Relax Please: FB page daily Posts |
- :)
- என் மனைவிக்கும், எனக்கும் ஒரு சின்ன பிரச்சினைதான்... வாய்த்தகறார் ஆகி, செம கோபம...
- இதோ... சுருட்டப்பட்டிருந்தபாயை விரித்து அதில் என்னை நிரப்பிக்கொண்டுள்ளேன். சுற்...
- அழகு மேகமலை!
- கண்ணதாசன் சொன்ன கதை... எமதர்மன் சித்திரகுப்தனிடம் ‘இனிமேல் சாகிறவர்களின் நாக்கை...
- மூளைக்கு ஒரு வேலை..
- இப்படி இருக்க வேண்டும் நம் மனநிலை
- #சிரிப்பின்_தன்மையும்_மனிதர்களின்_பண்பும் வெற்றியில் சிரிப்பவன் வீரன். கண்பார்...
- ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... உன்னை குளிப்பாட்டுவார்கள்... நீ உடை...
- #ரிலாக்ஸ்_நறுக்ஸ் பாலில் தேன் கலந்து சாப்பிட்டா உடம்புக்கு ஆரோக்கியமாம்... #எத...
- படிங்க,பிடிச்ச,சிரிங்க...! :D
- அழகு ராமேஸ்வரம்!
- (y)
- மனைவி: டேய், எனக்கு ஒரு சந்தேகம்!!! கணவன்: என்ன? மனைவி: யார் இந்த உலகத்துலேயே...
- குருவிகளின் சத்தம் கேட்டு காலை பொழுதில் கண் விழித்ததுண்டா? கம்மாக்கரை தண்ணீரில்க...
- #ரிலாக்ஸ்_நறுக்ஸ் லைசென்ஸ் இல்லாதவங்க, ஹெல்மெட் போடாம பைக் ஓட்டுரவங்க கண்ணுக்கு...
- கலங்கரை விளக்கத்தை கடல் நீர் தாக்கும் காட்சி.. அருமையான க்ளிக்... பிடித்தவர்கள...
- :)
- முதல்முறையாக ஓர் அதிர்ச்சி ! ( மறுப்பதிவு ) ------------------------------------...
- தவளையும் மனிதனும்... சூழ்நிலைக்கு ஏற்ப மாறக் கூடிய சக்தி மனிதனுக்கும் தவளைக்கும...
- #ரிலாக்ஸ்_நறுக்ஸ் காதல் வந்தா வயித்துல பட்டாம் பூச்சி பறக்குமாம் .. அப்போ பட்டா...
- அழகு
- :)
- நீங்கள் எந்த ரகம்??....... ---------------------------------- ஓயாமல் சிரிப்பவன்...
- உடல் உறுப்பு தானம் செய்யும்,பெறும் வழிமுறைகள்...! குருதி கொடை மட்டுமே கேள்விபட...
- #ரிலாக்ஸ்_நறுக்ஸ் அமைச்சர்கள் மொட்டை அடித்துக் கொண்டு இருப்பதால் அடையாளம் தெரிய...
- அருமை
- (y)
- இரண்டு ஆங்கிலேயர்கள் தமிழ் நாட்டுக்கு வந்திருந்தினர். காய்கறிச்சந்தைக்குச் சென்...
- பதவிப்பிரமாணத்தின் போது காமராஜர் சொன்னது * நாடு உயர்ந்தால் நாம் உயர்வோம் * அர...
Posted: 05 Nov 2014 09:30 AM PST |
Posted: 05 Nov 2014 09:20 AM PST என் மனைவிக்கும், எனக்கும் ஒரு சின்ன பிரச்சினைதான்... வாய்த்தகறார் ஆகி, செம கோபம் வந்துவிட்டது எனக்கு. "இப்போ உன்னை விட்டு கண்காணாத இடத்துக்கு போயிட்டா என்னடி பண்ணுவ நீ?" கோபத்தில் கத்தினேன் நான். அவள் அமைதியாகச் சொன்னாள், . . . . . . . . . .. . "ஒரு டம்ளா் அரிசி கம்மியா போட்டு சோறு பொங்குவேன்" #நமக்கு சோறு தான முக்கியம், அதான் சும்மா இருந்துட்டேன் :P :P Relaxplzz |
Posted: 05 Nov 2014 09:10 AM PST இதோ... சுருட்டப்பட்டிருந்தபாயை விரித்து அதில் என்னை நிரப்பிக்கொண்டுள்ளேன். சுற்றிலும் இருட்டு. ஃபேனின் காற்றையறுக்கும் ஒலி! இன்டிகேட்டரின் சிவப்புப்புள்ளி! கோரைப்பாயின் முகுகு உறுத்தல்! கீற்றின் இடுக்கில் நட்சத்திரமாய்த்தெரியும் நிலவொளி! அது தெருவிளக்கினொளியாகவுமிருக்கலாம். அடுத்ததெருவில் நாய்க்குட்டியின் மழலைக்குரைப்பு! எங்கோ ஒடிக்கொண்டிருக்கும் தொலைகாட்சியின் சத்தம். நான் தனிமையானவனல்ல..! - பாலா ஃபீனிக்ஸ் Relaxplzz ![]() "கவிதைச் சாலை" - 1 |
அழகு மேகமலை! Posted: 05 Nov 2014 09:02 AM PST |
Posted: 05 Nov 2014 08:50 AM PST கண்ணதாசன் சொன்ன கதை... எமதர்மன் சித்திரகுப்தனிடம் 'இனிமேல் சாகிறவர்களின் நாக்கை மட்டும் தனியாக அறுத்துக் கொண்டு வந்து விடு'' என்று சொன்னான். அது போல் சுமார் ஆயிரம் நாக்குகளை அவன் அறுத்துக் கொண்டு வந்தான். அறுத்த பின்னாலும் சில நாக்குகள் துடித்துக்கொண்டு கிடந்தன. சில நாக்குகள் மரத்துப் போய் இரு கூராகப் பிளந்து கிடந்தன. ''மரத்துப் போய் இரட்டையாகக் கிடக்கும் நாக்குகளெல்லாம் யாருடயவை?'' என்று கேட்டான் எமதர்மன். 'இரட்டையாகக் கிடக்கும் நாக்குகளெல்லாம் ஆளும் கடசிக்காரர்களுடைய நாக்குகள் பிரபு! துடித்துக்கொண்டிருக்கும் நாக்குகளெல்லாம் எதிர்க்கட்சிக்காரர்களுடைய நாக்குகள் பிரபு!' என்றான் சித்திரகுப்தன். ''ஒரு உணர்ச்சியும் இல்லாத மற்ற நாக்குகள்?'' என்று கேட்டான் எமன். ''அவர்களுக்கு ஓட்டுப போட்டவர்களுடைய நாக்குகள்' என்று அமைதியாகச் சொன்னான் சித்திரகுப்தன். #இது_தான்_யதார்த்தம் :) Relaxplzz ![]() # படித்ததில் பிடித்தது # - 4 |
Posted: 05 Nov 2014 08:40 AM PST |
Posted: 05 Nov 2014 08:30 AM PST |
Posted: 05 Nov 2014 08:15 AM PST #சிரிப்பின்_தன்மையும்_மனிதர்களின்_பண்பும் வெற்றியில் சிரிப்பவன் வீரன். கண்பார்த்து சிரிப்பவன் கஞ்சன். துன்பத்தில் சிரிப்பவன் மனிதன். மகிமையில் சிரிப்பவன் மன்னன். விளையாமல் சிரிப்பவன் வீணன். இடம் பார்த்து சிரிப்பவன் எத்தன். மாண்பில் சிரிப்பவன் பண்பாளன். மோகத்தில் சிரிப்பவன் வெறியன். கற்பனையில் சிரிப்பவன் கவிஞன். ஓடவிட்டு சிரிப்பவன் நயவஞ்சகன். தெரியாதென்று சிரிப்பவன் நடிகன். நின்று சிரிப்பவன் நினைவுள்ளவன். ஓயாமல் சிரிப்பவன் பைத்தியக்காரன். கோபத்தில் சிரிப்பவன் சிந்தனையாளன். கொடுக்கும்பொழுது சிரிப்பவன் சூழ்ச்சியாளன். இன்பத்தில் சிரிப்பவன் ஏமாளி. நினைவோடு சிரிப்பவன் அறிவாளி. தெரியுமென்று சிரிப்பவன் பசப்பாளி. இருக்குமிடமெல்லாம் சிரிப்பவன் கோமாளி.. குழைந்து சிரிப்பவன் சந்தர்ப்பவாதி. நிலைகண்டு சிரிப்பவன் காரியவாதி. அருளுக்கு சிரிப்பவன் ஆண்டி. தற்பெருமையில் சிரிப்பவன் கோழை. நிலை மறந்து சிரிப்பவள் காதலி. காதலால் சிரிப்பவள் மனைவி. அன்பால் சிரிப்பவள் அன்னை. Relaxplzz |
Posted: 05 Nov 2014 08:00 AM PST ஒருநாள் வரும்-அன்று நீ குளிக்கமாட்டாய்... உன்னை குளிப்பாட்டுவார்கள்... நீ உடை அணியமாட்டாய் உனக்கு அணுவிக்கபடும். நீ பள்ளிவாசலுக்கு போகமாட்டாய் உன்னை பள்ளிக்குகொண்டு செல்வார்கள்... நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும் ! நீ படைத்தவனிடம்ஒன்றும் கேட்கமாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள் ! அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் -நீ தயாராக இரு... -மௌத்(மரணம்) # படித்ததில் பிடித்தது # Relaxplzz ![]() |
Posted: 05 Nov 2014 07:50 AM PST #ரிலாக்ஸ்_நறுக்ஸ் பாலில் தேன் கலந்து சாப்பிட்டா உடம்புக்கு ஆரோக்கியமாம்... #எத்தனைபேருக்கு தெரியும்... அது தேனியையும் மாட்டையும் ஏமாத்தி ஆட்டையப் போட்டதுன்னு.. - விவிகா சுரேஷ் |
Posted: 05 Nov 2014 07:40 AM PST |
அழகு ராமேஸ்வரம்! Posted: 05 Nov 2014 07:40 AM PST |
Posted: 05 Nov 2014 07:30 AM PST |
Posted: 05 Nov 2014 07:15 AM PST மனைவி: டேய், எனக்கு ஒரு சந்தேகம்!!! கணவன்: என்ன? மனைவி: யார் இந்த உலகத்துலேயே அதிக மகிழ்ச்சியாக இருக்கா? நீயா?? நானா??? கணவன்: இதுல என்ன சந்தேகம்… நான் தான்!!! மனைவி: எப்படி சொல்ற? நீ காலைல வேலைக்கு போனா, இரவு தான் வர.. உனக்கு தான் உலகத்தை ரசிக்க நேரமே இல்லையே…. கணவன்: ம்ம்.. சரி, உனக்கு ஒரு நாள் முழுவதும் நேரம் தரேன் உனக்கு என்ன என்ன பண்ணனும்னு தோணுதோ எல்லாம் செய், நாளைக்கு இரவு நான் பதில் சொல்றேன்.. (மறுநாள் இரவு) கணவன்: ஏய்… இன்று என்னலாம் பண்ண? மனைவி: அதிகாலை பனித்துளியோடு விளையாடினேன், பூக்களை ரசித்தேன், கோவிலுக்கு போனேன், அம்மா, அப்பா, நண்பர்களோடு பேசினேன், நமது கல்யாண ஆல்பம் பார்த்தேன், நமக்கு பிடித்த பாடல்கள் கேட்டேன், கவிதைகள் படித்தேன், கார்ட்டூன் நெட்வொர்க் பாத்தேன், மாலை கடற்கரைக்கு சென்று அலைகளின் அமைதியில் கரைந்தேன், இன்று மாலை பெய்த, மழையிலும் நனைந்தேன், நீ வர நேரம் ஆனதால் மொட்டை மாடியில் பௌர்ணமி நிலவின் அழகையும் ரசித்தேன், அனால் ஒன்னு தான் பன்னல…. இந்தா உம்மா…. இதோ என் செல்லத்தையும் முத்தமிடுவிடேன்… எனக்கு இந்த உலகத்தையே சுற்றிவந்த மாதிரி இருக்கு… இப்ப சொல்லு யார் அதிக மகிழ்சியா இருக்காங்கனு??? கணவன்: இப்பவும் சொல்றேன், எனக்கு தான் அதிக மகிழ்ச்சி… மனைவி: ம்ம்… எப்படி டா!!! கணவன்: அட முட்டாள், உலகத்தை பலமுறை சுற்றி, அதில் உள்ள அணைத்து அழகான பூக்களில் இருந்தும் தேனை சேகரித்து, என் இதழ்களில் வந்து சிந்திவிட வண்ணத்து பூச்சி போல, என் தோள்களில் சாய்ந்து நீ கொடுத்த ஒரு முத்தத்தில் அடைந்துவிட்டேன் உன்னைவிட நூறு மடங்கு மகிழ்ச்சியை… நல்ல வேளை, ஒருவன் வாழ்வில் இவ்வளவு மகிழ்ச்சிதான் இருக்க வேண்டும் என்று வரைமுறையை கடவுள் விதிக்கவில்லை, இல்லையெனில் நீ முத்தமிட்ட நொடியில் சென்றிருப்பேன் நரகத்திற்கு… மனைவி: நரகமா??? கணவன்: (நீ இல்லாத சொர்கமும், நரகம் தானடி எனக்கு…), உனக்கு இந்த உலகத்தையே சுற்றி வந்தமாதிரி இருந்தது என்று சொன்னாய், எனக்கு என் உலகமே என்னை சுற்றி வந்து முத்தமிட்ட மாதிரி இருந்தது…. இப்பொழுது சொல் யாருக்கு அதிக மகிழ்ச்சி????? (வெட்கத்தில் இன்னும்சில தேன்துளிகளை சிந்தியது, வண்ணத்து பூச்சி...) ♥ ♥ Relaxplzz |
Posted: 05 Nov 2014 07:00 AM PST குருவிகளின் சத்தம் கேட்டு காலை பொழுதில் கண் விழித்ததுண்டா? கம்மாக்கரை தண்ணீரில்கால் நனைத்ததுண்டா? காத்தாட வரப்பின் மேல் நடந்ததுண்டா? முட்டி முட்டி பால் குடிக்கும் கன்று குட்டியை ரசித்ததுண்டா? கொய்யாவை கொத்தி திண்னும் அணிலை ரசித்ததுண்டா? மாலையில் மலரும் மல்லிகையை முகர்ந்ததுண்டா? இரட்டை மாட்டு வண்டியின் சலங்கை சத்தத்திற்கு தாளம் போட்டதுண்டா? நடவு நடும் அக்காக்களின் எசப்பாட்டு கேட்டதுண்டா? ஏர் பிடிக்கும் அண்னண்களின் பின்னால்நடந்ததுண்டா? கொட்டும் மழையில் குடையில்லாமல் நனைந்ததுண்டா? மண் வாசனையில் தண்னிலை மறந்ததுண்டா? வாசலில் ஓடும் மழை நீரில் காகித கப்பலும் கத்திக் கப்பலும் விட்டதுண்டா? பாசமாய் வளர்த்த ஆட்டுக் குட்டி அடிபட்டபோது அதற்காக அழுததுண்டா? ஆலம் விழுதில் ஊஞ்சல் ஆடியதுண்டா? அரச இலையில் பீப்பி செய்து ஊதியதுண்டா? பாலைப்பூ காத்தாடி தெரியுமா? சப்பாத்திகள்ளி பழம் திண்னதுண்டா? கம்மஞ்சோற்றின் வாசம்தெரியுமா? அம்மா அடிக்க கை ஓங்கும் போது ஓடிப்போய் தாத்தாவின்வேட்டிக்குள்ளும ் பாட்டியின் முந்தானைக்குள்ள ும் ஒளிந்ததுண்டா? அக்கா, அண்ணனோடு விளையாடும் போது வேண்டும் என்றே தோற்று நம் வெற்றியை கொண்டாடும் பாசத்தை அனுபவித்ததுண்டா ? அத்தைமார்களின் மாமன்மார்களின் சீண்டல்களால் சினுங்கியதுண்டா ? ஊர் பேர் தெரியாத வழிபோக்கனுக்கு உணவிட்டு அவன் பசியாறிய முகம் கண்டு மகிழ்ந்ததுண்டா? பாட்டியின் மடியில் படுத்து பழங்கதைகள் கேட்டதுண்டா? தாத்தாவின் மீசையை முறுக்கியதுண்டா ? இரவில் நிலவின் ஒளியில் உருண்டை சோறு திண்னதுண்டா? இவற்றையெல்லாம் அனுபவிப்பேயானால ் நீ ஆசீர்வதிக்கப்பட ்டவன்..... இல்லையனில் ரத்தமும் சதையுமான உணர்வற்ற, பணத்திற்காக நடமாடும்எந்திரம் கோட்டும் சூட்டும் போட்டுகொண்டு குளிக்காமல் சென்ட் அடித்துக்கொண்டு பணம்சம்பதிப்பது மட்டுமே மகிழ்ச்சியான வழ்க்கைஇல்லை அதையும் தாண்டி நாம் கண்டுகொள்ளாமல் விட்டஉறவுகளும் உணர்வுகளும் காத்துக்கொண்டிர ுக்கிறது நம் அன்பிற்காக... பழமையில் தான் பசுமை இருக்கிறது பாசம் கனக்கும் உறவும் இருக்கிறது.... — Indupriya MP @relaxplz ![]() |
Posted: 05 Nov 2014 06:50 AM PST #ரிலாக்ஸ்_நறுக்ஸ் லைசென்ஸ் இல்லாதவங்க, ஹெல்மெட் போடாம பைக் ஓட்டுரவங்க கண்ணுக்கு வாட்ச்மேன கூட போலீஸ் தான்..! ;-) |
Posted: 05 Nov 2014 06:40 AM PST |
Posted: 05 Nov 2014 06:30 AM PST |
Posted: 05 Nov 2014 06:15 AM PST முதல்முறையாக ஓர் அதிர்ச்சி ! ( மறுப்பதிவு ) -------------------------------------------- மூன்று நாட்களுக்கு முன் எனக்கு ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்தது. கெல்லீஸில் ஒரு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தபோது வாசலை ஒட்டி நின்ற ஒரு பாட்டி என்னை நோக்கி கையை நீட்டினார். இடுப்பில் இரண்டு வயது சிறுமியை வைத்திருந்தார். பக்கத்தில் நான்கு வயது சிறுவனும் நின்று கொண்டிருந்தான். ``பிச்சை போட மாட்டேன். வேணும்னா உங்களை ஏதாவது இல்லத்தில் சேர்த்து விடுறேன். மூணு வேளை சாப்பாடு போடுவாங்க.. பசங்களை படிக்க வைப்பாங்க.. வர்றீங்களா" என்று.. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யனைப்போல் நானும் வழக்கமான என் உரையாடலை ஆரம்பித்தேன். வழக்கமாக இப்படி நான் கேட்டதும் பிச்சைக்கேட்டவர்கள் முறைத்துப் பார்த்துவிட்டு முணுமுணுப்பாக திட்டிக்கொண்டே செல்வார்கள். சிலபேர் சமாளிக்கும் விதமாக ``அப்புறம் வர்றேன் சார்.." என்று நகர்ந்து விடுவார்கள். அப்போதெல்லாம் பிச்சை எடுப்பது பழகிவிட்டால் சுகமானதாகவிடும்போல என்று தோன்றும். ஆனால் முதல்முறையாக அந்த பாட்டி நான் எதிர்பாராத ஒரு பதிலை சொன்னார். ``எய்யா சாமி.. புண்ணியமாப்போவும்.. இந்த புள்ளைவோல சேர்த்துவுட்டுருப்பா.. வழி தெரியாமத்தான் பிச்சை எடுக்குறேன்ப்பா.." என்று சொல்லும்போதே கண் கலங்கினார். ``சரி பாட்டி டோக்கன் வாங்கி தர்றேன்.. சாப்பிடுறீங்களா .. " என்று கேட்டேன். ``சாப்பாடு வேணாய்யா.. புள்ளைக்கு பால் மட்டும் வாங்கிகொடுப்பா.. இவங்க அப்பன்காரன் வுட்டுனு போய்ட்டான். இவங்க அம்மா அஸ்பிட்டல்லருக்கா.. ஆஸ்த்துமா நோய்.. அவள பாக்க தான் போய்கிணுக்கிறோம்.. பஸ்சுல போக காசு வேணும்ப்பா.." என்றார். அந்த சிறுவனை பார்த்தேன்.. இளமாறனைப் போலவே இருந்தான். அந்த பாட்டி நிச்சயம் பொய் சொல்லவில்லை என்று உள்ளுணர்வு சொல்லியது. பக்கத்து கடையிலிருந்து வாங்கிய பால் பாக்கெட் பாட்டியிடமும் பிஸ்கெட் பாக்கெட்டை சிறுவனிடமும் கொடுத்தேன். அதை வாங்கியதும் அவன் முகத்தில் அவ்ளோ சந்தோசம். ``ஸ்கூல்ல சேர்த்துவிடுறேன்.. படிக்கிறீயாடா.." என்று கன்னத்தை தட்டி கேட்டேன். ``ஓ.." என்று வேகமாக தலையாட்டினான். ``உங்க பொண்ணுக்கிட்ட கேட்டுட்டு எனக்கு முடிவு சொல்லுங்க.." என்று பாட்டியிடம் என் போன் நம்பரை எழுதிக் கொடுத்துவிட்டு, பஸ்ஸில் போக கொஞ்சம் பணமும் கொடுத்தேன். வாங்கி கொண்ட பாட்டி, இடுப்பில் இருந்த பேத்தியிடம் ``மாமாவுக்கு கிஸ் கொடு.. கிஸ் கொடு.. என்றார். அந்த குட்டி தேவதை கைகளை தன் வாயில் வைத்து எடுத்து என்னை நோக்கி நீட்டி ஃப்ளையிங் கிஸ் கொடுத்து கையை ஆட்டி சிரித்தது. அவளின் கன்னத்தை பிடித்து இழுத்து முத்தம் கொடுத்துவிட்டு அலுவலகத்தை நோக்கி நகர்ந்தேன். மாலை வரை பாட்டியிடமிருந்து போன் வரவில்லை. ``சரி.. இதுவும் வழக்கம்போல் தான்.." என்று நினைத்து மறந்துவிட்டேன். ஆனால் இரவு புதிய எண் ஒன்றிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. பாட்டி தான் பேசினார். பக்கத்து வீட்டுக்காரரின் போனிலிருந்து பேசுவதாக சொன்னார். ``என் பொண்ணுகிட்ட சொன்னேம்பா.. புள்ளைவோல ஸ்கூல்ல சேர்த்துர சொல்லிச்சுப்பா.. நல்லாருப்ப சாமீ.. நீ சொன்ன எடத்துல சேர்த்துவுட்டுருப்பா.. இதுகளையும் பாக்க முடியாம என் பொண்ணையும் பாக்க முடியாம் சீரழிஞ்சுகினுகீரம்ப்பா.. " என்று அழுதபடி சொன்னார். ``சரி நான் ஏற்பாடு பண்றேன்.. கவலைப்படாதீங்க.."என்று பாட்டியிடம் சொல்லி விட்டு, குழந்தை தொழிலாளர்கள் மீட்பு துறையிலிருக்கும் நண்பர்களிடம் விபரம் சொன்னேன். மறுநாள் பாட்டியை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வரச்சொல்லி குழந்தை மீட்பு பணியாளர்களை சந்திக்க ஏற்பாடு செய்தேன். அவர்களும் பாட்டியிடம் விசாரணை நடத்தியப்பின் தற்போது தங்கள் பாதுகாப்பில் அந்த இரு குழந்தைகளையும் எடுத்துக் கொண்டார்கள். அந்த இரு குழந்தைகளும் பாதுகாப்பு இல்லத்தில் நல்ல சாப்பிட்டு சந்தோசமாக இருப்பதாக சொன்னார் மீட்பு பணியில் ஈடுபட்ட தோழி. கேட்கவே சந்தோசமாக இருந்தது.. அந்த குழந்தைகளுக்கும் வாழ்வு வசப்படட்டும்.. -கார்ட்டூனிஸ்ட் பாலா (நீங்களும் கூட பிச்சை எடுக்கும் சிறுவர்களையோ அல்லது வேலை பார்க்கும் குழந்தைகளையோ எங்கேனும் பார்த்தால் 04426205655 அல்லது 1098 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அவர்களை மீட்க உதவலாம்.. ) Relaxplzz |
Posted: 05 Nov 2014 06:00 AM PST தவளையும் மனிதனும்... சூழ்நிலைக்கு ஏற்ப மாறக் கூடிய சக்தி மனிதனுக்கும் தவளைக்கும் ஒரே மாதிரி தான் இருக்கிறது. ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்,தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும்போது தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்.வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும். தண்ணீர் கொதிநிலையை அடையும் போது வெப்பத்தை தாங்கமுடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும்.ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது. ஏன் என்றால் வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்துவிடும். எது அந்த தவளையை கொன்றது ? பெரும்பாலானோர் கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று சொல்வீர்கள். ஆனால் உண்மை என்னவென்றால், எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான் அதை கொன்றது. நாமும் அப்படித்தான் எல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம்.ஆனால் நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும், எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். மனரீதியாக,உடல்ரீதியாக,பணரீதியாக மற்றவர்கள் நம்மை நசுக்க ஆரம்பிக்கும்போது நாமும் சுதாரிக்காமல் போனால் மீண்டும் அதையே தொடர்ச்சியாக செய்ய ஆரம்பிப்பர்.உடலில் வலிமை இருக்கும் போதே அவர்களிடமிருந்து தப்பித்துவிடுதல் நன்று. நாம் அனுமதித்தால் ஒழிய நம்மை அழிக்க எவராலும் முடியாது.. via Ilayaraja Dentist Relaxplzz ![]() |
Posted: 05 Nov 2014 05:50 AM PST #ரிலாக்ஸ்_நறுக்ஸ் காதல் வந்தா வயித்துல பட்டாம் பூச்சி பறக்குமாம் .. அப்போ பட்டாம்பூச்சிக்கு காதல் வந்தால் வயிற்றில் என்ன பறக்கும்.. நாங்களும் கேப்போம்ல :p - களவாணி பய |
Posted: 05 Nov 2014 05:40 AM PST |
Posted: 05 Nov 2014 05:30 AM PST |
Posted: 05 Nov 2014 05:15 AM PST நீங்கள் எந்த ரகம்??....... ---------------------------------- ஓயாமல் சிரிப்பவன் பைத்தியகாரன் ஓட விட்டு சிரிப்பவன் வஞ்சகன் இருக்குமிடமெல்லாம் சிரிப்பவன் கோமாளி இடம் பார்த்து சிரிப்பவன் எத்தன் கண்பார்த்து சிரிப்பவன் கஞ்சன் கற்பனையில் சிரிப்பவன் கவிஞன் மோகத்தில் சிரிப்பவன் வெறியன் மகிமையில் சிரிப்பவன் மன்னன் தெரியுமென்று சிரிப்பவன் பசப்பாளி தெரியாதென்று சிரிப்பவன் நடிகன் இன்பத்தில் சிரிப்பவன் ஏமாளி நிலை கண்டு சிரிப்பவன் காரியவாதி கோபத்தில் சிரிப்பவன் சிந்தனையாளன் கொடுக்கும் பொழுது சிரிப்பவன் சூழ்ச்சிக்காரன் மாண்பில் சிரிப்பவன் பண்பாளன் வெற்றியில் சிரிப்பவன் வீரன் விளையாமல் சிரிப்பவன் வீணன் தற்பெருமையால் சிரிப்பவன் கோழை அருளுக்கு சிரிப்பவன் ஆண்டி அன்பால் சிரிப்பவள் அன்னை காதலால் சிரிப்பவள் மனைவி நிலை மறந்து சிரிப்பவள் காதலி நின்று சிரிப்பவன் நினைவுள்ளவன் நினைவோடு சிரிப்பவன் அறிவாளி குழைந்து சிரிப்பவன் சந்தர்ப்பவாதி கும்மி அடித்து சிரிப்பவன் இதய கசடுள்ளவன் அகம் மகிழ்ந்து சிரிப்பவன் உண்மை நண்பன் துன்பத்தில் சிரிப்பவன் மனிதன்.!!! ;-) ;-) Relaxplzz |
Posted: 05 Nov 2014 05:00 AM PST உடல் உறுப்பு தானம் செய்யும்,பெறும் வழிமுறைகள்...! குருதி கொடை மட்டுமே கேள்விபட்ட நாம் சமீபமாக உடல் தானம், உடலின் உறுப்புகள் தானம் பற்றி பேசி வருகிறோம், கேட்க பெறுகிறோம் இதை பற்றி நிறைய பேருக்கு சரியான விவரம் தெரியாததால் தெரிந்து கொள்ளுங்கள். இது போக உங்களுக்கோ அல்லது உங்களை சார்ந்த அல ்லது தெரிந்தவர்களுக்கோ இதயம், சிறுநீரகம், கண்கள், லிவர், லங்க்ஸ்,எலும்பு, இதயவால்வுகள், தோல் போன்ற பல குறைபாடுகள் இருந்தால் இந்த லின்க்கில் உள்ள அரசு அப்ருவ் செய்த மருத்துவமனைகளில் நீங்கள் பதிவு செய்தால் உங்களுக்கு இந்த உறுப்புகள் புக்கிங் அடிப்படையில் இலவசமாக கிடைக்க பெறூம். இதற்க்கு புரோக்கர்கள் தேவை இல்லை. அது மட்டுமல்ல உங்கள் அல்லது உங்களது மைனர் மற்றும் தெரிந்தவர்களின் உடம்பை மருத்துவ ஆய்வுக்கு கூட நீங்கள் கொடுத்து உதவலாம். அதற்க்கான தகவல் அரசானை மற்றும் ஃபார்மாலிட்டிஸ் இனைத்துள்ளேன். இந்தியாவிலே தமிழ் நாட்டில் தான் அதிக உடல் மற்றும் உறுப்பு தானம் செய்யும் நெ 1 மானிலமாக திகழ்கிறது. தானம் செய்யும் அட்டை படிவம் மற்றூம் மற்ற எல்லா அப்ளிகேஷனும் இனைத்துள்ளேன் பலன் பெருங்கள். ஒன்றும் பெறாத பேப்பர் கூட ரீசைக்கிள் ஆகி இன்னொரு வாழ்வை கொடுக்கும்போது நம் கூட நம்மின் உடலையோ அல்லது உடல் பாகங்கலையோ இல்லாதவர்களுக்கு வழங்கலாம். நான் 2008 ஆம் ஆண்டே என்னுடைய உடல் மற்றும் 6 உறுப்புகளின் தானத்தை செய்துவிட்டேன். Hyper Links To Donate your body after death & Government Order - http://www.dmrhs.org/tnos/orders-of-tn-govt/donation-of-body-after-death-procedure-for-donation FAQ about Each and Every Organ Donation and how it is used - http://www.dmrhs.org/tnos/faq-for-public Organ Waiting List Details - http://tnos.org/ Approved Hospitals for Organ Donors & Organ Transplants by Govt - http://www.dmrhs.org/tnos/notifications/list-of-approved-hospitals-for-kidney-transplantation-as-on-13-02-2012 (Please follow the same link for all organs) Please fill your form and send it by email OR post. Cadaver Transplant Program, 165 A, Tower Block I, 6th Floor, [Next to Bone Bank], Government General Hospital Chennai – 600 003 E-Mail : organstransplant@gmail.com Phone : (91)44 25305638 Fax : (91)44 25363141 ஆங்கிலத்தில் ரிலாக்ஸ் ப்ளீஸ் Relaxplzz ![]() |
Posted: 05 Nov 2014 04:50 AM PST #ரிலாக்ஸ்_நறுக்ஸ் அமைச்சர்கள் மொட்டை அடித்துக் கொண்டு இருப்பதால் அடையாளம் தெரியவில்லை - கருணாநிதி. ஆமா இவரு அப்படியே மண்டைல 'ஸ்பைக்' வச்சுருக்காரு... :p Boopathy Murugesh |
அருமை Posted: 05 Nov 2014 04:40 AM PST |
Posted: 05 Nov 2014 04:30 AM PST |
Posted: 05 Nov 2014 04:15 AM PST இரண்டு ஆங்கிலேயர்கள் தமிழ் நாட்டுக்கு வந்திருந்தினர். காய்கறிச்சந்தைக்குச் சென்றார்கள். அங்கு குடை மிளகாய் பார்த்தனர். இது என்ன பழம்?, ஆப்பிள் பழம் போல் இருக்கின்றதே என்று வியாபாரியிடம் கேட்டனர்!. அவர் பேசும் தமிழ் இவர்களுக்கு புரியவில்லை. இவர்கள் பேசும் ஆங்கிலம் அவருக்கு விளங்கவில்லை. சரி இரண்டு பழங்கள் வாங்கி சாப்பிடலாம் என்றெண்ணி வாங்கினார்கள். முதலில் ஒருவன் சாப்பிட்டான். மிளகாய் காரமாக இருந்ததால் அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது. கண்ணீரைப் பார்த்த நண்பன் கேட்டான், 'ஏன் அழுகிறாய்'.? 'இல்லை 10 வருடத்திற்கு முன் என் மாமாவை தூக்கில் போட்டார்கள். அவரை நினைத்ததால் அழுகை வந்தது' என்றான். பிறகு 'இந்தா நீயும்சாப்பிடு' என்று இன்னொரு மிளகாயை நண்பனிடம் கொடுத்தான். நண்பனும் ஆர்வத்துடன் சாப்பிட்டான். காரத்தால் அவனுக்கும் கண்ணீர்வந்தது. அடப்பாவி, உண்மையை மறைத்து விட்டானே என்று கோபம் கோபமாய் வந்தது. அவன் கண்களில் கண்ணீரைக்கண்டதும், முன்னவன் கேட்டான், 'நீ ஏன் அழுகின்றாய்?' இவன் பதில் சொன்னான். 'இல்லை 10 வருடத்திற்கு முன் உன் மாமாவை தூக்கில் போட்ட போது ஏன் உன்னையும் சேர்த்து போடவில்லை என்று நினைத்தேன்' என்றான் :P :P Relaxplzz |
Posted: 05 Nov 2014 04:00 AM PST பதவிப்பிரமாணத்தின் போது காமராஜர் சொன்னது * நாடு உயர்ந்தால் நாம் உயர்வோம் * அரசு என்பது எல்லா மக்களுக்குமே சொந்தமானது * படித்த ஜாதி, படிக்காத ஜாதி என்றொரு ஜாதி உண்டாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். * மாணவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டியதில்லை. அரசியல்தான் நாட்டுக்கு அஸ்திவாரம். அதைப்பற்றி மாணவர்கள் நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். அரசியலைப்பற்றி சிந்திக்காமல் இருப்பது ஆபத்து * திட்டம் மக்கள் திட்டமாக இருக்க வேண்டும். அத்துடன் மக்கள் ஒத்துழைப்பும் வேண்டும். மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த திட்டமும் வெற்றி பெற முடியாது. * ஜாதி என்ற நோயை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். * நீங்கள் உங்கள் நண்பரையும் உங்கள் நண்பர் உங்களையும் நன்றாக அறிந்து கொண்டால் நன்மையை யார் அதிகம் செய்தார்கள் என்பது விளங்கிவிடும் * அப்பாவியான ஏழை மக்களை வசதி படைத்தவர்களும் கல்மனம் படைத்தவர்களும் கசக்கி பிழிந்து விடாதபடி தடுக்க வேண்டியது அவசியம் * சுதந்திரம் என்றால் பயமில்லாது வாழ்வதுதான். பயமில்லாது வாழ நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் * நான் வட இந்தியாவையும் பார்த்திருக்கிறேன். தமிழ்நாட்டிலோ மூலை முடுக்குகளில் உள்ள கிராமங்களையும் கண்டிருக்கிறேன். இந்தியா ஒரு தேசம்தான், ஒரு சக்திதான். * சட்டமும் விதிமுறைகளும் மக்களுக்காகவே ஏற்பட்டவை. சட்டத்துக்காகவும், விதிமுறைகளுக்காகவும் மக்கள் இல்லை * தாய்மார் கற்று விட்டால் நாட்டில் தொந்தரவே இருக்காது * நேற்று இன்று நாளை முக்காலத்தையும் உணர வேண்டும். நாம் உணர்ந்தால் போதாது. வாலிப வயதினருக்கும் உணர்த்த வேண்டும் * பெண்கள் விழிப்பு அடைந்தால் குடும்பம் முன்னேறும், கிராமங்கள் முன்னேறும் தேசமே முன்னேறும் * நாடு முன்னேற வறுமையும் அறியாமையும் போக வேண்டும். இவை இரண்டும் போனாலன்றி நாடு முன்னேறியதாக சொல்ல முடியாது * நாட்டின் ஐக்கியத்தைப் பாதுகாப்பதிலும் ஒற்றுமையோடு பாடுபடுவதிலும்தான் நமது முன்னேற்றம் இருக்கிறது * நம் நாட்டின் அரசியல் பொருளாதார அமைப்பு மக்களின் விருப்பப்படி இருக்க வேண்டும். மக்கள் தங்கள் சக்திகளை வீணாக்காமல் சோசலிச சமுதாயத்திலும், சுயாட்சியிலும் நம்பிக்கை உடையவர்களாக இருந்து புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும் * லட்சியத்தை அடைய அமைதியான வழிகளை பின்பற்ற வேண்டும். பலாத்காரப் புரட்சி தேவையில்லை. * அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் சண்டையிடும் பொழுது அது மக்களுக்கு கோழிச்சண்டையைப் பார்ப்பதுபோல் வேடிக்கையளிப்பதாக உள்ளது. * நம்மில் எவரும் பதவியையும், அதிகாரத்தையும் விட்டு விடப்பயப்படவில்லை. அதிகாரம் என்பது நமக்குச் சந்ததியாக வரவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பொதுத்தேர்தலில் பெரும்பான்மை பலம் பெறுபவர்களே பதவிக்கு வரமுடியும். மக்களின் ஆதரவு இன்றி ஒரு நாள் கூட ஆட்சியில் நீடிக்க முடியாது * ஏழை மக்களைத் துன்பத்திலிருந்து நீக்க முடிந்த மட்டும் பாடுபடுவேன். இல்லையெனில் நான் இருப்பதில் எவ்விதப்பயனும் இல்லை * நாம் எதைச் செய்தாலும் ஏன் அதைச் செய்கிறோம் என்று மக்களுக்கு சொல்ல வேண்டும் * ஒன்றைச் செய்ய விரும்புகிற போது அதை செய்வதற்காகவே இருக்கிறோம் என எண்ண வேண்டும் நன்றி :- மாலை மலர் ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆங்கிலத்திலும் Relaxplzz ![]() |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment