Tuesday, 17 March 2015

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


சோழப்பேரரசின் வரி விதிப்புகள்: இன்று வருமான வரியே கட்ட மறுக்கிறோம். அக்கால வரி...

Posted: 17 Mar 2015 07:30 AM PDT

சோழப்பேரரசின் வரி விதிப்புகள்:
இன்று வருமான வரியே கட்ட மறுக்கிறோம். அக்கால வரிகளைப் பாருங்கள் மயக்கம் வரலாம்

1. ஊரில் பொதுவாக வைக்கப்பெற்றிருந்த ஓர் எடையைப்
பற்றியவரி (ஊர்க்கழஞ்சு),

2. முருகன் கோயிலுக்காகச் செலுத்திட
வேண்டியவரி (குமர கச்சாணம்)

3. மீன்பிடி உரிமைக்கான வரி (மீன்
பாட்டம்)

4. சிறுவரிகள் (கீழிறைப்பாட்டம்)

5. குளத்து நீரைப் பயன்படுத்து வோருக்கான பாசனவரி (தசபந்தம்)

6. பொன் நாணயம் அரசன்
அச்சடிப்பதற்கான
வரி (மாடைக்கூலி)

7. நாணயத்தின்
பொன்மாற்று அளவை ஆய்வதற்கான
வரி (வண்ணக்கக் கூலி)

8.பொருள்களை விற்பனை செய்வதற்கான
வரி (முத்தாவணம்)

9. மாதம்தோறும் செலுத்த வேண்டிய
வரி (திங்கள் மேரை)

10. நிலத்துக்கான
வரி (ஒருவேலிக்கு இவ்வளவு என
வேலிக்காசு அல்லது வேலிப் பயறு)

11. நாட்டின் நிருவாகச் செலவுக்கான
வரி (நாடாட்சி)

12. கிராம நிருவாகச் செலவுக்கான
வரி (ஊராட்சி)

13. நன்செய் நிலத்திற்கான
நீர்ப்பாசனவரி (வட்டி நாழி)

14.வீட்டுவாசற்படிக்கான
வரி (பிடா நாழி அல்லது புதாநாழி)

15. திருமணம் செய்தால் செலுத்த
வேண்டிய வரி (கண்ணாலக்காணம்),

16. துணி துவைக்கும் கல்லுக்கான
வரி (வண்ணாரப்பாறை)

17.தாழ்த்தப்பட்டோருக்கான வரி (பறைவரி, பள்ளு வரி)

18. மண்பாண்டம் செய்வதற்கான
வரி (குசக்காணம்)

19. தண்ணீர்வரி (நீர்க்கூலி)

20. நெசவாளர் தறிக்குத் தரவேண்டிய
வரி (தறிப்புடவை அல்லது தறிக்கூரை)

21. தரகர்கள் தரவேண்டிய
வரி (தரகுபாட்டம்)

22. பொற்கொல்லருக்-கான வரி (தட்டார்
பாட்டம்)

23. ஆடுகளுக்கானவரி (ஆட்டுவரி)

24. பசு, எருதுகளுக்கான
வரி (நல்லா அல்லது நல்லெருது)

25. நாட்டின் காவலுக்கான
வரி (நாடுகாவல்)

26. ஊடு பயிர் சாகுபடி செய்தால்
வரி (ஊடுபோக்கு)

27. ஆவணப் பதிவுக்கான
வரி (விற்பிடி)

28. வீட்டு மனைக்கான
வரி (வாலக்காணம்)

29. சுங்கவரி (உல்கு)

30. ஓடங்களுக்கான வரி (ஓடக்கூலி)

31. நீதிமன்றவரி (மன்றுபாடு)

32. அரசனுக்குச் சேரவேண்டிய
தனிவரி (மாவிறை)

33. கோயிலில்
வேள்வி நடத்துவதற்கு வரி (தீயெரி)

33. கள் இறக்க வரி (ஈழம் பூட்சி)


தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... 1. "ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த ப...

Posted: 17 Mar 2015 06:30 AM PDT

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்....

1. "ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு..."

தப்புங்க தப்பு,,, ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு... இதாங்க சரி...

2. "படிச்சவன் பாட்டை கெடுத்தான், எழுதுனவன் ஏட்டை கெடுத்தான்...."

இதுவும் தப்பு. சரியானது என்னன்னா ........... படிச்சவன் பாட்டைக் கொடுத்தான் , எழுதுனவன் ஏட்டைக் கொடுத்தான் ....

3. "ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்..."

இது பேரை அல்ல வேரை (மூலிகை வேரை ) ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்.......

4. "நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ...."

சூடு அல்ல சுவடு... சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு.. அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்தது... ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகும்....

5. "அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை புடிப்பான்...."

அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான்.... வள்ளல் ஆனவரை கஞ்சனாக மாற்றி விட்டோம் ... காலப்போக்கில்....

நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற உபயோகிக்கிறோம்...
மாறுவோம்... மாற்றுவோம்...

பிடித்திருந்தால் நண்பர்களுக்கும் பகிரலாமே...

நன்றி : ஜெய் கணேஷ்

பா விவேக்

பார்ப்பதற்கு சாதாரணமாக தெரியும் இப்புகைப்படத்தில் நான்கு உருவங்கள் ஒளிந்துள்ளன....

Posted: 17 Mar 2015 05:30 AM PDT

பார்ப்பதற்கு சாதாரணமாக தெரியும் இப்புகைப்படத்தில் நான்கு உருவங்கள் ஒளிந்துள்ளன.

கலைத்திறன் மற்றும் அறிவுத்திறனை வெளிப்படுத்தும் ஓவியம் + சிற்பம்....

இடம் : சங்ககிரி மலைக்கோட்டை

பா விவேக்


நீதிக்காக தனது கையை வெட்டிக்கொண்ட பொற்கைப் பாண்டியன். ================== பல்வளம்...

Posted: 17 Mar 2015 04:30 AM PDT

நீதிக்காக தனது கையை வெட்டிக்கொண்ட பொற்கைப் பாண்டியன்.
==================
பல்வளம் உடைய நாடு பாண்டிய நாடு.
அந்நாட்டின் தலைநகரம், மதுரை மாநகரம்.
அங்கிருந்து அரசாண்டு வந்தான் பாண்டிய
மரபிலுதித்த அரசனொருவன். அவன் பெயர்
யாது என்பது வெளிப்படவில்லை. ஆயினும்
பொதுமக்கள், அவனை பொற்கைப் பாண்டியன்
என்று காரணப் பெயரிட்டு அழைத்து வந்தனர்.
பொற்கைப் பாண்டியன் அறிவு, அன்பு, பண்பு,
நீதி தவறாதவன். பொய், களவு,
கொலை முதலியவற்றுக்குச் சிறிதும்
இடமளிக்காதவன். குடிமக்களிடத்து மிக்க
பற்று உடையவன். அவர்கள் நன்மையைப் பெரிதும்
விரும்புபவன். அவர்களுடைய எண்ணங்களைத்
தெரிந்துகொள்வதில் மிக்க ஆர்வமுடையவன்.
அதன் பொருட்டு இரவு நேரங்களில் நகர்ச்
சோதனைக்குச் சென்றுவரும் வழக்கத்தையும்
கொண்டிருந்தான்.

ஒரு நாள் இரவு, பொற்கைப் பாண்டியன் சேவகன்
போல மாறுவேடம்
பூண்டு நகர்ச்சோதனை செய்யப் போனான். பெருந்
தெருக்களைச் சுற்றி வந்தான். சிறிய சந்துகளிலும்
நுழைந்து வந்தான். இறுதியில் பார்ப்பனர் ஒரு சேர
வாழும் தெரு ஒன்றுக்குப் போனான். அந்த
தெரு மிகவும் சிறிய தெரு. அதில் ஏறத்தாழ
ஐம்பது வீடுகள் இருந்தன. அந்த வீடுகள்
அனைத்தும் நன்கு மூடப்பட்டு இருந்தன.

ஆளரவமோ, பேச்சொலியோ எதுவுமே சிறிதும்
இல்லாமலும் இருந்தன. தெருவே மிகவும்
அமைதியாய்க் காணப்பட்டது. ஆனால், தெருவின்
இறுதியில் இருந்த ஒரு வீட்டில் மட்டும்
பேச்சொலி கேட்டது.
அந்த வீடு கீரந்தை என்னும் பார்ப்பனன்
ஒருவனுடைய வீடு ஆகும். அவன் மிக வறியவன்.
மனைவி ஒருத்தியைத் தவிர, வேறு எந்தத்
துணையும் இல்லாதவன். அரசன் அந்த
வீட்டை அடைந்து மறைந்து நின்றான்.
உள்ளே நிகழும் பேச்சைக் காது கொடுத்துக்
கேட்டான்.

"கண்ணே! நான் கங்கையாறு சென்று நீராடி,
காசி சென்று வாழ்க்கையை வளமுற நடத்த,
வேண்டும் பொருள் தேடி வருகிறேன். அதுவரை நீ
இங்கேயே இரு!" என்றான் கீரந்தை. "தாங்கள்
சென்று மீளும்வரை நான் ஒருத்தியாய் இந்தக்
காப்பில்லாத வீட்டில் எப்படி இருப்பேன்?
அது காறும் என்னைக் காப்பாற்றுபவர் யார்?"
என்று அச்சம் தோய்ந்த குரலில் கேட்டாள் அவன்
மனைவி.

அதற்கு அவன்,
"நாட்டு மக்களைக் காப்பவன் அரசனே ஆவான்.
அவனது காவலுக்கு முன்னே வேறு காவல்களென்ன
செய்யும்? பயனற்றவையாய் அன்றோ முடியும்?
நமது அரசனும் நாட்டு மக்களின் நலிவு காணப்
பொறுக்க மாட்டான். ஆகவே, அவன் உறுதியாக
உன்னைக் காப்பான்." என்று மறுமொழி கூறினான்.
காது கொடுத்து ஒற்றுக் கேட்டிருந்த அரசன்
களிப்புற்றான், கூத்தாடினான்,

அரண்மனை சென்று நன்கு தூங்கினான். மறுநாள்
பொழுது புலர்ந்தது.
அரசன் படுக்கை விட்டு எழுந்தான். முதல் நாள்
இரவு நிகழ்ந்த
நிகழ்ச்சி அவனது நினைவுக்கு வந்தது. பொருள்
தேடி வரச் சென்ற
கீரந்தை திரும்பி வரும்வரை அவனுடைய
மனைவியைக் காப்பாற்ற வேண்டும்
என்று எண்ணினான். அவளுக்கு மட்டும் உணவுப்
பொருள்களைக் கொடுத்தனுப்பலாம் என அவன்
ஒரு கணம் எண்ணினான். மறுகணம் அது தவறு.
பலரும் பலவாறு கருத இடமளிக்கும்
என்று கருதினான். முடிவில் அந்தத் தெருவில் உள்ள
அனைவருக்குமே உணவுப்
பொருள்களை அளிக்குமாறு அமைச்சனுக்கு ஆணையிட்டான்.

அதன்படி நாள்தோறும் நிகழ்ந்துவந்தது.
அதோடு அரசனும் நாள்தோறும் நள்ளிரவில்
மாறுவேடம் பூண்டு நகர்க் காவல்
சென்று கீரந்தை மனைவிக்கு யாதோரு கேடும்
நிகழாதவாறு காத்து வந்தான். இதனை அந்த ஏழைப்
பார்ப்பனன் மனைவி அறியாள். நாட்கள் பல
சென்றன.
ஒரு நாள் இரவு அந்த வீட்டில் ஆண் குரல்
கேட்டது. காவலுக்குச் சென்றிருந்த அரசன்
இதனைக் கேட்டு திடுக்கிட்டான்; முகவும்
வருந்தினான். உள்ளே இருப்பவன் கணவனோ,
வேறு யாரோ என்ற ஐயம்
அரசனுக்கு உண்டாயிற்று.

அந்த ஐயத்தைப்
போக்கிக் கொள்ளும் பொருட்டு, அந்த
பார்ப்பனனுடைய வீட்டுக் கதவினைத்
தட்டு ஒலி செய்தான். பொருள் ஈட்டச் சென்றிருந்த
பார்ப்பனன் அன்று பகலே வந்துவிட்டான்.
அதனை அறியான் அரசன்.
கதவு தட்டப்படும் ஒலியினைக் கேட்ட பார்ப்பனன்,
வெகுண்டெழுந்து, "யாரது?" என்று அதட்டிய
குரலில் கேட்டான். அவன் மனம் தீய
எண்ணங்களை எண்ணியது. அதை அறிந்த அவன்
மனைவி செய்வது இன்னதென்று அறியாது திகைத்தாள்.

அவனது தீய எண்ணத்தைத் தெளிவிக்கும்
வழிவகை தெரியாது தவித்தாள்; "அரசன் காப்பான்
என்று கூறினாரே அன்று. அந்த அரசன்
இன்று எங்கே?" என்று அவள் கதறினாள்.
நிலையறிந்தான் அரசன்; நெஞ்சம் துணுக்குற்றான்;
திகைப்படைந்தான். "ஒரு வீட்டில் மட்டும்
தட்டினால், தட்டியவன் யாரோ என்ற ஐயம் எழுமே"
என்று கருதினான்; சிந்தித்தான்; தெளிவு பிறந்தது.
உடனே, அந்தத் தெருவில் இருந்த
எல்லா வீடுகளையும் தட்டி,
ஒலி எழுப்பிக்கொண்டே ஓடி,
அரண்மனை சேர்ந்தான். தெருப் பார்ப்பனர்
அனைவரும் கதவைத்
திறந்து கொண்டு வெளியே வந்தனர்; "கதவைத்
தட்டியவர் யார்?" என ஒருவருக்கொருவர் கேட்டுக்
கொண்டனர். ஒருவராலும் இன்னார் எனக்
கண்டு பிடிக்க முடியவில்லை. கள்வனாய்த்தான்
இருக்க வேண்டும் என்று கருதினர். "பாண்டிய
அரசன் ஆட்சியிலும் களவு நிகழ்வதா?" எனக்
கேட்டு வருத்தப்பட்டனர்.
மறுநாள் பொழுது புலர்ந்தது.

பார்ப்பனர்
அனைவரும் அரண்மனை சென்றனர்; அரசனைக்
கண்டனர். இரவு நடந்ததை எடுத்துரைத்து,
முறை வேண்டினர். அரசன் வருந்தினான்;
அமைச்சரை அழைத்து பார்ப்பனருடைய
முறையீட்டை கூறினான்.

"அவ்வாறு கதவைத்
தட்டியவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?"
என்று கேட்டான்.
அமைச்சர், "தட்டியவனைக் கண்டு பிடித்து,
அவனை விசாரித்த பிறகல்லவா, அதற்கான
தண்டனையைப் பற்றி எண்ண வேண்டும்?" என்றார்.

"அதைப்பற்றிய அக்கறை உமக்கு வேண்டாம்.

தவறிழைத்தவனுக்குக் கொடுக்கக் கூடிய
தண்டனை என்ன? அதை மட்டும் கூறும்!"
என்றான்.
அதற்கு அமைச்சர், "குற்றம் புரிந்தவன்
கையை வெட்டி எறிதலே தக்க தண்டனை ஆகும்!"
என்றார். உடனே அரசன் உடைவாளை உருவினான்.
யாரையோ வெட்டப் போகிறான் அரசன்
என்று எல்லோரும் உன்னிப்பாக கவனித்தனர்.

ஆனால், அரசன் தனது வலக் கையைத்
தானே வெட்டி எறிந்தான்! குருதி பெருகி விழிந்தது!
பார்ப்பனர் பயந்தனர்; நடுங்கினர். "அரசே! தாங்கள்
தங்கள் கையை வெட்டிக் கொள்ளக் காரணம்
என்ன?" என்று கேட்டனர். அரசன்
நடந்தவற்றை விரிவாக விளக்கிக் கூறினான்.

மன்னன் செயல் அறிந்து வியந்தனர் மக்கள்;
"இவனன்றோ நீதி நெறி தவறாத நேர்மை மிக்க
அரசன்!" என்று கூறி மகிழ்ந்தனர். அன்று முதல்,
பொன்னால் கையொன்று செய்து பொருத்திப்
பொலிவுறச் செய்து, பொற்கைப் பாண்டியன் என
அழைத்து வரலாயினர்.


புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசல் குடைவரை ஓவியம். இது 7-ஆம் நூற்றாண்ட...

Posted: 17 Mar 2015 04:02 AM PDT

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசல் குடைவரை ஓவியம். இது 7-ஆம் நூற்றாண்டில் தீட்டியது. இதில் பயன்படுத்தப்பட்ட நிறங்கள் தாவரங்களில் இருந்து பெற்றவை

பா விவேக்


குரு கருவூர்த்தேவரும் , ஸ்ரீராஜராஜ சோழனும்...

Posted: 17 Mar 2015 01:30 AM PDT

குரு கருவூர்த்தேவரும் , ஸ்ரீராஜராஜ சோழனும்...


நம் பெருமைகள்: ஆமைகள் இனப்பெருக்கத்துக்காக, கடல் நீரோட்டங்களைப் பயன்படுத்தி 150...

Posted: 16 Mar 2015 11:33 PM PDT

நம் பெருமைகள்:

ஆமைகள் இனப்பெருக்கத்துக்காக, கடல் நீரோட்டங்களைப் பயன்படுத்தி 150, 180 நாட்கள் பயணிக்கின்றன. இதை அவதானித்த தமிழர்கள், ஆமைகளைப் பின்பற்றி கடல் நீரோட்டங்களைக் கண்டறிந்துமத்திய தரைக்கடல், தென் கிழக்கு ஆசியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கடல் வழிப் பயணம் மேற்கொண்டனர்.

முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் என சோழர் காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்த 20 ஆயிரம் தீவுகளில் 9,000 தீவுகள் நீரில் மூழ்கி விட்டன. இவற்றை சோழர்கள் எப்படிக் கணக்கிட்டார்கள் என்பது வியப்புக்கும் ஆய்வுக்கும் உரியது. கப்பல் கட்டுமானத்துக்கு மற்ற நாட்டவர் 2 மரங்களைப் பயன்படுத்த, தமிழர்கள் 20 வகையான மரங்களைப் பயன்படுத்தியுள்ளனர். "பாறைகளில் மோதினால் உடையாமல் இருக்க கப்பலின் அடிப்பகுதியில் கழட்டிவிடும் படியான கட்டமைப்பைக் கொண்ட தொழில்நுட்பத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே தமிழர்கள் பின்பற்றி வந்துள்ளனர்". பிற்காலத்தில் தான் தென்னிந்தியர்களிடம் இருந்து ஐரோப்பியர்கள் கற்றுக் கொண்டனர்.

தெப்பம் என்ற சொல், பல்வேறு மொழிகளில் படகைக் குறிப்பதாகவே உள்ளது.

கிரேக்கத்தில் பாண்டியன்-1, 2 என்ற மன்னர்கள் ஆண்டுள்ளனர். தகடூரில் இரும்பு சார்ந்த நாகரிகம் இருந்துள்ளது. அப்பகுதியை ஆண்டவன் அதியமான். அவன் மகன் பெயர் எழினி. துருக்கியில் இரும்பு சார்ந்த பகுதி இன்றும் அதியமான் என அழைக்கப்படுகிறது. இரும்பு உருக்கும் ஆலைப் பகுதி எழினி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
பிரேசிலில் உறை, வசி, ஊர் என அழைக்கப்படும் பகுதிகள் உள்ளன. ஜப்பானில் குரில் என்ற பகுதியில் 'மருதை' என்ற ஊர் உள்ளது. "சீனாவில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில்" அமைந்துள்ளன. பாண்டியன் என்ற சொல்லுக்கு சீனத்தில் வேர்ச்சொல் இல்லை. ஆகவே இது தமிழகம் சார்ந்த பெயர் என அறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கொரியாவின் அரசியாக பாண்டிய இளவரசி ஒருவர் இருந்துள்ளார். கி.பி. 45-இல் இந்தோனேசியாவை ஸ்ரீமாறன் என்ற தமிழ் மன்னன் ஆண்டுள்ளான். ஆஸ்திரேலியாவில், குமரி, நான்மாடல், துங்காவி என்ற பெயரில் ஊர்கள் உள்ளன. பெரு, சிலியில் நெடுங்கற்கள் நிறைந்த பகுதிகள் வால்பாறை என அழைக்கப்படுகின்றன.

பழந் தமிழரின் கடல் பயணங்களை இவை உறுதிப்படுத்துகின்றன. ஆமைகளே தமிழரின் கடலோடும் வாழ்வுக்கு பெரும் உதவிகரமாக இருந்திருக்கின்றன. பாண்டியர்கள் காளை, மீன் ஆகியவற்றோடு ஆமை இலச்சினைகளையும் பயன்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமைச் சிற்பங்கள் உள்ளன.
கிரேக்க, பாண்டிய நாணயங்களில் ஆமை உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தமிழக பெண்கள் மகப்பேறுக்காக தாய் வீடு செல்வர். இந்த வழக்கம் விலங்குகளில் ஆமைக்கு மட்டும் உண்டு. இனப் பெருக்கத்துக்காக ஆமைகள் தாங்கள் பிறந்த பகுதிக்குச் செல்கின்றன. தமிழகத்தில் மட்டும் இந்த பண்பாட்டுக் கூறு உள்ளது ஆராயத்தக்கது. பிராங்ளின் ஜோசப், கொலம்பஸ் ஆகியோர் கண்டறிந்த கடல் வழித்தடங்களும், ஆமைகளின் கடல்வழித்தடமும் ஒன்றுதான். ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் கடலோரப் பகுதிகளே பழங்காலங்களில் துறைமுகமாகச் செயல்பட்டுள்ளன.

பர்மாவில் இருந்து தேக்கு மரங்களை வெட்டி கடலில் போட்டால் அவை தாமாகவே தனுஷ்கோடி வந்தடைந்துள்ளன. ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்தகடல் நீரோட்டத்தைத் தமிழன் பயன்படுத்தியுள்ளான். கரையோரப் பகுதி வாழ்வியல்கள் இன்னும் ஆழ்ந்த ஆய்வுக்கு உள்படுத்தப்படவேண்டும்

வி. ராஜமருதவேல்


0 comments:

Post a Comment