Friday, 7 November 2014

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


Posted: 07 Nov 2014 09:06 AM PST


இந்த மலையின் பெயர் எத்தனை பேருக்குத் தெரியும்? (y)

Posted: 07 Nov 2014 09:05 AM PST

இந்த மலையின் பெயர் எத்தனை பேருக்குத் தெரியும்? (y)


யார் மிகச்சிறந்த(?!) சோம்பேறி என்று போட்டி. கடைசில 2 பேருக்கு இடையில் டை ஆகிப்போ...

Posted: 07 Nov 2014 05:30 AM PST

யார் மிகச்சிறந்த(?!) சோம்பேறி என்று போட்டி. கடைசில 2 பேருக்கு இடையில் டை ஆகிப்போச்சு. பரிசளிப்பு விழாவில் ஜட்ஜ் முதல் நபரை அழைத்தார்.
அவன் சென்று பரிசு வாங்கினான். அடுத்து 2வது நபரின் பெயரை சொல்லி அழைத்தார்கள்.

2வது நபர் சொன்னான்: "அட யாருங்க அங்க வரைக்கும் பரிசு வாங்கரதுக்காக வர்றது. அதான் என் ஃப்ரண்ட் அங்க இருக்கானே, அவன்கிட்ட‌யே கொடுத்திருங்க. நான் அப்புறமா எப்பவாவது அவனிடமிருந்து வாங்கிக்கிறேன்."
குஷியில் துள்ளி குதித்த ஜட்ஜ் சொன்னார்: "ஆஹா, நீ தான்யா மிகச்சிறந்த(?!) சோம்பேறி நம்பர் 1. இந்தா உனக்குத்தான் முதல் பரிசு."
(நன்றி: கருப்பையா மணிவண்ணன்)

அட அட என்னமா பீல் பண்றாங்கப்பா...!! காலையில் அவளை முத்தமிட்டு எழுப்பி ஒரு காஃபி...

Posted: 07 Nov 2014 12:30 AM PST

அட அட என்னமா பீல் பண்றாங்கப்பா...!!

காலையில் அவளை முத்தமிட்டு எழுப்பி ஒரு காஃபி கொடுத்தால் போதும்,
இரவு நான் உறங்கும் வரை எனக்குத் தேவையானதைச் செய்ய பம்பரமாய் சுழல்வாள்..!!!
பின்னிருந்து அணைத்தபடியே அவளுக்கு சமையல் கற்றுக் கொடுக்கிறேன்,
என் ஆசையெல்லாம் அவள் கற்றுக்கொள்ளக் கூடாது என்பதுதான்.!!
பசிக்கிறது என்று நான் சொன்னதும் என்னை அவள் முத்தமிடுகிறாள் என்றால் ,இன்னும் சமையல் தயாராகவில்லை என்று அர்த்தம்..!!
சமைத்ததை கையில் கொடுத்து ருசி பார்க்கச் சொல்லியிருந்தால் உப்பில்லை என்று சொல்லியிருப்பேன்,
ஊட்டிவிட்டுக் கேட்கும் அவளிடம் எப்படிச் சொல்வது ..?
தோட்டத்தில் நீ நின்றிருந்த போது
உன்னை உரசிச் சென்ற வண்டு , மற்றொரு வண்டிடம் கேட்டது.... வாசனை புதிதாய் இருக்கிறதே இது என்ன பூ என்று !!!
மழைக்காக அவளும் இடிக்காக நானும் காத்திருக்கிறோம்,
இதோ மின்னல் தென்படுகிறது,..
அவள் என்னைத் தழுவிக்கொள்ள இன்னும் சில விநாடிகளே உள்ளது.!!
என் போர்வையைத் துவைக்கும்போது மட்டும் ஏன் இவ்வளவு அக்கரை என்றேன் ,
என் இடத்தை நிரப்பும் அனைத்தின் மீதும் அப்படித்தான் என்கிறாள் !!!.
உன் குரல் கேட்காத நாட்களில்,
நான் கேட்ட எதுவும் என் நினைவில் இருப்பதில்லை ..!!
என்னை வீழ்த்த அம்பு செலுத்த தேவையில்லை
அன்பு செலுத்தினால் போதும் அன்பே..

பக்கத்து கிராமத்தில் நடந்த தீமிதி திருவிழாவிற்கு நானும் என் அக்காவும் போகலாமென ந...

Posted: 06 Nov 2014 09:30 PM PST

பக்கத்து கிராமத்தில் நடந்த தீமிதி திருவிழாவிற்கு நானும் என் அக்காவும் போகலாமென நினைத்து வீட்டிலிருந்து கிளம்பினோம்.
கிட்டதட்ட இரண்டுகிலோமீட்டர்களுக்கு தார்சாலையில் நடக்கவேண்டும்.
என்னிடம் செருப்பில்லை.
அக்கா, தன்னுடைய செருப்பைக்கொடுத்து போட்டுக்கொள்ளசொல்ல
நானும் போட்டுக்கொண்டேன்.
அந்தவூரிலிருந்த என் பள்ளிநண்பர்கள் என்னடா பொம்பள செருப்பு போட்டிருக்கே என்று கிண்டலடிக்க,
நான் வெட்கப்பட்டுக்கொண்டு அக்காவை தேடிப்பிடித்து செருப்பை மீண்டும் தந்துவிட்டேன்.
வீட்டிற்கு திரும்பவரும்போது மீண்டும் போட்டுக்கொண்டேன்.
வீட்டிற்கு வந்துபார்த்தால் அக்காவின் கால்கள் கொப்புளித்துவிட்டன.
அம்மா கேட்டபோது தீக்குழிக்கருகிலிருந்த கரியில் கால்வைத்துவிட்டேனென அக்கா சொன்னார்கள்.
அப்போது நான் சிறுவனென்பதால் அக்காவின் பாசம் விளங்கவில்லை.
ஆனால் பின்னர்தான் தெரிந்தது.
கால் கொப்புளித்ததன் காரணம்,
அக்கா வெறுங்கால்களுடன் தார் சாலையில் நடந்ததுதானென்று.
அக்காவோ அண்ணனோ..!
உறவுகளின் பாசம் உன்னதமானது.

- ஃபீனிக்ஸ் பாலா.

தானாகீனா ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார் ­. ஹோட்டலை காலி செய்து விட்டு, கொஞ்சதூரம்...

Posted: 06 Nov 2014 07:30 PM PST

தானாகீனா ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார் ­.
ஹோட்டலை காலி செய்து விட்டு, கொஞ்சதூரம் சென்றதும் தான் நினைவு வந்தது, அவர் தன் குடையை ஹோட்டல் அறையிலேயே ­ மறந்து விட்டு வந்து விட்டார் என்பது....

திரும்பிவந்து பார்க்கும் போது அந்த அறை ஒரு புது மணத் தம்பதிகளால் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தது.
கதவும் சாத்தியிருந்தது ­....

சாவித் துவாரம் வழியாக உள்ளே என்ன பேசுகிறார்கள் என்று கேட்டார் தானாகீனா
கணவன்: அன்பே, இந்த கண்கள் யாருடையவை?
மனைவி: உன்னுடையது தான் அன்பே
கணவன் : இந்த உதடுகள் யாருடையவை?
மனைவி : உன்னுடையது தான் அன்பே
கணவன் : இந்த கன்னம் யாருடையது?
மனைவி : உன்னுடையது தான் அன்பே
தானாகீனா பொறுக்க முடியாமல் வெளியிலிருந்து கத்தினார்.... "அந்த மஞ்சள் கலர் கைப்பிடிபோட்டகுடை மட்டும் என்னுடையது..... ­"

0 comments:

Post a Comment