாய்.........ரொம்ப வருஷம் ஆயிடுச்சு . . . . . . . . ஒன்றும் இல்லை நியாபகப் படுத்தினேன் ஆண்டவரே... :P :P Relaxplzz |
Posted: 07 Nov 2014 06:00 AM PST வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் மட்டுமே அனுபவிக்கும் உணர்வு இது.. "நீ அனுப்புன பணத்தை எடுத்துட்டேண்டா" என்று வீட்டிலிருந்து அம்மா / அப்பா/மணைவி போனில் சொல்லும்போது ஒரு மாதம் உழைத்த அத்தனை உடல் வலியும்,மன வேதனையும் சட்டென ஒற்றை நொடியில் காணாமல் போய் புது உற்சாகம் மனதில் பாயும்... அந்த உற்சாகம் அடுத்த சம்பள தேதி வரை சோர்வடையாமல் உழைக்க வைக்கும்..... Relaxplzz ![]() |
Posted: 07 Nov 2014 05:50 AM PST #ரிலாக்ஸ்_நறுக்ஸ் ஜிம்முக்கு போன மொத ரெண்டு நாள் யாரயாவது புடிச்சு உதைக்கணும் போல இருக்கு, மூணாவது நாள் நம்மள நாலு பேர் உதைச்ச மாதிரி இருக்கு.... |
Posted: 07 Nov 2014 05:40 AM PST |
Posted: 07 Nov 2014 05:30 AM PST |
Posted: 07 Nov 2014 05:15 AM PST சமீபத்தில், என் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவருடைய மூன்று வயது குழந்தை, பிரிஜ்ஜிலிருந்து இரண்டு லிட்டர் கோக் பாட்டிலை எடுக்க முயன்ற போது, கை தவறி, கீழே விழுந்து, அதிலிருந்த கோக் முழுவதும் கொட்டி விட்டது. நண்பரின் மனைவி, தன் குழந்தையை கண்டித்து அடிக்கப் போகிறார் என்று நினைத்து, நான் பயந்து கொண்டிருந்தேன்; ஆனால், நடந்ததோ வேறு… "பளுவை தூக்கறதுக்கு அப்படி தான் முயற்சி பண்ணணும். கொட்டினது பரவாயில்லை. அதில கொஞ்ச நேரம் உன் இஷ்டத்துக்கு விளையாடிக்கோ…' என்றார். குழந்தையும் அதில் கைகளை அலசி விளையாட ஆரம்பித்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு, "இதை கொட்டினது யாரோ, அவங்க தான் துடைக்கணும். இந்த சின்ன டவலால கவனமா துடைச்சுடு…' என்று, குழந்தையிடம் டவலை கொடுத்தாள். தன்னிடம் முழுப் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்ட பெருமை முகத்தில் ததும்ப, அந்த குழந்தை தரையை சுத்தமாக துடைத்து, பெருமிதத்துடன் அம்மாவைப் பார்த்தது. அதோடு, "இதே பாட்டில்ல குழாயிலிருந்து முழுதும் தண்ணி பிடிச்சு, கொட்டாம பிரிஜ்ஜில கொண்டு வைக்க இப்ப பழகிக்கோ…' என்று சொல்லி, குழந்தையை குழாயின் அருகில் அழைத்துப் போனார். அந்த தாயை நான் ஆச்சரியத்துடன் பார்த்தேன். "குழந்தைகளை வளர்க்கும் முறைகளை விளக்கும் ஒரு புத்தகத்தில் படித்ததை, நான் நடைமுறையில் பயன்படுத்துகிறேன். இந்த முறைகளை பின்பற்றுவதால், குழந்தை, தான் செய்த தவறை உணர்கிறது. தவறு செய்தால், துடைப்பது போன்ற தண்டனையை தான் அனுபவிக்க வேண்டும் என்று மென்மையாக குழந்தையை உணர வைக்க முடிகிறது. மீண்டும், அதே தவறை செய்யாமலிருக்க, பெற்றோராகிய நாம் தான் குழந்தையை பழக்க வேண்டும். அதற்கு தான் குழாயில் தண்ணீர் பிடித்து பழகச் சொன்னேன்…' என்று, அவர் விளக்கிய போது, ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகள் வளர்ப்பில் இம்மாதிரி மென்மையான முறைகளை பின்பற்றலாமே என்று தோன்றியது. புத்தகங்களை படித்தால் மட்டும் போதாது… படிக்கும் நல்ல விஷயங்களை, தக்க தருணத்தில் நடைமுறைப்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும் என்ற உண்மை புரிந்தது. Relaxplzz |
Posted: 07 Nov 2014 05:00 AM PST தங்கை தந்த உறவு தாய்மாமன் உறவு #தாய்மாமன் உறவு திருமணம், காது குத்து தொடங்கி இறப்பு வரை குடும்பத்தின் ஒவ்வொரு நிகழ்விலும் கூடவே வருவது தாய்மாமன்தான். அதற்கு தமிழ்ச் சமூகம் கொடுத்து வைத்திருக்கும் மதிப்பும், மரியாதையும் மிகப்பெரியது. எல்லோருமே "மாமன்" என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். உண்மையில் "அம்மான்" என்பதுதான் சரியான பதம். அதாவது, அம்மாவுடன் பிறந்தவன் என்பதைக் குறிக்கும் வகையிலான சொல் அது. Relaxplzz ![]() |
Posted: 07 Nov 2014 04:50 AM PST #ரிலாக்ஸ்_நறுக்ஸ் பலநேரங்கள்ல இந்த மனசும் மணிபர்ஸும் ஒன்னுதான்! சில்லரத்தனமானவிஷயங்களை சேர்க்கசேர்க்க கனமாகிடுது! இனிமே பெருசாசேர்ப்போம்! - ஃபீனிக்ஸ் பாலா |
Posted: 07 Nov 2014 04:40 AM PST |
Posted: 07 Nov 2014 04:30 AM PST |
Posted: 07 Nov 2014 04:15 AM PST லீவு லெட்டர் to எச்.ஒ.டி இப்படி ஒரு லீவ் லெட்டர் எழத முடியுமா...? உங்களால்..?. From நான் தான், உன் டிபார்ட்மென்ட் தான், உன் காலேஜ் தான், உன் சிட்டி தான், To, உனக்கு தான், இந்த டிபார்ட்மென்ட் தான், இந்த காலேஜ் தான், இந்த சிட்டி தான். Respected Sir, என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ, நான் இன்னிக்கு வர மாட்டேன் .... Thanking you Date: இன்னிக்கு தான் Place : இந்த ஊர் தான் Yours sincerely நான்ந்தேன்.. Mudiumma? :P :P Relaxplzz |
Posted: 07 Nov 2014 04:00 AM PST 1 லிட்டர் தண்ணீர் 20 ரூபாய்.. யாரும் போராடவில்லை... மல்டி பிளெகஸ் தியேட்டர்களில் 1/2 லிட்டர் தண்ணீர் 25 ரூபாய்.. யாரும் போராடவில்லை.. புட்டிகளில் அடைக்கப்பட்ட 300 மிலி குளிர்பானத்தின் விலை 70 ரூபாய்.. யாரும் போராடவில்லை.. திரையரங்குகளில் டிக்கெட் விலையுயர்த்தி மூன்று நாட்களுக்குள் கொள்முதலையும் லாபத்தையும் ஈட்டும் யுத்திக்கு எதிராக யாரும் போராடவில்லை... வணிக வளாகங்களில் ஒரு இட்லி 30 ரூபாய்.. யாரும் போராடவில்லை.. 100% விலையுயர்த்தி 30% தள்ளுபடியோடு விற்கும் துணிக்கடைகளுக்கு எதிராக யாரும் போராடவில்லை.. பால்விலையேற்றத்திற்கெதிராக போராட்டம்..! அநாவசியங்களுக்கு அதிகமாய்ச் செலவழிப்பவர்கள் அத்தியாவசியங்களுக்கு செலவழிக்கத் தயங்குவது பெருவணிகர்களின் சூத்திரங்கள் வெற்றி பெற்றிருப்பதன் சாட்சி.. சுருக்குக்கயிறை ஊஞ்சலெனவும் ஊஞ்சலை சுருக்கெனவும் பார்க்கும்படி குருடாக்கப்பட்ட சமுதாயமாய் மாறியாயிற்று.. பால்விலையேற்றம் மாடுகளை மட்டுமே நம்பிவாழும் ஏழை விவசாயிகளின் மனங்களில் சிறு மகிழ்ச்சியை எழுதியிருக்கிறது.. கொள்முதலுக்கும் வருவாய்க்கும் நட்டக் குறிகளையும் சமக்குறிகளையுமே சந்தித்துக்கொண்டிருக்கும் மாடுமேய்க்கும் விவசாயிக்கு கூட்டல்குறியை அறிமுகப்படுத்தியிருக்கிறது இந்தச் சிறிய பால் விலையேற்றம்.. போராடுபவர்களே அறிந்து போராடுங்கள்.. வேர்களின் மீது வெந்நீர் ஊற்றிக்கொண்டு இலைகள் செழித்திருக்க முடியாது.. - Kali Muthu · Relaxplzz ![]() |
Posted: 07 Nov 2014 03:50 AM PST |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment