Wednesday, 29 October 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


எந்த ஆண்களிடமும் பேசாத பெண் எளிதில் கவர்ந்துவிடுகிறாள்! எல்லா ஆண்களிடமும் பேசும...

Posted: 29 Oct 2014 01:08 PM PDT

எந்த
ஆண்களிடமும் பேசாத
பெண்
எளிதில்
கவர்ந்துவிடுகிறாள்!

எல்லா ஆண்களிடமும்
பேசும்
பெண்
அவ்வளவாக
கவனிக்கப்படுவதில்லை!

அழகிய ஈழம்! யாழ்ப்பாணம்!

Posted: 29 Oct 2014 08:58 AM PDT

அழகிய ஈழம்! யாழ்ப்பாணம்!


ஒருநாள் எங்க தாத்தாவை ATMக்கு கூட்டிட்டு போனேன்.. நான் உள்ள போய் பணம் எடுத்திட்...

Posted: 29 Oct 2014 06:28 AM PDT

ஒருநாள் எங்க
தாத்தாவை ATMக்கு கூட்டிட்டு போனேன்..

நான் உள்ள போய் பணம்
எடுத்திட்டு வர்றத பார்த்த
அவரு வெளிய வரவும்
பொளேர் என் கன்னத்தில
அடிச்சிட்டு யாரு ரூவாயட
களவாண்டு வர்றேன்
கேட்டாரு..

அதற்கு நான்
தாத்தா இது என்
காசுதான்னு சொல்ல
திரும்ப ஒரு அறை..

வீட்டில அம்புட்டு பெரிய
இரும்பு பெட்டி இருக்கறப்ப
இப்பிடி ஊருக்கு நடுவால
இருக்கிற இப்பிடி தொறந்த
வீட்டிலயாட ரூவாய
வைப்பே! :O

@அசோக் குமார்

இலங்கை பதுள்ளையில் இன்று இடம்பெற்ற மோசமான மண்சரிவில் ஒரு ஊரே மண்ணில் புதையுண்டுள...

Posted: 29 Oct 2014 05:24 AM PDT

இலங்கை பதுள்ளையில்
இன்று இடம்பெற்ற
மோசமான மண்சரிவில்
ஒரு ஊரே மண்ணில்
புதையுண்டுள்ளது
கிட்ட தட்ட 300 பேர்
வரை மண்ணில்
புதையுண்டுள்ளனர்!


இவர்களில்
பெரும்பாலானோர் இந்திய
தமிழர்கள் இதுவரை பலரின்
சடலம் மீட்கப்பட்டுள்ளது !


மனைவி எந்த சேலை உடுத்தினாலும் மிக மிக அழகாக இருப்பதாய் சொல்லுங்கள் அடுத்த முறை க...

Posted: 29 Oct 2014 05:02 AM PDT

மனைவி எந்த
சேலை உடுத்தினாலும்
மிக மிக அழகாக
இருப்பதாய்
சொல்லுங்கள் அடுத்த
முறை கடையில்
காத்திருக்கும் நேரம்
சிறிது குறையும்.

#ராஜதந்திரம்

@லதா பிரபு

'ஐ லவ் யூ ஹுட் ஹுட் புயல்' என்று பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டதற்காக ஆந்திராவில்...

Posted: 29 Oct 2014 04:05 AM PDT

'ஐ லவ் யூ ஹுட் ஹுட்
புயல்'
என்று பேஸ்புக்கில்
ஸ்டேட்டஸ் போட்டதற்காக
ஆந்திராவில் ஒருவர்
கைது!

மாநிலத்தை புரட்டி போட்ட
புயல்
குறித்து புகழ்ந்தும்,
இயற்கை பழிவாங்கிவிட்டது என்று கூறியும்,
பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ்
போட்டதற்காக
ஒருவரை கைது செய்துள்ளதாக
ஆந்திர போலீசார்
தெரிவித்துள்ளனர்.

கோபத்திலும் காதலைக் காட்டிக்கொள்ளும் காதலி இன்னும் அழகு... "உன்னையெல்லாம் கட்டி...

Posted: 29 Oct 2014 03:57 AM PDT

கோபத்திலும் காதலைக்
காட்டிக்கொள்ளும்
காதலி இன்னும் அழகு...

"உன்னையெல்லாம்
கட்டிக்கிட்டு என்ன
பாடு படப்போறேனோ.. என்
னமோ பண்ணித்
தொலை! "

நம்ம ஊர் ஏர்போர்ட் அபத்தங்களும் அலப்பரைகளும்... * கொஞ்ச நாளா இடுப்பில் கட்டுற...

Posted: 29 Oct 2014 03:52 AM PDT

நம்ம ஊர் ஏர்போர்ட் அபத்தங்களும் அலப்பரைகளும்...

* கொஞ்ச நாளா இடுப்பில் கட்டுற பெல்ட்டைக் கழட்டிட்டு SCANNER வழியாக வரக் சொன்னாங்க...

அதுல என்ன கொடுமைன்னா பெல்ட் கட்டியுமே நம்ம புள்ளைங்களுக்கு இடுப்புல பேண்ட் நிற்காது. போலிஸ் ரெண்டு கையையும் மேலத் தூக்கி நிக்கச் சொல்லி பரிசோதிக்கும் போதே நிறையாப் பயலுகளுக்கு பேண்ட் அவுந்து விழுந்து மானம் போகும்.

* இப்ப புதுசா இன்னொரு ரூல்ஸ். காலில் மாட்டுற SHOE வையும் கழட்டிட்டு SCANNER வழியா வரச் சொல்றாங்க.

என்னா சார்/மேடம் இப்படி பண்றிங்கன்னு கேட்டா அவுங்களே சிரிக்கிறாங்க.

இன்னும் கொஞ்ச நாளில் சட்டை, பேண்ட் எல்லாம் கழட்டிட்டு வரச் சொன்னாலும் ஆச்சர்யப் பட ஒன்றும் இல்லை...

- சதீஷ் குமார் தேவகோட்டை

எத்தன ரசிகன் கீழ விழுந்து செத்தாலும் எந்த நடிகரும் தன் கட்அவுட்டுக்கு பால் ஊத்தா...

Posted: 29 Oct 2014 03:42 AM PDT

எத்தன ரசிகன் கீழ விழுந்து செத்தாலும் எந்த நடிகரும் தன்
கட்அவுட்டுக்கு பால்
ஊத்தாதன்னு சொல்ல
மாட்டான்...

முதல்ல கட்டவுட்டுக்கு பால் ஊத்துறவனுங்கள கள்ளிப்பால் ஊத்திக்கொல்லனும் @அன்பானவன்

Posted: 29 Oct 2014 03:33 AM PDT

முதல்ல
கட்டவுட்டுக்கு பால்
ஊத்துறவனுங்கள
கள்ளிப்பால்
ஊத்திக்கொல்லனும்

@அன்பானவன்

மக்கள் முதல்வர் ஒரு காலத்துல ஊழல் பண்ணலயா அது மாதிரித்தான் இதுவும். நம்ம நாதஸ்...

Posted: 29 Oct 2014 02:31 AM PDT

மக்கள் முதல்வர்
ஒரு காலத்துல ஊழல்
பண்ணலயா அது மாதிரித்தான்
இதுவும்.

நம்ம நாதஸ்
முன்னமாதிரி இல்ல
இப்போ திருந்திட்டான்

#அடவிடுங்கப்பா

@வருண்


மன்மோகன்சிங் கடந்த ஆண்டு, 'விவசாயிகள், விவசாயத்தைக் கைவிட்டுவிட்டு வேறு வேலைகளுக...

Posted: 29 Oct 2014 02:31 AM PDT

மன்மோகன்சிங் கடந்த ஆண்டு, 'விவசாயிகள், விவசாயத்தைக் கைவிட்டுவிட்டு வேறு வேலைகளுக்குச் செல்வதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்' என்று சொன்னார். பொருளாதார மேதையின் அந்த வார்த்தைகளுக்கு ஆழமான பொருள் இருக்கிறது என்பது இப்போதுதான் புரிகிறது. மீத்தேன் வாயுத் திட்டம் என்ற பெயரில், வளம் மிகுந்த காவிரி டெல்டா படுகையை நரபலி கொடுத்து, சுமார் 50 லட்சம் உழவர்களை காவிரிப் படுகையில் இருந்து துரத்தியடித்து, தெற்கே ஒரு தார் பாலைவனத்தை உருவாக்கத் துடிக்கிறது மத்திய அரசு.

கற்பனைக்கு அப்பாற்பட்ட பிரமாண்ட பரப்பளவில் அறிவிக்கப்பட்டுள்ள மீத்தேன் வாயுத் திட்டம், தமிழகத்தின் நெற்களஞ்சியத்தைக் காவு வாங்கக் காத்திருக்கிறது. தாழடி, குருவை, சம்பா என்று பட்டம் பார்த்து வெள்ளாமை செய்த உழவர்கள், இன்று இருக்கும் நிலம் பறிபோகுமோ, ஊரைவிட்டுத் துரத்தி அடிப்பார்களோ என்று பதைபதைத்துக் கிடக்கிறார்கள். திட்டத்தின் ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், டெல்டா பகுதி அடுத்த சில ஆண்டுகளுக்கான போராட்டக் களமாக மாறுவதற்கான அனைத்து அறிகுறிகளும் இப்போதே தென்படுகின்றன.

மீத்தேன் வாயுத் திட்டம் என்பது என்ன?

மீத்தேன் வாயு என்பது எரிவாயு மற்றும் மின் உற்பத்திக்குப் பயன்படுகிறது. இது பல்வேறு வடிவங்களில் நமக்குக் கிடைக்கிறது. சாண எரிவாயுகூட மீத்தேன்தான். பூமிக்கு மேலே கழிவுப்பொருள்களில் இருந்து மீத்தேன் கிடைக்கிறது. பூமிக்கு அடியில் பாறைப் பரப்பில் மீத்தேன் இருக்கிறது. அப்படி நாகை, திருவாரூர், தஞ்சாவூர்... ஆகிய மாவட்டங்களின் நிலப்பகுதியின் கீழ் ஏராளமான மீத்தேன் வாயு உள்ளதாகவும், அதை எடுத்து மின் உற்பத்தி செய்யப்போவதாகவும் சொல்கிறது மத்திய அரசு. இதற்கான ஒப்பந்தம், ஹரியானாவில் பதிவுசெய்யப்பட்ட கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் (Great eastern energy corporation Ltd.) என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் என்றால் ஓரிரு ஆண்டுகளுக்கு அல்ல... அடுத்த 100ஆண்டுகளுக்கு!

பாகூர் தொடங்கி ராஜமன்னார்குடி வரையிலும் உள்ள 1,64,819 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்துவிரிய இருக்கும் திட்டம் இது. இந்த நிலப்பரப்பின் கீழே சுமார் 6.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள மீத்தேன் வாயு இருப்பதாக தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனம். இந்தத் தொகைக்காக இவ்வளவு பிரமாண்டமான நிலப்பரப்பைப் பலிகொடுக்கத் துணிவார்களா? இல்லை. அவர்களுக்கு வேறுவிதமான பிரமாண்ட நோக்கங்கள் இருக்கின்றன.

காவிரிப் படுகையின் கீழே மாபெரும் நிலக்கரிச் சுரங்கத்தைக் கண்டறிந்துள்ளனர். முதல் 35 ஆண்டுகளுக்கு மட்டும்தான் மீத்தேன் வாயு. அதைத் தொடர்ந்து மீதம் உள்ள ஆண்டுகளுக்கு நிலக்கரியைத்தான் அகழ்ந்து எடுக்க இருக்கிறார்கள். இவை அனைத்தும் கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்தின் இணையதளத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், செய்திகளில் மீத்தேன் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகிறது. இது ஏன் என்பதை விளக்குகிறார் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பைச் சேர்ந்த கும்பகோணம் இரணியன்.

''நிலக்கரிச் சுரங்கத்தின் பாறை இடுக்குகளில் உள்ள மீத்தேன் எரிவாயுவை எடுக்கவில்லை என்றால், தீ விபத்து ஏற்படுகிறது. இது நிலக்கரி அகழ்வைத் தாமதப்படுத்தி லாபத்தைக் குறைக்கிறது. இதை நிறுவனங்கள், தங்கள் சொந்த அனுபவத்தில் இருந்து உணர்ந்துள்ளன. ஆகவே, உள்ளே இருக்கும் மீத்தேன் எரிவாயுவை எடுத்தால்தான் தங்கு தடையின்றி நிலக்கரியை எடுக்க முடியும்.

இதில் என்ன பிரச்னையெனில், நாம் வயல்களில் போர்வெல் அமைப்பது போல மீத்தேன் எடுத்துவிட முடியாது. அதற்கு பூமிக்கும் கீழ் உள்ள பாறைப் பரப்பை உடைக்க வேண்டும். பூமியின் உள்ளே கிலோமீட்டர் கணக்கில் துளையிட்டு வேதிக் கரைசல்களை உயர் அழுத்தத்தில் செலுத்தி பாறைகளை உடைக்க வேண்டும். இதற்கு 'நீரியல் விரிசல் முறை' (Hydraulic fracturing) என்று பெயர். இதற்கு முன்பாக அந்த இடத்தில் நிலத்தடி நீரை முற்றிலும் வெளியேற்றினால்தான் திட்டத்தையே செயல்படுத்த முடியும்.

நிலத்தடி நீரை வெளியேற்றிவிட்டால், அப்புறம் என்ன இருக்கிறது? 35 ஆண்டுகள் இவர்கள் மீத்தேன் எடுத்து முடிப்பதற்குள் இந்தப் பகுதியின் நிலத்தடி நீர்வளம் நாசமாக்கப்பட்டு பூமியின் கீழ் ரசாயனக் கழிவுகள் செலுத்தப்பட்டு, பூமியின் மேலே நிலம் நஞ்சாகிவிடும். மக்கள் வேறு வழியே இல்லாமல் நிலங்களைப் பாதி விலைக்கு விற்றுவிட்டு வெளியேறுவார்கள். பிறகு, பெரிய எதிர்ப்புகள் எதுவும் இல்லாமல் நிலக்கரிச் சுரங்கம் தோண்டுவார்கள். இதுதான் அவர்களின் திட்டம்!

உடனடித் திட்டம் மீத்தேன் என்பதால், அதன் பெயரை மட்டும் வெளியில் சொல்கின்றனர். நமக்கும் இதை நிறுத்தினாலே அதையும் நிறுத்தியது போலதான் என்பதால் மீத்தேன் குறித்து மக்களிடம் பிரசாரம் செய்கிறோம். ஆனால், இந்த அரசும் நிறுவனங்களும் பிணந்தின்னி கழுகுகளைப் போல காவிரிப் பாசனப் பகுதியில் இருக்கும் மதிப்பிட முடியாத பணமதிப்புக்கொண்ட நிலக்கரிக்காக வலம்வந்துகொண்டிருக்கின்றன. அவர்களின் நயவஞ்சகத்தையும், இந்தத் திட்டத்தின் பிரமாண்டத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்!'' என்று ஆவேசமும் ஆற்றாமையுமாகப் பேசுகிறார் இரணியன்.

வெளிநாடுகளில் என்ன நடக்கிறது?

மீத்தேன் வாயு எடுக்கப்படும் உலகின் ஏனையப் பகுதிகளில் நிலவரம் என்ன என்று தேடிப்பார்த்தால், அதிர்ச்சியே மிஞ்சுகிறது!

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா... உள்ளிட்ட சில நாடுகளில் மீத்தேன் வாயு எடுக்கின்றனர். ஆனால், இந்த நாடுகள் அனைத்திலுமே மக்கள் அடர்த்தி குறைவு. மக்கள் வசிக்காத நிலப்பரப்பு அதிகம். ஆகவே, அப்படிப்பட்ட இடங்களில் அவர்கள் மீத்தேன் வாயுவை எடுக்கின்றனர். ஆனால், காவிரி டெல்டாவில் ஊரும் வயல்வெளியும் இணைந்தே இருக்கின்றன. தற்போது ஒப்பந்தம் பெற்றுள்ள கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனம், காவிரிப் படுகையை அமெரிக்காவின் பவுடர் ரிவர் பேசின் (Powder River Basin) என்ற பகுதியின் மீத்தேன் படுகையுடன் ஒப்பிட்டுள்ளது.

அங்கு என்ன நிலை என்று பார்த்தால், மீத்தேன் வாயுத் திட்டம் வந்த பிறகு நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. நிலப்பகுதி, கடுமையான சூழல் கேடுகளுக்கு ஆளாகியுள்ளது. புதிய நோய்கள் மக்களைத் தாக்குகின்றன. வீட்டின் தண்ணீர்க் குழாயில் மீத்தேன் வாயுவும் சேர்ந்து வருகிறது. தண்ணீரைப் பற்றவைத்தால் எரிகிறது. ஏராளமான திடீர் தீ விபத்துகள் நடைபெற்றுள்ளன. இந்தத் திட்டத்தை உடனே நிறுத்த வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் போராடிவருகின்றனர்.

நம் ஊரைப் பொருத்தவரை ஏற்கெனவே நிலத்தரகர்கள் மூலமாக வேறு, வேறு பெயர்களில் வாங்கிய நிலங்களில் திடீர், திடீர் என வந்து குழாய் பதிக்கிறார்கள். 3 அடி விட்டம் உள்ள குழாயை 60 அடி ஆழத்துக்கும் சில இடங்களில் 500 அடி ஆழத்துக்கும் பதிக்கிறார்கள். வேதாரண்யம் அருகே 1,000 அடிக்கும் மேல் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதில் அடுத்தகட்டமாக என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை. எதுவும் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு செய்யப்படுவது இல்லை என்பதால், அனைத்தும் மர்மம்தான். அதே நேரம் இந்தத் திட்டத்தின் அபாயம் குறித்த விழிப்பு உணர்வும் மக்களிடையே வேகவேகமாகப் பரவி வருகிறது.

குறிப்பாக, 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வார் உயிருடன் இருந்தபோது, தனது கடைசி நாட்களை மீத்தேன் திட்ட எதிர்ப்பில்தான் செலவிட்டார். பல ஊர்களில் அவரது தலைமையில், மக்கள் குழாய்களைப் பிடுங்கி எறிந்தனர். இப்போதும் அது தொடர்கிறது. ஆனால் அரசாங்கமோ, மிகவும் கள்ளத்தனமாக ஒ.என்.ஜி.சி-யின் (Oil and Natural Gas Corporation) பெயரால் குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொள்கிறது!

நன்றி விகடன் !


திருச்சி விமான நிலைய கழிவறையில் கிடந்த ரூ. 75 லட்சம் மதிப்பு 3 கிலோ தங்க கட்டிகள...

Posted: 29 Oct 2014 02:24 AM PDT

திருச்சி விமான
நிலைய கழிவறையில்
கிடந்த ரூ. 75 லட்சம்
மதிப்பு 3 கிலோ தங்க
கட்டிகள்

நான் போகும்
போது எல்லாம்
"தண்ணி"யே இருக்காது இப்ப
பாரு 3 கிலோ தங்க
கட்டியாம் .

@சின்ன பையன்

நினைவாற்றலை வளர்ப்பது எப்படி? நினைவாற்றல் பற்றி மனோதத்துவ நிபுணர்கள், மூளை ஆராய...

Posted: 29 Oct 2014 12:58 AM PDT

நினைவாற்றலை வளர்ப்பது எப்படி?

நினைவாற்றல் பற்றி மனோதத்துவ நிபுணர்கள், மூளை ஆராய்ச்சியாளர்கள், கூறுகிற கருத்து பின்வருமாறு:

"நினைவாற்றல் என்பது ஒரு திறமை. சரியில்லாத நினைவாற்றல் என்ற ஒன்று இல்லை. தக்க பயிற்சிகளின் மூலம் யாரும் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும்".

நினைவாற்றல் நன்றாக இருப்பதற்கு ஆறு முக்கிய கோட்பாடுகள் காரணமாக இருக்கின்றன. அவை;

1. தன்னம்பிக்கை
2. ஆர்வம்
3. செயல் ஊக்கம்
4. விழிப்புணர்வு
5. புரிந்துகொள்ளல்
6. உடல் நலம்.

இவை ஒவ்வொன்றைப் பற்றியும் சிறிது விளக்கமாகப் பார்க்கலாம்.

1. தன்னம்பிக்கை (Self Confidence)

"என்னால் செய்திகளை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும். எனது மூளைத்திறன் நன்றாக இருக்கிறது. எனக்கு மன ஆற்றல் நன்றாக இருக்கிறது" என்ற நம்பிக்கை முதலில் வேண்டும். "நான் எப்படித்தான் இவற்றையெல்லாம் படித்து நினைவில் வைக்கப் போகிறேனோ, எனக்கு ஞாபக சக்தியே சற்று குறைவாகத்தான் இருக்கிறது. அடிக்கடி எனக்கு மறந்து போய்விடுகிறது" - என்று தங்களைப் பற்றியே தாங்கள் கொள்கின்ற அவநம்பிக்கையை விட வேண்டும்.

"நினைவாற்றல்" என்பது மூளையின் ஒரு திறமை. அதனை பயன்படுத்தப் பயன்படுத்த, பயிற்சியாலும் முயற்சியாலும் அந்தத் திறமையை வளர்த்துக் கொள்ள முடியும். இந்த உண்மையை உணர்ந்து ஏற்றுக்கொண்டு, நினைவாற்றலை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டால் அற்புத நினைவாற்றல் பெறமுடியும்!

2.ஆர்வம் (Interest)

ஆர்வம் காட்டுகிற விசயங்கள் நினைவில் நன்றாகப் பதியும். இயற்கையாக ஆர்வம் இல்லாவிட்டால் கூட ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டு கவனித்தால், பதியவைத்தால் நினைவில் நிற்கும்.

3. செயல் ஊக்கம் (Motivation)

இந்தச் செய்திகளை ஏன் நான் தெரிந்துகொள்ள வேண்டும். எனக்கு எவ்வகையில் இது பயன்படும் என்று உங்களோடு இணைத்து தெளிவுபடுத்திக் கொண்டால் செய்திகள் நன்றாகப் பதியும்.

உதாரணத்திற்கு "ஹோட்டல் ரெசிடென்ஸிக்கு நாளை காலை 4 மணிக்கு நீங்கள் வந்தால் உங்களுக்கு 5 லட்ச ரூபாய் கொடுக்கப்படும்" என்று ஒருவர் உங்களிடம் சொன்னால் நீங்கள் மறந்து விடுவீர்களா?

தேவையை, அவசியத்தை நன்றாக உணர்ந்த விசயங்கள் நன்றாகப் பதிகின்றன.

4. விழிப்புணர்வு (Awareness)

மனம் விழிப்பு நிலையில் இருக்கும்பொழுது கவனமும், ஒருமைப்பாடும் மிகச்சிறந்து இருக்கும் விழிப்புணர்வு அதிகரிக்க தியானப் பயிற்சிகளும், யோகாசனப் பயிற்சிகளும் துணைபுரியும்.

உங்களுக்குப் பிடித்த எந்த அமைப்பின் மூலமும் இவற்றைக் கற்று முறைப்படி பயிற்சி செய்தால் மனத் தெளிவும், அமைதியும், விழிப் புணர்வும் பெறலாம். வேதாத்திரி மகரிஷி அவர் களின் பயிற்சிகளும், சமர்ப்பண் - வாழும் கலைப் பயிற்சிகளும், ஈசா யோக மையப் பயிற்சிகளும், ஓசோ ரஜினிஷ் பயிற்சிகளும், கிருஷ்ணமாச்சார்ய யோகமந்திரம் (சென்னை) முதலிய அமைப்பு பயிற்சிகள் விஞ்ஞானப்பூர்வமானதாக அற்புத மானவையாக இருக்கின்றன.

5. புரிந்துகொள்ளல் (Understanding)

புரிந்து கொண்ட விசயங்கள் நினைவில் நன்றாக இருக்கின்றன. புரியாவிட்டால் - தெரியாவிட்டால் கூச்சம், அச்சம், தயக்கம் இல்லாமல் ஏன்? எதற்கு? எப்படி? எவ்வாறு? எங்கு? யார்? …………………….. என்று கேள்விகளைக் கேட்டு புரிந்து கொள்ளுங்கள்.

6. உடல் ஆரோக்கியம் (Health)

உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது நினைவாற்றல் நன்றாக இருக்கும். ஒருவர் மிகவும் நோய்வாய்ப்பட்டு தளர்ந்திருக்கும் நேரத்தில் செய்திகளை நினைவில் வைப்பதே சிரமமாக இருக்கும். ஆரோக்கியமான உடலில் மூளைக்கு நிறைய இரத்த ஓட்டம், காற்றோட்டம் சென்று மூளை சுறுசுறுப்புடன் இயங்கும். தக்க உணவு, சரியான உறக்கம், முறையான பயிற்சிகள் மூலம் உடலை நன்கு பேணிப் பாதுகாத்தால் நினைவாற்றல் நன்றாக இருக்கும்.


627 பேரில் யாரையாவது அடையாளம் கண்டுபிடிக்க முடியலைன்னா சொல்லுங்க... அந்த கணக்குக...

Posted: 28 Oct 2014 11:53 PM PDT

627 பேரில்
யாரையாவது அடையாளம்
கண்டுபிடிக்க
முடியலைன்னா சொல்லுங்க... அந்த கணக்குக்கு நான்
பொறுப்பேத்துக்கிறேன்னு சுப்ரீம்
கோர்ட்டுக்கு ஒரு இமெயில்
அனுப்பியிருக்கே
ன்.... ஏழு கொண்டலவாடா நீ
தான் துணை.... வருஷம்
தவறாம
வந்து மொட்டை அடிச்சுக்கிறேன்..

@வா.மணிகண்டன்

லலிதா'ல நகை வாங்குனா ஆஹா... இல்லனா உங்க பணம் ஸ்வாஹா .. இப்படி ஒரு விளம்பரம் வந...

Posted: 28 Oct 2014 11:16 PM PDT

லலிதா'ல
நகை வாங்குனா ஆஹா...

இல்லனா உங்க பணம்
ஸ்வாஹா ..

இப்படி ஒரு விளம்பரம்
வந்துட்டு இருக்கு..

இன்னும் கொஞ்ச நாள்ல

எங்க கடைல
நகை எடுக்கலனா,

நாசமா போயிடுவீங்க..

தண்ணி லாரில
அடிபடுவீங்க..

மாடு முட்டி சாவீங்கனு கூட
மிரட்டல் விளம்பரம்
வரலாம்!!!

@யாரோ

மச்சி செமெஸ்டர் ரிசல்ட் நெட் ல வந்துடுச்சு பார்த்தியா? இல்லைடா மச்சி அப்பா வேற...

Posted: 28 Oct 2014 10:52 PM PDT

மச்சி செமெஸ்டர் ரிசல்ட் நெட் ல வந்துடுச்சு பார்த்தியா?

இல்லைடா மச்சி அப்பா வேற வீட்டில இருக்காரு
நீ பாத்துட்டு எனக்கு மெசேஜ் பண்றா!

ஒரு அரியர் என்றால் "Gud Mrng To U" ன்னு பண்ணு

ரெண்டு ன்னா "Gud Mrng To U & Ur Dad" ன்னு பண்ணு மச்சி...

ஓகே

சிறிது நேரம் கழித்து நண்பரிடம் இருந்து வந்த மெசேஜ்!
.
.
.
.
.
.
.
.
.
.
.
"Gud Mrng To U and Ur whole Family".....

வாழை இலையில் பார்சல் கட்டும் வழக்கம் இப்போது பெரும்பாலும் இல்லை. இந்த தலைமுறை கு...

Posted: 28 Oct 2014 10:39 PM PDT

வாழை இலையில் பார்சல் கட்டும் வழக்கம் இப்போது பெரும்பாலும் இல்லை. இந்த தலைமுறை குழந்தைகளுக்கு பிரியாணியின் வாசம் தெரிந்திருக்கும். ஆனால் பிரியாணி பார்சல்களுக்கென்று தனி வாசனை இருந்த காலமும் இருந்தது. வாழை இலையில் பார்சல் செய்யப்படும் பிரியாணிக்கென்று பிரத்யேகமாக ஒரு வாசம் உண்டு. பிரியாணியின் சூட்டில் வாழை இலை லேசாக வெந்துவிடும். அந்த வாசமும், பிரியாணியின் வாசமும் சேர்ந்து காற்றில் பரவும் போதே நாவில் நீர் பரவி அடிவயிற்றில் செரிமான அமிலங்கள் பரவத் தொடங்கிவிடும். பரோட்டாவுக்கும் அந்த மனம் உண்டு. பார்சலின் வாசனையை வைத்தே பார்சலுக்குள் இருப்பது சைவமா, அசைவமா, பிரியாணியா, பரோட்டாவா என கண்டுபிடித்துவிடலாம்.

இப்போது எதை வாங்கினாலும் ப்ளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்துத் தருகிறார்கள். ப்ளாஸ்டிக் பூக்களுக்கும், உண்மையான ரோஜாக்களுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் போல, இந்த ப்ளாஸ்டிக் பார்சல்கள் எந்த வித ருசியுணர்வையும் ஏற்படுத்துவதில்லை. உள்ளே மிகவும் அருமையான பிரியாணியே இருந்தாலும் கூட மூடியைக் கழற்றி வைத்து ப்ளாஸ்டிக் தட்டுகளில் பரப்பி சாப்பிடும்போது ஒரு அந்நியமான வெறுமை தொற்றிக்கொள்கிறது. சமீப காலங்களில் வெளியே சாப்பிட வேண்டுமென்றால் வாழை இலையில் பரிமாறும், வாழை இலையில் பார்சல் கட்டும் உணவங்களாக தேடிச்செல்கிறேன்.

- டான் அசோக்


நீ சாப்பிட்ட இட்லி போக மீதி இருப்பது அடுத்தவேளைக்கு இட்லி உப்புமா # இது கத்தி க...

Posted: 28 Oct 2014 10:36 PM PDT

நீ சாப்பிட்ட இட்லி போக
மீதி இருப்பது அடுத்தவேளைக்கு இட்லி உப்புமா

#
இது கத்தி கம்யூனிசம்
இல்ல.. மனைவிங்க
ரவுடியிசம்..

@பிரபின் ராஜ்

வெள்ளப்பெருக்கில் அமராவதி ஆறு..... இடம் : கரூர்

Posted: 28 Oct 2014 10:22 PM PDT

வெள்ளப்பெருக்கில் அமராவதி ஆறு.....

இடம் : கரூர்


Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


பச்சை தமிழர் பெருந்தலைவர் அய்யா காமராஜரின் அரிய புகைப்படம் ...

Posted: 28 Oct 2014 07:55 PM PDT

பச்சை தமிழர் பெருந்தலைவர் அய்யா காமராஜரின் அரிய புகைப்படம் ...


Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


Teacher : யார் அடுத்த கேள்விக்கு பதில் சொல்றாங்களோ அவங்க வீட்டுக்கு போயிரலாம்.....

Posted: 29 Oct 2014 10:43 AM PDT

Teacher : யார் அடுத்த கேள்விக்கு பதில் சொல்றாங்களோ அவங்க வீட்டுக்கு போயிரலாம்..
(உடனே ஒரு பையன் அவன் bag ah தூக்கி வெளிய போட்டான்)
Teacher (கோபமா) : எவன்டா bag ahதூக்கி வெளிய போட்டது..
Student : நான் தான் miss..
பதில் சொல்லிட்டேன் கிளம்புறேன்..
நாங்க எப்போதும் இப்படித்தான்.....

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


இந்த வித்தியாசமான கட்டிடம் New york city-ல் அமைந்துள்ளது. பிடித்தவர்கள் லைக் பண...

Posted: 29 Oct 2014 09:50 AM PDT

இந்த வித்தியாசமான கட்டிடம் New york city-ல் அமைந்துள்ளது.

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


மூளைக்கொரு வேலை

Posted: 29 Oct 2014 09:40 AM PDT

மூளைக்கொரு வேலை


:)

Posted: 29 Oct 2014 09:30 AM PDT

:)


மாத கடைசி!.. :) 5 ஆயிரம் சம்பளம் ஆனாலும் சரி . 50 ஆயிரம் சம்பளம் ஆனாலும் சரி மா...

Posted: 29 Oct 2014 09:15 AM PDT

மாத கடைசி!.. :)

5 ஆயிரம் சம்பளம் ஆனாலும் சரி .
50 ஆயிரம் சம்பளம் ஆனாலும் சரி
மாத கடைசி என்றால் மாத்திரை விழுங்க பயப்படும் குழந்தை போல தான் நாம்!!

மளிகை, வீட்டு வாடகை, வாங்கிய கடனுக்கு வட்டி என எல்லாம் போக மாதத்தின்
முதல் வாரம் மட்டுமே கையில் பணமிருக்கும்
மற்ற மூன்று வாரமும் எதையும் தாங்கும் மனமிருக்கும்.

கையேந்தி பவனும் கடவுளாய் தெரியும்
என்றோ காணமல் போன சில்லரை அருமை அன்று புரியும்

கடவுள் பக்தி அதிகம் இல்லை ஆனாலும் வெள்ளி,சனி,திங்கள் என ஒரு வாரத்தில்
பல ஒரு பொழுதுகள் இருக்கும்

மாத கடைசி.. :)

பிறந்த நாள் கூட பிடிக்கவில்லை மாத கடைசியில் வருவதால்!
நண்பனின் திருமணத்திற்க்கு அழைப்பு இருந்தும் போகவில்லை
வெறும் கை வலி தருவதால்!!

பசித்த வயிற்றை
சில நேரத்தில் தேநீரும் பல நேரத்தில் தண்ணிரும் நிரப்பும்
பிடிக்கவில்லை என்றாலும் வீட்டுசமையலில் ரசமே அதிகம் இருக்கும்

மாத கடைசி
வீட்டில் முதலில் காபியில் சர்க்கரை அளவு குறையும்!
பின் காபியின் அளவு குறையும்

மாத கடைசியில்
விலை கேட்டு விட்டு
அடுத்த மாதம் வாங்கி கொள்ளலாம் என விட்டு வந்த
ஆசை பட்ட அந்த சட்டையை வழியில் யோரோ அணிந்து செல்லும் போதுதான் வலியின்
ஆழம் தெரிகிறது

இல்லை என்று சொல்லமாட்டான் என நம்பி கடன் கேட்கும் நண்பனிடம் எப்படி நான்
சொல்வேன் மாத கடைசி என்று

மாலை நேரத்தில் அப்பா எதையாவது வாங்கி வருவார் என வாசலில் ஏங்கி
காத்திருக்கும் என் பிள்ளையிடம் எப்படி சொல்வேன் மாத கடைசி என்று.

அம்மா ஆசைபட்ட புடவையும தங்கை கேட்ட கைபேசியும் வழக்கம் போலவே அடுத்த
மாதத்திற்க்கு இலக்கு நகர்ந்தது

மாத கடைசி
இறைவா ஆடம்பர வாழக்கை வேண்டாம்!
அடுக்குமாடி குடியிருப்பு வேண்டாம்!
ஆடியும்,BMWயும் வேண்டாம்
உழைப்புக்கு ஏற்ற பிழைப்பு கொடு!

மாத கடைசியில் யாரிடம் உதவி கேட்காமல் உதவி செய்யும் அளவுக்கு உயர்வை கொடு..

இப்படிக்கு..
#மிடில் கிளாஸ் மேன்.. :)

Relaxplzz

மக்கள் மருத்துவர்! 'டாக்டர் ஜெயச்சந்திரன் கிளினிக் எங்கே இருக்கிறது?’ என்று கேட...

Posted: 29 Oct 2014 09:00 AM PDT

மக்கள் மருத்துவர்!

'டாக்டர் ஜெயச்சந்திரன் கிளினிக் எங்கே இருக்கிறது?' என்று கேட்டால் 'நம்பர் 21, வெங்கடாசலம் தெரு' என்று முகவரியோடு உற்சாகமாகச் சொல்கிறார்கள் சென்னை வண்ணாரப்பேட்டை மக்கள். ஜெயச்சந்திரன் தன்னிடம் மருத்துவம் பார்க்க வருபவர்களிடம் ஃபீஸ் என்று எதுவும் கேட்பது இல்லை. 5, 10 ரூபாய் என்று கொடுப்பதை வாங்கிக் கொண்டு ஏழை எளிய மக்களுக்கு நிறைவான வைத்தியம் செய்துவருகிறார்.

''கல்பாக்கம் கொடைப்பட்டினம்தான் சொந்த ஊர். எங்கு பார்த்தாலும் புதர், காடு என மண்டிக் கிடக்கும் பூமியில் பாம்பு, தேள் கடிக்கு வைத்தியம் பார்க்கக்கூட 30 கி. செல்ல வேண்டிய, அடிப்படை வசதிகள் அற்ற கிராமம். எங்க அப்பா சுப்பிரமணி, ஒரு விவசாயி. போதுமான வசதி இல்லாத சூழல். கிராமத்தில் யாருமே பள்ளிக்கூடம் போக அக்கறை காட்டியது இல்லை. அந்த ஊரில் முதன் முதலில் பள்ளிக்கூடம் போக ஆசைப் பட்டது நான்தான்.

அப்பாவால் என்னைப் படிக்கவைக்க முடியவில்லை. என் மாமா வேணுகோபால்தான், 'பையன் கண்டிப்பா படிக்கணும்'னு முத்தியால்பேட்டை ஸ்கூல்ல சேர்த்தார். லயோலா கல்லூரியில் பி.எஸ்சி. படிக்கும்போது மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் சீட் கிடைச்சது. பி.எஸ்சி-யை டிஸ்கன்டினியூ பண்ணிட்டு எம்.பி.பி.எஸ். சேர்ந்தேன். 'இந்த மருத்துவக் கல்வி வாய்ப்பை எக்காலத்திலும் வணிகமாக்கிவிடக் கூடாது. நம் கிராமம் போன்றே பின்தங்கிய பகுதியில்தான் கிளினிக் தொடங்க வேண்டும்' என்ற எண்ணம் படிக்கும்போதே என் மனதில் உறுதியாக இருந்தது.

படிப்பு முடிஞ்ச கையோடு 1971-ல் இதே இடத்தில் கிளினிக் தொடங்கினேன். இலவசமா மருத்துவம் பார்க்கலாம் என்பதுதான் என் அப்போதைய மனநிலை. இலவசம் என்றால் மதிப்புஇருக்காது என்பதற்காக ஒரு ரூபாய், 2 ரூபாயில் தொடங்கி அதிகபட்சம் 10 ரூபாய் வரை வாங்கிக்கொண்டு மருத்துவம் செய்துவருகிறேன். ஆரம்பத்தில் 'பிழைக்கத் தெரியாதவன்' என்று சொல்லி சிரித்தவர்களே காலப்போக்கில் என்னிடம் சிகிச்சை பெற வரிசையில் காத்திருந்தனர். ஜெயின் அசோசியேஷன், ஓரிரு தொழிலதிபர்கள், தெரிந்த நண்பர்கள்னு மருந்து மாத்திரைகள் வாங்க உதவி செய்து வரும் நல்ல உள்ளங்களை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். இவர்களின் உதவி மூலம் வரும் மருந்துகளை இலவசமாகக் கொடுக்கிறேன்.

மாரடைப்பு, கண் பிரச்னை, மஞ்சள் காமாலை, கல்லீரல் நோய்னு பெரிய பிரச்னைகளுடன் வருபவர்களைப் பக்கத்து அரசு மருத்துவமனைகளுக்கு முன்கூட்டியே தகவல் சொல்லி அனுப்பிவைப்பேன்.

இப்படி அறிமுகமான சித்தா, ஹோமியோபதினு மாற்று முறை மருத்துவர்கள் 100 பேர் ஒரே டீமாக இணைந்து 2000-த்துக்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தி உள்ளோம். வட சென்னையை வளர்ச்சி மிக்க ஆரோக்கியமான பகுதியா மாற்ற வேண்டும் என்பதற்காக, 'நேதாஜி சமூக சேவை இயக்கம்' என்ற அமைப்பை ஆரம்பித்து கல்வி உதவித் தொகை, தெருவோரச் சிறுவர்களுக்கு உதவிகள்னு பல சேவைகளைச் செய்துவருகிறோம்'' என்கிறார் ஜெயச்சந்திரன்.

சென்ட்ரல் பொது நல மருத்துவமனையில் மெடிக்கல் சூப்பரின்டெண்டென்ட் ஆக இருந்து ஓய்வுபெற்ற இவரது மனைவி டாக்டர் வேணி, ''எங்க பையனும், பொண்ணும்கூட டாக்டர்கள்தான். அன்பானவங்க மத்தியில் வைத்தியம் செய்யும்போது எங்களுக்கு வேற என்ன சொத்து சுகம் வேணும்?'' என்கிறார்.

சமூக மருத்துவருக்கு ஹேட்ஸ் ஆஃப்!

Relaxplzz


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் அறிவாளி முயற்சி செய்கிறான், முட்டாள் தன்னை அறிவாளியாக நினைத்...

Posted: 29 Oct 2014 08:50 AM PDT

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

அறிவாளி முயற்சி செய்கிறான்,

முட்டாள் தன்னை அறிவாளியாக நினைத்து நடிக்கிறான்

- Rockét Märéés

;-)

Posted: 29 Oct 2014 08:40 AM PDT

;-)


(y) (y)

Posted: 29 Oct 2014 08:30 AM PDT

(y) (y)


கல்யாண வீட்டில் ரொம்பவே அழகாய் இருந்த அந்த பெண் அடிக்கடி அவனது கண்ணில்பட்டாள். ஓ...

Posted: 29 Oct 2014 08:15 AM PDT

கல்யாண வீட்டில் ரொம்பவே அழகாய் இருந்த அந்த பெண் அடிக்கடி அவனது கண்ணில்பட்டாள். ஓரிரு முறை அவனை பார்த்து மெலிதாய் சிரிக்கக்கூட செய்தாள். 'போறதுக்குள்ள அவளை எப்படியாவது தூக்கிற(?) வேண்டியது தான்' என்று முடிவுசெய்தான் அவன் ...

பந்தி முடிந்து வரும் வழியில் தனியே மாட்டினாள் அந்த பெண் அவனிடம் .

"ஹாய்.. ஐ ம் அருண்.." என்றபடி அவளிடம் கையை நீட்டினான் ..

"ம்.." என்றாள் கேள்வித் தோரணையில்.

" ஓ.. இங்கிலீஷ் தெரியாதா.. உன் பேரு என்னன்னு கேட்டேன்"

" அதற்கும் "ம்.." என்றே பதில் தந்தாள்..

"ச்.. தமிழுமா.. ஆப்கா... நாம்..க்யா ஹே.." என்ரான் அவனது ப்ராத்மிக் ஹிந்தியை மனதில் கொண்டு வந்து...

" ஹிந்தியும் இல்லைனா என்ன... தெலுங்கா..." எனக்கு தெலுங்கெல்லாம் தெரியாது.. டி.வி.டியில படம் பாக்குறதோட சரி...

இதற்கு அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.. தலையை திருப்பி யாரையோ தேடினாள்..

கொஞ்ச நேரம் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் அவன் ..

"ஆங்.. கண்டுபிடிச்சுட்டேன்.. கேரளா... மலையாளம்.. கலரா இருக்கும் போதே நினைச்சேன்... இப்போ சொல்லு.. நிண்ட பேரு எந்தா?"

இப்போது அவள் மெதுவாய் அவனைப்பார்த்துப் புன்னகைத்தாள்..

"என் நிலைமை சிரிப்பா இருக்குதா.. இதப்பாரு எனக்கு வேற மொழியெல்லாம் தெரியாது அதனால நீயே சொல்லிடு.. அட்லீஸ்ட் ஏதாவது பேசு அதவச்சாது நீ எந்த மாநிலம்னு தெரிஞ்சுக்கறேன்" என்ரான்
".............."

அப்போது அங்கு வந்த அவனது மனைவி "ஐயோ.. அருண்.. அவளுக்கு இன்னும் ஒரு வயசு கூட ஆகலை.

பேச்சு வராத குழந்தைய கேட்டா எப்படி பதில் சொல்லுவா? அவ பேரு சுபா" என்றபடி அவளைத் தூக்கிக் கொண்டு உள்ளே போனாள்.

எங்க கொண்டு வச்சான் பாருங்க டிவிஸ்ட... அவ்வ்வ்வ் :P :P

Relaxplzz

இனிமேலாவது இந்த ஹீரோக்களுக்கு சொம்புதூக்குவதை நிறுத்துங்கள் மக்களே... இதுதான...

Posted: 29 Oct 2014 08:00 AM PDT

இனிமேலாவது இந்த ஹீரோக்களுக்கு சொம்புதூக்குவதை நிறுத்துங்கள் மக்களே...

இதுதான் நிஜம் என்று இன்று உச்சத்தில் இருக்கும் சினிமா பிரபலங்களுக்கு புரிய வேண்டும்.

லைம் லைட்டில் இருக்கும் வரை தான் உங்கள் முகம் சக சினிமாகாரனுக்கு நினைவில் இருக்கும்.

இந்த வாரம் மரணம் அடைந்த தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் கடைசி பயணம்.

இதில் ஒரு சினிமாகாரர்கள் கூட இல்லை என்பது நிதர்சனம்.

வெட்கம் கெட்டவர்கள்.

கலைக்கு செய்யும் மரியாதை இதுதானா?

கடைசி காலத்தில் தன்னந்தனியே அடையாளம் கூடத் தெரியாமல் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி நடந்த பாகவதர் நினைவில் வந்தார்.

தன் படங்களுக்கு பணியாற்றிய சக கிரியேட்டரை கடைசியில் பார்க்க கூட இயக்குனர் மகேந்திரனாவது வந்திருக்கலாம்.

இதுதான் நிஜம் என்று இன்று உச்சத்தில் இருக்கும் சினிமா பிரபலங்களுக்கு புரிய வேண்டும். லைம் லைட்டில் இருக்கும் வரை தான் உங்கள் முகம் சக சினிமாகாரனுக்கு நினைவில் இருக்கும்.

ரஜினிக்கு பெயர் வாங்கித் தந்த ஜானி திரைப் படத்தின் ஒளிப்பதிவாளர் அசோக் ஜி தான்.அதில் அழகாக காட்டினர் ரஜினியை.

காலேஜ் ரோட்டில் இருக்கும் ஒரு ஶூடிங்க் ஹவுஸில் ஜானி படத்தின் போதுதான் முதன் முதலில் எனக்கு ரஜினியை அறிமுகப் படுத்தினார் யார் கண்ணன்.

ரஜினிக்கு செய்தி கிடைக்கவில்லை போல் இருக்கிறது.

- Suprajaa Sridaran

Relaxplzz


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் ஒருவன் எப்படிபட்டவன் என்பதை பழகிதான் முடிவு செய்ய வேண்டுமே தவ...

Posted: 29 Oct 2014 07:50 AM PDT

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

ஒருவன் எப்படிபட்டவன் என்பதை பழகிதான் முடிவு செய்ய வேண்டுமே தவிர, அடுத்தவர் சொல்வதைக் கேட்டு முடிவு செய்ய கூடாது

# எல்லோருக்கும் நல்லவன், வையகத்தில் இல்லை

"இவர்கள் சொன்னவை" இந்திய விமானப்படை எங்களுக்குக் கற்றுக் கொடுத்த ஒரே மதம் 'இந்த...

Posted: 29 Oct 2014 07:40 AM PDT

"இவர்கள் சொன்னவை"

இந்திய விமானப்படை எங்களுக்குக் கற்றுக் கொடுத்த ஒரே மதம் 'இந்தியன்'!

உத்தர்காண்ட் பெருவெள்ளத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற களமிறங்கிய இந்திய விமானப் படையின் முதலாவது மீட்பு அணியின் கமாண்டராக பணியாற்றிய அதிகாரி எஸ்.எம்.யூனூஸ்.

# ராயல் சல்யூட்!. (y)


:)

Posted: 29 Oct 2014 07:30 AM PDT

:)


கேடு கேட்ட சமுகம் 1.அடுத்து வரப்போறவங்களை நினைச்சு கழிவறைல தண்ணீர் ஊத்தாத சமூகம...

Posted: 29 Oct 2014 07:15 AM PDT

கேடு கேட்ட சமுகம்

1.அடுத்து வரப்போறவங்களை நினைச்சு கழிவறைல தண்ணீர் ஊத்தாத சமூகம்தான் அடுத்த தலைமுறைக்காக இயற்கைய காப்பாத்த போகுதா?

2. மெதுவடைல இருக்கிற மொளகாவ தூக்கி எறியுற அதே சமூகம் தான் மொளகால பஜ்ஜி போட்டும் சாப்பிடுது

3.எல்லா பண்டிகையையும் சிறப்புநிகழ்ச்சினு டிவில நாள்புல்லா விளம்பரங்களை பாத்து கொண்டாடுற ஒரு மாதிரியான சமூகம் நம்மளோட சமூகம் தான்

4.சக மனிதன் சீக்குல இருந்தா கூட கவலைப்படாத இந்த சமூகம்தான் சிட்டுக்குருவியின் அழிவைப்பத்தி கவலைப்படுது

5.பணக்காரன் தப்பு செய்து மாட்டிக்கொண்டால் கடந்துவிடும் இதேசமுகம்தான் ஏழையாக இருந்தால் பேசியே அவனை தற்கொலையீன் விளிம்புவரை தள்ளிவிடும்

6.டவுசர் மட்டும் போட்டு நடிச்ச காரணத்துக்காக சமந்தாவை கொண்டாடுற இந்த சமூகம்தான் பட்டா பட்டியை போட்டு போற கிராமத்தான கிண்டல் செய்யுது

7.வத்தல் காய வைக்கும் போது காக்காவ தொரத்துற இதே சமூகம்தான், சாமிக்கு படைச்சா காக்காவ முதல்ல திங்க சொல்லி கத்துத்து.

8.ஆணும் பெண்ணும் நெருங்கி பழகினா அதை நட்புன்னு நினைக்கும் கேடுகெட்ட சமூகம் தான் இது.

9.வெளிநாட்டில் தமிழ் பேசுவதை கௌரவமாக நினைக்கும் அதே சமூகம்தான் தமிழ்நாட்டில் தமிழ் பேசுவதை கேவலமாக நினைக்கிறது

10.பவர்ஸ்டாரின் டோப்பாவை பரிகாசம் செய்யும் இதே சமூகம் தான், ரஜினியின் அனிமேட்டட் சிக்ஸ் பேக்கை புல்லரித்து ரசிக்கிறது...

11.குளிரும் போது ஸ்வெட்டர் போட்டுக்க சொல்லி கொடுத்த இதே சமுகம் தான் வெயிலில் சட்டை பட்டனை திறந்து விட்டு போகும் போது பொறுக்கினும் சொல்லுது...

12.ஒரு ஏழையின் நேர்மையை அவன் இயலாமையாகப்பார்க்கும் அதே சமூகம் தான் ஒரு பணக்காரனின் போலியான பணிவை சிலாகிக்கும்

13.ஒருவனை வசைபாடும் போது சற்றும் சம்மந்தமே இல்லாமல் அவனது அம்மாவை ஒழுக்கத்தை சாடும் கேடுகெட்ட சமூகம் தானே இது..

14.தெருக்கூத்து நடிகர்களை கூத்தாடிகள் என்று கேலி பேசிய சமூகம் தான், சினிமா நடிகர்களை ஸ்டார்களாக்கி உச்சந்தலையில் வைத்து கொண்டாடுகிறது.

15.கத்தி படம் பார்க்கும் போது விவாசாயிகாக உச்சு கொட்டுற சமுகம் தான் படம் முடிஞ்சி வெளிய வந்ததும் கோக்க கோலா வாங்கி குடிக்குது .

#களவாணி பய

Relaxplzz

வயிறு ஒரு கோணிபை மாதிரி.. அதுக்குள்ள கிட்னி, ஈரல், கல்லீரல், மண்ணீரல், உணவுப்ப...

Posted: 29 Oct 2014 07:00 AM PDT

வயிறு ஒரு கோணிபை மாதிரி..

அதுக்குள்ள கிட்னி, ஈரல், கல்லீரல், மண்ணீரல், உணவுப்பை, பெருங்குடல், சிறுகுடல், மலக்குடல், கனையம், சிறு நீர்பை, கர்ப்பப்பை/விந்துபை/சினைப்பை' ன்னு அவ்வளவு உறுப்புகள் இருக்கு...

வயிறு வலிக்குதுன்னு சொன்னா எந்த உறுப்புல பிரச்சனைன்னு புரிஞ்சிக்கிறது ஒரு டாக்டர்க்கே கஷ்டம்... சிம்பிளா ட்ரை பண்ணிருக்கேன்...

வயிறை மேலிருந்து கீழ் மூன்று பகுதியாவும் இடமிருந்து வலமாக மூன்று பகுதியாவும் பிரிச்சிக்கலாம் அப்படியே படுக்க வைச்சு கோடு கிழிச்சா மொத்தம் 9 பகுதிகள்.

அதாவது மேல், நடு(தொப்புள் ஏரியா) மற்றும் அடி பகுதி, இடது, நடு(தொப்புள் ஏரியா) மற்றும் வலது பகுதி... ஓகே வா??

மேல்வயிறு வலது மூலையில வலிச்சா.. ஈரலில் பிரச்சனை.. பித்தப்பை கல்.

மேல்வயிறு இடது மூலை மற்றும் நடுவில் வலித்தால் அல்சர்.

நடுவயிறு வலது மற்றும் இடது மூலையில் வலி வித் நீர்கடுப்பு இருந்தால் கிட்னி ஸ்டோன்.

நடுவயிறு நடுவில் (தொப்புளை சுற்றி) வலித்தால் ஃபூட் பாய்சன்.

அடிவயிறு வலது மூலை - அப்பன்டிசைடிஸ்,

அடி வயிறு நடுவில், சிறுனீர் பை வீக்கம், கர்ப்பப்பை பிரச்சனைகள்,

அடிவயிறு இடது மூலையில் வலித்தால் குடலிறக்கம்.

ஓரளவாவது புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்... என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சிட்டு டாக்டரை பாருங்க.

உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்கலாம் anyway share பண்ணுக......!

நண்பர்களே தயவு செய்து இதை அதிகம் ஷேர் செய்யுங்கள்...!

Relaxplzz


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் ஆண்களுக்கு ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் பீா் கூலிங்காக இல்லையி...

Posted: 29 Oct 2014 06:50 AM PDT

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

ஆண்களுக்கு ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் பீா் கூலிங்காக இல்லையினு பதிவு போடுவாங்க,

பெண்கள் வீட்டில ஆயிரம் பொய் சொன்னாலும் புருஷனுக்கு சோறு வைக்கலைனு உண்மைய சொல்லி பதிவு போடுவாங்க

//குடும்ப எத்தீஸ்

- Rockét Märéés

"நான் உனக்கு என்ன செய்யல" என்று கேட்காத தந்தையும், "நீங்க எனக்கு என்ன செஞ்சிங்க...

Posted: 29 Oct 2014 06:40 AM PDT

"நான் உனக்கு என்ன செய்யல" என்று கேட்காத தந்தையும்,

"நீங்க எனக்கு என்ன செஞ்சிங்க" என்று கேட்காத பிள்ளையும் வெகுசிலரே !!!

கல்வியை கையில் கொடுக்க வேண்டிய அரசு
மதுவை கையில் கொடுத்தால் இது தான் நிலைமை..

#எங்கே_செல்லும்_தமிழகம்


:)

Posted: 29 Oct 2014 06:30 AM PDT

:)


மூன்று அழகிய இளம் பெண்களுக்கு.. ஒரு அலாவுதீன் விளக்கு கிடைத்தது..! அதை அவர்கள்...

Posted: 29 Oct 2014 06:15 AM PDT

மூன்று அழகிய இளம் பெண்களுக்கு..
ஒரு அலாவுதீன் விளக்கு கிடைத்தது..!

அதை அவர்கள்
தேய்த்ததும்.. ஒரு பூதம்
வெளிப்பட்டு உங்களுக்கு என்ன
வேண்டும்..??
என்று கேட்டது..!

முதல் பெண்;- " நான்
இப்போது இருப்பதை விட..
பத்து மடங்கு அதிக
அழகியாக வேண்டும்.."! என்றாள்..!
பூதம்
அப்படியே செய்தது..!!

இரண்டாவது பெண்;-
"அவளை விட நான்
நூறு மடங்கு.. அதிக
அழகியாக வேண்டும்.."! என்றாள்..!
பூதம் அவள்
சொன்னது போலவே செய்தது..!

மூன்றாவது பெண்;- " நான் அவர்கள்
இருவரையும் விட.. ஆயிரம் மடங்கு அதிக
அழகியாக வேண்டும்.."! என்றாள்..!!

பூதம் ஒரு நிமிடம் யோசித்தது..!!

பின் அவளை ஆணாக மாற்றியது..!
அவள்
ஒரு ஆணாகி விட்டாள்..! பெண்களை விட
ஆண்கள்
தான்.. ஆயிரம்
மடங்கு அழகானவர்கலாம்.. !

இதை சொன்னால்.. அவர்கள் ஏற்றுக்
கொள்ளவா போகிறார்கள்..??

#பெண்கள் சும்மா சண்டைக்கு வரக்கூடாது.. ஒத்துக்கணும் உண்மைய :P :P

Relaxplzz

இறைவனுக்கு யாரைப் பிடிக்கும்? ஆலயம் ஒன்றில் இறைவனின் திருவுருவை சிறப்பாய் நிர்ம...

Posted: 29 Oct 2014 05:57 AM PDT

இறைவனுக்கு யாரைப் பிடிக்கும்?

ஆலயம் ஒன்றில் இறைவனின் திருவுருவை சிறப்பாய் நிர்மாணிக்க எண்ணிய குரு ஒருவர் அதற்கு பணம் திரட்ட சீடர்களை ஊருக்குள் அனுப்பிவந்தார். அவர்கள் ஒரு சீமாட்டி வீட்டிற்குச் சென்று விவரம் கூற நிறைய தங்க நாணயங்களை அவள் நன்கொடை தந்தாள்.

அதைக் கண்ட வேலைக்காரச் சிறுமி தானும் ஏதாவது கொடுக்க வேண்டும் என எண்ணி பல நாட்களாக தான் வைத்திருந்த செல்லாத செம்பு நாணயம் ஒன்றை சீடர்களிடம் தந்தாள்.

செல்லாக் காசை கண்ட தலைமைச்சீடன் "இந்தக் காசு எதற்குமே பயன்படாது நீயே வைத்துக்கொள்" என திருப்பித்தர துயரத்துடன் வாங்கிக் கொண்டாள் சிறுமி.

சில நாட்களுக்குப் பின் இறைவன் திருவுருவை உருவாக்கம் செய்தபோது சிலையில் ஒரு விரிசல் எவ்வளவு சரி செய்தும் உருவாகிக்கொண்டே இருந்தது.

குரு " இன்னொரு சிலையை உருவாக்குங்கள் " எனக் கூறி தானே நேரில் பார்வையிட்டும் சிலையில் விரிசல் விழுந்தது. திகைத்துப்போன குரு சீடர்களிடம் விசாரிக்க சிறுமியின் செல்லாக்காசு விவரம் அறிந்தார்.

உடனே சென்று அந்த சிறுமியிடமிருந்து செல்லாக்காசை வாங்கிக்கொண்டு வாருங்கள் எனக் கட்டளையிட தலைமைச் சீடன் அவ்வாறே வாங்கி வந்தான். பிறகு அதையும் சேர்த்து உருக்கி அச்சில் ஊற்றச் சொன்னார் குரு.

அதன்பின் குறிப்பிட்ட நேரத்திற்குப் பின் அச்சை நீக்கிப் பார்த்த அனைவருக்கும் வியப்பு. எவ்வித விரிசலும் இன்றி இறைவனின் திருவுருவச்சிலை பொன் எழில் பூத்தது. அத்துடன் இறைவனின் இதயப்பகுதியில் ஏதோ பதிந்திருப்பது போல் தெரிய எல்லோரும் உற்றுப்பார்த்தார்கள்.

அது அச்சிறுமி மனதார இறைவன் திருப்பணிக்கு அளித்த செல்லாக் காசு. குரு அர்த்தபுஷ்டியுடன் தலைமைச் சீடனைப் பார்க்க தலை கவிழ்ந்தான் அவன்.

Relaxplzz


# படித்ததில் பிடித்தது # - 3

#ரிலாக்ஸ்_நறுக்ஸ் அவகிட்ட பிடிச்சது என்ன தெரியுமா, அவ எனக்கு அடங்கவே மாட்டா மச்...

Posted: 29 Oct 2014 05:50 AM PDT

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

அவகிட்ட பிடிச்சது என்ன தெரியுமா, அவ எனக்கு
அடங்கவே மாட்டா மச்சி..!!

#Guys_Talks

- Sheila Chowdry

இப்படி Bubble விட்டு விளையாடி அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y) Photo cou...

Posted: 29 Oct 2014 05:40 AM PDT

இப்படி Bubble விட்டு விளையாடி அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Photo courtesy: Shiva Fx


:)

Posted: 29 Oct 2014 05:30 AM PDT

:)


ஒருநாள் எங்க தாத்தாவை ATMக்கு கூட்டிட்டு போனேன்.. நான் உள்ள போய் பணம் எடுத்திட்...

Posted: 29 Oct 2014 05:15 AM PDT

ஒருநாள் எங்க தாத்தாவை ATMக்கு கூட்டிட்டு போனேன்..

நான் உள்ள போய் பணம் எடுத்திட்டு வர்றத பார்த்த அவரு வெளிய வரவும் பொளேர் என் கன்னத்தில அடிச்சிட்டு யாரு ரூவாயட களவாண்டு வர்றேன் கேட்டாரு..

அதற்கு நான் தாத்தா இது என் காசுதான்னு சொல்ல திரும்ப ஒரு அறை..:O

வீட்டில அம்புட்டு பெரிய இரும்பு பெட்டி இருக்கறப்ப இப்பிடி ஊருக்கு நடுவால இருக்கிற இப்பிடி தொறந்த வீட்டிலயாட ரூவாய வைப்பே!

:O :O

- Ashok kumar.

போ இன்று நீயாக வா நாளை நாமாக உன்ன பாக்காமலே ஒண்ணும் பேசாமலே ஒன்னா சேராமலே எல்லாம...

Posted: 29 Oct 2014 05:02 AM PDT

போ இன்று நீயாக வா நாளை நாமாக
உன்ன பாக்காமலே ஒண்ணும் பேசாமலே
ஒன்னா சேராமலே எல்லாம் கூத்தாடுதே
லலலா ... ஓஓ .. ம்ம் ... ரரரர ... ரே
லலலா ... ஓஓ .. நெஞ்சு ம்ம் ...
பொண்ணு நனனனனே

போ இன்று நீயாக வா நாளை நாமாக

தனியாவே இருந்து வெறுப்பாகி போச்சு
நீ வந்ததால என் சோகம் போச்சு
பெருமூச்சு விட்டேன் சூடான மூச்சு
உன் வாசம் பட்டு ஜலதோஷம் ஆச்சு

மெதுவா மெதுவா நீ பேசும் போது
சொகமா சொகமா நான் கேக்குறேன்

இது சார காத்து என் பக்கம் பாத்து
எதமாக ஆனாலே ஒரு சாத்து சாத்து

லலலலா ... ஓஓ ....ம்ம் .... ரரர ரே
லலலலா ...ஓஓ ... ம்ம் .... ரரர ரே

போ இன்று நீயாக வா நாளை நாமாக
உன்ன பாக்காமலே ஒண்ணும் பேசாமலே
ஒன்னா சேராமலே எல்லாம் கூத்தாடுதே
லலலலா ..

http://www.youtube.com/watch?v=rlLI1X6z1Yk


தமிழ் பாடல்கள்

#ரிலாக்ஸ்_நறுக்ஸ் கத்தி படத்தில் விஜய் அவர்கள் பேசும் வசனங்களை பொதுமேடைகளிலும்...

Posted: 29 Oct 2014 04:50 AM PDT

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

கத்தி படத்தில் விஜய் அவர்கள் பேசும் வசனங்களை பொதுமேடைகளிலும் பேச வேண்டும் - முருகதாஸ்.

சார் எங்களயெல்லாம் காப்பத்த எதோ ப்ளான் பண்றிங்க... புரியுது...பண்ணுங்க பண்ணுங்க

- Boopathy Murugesh

அறிவாளி புள்ள.. :P

Posted: 29 Oct 2014 04:41 AM PDT

அறிவாளி புள்ள.. :P


வில்லேஜ் விஞ்ஞானி - 1

:)

Posted: 29 Oct 2014 04:30 AM PDT

:)


ஒருமுறை பெருந்தலைவர் காமராஜர் ஒரு கூட்டத்திற்கு பேச வந்தார். அப்போது நிறையப்பேர்...

Posted: 29 Oct 2014 04:11 AM PDT

ஒருமுறை பெருந்தலைவர் காமராஜர் ஒரு கூட்டத்திற்கு பேச வந்தார். அப்போது நிறையப்பேர் மாலைகளை எடுத்துக்கொண்டு மேடைக்கு வந்தார்கள்.

கையில் மாலையோடு நிறையப் பேர்கள் மேடைக்கு வருவதைக்கண்ட காமராஜர் "எனக்கு மாலை மரியாதையெல்லாம் வேண்டாம்" என்று சொல்லி விட்டார்.

வந்தவர்கள் எல்லோரும் திகைத்துப் போய்விட்டார்கள். நாம் ஆசையோடு மாலை வாங்கி வந்திருக்கிறோம்; தலைவர் வேண்டாம் என்று சொல்கிறாரே என மிகவும் மன வருத்தத்துடன் நின்று கொண்டு இருந்தனர்.

அப்போது பெருந்தலைவர் காமராஜர் வந்திருந்தவர்களைப் பார்த்து "நாம் ஏன் இந்தக் கூட்டத்தை நடத்துகிறோம்? மக்களுக்கு நம் கருத்துக்களைச் சொல்வதற்குத்தானே! மக்கள் நம் கருத்தை கேட்பதற்குத்தானே பொறுமையாக வந்து காத்திருக்கிறார்கள்.

எனவே முதலில் மக்களுக்கு என்ன சொல்ல வேண்டுமோ அதை நான் சொல்வதுதான் மரியாதை; நான் முதலில் அந்த மரியாதையைச் செலுத்திவிடுகிறேன். அதன் பிறகு எனக்கு நீங்கள் மாலை, மரியாதை செய்யலாம்" என்றார். மக்களைக் காமராஜர் எந்த அளவு மதிக்கிறார் என்பதைத்தெரிந்தவுடன் வந்திருந்தவர்கள் "கப்சிப்" ஆகிவிட்டனர்.

மக்களுக்குத்தான் முதலில் மரியாதை செய்ய வேண்டும் என்னும் மகத்தான உண்மையை வாழ்க்கையிலும் என்றும் கடைப்பிடித்த மாமனிதர்தான் பெருந்தலைவர் காமராஜர்.

பெருந்தலைவர் காமராஜர் தியாகம், தன்னலமற்ற சேவை, அனைவரோடும்நெருங்கிப்பழகும் அன்பான பண்பு ஆகியவற்றால் மக்களின் இதயத்தில் நீங்காத இடம் பிடித்தவர்.

அவரது சிந்தனைகள் எல்லாம் சீரிய பொன்மொழிகளாகத் திகழ்கின்றன. அவை அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய நன்னெறிகள் என்பது குறிப்பிடத் தக்கவையாகும்.

எளிமையோடு இருங்கள்

எளிமையைக் கடைப்பிடிப்பதன்மூலம் சிறப்பான வாழ்க்கை வாழலாம் என்பதைக்கர்மவீர்ர் காமராஜர் அடிக்கடி உணர்த்தி வந்தார். முதலமைச்சராகப் பணி யாற்றிய காமராஜர் ஒருமுறை மதுரை விருந்தினர் மாளிகையில் தங்க நேரிட்டது.

மின்சாரக் கோளாறு காரணமாக அப்போது மின்விளக்குகள் விருந்தினர் மாளிகையில் ஒளி வீசவில்லை. ரிப்பேர் செய்ய ஆட்கள் வந்திருந்தார்கள். அப்போது காமராஜர் "நான் படுக்க வேண்டும். எனவே அறையினுள் இருக்கும் கட்டிலை எடுத்து வந்து அந்த வேப்பமரத்தின் கீழ் வையுங்கள்" என்றார்.

வேப்பமரத்தின் கீழ் கட்டிலைக் கொண்டுவந்தார்கள். காமராஜர் கட்டிலில் படுத்துக்கொண்டார். அப்போது காமராஜரின் அருகில் காவலுக்காக ஒரு போலீஸ்காரர் நின்றார். அந்தப்போலீஸ் கார்ரைப் பார்த்த காமராஜர் "நீங்கள் ஏன் இங்கு நிற்கிறீர்கள். நீங்கள் போய் படுங்கள். என்னை யாரும் தூக்கிச் செல்ல மாட்டார்கள்" என்று கூறி அனுப்பி வைத்துவிட்டார்.

தனது காவலுக்கு பல்வேறு படைகளோடு உலா வரும் அரசியல்வாதிகள் மத்தியில் காமராஜர் வித்தியாச மானவராக திகழ்ந்தார்.

Relaxplzz


"காமராஜர் ஒரு சகாப்தம்"

#ரிலாக்ஸ்_நறுக்ஸ் ஜெயலலிதா சட்டசபைக்கு வந்து உட்கார்ந்தால் நானும் வருவேன்! விஜய...

Posted: 29 Oct 2014 03:50 AM PDT

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

ஜெயலலிதா சட்டசபைக்கு வந்து உட்கார்ந்தால் நானும் வருவேன்! விஜயகாந்த் பேச்சு

அது என்ன வண்டலூர் உயிரியல் பூங்கா வா ? டைம் பாஸ் செய்றதுக்கு?

- திவ்யா ராஜன்