Relax Please: FB page daily Posts |
- ;-) ;-)
- மொபைல் எண் உங்கள் மொபைல் எண் மறந்து விட்டதா? அதை எப்படி தெரிந்துகொள்வது? அதனை...
- சொத்தைப் பிரித்துக்கொள்வதில் அந்த சகோதரர் களிடம் விசித்திரமான சண்டை வந்தது. தம்...
- உனக்கு என்னிடம் ரொம்ப பிடித்த விஷயங்கள் என்ன? அஞ்சு விஷயம் ரொம்ப பிடிக்கும். அ...
- ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!! :P 1. யாராவது Time கேட்டா.., செல்போனை பார்த்த...
- தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எந்த உணவு சிறப்பு என்று ருசியுங்கள்..! 1. சிம்மக்...
- இந்தியாவில உங்க செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம்.! எப்படியும் அத...
- பேசும் முறைகள்... தாயிடம் - அன்பாக பேசுங்கள்..! தந்தையுடன் - பண்பாக பேசுங்கள்.....
Posted: 28 Dec 2014 09:20 AM PST |
Posted: 28 Dec 2014 09:10 AM PST மொபைல் எண் உங்கள் மொபைல் எண் மறந்து விட்டதா? அதை எப்படி தெரிந்துகொள்வது? அதனை அறிந்து கொள்ள... உங்கள செல்பேசி எண் திரையில் தோன்ற அழுத்துங்கள்... Idea சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1# Bsnl சேவையைப் பயன்படுத்துபவர்கள் *888# Aircel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131# Videocon சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1# Airtel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *121*9# Reliance சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1# Virgin Mobile சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1# Vodafone சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131*0# Tata DoComo சேவையைப் பயன்படுத்துபவர்கள் *580# Relaxplzz |
Posted: 28 Dec 2014 08:15 AM PST சொத்தைப் பிரித்துக்கொள்வதில் அந்த சகோதரர் களிடம் விசித்திரமான சண்டை வந்தது. தம்பிக்குத் தான் அதிக சொத்து சேரவேண்டுமென அண்ணன் வாதாடினார். அண்ணனுக்குத்தான் அதிக சொத்து தர வேண்டுமென்று தம்பி வாதாடினார். தம்பி சொன்ன காரணம், "இளமையில் நாங்கள் வறுமையில் இருந்தபோது ஆளுக்கு நான்கு ரொட்டித்துண்டுகள் கிடைக்கும். அண்ணன் அதிலிருந்து ஒன்றை எனக்குத் தருவார்" என்று. அண்ணன் சொன்னார், "உண்மைதான். ஆனால் தம்பி, தனக்கு வயிற்றுவலி என்று பொய்சொல்லி அந்தத் துண்டை திரும்பத் தருவான்" என்று. பரஸ்பர அன்பே சகோதரத்துவத்தின் நிலையான சொத்து ♥ ♥ Relaxplzz |
Posted: 28 Dec 2014 06:15 AM PST உனக்கு என்னிடம் ரொம்ப பிடித்த விஷயங்கள் என்ன? அஞ்சு விஷயம் ரொம்ப பிடிக்கும். அப்படியா? என்னென்ன சொல்லு... ஒன்னு உன்னுடைய பெரிய கண்ணு ம்ம்ம்ம் அப்புறம் உன் அழகான ஸ்மைல் ம்ஹூம்... அப்புறம்... உன் ஹேர் ஸ்டைல் வாவ் உன் ட்ரெஸ் சென்ஸ் கியூட். மேலே சொல்லு... லாஸ்ட் பட் பட் நாட் லீஸ்ட் , நான் சொல்றது எல்லாம் பொய் என்று நல்லா தெரிஞ்சும், அதை அப்படியே நம்பும். உன் குழந்தை மாதிரி மனசு ... யூ ஸ்டுபிட்.... :P :P Relaxplzz |
Posted: 28 Dec 2014 05:15 AM PST ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!! :P 1. யாராவது Time கேட்டா.., செல்போனை பார்த்து தான் சொல்லுவாங்க.. ( கையில Watch கட்டி இருந்தாலும் ) 2. எந்த புத்தகத்தோட அட்டையில அழகா ஒரு பொண்ணு இருந்தாலும்., பேனா கையில கிடைச்சா., அந்த பொண்ணுக்கு மீசை வரைஞ்சிடுவாங்க. 3. ஆப்பிள்., ஆரஞ்சு இந்த மாதிரி பழம் கையில எடுத்தா.., தூக்கி போட்டு Catch பிடிப்பாங்க..! ( கண்டிப்பா Catch-ஐ Miss பண்ணுவாங்க ) 4. எங்கயாவது 9 மணிக்கு போகணும்னா., 8.50- க்கு தான் குளிக்க ஓடுவாங்க.."அஞ்சே நிமிஷத்துல ரெடி ஆயிடுவேன்..!"இந்த டயலாக் சொல்லுவாங்க.. 5. Friend-ஐ பார்த்துட்டு வர்றேன்னு போனா., மனைவி Phone பண்ணி கூப்பிடற வரைக்கும் வர மாட்டாங்க ..! 6."உன்னாலே., உன்னாலே..!"இந்த படம் இவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..! 7. Tv-ல கிரிக்கெட் மேட்ச் பார்த்தாலும் அமைதியா பார்க்க மாட்டாங்க..,"ஏன்டா Leg Side-ல Ball போடுற"இப்படி எதாவது உளறிட்டே இருப்பாங்க. 8.ஏதாவது வாங்கிட்டு வர சொன்னா., மறந்துட்டு வந்துடுவாங்க.. (கடை மூடி இருக்குன்னு பொய் சொல்லி சமாளிச்சிடுவாங்க..! ) 9. திடீர்ன்னு Walking., Exercise பண்ண ஆரம்பிப்பாங்க.. எல்லாம் 4 நாளைக்கு தான்.. 10. குழந்தைகளுக்கு Homework சொல்லிக்குடுக்க சொன்னா.., Escape..! ( குழந்தைகளாவது நல்லா படிக்கட்டுமேங்க ற நல்ல எண்ணம் தான்..! ) ( படித்ததில் ரசித்தது ) Relaxplzz |
Posted: 28 Dec 2014 04:15 AM PST தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எந்த உணவு சிறப்பு என்று ருசியுங்கள்..! 1. சிம்மக்கல் கறி தோசை, கோலா உருண்டை 2. நடுக்கடை : இடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா 3. சிதம்பரம் கொத்சு 4. புத்தூர் அசைவச் சாப்பாடும் கெட்டித் தயிரும் 5. திருவானைக்கா ஒரு ஜோடி நெய் தோசை 6. கும்பகோணம் பூரி-பாஸந்தி 7. ஸ்ரீரங்கம் இட்லி பொட்டலம் 8. மன்னார்குடி அல்வா 9. கூத்தாநல்லூர் தம்ரூட் 10. நீடாமங்கலம் பால்திரட்டு 11. திருவையாறு அசோகா 12. கும்பகோணம் டிகிரி காபி 13. விருதுநகர் பொரிச்ச பரோட்டா 14. கோவில்பட்டி கடலை மிட்டாய் 15. ஆம்பூர் தம் பிரியாணி 16. நாகர்கோவில் அடை அவியல் 17. சாத்தூர் சீவல் 18. திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா 19. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா 20. செங்கோட்டை பார்டர் கடை பரோட்டா, நாட்டுக் கோழி வறுவ ல் 21. மணப்பாறை அரிசி முறுக்கு 22. கீழக்கரை ரொதல்அல்வா 23. திண்டுக்கல் தலப்பாக் கட்டி நாயுடு பிரியாணி 24. பண்ருட்டி முந்திரி சாம்பார் 25. மதுரை ஜிகர்தண்டா மற்றும் பருத்திப்பால் 26. சாயல்குடி கருப்பட்டி காபி 27. பரமக்குடி சிலோன் பரோட்டா, சிக்கன் சால்னா 28. பழனி சித்தநாதன் பஞ்சாமிர்தம் 29. கமுதி மாரியம்மன் பால் பண்ணை லஸ்ஸி 30. புதுக்கோட்டை முட்டை மாஸ் 31. தூத்துக்குடி மக்ரூன் 32. சௌக்கார் பேட்டை மன்சுக்லால் சேட் டோக்லா மற்றும் கச்சோடி 33. கன்னியாகுமரி தேங்காய் சாதம், மீன் குழம்பு 34. ராமநாதபுரம் கணவாய் கோலா உருண்டை, இறால் ஊறுகாய் 35. ஈழத் தமிழர்கள் சோதி மற்றும் தேங்காய்ப் பால் 36. செட்டிநாடு - ஒவ்வொரு ஊருக்கும் ஏதாவது ஒன்று சிறப்பா இருக்கும், ஆனா நம்ம 'செட்டி நாட்டுலே' மட்டும்தாங்க செய்யிற எல்லா உணவுமே சிறப்பா யிருக்கும். அப்படிபட்ட செட்டி நாடு உணவு வகைகளில் சில.. 1. குழிப்பணியாரம் 2. வாழைப்பழ தோசை 3. எண்ணெய் கத்தரிக்காய் 4. பால் பணியாரம் 5. பூண்டு வெங்காய குழம்பு 6. ரவா பணியாரம் 7. பால் கொழுக்கட்டை 8. சேமியா கேசரி 9. மோர் குழம்பு 10. நாட்டுகோழி மிளகு வறுவல் 11. இறால் தொக்கு 12. நாட்டுக் கோழி ரசம் 13. நண்டு மசாலா 14. வெண்டைக்காய் புளிக்கறி 15. பருப்பு சூப் 16. ரிப்பன் பக்கோடா 17. பருப்பு உருண்டை குழம்பு 18. குருமா குழம்பு 19. தேன்குழல் 20. கருப்பட்டி பணியாரம் 21. சீயம் 22. மாவுருண்டை உணவுக்காக, உணவுப் பொருட்களுக்காக போர் புரிந்த கதை எல்லாம் நம்ம ஊரிலே மட்டும் தான் எப்படி நடந்துச்சுனு இப்ப தெரியுதா? அவ்வளவு ஏன்.. கொலம்பஸுகளும் வாஸ்கோடமாக்களும் இந்தியாவை தேடி எதுக்கு அலைஞ்சாங்க?.. இங்கே கொட்டி கிடந்த வேறு எங்குமே கிடைக்காத 'மசாலா' பொருட்களுக்காக மட்டுமேதான்னுங்கிறது நிதர்சமான உண்மை. "வாழ்க்கையின் ரசனையை உணவில் காணும் சாப்பாட்டு பிரியர்களுக்காக.. Relaxplzz |
Posted: 27 Dec 2014 09:00 PM PST இந்தியாவில உங்க செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம்.! எப்படியும் அது உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். அதுக்கு நீங்க செய்ய வேண்டியவை : 1. உங்கள் செல் போனிலிருந்துக்கு *#06# டயல் செய்யுங்க... 2. உங்க மொபைல்ல ஒரு 15 டிஜிட் நம்பர் வரும்... 3, இதுதான் உங்க போனின் IMEI No (அப்படின்னா?) அதனை உடனே பத்திரமா நோட் பண்ணி வைச்சுக்குங்க... 4. செல்போன் தொலைஞ்சு போச்சுன்னா உடனே இந்த நம்பரை ( cop@vsnl.net ) க்கு மெயில் பண்னுங்க... 5. உங்க மொபைல் போனை 24 மணி நேரத்தில் GPRS மற்றும் internet மூலம் கண்டுபிடிச்சுடுவாங்க... 6. உங்க மொபைல் போன் நம்பரை மாத்தினால் கூட போன் எங்கிருந்து ஒர்க் ஆகுதுன்னு ஈஸியா தெரிஞ்சுக்கலாம்...! Relaxplzz ![]() |
Posted: 27 Dec 2014 06:10 PM PST பேசும் முறைகள்... தாயிடம் - அன்பாக பேசுங்கள்..! தந்தையுடன் - பண்பாக பேசுங்கள்..! ஆசிரியரிடம் - அடக்கமாக பேசுங்கள்..! துணைவியுடன் - உண்மையாக பேசுங்கள்..! சகோதரனிடம் - அளவாக பேசுங்கள்..! சகோதரியிடம் - பாசத்தோடு பேசுங்கள்..! குழந்தைகளிடம் - ஆர்வத்தோடு பேசுங்கள்..! உறவினர்களிடம் - பரிவோடு பேசுங்கள்..! நண்பர்களிடம் - உரிமையோடு பேசுங்கள்..! அதிகாரியிடம் - பணிவோடு பேசுங்கள்..! வியாபாரியிடம் - கறாராக பேசுங்கள்..! வாடிக்கையாளரிடம் - நேர்மையாக பேசுங்கள்..! தொழிலாளரிடம் - மனிதநேயத்தோடு பேசுங்கள்..! அரசியல்வாதியிடம் - ஜாக்கிரதையாக பேசுங்கள்..! #பிடிச்சா லைக் பண்ணுங்கள்... Relaxplzz |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment