Thursday, 30 October 2014

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


:)

Posted: 30 Oct 2014 09:30 AM PDT

:)


ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் சில தவறுகளால் 50 கோடிகள் நஷ்டம் ஏற்...

Posted: 30 Oct 2014 09:15 AM PDT

ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் சில தவறுகளால் 50 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது.

மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார்.
அப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம் உடைய ஒருவர் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தார். இவர் சோகமாக அமர்ந்திருப்பதை கண்டு
" ஏன் சோகமாக இருக்கிறீர்கள் " என்று கேட்டார்.

அதற்கு இவர் " எனது தொழில் நஷ்டம் அடைந்து விட்டேன். மிகவும் மனது உடைந்து போய்விட்டேன் " என்றார்.

" எவ்வளவு ரூபாய் நஷ்டம் ? " என்றால் அவர்.
" 50 கோடி ரூபாய் " என்றார் இவர்.

" அப்படியா, நான் யார் தெரியுமா ? " என்று கேட்டு அந்த ஊரின் பிரபல செல்வேந்தரின் பெயரை சொன்னார்.
அசந்து போனார் இவர்...

" சரி 50 கோடி பணம் இருந்தால் நீ சரியாகி விடுவாயா ? " என்று கேட்டார் அவர்.
உடனே முகமலர்ச்சியுடன் இவர் " ஆமாம் எல்லாம் சரியாகி விடும் " என்றார்.

பின் அந்த செல்வேந்தர் ஒரு செக் புத்தகத்தை எடுத்து கையெழுத்திட்டு இவரிடம் நீட்டி " இந்தா இதில் 500 கோடிக்கு செக், நீ கேட்டதைவிட 10 மடங்கு அதிகமாக கொடுத்திருக்கிறேன். எல்லாவற்றையும் சமாளி. ஆனால் ஒருவருடம் கழித்து இந்த பணத்தை எனக்கு திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அடுத்த வருடம் இதே நாளில் இங்கே நான் காத்திருப்பேன் " என்று சொல்லி விட்டு செக்கை இவர் கைகளில் தினித்து விட்டு சென்றார் அவர்.
பின் அந்த நிறுவனத்தின் தலைவர் வேகமாக அலுவலகத்திற்கு சென்றார். தன் அறைக்குள் சென்று அந்த செக்கை தனது பீரோவில் வைத்து பத்திரமாக பூட்டினார். பின் தனது உதவியாரை அழைத்து அனைத்து ஊழியர்களை நிர்வாக கூட்டத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்ய சொன்னார். ஊழியர்கள் அனைவரும் கூட்டத்தில் அமர்ந்திருந்தனர்.

இந்த நிறுவனத்தின் தலைவர் பேச ஆரம்பித்தார். " நண்பர்களே, நமது நிறுவனத்தில் 50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்போது என்னிடம் 500 கோடி ரூபாய் உள்ளது ஆனால் அந்த பணத்தை தொடமாட்டேன். இந்த நஷ்டம் எப்படி ஏற்பட்டது ? எதனால் ஏதற்காக ஏற்பட்டது ? என்று ஆராய்ந்து அதை களைந்து நமது நிறுவனத்தை வெற்றிகரமாக செயல்படுத்த நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுங்கள் " என்று கேட்டுக் கொண்டார்.

பின்னர் வேளைகள் வேகமாக நடந்தன. தவறுகள் கண்டுப் பிடிக்கபட்டு களையப்பட்டன. மிக சரியாக அனைத்து ஊழியர்களையும் ஓத்துழைக்க வைத்தார். அவருடைய பேச்சு மூச்ச செயல் சிந்தனை தூக்கம் அனைத்து அவருடைய தொழிலை பற்றியே இருந்தது.
மிக சரியா ஒரு வருடம் கழிந்தது. கணக்குகள் அலசப்பட்டன. மிக சரியா 550 கோடி ரூபாய்கள் லாபம் ஈட்டி இருந்தது இவருடைய நிறுவனம். அடுத்த நாள் விடிய காலை அந்த செல்வேந்த கொடுத்த 500 கோடிக்கான செக்கை எடுத்துக் கொண்டு அந்த பூங்காவிற்கு விரைந்தார். சென்ற வருடம் அமர்ந்த அதே சிமென்ட் பெஞ்சில் அமர்ந்தார். காலை நெரம் ஆதலால் பனி மூட்டத்துடன் காணப்பட்டது. சற்று நேரம் கழித்து தூரத்தில் அந்த செல்வேந்தரும் அவருக்கு அருகில் அவரை கைகளால் பிடித்துக் கொண்டு ஒரு பெண்மணியும் வந்தது பனி மூட்டத்தின் ஊடே தெரிந்தது. சில விநாடிகள் கழித்து பார்த்தால் அந்த பெண்மணி மட்டும் வருகிறார் அந்த செல்வேந்தரை காணவில்லை.

இவர் சென்று அந்த பெண்மணியிடம் " எங்கே அம்மா உங்கள் கூட வந்தவர் ? " என்றார்

அதற்கு அந்த பெண்மணி பதட்டத்துடன் " உங்களுக்கு அவர் ஏதாவது தொந்தரவு கொடுத்து விட்டாரா? " என்றார்
இவர் " இல்லை அம்மா, ஏன் கேட்கிறீர்கள் ?" என்றார்.
அந்த பெண்மணி " இல்லை அய்யா அவர் ஒரு பைத்தியம் அதாவது மனநிலை சரி இல்லாதவர், செக்கு தருகிறேன் என்று சொல்லி இங்கு இருப்பவர்களிடம் தனது பழைய செக்கை கிழித்து கையேழுத்திட்டு கொடுத்து விடுவார் " என்றார்.

ஒரு நிமிடம் அந்த நிறுவன தலைவருக்கு பேசமுடியவில்லை. அப்போ நம்மால் முடியும் என்று நினைத்தால் நிச்சயம் முடியும். அதுவே நம்மை காப்பாற்றி இருக்கிறது என்று நினைத்தார்.

- இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்வென்றால் எந்த ஒரு விசயமும் நம்மால் முடியும் என்று முதலில் நம் நம்பவேண்டும் அப்போதுதான் நாம் நமது வாழ்வில் முன்னேற முடியும்.

Relaxplzz

வதந்தியை நம்பி பத்திரிகையில் தவறான செய்தி .!!! Share Plzz முதலில் நம்பகத் தன்மை...

Posted: 30 Oct 2014 09:00 AM PDT

வதந்தியை நம்பி பத்திரிகையில் தவறான செய்தி .!!! Share Plzz

முதலில் நம்பகத் தன்மை அறியாமல் நானும் மற்றவர்களின் பதிவை சேர் செய்தமைக்கு வருந்துகிறேன்..
.
ஐ டி துறையில் வேலை செய்யும் இப்பெண் , சமீபத்தில் தன் மகள் வற்புறுத்தலின் பேரில் " வாட்ஸ் அப்பில் " இணைத்துள்ளார் .

கடந்த மாதம் ., இவருக்கு பிடிக்காத யாரோ ஒருவர் ப்ரொபைல் இல் இருந்த இவரின் போட்டோவை எடுத்து சென்னை முழுதும் திருடுவதாக வீண் புரளியை கிளப்பி விட்டுள்ளார்கள் .

பின்னர் ., தன்னுடன் வேலை செய்யும் தோழி ஒருவர் உன் போட்டோ " வாட்ஸ் அப் மற்றும் பேஸ் புக்கில் " திருடி என்று அங்கும் இங்கும் உலா வருகிறது என்று அப்பெண்ணிடம் கூறியுள்ளார் .

சற்றும் எதிர்பாராமல் , மனம் உடைந்த அப்பெண் .,

நான் செய்யாத ஒரு தவறை , நான் செய்ததாக கூறி தன்னை அவமானம் செய்த அந்த நபரை கண்டுபிடித்து தண்டனை வழங்க கூறி " சைபர் கிரிமினல் செல்லில் " புகார் அளித்துள்ளார் . புகார் நம்பர் :- 025429804.

அதற்கான தீர்வுக்காக அவர் காத்துகொண்டிருக்கும் இந்நிலையில் , தற்போது பத்திரிகையிலும் அவர் போடோவுடன் வெளிவந்துள்ளது குறிப்பிட தக்கது .

செய்திகளின் ஆதாரம் அறியாமல் , குருடன் போக்கில் ஒரு பெண்ணை களங்கப்படுத்திய
நம் மீடியாவை என்னவென்று சொல்வது .!

மீடியா நண்பர்களே திருந்துகப்பா.!!!

இவர் சம்பந்தமாக பதிவிட்ட நண்பர்கள் அனைவர்களும் தயவு செய்து அப்பதிவை நீக்கிட அன்புடன் வேண்டுகிறேன் .

பாதிக்கப்பட்ட தோழிக்கு என் ஆழ்ந்த வருத்தங்கள் .

பெண்களே எந்த ஒரு சோசியல் நெட்வொர்க்கிலும் உங்கள் போட்டோவை இணைக்காதீர்கள். இணைப்பதின் பின் விளைவுகளில் இப்பெண்ணுக்கு நேர்ந்த அவமானமும் ஒரு சாம்பிள் .

- காயின் காதர்

Relaxplzz


மழலையின் புன்னகை பூவிற்க்கு முன் ! (மத்த)தாப்பின் பூக்கள் தலை கவிழ்கிறது..!! <...

Posted: 30 Oct 2014 08:50 AM PDT

மழலையின்
புன்னகை பூவிற்க்கு
முன் !
(மத்த)தாப்பின் பூக்கள்
தலை கவிழ்கிறது..!! ♥

- Sheila Chowdry


இந்தியா - உலகத்தின் மிகப் பெரிய ஜனநாயக நாடு.... Proud to be an INDIAN....(y)

Posted: 30 Oct 2014 08:40 AM PDT

இந்தியா - உலகத்தின் மிகப் பெரிய ஜனநாயக நாடு....
Proud to be an INDIAN....(y)


:)

Posted: 30 Oct 2014 08:30 AM PDT

:)


திருடன் 1: தலைவா... ஏதாவது புதுசா செய்யணும்னு தோணுது... இப்பெல்லாம் நம்ம பத்தி ய...

Posted: 30 Oct 2014 08:15 AM PDT

திருடன் 1: தலைவா... ஏதாவது புதுசா செய்யணும்னு தோணுது... இப்பெல்லாம் நம்ம பத்தி யாருமே பேச மாட்டீங்கறாங்க...

திருடன் 2: நீ சொல்லறதும் சரிதான்.... நம்ம விட பெரிய திருடர்களா அரசியல்வாதிகள் மாறீக்கிட்டு இருங்காங்க...

தலைவன்: சரி! நம்ம பத்தி எல்லாத்துக்கும் எடுத்துச்சொல்ல யாராவது ஏதாவது ஒரு திட்டம் சொல்லுங்க பார்க்கலாம்....

கூட்டமே பலமாக யோசிக்கிறது....
பல மணி நேர யோசனைக்கு பின்....

திருடன் 1: தலைவா! இப்ப நம்ம பிரதமர் "தூய்மை இந்தியா"னு ஒரு திட்டத்தை கொண்டுவந்துருக்காரு... அதே போல..

தலைவன்: டே என்னடா சொல்ற... நாம ஏண்டா தெருத்தெருவா போய் சுத்தம் பண்ணனும்..

திருடன் 1: தலைவரே.. சொல்றது முழுசா கேளுங்க... நம்ம திட்டத்தோட பேரு... "தூய்மை அரசியல்வாதி"..

நாம ஒவ்வொரு அரசியல்வாதியா தேர்ந்தெடுக்கிறோம்... அவங்க வீட்ட சுத்தமா கொள்ளை அடிக்கிறோம்.. ஒன்னு கூட விடாம.. இது எப்படி இருக்கு....

தலைவன்: யோசனை நல்லாத்தான் இருக்கு... சரி இன்னேலேயிருந்து நாம் இத செயல்படுத்தலாம்..

:P :P

Relaxplzz

அன்பு திருமணம் ஆன புதுதம்பதினர்கள் மருத்துவமனைக்கு வரும்பொழுது , Pregnancy Conf...

Posted: 30 Oct 2014 08:00 AM PDT

அன்பு

திருமணம் ஆன புதுதம்பதினர்கள் மருத்துவமனைக்கு வரும்பொழுது , Pregnancy Confirmed ( உங்கள் மனைவியின் கர்ப்பம் உறுதி செய்யப்படுகிறது ) - என நான் சொல்லும் அந்த தருணம் பெண் சந்தோஷப்படுகிறாள் , ஆண் பெருமைப்படுகிறான் . பெண் மனதில் 9 மாதகாலம் குழந்தையை எப்படி பாதுகாப்பது என சிந்தீப்பாள் , ஆனால் ஆண் மனைவி, குழந்தை இரண்டு பேரையும் எப்படி பாதுகாப்பது என சிந்தித்து கொண்டு இருப்பான், பெண் மனதில் 10% அன்பு இருந்தால் , அதை 100 % வெளிப்படுத்துவாள் . ஆனால் ஆண் மனதில் 100% அன்பு இருக்கும் ஆனால் 10% அன்பைக்கூட வெளிப்படுத்த தெரியாது . ஆண்களுக்கு கோபத்தை வெளிப்படுத்த தெரிந்த அளவிற்க்கு அவர்கள் மனதில் இருக்கும் அன்பையும் முழுமையாக வெளிப்படுத்தி இருந்தால் பெண்களை விட ஆண்களே அன்புக்குரியவர்கள் என்ற உண்மை இந்த உலகத்திற்க்கு தெரிந்து இருக்கும் .

அறிவு தளத்தில் வேண்டுமானல் சில நேரங்களில் பெண்கள் ஆண்களைவிட உயர்வாக தெரியலாம் . ஆனால் அன்பு தளத்தில் எப்பொழுதும் பெண்களை விட ஆண்களே உயர்ந்துள்ளனர் என்பதை என்னால் உறுதி பட சொல்ல முடியும் ......

அனுபவம் பேசுகிறது !!!!

Dr.Rohaiyaah Bibi

Relaxplzz


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் மாதச்சம்பளம் பிரிக்கையில் மனம் போகுது தலப்பாக்கட்டு; மாதக்கடை...

Posted: 30 Oct 2014 07:50 AM PDT

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

மாதச்சம்பளம்
பிரிக்கையில்
மனம் போகுது
தலப்பாக்கட்டு;
மாதக்கடைசியில்
கண்கள் தேடுது
அம்மா உணவகம்;

- மன்னை சுரேஷ்

புன்னகையுங்கள்.... புன்னகை எல்லாவற்றையும் அழித்துவிடும். <3

Posted: 30 Oct 2014 07:40 AM PDT

புன்னகையுங்கள்.... புன்னகை எல்லாவற்றையும் அழித்துவிடும். ♥


:)

Posted: 30 Oct 2014 07:30 AM PDT

:)


அல்சரை தவிர்க்க.........! நண்பர்களே தயவு செய்து இதை அதிகம் ஷேர் செய்யுங்கள்...!...

Posted: 30 Oct 2014 07:15 AM PDT

அல்சரை தவிர்க்க.........!

நண்பர்களே தயவு செய்து இதை அதிகம் ஷேர் செய்யுங்கள்...!

உங்கள் ஷேர் ஒரு உயிரை கூட காப்பாற்றலாம்.....!

ஒரு கப் தயிரை தவறாமல் சாப்பிட்டு வந்தால் அல்சர் வரவே வராது.......!

தினமும் ஒரு ஏலக்காயை தேனோடு உண்பது கண் பார்வைக்கும், நரம்பு மண்டலத்திற்கும் மிகவும் நல்லது.......!

தினமும் இரண்டு அல்லது மூன்று ஓமம் சாப்பிட்டால் ஒரு மனிதனுக்கு தேவையான இரும்புச் சத்தில் பத்து சதவீதம் கிடைக்கிறது.......!

குழந்தைகளுக்கு முகத்தில் பாலுண்ணி தோன்றியதும், வெங்காயத்தை வெட்டி அதன் மேல் தேய்த்துவிட்டால் இரண்டு மூன்று தினங்களில் உதிர்ந்து விடும்.......!

மஞ்சள், பூண்டு இவை இரண்டையும் பால் விட்டு அரைத்து தலைக்கு பற்றுப் போட்டால், தலைவலி நீங்கும்.......!

உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்கலாம் anyway share பண்ணுக......!

நண்பர்களே தயவு செய்து இதை அதிகம் ஷேர் செய்யுங்கள்...!

Relaxplzz

படித்துவிட்டு தயவு செய்து ....SHARE.... பண்ணுங்க ....ப்ளீஸ் *******************...

Posted: 30 Oct 2014 07:00 AM PDT

படித்துவிட்டு தயவு செய்து ....SHARE.... பண்ணுங்க ....ப்ளீஸ்

***********************************************
வீடுகளில் மாடு வளர்ப்பவர்கள், அவைகளை கோமாதா
லக்ஷ்மி என்றெல்லாம் அன்போடும் பாசத்தோடும்,
பொங்கலன்று பூ வைத்து போட்டுவைத்தும் அழகு
பார்த்து, தன் பிள்ளைகள் போலவே பாவிக்கின்றனர்
-------------------------------------------------------------------------
ஆனால், தன் இரத்தத்தை பாலாக மாற்றி நம் தாய்க்கு
நிகராக தங்கள் வீட்டில் வளர்ந்த மாட்டை வயதான
பின்பு அடிமாட்டுக்கு விற்பனை செய்துவிடுகின்றனர்,
---------------------------------------------------------------------------
சிலர் கோவிலுக்கு காணிக்கையாக விட்டு விடுகின்றனர்.
கோவிலிலும் நிறைய மாடுகள் சேர்ந்ததும் அவைகளை
மொத்தமாக ஏலம் விட்டுவிடுகிறார்கள்...
-------------------------------------------------------------------------
கோவில்களில் ஏலம் விடும் மாடுகளை அடிமாட்டுக்கு
அதாவது அறுப்பு மாட்டுக்கு எடுத்து சென்று விடுகிறார்கள்
--------------------------------------------------------------------------
இப்படி அறுப்பு மாட்டுக்கு எடுத்துச்செல்பவர்கள் மாடுகளை
பலவித சித்தரவதைகளுக்கு ஆளாக்குகின்றனர் ...
-------------------------------------------------------------------------
லாரிகளில் நிறைய மாடுகளை ஏற்றி பலநாட்கள் அவைகளை
பட்டினி போட்டு மழையிலும் வெய்யிலிலும் நிற்கவைத்தே கஷ்டப்படுத்தி கொடுமைபடுத்தி மாடு அறுக்கும் இடத்திற்கு
கொண்டு செல்கின்றனர் ....
-------------------------------------------------------------------------
இறுதியில் அவைகளின் கழுத்தை அறுப்பதற்கும் முன்
பெரிய சுத்தியால் அவைகளின் மண்டையில் ஓங்கி
பலமுறை அடிக்கின்றனர் ...
-------------------------------------------------------------------------
ஏனெனில் நல்ல நிலையில் இருக்கும் மாடுகளின் கழுத்தை அறுத்தால், அவை கழுத்து அறுபட்ட பின்பு வெகுநேரம் துள்ளி துடித்து அறுப்பவர்களுக்கு சிரமத்தை ஏற்ப்படுத்தும் என்பதால்
--------------------------------- --------------------------------------
பாருங்கள் நண்பர்களே ....
கொஞ்சம் இறக்கம் காட்டுங்கள் ...
அவைகளும் நம்மை போல ஒரு உயிர்தானே ....
தன் இரத்தத்தையே பாலாக மாற்றி,
நம் தாய்க்கு நிகராக விளங்கும் மாடுகளின் நிலையை
கொஞ்சம் நினைத்து பாருங்கள் ...
------------------------------------------------------------------------
அன்பு நண்பர்களே !!!

நீங்களோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள்
உறவினர்கள் யாரேனும் மாடு வளர்ப்பவர்களாக
இருந்தால் தயவு செய்து மாடுகளை அடிமாட்டுக்கு
விற்கவோ அல்லது கோவில்களுக்கு காணிக்கை
செலுத்தவோ வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளுங்கள்...
------------------------------------------------------------------------
நம் வீட்டு தோட்டத்தில் நமக்காகவே வளர்ந்த மாட்டை
அதன் ஆயுள் முடியும் வரை வளர்ப்போம் ...இறந்தபின்பு
தோட்டத்தில் ஏதோ ஒரு மூலையில் புதைத்து அதன் மீது
இரண்டு கனிதரும் மரக்கன்றுகளை நடுவோம் ...
இறந்த மாட்டின் உடல் அந்த மரங்களுக்கு நல்ல, சிறந்த
எருவாகிவிடும் .....
------------------------------------------------------------------------
கொஞ்சம் இறக்கம் காட்டுங்கள் ...
அவைகளும் நம்மை போல ஒரு உயிர்தானே ..

Relaxplzz


அண்ணா முதல்வராயிருந்தபோது எதிர்க்கட்சித் தலைவர் சொன்னார், ''புளி விலை இப்போது அ...

Posted: 30 Oct 2014 06:50 AM PDT

அண்ணா முதல்வராயிருந்தபோது எதிர்க்கட்சித் தலைவர் சொன்னார்,

''புளி விலை இப்போது அதிகமாக இருக்கிறது எங்கள் ஆட்சியில் புளியின் விலை மிகக் குறைவாக இருந்தது.இது யாருடைய சாதனை?''

அண்ணா சொன்னார்,

''இது புளிய மரத்தின் சாதனை!'' ;-)

Relaxplzz

ஹீரோ ஆக நினைக்கும் கருணாநிதிக்கு கிடைக்கப் போவது ஜீரோதான் - ஓ. பன்னீர்செல்வம்....

Posted: 30 Oct 2014 06:40 AM PDT

ஹீரோ ஆக நினைக்கும் கருணாநிதிக்கு கிடைக்கப் போவது ஜீரோதான் - ஓ. பன்னீர்செல்வம்.

:>>நான் வாய மட்டும் குவிக்கயில ..ஆரோ டப்பிங் கொடுக்கிறாங்கோ ;-) ;-)

- நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்


:)

Posted: 30 Oct 2014 06:30 AM PDT

:)


எம்.ஆர்.ராதா எழுதிய ஒரு கட்டுரையில் இருந்து.... ஜெயில்லே நானே சமைச்சுக்குவேன்....

Posted: 30 Oct 2014 06:05 AM PDT

எம்.ஆர்.ராதா எழுதிய ஒரு கட்டுரையில் இருந்து....

ஜெயில்லே நானே சமைச்சுக்குவேன். குலாப்ஜாமூன், ஜாங்கிரி, இட்லி எல்லாம் செய்துக்குவேன். என் கூட வெள்ளைக்கார கைதி இருந்தார். இட்லியை மட்டும் அவருக்குக் கொடுப்பேன். நான் செய்து கொடுத்த இட்லியை புகழ்ந்து, அவருடைய சம்சாரத்துக்குக் கூட லெட்டர் போட்டார் அவர்.

என் இட்லிக்குக் கூலியா, திட்டுறதுக்கு சில வார்த்தைகளை மட்டும் அவர்கிட்டே கேட்டு கத்துக்கிட்டேன். அவங்க நாட்டை பத்தியெல்லாம் கேட்கும் போது, பொறுமையா பதில் சொல்வார்.

"வக்கீல்களே ஜட்ஜா வர்றது சரியா?'ன்னு அவர்கிட்டே கேட்டேன்.

"அதுதானே வழக்கம்?' என்றார் அவர்.

"உங்க நாட்டிலேயும் அப்படித்தானா?' என்றேன்.
"ஆமா!'ன்னார்.

"முப்பது வருஷமா பொய் சொல்றதையே பிழைப்பாக கொண்ட ஒரு வக்கீல், பதவி உயர்வுங்கிற பேரிலே ஜட்ஜ் ஆனதும், எல்லாரும் அவரை கடவுளுக்கு சமம்ன்னு சொல்றாங்களே... இது நியாயமா?'ன்னு கேட்டேன்.

அதுக்கு அவர் பதில் பேசவேயில்லை.

======ராதா கேட்பதில் நியாயம் இருக்கா?

Relaxplzz


"தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்"

சொந்த ஊரில் பெருசுங்க யாராச்சும் 'தம்பி... நீங்க பேஸ்புக்குல இருக்கியலா' அப்படின...

Posted: 30 Oct 2014 05:56 AM PDT

சொந்த ஊரில் பெருசுங்க யாராச்சும்
'தம்பி... நீங்க பேஸ்புக்குல இருக்கியலா'
அப்படின்னு கேட்கும் போது நமக்குள்ள
இருக்கும் நடிகன் முழிச்சுக்கிறான்...

#பேஸ்புக்கா... அப்படின்னா என்ன... :P

- சதீஷ் குமார் தேவகோட்டை

ஒரு ஊரில் ஒரு ஆட்டிறைச்சிக் கடை இருந்தது. அக்கடையில் முதலாளியே தொழிலாளி. ஒவ்வ...

Posted: 30 Oct 2014 05:46 AM PDT

ஒரு ஊரில் ஒரு ஆட்டிறைச்சிக் கடை இருந்தது.

அக்கடையில் முதலாளியே தொழிலாளி.

ஒவ்வொருநாளும், கடையை மூடப்போகும் சமயம், ஒரு திமிர்பிடித்தவன் அக்கடைக்கு வந்து, முதலாளியிடம், "முதலாளி மூளையிருக்கா?" என்று கேட்பான்.

அதற்கு முதலாளியோ, மூளை இல்லை என்றவுடன், என்ன முதலாளி இன்றும் உங்களிடம் மூளை இல்லையா? என்று கிண்டலுடன் கேட்டுவிட்டு செல்வான்.

இதையே வழக்கமாகக் கொண்டிருந்த அவனை, எப்படியாவது சொற்போரில் தோற்கடிக்கவ...ேண்டும் என்பது அந்த முதலாளியின் நிறைவேறாத ஆசை.

நாட்கள் நகர்ந்தன.

ஒருநாள், அம்முதலாளியின் நன்கு படித்த நண்பன் ஒருவன் அக்கடைக்கு வந்தான். அவனிடம் தன் நிறைவேறாத ஆசை பற்றி முதலாளியும் கூற, "அட இவ்வளவு தானே, நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று நண்பனும் கூறினான்.

கடையை மூடப்போகும் சமயம், அத் திமிர்பிடித்தவன் வந்து, முதலாளியிடம்,

"முதலாளி மூளையிருக்கா?" என்று வழக்கம் போலக் கேட்டான்.

அதற்கு முதலாளியின் நண்பன் அவனைப் பார்த்து,

"இதுவரை வந்த அனைவருக்கும் மூளை இருந்தது, ஆனால் துரதிஷ்டவசமாக உனக்குத்தான் இல்லை" என்றான்.

திமிர்பிடித்தவனின் பேயறைந்த முகத்தைப் பார்த்த, கடை முதலாளியின் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி...!!!!!!!!!

Relaxplzz


"குட்டிக்கதைகள் - 2"

கையிலே கலைவண்ணம் கண்டேன்!..

Posted: 30 Oct 2014 05:40 AM PDT

கையிலே கலைவண்ணம் கண்டேன்!..


(y)

Posted: 30 Oct 2014 05:30 AM PDT

(y)


குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் பாம்பு வளர்ப்பு தொழில் ********************...

Posted: 30 Oct 2014 05:14 AM PDT

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் பாம்பு வளர்ப்பு தொழில்
*********************************************************

கரு நாகப்பாம்பு வளர்ப்பது எப்படி?

கரு நாகப்பாம்பு வளர்ப்பு தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. பண்ணை அமைத்து சிரத்தையுடன் தொழிலில் ஈடுபட்டால் லாபத்தை அள்ளலாம் என்று நெல்லை மாவட்டத்தில் 'ஸ்னேக் ஃபார்ம் இந்தியா' நடத்திவரும் ஜெயந்த் பிரபாகர் கூறுகிறார்.

"2004ம் ஆண்டு 5 ஜோடி கரு நாகப்பாம்புகளுடன் பெருந்துறையில் பண்ணை துவங்கினேன். அவை முட்டையிட துவங்கியதும் வேறொரு பண்ணையாளரிடம் கொடுத்து குஞ்சு பொரிக்க செய்து, அவற்றையும்
சேர்த்து வளர்த்தேன். கரு நாகப்பாம்பு வளர்ப்பையே முழு நேர
தொழிலாக மேற் கொண்டேன். தமிழகத்தில் கரு நாகப்பாம்பு எண்ணிக்கை குறைவு. ஒப்பந்த அடிப்படையில் கரு நாகப்பாம்புகளை வளர்க்க
விவசாயிகளிடம் ஆர்வத்தை உருவாக்கினேன்.

சிரமம் இல்லாத வளர்ப்பு முறை, அதனால் கிடைக்கும் வருமானத்தை பார்த்து இன்று தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையிலும், சொந்தமாகவும்
ஆயிரக்கணக்கானோர் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சந்தை வாய்ப்பு!

கரு நாகப்பாம்புகளை விற்பனையாளர்கள் நேரடியாகவே பண்ணைக்கு வந்து வாங்கிச் செல்கின்றனர். அக்கம்பக்கத்தினர் வீட்டுத்தேவைக்கும்,
பாம்பாட்டிகளும் சர்கஸ் காரர்களும் வந்து வாங்கிச் செல்வர்.
விசேஷங்களுக்கும் வாங்கிச் செல்வார்கள். ஓட்டல்கள், உணவு விடுதிகளுக்கும்
நேரடியாக ஆர்டர் பிடித்து சப்ளை செய்யலாம்.

பயன்கள்:

மற்ற பறவை, விலங்கினங்களை ஒப்பிடும்போது கரு நாகப்பாம்புவில்
கழிவு குறைவு. முட்டை, விசம், இறைச்சி, எண்ணெய் கிடைக்கிறது.
கரு நாகப்பாம்புகளின் இறைச்சி மற்ற இறைச்சிகளை விட சுவையில்
தனித்தன்மை வாய்ந்தவை.

ஆடு, மாடு போன்ற கால்நடைகள்தான் சிவப்பு மாமிசம் கொடுக்கும். சிவப்பு மாமிசம் கொடுக்கும் பறவை இனம் கரு நாகப்பாம்பு. கரு நாகப்பாம்புகளை இறைச்சிக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. 4 முதல் 5 கிலோ எடை கொண்ட கரு நாகப்பாம்புகளை இறைச்சிக்காக வெட்டும்போது 1முதல் 2
கிலோ கொழுப்பு தனியாக கிடைக்கும். கொழுப்பை காய்ச்சி எண்ணெய்
எடுக்கப்படுகிறது.

5 ஜோடி கரு நாகப்பாம்புகள் வளர்த்தால் 1/2 முதல் 3/4 லிட்டர் கரு நாகப்பாம்பு விசம் கிடைக்கும். இதனை சுத்திகரிப்பு செய்து வலி நிவாரணி,
அழகு சாதன கிரீம்கள் தயாரிக்க பயன்படுத்தப்படு கிறது.

இந்த விஷத்தினை ஒரே ஒரு நாள் மட்டும் ஒரு ஸ்பூன் அருந்தினால் போதும். வாழ் நாள் முழுக்க எந்த நோயும் அண்டாது.

ஒரு கரு நாகப்பாம்பில் 6 சதுரஅடி தோல் கிடைக்கும். மிருதுவாகவும், அதிக
வலுவாகவும் இருப்பதால் செருப்பு, கைப்பை, பர்ஸ்கள் செய்ய பயன்படுத்தப் படுகிறது. ஒரு கரு நாகப்பாம்புகளை வீட்டில் வளர்ப்பதால் செல்வம் பெருகும்
என்பது அவர்களது நம்பிக்கை.

கட்டமைப்பு பண்ணை தொடங்க குறைந்தது 5 ஜோடி கரு நாகப்பாம்பு குட்டிகள்
(ரூ.7500) வேண்டும். 4அடி நீளம், 35 அடி அகல இடம் வேண்டும். இடத்தை சுற்றி 5 அடி உயரம் கம்பி வேலி, தீவனம் மழையில் நனையாமல் இருக்க சிறிய ஆஸ்பெஸ்டாஸ் ஷெட், தீவனம் வைக்க 2 பாத்திரம், 10
மண்பாணை (இதற்கு செலவு ரூ.5 ஆயிரம்), முட்டைகளை பொரிக்க
வைக்க இன்குபேட்டர் (ரூ.3 லட்சம்), சீரான மின் சப்ளைக்கு ஜெனரேட்டர்
(ரூ.1 லட்சம்) போன்றவை வேண்டும்.

எங்கு வாங்கலாம்?

கரு நாகப்பாம்பு குட்டிகள் மற்றும் தீவனங்களை தமிழகம் முழுவதும்
மாவட்டந்தோறும் உள்ள பாம்பு பண்ணைகளில் பெற்றுக் கொள்ளலாம்.
இன்குபேட்டர், ஹேச்சர் மெஷின் ஐதராபாத்தில் கிடைக்கும்.

குஞ்சுகள் தேர்வு

கரு நாகப்பாம்பு குட்டிகளை வாங்கும்போது பார்வை, கேட்கும் திறன் சரியாக
உள்ளதா, நன்றாக கடிக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும்.

வருமானம் 3 மாத வயதுள்ள 5 ஜோடி கரு நாகப்பாம்பு குட்டிகள் வளர்த்தால் 6
மாதத்துக்குள் 3கிலோ எடையுள்ள கரு நாகப்பாம்புகள் கிடைக்கும். 5 ஜோடி வளர்க்கும்போது 100 முட்டைகள் கிடைக்கும். இதன்மூலம் தரமான
நன்றாக கடிக்கக்கூடிய வீரியமுள்ள 60 பாம்புகள் கிடைத்தால்
அவற்றை விற்று ரூ.4.5 லட்சம் சம்பாதிக்கலாம். 6 மாதங்களுக்குப்
பிறகு ஒவ்வொரு மாதமும் தலா ரூ 1.5 லட்சங்கள்
சம்பாதிக்கலாம்.

அணுக வேண்டிய முகவரி :

..ரிலாக்ஸ் ப்ளீஸ்..
சீட்டிங் ல்காம்ப்ளெக்ஸ்
7th முட்டுச்சந்து
சென்னை 60000018
தொலை பேசி எண் :
இனிமேல்தான் வாங்க வேண்டும்.

# ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் யப்ப்ப்ப்ப்ப்ப் ப்ப்ப்ப்பா, இந்த மக்கள நம்ப
வக்கிறதுக்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு.

Relaxplzz


குசும்பு... 1

மகாராணி எலிசபெத் ஒரு நாள் அலுவலக வேலையினை நீண்ட நேரம் பார்த்துவிட்டு இரவு இரண்டு...

Posted: 30 Oct 2014 04:51 AM PDT

மகாராணி எலிசபெத் ஒரு நாள் அலுவலக வேலையினை நீண்ட நேரம் பார்த்துவிட்டு இரவு இரண்டு மணிக்கு தன படுக்கை அறைக்கு வந்தபோது அறையின் கதவு உள்ளே பூட்டியிருந்தது தெரிந்தது.

தன கணவர் உள்ளே தூங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்த ராணி மெதுவாகக் கதவைத் தட்டினார்.முதலில் பதில் ஏதுமில்லை.மறுபடியும் மெதுவாகத் தட்டினார். அப்போது உள்ளிருந்து,''யாரது?''என்று குரல் கேட்டது.ராணியோ,''நான்தான்,'' என்று பதிலுரைத்தார்.

''நான்தான் என்றால்யார்?பெயர் எதுவும் கிடையாதா?''என்று கதவைத் திறக்காமலேயே கணவர் கேட்டார்.''நான்தான்,மகாராணி வந்திருக்கிறேன்,''என்று சொன்னதும்,''இந்த நடுஇரவில் மகாராணியாருக்கு என் அறையில் என்ன வேலை?'' என்ற கேள்வி வந்தது.

உடனே ராணி சிரித்துக் கொண்டே,''நான்தான் உங்கள் அருமை மனைவி எலிசபெத் வந்திருக்கிறேன் கதவைத் திறங்கள்,''என்று சொன்னதும் அவர் கணவர் புன்னகையுடன் வந்து கதவைத் திறந்தார்.

சக துணையிடம் உண்மையான அன்புடனும் நேசத்துடனும் சொல்லப்படும் எந்த ஒரு விஷயமும் உடனே ஏற்றுக் கொள்ளப்படும்...

உங்கள் வாழ்க்கைத் துணையை உண்மையாக நேசியுங்கள் ♥ ♥

Relaxplzz


குடும்பஸ்தன்_பாடசாலை

இந்த சீனி மிட்டாய் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 30 Oct 2014 04:40 AM PDT

இந்த சீனி மிட்டாய் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:)

Posted: 30 Oct 2014 04:30 AM PDT

:)


யார் மிகச்சிறந்த(?!) சோம்பேறி என்று போட்டி. 2 பேருக்கு இடையில் tie. Price dist...

Posted: 30 Oct 2014 04:20 AM PDT

யார் மிகச்சிறந்த(?!) சோம்பேறி என்று போட்டி.

2 பேருக்கு இடையில் tie.

Price distribution functionல‌ ஜட்ஜ் முதல் நபரை அழைத்தார்கள். அவன் சென்று பரிசு வாங்கினான்.

அப்போது 2வது நபரின் பெயரை சொல்லி அழைத்தார்கள்.

2வது நபர் சொன்னான்: "அட யாருங்க அங்க வரைக்கும் பரிசு வாங்கரதுக்காக வர்றது. அதான் என் ஃப்ரண்ட் அங்க இருக்கானே, அவன் கிட்ட‌யே கொடுத்திருங்க. நான் அப்புறமா எப்பவாவது அவனிடமிருந்து வாங்கிக்கிறேன்."

குஷியில் குதித்த ஜட்ஜ் சொன்னார்: "ஆஹா, நீ தான்யா மிகச்சிறந்த(?!) சோம்பேறி & நம்பர் 1, இந்தா உனக்குத்தான் முதல் பரிசு."

- karuppaiah manivannan

Relaxplzz

கண்ணதாசனின் பொன்மொழிகள் 1) அறிவாளிகளின் குழந்தைகள் பெரும்பாலும் முட்டாளாகவே வளர...

Posted: 30 Oct 2014 04:05 AM PDT

கண்ணதாசனின் பொன்மொழிகள்

1) அறிவாளிகளின் குழந்தைகள் பெரும்பாலும் முட்டாளாகவே வளர்கிறார்கள், நிழலிலே வளரும் செடி சோகையாக இருப்பது போல

2) பெர்னாட்ஷா வை நினைத்து கொண்டு தன்னை கண்ணாடியில் பார்ப்பவர்கள், நடிகையை நினைத்து கொண்டு மனைவியை கட்டிபிடிப்பவர்கள் ஆவர்

3) கண்களை மூடுங்கள், காதுகளை அடைத்து கொள்ளுங்கள்
இதயத்தையும் மூடுங்கள், செய்துவிட்டீர்களா?

சபாஷ், நீங்கள் அரசியல் வாதியாகிவிட்டீர்கள்

4) ஒரெ ஒரு அற்பனை சமாளிப்பது - சர்வாதிகாரம்
ஒவ்வொரு அற்பனையும் சமாளிப்பதுதான் ஜனநாயகம்

5) விளக்கமாக பேசு, முடிவில் சிந்திக்கும் போது உனக்கே
குழப்பம் வரவேண்டும் அதுவே சிறந்த பேச்சு

6) அன்பிலே நணபனை வெல்லுங்கள்
களத்திலே எதிரியை வெல்லுங்கள்
பண்பிலே சபையை வெல்லுங்கள்
மஞ்சதிலே மனைவியை வெல்லுங்கள்

7) மூட்டையை கொடுத்து காசு வாங்குவான் சம்சாரி
காசு கொடுத்து மூட்டையை வாங்குவான் வியாபாரி
எதையுமே கொடுக்காமால் எல்லாத்தையும்
வாங்குவான் அரசியல்வாதி

8) தனியாக அழுங்கள், கூட்டத்தோடு சிரியுங்கள்
கூட்டத்தோடு அழுதால் நடிப்பு என்பார்கள்
தனியாக சிரித்தால் பைத்தியம் என்பார்கள்

9) உலகத்திலுள்ள எல்லோருமே யோக்கியர்தான்
தூங்கும்போது மட்டும்

10) காதலிக்கும் போது குழந்தையாயிரு அப்போதுதான் அவள் ஏமாற்றும் போதும் சிரித்துகொண்டே இருப்பாய்

11) கட்டாயம் காதல் செய்யுங்கள் - ஏனெனில்
சந்தோசம் மட்டுமே வாழ்க்கையல்ல

12) விதியையும் மதியால் வெல்லலாம்
என்று உன் விதியில் எழுதியிருந்தால்

13) யார் என்ன நினைக்கிறார்களோ என்று நினைத்து கொண்டே இருந்தால், நாம் என்ன நினைக்கிறோம் என்பதற்கு மரியாதையே இல்லாமல் போகும்

Relaxplzz


"சிந்தனைகள்"

முட்டாள்கள் மதங்களை காண்கிறார்கள்... அறிவாளிகள் மெய்பொருளை காண்கிறார்கள்...

Posted: 30 Oct 2014 03:46 AM PDT

முட்டாள்கள் மதங்களை காண்கிறார்கள்...
அறிவாளிகள் மெய்பொருளை காண்கிறார்கள்...


சும்மா... சும்மா... 1

:)

Posted: 30 Oct 2014 03:30 AM PDT

பதினேழு வயசில் கல்விக்கடன், முப்பது வயசில் கல்யாணகடன், நாற்பது வயசில் வீட்டுகடன்...

Posted: 30 Oct 2014 03:14 AM PDT

பதினேழு வயசில் கல்விக்கடன்,
முப்பது வயசில் கல்யாணகடன்,
நாற்பது வயசில் வீட்டுகடன்,
ஐம்பது வயசுக்கு மேல் பெத்தகடன்

#ஏழை ஆணின் வாழ்க்கை

- Kali Muthu.


"சில நியாயங்கள் - யதார்த்தங்கள்" - 2

0 comments:

Post a Comment