Sunday, 28 December 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


Posted: 28 Dec 2014 05:53 PM PST


இது ஒரு தேர் வடிவ சிற்பக் கலைக் கோவில்! புகழ்மாது விளங்க சயமாது விரும்ப நிலமகள்...

Posted: 28 Dec 2014 06:20 AM PST

இது ஒரு தேர் வடிவ சிற்பக் கலைக் கோவில்!

புகழ்மாது விளங்க சயமாது விரும்ப
நிலமகள் நிலவ மலர்மகள் புணர
உரிமையிற் சிறந்த மணிமுடி சூடி
மீனவர் நிலைகெட வில்லவர் குலைதர
விக்கலன் சிங்கணன் மேல்கடல் பாய
ஏனை மன்னவர் இரியலுற் றிழிதரத்
திக்கனைத் துந்தன் சக்கரம் நடாத்தி
விஜயாபி ஷேகம் பண்ணி அருளிய
செம்பொன் வீர சிம்மா சனத்து
அவனி முழுதுடை யாளொடும் வீற்றிருந்
தருளிய கோவிராச கேசரி பன்மரான
சக்கரவர்த்திகள் ஸரீகுலோத்துங்க சோழ தேவர்க்கு
யாண்டு நாற்பத்தாறாவது...

(இக்கோவிலில் உள்ள முதலாம் குலோத்துங்கனின் மெய்கீர்த்தி )

"தண்புனல் நீள்வயல் தோறுந் தாமரை மேலனம் வைகக்
கண்புணர் காவில்வண்டேறக் கள்ளவி ழுங்கடம் பூரில்"

- திருஞான சம்பந்தன்.

இன்றைக்கு மேலக்கடம்பூர் என அழைக்கப்படும் இவ்வூரில் உள்ள சோதி மின்னம்மை உடனுறை அமுதகடேசுவரன் கோவிலில் நுண்மையான சிற்பங்கள் பல உள்ளன.

ஆறாம் நூற்றாண்டிற்கும் முற்பட்ட கோவிலாய் இருத்தல் வேண்டும்.

இங்குள்ள ஏறு தடந்தோள் ஆடல்வல்லான் ( தசபுஜ ரிஷப தாண்டவமூர்த்தி) சிற்பத்தினை, முதலாம் ராஜேந்திரன் தனது வடநாட்டு படையெடுப்பின் போது பாலர் தேசத்து மகிபாலனை வென்று வெற்றிச் சின்னமாக கொண்டு வந்ததாக வாரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

இந்தச் சிற்பத்தில் திருவாசியில் தீச்சுவாலைகளுக்குப் பதிலாக போதி இலைகள் காணப்படுகின்றன.

@PG Saravanan


Ancient Tamil Civilization: Megalithic era urn dug up in Cuddalore village poin...

Posted: 28 Dec 2014 04:13 AM PST

Ancient Tamil Civilization:

Megalithic era urn dug up in Cuddalore village points to Indus Valley connection

An urn and grave goods believed to be of the Megalithic period were excavated at Dharmanallur village near Sethiathope in Cuddalore district by the History Department of the Annamalai University. A terracotta well ring believed to be dating back to 800 years was also found at the same village.

Assistant professors of Annamalai University Dr Sivaramakrishnan, Dr Kalaiselvan and Dr Ramar along with five research scholars have been conducting research in the village for the last five years as they had a hint that the site belongs to Megalithic period.

On Saturday, the researchers team stumbled upon an urn, parts of grave goods, 15 cm long iron sword that are believed to be of the Megalithic period and also a 235 cm circumference terracotta well ring.

Explaining about this in detail, Sivaramakrishnan said, "Urn and parts of grave goods could probably belong to 2,200 years ago. The well ring could be 800 years old. In the past five years, we have found many urns from this site. But this is the first time in Cuddalore district that we have found black and red grave goods with graffiti marks on it. We believe that the scripts found on these goods might be similar to that of the Indus Valley script. The things and marks on it are similar to the ones that we had excavated in Tiruchi Uraiyur, Erode Kodumanal and in Palani Porunthal."

The details of all the things that were excavated could only be ascertained after a detailed examination, he added.

"We also found a leg bone from the site. We would send it to Bangalore for DNA test. After getting the result, we are planning to advance our research," he added.

Speaking about the Dharmanallur village, Sivaramakrishnan said, " From the same site, we had found many urns. Now we have found one more. In addition to that, we found a terracotta well dated some 800 years ago. This well had the facility to filter water. From the same site, we had already found a stone inscription that belonged to Nayaks of Gingee. We also found several other goods like century-old bricks from here. All these findings show that the site was an active habitat for many centuries."

Sivaramakrishnan further said, "Marks and scripts on these goods are similar to Indus valley scripts. This shows that this place had some links to Indus valley civilization."

http://www.newindianexpress.com/states/tamil_nadu/Megalithic-era-urn-dug-up-in-Cuddalore-village-points-to-Indus-Valley-connection/2013/09/02/article1763461.ece

http://archives.deccanchronicle.com/130903/news-current-affairs/article/megalithic-site-unearthed-cuddalore

பழங்காலத் தாழிகள், உறைகிணறு கண்டுபிடிப்பு

விருத்தாசலத்தை அடுத்த தர்மநல்லூர் கிராமத்தில் பழங்கால தாழி மற்றும் உறை கிணறு உள்ளிட்டவற்றை வரலாற்றுத் துறை மாணவர்கள் சனிக்கிழமை கண்டுபிடித்தனர்.

தர்மநல்லூர் கிராமத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தொல்லியல் ஆய்வில் ஈடுபட்டனர்.

அப்போது, சுடுமண்ணால் ஆன உறை கிணறு இருப்பதை கண்டறிந்தனர். மேலும், அதன் அருகில் தோண்டியபோது, முதுமக்கள் தாழி, சுடுமண் பொம்மை, இரும்பாலான வாள் மற்றும் சில்லு கருவிகள் கிடைத்துள்ளன.

இது குறித்து, அண்ணாமலைப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியர்கள் சிவராமகிருஷ்ணன், கலைச்செல்வன் ஆகியோர் தெரிவித்தது:

ஆய்வில் ஈடுபட்டபோது 4 முதுமக்கள் தாழி மற்றும் 12 அடிநீளமுள்ள இரும்பாலான வாள், 77 செ.மீ உயரமும், 18 செ.மீ அகலமும், 235 செ.மீ சுற்றளவும் கொண்ட சுடு மண்ணாலான உறைகிணறு ஆகியவை கிடைத்துள்ளன.

ஆய்வு பொருள்களில் கிடைத்துள்ள பெருங்கற்கால குறியீடுகளை பார்க்கிறபோது இவை 2200 ஆண்டுகால பழமை வாய்ந்ததாக இருக்கலாம் எனத் தெரிகிறது.

முதுமக்கள் பயன்படுத்திய பொருள்கள் இதுவரை திருச்சி உறையூர், கோவை கொடுமணல், பழனி பொருந்தல் ஆகிய ஊர்களில் மட்டுமே கிடைத்துள்ளன.

கடலூர் மாவட்டத்தில் இப்போதுதான் முதல்முறையாக முதுமக்கள் பயன்படுத்திய பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன எனத் தெரிவித்தனர். மேலும், ஆய்வின்போது கண்டறியப்பட்ட பொருள்களை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=792915

http://www.dinamani.com/tamilnadu/2013/09/02/பழங்காலத்-தாழிகள்-உறைகிணறு-/article1763708.ece


மோடியும், காந்தியும் எங்கள் ஜாதி! - ஒரு ஜாதி சங்க சுவரொட்டி! # உங்க ஜாதிக்காரங்...

Posted: 28 Dec 2014 02:52 AM PST

மோடியும், காந்தியும் எங்கள் ஜாதி! -
ஒரு ஜாதி சங்க
சுவரொட்டி!

# உங்க ஜாதிக்காரங்க
ரெண்டு பேருக்கும்
ஒத்து வராதே!
அதை முதல்ல பைசல்
பண்ணிட்டு வாங்க!

@எழிலன்

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


பிற்காலத்துல நமக்கெல்லாம் ஆரோக்கியம் கெடாம இருகனும்னா 'வாக்கிங்' பொகனும்கறத தா...

Posted: 28 Dec 2014 08:20 AM PST

பிற்காலத்துல நமக்கெல்லாம் ஆரோக்கியம் கெடாம இருகனும்னா
'வாக்கிங்' பொகனும்கறத தா அப்பவே சொல்லிருப்பாங்களோ ?

'நடப்பதெல்லாம் நன்மைக்கே'னு..,

#தீர்க்கதரிசிகள்..
...
@ Indupriya MP
...


Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


????????????????

Posted: 28 Dec 2014 03:51 AM PST

????????????????


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


;-) ;-)

Posted: 28 Dec 2014 09:20 AM PST

;-) ;-)


மொபைல் எண் உங்கள் மொபைல் எண் மறந்து விட்டதா? அதை எப்படி தெரிந்துகொள்வது? அதனை...

Posted: 28 Dec 2014 09:10 AM PST

மொபைல் எண்

உங்கள் மொபைல் எண் மறந்து விட்டதா? அதை எப்படி தெரிந்துகொள்வது?

அதனை அறிந்து கொள்ள...

உங்கள செல்பேசி எண் திரையில் தோன்ற அழுத்துங்கள்...

Idea சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

Bsnl சேவையைப் பயன்படுத்துபவர்கள் *888#

Aircel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131#

Videocon சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

Airtel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *121*9#

Reliance சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

Virgin Mobile சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

Vodafone சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131*0#

Tata DoComo சேவையைப் பயன்படுத்துபவர்கள் *580#

Relaxplzz

சொத்தைப் பிரித்துக்கொள்வதில் அந்த சகோதரர் களிடம் விசித்திரமான சண்டை வந்தது. தம்...

Posted: 28 Dec 2014 08:15 AM PST

சொத்தைப் பிரித்துக்கொள்வதில் அந்த சகோதரர் களிடம் விசித்திரமான சண்டை வந்தது.

தம்பிக்குத் தான் அதிக சொத்து சேரவேண்டுமென அண்ணன் வாதாடினார்.

அண்ணனுக்குத்தான் அதிக சொத்து தர வேண்டுமென்று தம்பி வாதாடினார்.

தம்பி சொன்ன காரணம், "இளமையில் நாங்கள் வறுமையில் இருந்தபோது ஆளுக்கு நான்கு ரொட்டித்துண்டுகள் கிடைக்கும்.
அண்ணன் அதிலிருந்து ஒன்றை எனக்குத் தருவார்" என்று.

அண்ணன் சொன்னார், "உண்மைதான். ஆனால் தம்பி, தனக்கு வயிற்றுவலி என்று பொய்சொல்லி அந்தத் துண்டை திரும்பத் தருவான்" என்று.

பரஸ்பர அன்பே சகோதரத்துவத்தின் நிலையான சொத்து ♥ ♥

Relaxplzz

உனக்கு என்னிடம் ரொம்ப பிடித்த விஷயங்கள் என்ன? அஞ்சு விஷயம் ரொம்ப பிடிக்கும். அ...

Posted: 28 Dec 2014 06:15 AM PST

உனக்கு என்னிடம் ரொம்ப பிடித்த விஷயங்கள் என்ன?

அஞ்சு விஷயம் ரொம்ப பிடிக்கும்.

அப்படியா? என்னென்ன சொல்லு...

ஒன்னு உன்னுடைய பெரிய கண்ணு

ம்ம்ம்ம் அப்புறம்

உன் அழகான ஸ்மைல்

ம்ஹூம்... அப்புறம்...

உன் ஹேர் ஸ்டைல்

வாவ்

உன் ட்ரெஸ் சென்ஸ்

கியூட். மேலே சொல்லு...

லாஸ்ட் பட் பட் நாட் லீஸ்ட் , நான் சொல்றது எல்லாம் பொய் என்று நல்லா தெரிஞ்சும், அதை அப்படியே நம்பும். உன் குழந்தை மாதிரி மனசு ...

யூ ஸ்டுபிட்....

:P :P

Relaxplzz

ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!! :P 1. யாராவது Time கேட்டா.., செல்போனை பார்த்த...

Posted: 28 Dec 2014 05:15 AM PST

ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!! :P

1. யாராவது Time கேட்டா..,
செல்போனை பார்த்து தான்
சொல்லுவாங்க.. ( கையில Watch
கட்டி இருந்தாலும் )

2. எந்த புத்தகத்தோட அட்டையில
அழகா ஒரு பொண்ணு இருந்தாலும்.,
பேனா கையில கிடைச்சா.,
அந்த பொண்ணுக்கு மீசை வரைஞ்சிடுவாங்க.

3. ஆப்பிள்., ஆரஞ்சு இந்த
மாதிரி பழம் கையில எடுத்தா..,
தூக்கி போட்டு Catch
பிடிப்பாங்க..!
( கண்டிப்பா Catch-ஐ Miss
பண்ணுவாங்க )

4. எங்கயாவது 9
மணிக்கு போகணும்னா., 8.50-
க்கு தான் குளிக்க
ஓடுவாங்க.."அஞ்சே நிமிஷத்துல
ரெடி ஆயிடுவேன்..!"இந்த டயலாக்
சொல்லுவாங்க..

5. Friend-ஐ
பார்த்துட்டு வர்றேன்னு போனா.,
மனைவி Phone பண்ணி கூப்பிடற
வரைக்கும் வர மாட்டாங்க ..!

6."உன்னாலே., உன்னாலே..!"இந்த
படம் இவங்களுக்கு ரொம்ப
பிடிக்கும்..!

7. Tv-ல கிரிக்கெட் மேட்ச்
பார்த்தாலும் அமைதியா பார்க்க
மாட்டாங்க..,"ஏன்டா Leg Side-ல
Ball போடுற"இப்படி எதாவது உளறிட்டே இருப்பாங்க.

8.ஏதாவது வாங்கிட்டு வர
சொன்னா.,
மறந்துட்டு வந்துடுவாங்க..
(கடை மூடி இருக்குன்னு பொய்
சொல்லி சமாளிச்சிடுவாங்க..! )

9. திடீர்ன்னு Walking., Exercise
பண்ண ஆரம்பிப்பாங்க.. எல்லாம் 4
நாளைக்கு தான்..

10. குழந்தைகளுக்கு Homework
சொல்லிக்குடுக்க சொன்னா..,
Escape..!
( குழந்தைகளாவது நல்லா படிக்கட்டுமேங்க
ற நல்ல எண்ணம் தான்..! )

( படித்ததில் ரசித்தது )

Relaxplzz

தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எந்த உணவு சிறப்பு என்று ருசியுங்கள்..! 1. சிம்மக்...

Posted: 28 Dec 2014 04:15 AM PST

தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எந்த உணவு சிறப்பு என்று ருசியுங்கள்..!

1. சிம்மக்கல் கறி தோசை, கோலா உருண்டை

2. நடுக்கடை : இடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா

3. சிதம்பரம் கொத்சு

4. புத்தூர் அசைவச் சாப்பாடும் கெட்டித் தயிரும்

5. திருவானைக்கா ஒரு ஜோடி நெய் தோசை

6. கும்பகோணம் பூரி-பாஸந்தி

7. ஸ்ரீரங்கம் இட்லி பொட்டலம்

8. மன்னார்குடி அல்வா

9. கூத்தாநல்லூர் தம்ரூட்

10. நீடாமங்கலம் பால்திரட்டு

11. திருவையாறு அசோகா

12. கும்பகோணம் டிகிரி காபி

13. விருதுநகர் பொரிச்ச பரோட்டா

14. கோவில்பட்டி கடலை மிட்டாய்

15. ஆம்பூர் தம் பிரியாணி

16. நாகர்கோவில் அடை அவியல்

17. சாத்தூர் சீவல்

18. திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா

19. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா

20. செங்கோட்டை பார்டர் கடை பரோட்டா, நாட்டுக் கோழி வறுவ ல்

21. மணப்பாறை அரிசி முறுக்கு

22. கீழக்கரை ரொதல்அல்வா

23. திண்டுக்கல் தலப்பாக் கட்டி நாயுடு பிரியாணி

24. பண்ருட்டி முந்திரி சாம்பார்

25. மதுரை ஜிகர்தண்டா மற்றும் பருத்திப்பால்

26. சாயல்குடி கருப்பட்டி காபி

27. பரமக்குடி சிலோன் பரோட்டா, சிக்கன் சால்னா

28. பழனி சித்தநாதன் பஞ்சாமிர்தம்

29. கமுதி மாரியம்மன் பால் பண்ணை லஸ்ஸி

30. புதுக்கோட்டை முட்டை மாஸ்

31. தூத்துக்குடி மக்ரூன்

32. சௌக்கார் பேட்டை மன்சுக்லால் சேட் டோக்லா மற்றும் கச்சோடி

33. கன்னியாகுமரி தேங்காய் சாதம், மீன் குழம்பு

34. ராமநாதபுரம் கணவாய் கோலா உருண்டை, இறால் ஊறுகாய்

35. ஈழத் தமிழர்கள் சோதி மற்றும் தேங்காய்ப் பால்

36. செட்டிநாடு - ஒவ்வொரு ஊருக்கும் ஏதாவது ஒன்று சிறப்பா இருக்கும், ஆனா நம்ம 'செட்டி நாட்டுலே' மட்டும்தாங்க செய்யிற எல்லா உணவுமே சிறப்பா யிருக்கும்.

அப்படிபட்ட செட்டி நாடு உணவு வகைகளில் சில..

1. குழிப்பணியாரம்
2. வாழைப்பழ தோசை
3. எண்ணெய் கத்தரிக்காய்
4. பால் பணியாரம்
5. பூண்டு வெங்காய குழம்பு
6. ரவா பணியாரம்
7. பால் கொழுக்கட்டை
8. சேமியா கேசரி
9. மோர் குழம்பு
10. நாட்டுகோழி மிளகு வறுவல்
11. இறால் தொக்கு
12. நாட்டுக் கோழி ரசம்
13. நண்டு மசாலா
14. வெண்டைக்காய் புளிக்கறி
15. பருப்பு சூப்
16. ரிப்பன் பக்கோடா
17. பருப்பு உருண்டை குழம்பு
18. குருமா குழம்பு
19. தேன்குழல்
20. கருப்பட்டி பணியாரம்
21. சீயம்
22. மாவுருண்டை

உணவுக்காக, உணவுப் பொருட்களுக்காக போர் புரிந்த கதை எல்லாம் நம்ம ஊரிலே மட்டும் தான் எப்படி நடந்துச்சுனு இப்ப தெரியுதா? அவ்வளவு ஏன்.. கொலம்பஸுகளும் வாஸ்கோடமாக்களும் இந்தியாவை தேடி எதுக்கு அலைஞ்சாங்க?.. இங்கே கொட்டி கிடந்த வேறு எங்குமே கிடைக்காத 'மசாலா' பொருட்களுக்காக மட்டுமேதான்னுங்கிறது நிதர்சமான உண்மை.

"வாழ்க்கையின் ரசனையை உணவில் காணும் சாப்பாட்டு பிரியர்களுக்காக..

Relaxplzz

இந்தியாவில உங்க செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம்.! எப்படியும் அத...

Posted: 27 Dec 2014 09:00 PM PST

இந்தியாவில உங்க செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம்.!

எப்படியும் அது உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். அதுக்கு நீங்க செய்ய வேண்டியவை :

1. உங்கள் செல் போனிலிருந்துக்கு *#06# டயல் செய்யுங்க...

2. உங்க மொபைல்ல ஒரு 15 டிஜிட் நம்பர் வரும்...

3, இதுதான் உங்க போனின் IMEI No (அப்படின்னா?) அதனை உடனே பத்திரமா நோட் பண்ணி வைச்சுக்குங்க...

4. செல்போன் தொலைஞ்சு போச்சுன்னா உடனே இந்த நம்பரை ( cop@vsnl.net ) க்கு மெயில் பண்னுங்க...

5. உங்க மொபைல் போனை 24 மணி நேரத்தில் GPRS மற்றும் internet மூலம் கண்டுபிடிச்சுடுவாங்க...

6. உங்க மொபைல் போன் நம்பரை மாத்தினால் கூட போன் எங்கிருந்து ஒர்க் ஆகுதுன்னு ஈஸியா தெரிஞ்சுக்கலாம்...!

Relaxplzz


பேசும் முறைகள்... தாயிடம் - அன்பாக பேசுங்கள்..! தந்தையுடன் - பண்பாக பேசுங்கள்.....

Posted: 27 Dec 2014 06:10 PM PST

பேசும் முறைகள்...

தாயிடம் - அன்பாக பேசுங்கள்..!
தந்தையுடன் - பண்பாக பேசுங்கள்..!
ஆசிரியரிடம் - அடக்கமாக பேசுங்கள்..!
துணைவியுடன் - உண்மையாக பேசுங்கள்..!
சகோதரனிடம் - அளவாக பேசுங்கள்..!
சகோதரியிடம் - பாசத்தோடு பேசுங்கள்..!
குழந்தைகளிடம் - ஆர்வத்தோடு பேசுங்கள்..!
உறவினர்களிடம் - பரிவோடு பேசுங்கள்..!
நண்பர்களிடம் - உரிமையோடு பேசுங்கள்..!
அதிகாரியிடம் - பணிவோடு பேசுங்கள்..!
வியாபாரியிடம் - கறாராக பேசுங்கள்..!
வாடிக்கையாளரிடம் - நேர்மையாக பேசுங்கள்..!
தொழிலாளரிடம் - மனிதநேயத்தோடு பேசுங்கள்..!
அரசியல்வாதியிடம் - ஜாக்கிரதையாக பேசுங்கள்..!

#பிடிச்சா லைக் பண்ணுங்கள்...

Relaxplzz