ilovemynative: Facebook page wall posts in Tamil |
- கணவனின் செல்போன் பாஸ்வேர்டு மனைவிக்கு தெரிந்த நிலையிலும் வீட்டில் மறந்து வைத்துவ...
- ஈழத்தமிழர்களை காப்பாற்றும் பொறுப்பு திமுகவுக்கு உண்டு - கலைஞர். இதுக்கு அந்த பொ...
- இன்றைய தேதிக்கு தமிழ் நாட்டில் ஜெயாவின் பேனரை கிழிக்கும் அளவுக்கு தைரியம் எவருக்...
- தப்பு பண்ணிட்டு மன்னிப்பு கேக்குறவன் மனுஷன்.. தப்பே பண்ணாம மன்னிப்பு கேக்குறவன்...
- இலங்கை அரசு தீவிரவாதத்தை வெற்றிகரமாக முறியடித்துள்ளது- மோடி.. #இரண்டு லட்சம் தம...
- இலங்கையில் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது - நரேந்திர மோடி # இலங்கையில் நடந்தத...
- ஈழத்தமிழர்கள் சிங்களவர்களை அனுசரித்து வாழ வேண்டும் - இந்திய பிரதமர் மோடி சிங்கள...
- சீமை கருவேல மரங்களை வெட்டுவோம்.... மழை பெருவொம்...
- நினைச்ச மாதிரியே ஒருத்தன் பொணத்து முன்னாடி செல்பி எடுத்துட்டான்...
- 'ஊடக தீவிரவாதம்' பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் தினமலரை படித்தால் போதும். தன...
- நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய கெதை ஆயுதம்: கும்பகோணம் அருகே மிழலை...
- காதலர் தினத்தை எதிர்த்து நாய்க்கு தாலிக்கட்டுனவங்க எல்லாம் தாலி புனிதம்னு பேசுறா...
Posted: 13 Mar 2015 01:06 PM PDT கணவனின் செல்போன் பாஸ்வேர்டு மனைவிக்கு தெரிந்த நிலையிலும் வீட்டில் மறந்து வைத்துவிட்ட செல்லை சாவகாசமாக வந்து எடுப்பவனே உத்தமன். @வெங்கடேஷ் |
Posted: 13 Mar 2015 12:53 PM PDT ஈழத்தமிழர்களை காப்பாற்றும் பொறுப்பு திமுகவுக்கு உண்டு - கலைஞர். இதுக்கு அந்த பொறுப்பை ராஜபக்சேகிட்டயே கொடுத்துறலாம்.. @பூபதி |
Posted: 13 Mar 2015 10:56 AM PDT இன்றைய தேதிக்கு தமிழ் நாட்டில் ஜெயாவின் பேனரை கிழிக்கும் அளவுக்கு தைரியம் எவருக்குமில்லை என்பது தான் உண்மை. அதை ஒரு 82 வயசு பெரியவர் செய்துவிட்டார் என்ற கடுப்பு தான் இந்த கைது என்று நினைக்கிறேன். டிராஃபிக் ராமசாமியின் செயல்பாட்டில் சில முரண்பாடுகள் இருந்தாலும் கூட, தாக்கினார்.. கொலை மிரட்டல் விட்டார் என்று கைது செய்திருக்கிறார ்கள். புளுகுறதுக்கும் ஒரு அளவு வேண்டாமா ஆஃபீஸர்... ![]() |
Posted: 13 Mar 2015 10:48 AM PDT தப்பு பண்ணிட்டு மன்னிப்பு கேக்குறவன் மனுஷன்.. தப்பே பண்ணாம மன்னிப்பு கேக்குறவன் புருஷன்.. :P @காளிமுத்து |
Posted: 13 Mar 2015 10:43 AM PDT இலங்கை அரசு தீவிரவாதத்தை வெற்றிகரமாக முறியடித்துள்ளது- மோடி.. #இரண்டு லட்சம் தமிழர்களை ராஜபக்ஷே கொன்றதற்கு மோடி வழங்கிய பாராட்டுப் பத்திரம்.... இவரிடம் தமிழன் நீதியை எதிர்பார்ப்பது ஓநாயிடம் கருணையை எதிர்பார்க்கும் ஆட்டின் நிலை தான்.. |
Posted: 13 Mar 2015 10:27 AM PDT இலங்கையில் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது - நரேந்திர மோடி # இலங்கையில் நடந்தது இன படுகொலை என உலகமே சொல்லுது. மோடி மட்டும் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டதா சான்றிதழ் கொடுக்கிறார். எந்த ஆணிய புடுங்க நீங்க அங்க போனீங்க சார்? |
Posted: 13 Mar 2015 09:39 AM PDT ஈழத்தமிழர்கள் சிங்களவர்களை அனுசரித்து வாழ வேண்டும் - இந்திய பிரதமர் மோடி சிங்கள பெண்கள் தமிழன்களால் பலாத்காரம் செய்யப்பட்டிரு க்கிறார்களா? தமிழர்களால் சிங்கள் குழந்தைகள் சுட்டுக்கொள்ளப் பட்டிருக்கிறார்களா? லட்சம் சிங்கள மக்களை புல்டோசரில் நசுக்கி தமிழர்கள் கொன்றார்களா? இவை அனைத்தையும் சிங்களர்கள் தமிழர்களுக்கு செய்து இருக்கிறார்கள். ..... இன்னும் அனுசரிக்க தமிழர்களிடம் என்னதான் இருக்கிறது மோடி சார்? |
Posted: 13 Mar 2015 04:30 AM PDT |
Posted: 13 Mar 2015 03:56 AM PDT |
Posted: 13 Mar 2015 03:50 AM PDT 'ஊடக தீவிரவாதம்' பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் தினமலரை படித்தால் போதும். தனக்கு வேண்டப்பட்ட ஆள் வெடிகுண்டு வீசினதும் அதை பட்டாசு என சொல்லி மழுப்புறான். 'தினமலருக்கு அல் கொய்தா மிரட்டல்' என இவனே ஒரு புரளியை சில நாட்களுக்கு முன்னால் கிளப்பிவிட்டான். இப்போ அடுத்தவனுக்கு வரும் ரத்தத்தை பார்த்து தக்காளி சட்னின்னு நக்கலடிக்கிறான். 'டெல்லியில் ராஜபக்சே இளநீர் டம்ளரை வீசி எரிந்தார்' என அறிய கண்டுபிடிப்பை வெளியிட்ட தினமலரின் புதிய கண்டுபிடிப்புதான் பட்டாசு. இவன் சும்மா இருந்தாலும்.இவன் மண்டைக்கு மேல உள்ள கொண்டை தான் யார்ன்னு அடிக்கடி காட்டிக்கொடுக்குது. - நம்பிக்கை ராஜ் ![]() |
Posted: 13 Mar 2015 03:34 AM PDT நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய கெதை ஆயுதம்: கும்பகோணம் அருகே மிழலைநத்தத்தில் கண்டுபிடிப்பு கும்பகோணத்தில் இருந்து 10 கி. மீ. தொலைவில் உள்ளது மிழலைநத்தம் கிராமம். இது சோழர்கள் ஆட்சியில் மிழலை நாடு என்கிற பகுதிக்கு தலைநகராக இருந்துள்ளது. 13-ம் நூற்றாண்டில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழ நாட்டின் மீது படையெடுத்தபோது, சோழ நாட்டு ஆலயங்கள் தவிர முக்கிய நகரங்கள் அனைத்தையும் அழித்ததாக மெய்கீர்த்தி கல்வெட்டு ஆதாரம் நமக்குச் சொல்கிறது. அப்படி அழிக்கப்பட்ட நகரங்களில் மிழலையும் ஒன்று என்கிறார்கள் தொல்லியல் வல்லுநரான குடவாயிற் சுந்தரவேலுவும், தொல்லியல் ஆர்வலர் கோ.ஜெயபாலனும். தனது தொல்லியல் தேடல் மூலம் தமிழகத்தில் சங்க காலத்தைச் சேர்ந்த 250 பேரூர்கள் மற்றும் சீறூர்களை (சிற்றூர்கள்) ஆதாரங்களுடன் கண்டுபிடித்திருக்கிறார் சுந்தரவேலு. அப்படித்தான் 15 ஆண்டுகளுக்கு முன்பு மிழலைநத்தத்தின் சங்க கால வரலாற்றையும் கண்டுபிடித்தார். அதன் பிறகும் வேறு தடயங்களைத் தேடி அங்கு சென்று வந்தவர் கடந்த வாரம், கற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட கெதை போன்ற சிறிய வட்டத் துளைக் கல் ஆயுதத்தை கண்டெடுத்துள்ளார். இதுகுறித்து தொல்லியல் வல்லுநரான குடவாயிற் சுந்தரவேலுவும், தொல்லியல் ஆர்வலர் கோ.ஜெயபாலனும் 'தி இந்து'விடம் பேசியதாவது: மிழலை கிராமம் மிகத் தொன்மை யானது. 63 நாயன்மார்களில் ஒருவரான குறும்ப நாயனார் பிறந்த ஊர். சுந்தரபாண்டியன் படையெடுப்புக்குப் பிறகு இந்த ஊரை விட்டு போனவர்களின் வம்சாவழியினர் சில நூற்றாண்டுகளுக்கு முன்புதான் மீண்டும் மிழலைக்கு வந்து குடியேறியுள்ளனர். மிழலையின் தொன்மையை நாங்கள் அறிந்த பிறகு நான்காண்டுகளுக்கு ஒரு முறை அந்த கிராமத்துக்குச் சென்று வந்தோம். அப்படிப் போனபோதுதான் அங்கே சோழர் காலத்து செங்கல் ஒன்றை கண்டெடுத்தோம். கடந்த வாரம் அங்கு சென்றபோது தென்னங்கன்று வைப்பதற்காக தோண்டப்பட்ட குழி மண்ணில் இந்த ஆயுதத்தை கண்டெடுத்தோம். கல்லால் ஆன கெதை போன்ற இந்த ஆயுதம் 9 செ.மீ நீளம், 7 செ.மீ. அகலம், 4 செ.மீ. உயரம் கொண்டது. மரத்தால் ஆன கைப்பிடியை செருகுவதற்காக 2 செ.மீ விட்ட முடைய துளையும் இருக்கிறது. எடை சுமார் ஒரு கிலோ இருக்கும். கற்காலம், நுண் கற்காலம், புதிய கற்காலம் என கற்காலம் மூன்று காலகட்டமாக பிரிக்கப்படுகிறது. இந்த ஆயுதம் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நுண் கற்காலத்தில் உரு வாக்கப்பட்டு சுமார் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புதிய கற்காலம் வரை பயன்பாட்டில் இருந்திருக்க வேண்டும். இதற்கு முன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் தமிழகத்தில் வேறு சில பகுதிகளிலும் இந்த ஆயுதம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதை வேட்டைக்கு பயன்படுத்தினார்களா, சண்டையிடப் பயன்படுத்தினார்களா என்ற விவரம் இதுவரை கிடைக்க வில்லை'' என்றார்கள். கல்லால் ஆன கெதை போன்ற இந்த ஆயுதம் 9 செ.மீ நீளம், 7 செ.மீ. அகலம், 4 செ.மீ. உயரம் கொண்டது. மரத்தால் ஆன கைப்பிடியை செருகுவதற்காக 2 செ.மீ விட்ட முடைய துளையும் இருக்கிறது. எடை சுமார் ஒரு கிலோ இருக்கும். 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நுண் கற்காலத்தில் உருவாக்கப்பட்டு சுமார் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புதிய கற்காலம் வரை பயன்பாட்டில் இருந்திருக்க வேண்டும். http://tamil.thehindu.com/opinion/reporter-page/நாலாயிரம்-ஆண்டுகளுக்கு-முன்பு-பயன்படுத்திய-கெதை-ஆயுதம்-கும்பகோணம்-அருகே-மிழலைநத்தத்தில்-கண்டுபிடிப்பு/article6981532.ece ![]() |
Posted: 12 Mar 2015 10:18 PM PDT காதலர் தினத்தை எதிர்த்து நாய்க்கு தாலிக்கட்டுனவங்க எல்லாம் தாலி புனிதம்னு பேசுறானுங்க... |
You are subscribed to email updates from சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |