ilovemynative: Facebook page wall posts in Tamil |
- A small village near Dharmapuri has been found to be archaeologically significan...
- தொன்ம சிற்பங்களை பறைசாட்டும் பஞ்சபாண்டவர் மலை! தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என அழைக...
- மச்சி! வெறும் beer தாண்டா! பயப்படாம அடி! இந்த வார்த்தை எத்தனை பேர் வாழ்க்கையை தி...
- சிங்கள அரசை விட இன வெறி கொண்ட அரசு இந்தி அரசு. தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்களின் ச...
- அலங்கு நாய்கள் அழியவில்லை அவை "புள்ளி குட்டா " என்றப்பெயரில் பாக்கிஸ்தானில் (சிந...
- அழகு தமிழ்நாடு!
- #திருக்குறள் குறள் பால்: #பொருட்பால். குறள் இயல்: #நட்பியல். அதிகாரம்: #கூடாநட்ப...
- பெண்ணே! நீயெல்லாம் மேக்கப் போட்டாதான் அழகு. நானெல்லாம் பொறந்ததுலருந்தே அழகு.. #...
- விலங்குகள் நலன் என சொல்லி 4000 வருட பாரம்பரிய விளையாட்டான ஏறுதழுவுதலுக்கு தடை சொ...
- அமெரிக்க நகர் ஒன்றில், நம்ம நாராயணசாமி காரில் தன் மனைவி , அம்மா எல்லோருடனும் சென...
- தமிழ் தாய் வாழ்த்தில் மறைக்கப்பட்ட பகுதி! "நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழில...
- பொதிகை மலை அழகு!
- மற்றவருக்கு கொடுத்து உதவ பொருளில்லாமல் போனாலும் இலவசமாக வலியை கொடுக்காமல் இருப்ப...
- சோழநாடு சோறுடைத்து அன்று! இனி சோழநாடு மீத்தேனுடைத்து தான்!!
- பல தடவை தோல்விகள் நேரம் செலவு , பாதுகாப்பின்மை, அதனால் ஏற்பட்ட என் சொந்த கடன்கள்...
- ஆங்கிலம் பேச எந்த அளவுக்கு பெருமை படுறீங்களோ, அதே அளவுக்கு தமிழ்ல எழுத தெரியாதது...
- இந்த படத்தை பார்க்கும் போது தான் நாம் எவ்வளவு நேரத்தை வீணடிக்கிறோம் என்பது புரிக...
- ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மாமன்னன் இராசேந்திர சோழனுக்கு விழா எடுக்க போறாங்களாம். #சாத...
- நம்மை சுத்தி இருப்பவர்கள் உறவாகட்டும் ,நட்பாகட்டும் யார் இறந்து போனாலுமே அவர்களி...
- நம்மள மாறி மீன் சாப்புட இன்னொருத்தன் பொறந்து வரணும்... :D 1 1/2 கிலோ மீன் ஒரே ஆ...
- அழகு தமிழ்நாடு!
- இந்த செல்ஃபோன் யுகத்திலும், நம்மிடம் பேச நேரம் இல்லைனு சொல்லறவங்களுக்கு, நிஜமாக,...
- நாலு பேரு போற கார்ல சீட் பெல்ட் போடாம போனா தப்புன்னு சொல்றாங்க.. அப்பிடின்னா 50...
A small village near Dharmapuri has been found to be archaeologically significan... Posted: 05 Nov 2014 09:31 PM PST A small village near Dharmapuri has been found to be archaeologically significant as historians have revealed that it has been inhabited since the Neolithic age, about 10,000 years ago. Historians, who have been studying inscriptions and tools found in the area, are of the opinion that Modhur, situated about fifteen kilo metres from Dharmapuri town, was highly civilised and was most probably the capital for the Athiyaman kingdom. Stone hammers, grinding stones, rubbing stones, stone balls, and a terracotta statue of the mother goddess were excavated in the village. Nearly 17 varieties of stones tools were used by the people of Modhur that dates back to a period about 10,000 years back. "The Neolithic people who lived here were highly civilised and there is evidence that the people were engaged in agriculture," said S Selvaraj, a retired regional assistant director, department of archaeology. According to Selvaraj, in the entire state of Tamil Nadu, Modhur is the only place where this many stone tools and Celts were unearthed. "In Purananuru, a sangam anthology, there is evidence of the inhabitants of Modhur, which was called Mudhur at that time. As a historian, I think it was most likely that Modhur was the capital of the Athiyaman kingdom," he adds. When asked if there were any links between the Modhur and the Indus civilisation, he said, "There were no connections between the two. Inscriptions found in the Indus valley were in hieroglyphs but in Modhur, we had found graffiti inscriptions." However, he added that like Modhur, there may be Neolithic human habitation in Mayiladumparai of Pochampalli, Mullikadu of Harur and many parts of Krishnagiri district. A Chola period inscription of the 10th century, which was found in the village, indicated that Chola kings had imposed tax for marriages. Two hero stone inscription of a Hoysala king were also found in Modhur. The village holds a lot of evidence of the historical significance of Tamilians. Dharmapuri and Krishnagiri are archaeologically rich and much can be found if proper excavations are done, he said. http://www.newindianexpress.com/states/tamil_nadu/Modhur-village-throws-up-evidence-to-Dharmapuri's-neolithic-connection/2013/05/13/article1587584.ece http://www.newindianexpress.com/states/tamil_nadu/Modhur-village-throws-up-evidence-to-Dharmapuri's-neolithic-connection/2013/05/13/article1587584.ece Focus on archaeological importance of Dharmapuri The Government has given approval to the State Department of Archaeology to carry out excavation at Modhur in Dharmapuri, the Special Commissioner of Archaeology, T.S. Sridhar, said. Addressing presspersons here today, he said it was proposed to carry out the excavation at Modhur at an estimated outlay of Rs. 2.5 lakhs. The Archaeological Survey of India (ASI) had also given its approval, he said. The contour survey would begin in 10 days, he pointed out. Revenue officials in association with officials of the State Department of Archaeology would start excavation after January 15. It was proposed to complete the work before March 2005, he said. Pottery Found Modhur is an important historical site, situated about 15 kms from Dharmapuri. Mr. Sridhar said that the antiquity of Modhur village went back to the Neolithic age (about 10,000 years old). It had a succession of habitations. During the exploration, the archaeological officer of Dharmapuri identified three distinct habitation mounds. In addition, different kinds of pottery with Neolithic celts (stones) were also found. Stone Inscriptions In the surface collection, the site yielded black and red ware, slipped ware and few grey pottery of the Megalithic period (about 3,000 years old). Two hero stone inscriptions of the Hoysala king were also found. More than 20 Megalithic burials were found at Tirumalvadi, near Modhur. http://www.thehindu.com/2004/12/15/stories/2004121502080300.htm http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/focus-on-archaeological-importance-of-dharmapuri/article3109422.ece ..... ![]() |
Posted: 05 Nov 2014 09:28 PM PST தொன்ம சிற்பங்களை பறைசாட்டும் பஞ்சபாண்டவர் மலை! தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என அழைக்கப்படும் மதுரையில் தொன்ம சிற்பங்களுக்கா பஞ்சம். அப்படி தொன்மையான, சமணர்களின் முக்கிய தளமாக விளங்கும் இடம் பஞ்சபாண்டவர் மலை. பஞ்சபாண்டவர் மலை மதுரையிலிருந்து மேலூர் வழியாக திருப்பதூர் செல்லும் சாலையில் சுமார் 36 கி.மீ. தொலைவில் கீழவளவு என்ற ஊரில் அமைந்துள்ளது. இம்மலையில் பிராமிக் கல்வெட்டுகளும், சமண சிற்பங்களும், வட்டெழுத்துக்குக் கல்வெட்டுகளும் காணப்படுகின்றனர். பூமிப்பந்து நிற்கும் பாறையின் உச்சியில் மகாவீரரின் சிற்பமும், அடியில் துறவிகள் தங்குவதற்காக வெட்டப்பட்ட படுக்கைகளும் உள்ளன. இப்பகுதியில் வாழும் மக்கள் பஞ்சபாண்டவர் குகை அல்லது படுக்கை என்றே அழைக்கின்றனர். ஏறத்தாழ 2300 வருடங்களுக்கு (கி.மு. 3 ஆம் நூற்றாண்டு) முந்தைய தமிழ் பிராமி எனப்படும் 'தமிழி' எழுத்துக்களின் கல்வெட்டு இம்மலையின் தனிச்சிறப்பு ஆகும். 100க்கும் மேற்பட்ட சமண துறவிகள் தங்கும் படுக்கைகள் இங்கு வெட்டப்பட்டு உள்ளன. இந்த படுக்கைகளில் காணப்படும் அழகும், நேர்த்தியும் வேறெங்கும் காணப்படவில்லை. இயற்கையான ஊற்றுகளில் இருந்து வரும் நீரும், மழைநீரும் உள்ளே வந்துவிடாமல் வெளியே செல்ல காடி (சிறிய வாய்க்கால்) வெட்டப்பட்டுள்ளது. இங்கு உள்ள கல்வெட்டுகளில் 'உப(ச) அன் தொண்டி(ல) வோன் கொடு பளி(இ)' என்ற செய்தி உள்ளது. இதற்கு உபாசன் தொண்டி இலவொன் கொடுத்த பள்ளி என்பது பொருள். உபவாசனப் பள்ளி (உண்ணா நோம்பு) என இப்பகுதியினர் இந்த சமணப்பள்ளியை அழைக்கின்றனர். இந்த உபவாசனப் பள்ளியின் முன்புறம் இரண்டு தூண்கள் உள்ளன. இதில் பெரிய மணி இருந்ததாகவும், பாதுகாப்புக்காகவும் போடப்பட்டதாக தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 'தொண்டி இலவோன்' என்பது, தொண்டி நகரைச்சேர்ந்த இலவோன் என்பவர் இதை இலவசமாக செய்து கொடுத்தாராம். சங்கரன் ஸ்ரீ வல்லவன் எனும் கொடையாளி 50க்கும் மேற்பட்ட ஆடுகளை வழங்கி அதன் மூலம் வரும் நெய் கொண்டு விளக்கு எரிப்பதற்கும், திருவமுது (அன்னதானம்) படைக்கவும் இந்த ஆடுகளை வழங்கியதாக கூறுகின்றனர். இதுமட்டும் அல்லாமல் மூன்று உரல்கள் உள்ளன. அதில் இரண்டுக்கு மட்டும் விளக்கமாக ஸ்ரீ காலன், ஸ்ரீ கட்டி என உருவாக்கியவர்கள் பெயர் அருகிலேயே உள்ளது. இதை மூலிகை அரைப்பதற்கு பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த மலைகளை சுற்றி இரண்டு ஊற்றுகளும், எட்டுக்கு மேற்ப்பட்ட சுனைகளும் உள்ளன. இன்றும் இங்கிருந்து குடிப்பதற்கு மக்கள் தண்ணீர் எடுத்துச் செல்கின்றனர். 2300 வருடங்களுக்கு முன்னே கல்வி வளர்த்து, அறங்கள் செழித்த இடமாக இருந்த இடம் தற்பொழுது தழைகீழாக உள்ளது. அழகு, தொன்மை எங்கு உள்ளதோ அதை கபளீகரம் செய்வோரும் உள்ளனர். இந்த இடங்களில் தங்களது பெயர்களை கிறுக்கும் கிறுக்கர்கள் இங்கு ஒரு படிமேல் சென்றுள்ளனர். அவர்கள் 2300 வருட எழுத்தை ஒரு நொடியில் சிதைத்து விடுகிறனர். மதுப்பிரியர்கள் மிக மிக அதிகம். சுற்றுலா பயணிகள் நடக்க முடியாதவாறு மதுப்பாட்டில்களை உடைத்து சிதைத்து வருகின்றனர். சமணர்களில் இடங்களில் மாமிசம் சமைப்பது என பல்வேறு இடர்பாடுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த வி.செந்தில்குமார் (பி.ஏ.வரலாறு) கூறுகையில், ''வரலாறு ஒரு மனிதனை தவறான பாதைக்கு சென்று விடாமல், நெறிப்படுத்தி வழி நடத்தும் ஒரு அரிய பொக்கிஷம். அதை சிதைக்கின்றனர். பெயர்கள் எழுதுபவர்களை பிடித்து தக்க தண்டனை வழங்க வேண்டும். அதற்கு இங்கு முழு நேர பணியாளர்களை நியமிக்க வேண்டும். மேலும் இயற்கையாக விவசாயம் புரிந்த இடத்தில் இன்று ஆழ்துளை கிணறு தோன்டியும், தண்ணீர் இல்லாததற்கு இங்கு சுற்றி பாறைகள் வெட்டப்பட்டதே காரணம். எங்கள் வளங்களை நாங்கள் இழந்துவிட்டோம். இதையாவது அழிவில் இருந்து மீட்போம்'' என்றார். இப்பகுதியை சேர்ந்த அ.ராமன் கூறுகையில், ''கடந்த 2008 ஆம் ஆண்டில் கடுமையான போராட்டத்திற்கு பின்பே இம்மலை காப்பாற்றப்பட்டது. இங்கு நாங்க விழிப்புணர்வு ஏற்படுத்த சுதந்திர தினம் அன்று வருடம் தவறாமல் கொடி ஏற்றி வருகிறோம். மலையில் இருந்து 300 மீட்டருக்கு அப்பால் எதுவும் செய்யக் கூடாது என்பது தெரிந்தும் இன்னும் கிரானைட் நிறுவனங்கள் ஆக்கிரமைப்புகளை அகற்றவில்லை. அகற்றினால் தான் மலையச் சுற்றி வேலியமைக்க முடியும்'' என்றார். மேலும் சில சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ''இந்த இடம் இருப்பதை தெரியப்படுத்த பெரிய ஆர்ச் எழுப்பி தெரியப்படுத்தலாம். இதனால் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்வார்கள். மேலும் சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலை முழுங்கி மாகாதேவன்கள் வருவார்கள். நாங்கள் அவர்களை கண்டிப்பாக விஅனுமதிக்க மாட்டோம். இந்த மக்களின் குரல்களுக்கு மட்டும் அல்லாமல், தொன்ம சிற்பங்களை பாதுகாக்கவும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்றனர். ஒருபுறம், மலைகள் கண்டம் கண்டமாக வெட்டப்பட்டு கிடக்கும் காட்சி. மறுபுறம், சமணர்கள் சைவத்தை வளர்த்த இடத்தில் அசைவ உணவும், பள்ளி இருந்த இடத்தில் பார்களும் உருவாகி வருவதை தடுத்து பாதுகாப்போம் நம் தொன்ம சிற்பங்களை. சி.சந்திரசேகரன் படங்கள்: சின்னதுரை ![]() |
Posted: 05 Nov 2014 09:18 PM PST மச்சி! வெறும் beer தாண்டா! பயப்படாம அடி! இந்த வார்த்தை எத்தனை பேர் வாழ்க்கையை திருப்பி போட்டு இருக்கும் எனத் தெரியாது! ஆனால் எனக்கு ஒருவனை தெரியும்! <சதன்> என் கல்லூரி சக ஆண்டு தோழன். கல்லூரி இறுதியாண்டு வரை புகை, மது தொடாத "பழம்" என அழைக்கப்படும் கோஷ்டியை சேர்ந்தவன். Body building மேல் அபரீத காதல் கொண்டவன். Mr.Annamalai university , Mr.Tamilnadu என கனவை மெய்பிக்க கிளம்பியவன். வெயிட் ஏறினா தான் அழகா இருப்படா. தினம் beer அடி. ஒண்ணும் பண்ணாது என யாரோ சொன்ன அறிவுரையை (?) கேட்டு Bar க்குள் நுழைந்தவன். பீர் குடிக்க சென்றவனை, மது குடிக்க துவங்கியது. பாண்டியில் professor திருமணத்திற்கு bikeல் சென்றவன் பார்வை Bar மேல விழ, சில நிமிட நேரங்களில் ஒர் கனரக வாகனத்திற்குள்.. உடற்கட்டை சீரமைக்க bar சென்றவன் உடல் சிதைந்தே போனது! இன்றோடு 14 ஆண்டுகள்... Barல் நுழையாதே! பார்(உலகம்)-இல் இருந்து விரைவில் வெளியேற்றப்படுவாய்! @எழிலன் |
Posted: 05 Nov 2014 09:07 PM PST சிங்கள அரசை விட இன வெறி கொண்ட அரசு இந்தி அரசு. தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்களின் சுமார் 2 இலட்சம் விண்ணப்பங்களை இந்திய தொடர்வண்டி வாரியம் நிராகரித்து உள்ளது. தொடர்வண்டி வேலை வாய்ப்புகளில் இந்தி இனத்திற்கு அதிக சலுகைகள் வழங்கி வரும் இந்தி அரசு, இப்போது திட்டமிட்டு தமிழர்களை பணியில் அமர்த்தக் கூடாது என்று தமிழர்களின் விண்ணப்பங்களை ஏற்க மறுத்துள்ளது. அதற்கு அவர்கள் முன்வைத்த காரணம் மிக அற்பமானதே. சான்றிதழ் ஒப்பம் இல்லை என்ற காரணத்தை சுட்டிக் காட்டி விண்ணப்பங்களை நிராகரித்து உள்ளது தொடர்வண்டி வாரியம். தமிழகத்தில் இயங்கும் தொடர்வண்டித் துறையில் தமிழர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு பதில் இந்தியர்கள் பெருமளவில் அந்த வேலைக்கு அமர்த்தி வருகிறது இந்திய அரசு. இதனால் தமிழகத்தில் இந்தி மக்களை அதிக அளவில் குடியேற்றம் செய்து வருகிறது. ![]() |
Posted: 05 Nov 2014 08:46 PM PST அலங்கு நாய்கள் அழியவில்லை அவை "புள்ளி குட்டா " என்றப்பெயரில் பாக்கிஸ்தானில் (சிந்துவெளி) உள்ளது... இவ்வகை நாய்களை தமிழர்கள் உடனடியாக மீட்க்க வேண்டும்... தஞ்சைப்பகுதியில் உருவான இவ்வகை நாய்கள் காவல் திறன் மிக்கவை .... தமிழர்கள் வீட்டு நாய்கள் வாங்கும் பொழுது கோம்பை, சிப்பிப்பாறை, அலங்கு,கண்ணி போன்ற நாய்களை வாங்கவும்.. இராஜபாளையம் வகை நாய்கள் விஜயநகர அரசால் கொண்டுவரப்பட்டது.. @பாரி சாலன் ![]() |
அழகு தமிழ்நாடு! Posted: 05 Nov 2014 06:40 PM PST |
Posted: 05 Nov 2014 05:54 PM PST #திருக்குறள் குறள் பால்: #பொருட்பால். குறள் இயல்: #நட்பியல். அதிகாரம்: #கூடாநட்பு. #உரை: அரிய நூல்கள் பலவற்றைக் கற்றிருந்த போதிலும், பகையுணர்வு படைத்தோர் மனம் திருந்தி நடப்பதென்பது அரிதான காரியமாகும். #Translation: To heartfelt goodness men ignoble hardly may attain, Although abundant stores of goodly lore they gain. #Explanation: Though (one's) enemies may have mastered many good books, it will be impossible for them to become truly loving at heart. @Puducherry * புதுச்சேரி * Pondichéry ![]() |
Posted: 05 Nov 2014 10:29 AM PST பெண்ணே! நீயெல்லாம் மேக்கப் போட்டாதான் அழகு. நானெல்லாம் பொறந்ததுலருந்தே அழகு.. #களவாணி பய |
Posted: 05 Nov 2014 09:15 AM PST |
Posted: 05 Nov 2014 09:01 AM PST |
Posted: 05 Nov 2014 07:42 AM PST அமெரிக்க நகர் ஒன்றில், நம்ம நாராயணசாமி காரில் தன் மனைவி , அம்மா எல்லோருடனும் சென்று கொண்டிருந்தார் . நீண்ட நேரமாக அவரை ஒரு போலிஸ் ஜீப் தொடர்ந்துக் கொண்டிருந்தது. நாராயணசாமியும் அதை கவனித்துக் கொண்டு தொடர்ந்து வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப் நாராயணசாமி காரை முந்திக்கொண்டு சென்று , அவர் கார் முன் நின்றது. இறங்கி வந்த போலிஸ்காரார் நாராயணசாமியிடம், "குட் வ்னிங் சார்..' என்றார் "குட் வ்னிங், ஏதாவது பிச்சனையா?" என்றார் நாராயணசாமி அதற்கு போலிஸ்காரர், "நாங்கள் இருவரும், உங்கள் காரை அரை மணி நேரமாக கவனித்து வருகிறோம். ஆனால் நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல், ஸ்பீட் லிமிட்டை ஒரு மைல் கூட அதிகரிக்காமல், சக டிரைவர்களை மதித்து காரை ஓட்டிய விதத்தை நாங்கள் பாராட்டுகின்றோம். அதனால், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, உங்களை சிறந்த டிரைவராக தேர்வு செய்து, 10,000 டாலருக்கான இந்த செக்கை அன்பளிப்பாக கொடுக்கிறோம் பெற்றுக் கொள்ளுங்கள்'. என்றார் நாராயணசாமி சந்தோஷமாக ஒரு பெருமூச்சுவிட்டு விட்டு சொன்னார், "இந்த பணத்தை வைத்து எப்படியாவது டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம் எடுத்துடனும்' என்று சொன்னார். போலிஸ் ஒருமாதிரி பார்க்க, உடனே நாராயணசாமியின் மனைவி, "சாரி சார் தப்ப நினைக்க வேண்டாம், அவர் குடிச்சிட்டு உளறுகிறார்' என்றார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நாராயணசாமியின் காது கேட்காத அம்மா சொன்னார், "நான் அப்பவே சொன்னேன் கேட்டியா....திருட்டு காரை எடுத்துகிட்டு வந்ததால், இப்ப எல்லோரும் போலிஸில் மாட்டிகிட்டோம்." |
Posted: 05 Nov 2014 07:04 AM PST தமிழ் தாய் வாழ்த்தில் மறைக்கப்பட்ட பகுதி! "நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே! அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே! பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும் ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!" - சுந்தரனார் |
பொதிகை மலை அழகு! Posted: 05 Nov 2014 06:52 AM PST |
Posted: 05 Nov 2014 06:38 AM PST மற்றவருக்கு கொடுத்து உதவ பொருளில்லாமல் போனாலும் இலவசமாக வலியை கொடுக்காமல் இருப்பது நலம்.. - திவ்யா ராஜன் |
Posted: 05 Nov 2014 04:17 AM PST |
Posted: 05 Nov 2014 03:54 AM PST பல தடவை தோல்விகள் நேரம் செலவு , பாதுகாப்பின்மை, அதனால் ஏற்பட்ட என் சொந்த கடன்கள் மற்றும் பொருள் செலவிற்கு பின்பு என் வழிப் படுத்தலில் குமரி ஆழ கடல் மீனவர்கள் மால தீவில் இருந்து 250 கடல் மைல் தொலைவில் மிகவும் ஆழம் குறைந்த 350 கிலோமீட்டர் நீளமுள்ள கடலில் மூழ்கிய தீவு ஒன்றை கண்டு உள்ளார்கள் மிகவும் அதிகமான மீன் வளத்துடன் இந்த 7 வருடத்தில் என்னால் ஆய்வு செய்து அடையாள படுத்தப் பட்டு உள்ள மூழ்கி உள்ள இரண்டாவது தீவு இது முதல் தீவு குமரியில் இருந்து 53 கிலோ மீட்டர் தொலைவில் 1000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் என்னால் மிக்க நம்பிக்கையுடன் அடையாள படுத்த பட்டது ,ஏற்கனவே அந்த பகுதியில் மீன் வள ஆய்வு செய்த james ஹோர்நெல் அவர்கள் குமாரியன் மீன் வள வங்கி என்று சொன்ன பகுதி தான் மூழ்கி உள்ள தீவாக உள்ளது இன்னும் நிறைய தீவு எங்கள் அட்டவணையில் உள்ளது இந்த செய்தி ஊடகங்களில் முறையாக விரைவில் வரும் அதற்கான செயல் பயணம் திட்டம் ஒன்றை வடிவமைத்து வருகிறேன் நாம் கடலில் நிலத்தை இழந்தோம் என்ற உண்மை மிகவும் அறிவியல் நுணுக்கத்தோடு ஆவணம் படுத்தும் காலம் விரைவில் அதுவும் செத்தும் கொடுத்தார் சீத காதி என்பது போல் நாம் கடலில் இழந்த நிலங்கள் இன்றைய மீனவர்களின் வாழ்வியலை காப்பாற்றுகிறது தொன்மை இருக்கிறது என்று எங்களை போல் அனைவரும் நம்ப துவங்கினால் தான் உண்மையில் நம் தொன்மை அனைவருக்கும் தெரிய வரும் ~ ஒரிசா பாலு ![]() |
Posted: 05 Nov 2014 02:55 AM PST |
Posted: 05 Nov 2014 02:14 AM PST |
Posted: 05 Nov 2014 02:11 AM PST ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மாமன்னன் இராசேந்திர சோழனுக்கு விழா எடுக்க போறாங்களாம். #சாத்தான் வேதம் ஓதுதே,.. அவர் ஆட்சியில தமிழ் தான் ஆட்சி மொழி, நீங்க அத இப்போ செய்ய ஒத்துபிங்களா?? |
Posted: 05 Nov 2014 01:59 AM PST நம்மை சுத்தி இருப்பவர்கள் உறவாகட்டும் ,நட்பாகட்டும் யார் இறந்து போனாலுமே அவர்களிடம் இன்னும் கூட கொஞ்சம் கனிவாக இருந்திருக்கலாம் இன்னும் கூட உதவி செய்திருக்கலாம் என்று எண்ணி விட்டு அடுத்த சாவு வரும் வரை அதனை மறந்து தொலைக்கிறது நம் வெட்கம் கெட்ட மனசு. @D Latha Prabhu |
Posted: 05 Nov 2014 01:37 AM PST |
அழகு தமிழ்நாடு! Posted: 05 Nov 2014 12:23 AM PST |
Posted: 04 Nov 2014 11:01 PM PST இந்த செல்ஃபோன் யுகத்திலும், நம்மிடம் பேச நேரம் இல்லைனு சொல்லறவங்களுக்கு, நிஜமாக, நம்மிடம் பேச விருப்பம் இல்லை என்று தான் அர்த்தம்!!! @காளிமுத்து |
Posted: 04 Nov 2014 09:32 PM PST நாலு பேரு போற கார்ல சீட் பெல்ட் போடாம போனா தப்புன்னு சொல்றாங்க.. அப்பிடின்னா 50 பேரு போற பஸ்ல சீட் பெல்ட் ஏன் இல்லை... #களவாணி பய |
You are subscribed to email updates from சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |