Wednesday, 29 October 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


எந்த ஆண்களிடமும் பேசாத பெண் எளிதில் கவர்ந்துவிடுகிறாள்! எல்லா ஆண்களிடமும் பேசும...

Posted: 29 Oct 2014 01:08 PM PDT

எந்த
ஆண்களிடமும் பேசாத
பெண்
எளிதில்
கவர்ந்துவிடுகிறாள்!

எல்லா ஆண்களிடமும்
பேசும்
பெண்
அவ்வளவாக
கவனிக்கப்படுவதில்லை!

அழகிய ஈழம்! யாழ்ப்பாணம்!

Posted: 29 Oct 2014 08:58 AM PDT

அழகிய ஈழம்! யாழ்ப்பாணம்!


ஒருநாள் எங்க தாத்தாவை ATMக்கு கூட்டிட்டு போனேன்.. நான் உள்ள போய் பணம் எடுத்திட்...

Posted: 29 Oct 2014 06:28 AM PDT

ஒருநாள் எங்க
தாத்தாவை ATMக்கு கூட்டிட்டு போனேன்..

நான் உள்ள போய் பணம்
எடுத்திட்டு வர்றத பார்த்த
அவரு வெளிய வரவும்
பொளேர் என் கன்னத்தில
அடிச்சிட்டு யாரு ரூவாயட
களவாண்டு வர்றேன்
கேட்டாரு..

அதற்கு நான்
தாத்தா இது என்
காசுதான்னு சொல்ல
திரும்ப ஒரு அறை..

வீட்டில அம்புட்டு பெரிய
இரும்பு பெட்டி இருக்கறப்ப
இப்பிடி ஊருக்கு நடுவால
இருக்கிற இப்பிடி தொறந்த
வீட்டிலயாட ரூவாய
வைப்பே! :O

@அசோக் குமார்

இலங்கை பதுள்ளையில் இன்று இடம்பெற்ற மோசமான மண்சரிவில் ஒரு ஊரே மண்ணில் புதையுண்டுள...

Posted: 29 Oct 2014 05:24 AM PDT

இலங்கை பதுள்ளையில்
இன்று இடம்பெற்ற
மோசமான மண்சரிவில்
ஒரு ஊரே மண்ணில்
புதையுண்டுள்ளது
கிட்ட தட்ட 300 பேர்
வரை மண்ணில்
புதையுண்டுள்ளனர்!


இவர்களில்
பெரும்பாலானோர் இந்திய
தமிழர்கள் இதுவரை பலரின்
சடலம் மீட்கப்பட்டுள்ளது !


மனைவி எந்த சேலை உடுத்தினாலும் மிக மிக அழகாக இருப்பதாய் சொல்லுங்கள் அடுத்த முறை க...

Posted: 29 Oct 2014 05:02 AM PDT

மனைவி எந்த
சேலை உடுத்தினாலும்
மிக மிக அழகாக
இருப்பதாய்
சொல்லுங்கள் அடுத்த
முறை கடையில்
காத்திருக்கும் நேரம்
சிறிது குறையும்.

#ராஜதந்திரம்

@லதா பிரபு

'ஐ லவ் யூ ஹுட் ஹுட் புயல்' என்று பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டதற்காக ஆந்திராவில்...

Posted: 29 Oct 2014 04:05 AM PDT

'ஐ லவ் யூ ஹுட் ஹுட்
புயல்'
என்று பேஸ்புக்கில்
ஸ்டேட்டஸ் போட்டதற்காக
ஆந்திராவில் ஒருவர்
கைது!

மாநிலத்தை புரட்டி போட்ட
புயல்
குறித்து புகழ்ந்தும்,
இயற்கை பழிவாங்கிவிட்டது என்று கூறியும்,
பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ்
போட்டதற்காக
ஒருவரை கைது செய்துள்ளதாக
ஆந்திர போலீசார்
தெரிவித்துள்ளனர்.

கோபத்திலும் காதலைக் காட்டிக்கொள்ளும் காதலி இன்னும் அழகு... "உன்னையெல்லாம் கட்டி...

Posted: 29 Oct 2014 03:57 AM PDT

கோபத்திலும் காதலைக்
காட்டிக்கொள்ளும்
காதலி இன்னும் அழகு...

"உன்னையெல்லாம்
கட்டிக்கிட்டு என்ன
பாடு படப்போறேனோ.. என்
னமோ பண்ணித்
தொலை! "

நம்ம ஊர் ஏர்போர்ட் அபத்தங்களும் அலப்பரைகளும்... * கொஞ்ச நாளா இடுப்பில் கட்டுற...

Posted: 29 Oct 2014 03:52 AM PDT

நம்ம ஊர் ஏர்போர்ட் அபத்தங்களும் அலப்பரைகளும்...

* கொஞ்ச நாளா இடுப்பில் கட்டுற பெல்ட்டைக் கழட்டிட்டு SCANNER வழியாக வரக் சொன்னாங்க...

அதுல என்ன கொடுமைன்னா பெல்ட் கட்டியுமே நம்ம புள்ளைங்களுக்கு இடுப்புல பேண்ட் நிற்காது. போலிஸ் ரெண்டு கையையும் மேலத் தூக்கி நிக்கச் சொல்லி பரிசோதிக்கும் போதே நிறையாப் பயலுகளுக்கு பேண்ட் அவுந்து விழுந்து மானம் போகும்.

* இப்ப புதுசா இன்னொரு ரூல்ஸ். காலில் மாட்டுற SHOE வையும் கழட்டிட்டு SCANNER வழியா வரச் சொல்றாங்க.

என்னா சார்/மேடம் இப்படி பண்றிங்கன்னு கேட்டா அவுங்களே சிரிக்கிறாங்க.

இன்னும் கொஞ்ச நாளில் சட்டை, பேண்ட் எல்லாம் கழட்டிட்டு வரச் சொன்னாலும் ஆச்சர்யப் பட ஒன்றும் இல்லை...

- சதீஷ் குமார் தேவகோட்டை

எத்தன ரசிகன் கீழ விழுந்து செத்தாலும் எந்த நடிகரும் தன் கட்அவுட்டுக்கு பால் ஊத்தா...

Posted: 29 Oct 2014 03:42 AM PDT

எத்தன ரசிகன் கீழ விழுந்து செத்தாலும் எந்த நடிகரும் தன்
கட்அவுட்டுக்கு பால்
ஊத்தாதன்னு சொல்ல
மாட்டான்...

முதல்ல கட்டவுட்டுக்கு பால் ஊத்துறவனுங்கள கள்ளிப்பால் ஊத்திக்கொல்லனும் @அன்பானவன்

Posted: 29 Oct 2014 03:33 AM PDT

முதல்ல
கட்டவுட்டுக்கு பால்
ஊத்துறவனுங்கள
கள்ளிப்பால்
ஊத்திக்கொல்லனும்

@அன்பானவன்

மக்கள் முதல்வர் ஒரு காலத்துல ஊழல் பண்ணலயா அது மாதிரித்தான் இதுவும். நம்ம நாதஸ்...

Posted: 29 Oct 2014 02:31 AM PDT

மக்கள் முதல்வர்
ஒரு காலத்துல ஊழல்
பண்ணலயா அது மாதிரித்தான்
இதுவும்.

நம்ம நாதஸ்
முன்னமாதிரி இல்ல
இப்போ திருந்திட்டான்

#அடவிடுங்கப்பா

@வருண்


மன்மோகன்சிங் கடந்த ஆண்டு, 'விவசாயிகள், விவசாயத்தைக் கைவிட்டுவிட்டு வேறு வேலைகளுக...

Posted: 29 Oct 2014 02:31 AM PDT

மன்மோகன்சிங் கடந்த ஆண்டு, 'விவசாயிகள், விவசாயத்தைக் கைவிட்டுவிட்டு வேறு வேலைகளுக்குச் செல்வதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்' என்று சொன்னார். பொருளாதார மேதையின் அந்த வார்த்தைகளுக்கு ஆழமான பொருள் இருக்கிறது என்பது இப்போதுதான் புரிகிறது. மீத்தேன் வாயுத் திட்டம் என்ற பெயரில், வளம் மிகுந்த காவிரி டெல்டா படுகையை நரபலி கொடுத்து, சுமார் 50 லட்சம் உழவர்களை காவிரிப் படுகையில் இருந்து துரத்தியடித்து, தெற்கே ஒரு தார் பாலைவனத்தை உருவாக்கத் துடிக்கிறது மத்திய அரசு.

கற்பனைக்கு அப்பாற்பட்ட பிரமாண்ட பரப்பளவில் அறிவிக்கப்பட்டுள்ள மீத்தேன் வாயுத் திட்டம், தமிழகத்தின் நெற்களஞ்சியத்தைக் காவு வாங்கக் காத்திருக்கிறது. தாழடி, குருவை, சம்பா என்று பட்டம் பார்த்து வெள்ளாமை செய்த உழவர்கள், இன்று இருக்கும் நிலம் பறிபோகுமோ, ஊரைவிட்டுத் துரத்தி அடிப்பார்களோ என்று பதைபதைத்துக் கிடக்கிறார்கள். திட்டத்தின் ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், டெல்டா பகுதி அடுத்த சில ஆண்டுகளுக்கான போராட்டக் களமாக மாறுவதற்கான அனைத்து அறிகுறிகளும் இப்போதே தென்படுகின்றன.

மீத்தேன் வாயுத் திட்டம் என்பது என்ன?

மீத்தேன் வாயு என்பது எரிவாயு மற்றும் மின் உற்பத்திக்குப் பயன்படுகிறது. இது பல்வேறு வடிவங்களில் நமக்குக் கிடைக்கிறது. சாண எரிவாயுகூட மீத்தேன்தான். பூமிக்கு மேலே கழிவுப்பொருள்களில் இருந்து மீத்தேன் கிடைக்கிறது. பூமிக்கு அடியில் பாறைப் பரப்பில் மீத்தேன் இருக்கிறது. அப்படி நாகை, திருவாரூர், தஞ்சாவூர்... ஆகிய மாவட்டங்களின் நிலப்பகுதியின் கீழ் ஏராளமான மீத்தேன் வாயு உள்ளதாகவும், அதை எடுத்து மின் உற்பத்தி செய்யப்போவதாகவும் சொல்கிறது மத்திய அரசு. இதற்கான ஒப்பந்தம், ஹரியானாவில் பதிவுசெய்யப்பட்ட கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் (Great eastern energy corporation Ltd.) என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் என்றால் ஓரிரு ஆண்டுகளுக்கு அல்ல... அடுத்த 100ஆண்டுகளுக்கு!

பாகூர் தொடங்கி ராஜமன்னார்குடி வரையிலும் உள்ள 1,64,819 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்துவிரிய இருக்கும் திட்டம் இது. இந்த நிலப்பரப்பின் கீழே சுமார் 6.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள மீத்தேன் வாயு இருப்பதாக தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனம். இந்தத் தொகைக்காக இவ்வளவு பிரமாண்டமான நிலப்பரப்பைப் பலிகொடுக்கத் துணிவார்களா? இல்லை. அவர்களுக்கு வேறுவிதமான பிரமாண்ட நோக்கங்கள் இருக்கின்றன.

காவிரிப் படுகையின் கீழே மாபெரும் நிலக்கரிச் சுரங்கத்தைக் கண்டறிந்துள்ளனர். முதல் 35 ஆண்டுகளுக்கு மட்டும்தான் மீத்தேன் வாயு. அதைத் தொடர்ந்து மீதம் உள்ள ஆண்டுகளுக்கு நிலக்கரியைத்தான் அகழ்ந்து எடுக்க இருக்கிறார்கள். இவை அனைத்தும் கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்தின் இணையதளத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், செய்திகளில் மீத்தேன் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகிறது. இது ஏன் என்பதை விளக்குகிறார் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பைச் சேர்ந்த கும்பகோணம் இரணியன்.

''நிலக்கரிச் சுரங்கத்தின் பாறை இடுக்குகளில் உள்ள மீத்தேன் எரிவாயுவை எடுக்கவில்லை என்றால், தீ விபத்து ஏற்படுகிறது. இது நிலக்கரி அகழ்வைத் தாமதப்படுத்தி லாபத்தைக் குறைக்கிறது. இதை நிறுவனங்கள், தங்கள் சொந்த அனுபவத்தில் இருந்து உணர்ந்துள்ளன. ஆகவே, உள்ளே இருக்கும் மீத்தேன் எரிவாயுவை எடுத்தால்தான் தங்கு தடையின்றி நிலக்கரியை எடுக்க முடியும்.

இதில் என்ன பிரச்னையெனில், நாம் வயல்களில் போர்வெல் அமைப்பது போல மீத்தேன் எடுத்துவிட முடியாது. அதற்கு பூமிக்கும் கீழ் உள்ள பாறைப் பரப்பை உடைக்க வேண்டும். பூமியின் உள்ளே கிலோமீட்டர் கணக்கில் துளையிட்டு வேதிக் கரைசல்களை உயர் அழுத்தத்தில் செலுத்தி பாறைகளை உடைக்க வேண்டும். இதற்கு 'நீரியல் விரிசல் முறை' (Hydraulic fracturing) என்று பெயர். இதற்கு முன்பாக அந்த இடத்தில் நிலத்தடி நீரை முற்றிலும் வெளியேற்றினால்தான் திட்டத்தையே செயல்படுத்த முடியும்.

நிலத்தடி நீரை வெளியேற்றிவிட்டால், அப்புறம் என்ன இருக்கிறது? 35 ஆண்டுகள் இவர்கள் மீத்தேன் எடுத்து முடிப்பதற்குள் இந்தப் பகுதியின் நிலத்தடி நீர்வளம் நாசமாக்கப்பட்டு பூமியின் கீழ் ரசாயனக் கழிவுகள் செலுத்தப்பட்டு, பூமியின் மேலே நிலம் நஞ்சாகிவிடும். மக்கள் வேறு வழியே இல்லாமல் நிலங்களைப் பாதி விலைக்கு விற்றுவிட்டு வெளியேறுவார்கள். பிறகு, பெரிய எதிர்ப்புகள் எதுவும் இல்லாமல் நிலக்கரிச் சுரங்கம் தோண்டுவார்கள். இதுதான் அவர்களின் திட்டம்!

உடனடித் திட்டம் மீத்தேன் என்பதால், அதன் பெயரை மட்டும் வெளியில் சொல்கின்றனர். நமக்கும் இதை நிறுத்தினாலே அதையும் நிறுத்தியது போலதான் என்பதால் மீத்தேன் குறித்து மக்களிடம் பிரசாரம் செய்கிறோம். ஆனால், இந்த அரசும் நிறுவனங்களும் பிணந்தின்னி கழுகுகளைப் போல காவிரிப் பாசனப் பகுதியில் இருக்கும் மதிப்பிட முடியாத பணமதிப்புக்கொண்ட நிலக்கரிக்காக வலம்வந்துகொண்டிருக்கின்றன. அவர்களின் நயவஞ்சகத்தையும், இந்தத் திட்டத்தின் பிரமாண்டத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்!'' என்று ஆவேசமும் ஆற்றாமையுமாகப் பேசுகிறார் இரணியன்.

வெளிநாடுகளில் என்ன நடக்கிறது?

மீத்தேன் வாயு எடுக்கப்படும் உலகின் ஏனையப் பகுதிகளில் நிலவரம் என்ன என்று தேடிப்பார்த்தால், அதிர்ச்சியே மிஞ்சுகிறது!

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா... உள்ளிட்ட சில நாடுகளில் மீத்தேன் வாயு எடுக்கின்றனர். ஆனால், இந்த நாடுகள் அனைத்திலுமே மக்கள் அடர்த்தி குறைவு. மக்கள் வசிக்காத நிலப்பரப்பு அதிகம். ஆகவே, அப்படிப்பட்ட இடங்களில் அவர்கள் மீத்தேன் வாயுவை எடுக்கின்றனர். ஆனால், காவிரி டெல்டாவில் ஊரும் வயல்வெளியும் இணைந்தே இருக்கின்றன. தற்போது ஒப்பந்தம் பெற்றுள்ள கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனம், காவிரிப் படுகையை அமெரிக்காவின் பவுடர் ரிவர் பேசின் (Powder River Basin) என்ற பகுதியின் மீத்தேன் படுகையுடன் ஒப்பிட்டுள்ளது.

அங்கு என்ன நிலை என்று பார்த்தால், மீத்தேன் வாயுத் திட்டம் வந்த பிறகு நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. நிலப்பகுதி, கடுமையான சூழல் கேடுகளுக்கு ஆளாகியுள்ளது. புதிய நோய்கள் மக்களைத் தாக்குகின்றன. வீட்டின் தண்ணீர்க் குழாயில் மீத்தேன் வாயுவும் சேர்ந்து வருகிறது. தண்ணீரைப் பற்றவைத்தால் எரிகிறது. ஏராளமான திடீர் தீ விபத்துகள் நடைபெற்றுள்ளன. இந்தத் திட்டத்தை உடனே நிறுத்த வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் போராடிவருகின்றனர்.

நம் ஊரைப் பொருத்தவரை ஏற்கெனவே நிலத்தரகர்கள் மூலமாக வேறு, வேறு பெயர்களில் வாங்கிய நிலங்களில் திடீர், திடீர் என வந்து குழாய் பதிக்கிறார்கள். 3 அடி விட்டம் உள்ள குழாயை 60 அடி ஆழத்துக்கும் சில இடங்களில் 500 அடி ஆழத்துக்கும் பதிக்கிறார்கள். வேதாரண்யம் அருகே 1,000 அடிக்கும் மேல் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதில் அடுத்தகட்டமாக என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை. எதுவும் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு செய்யப்படுவது இல்லை என்பதால், அனைத்தும் மர்மம்தான். அதே நேரம் இந்தத் திட்டத்தின் அபாயம் குறித்த விழிப்பு உணர்வும் மக்களிடையே வேகவேகமாகப் பரவி வருகிறது.

குறிப்பாக, 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வார் உயிருடன் இருந்தபோது, தனது கடைசி நாட்களை மீத்தேன் திட்ட எதிர்ப்பில்தான் செலவிட்டார். பல ஊர்களில் அவரது தலைமையில், மக்கள் குழாய்களைப் பிடுங்கி எறிந்தனர். இப்போதும் அது தொடர்கிறது. ஆனால் அரசாங்கமோ, மிகவும் கள்ளத்தனமாக ஒ.என்.ஜி.சி-யின் (Oil and Natural Gas Corporation) பெயரால் குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொள்கிறது!

நன்றி விகடன் !


திருச்சி விமான நிலைய கழிவறையில் கிடந்த ரூ. 75 லட்சம் மதிப்பு 3 கிலோ தங்க கட்டிகள...

Posted: 29 Oct 2014 02:24 AM PDT

திருச்சி விமான
நிலைய கழிவறையில்
கிடந்த ரூ. 75 லட்சம்
மதிப்பு 3 கிலோ தங்க
கட்டிகள்

நான் போகும்
போது எல்லாம்
"தண்ணி"யே இருக்காது இப்ப
பாரு 3 கிலோ தங்க
கட்டியாம் .

@சின்ன பையன்

நினைவாற்றலை வளர்ப்பது எப்படி? நினைவாற்றல் பற்றி மனோதத்துவ நிபுணர்கள், மூளை ஆராய...

Posted: 29 Oct 2014 12:58 AM PDT

நினைவாற்றலை வளர்ப்பது எப்படி?

நினைவாற்றல் பற்றி மனோதத்துவ நிபுணர்கள், மூளை ஆராய்ச்சியாளர்கள், கூறுகிற கருத்து பின்வருமாறு:

"நினைவாற்றல் என்பது ஒரு திறமை. சரியில்லாத நினைவாற்றல் என்ற ஒன்று இல்லை. தக்க பயிற்சிகளின் மூலம் யாரும் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும்".

நினைவாற்றல் நன்றாக இருப்பதற்கு ஆறு முக்கிய கோட்பாடுகள் காரணமாக இருக்கின்றன. அவை;

1. தன்னம்பிக்கை
2. ஆர்வம்
3. செயல் ஊக்கம்
4. விழிப்புணர்வு
5. புரிந்துகொள்ளல்
6. உடல் நலம்.

இவை ஒவ்வொன்றைப் பற்றியும் சிறிது விளக்கமாகப் பார்க்கலாம்.

1. தன்னம்பிக்கை (Self Confidence)

"என்னால் செய்திகளை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும். எனது மூளைத்திறன் நன்றாக இருக்கிறது. எனக்கு மன ஆற்றல் நன்றாக இருக்கிறது" என்ற நம்பிக்கை முதலில் வேண்டும். "நான் எப்படித்தான் இவற்றையெல்லாம் படித்து நினைவில் வைக்கப் போகிறேனோ, எனக்கு ஞாபக சக்தியே சற்று குறைவாகத்தான் இருக்கிறது. அடிக்கடி எனக்கு மறந்து போய்விடுகிறது" - என்று தங்களைப் பற்றியே தாங்கள் கொள்கின்ற அவநம்பிக்கையை விட வேண்டும்.

"நினைவாற்றல்" என்பது மூளையின் ஒரு திறமை. அதனை பயன்படுத்தப் பயன்படுத்த, பயிற்சியாலும் முயற்சியாலும் அந்தத் திறமையை வளர்த்துக் கொள்ள முடியும். இந்த உண்மையை உணர்ந்து ஏற்றுக்கொண்டு, நினைவாற்றலை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டால் அற்புத நினைவாற்றல் பெறமுடியும்!

2.ஆர்வம் (Interest)

ஆர்வம் காட்டுகிற விசயங்கள் நினைவில் நன்றாகப் பதியும். இயற்கையாக ஆர்வம் இல்லாவிட்டால் கூட ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டு கவனித்தால், பதியவைத்தால் நினைவில் நிற்கும்.

3. செயல் ஊக்கம் (Motivation)

இந்தச் செய்திகளை ஏன் நான் தெரிந்துகொள்ள வேண்டும். எனக்கு எவ்வகையில் இது பயன்படும் என்று உங்களோடு இணைத்து தெளிவுபடுத்திக் கொண்டால் செய்திகள் நன்றாகப் பதியும்.

உதாரணத்திற்கு "ஹோட்டல் ரெசிடென்ஸிக்கு நாளை காலை 4 மணிக்கு நீங்கள் வந்தால் உங்களுக்கு 5 லட்ச ரூபாய் கொடுக்கப்படும்" என்று ஒருவர் உங்களிடம் சொன்னால் நீங்கள் மறந்து விடுவீர்களா?

தேவையை, அவசியத்தை நன்றாக உணர்ந்த விசயங்கள் நன்றாகப் பதிகின்றன.

4. விழிப்புணர்வு (Awareness)

மனம் விழிப்பு நிலையில் இருக்கும்பொழுது கவனமும், ஒருமைப்பாடும் மிகச்சிறந்து இருக்கும் விழிப்புணர்வு அதிகரிக்க தியானப் பயிற்சிகளும், யோகாசனப் பயிற்சிகளும் துணைபுரியும்.

உங்களுக்குப் பிடித்த எந்த அமைப்பின் மூலமும் இவற்றைக் கற்று முறைப்படி பயிற்சி செய்தால் மனத் தெளிவும், அமைதியும், விழிப் புணர்வும் பெறலாம். வேதாத்திரி மகரிஷி அவர் களின் பயிற்சிகளும், சமர்ப்பண் - வாழும் கலைப் பயிற்சிகளும், ஈசா யோக மையப் பயிற்சிகளும், ஓசோ ரஜினிஷ் பயிற்சிகளும், கிருஷ்ணமாச்சார்ய யோகமந்திரம் (சென்னை) முதலிய அமைப்பு பயிற்சிகள் விஞ்ஞானப்பூர்வமானதாக அற்புத மானவையாக இருக்கின்றன.

5. புரிந்துகொள்ளல் (Understanding)

புரிந்து கொண்ட விசயங்கள் நினைவில் நன்றாக இருக்கின்றன. புரியாவிட்டால் - தெரியாவிட்டால் கூச்சம், அச்சம், தயக்கம் இல்லாமல் ஏன்? எதற்கு? எப்படி? எவ்வாறு? எங்கு? யார்? …………………….. என்று கேள்விகளைக் கேட்டு புரிந்து கொள்ளுங்கள்.

6. உடல் ஆரோக்கியம் (Health)

உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது நினைவாற்றல் நன்றாக இருக்கும். ஒருவர் மிகவும் நோய்வாய்ப்பட்டு தளர்ந்திருக்கும் நேரத்தில் செய்திகளை நினைவில் வைப்பதே சிரமமாக இருக்கும். ஆரோக்கியமான உடலில் மூளைக்கு நிறைய இரத்த ஓட்டம், காற்றோட்டம் சென்று மூளை சுறுசுறுப்புடன் இயங்கும். தக்க உணவு, சரியான உறக்கம், முறையான பயிற்சிகள் மூலம் உடலை நன்கு பேணிப் பாதுகாத்தால் நினைவாற்றல் நன்றாக இருக்கும்.


627 பேரில் யாரையாவது அடையாளம் கண்டுபிடிக்க முடியலைன்னா சொல்லுங்க... அந்த கணக்குக...

Posted: 28 Oct 2014 11:53 PM PDT

627 பேரில்
யாரையாவது அடையாளம்
கண்டுபிடிக்க
முடியலைன்னா சொல்லுங்க... அந்த கணக்குக்கு நான்
பொறுப்பேத்துக்கிறேன்னு சுப்ரீம்
கோர்ட்டுக்கு ஒரு இமெயில்
அனுப்பியிருக்கே
ன்.... ஏழு கொண்டலவாடா நீ
தான் துணை.... வருஷம்
தவறாம
வந்து மொட்டை அடிச்சுக்கிறேன்..

@வா.மணிகண்டன்

லலிதா'ல நகை வாங்குனா ஆஹா... இல்லனா உங்க பணம் ஸ்வாஹா .. இப்படி ஒரு விளம்பரம் வந...

Posted: 28 Oct 2014 11:16 PM PDT

லலிதா'ல
நகை வாங்குனா ஆஹா...

இல்லனா உங்க பணம்
ஸ்வாஹா ..

இப்படி ஒரு விளம்பரம்
வந்துட்டு இருக்கு..

இன்னும் கொஞ்ச நாள்ல

எங்க கடைல
நகை எடுக்கலனா,

நாசமா போயிடுவீங்க..

தண்ணி லாரில
அடிபடுவீங்க..

மாடு முட்டி சாவீங்கனு கூட
மிரட்டல் விளம்பரம்
வரலாம்!!!

@யாரோ

மச்சி செமெஸ்டர் ரிசல்ட் நெட் ல வந்துடுச்சு பார்த்தியா? இல்லைடா மச்சி அப்பா வேற...

Posted: 28 Oct 2014 10:52 PM PDT

மச்சி செமெஸ்டர் ரிசல்ட் நெட் ல வந்துடுச்சு பார்த்தியா?

இல்லைடா மச்சி அப்பா வேற வீட்டில இருக்காரு
நீ பாத்துட்டு எனக்கு மெசேஜ் பண்றா!

ஒரு அரியர் என்றால் "Gud Mrng To U" ன்னு பண்ணு

ரெண்டு ன்னா "Gud Mrng To U & Ur Dad" ன்னு பண்ணு மச்சி...

ஓகே

சிறிது நேரம் கழித்து நண்பரிடம் இருந்து வந்த மெசேஜ்!
.
.
.
.
.
.
.
.
.
.
.
"Gud Mrng To U and Ur whole Family".....

வாழை இலையில் பார்சல் கட்டும் வழக்கம் இப்போது பெரும்பாலும் இல்லை. இந்த தலைமுறை கு...

Posted: 28 Oct 2014 10:39 PM PDT

வாழை இலையில் பார்சல் கட்டும் வழக்கம் இப்போது பெரும்பாலும் இல்லை. இந்த தலைமுறை குழந்தைகளுக்கு பிரியாணியின் வாசம் தெரிந்திருக்கும். ஆனால் பிரியாணி பார்சல்களுக்கென்று தனி வாசனை இருந்த காலமும் இருந்தது. வாழை இலையில் பார்சல் செய்யப்படும் பிரியாணிக்கென்று பிரத்யேகமாக ஒரு வாசம் உண்டு. பிரியாணியின் சூட்டில் வாழை இலை லேசாக வெந்துவிடும். அந்த வாசமும், பிரியாணியின் வாசமும் சேர்ந்து காற்றில் பரவும் போதே நாவில் நீர் பரவி அடிவயிற்றில் செரிமான அமிலங்கள் பரவத் தொடங்கிவிடும். பரோட்டாவுக்கும் அந்த மனம் உண்டு. பார்சலின் வாசனையை வைத்தே பார்சலுக்குள் இருப்பது சைவமா, அசைவமா, பிரியாணியா, பரோட்டாவா என கண்டுபிடித்துவிடலாம்.

இப்போது எதை வாங்கினாலும் ப்ளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்துத் தருகிறார்கள். ப்ளாஸ்டிக் பூக்களுக்கும், உண்மையான ரோஜாக்களுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் போல, இந்த ப்ளாஸ்டிக் பார்சல்கள் எந்த வித ருசியுணர்வையும் ஏற்படுத்துவதில்லை. உள்ளே மிகவும் அருமையான பிரியாணியே இருந்தாலும் கூட மூடியைக் கழற்றி வைத்து ப்ளாஸ்டிக் தட்டுகளில் பரப்பி சாப்பிடும்போது ஒரு அந்நியமான வெறுமை தொற்றிக்கொள்கிறது. சமீப காலங்களில் வெளியே சாப்பிட வேண்டுமென்றால் வாழை இலையில் பரிமாறும், வாழை இலையில் பார்சல் கட்டும் உணவங்களாக தேடிச்செல்கிறேன்.

- டான் அசோக்


நீ சாப்பிட்ட இட்லி போக மீதி இருப்பது அடுத்தவேளைக்கு இட்லி உப்புமா # இது கத்தி க...

Posted: 28 Oct 2014 10:36 PM PDT

நீ சாப்பிட்ட இட்லி போக
மீதி இருப்பது அடுத்தவேளைக்கு இட்லி உப்புமா

#
இது கத்தி கம்யூனிசம்
இல்ல.. மனைவிங்க
ரவுடியிசம்..

@பிரபின் ராஜ்

வெள்ளப்பெருக்கில் அமராவதி ஆறு..... இடம் : கரூர்

Posted: 28 Oct 2014 10:22 PM PDT

வெள்ளப்பெருக்கில் அமராவதி ஆறு.....

இடம் : கரூர்


0 comments:

Post a Comment