Tuesday, 17 March 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


#திருக்குறள் குறள் பால்: #அறத்துப்பால். குறள் இயல்: #இல்லறவியல். அதிகாரம்: #ஒப்ப...

Posted: 17 Mar 2015 07:02 PM PDT

#திருக்குறள்
குறள் பால்: #அறத்துப்பால். குறள் இயல்: #இல்லறவியல். அதிகாரம்: #ஒப்புரவறிதல்.

#உரை:
தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்.

#Translation:
The worthy say, when wealth rewards their toil-spent hours,
For uses of beneficence alone 'tis ours.

#Explanation:
All the wealth acquired with perseverance by the worthy is for the exercise of benevolence.

#TRADUIT DU #TAMOUL
Créée par le travail, la richesse de celui qui en est digne, lui est donnée pour faire la charité.

@ Puducherry * புதுச்சேரி * Pondichéry


#திருக்குறள் குறள் பால்: #பொருட்பால். குறள் இயல்: #நட்பியல். அதிகாரம்: #பகைத்திற...

Posted: 17 Mar 2015 06:44 PM PDT

#திருக்குறள்
குறள் பால்: #பொருட்பால். குறள் இயல்: #நட்பியல். அதிகாரம்: #பகைத்திறந்தெரிதல் .

#உரை:
பகை என்று சொல்லப்படும் பண்பு இல்லாத தீமையை ஒருவன் சிறிதும் பொழுது போக்கும் விளையாட்டாகவும் விரும்புதலாகாது.

#Translation:
For Hate, that ill-conditioned thing not e'en in jest.
Let any evil longing rule your breast.

#Explanation:
The evil of hatred is not of a nature to be desired by one even in sport.

#TRADUIT DU #TAMOUL
Ne jamais rechercher, même en plaisantant le mal funeste appelé inimitié.

- Puducherry * புதுச்சேரி * Pondichéry


விபச்சார விடுதிக்குள்ள போயி பாலியல் பலாத்காரம் செய்திருக்காங்க நம்ம கலாச்சார காவ...

Posted: 17 Mar 2015 09:26 AM PDT

விபச்சார விடுதிக்குள்ள
போயி பாலியல்
பலாத்காரம்
செய்திருக்காங்க நம்ம
கலாச்சார காவலர் குரூப்.

மாட்டுக்கு இருக்கும்
மதிப்புகூட
நம் நாட்டு
பெண்களுக்கு இல்லை
போல?


தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் போரில் இறக்கவில்லை..... சேனல் 4 ஊடகவியலாளர் கெலம்...

Posted: 17 Mar 2015 09:02 AM PDT

தமிழீழ தேசிய தலைவர்
பிரபாகரன் போரில்
இறக்கவில்லை.....
சேனல் 4 ஊடகவியலாளர்
கெலம் மேக்ரே அதிர்ச்சி
தகவல்.

இருந்தால் எங்கள்
தலைவன்
இல்லையேல் எங்கள்
இறைவன்.

அழகு தமிழ்நாடு! கங்கைகொண்டசோழபுரம்!

Posted: 17 Mar 2015 04:02 AM PDT

அழகு தமிழ்நாடு! கங்கைகொண்டசோழபுரம்!


சாதிக்க ஆசையா? முதலில் அவமானப் பட பழகிக்கொள்!! @காளிமுத்து

Posted: 17 Mar 2015 02:06 AM PDT

சாதிக்க ஆசையா?
முதலில் அவமானப் பட
பழகிக்கொள்!!

@காளிமுத்து

சந்தோசமாக இருக்கிறோம் என்று பிறரை நம்ப வைப்பதிலேயே கழிந்துவிடுகிறது வாழ்க்கை!!...

Posted: 17 Mar 2015 02:04 AM PDT

சந்தோசமாக
இருக்கிறோம் என்று
பிறரை நம்ப
வைப்பதிலேயே
கழிந்துவிடுகிறது வாழ்க்கை!!

@விவிகா சுரேஷ்

அப்பாவை வாங்க போங்க என்று அழைக்கும் மகள்/மகன் அம்மாவை "வா போ" என்று அழைப்பதில் ஒ...

Posted: 17 Mar 2015 01:43 AM PDT

அப்பாவை வாங்க போங்க
என்று
அழைக்கும் மகள்/மகன்
அம்மாவை "வா போ"
என்று
அழைப்பதில் ஒரு
நெருக்கம்
ஒளிந்துள்ளது.

@செந்தில் ஜி

தாறுமாறான காதல் கடிதங்கள் :- ம் என்ன செய்கிறாய் என்றாய். உன்னைதான் நினைத்துக் க...

Posted: 17 Mar 2015 12:44 AM PDT

தாறுமாறான காதல் கடிதங்கள் :-

ம் என்ன செய்கிறாய் என்றாய். உன்னைதான் நினைத்துக் கொண்டு இருந்தேன் என்றேன். அவ்வளவும் பொய் என்றாய். ஒரு விக்கல் கூட எனக்கு வரவில்லையே! நினைக்கும் போது விக்கல் வரும் என்று யார் சொன்னது? அப்படியென்றால் முழு நாளும் நீ விக்கியே செத்து இருப்பாய் என்றேன். உன்னை விட்டு அவ்வளவு சீக்கிரம் சாக மாட்டேன். நீ வழிசல் கேசு என்று தெரியும். நான் செத்தாலும் எவளையாவது சைட் அடிப்பேடா என்று 32 பல் வரிசை தெரிய சொன்னாய். அப்படியெல்லாம் இல்லை என்று அழகாய் வழிந்தேன்.

என் அப்பாவிற்கு பிறகு என்னை கவர்ந்த ஆண் மகன் நீதான் என்றாய். எதுனா ஏமாத்தினால் அவ்வளவுதான் என்று மிரட்டினாய். ஏமாத்தினால் என்ன பண்ணுவே என்றேன். நேரா கொலைதான் என்றாய். அடிப்பாவி! இந்த காதை திருகறது! தலையில் கொட்டு வைப்பது! செல்லமாய் வலிக்காமல் கழுத்தை நெறிப்பது இப்படியெல்லாம் சின்ன தண்டனைகள் இல்லையா என்றேன். அதுல எல்லாம் நீ பொழைச்சிபே! எனக்கு இல்லைனா எவளுக்கு இல்லை அப்படி பண்ணிடுவேன் என்றாய். இந்த கொலைக்கார காதல் தேவையா என்று சில வாரம் தூக்கமே வரவில்லை.

அப்புறம் ஒருநாள் கொஞ்சம் தைரியம் வரவைத்து சிரித்த வாக்கில் கேட்டேன். ஹேய் அன்னிக்கு நீ சும்மாதானே சொன்னே! இல்லையே நிஜமா தாண்டா என்றாய். உன்னையெல்லாம் பிசாசு என்று கூப்பிடுவது தப்பே இல்லை என்று பயந்த மாதிரி சொன்னேன். இப்போதும் கூட லேசாக கண்ணடித்து மர்டர் கண்ணா என்கிறாய். உன்னை தவிர எவளும் சைட் அடிக்கறது இல்லை நம்பு ப்ளிஸ் என்கிறேன்.

அதெல்லாம் நம்ப முடியாது என்றாய். என்ன செய்தால் நம்பிக்கை வரும் என்று கேட்டேன். வா ஓடி போய் கல்யாணம் பண்ணிக்கலாம் என்றாய். ஏய் எங்கம்மா திட்டும் என்றேன். இந்த ஆம்பளை பசங்க ஏன்டா இப்படி அம்மாவுக்கு நடுங்கறிங்க என்றாய்.

ஏய் நீ காதலியா! இல்லை ரவுடியா! லைட்டா டவுட்டாகீது என்றேன்.

@பா. வெங்கடேசன்


எல்லை தாண்டி வந்தால் தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்லுவோம் - ரணில் விக்ரம சிங்கே ம...

Posted: 17 Mar 2015 12:42 AM PDT

எல்லை தாண்டி வந்தால்
தமிழக மீனவர்களை
சுட்டுக் கொல்லுவோம்
- ரணில் விக்ரம சிங்கே
மீண்டும் பேட்டி

# ரணில் தன்னிடம்
வருத்தம் தெரிவித்தார்
என பாராளுமன்றத்தில்
சொன்ன புளுகு
மூட்டை சுஷ்மா
சுவராஜ் இதற்கு என்ன
சொல்வார்?

@நம்பிக்கை ராஜ்

சிறுவயதில் தாயிடம் நான் உணர்ந்த பாதுகாப்பை, முதுமையில் அவளுக்கு உணர்த்திவிட்டால்...

Posted: 16 Mar 2015 11:14 PM PDT

சிறுவயதில் தாயிடம்
நான் உணர்ந்த
பாதுகாப்பை,
முதுமையில்
அவளுக்கு
உணர்த்திவிட்டால்
போதும், என் மரணம்
மகிழ்ச்சியானதாய் இருக்கும்!

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


சோழப்பேரரசின் வரி விதிப்புகள்: இன்று வருமான வரியே கட்ட மறுக்கிறோம். அக்கால வரி...

Posted: 17 Mar 2015 07:30 AM PDT

சோழப்பேரரசின் வரி விதிப்புகள்:
இன்று வருமான வரியே கட்ட மறுக்கிறோம். அக்கால வரிகளைப் பாருங்கள் மயக்கம் வரலாம்

1. ஊரில் பொதுவாக வைக்கப்பெற்றிருந்த ஓர் எடையைப்
பற்றியவரி (ஊர்க்கழஞ்சு),

2. முருகன் கோயிலுக்காகச் செலுத்திட
வேண்டியவரி (குமர கச்சாணம்)

3. மீன்பிடி உரிமைக்கான வரி (மீன்
பாட்டம்)

4. சிறுவரிகள் (கீழிறைப்பாட்டம்)

5. குளத்து நீரைப் பயன்படுத்து வோருக்கான பாசனவரி (தசபந்தம்)

6. பொன் நாணயம் அரசன்
அச்சடிப்பதற்கான
வரி (மாடைக்கூலி)

7. நாணயத்தின்
பொன்மாற்று அளவை ஆய்வதற்கான
வரி (வண்ணக்கக் கூலி)

8.பொருள்களை விற்பனை செய்வதற்கான
வரி (முத்தாவணம்)

9. மாதம்தோறும் செலுத்த வேண்டிய
வரி (திங்கள் மேரை)

10. நிலத்துக்கான
வரி (ஒருவேலிக்கு இவ்வளவு என
வேலிக்காசு அல்லது வேலிப் பயறு)

11. நாட்டின் நிருவாகச் செலவுக்கான
வரி (நாடாட்சி)

12. கிராம நிருவாகச் செலவுக்கான
வரி (ஊராட்சி)

13. நன்செய் நிலத்திற்கான
நீர்ப்பாசனவரி (வட்டி நாழி)

14.வீட்டுவாசற்படிக்கான
வரி (பிடா நாழி அல்லது புதாநாழி)

15. திருமணம் செய்தால் செலுத்த
வேண்டிய வரி (கண்ணாலக்காணம்),

16. துணி துவைக்கும் கல்லுக்கான
வரி (வண்ணாரப்பாறை)

17.தாழ்த்தப்பட்டோருக்கான வரி (பறைவரி, பள்ளு வரி)

18. மண்பாண்டம் செய்வதற்கான
வரி (குசக்காணம்)

19. தண்ணீர்வரி (நீர்க்கூலி)

20. நெசவாளர் தறிக்குத் தரவேண்டிய
வரி (தறிப்புடவை அல்லது தறிக்கூரை)

21. தரகர்கள் தரவேண்டிய
வரி (தரகுபாட்டம்)

22. பொற்கொல்லருக்-கான வரி (தட்டார்
பாட்டம்)

23. ஆடுகளுக்கானவரி (ஆட்டுவரி)

24. பசு, எருதுகளுக்கான
வரி (நல்லா அல்லது நல்லெருது)

25. நாட்டின் காவலுக்கான
வரி (நாடுகாவல்)

26. ஊடு பயிர் சாகுபடி செய்தால்
வரி (ஊடுபோக்கு)

27. ஆவணப் பதிவுக்கான
வரி (விற்பிடி)

28. வீட்டு மனைக்கான
வரி (வாலக்காணம்)

29. சுங்கவரி (உல்கு)

30. ஓடங்களுக்கான வரி (ஓடக்கூலி)

31. நீதிமன்றவரி (மன்றுபாடு)

32. அரசனுக்குச் சேரவேண்டிய
தனிவரி (மாவிறை)

33. கோயிலில்
வேள்வி நடத்துவதற்கு வரி (தீயெரி)

33. கள் இறக்க வரி (ஈழம் பூட்சி)


தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... 1. "ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த ப...

Posted: 17 Mar 2015 06:30 AM PDT

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்....

1. "ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு..."

தப்புங்க தப்பு,,, ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு... இதாங்க சரி...

2. "படிச்சவன் பாட்டை கெடுத்தான், எழுதுனவன் ஏட்டை கெடுத்தான்...."

இதுவும் தப்பு. சரியானது என்னன்னா ........... படிச்சவன் பாட்டைக் கொடுத்தான் , எழுதுனவன் ஏட்டைக் கொடுத்தான் ....

3. "ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்..."

இது பேரை அல்ல வேரை (மூலிகை வேரை ) ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்.......

4. "நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ...."

சூடு அல்ல சுவடு... சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு.. அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்தது... ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகும்....

5. "அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை புடிப்பான்...."

அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான்.... வள்ளல் ஆனவரை கஞ்சனாக மாற்றி விட்டோம் ... காலப்போக்கில்....

நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற உபயோகிக்கிறோம்...
மாறுவோம்... மாற்றுவோம்...

பிடித்திருந்தால் நண்பர்களுக்கும் பகிரலாமே...

நன்றி : ஜெய் கணேஷ்

பா விவேக்

பார்ப்பதற்கு சாதாரணமாக தெரியும் இப்புகைப்படத்தில் நான்கு உருவங்கள் ஒளிந்துள்ளன....

Posted: 17 Mar 2015 05:30 AM PDT

பார்ப்பதற்கு சாதாரணமாக தெரியும் இப்புகைப்படத்தில் நான்கு உருவங்கள் ஒளிந்துள்ளன.

கலைத்திறன் மற்றும் அறிவுத்திறனை வெளிப்படுத்தும் ஓவியம் + சிற்பம்....

இடம் : சங்ககிரி மலைக்கோட்டை

பா விவேக்


நீதிக்காக தனது கையை வெட்டிக்கொண்ட பொற்கைப் பாண்டியன். ================== பல்வளம்...

Posted: 17 Mar 2015 04:30 AM PDT

நீதிக்காக தனது கையை வெட்டிக்கொண்ட பொற்கைப் பாண்டியன்.
==================
பல்வளம் உடைய நாடு பாண்டிய நாடு.
அந்நாட்டின் தலைநகரம், மதுரை மாநகரம்.
அங்கிருந்து அரசாண்டு வந்தான் பாண்டிய
மரபிலுதித்த அரசனொருவன். அவன் பெயர்
யாது என்பது வெளிப்படவில்லை. ஆயினும்
பொதுமக்கள், அவனை பொற்கைப் பாண்டியன்
என்று காரணப் பெயரிட்டு அழைத்து வந்தனர்.
பொற்கைப் பாண்டியன் அறிவு, அன்பு, பண்பு,
நீதி தவறாதவன். பொய், களவு,
கொலை முதலியவற்றுக்குச் சிறிதும்
இடமளிக்காதவன். குடிமக்களிடத்து மிக்க
பற்று உடையவன். அவர்கள் நன்மையைப் பெரிதும்
விரும்புபவன். அவர்களுடைய எண்ணங்களைத்
தெரிந்துகொள்வதில் மிக்க ஆர்வமுடையவன்.
அதன் பொருட்டு இரவு நேரங்களில் நகர்ச்
சோதனைக்குச் சென்றுவரும் வழக்கத்தையும்
கொண்டிருந்தான்.

ஒரு நாள் இரவு, பொற்கைப் பாண்டியன் சேவகன்
போல மாறுவேடம்
பூண்டு நகர்ச்சோதனை செய்யப் போனான். பெருந்
தெருக்களைச் சுற்றி வந்தான். சிறிய சந்துகளிலும்
நுழைந்து வந்தான். இறுதியில் பார்ப்பனர் ஒரு சேர
வாழும் தெரு ஒன்றுக்குப் போனான். அந்த
தெரு மிகவும் சிறிய தெரு. அதில் ஏறத்தாழ
ஐம்பது வீடுகள் இருந்தன. அந்த வீடுகள்
அனைத்தும் நன்கு மூடப்பட்டு இருந்தன.

ஆளரவமோ, பேச்சொலியோ எதுவுமே சிறிதும்
இல்லாமலும் இருந்தன. தெருவே மிகவும்
அமைதியாய்க் காணப்பட்டது. ஆனால், தெருவின்
இறுதியில் இருந்த ஒரு வீட்டில் மட்டும்
பேச்சொலி கேட்டது.
அந்த வீடு கீரந்தை என்னும் பார்ப்பனன்
ஒருவனுடைய வீடு ஆகும். அவன் மிக வறியவன்.
மனைவி ஒருத்தியைத் தவிர, வேறு எந்தத்
துணையும் இல்லாதவன். அரசன் அந்த
வீட்டை அடைந்து மறைந்து நின்றான்.
உள்ளே நிகழும் பேச்சைக் காது கொடுத்துக்
கேட்டான்.

"கண்ணே! நான் கங்கையாறு சென்று நீராடி,
காசி சென்று வாழ்க்கையை வளமுற நடத்த,
வேண்டும் பொருள் தேடி வருகிறேன். அதுவரை நீ
இங்கேயே இரு!" என்றான் கீரந்தை. "தாங்கள்
சென்று மீளும்வரை நான் ஒருத்தியாய் இந்தக்
காப்பில்லாத வீட்டில் எப்படி இருப்பேன்?
அது காறும் என்னைக் காப்பாற்றுபவர் யார்?"
என்று அச்சம் தோய்ந்த குரலில் கேட்டாள் அவன்
மனைவி.

அதற்கு அவன்,
"நாட்டு மக்களைக் காப்பவன் அரசனே ஆவான்.
அவனது காவலுக்கு முன்னே வேறு காவல்களென்ன
செய்யும்? பயனற்றவையாய் அன்றோ முடியும்?
நமது அரசனும் நாட்டு மக்களின் நலிவு காணப்
பொறுக்க மாட்டான். ஆகவே, அவன் உறுதியாக
உன்னைக் காப்பான்." என்று மறுமொழி கூறினான்.
காது கொடுத்து ஒற்றுக் கேட்டிருந்த அரசன்
களிப்புற்றான், கூத்தாடினான்,

அரண்மனை சென்று நன்கு தூங்கினான். மறுநாள்
பொழுது புலர்ந்தது.
அரசன் படுக்கை விட்டு எழுந்தான். முதல் நாள்
இரவு நிகழ்ந்த
நிகழ்ச்சி அவனது நினைவுக்கு வந்தது. பொருள்
தேடி வரச் சென்ற
கீரந்தை திரும்பி வரும்வரை அவனுடைய
மனைவியைக் காப்பாற்ற வேண்டும்
என்று எண்ணினான். அவளுக்கு மட்டும் உணவுப்
பொருள்களைக் கொடுத்தனுப்பலாம் என அவன்
ஒரு கணம் எண்ணினான். மறுகணம் அது தவறு.
பலரும் பலவாறு கருத இடமளிக்கும்
என்று கருதினான். முடிவில் அந்தத் தெருவில் உள்ள
அனைவருக்குமே உணவுப்
பொருள்களை அளிக்குமாறு அமைச்சனுக்கு ஆணையிட்டான்.

அதன்படி நாள்தோறும் நிகழ்ந்துவந்தது.
அதோடு அரசனும் நாள்தோறும் நள்ளிரவில்
மாறுவேடம் பூண்டு நகர்க் காவல்
சென்று கீரந்தை மனைவிக்கு யாதோரு கேடும்
நிகழாதவாறு காத்து வந்தான். இதனை அந்த ஏழைப்
பார்ப்பனன் மனைவி அறியாள். நாட்கள் பல
சென்றன.
ஒரு நாள் இரவு அந்த வீட்டில் ஆண் குரல்
கேட்டது. காவலுக்குச் சென்றிருந்த அரசன்
இதனைக் கேட்டு திடுக்கிட்டான்; முகவும்
வருந்தினான். உள்ளே இருப்பவன் கணவனோ,
வேறு யாரோ என்ற ஐயம்
அரசனுக்கு உண்டாயிற்று.

அந்த ஐயத்தைப்
போக்கிக் கொள்ளும் பொருட்டு, அந்த
பார்ப்பனனுடைய வீட்டுக் கதவினைத்
தட்டு ஒலி செய்தான். பொருள் ஈட்டச் சென்றிருந்த
பார்ப்பனன் அன்று பகலே வந்துவிட்டான்.
அதனை அறியான் அரசன்.
கதவு தட்டப்படும் ஒலியினைக் கேட்ட பார்ப்பனன்,
வெகுண்டெழுந்து, "யாரது?" என்று அதட்டிய
குரலில் கேட்டான். அவன் மனம் தீய
எண்ணங்களை எண்ணியது. அதை அறிந்த அவன்
மனைவி செய்வது இன்னதென்று அறியாது திகைத்தாள்.

அவனது தீய எண்ணத்தைத் தெளிவிக்கும்
வழிவகை தெரியாது தவித்தாள்; "அரசன் காப்பான்
என்று கூறினாரே அன்று. அந்த அரசன்
இன்று எங்கே?" என்று அவள் கதறினாள்.
நிலையறிந்தான் அரசன்; நெஞ்சம் துணுக்குற்றான்;
திகைப்படைந்தான். "ஒரு வீட்டில் மட்டும்
தட்டினால், தட்டியவன் யாரோ என்ற ஐயம் எழுமே"
என்று கருதினான்; சிந்தித்தான்; தெளிவு பிறந்தது.
உடனே, அந்தத் தெருவில் இருந்த
எல்லா வீடுகளையும் தட்டி,
ஒலி எழுப்பிக்கொண்டே ஓடி,
அரண்மனை சேர்ந்தான். தெருப் பார்ப்பனர்
அனைவரும் கதவைத்
திறந்து கொண்டு வெளியே வந்தனர்; "கதவைத்
தட்டியவர் யார்?" என ஒருவருக்கொருவர் கேட்டுக்
கொண்டனர். ஒருவராலும் இன்னார் எனக்
கண்டு பிடிக்க முடியவில்லை. கள்வனாய்த்தான்
இருக்க வேண்டும் என்று கருதினர். "பாண்டிய
அரசன் ஆட்சியிலும் களவு நிகழ்வதா?" எனக்
கேட்டு வருத்தப்பட்டனர்.
மறுநாள் பொழுது புலர்ந்தது.

பார்ப்பனர்
அனைவரும் அரண்மனை சென்றனர்; அரசனைக்
கண்டனர். இரவு நடந்ததை எடுத்துரைத்து,
முறை வேண்டினர். அரசன் வருந்தினான்;
அமைச்சரை அழைத்து பார்ப்பனருடைய
முறையீட்டை கூறினான்.

"அவ்வாறு கதவைத்
தட்டியவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?"
என்று கேட்டான்.
அமைச்சர், "தட்டியவனைக் கண்டு பிடித்து,
அவனை விசாரித்த பிறகல்லவா, அதற்கான
தண்டனையைப் பற்றி எண்ண வேண்டும்?" என்றார்.

"அதைப்பற்றிய அக்கறை உமக்கு வேண்டாம்.

தவறிழைத்தவனுக்குக் கொடுக்கக் கூடிய
தண்டனை என்ன? அதை மட்டும் கூறும்!"
என்றான்.
அதற்கு அமைச்சர், "குற்றம் புரிந்தவன்
கையை வெட்டி எறிதலே தக்க தண்டனை ஆகும்!"
என்றார். உடனே அரசன் உடைவாளை உருவினான்.
யாரையோ வெட்டப் போகிறான் அரசன்
என்று எல்லோரும் உன்னிப்பாக கவனித்தனர்.

ஆனால், அரசன் தனது வலக் கையைத்
தானே வெட்டி எறிந்தான்! குருதி பெருகி விழிந்தது!
பார்ப்பனர் பயந்தனர்; நடுங்கினர். "அரசே! தாங்கள்
தங்கள் கையை வெட்டிக் கொள்ளக் காரணம்
என்ன?" என்று கேட்டனர். அரசன்
நடந்தவற்றை விரிவாக விளக்கிக் கூறினான்.

மன்னன் செயல் அறிந்து வியந்தனர் மக்கள்;
"இவனன்றோ நீதி நெறி தவறாத நேர்மை மிக்க
அரசன்!" என்று கூறி மகிழ்ந்தனர். அன்று முதல்,
பொன்னால் கையொன்று செய்து பொருத்திப்
பொலிவுறச் செய்து, பொற்கைப் பாண்டியன் என
அழைத்து வரலாயினர்.


புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசல் குடைவரை ஓவியம். இது 7-ஆம் நூற்றாண்ட...

Posted: 17 Mar 2015 04:02 AM PDT

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசல் குடைவரை ஓவியம். இது 7-ஆம் நூற்றாண்டில் தீட்டியது. இதில் பயன்படுத்தப்பட்ட நிறங்கள் தாவரங்களில் இருந்து பெற்றவை

பா விவேக்


குரு கருவூர்த்தேவரும் , ஸ்ரீராஜராஜ சோழனும்...

Posted: 17 Mar 2015 01:30 AM PDT

குரு கருவூர்த்தேவரும் , ஸ்ரீராஜராஜ சோழனும்...


நம் பெருமைகள்: ஆமைகள் இனப்பெருக்கத்துக்காக, கடல் நீரோட்டங்களைப் பயன்படுத்தி 150...

Posted: 16 Mar 2015 11:33 PM PDT

நம் பெருமைகள்:

ஆமைகள் இனப்பெருக்கத்துக்காக, கடல் நீரோட்டங்களைப் பயன்படுத்தி 150, 180 நாட்கள் பயணிக்கின்றன. இதை அவதானித்த தமிழர்கள், ஆமைகளைப் பின்பற்றி கடல் நீரோட்டங்களைக் கண்டறிந்துமத்திய தரைக்கடல், தென் கிழக்கு ஆசியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கடல் வழிப் பயணம் மேற்கொண்டனர்.

முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் என சோழர் காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்த 20 ஆயிரம் தீவுகளில் 9,000 தீவுகள் நீரில் மூழ்கி விட்டன. இவற்றை சோழர்கள் எப்படிக் கணக்கிட்டார்கள் என்பது வியப்புக்கும் ஆய்வுக்கும் உரியது. கப்பல் கட்டுமானத்துக்கு மற்ற நாட்டவர் 2 மரங்களைப் பயன்படுத்த, தமிழர்கள் 20 வகையான மரங்களைப் பயன்படுத்தியுள்ளனர். "பாறைகளில் மோதினால் உடையாமல் இருக்க கப்பலின் அடிப்பகுதியில் கழட்டிவிடும் படியான கட்டமைப்பைக் கொண்ட தொழில்நுட்பத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே தமிழர்கள் பின்பற்றி வந்துள்ளனர்". பிற்காலத்தில் தான் தென்னிந்தியர்களிடம் இருந்து ஐரோப்பியர்கள் கற்றுக் கொண்டனர்.

தெப்பம் என்ற சொல், பல்வேறு மொழிகளில் படகைக் குறிப்பதாகவே உள்ளது.

கிரேக்கத்தில் பாண்டியன்-1, 2 என்ற மன்னர்கள் ஆண்டுள்ளனர். தகடூரில் இரும்பு சார்ந்த நாகரிகம் இருந்துள்ளது. அப்பகுதியை ஆண்டவன் அதியமான். அவன் மகன் பெயர் எழினி. துருக்கியில் இரும்பு சார்ந்த பகுதி இன்றும் அதியமான் என அழைக்கப்படுகிறது. இரும்பு உருக்கும் ஆலைப் பகுதி எழினி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
பிரேசிலில் உறை, வசி, ஊர் என அழைக்கப்படும் பகுதிகள் உள்ளன. ஜப்பானில் குரில் என்ற பகுதியில் 'மருதை' என்ற ஊர் உள்ளது. "சீனாவில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில்" அமைந்துள்ளன. பாண்டியன் என்ற சொல்லுக்கு சீனத்தில் வேர்ச்சொல் இல்லை. ஆகவே இது தமிழகம் சார்ந்த பெயர் என அறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கொரியாவின் அரசியாக பாண்டிய இளவரசி ஒருவர் இருந்துள்ளார். கி.பி. 45-இல் இந்தோனேசியாவை ஸ்ரீமாறன் என்ற தமிழ் மன்னன் ஆண்டுள்ளான். ஆஸ்திரேலியாவில், குமரி, நான்மாடல், துங்காவி என்ற பெயரில் ஊர்கள் உள்ளன. பெரு, சிலியில் நெடுங்கற்கள் நிறைந்த பகுதிகள் வால்பாறை என அழைக்கப்படுகின்றன.

பழந் தமிழரின் கடல் பயணங்களை இவை உறுதிப்படுத்துகின்றன. ஆமைகளே தமிழரின் கடலோடும் வாழ்வுக்கு பெரும் உதவிகரமாக இருந்திருக்கின்றன. பாண்டியர்கள் காளை, மீன் ஆகியவற்றோடு ஆமை இலச்சினைகளையும் பயன்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமைச் சிற்பங்கள் உள்ளன.
கிரேக்க, பாண்டிய நாணயங்களில் ஆமை உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தமிழக பெண்கள் மகப்பேறுக்காக தாய் வீடு செல்வர். இந்த வழக்கம் விலங்குகளில் ஆமைக்கு மட்டும் உண்டு. இனப் பெருக்கத்துக்காக ஆமைகள் தாங்கள் பிறந்த பகுதிக்குச் செல்கின்றன. தமிழகத்தில் மட்டும் இந்த பண்பாட்டுக் கூறு உள்ளது ஆராயத்தக்கது. பிராங்ளின் ஜோசப், கொலம்பஸ் ஆகியோர் கண்டறிந்த கடல் வழித்தடங்களும், ஆமைகளின் கடல்வழித்தடமும் ஒன்றுதான். ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் கடலோரப் பகுதிகளே பழங்காலங்களில் துறைமுகமாகச் செயல்பட்டுள்ளன.

பர்மாவில் இருந்து தேக்கு மரங்களை வெட்டி கடலில் போட்டால் அவை தாமாகவே தனுஷ்கோடி வந்தடைந்துள்ளன. ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்தகடல் நீரோட்டத்தைத் தமிழன் பயன்படுத்தியுள்ளான். கரையோரப் பகுதி வாழ்வியல்கள் இன்னும் ஆழ்ந்த ஆய்வுக்கு உள்படுத்தப்படவேண்டும்

வி. ராஜமருதவேல்


Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


Ennama Ipdi panrerngaley ma...

Posted: 17 Mar 2015 08:48 AM PDT

Ennama Ipdi panrerngaley ma...


பிறருடைய உத்தரவுக்குப் பயந்து பயந்து நடப்பவர்கள் நாளடைவில் சிந்திக்கும் சக்தியை...

Posted: 17 Mar 2015 08:37 AM PDT

பிறருடைய உத்தரவுக்குப்
பயந்து பயந்து நடப்பவர்கள்
நாளடைவில் சிந்திக்கும்
சக்தியை இழந்து
விடுகிறார்கள்.

உங்களுக்குள்
இருப்பதை உங்கள்
உழைப்பாலே வெளிக்கொணர
முயலுங்கள்.
பிறரைப்
பார்த்து நடிக்காதீர்கள்.
பிறரிடம் காணப்படும் நல்ல
பண்புகளைக் கற்றுக்
கொள்ளுங்கள்.

ஸ்வாமி விவேகானந்தர்.

:)

Posted: 17 Mar 2015 07:36 AM PDT

:)


Quarter Finalz.. Gapdain version Juz for fun :p

Posted: 17 Mar 2015 06:59 AM PDT

Quarter Finalz.. Gapdain version

Juz for fun :p


என்னை ஏன் அழகா படைக்கலேன்னு கடவுளை கேக்குற நாம், என்னை ஏன் நல்லவனா படைக்கலேன்னு...

Posted: 17 Mar 2015 06:01 AM PDT

என்னை ஏன் அழகா படைக்கலேன்னு கடவுளை கேக்குற நாம், என்னை ஏன் நல்லவனா படைக்கலேன்னு கேக்குறதில்ல.

டி.வி 'யை போல நியூஸ் பேப்பர் 'லயும் விளம்பரங்களுக்கு நடுவே தான் செய்திகள் படிக்...

Posted: 17 Mar 2015 03:35 AM PDT

டி.வி 'யை போல
நியூஸ் பேப்பர் 'லயும்
விளம்பரங்களுக்கு நடுவே தான்
செய்திகள் படிக்க வேண்டியுள்ளது...
என்னத்த சொல்ல...

Just in : #Thala #Ajith underwent septoplasty & functional endoscopic sinus surg...

Posted: 17 Mar 2015 03:25 AM PDT

Just in : #Thala #Ajith underwent septoplasty & functional endoscopic sinus surgery morning.
Treated by ENT Surgeon RajaShekar.
Ajith sir is recovering well

Good morning frnds

Posted: 16 Mar 2015 06:43 PM PDT

Good morning frnds


ஒரு கஸ்டமர் முடி வெட்டிக்கவும் தன்னோட மீசையை ட்ரிம் பண்ணிக்கவும் ஒரு சலூன் கடைக்...

Posted: 16 Mar 2015 10:21 AM PDT

ஒரு கஸ்டமர் முடி வெட்டிக்கவும் தன்னோட மீசையை ட்ரிம் பண்ணிக்கவும் ஒரு சலூன் கடைக்குப் போனாரு. அங்க இருந்த முடி திருத்துபவர் அவரோட பேசிகிட்டே தன்னோட வேலையையும் பார்க்கறாரு.

அப்ப அவங்க பேச்சு கடவுள் இருக்கிறாரா அப்படிங்கற சப்ஜெக்ட்குள்ள போச்சு.

அப்ப அந்த முடி திருத்துபவர்,
"கடவுள் இருக்கிறார்னு சொல்றத நான் நம்பவில்லை.."

"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?"

"ஓகே...நீங்க இப்ப நம்ம தெருவுல நடந்து பாருங்க.......

அப்ப உங்களுக்கே தெரியும் கடவுள் இல்லைனு. கடவுள் இருந்திருந்தா ஏன் இத்தனை அனாதைக் குழந்தைகள்?
ஏன் இத்தனை நோயாளிகள்?

கடவுள் இருந்திருந்தால் நோயும் இருக்காது வலியும் இருக்காது. கடவுள் அன்பு செலுத்துவதாக இருந்தால் எதற்காக இதனை அனுமதிக்க வேண்டும்?"

இதற்கு பதில் சொன்னால் அது பெரிய வாக்கு வாதத்திற்கு வழி வகுக்கும் என்று அந்த கஸ்டமர் பதில் எதுவும் சொல்லாமல் கடையை விட்டு வெளியேறுகிறார்.

அவர் கடையை விட்டு வெளியே வந்த சமயத்தில் மிக நீளமான தாடியுடனும் நீளமான, அழுக்கான தலை முடியுடனும் ஒருவன் வருவதைப் பார்த்துவிட்டு மீண்டும் கடைக்குள் சென்று அந்த முடி திருத்துபவரிடம்,

"உங்களுக்கு ஒன்று தெரியுமா?
முடி திருத்துபவர் கூட இந்த உலகத்தில் இல்லை"

அதிர்ச்சியான முடி திருத்துபவர்,
"அது எப்படி சொல்வீர்கள்? நான் இங்குதான் உள்ளேன். உங்களுக்காக உங்களை அழகுபடுத்துவதற்காக நான் இருக்கிறேன்."

"இல்லை...........அப்படி முடி திருத்துபவர் என்பவர் இருந்திருந்தால் இப்படி நீளமான முடியுடனும் ட்ரிம் செய்யப்படாத தாடியுடனும் இவனைப் போல ஒருவன் இந்த ஊரில் இருக்க மாட்டான்."

முடி திருத்துபவர் பதிலுக்கு.. "ஆஹா..,நாங்கள் இருக்கிறோம். ஆனால் எங்களிடம் வராமல் ஒருவன் இருந்தால் இப்படித்தான் இருப்பான். அதற்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும்?"

"மிகச் சரியாகச் சொன்னீர்கள். அதே போலத்தான் கடவுள் என்பவர் இருக்கிறார். மக்கள் அவனைச் சரணடையாமல் கடவுள் இல்லை என்று சொன்னால் என்ன அர்த்தம்?"

இந்தக் கேள்வியில் முடி திருத்துபவர் வாயடைத்துப் போனார்.

"கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா.........

கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும்

எனக்கு
"குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா......."

ஒவ்வொரு வரும் படித்து ஷேர் செய்ய வேண்டிய செய்தி இது.

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


மிருகங்கள் கூட பசிக்கும்போது மட்டுமே கொல்கின்றன... மனிதன் மட்டும்....? Even Bea...

Posted: 17 Mar 2015 09:45 AM PDT

மிருகங்கள் கூட பசிக்கும்போது மட்டுமே கொல்கின்றன... மனிதன் மட்டும்....?

Even Beasts Kill Only When They Are Hungry..


அழகு... பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)

Posted: 17 Mar 2015 09:40 AM PDT

அழகு...

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)


:) Relaxplzz

Posted: 17 Mar 2015 09:30 AM PDT

ஓ காட்..!!! சீக்கிரமே தூங்க சொல்றாங்களே..!!! ;-)

Posted: 17 Mar 2015 09:23 AM PDT

ஓ காட்..!!! சீக்கிரமே தூங்க சொல்றாங்களே..!!! ;-)


விமானத்தில் பெண் ஒருவள் ஒரு ஆபிரிக்கரின் அருகில் அமர்ந்திருந்தாள். இனத்துவேசியான...

Posted: 17 Mar 2015 09:10 AM PDT

விமானத்தில் பெண் ஒருவள் ஒரு ஆபிரிக்கரின் அருகில் அமர்ந்திருந்தாள். இனத்துவேசியான அந்தப் பெண் விமானப் பணிப்பெண்ணை அழைத்து 'நீக்ரோ'வின் அருகில் தன்னால் தொடர்ந்தும் அமர முடியாது என்றும், தனக்குப் பிரிதொரு இடம் ஒதுக்கித் தருமாறும் கேட்டுக் கொண்டாள்.

ஆனால், விமானம் முற்றிலுமாக நிரம்பி விட்டது என்றும், முதல் வகுப்பில் இடம் இருந்தால் ஒதுக்கித்தருவதாகவும் சொல்லிவிட்டுச் சென்றாள் பணிப்பெண். இந்நிகழ்வை வெறுப்போடு பார்த்துக் கொண்டிருந்த பயணிகள், குறித்த பெண்ணின் பண்பாடற்ற நடத்தையை மாத்திரமன்றி, போதாக்குறைக்கு முதல் வகுப்பில் பயணம் செய்யப்போவதை இட்டும் கடிந்து கொண்டனர்.

அந்த அப்பாவி ஆபிரிக்கரோ நடக்கும் நிகழ்வால் அதிர்வுற்றிருப்பினும் அமைதியாக இருப்பதற்கு முடிவு செய்து கொண்டார். பெண்ணோ முதல் வகுப்புக்கு செல்லப்போகும் மகிழ்ச்சியில் பணிப்பெண்ணின் வருகையை எத்ர்பார்த்திருந்தாள்.

சில நிமிடங்களுக்குப் பின் திரும்பிய பணிப்பெண் குறித்த பெண்ணிடம் மன்னிப்புக் கேட்டவளாக, "முதல் வகுப்பில் ஒரு இடம் உள்ளது, இந்த விபரத்தை அறிந்து கொள்வதற்கு சற்று நேரம் செலவாகியது, அதன் பிறகு இடமாற்றத்திற்கு விமானியிடம் அனுமதி பெறவேண்டியிருந்தது, விமானியும் "எமது விமானத்தில் எந்த ஒருவரும் தொந்தரவு தரும் ஒருவரின் அருகில் அமர வேண்டிய கட்டாயமில்லை" என்று கூறி விட்டு இடமாற்றத்திற்கு அனுமதி தந்தார்." என்று கூறி முடித்தாள்.

சக பயணிகளுக்கு அங்கு நடப்பவற்றை உண்மையில் நம்ப முடியவில்லை. குறித்த பெண்ணோ இறுமாப்பில் ஒரு அசட்டுச் சிரிப்போடு முதல் வகுப்பிற்குச் செல்வதற்காக தனது இடத்தை விட்டு எழத் தயாரானாள்.

சரியாக அச்சமயம் பணிப்பெண் நீக்ரோ மனிதனைப் பார்த்து, சார், தங்களுக்காக முதல் வகுப்பில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்குச் செல்வதற்காக தயாராகுங்கள். விமானியவர்கள், எமது நிறுவனத்தின் சார்பாக உங்களிடமிருந்து, இவ்வாறான விறும்பத்தகாத நிகழ்வுக்குக் காரணமான ஒருவரின் அருகில் அமர நிர்ப்பந்திக்கப் பட்டமைக்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றார்." என்று கூறி அந்த மனிதரிடம் தன்னைப் பின்தொடருமாக கேட்டுக் கொண்டாள். குறித்த பெண்ணோ அசடுவழிய பணிப்பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தாள். சக பயணிகள் பிரச்சிணையை சமயோசிதமாக, அழகிய முறையில் தீர்த்து வைத்த பணிப்பெண்ணைப் பாராட்டினர்.

அந்த வருடம் குறித்த பணிப்பெண்ணும். தலைமை விமானியும் நிறுவனத்தின் அதியுயர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் கீழ் வரும் வாசகம் நிறுவனத்தின் அணைத்து அலுவலகங்களுக்கும் ஊளியர்களின் பார்வைக்காகவென்று அனுப்பி வைக்கப்பட்டது.

மனிதர்கள் அவர்களுக்கு என்ன சொன்னீர்க்கள் என்பதை மறந்து விடுவார்கள், என்ன செய்தீர்கள் என்பதையும் மறந்து விடுவார்கள், ஆனால் எவற்றை அவர்களுடைய உள்ளங்களில் பதித்துவிட்டீர்களோ அவற்றை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்....!

Relaxplzz

யாராவது இருக்காங்களா இந்த மாதிரி இப்போ???? பெருந்தலைவர் காமராஜர் தமிழக முதல்வரா...

Posted: 17 Mar 2015 09:00 AM PDT

யாராவது இருக்காங்களா இந்த மாதிரி இப்போ????

பெருந்தலைவர் காமராஜர் தமிழக முதல்வராய் பதவி வகித்திருந்த சமயம், ஊரிலிருந்து அவரது தங்கை நாகம்மையிட்மிருந்து ஒரு கடிதம் வந்தது, அதில், "அண்ணே! எனக்கு உடம்பு சரியில்லை, மருத்துவம் பார்க்க பெரிய டாக்டரிடம் போக வேண்டும், அதற்கு நிறைய பணம் வேண்டும் அனுப்பி வையுங்கள் " என்று எழுதி இருந்தார்கள்.

இதைப் படித்த காமராஜருக்கு கோபம் வந்து விட்டது, உடனே அவர் 20 ரூபாய் பணத்தை மட்டும் மணி ஆர்டரில் அனுப்பிவிட்டு கீழ் கண்டவாறு ஒரு கடிதத்தையும் எழுதி அனுப்பினார்.

"அன்பு நாகம்மை நீ பெரிய டாக்டரிடம் எல்லாம் போக வேண்டாம்! மதுரையிலேயே அரசாங்க ஆஸ்பத்திரி இருக்கு. அங்கெ போனால் இலவச வைத்தியம் கிடைக்கும். உன் கை செலவுக்கு 20 ரூபாய் மட்டும் அனுப்பி இருக்கிறேன். இதற்கு மேல் என்னிடம் எதையும் எதிர்பார்க்காதே"

இந்த காமராஜர் ஆட்சி......காமராஜர் ஆட்சி......அப்படின்னு சொல்றாங்களே அதாங்க இது.....
இப்போ யாராச்சும் உண்டா? இந்த மாதிரி...!!!!!

Relaxplzz


ஒரு சோற்றுப் பருக்கையின் மதிப்பு சிதற விட்ட நமக்குத் தெரியாது. அதை எடுத்துச் செ...

Posted: 17 Mar 2015 08:50 AM PDT

ஒரு சோற்றுப் பருக்கையின் மதிப்பு
சிதற விட்ட நமக்குத் தெரியாது.
அதை எடுத்துச் செல்லும்
எறும்புக்குத் தான் தெரியும்.


கிளி இனமே அழிந்து விடும் என அஞ்சும் சூழ்நிலையில் இவ்வளவு கிளிகளை ஒன்றாக பார்ப்பத...

Posted: 17 Mar 2015 08:40 AM PDT

கிளி இனமே அழிந்து விடும் என அஞ்சும் சூழ்நிலையில் இவ்வளவு கிளிகளை ஒன்றாக பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது

பிடித்திருந்தால் லைக் பண்ணவும் (y)


:) Relaxplzz

Posted: 17 Mar 2015 08:30 AM PDT

:P Relaxplzz

Posted: 17 Mar 2015 08:20 AM PDT

குட்டிக்கதை: நர்சரி பள்ளி ஒன்றின் உணவறையில் ஒரு கூடை நிறைய ஆப்பிள்கள் வைக்கப்ப...

Posted: 17 Mar 2015 08:00 AM PDT

குட்டிக்கதை:

நர்சரி பள்ளி ஒன்றின் உணவறையில் ஒரு கூடை நிறைய ஆப்பிள்கள் வைக்கப்பட்டிருந்தன.
அந்தக் கூடையின் மேல், "ஒன்றுக்கு மேல் எடுக்காதீர்கள்;
கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்" என எழுதி இருந்தது.

சற்று தொலைவில் ஒரு பெட்டி நிறைய சாக்லேட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
அந்தச் சாக்லேட் பெட்டியின் மீது ஒரு குழந்தை பின்வருமாறு எழுதியது:
'எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள்; கடவுள், ஆப்பிளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்!'

Relaxplzz


வீரம் என்பது எதிரியை எவ்வளவு சீக்கிரத்தில் தாக்குகிறாய் என்பதில் இல்லை.. வீரம்...

Posted: 17 Mar 2015 07:50 AM PDT

வீரம் என்பது எதிரியை எவ்வளவு சீக்கிரத்தில் தாக்குகிறாய் என்பதில் இல்லை..

வீரம் என்பது எதிரியை எவ்வளவு சீக்கிரத்தில் மன்னிக்கிறாய் என்பதில்
இருக்கிறது..


பிறந்து சில நொடிகளே ஆன குட்டி யானை!!! பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)

Posted: 17 Mar 2015 07:40 AM PDT

பிறந்து சில நொடிகளே ஆன குட்டி யானை!!!

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)


சத்தியராஜ் - கவுண்டமணி காம்பினேஷன் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 17 Mar 2015 07:40 AM PDT

சத்தியராஜ் - கவுண்டமணி காம்பினேஷன் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 17 Mar 2015 07:30 AM PDT

:D Relaxplzz

Posted: 17 Mar 2015 07:20 AM PDT

“உங்க அப்பாவுக்கு எத்தனை வயது?” “என் வயதுதான்” “அதெப்படி?” “”நான் பிறந்தப்பதானே...

Posted: 17 Mar 2015 07:10 AM PDT

"உங்க அப்பாவுக்கு எத்தனை வயது?"
"என் வயதுதான்"
"அதெப்படி?"
""நான் பிறந்தப்பதானே அவர் அப்பா ஆனாரு.."

####

மனைவி: இன்னைக்கு வெயில் ரொம்ப அதிகமா இருக்கு, நீங்க ஆபீஸ் போக வேண்டாங்க!
கணவன்: என்னை நம்பு செல்லம்... சத்தியமா எனக்கு வத்தல் போடத் தெரியாது!

####

மன்னா, உங்களை போர்க்குற்றத்துல விசாரிக்கப் போறாங்களாம்..!
அட, நான் பண்ணினது ஒரே ஒரு போர்..... அதுலயும் பாதியிலேயே
ஓடி வந்துட்டேன், இதுல போய் என்னய்யா குற்றம் கண்டு பிடிச்சாங்க..?

####

மூனு வேளையும் உங்க வீட்டுல உப்புமாதான் செய்யறாங்கங்கிறது எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சா?
ஆமா, இதப் பாருங்க டாக்டர் மருந்து சீட்டுல, உப்புமாவுக்கு முன், உப்புமாவுக்குப் பின் அப்புடீன்னு எழுதிக் கொடுத்திருக்கிறதை!

#####

தலைவர் ஸ்டேஜூக்கு வந்த பிறகும் மூடநம்பிக்கை
ஒழிப்பு போராட்டத்தை ஆரம்பிக்காம இருக்காரே, ஏன்?
ராகு காலம் முடியட்டும்னு வெயிட் பண்றாராம்..!

#####

"ஏம்பா நியூ காலேஜ் கட்டி எத்தன வருஷம் ஆச்சு ? "
1951 கட்னது , 63 வருஷம் ஆச்சு , ஏன் கேட்குற ?
" 63 வருஷம் ஆச்சே அப்புறம் ஏன் இன்னும் நியூ காலேஜ்ன்னு சொல்றாக ...".

####

ரமா, சீக்கிரம் ஓடி வா…சாம்பார்ல பல்லி
விழுந்துடிச்சி…!
ஐய்யய்யோ….இந்த நேரம் பார்த்து உங்க அம்மா
வேற ஊரிலே இல்லையே…!

####

ஓர் ஆண் திட்டுவதை ஒரு பெண் அமைதியாக
பொறுமையாகச் சிரித்துக்கொண்டே கேட்டால்…
அது கஸ்டமர் கேர் மட்டும்தான்…!
####
"டாக்டர் நீங்க சொன்ன மாதிரி..ஒரு மாசமா நாள் தோறும் விளையாடியும் எடை குறையல"!!!...
"என்ன விளையாடினீங்க"??..
"சீட்டாட்டம்தான்"!!!..

#####

உன் மனைவிக்கும்
உங்கம்மாவுக்கும் சண்டை வந்தா
நீயும் உங்கப்பாவும் எந்த பக்கம்
இருப்பீங்க ?
நான் வாசல் பக்கமா
எங்கப்பா கொல்லைப் பக்கமா
நின்னுக்குவோம்.

Relaxplzz

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் வியட்நாம் போரின் போது காணாமல் போன ஒரு தந்தையும் அவர...

Posted: 17 Mar 2015 07:00 AM PDT

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் வியட்நாம் போரின் போது காணாமல் போன ஒரு தந்தையும் அவரது மகனும், அங்கு ஒரு காட்டுப் பிரதேசத்தில் வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது 82 வயதாகும் ஹோ வான் தான் மற்றும் அவரது மகன் ஹோ வான் லாங் (41), ஆகிய இருவரும் வியட்நாம் போரின் போது ஒரு குண்டுத் தாக்குதலில் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டதை அடுத்து தாங்கள் வசித்து வந்த கிராமத்தை விட்டு வெளியே தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது.

வியட்நாமின் மத்திய பகுதியில் இருக்கும் குவாங் இங்காய் மாகாணத்தில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் அப்பகுதிவாசிகள் சுள்ளி சேகரிக்கச் சென்றிருந்தபோது, இவர்கள் இருவரையும் கண்டனர்.
பழம் மற்றும் கிழங்குகளை சாப்பிட்டு இந்த இருவரும் உயிருடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் சோளமும் பயிரிட்டனராம்.

தரை மட்டத்திலிருந்து சுமார் ஐந்து மீட்டர் உயரத்தில் ஒரு மரக்குடிசையைக் கட்டி, வெளியுலகத் தொடர்பே இல்லாமல் அவர்கள் வாழ்ந்து வந்திருக்கின்றனர். தந்தைக்கு சிறுபான்மை மொழியான கோர் மொழி கொஞ்சம் பேசத் தெரியும். மகனுக்கோ அதில் ஒரு சில வார்த்தைகள் மட்டுமே பேச முடியும்.

Relaxplzz


சிறுவர்களுக்கான மாறு வேட போட்டி மட்டும் இல்லையெனில் , இந்நேரம் பாரதியாரை மறந்திர...

Posted: 17 Mar 2015 06:50 AM PDT

சிறுவர்களுக்கான மாறு வேட போட்டி மட்டும் இல்லையெனில் , இந்நேரம் பாரதியாரை மறந்திருப்போம்.

- Kalimuthu


குல்பி பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)

Posted: 17 Mar 2015 06:40 AM PDT

குல்பி பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)


:) Relaxplzz

Posted: 17 Mar 2015 06:30 AM PDT

டாக்டர் தண்ணிய Filter பண்ணி குடிக்க சொல்லிருக்காரு :P :P

Posted: 17 Mar 2015 06:20 AM PDT

டாக்டர் தண்ணிய Filter பண்ணி குடிக்க சொல்லிருக்காரு :P :P


பென்சில்: என்னை மன்னிக்க வேண்டும். ரப்பர்: எதற்காக மன்னிப்பு? பென்சில்: நான் த...

Posted: 17 Mar 2015 06:10 AM PDT

பென்சில்:
என்னை மன்னிக்க வேண்டும்.

ரப்பர்:
எதற்காக மன்னிப்பு?

பென்சில்:
நான் தவறு செய்யும் போதெல்லாம் நீ சரி செய்கிறாய். ஆனால் ஒவ்வொரு முறையும் நீ தேய்ந்து போகிறாய். என்னால் தானே உனக்கு அந்த பாதிப்பு?

ரப்பர்:
நீ தவறு செய்யும்போது சரி செய்வதற்க படைக்கப் பட்டிருக்கிறேன். என் பணியை நான் செய்கிறேன். அதில் எனக்குப் பூரண மகிழ்ச்சியே. எனக்குத் தெரியும், நான் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து ஒரு நாள் இல்லாமல் போய் விடுவேன். அதன் பின் உனக்கு ஒரு புதிய ரப்பர் கிடைக்கும். இதுதான் வாழ்க்கை ..

நம்மில் சிலர், பலருக்கு ரப்பராக இருக்கிறோம், வெளியே தெரியாமல்...!

Relaxplzz

கிராமங்களை நோக்கித் தேடுங்கள். கிரிக்கெட்டை தாண்டி ஏனைய விளையாட்டுகள் தெரிந்த அத...

Posted: 17 Mar 2015 06:00 AM PDT

கிராமங்களை நோக்கித் தேடுங்கள். கிரிக்கெட்டை தாண்டி ஏனைய விளையாட்டுகள் தெரிந்த அத்லெட்டிக் வீரர்கள் நிறையக் கிடைப்பார்கள்.

கிராமங்களை நோக்கித் தேடுங்கள். இயற்கை வேளாண்மை பற்றிய தெளிவு கொண்ட விஞ்ஞானிகள் நிறையக் கிடைப்பார்கள்.

கிராமங்களை நோக்கித் தேடுங்கள். மதிய உணவிற்காக மட்டுமே பள்ளிக்குச் சென்றும், அறிவியலில் சாதிக்கும் குழந்தைகள் நிறையக் கிடைப்பார்கள்.

கிராமங்களை நோக்கித் தேடுங்கள். சிலம்பாட்டம் முதல் கரகாட்டம் வரையிலான தமிழர் கலைகள் இரத்தத்திலேயே ஊறிப்போன கலைஞர்கள் நிறையக் கிடைப்பார்கள்.

என்று இந்த நாடு கிராமங்களை நோக்கி தேட ஆரம்பிக்கிறதோ..
என்று இந்த நாடு கிராமங்களிலும் எல்லாம் இருக்கிறது என்பதை நம்புகிறதோ..
என்று இந்த நாடு திறமையுள்ள எல்லா மனிதர்களையும் ஒரே மாதிரி அங்கீகரிக்கிறதோ..

அன்றே அறிவியல், கலை, விளையாட்டு என அத்தனை துறைகளிலும் இதுவரை இல்லாத மாபெரும் வளர்ச்சியைக் காண முடியும்.

- தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு

Relaxplzz


கடவுள் ஜெராகஸ் மிஷின் வைத்திருக்கவில்லை படைப்பதற்கு.. ஒவ்வொருவரையும் தனித்தனமைய...

Posted: 17 Mar 2015 05:50 AM PDT

கடவுள் ஜெராகஸ் மிஷின் வைத்திருக்கவில்லை படைப்பதற்கு..

ஒவ்வொருவரையும் தனித்தனமையாக படைத்திருக்கிறார்..

ஆதலினால் ஒருவரை ஒருவர் ஓப்பீடாதீர்கள்..ஒப்பீட்டால் எமாற்றம்தான் மிஞ்சும்..


:) Relaxplzz

Posted: 17 Mar 2015 05:30 AM PDT

;-) Relaxplzz

Posted: 17 Mar 2015 05:20 AM PDT

ஒரு கணவனும் மனைவியும் பால்கனியில் உட்கிர்ந்திருக்க, கணவன் மது அருந்திக் கொண்டிரு...

Posted: 17 Mar 2015 05:10 AM PDT

ஒரு கணவனும் மனைவியும் பால்கனியில் உட்கிர்ந்திருக்க,
கணவன் மது அருந்திக் கொண்டிருந்தார்,

கணவன் மிக உருக்கமாக கண்ணே,நீ இல்லாத ஒரு வாழ்க்கையை நினைத்து பார்க்கவே முடியலை,நீ தான் என் உயிர்,செல்லம்,தெய்வம்னார்.

மனைவி; என்னங்க ரொம்ப ரோமான்டிக் மூடுலே பேசரீங்களே,நீங்க தான் பேசரீங்களா இல்ல உங்களுக்குள்ளே போன மது பேசுதான்னாங்க.
.
.
.
.
.
.
.
.
.
.
கணவன்; நான் தான் பேசரேன் என்னோட மது பாட்டில் கிட்டேன்னார்.

:P :P

Relaxplzz

மணமக்கள் உருவத்துடன் கூடிய திருமண சேலை வேண்டுமா...? கோவை மாவட்டம், மேட்டுப்பாளை...

Posted: 17 Mar 2015 05:00 AM PDT

மணமக்கள் உருவத்துடன் கூடிய திருமண சேலை வேண்டுமா...?

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே 'சிறுமுகைப்புதூர் ஸ்ரீ ராமலிங்க சவுடாம்பிகை நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம்' செயல்படுகிறது.

அங்கு உற்பத்தி செய்யப்படும் கைத்தறி பட்டுச்சேலைகளின் அழகிய வேலைப்பாடுகளுக்கு, இரண்டு முறை "தேசிய விருது' கிடைத்துள்ளது. தற்போது அங்கு உற்பத்தியும் சேலைகளில் மணமக்களின் உருவத்தை அழகாக நெய்து தருகிறார்கள்.

சேலை நெய்பவர்களின் கைக்குள் எத்தனை கலைநயம் ஒளிந்திருக்கிறதோ !

புகழ் பெற்ற கடைகள் தங்கள் சொந்த செலவில் விளம்பரம் செய்கிறார்கள், ஆனால் இதுபோன்ற நெசவாளர்களுக்கு விளம்பரம் செய்ய போதிய பணம் இல்லை இருந்தும் மக்கள் தானாகவே முன்வந்து விளம்பரம் செய்கிறார்கள் சமூக வலைத்தளங்களின். பெருமைக்குரிய விடயம்.

மணமக்கள் உருவத்துடன் கூடிய சேலைக்கு ஆர்டர் தர விரும்புவோர், 04254 252 022 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Relaxplzz


விவசாயி மகனே உன்னை பார்க்கும்போதுதான் உலகம் இன்னும் கொஞ்சம் நாளைக்கு அழியபோவதில...

Posted: 17 Mar 2015 04:50 AM PDT

விவசாயி மகனே

உன்னை பார்க்கும்போதுதான் உலகம் இன்னும் கொஞ்சம் நாளைக்கு அழியபோவதில்லை என்ற நம்பிக்கையே வருகிறது...