ilovemynative: Facebook page wall posts in Tamil |
- பெரும்பாலான மக்களுக்குப் பதவி, புகழ் போன்றவைகள் கிடைக்காததற்குக் காரணம் என்னவென்...
- பொன்னியின் செல்வன் - புது வெள்ளம்!!
- காங்கிரஸ் மீண்டும் எழுச்சி பெற வாய்ப்பே கிடையாது. - மோடி # அப்படித்தான் நாங்களு...
- அழகி! @ஓவியர் மாருதி
- சோழர்களின் கடற்போர் ஓவியமாக! @ஓவியர் மாருதி
- இலவசங்கள் யார் எறிந்தாலும் அவை தூண்டில் முள் இரை என்பதையும் வாய்க்குப் போடும் பூ...
- ஓவியர் இளையராஜா நவீன கால ஓவியர் கிராமிய பெண்களை ஓவியம் வரைவதில் மிகவும் வல்லவர்...
- பஞ்சபூதங்களால் ஆனதுதான் உடல் என்று சொல்வார்கள். இந்தியாவில் இவை நிலம், நீர், காற...
- வண்ணங்களின் (Colour) தமிழ்ப் பெயர் ! தமிழர்களுக்கு தமிழ் தெரியாததால் .... இன்றை...
- Mallachandiram (Krishnagiri Dist.) The Archaeology department has taken steps t...
- ஒரு பெண்ணான ஒருவள் தன் கணவனை இழந்துவிட்டால், அவளை ஓர் ஆணானவன் மறுமணம் புரிகிறான்...
- அமைதிக்கான நொபேல் பரிசை வென்ற இந்தியாவின் கைலாஷ் சத்யர்த்தி என்ற பெயரை பெரும்பால...
- அருவாளில் இருந்துச் சொட்டும் இரத்தத்தில் இருப்பது தான் வீரம் என்கிறவனுக்கு, ஒருப...
- ஊதுபத்தி உருட்டும் வேலை ஒதுக்கீடு தண்டனை கைதி என்பதால் ஜெ.,க்கு புது பணி - என்கி...
- சதுரங்க வேட்டை in OLX
- தமிழ்நாட்ட ஆள நிச்சயம் சிவாஜி ராவ் கெய்க்வாட் @ ரஜினிக்கு தகுதி இருக்கு, காரணம்...
- ஜாமீனில் வெளிவந்தால் ஜெயலலிதாவை வரவேற்க இப்படியெல்லாம் போஸ்டரடித்து ரெடியாக வைத...
Posted: 10 Oct 2014 08:56 PM PDT பெரும்பாலான மக்களுக்குப் பதவி, புகழ் போன்றவைகள் கிடைக்காததற்குக் காரணம் என்னவென்றால் அவர்களுக்குச் சிறிது கூட சம்பந்தமில்லாத விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் பெரும்பாலான நேரத்தை வீணடித்து விடுவது தான். . . -பெர்னார்டு ஷா |
Posted: 10 Oct 2014 10:31 AM PDT |
Posted: 10 Oct 2014 09:56 AM PDT காங்கிரஸ் மீண்டும் எழுச்சி பெற வாய்ப்பே கிடையாது. - மோடி # அப்படித்தான் நாங்களும் நெனச்சோம். ஆனா, உங்க ஆட்சிய பார்த்தப்பிறகு அது நடந்துருமோன்னு பயமா இருக்கு. |
Posted: 10 Oct 2014 09:19 AM PDT |
Posted: 10 Oct 2014 09:14 AM PDT |
Posted: 10 Oct 2014 08:06 AM PDT இலவசங்கள் யார் எறிந்தாலும் அவை தூண்டில் முள் இரை என்பதையும் வாய்க்குப் போடும் பூட்டு என்பதையும் உணர மறுக்கின்ற நாம் நிறைந்து கிடக்கும் வரையில் ஆட்சியாளர்கள் எவராயினும் நாட்டை சுரண்டத் தான் செய்வார்கள் என்பது நிதர்சனம். @தஞ்சை தேவா |
Posted: 10 Oct 2014 07:10 AM PDT ஓவியர் இளையராஜா நவீன கால ஓவியர் கிராமிய பெண்களை ஓவியம் வரைவதில் மிகவும் வல்லவர் . ஒளி அளவுகளை மிக துல்லியமாக புகைபடத்திற்கு நிகராக பிரதிபலிக்கும் படி வரைய கூடிய திறமைசாலி. கும்பகோணம் அருகில் உள்ள செம்பியவரம்பல் என்னும் கிராமத்தை சேர்த்தவர் . இவர் வரைந்த ஓவியங்கள் பெரும்பாலும் முகநூல்களில் அதிகம் உலாவுகின்றன .ஆனால் அது யாருடைய ஓவியம் என தெரியாமலேயே நிறைய பேர் லைக் செய்கிறார்கள் . அந்த பெருமைக்கு சொந்தக்காரர் இவர் தான்.இவர் வரையும் ஒவ்வொரு ஓவியத்திலும் உயிரோட்டம் இருக்கும் . ![]() |
Posted: 10 Oct 2014 07:00 AM PDT பஞ்சபூதங்களால் ஆனதுதான் உடல் என்று சொல்வார்கள். இந்தியாவில் இவை நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம். அனால் சீனாவில் காற்றையும் ஆகாயத்தையும் எடுத்துவிட்டு உலோகத்தையும் மரத்தையும் சேர்த்து நிலம், நீர், உலோகம், மரம் மற்றும் நெருப்பு என்று சொல்லி இருக்கிறார்கள்! இன்னும் சில நாடுகளில் ஆகாயத்திற்கு பதிலாக ஆவியை சொல்வதும் உண்டு! உண்மை என்ன? வீட்டை கட்ட அடிப்படையான தேவை செங்கல், சிமென்ட், மணல், ஜல்லி, கம்பி, ஆகியன. அதே போல உடல் எவற்றால் ஆனது என்று நம் முன்னோர்கள் உட்கார்ந்து யோசித்ததில் அவர்கள் அடைந்த பதில்கள்தான் இந்த ஐந்து அடிப்படை கட்டுமான அம்சங்கள். பஞ்சபூதங்கள் என்று வணங்கத்தக்க பெயர் ஒன்றும் கொடுத்துவிட்டார்கள். அவர்களால் இதற்கு மேல் அடிப்படையாக செல்ல இயலவில்லை. அவ்வளவுதான். கடந்த 400 வருடங்களாக அறிவியல் இதே கேள்விக்கான பதிலை தேடி கண்டுபிடித்திருக்கிறது. ஆனால் வெகு ஆழமாக. நீர் என்பது ஒரு பொருள் அல்ல ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் என்னும் தனிமங்கள் சேர்ந்தது அது (H2O). காற்று என்பது நைட்ரஜன், ஆக்சிஜன் போன்ற வாயுநிலை தனிமங்களால் ஆன கலவை. நிலம் என்பது பல தனிமங்களின் திடக்கலவை. கல்லும் மண்ணும் பெரும்பாலும் சிலிகன் மற்றும் ஆக்சிஜன் தனிமங்களின் கலவை (SiO2). இப்படி இரும்பு, அலுமினியம், தாமிரம் என பலவகை தனிமங்கள் நிலத்தில் உள்ளன (Fe, Al, Cu, etc). மொத்தம் எத்தனை தனிமங்கள் தெரியுமா? 92. இவை தவிர இன்னும் செயற்கையாகவும் சில தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் அவற்றின் பண்புகளின் அடிப்படையில் அழகாக தொகுத்தும் ஆகிவிட்டது. அதுதான் தனிம வரிசை அட்டவணை (Periodic Table of Elements). நம் உடலுக்கு இந்த எல்லா தனிமங்களும் தேவை இல்லை. அவற்றில் சில மட்டும் இருந்தாலே போதும். நெருப்பு ஒரு பொருளே அல்ல. அது ஆற்றல். எந்திர ஆற்றல், ஒளி ஆற்றல், வேதி ஆற்றல், மின் ஆற்றல் என நீளும் ஆற்றலின் பல வடிவங்களில் ஒன்று நெருப்பு. ஆகாயம் என்பது ஏதுமற்ற வெளி. பஞ்சபூதங்கள் என்ற நமது மரபான ஞானத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளும் காரணம் அது பல நூற்றாண்டுகளாக சொல்லப்பட்டு நம் கலாச்சாரத்தில் கலந்துவிட்டதால்தான். Periodic Table நமது சமீபத்திய அறிவு என்பதால் அதை சாதாரணமாக கடந்து செல்கிறோம். ஆனால் அது ஆழமான உண்மை. அதை வணங்க வேண்டாம். அறிந்து கொள்வதே போதும். அறிவியல் அறிதலும் ஒரு ஆன்மிக பயணமே. @சகலகலா ஜீன்ஸ் ![]() |
Posted: 10 Oct 2014 05:50 AM PDT வண்ணங்களின் (Colour) தமிழ்ப் பெயர் ! தமிழர்களுக்கு தமிழ் தெரியாததால் .... இன்றைக்கு நாம் வெள்ளை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், பச்சை, நீலம் நிறங்கள் தவிரப் பிறவற்றைத் தமிழில் குறிப்பதில்லை. இவ் வண்ணங்களையும் தமிழில் குறிப்பது அருகி விட்டது. வண்ணங்களுக்கான பெயர்கள் தமிழில் இல்லை என்பதால் குறிப்பிடவில்லை என்று சொல்வோருக்காக வண்ணங்களின் பட்டியல் அளிக்கப்படுகிறது. அடர் சிவப்பு – cramoisy அடர் நீலம் - perse / smalt அடர் மஞ்சள் - gamboge அயிரை/ அசரை - sandy colour அரத்த(ம்) (நிறம்) - heliotrope / haematic அருணம் - bright red, colour of the dawn; அவுரி(நிறம்) - indigo அழல் நிறம் – reddish colour of fire ஆழ் சிவப்பு - cinnabar ஆழ் செந்நீலம் (ஊதா) - claret ஆழ் பழுப்பு - brunneous ஆழ் பைம்மஞ்சள் - citrine ஆழ்சிவப்பு - cramoisy ஆழ்நீலச் சிவப்பு – aubergine இடலை (ஆலிவ்வு) (நிறம்) – olivaceous இருள் சிவப்பு - puccoon இருள்சாம்பல் - slate இள மஞ்சள் - flavescent / primrose ஈய(ம்) (நிறம்) - plumbeous ஈரல்நிறம் - Dark red colour, purple colour உறைபால்(நிறம்) – whey எண்ணெய்க்கறுப்பு – dark black colour எலுமிச்சை ம் - citreous ஒண்சிவப்பு - cardinal ஒளிர் செஞ்சிவப்பு - phoeniceous ஒளிர் செம்மை - coccineous ஒளிர் வெண்கலம் – aeneous ஒளிர் வெண்கலம் (நிறம்) - aeneous ஒளிர்சிவப்பு - puniceous ஒளிர்மஞ்சள் - sulphureous / vitellary கசகசாச் சிவப்பு - ponceau கடல்நீல (நிறம்) - ultramarine கடற்பச்சை - cerulean கத்தரிநீலம் - periwinkle நித்திய கல்யாணி கபிலை / புகர்நிறம் - Tawny, brown or swarthy colour; கரு (நிறம்) - sable கருஞ்சிவப்பு - porphyrous/purpureal கரும்பச்சை – corbeau கருமை - nigricant / nigrine காயாம்பூ (நிறம்) - purple colour காளிமம் - black colour கிளிச்சிறை - Gold resembling the parrot's wing in colour குங்குமச் சிவப்பு- vermeil குங்குமப்பூ(நிறம்) - croceate / saffron குரால் - Dim, tawny colour; குருதிச்சிவப்பு - erythraean / sanguineous / incarnadine குருதிச்செம்மை - vermilion கோமேதக(நிறம்) -topaz சருகிலை (நிறம்) - filemot சாம்பல் – cinerious சாம்பல் பச்சை - caesious / sage சாம்பல் மஞ்சள - isabelline சுடர் (நிறம்) – flammeous சுடுமண்(நிறம்) - terracotta சுதை வெண்மை - cretaceous செக்கர் – reddish sky செங் கருநீல(நிறம்) - violet / violaceous செங்கருப்பு - piceous செங்கல்மங்கல் - Dim red colour செங்கற்சிவப்பு - lateritious / testaceous செந்தீவண்ணம் - colour of glowing fire செந்தூரச்சிவப்பு – minium செப்புநிறம் - Dark-red colour செம்பட்டை - Brown colour of hair செம்பவளம் - deep red colour;. Crimson colour; மிகு சிவப்பு செம்பழுப்பு - sinopia/ sorrel செம்பு - Copper colour;. செம்பூச்சி - kermes செம்பொன் - titian செம்மஞ்சள் -jacinthe செவ்வல் (செந்நிறம்) - Redness; சோணம் - Red colour, crimson colour தசை (நிறம்) - sarcoline தவிட்டுநிறம் - Brown, dun colour திமிரம் – Colour ofDarkness தும்பை நிறம் - pure white colour துமிரம் - Deep red colour . துரு (நிறம்) – ferruginous துருச் சிவப்பு - rubiginous துவர் (சிவப்பு) - Scarlet Red colour, துவரி (காவிநிறம்) - Salmon colour தூயபழுப்பு - sepia தெள்ளுப்பூச்சி (நிறம்) - puce நட்டுச்சினைமண் - A kind of earth of the colour of crab's spawn நல்சிவப்பு – coquelicot நறுமஞ்சள் - lutescent நன்மஞ்சள் - luteolous நன்னிறம் - White colour நீல (நிறம்) – azuline நீல மணி - sapphire நீலச்சாம்பல் - glaucous / cesious / gridelin / lovat நீலச்சிவப்பு – amaranthine / solferino நீலப்பச்சை – turquoise / viridian பச்சை – chlorochrous பசுமை - virid பழுக்காய் - Yellowish, orange or gold with red colour, as of ripe areca-nut; பழுப்பு மஞ்சள் - fulvous பழுப்புச் சிவப்பு - castaneous / rufous / russet / umber பழுப்புச்சாம்பல் - greige / taupe பளீர்சிவப்பு - stammel பனிவெண்மை - niveous பாணிச்சாய் ( கள்போன்ற முத்துநிறம்.) - Colour of a class of pearls, resembling that of toddy பால்வண்ணம் – white colour புகர் நிறம் - tawny / tan புகைக்கரி – fuliginous புள்ளிச் சாம்பல் - liard grey புற்பச்சை - prasinous புறவு (நிற) - columbine பூஞ்சல் - Brown- ish colour; மங்கனிறம் பூஞ்சாயம்(அழுத்தமன சிவப்பு) - Deep, ruddy colour; பூவல்- Red colour பைந்நீல(நிறம்) - teal பைம்பொன் - chrysochlorous பொன் மஞ்சள் - goldenrod பொன்மஞ்சள் luteous பொன்மை – aurulent மகரம் - Pink colour மங்கல் பழுப்பு - fuscous மங்கல் பழுப்பு – khaki மங்கல்பச்சை - eau-de-nil மஞ்சள் – xanthic / icterine / icteritious மஞ்சள் பச்சை – chartreuse / zinnober மஞ்சள் பழுப்பு - lurid / ochre மஞ்சள்சிவப்பு - wallflower மணிச்சிவப்பு - rubious மணிநிறம் - Dark blue colour, as of sapphire; மயில்நீலம் - pavonated மரகதப்பச்சை - smaragdine மருப்பு (தந்தம்) - eburnean மல்லிகை மஞ்சள் – jessamy மாமை- dark-brown colour முக்கூட்டரத்தம் - Red colour produced by chewing betel, arecanut and lime முத்துச்சாம்பல் - griseous வளர்பச்சை - virescent வாதுமை (நிறம்) - ibis வான் நீலம் - cyaneous விண் நீலம் - celeste விழி வெண்மை – albugineous வெங்காயப் பச்சை - porraceous வெண்சாம்பல் - hoary வெண்மங்கல் - leucochroic வெண்மஞ்சள் - ochroleucous வெளிர் நீலம் - azure வெளிர் பச்சை - celado வெளிர் மஞ்சள் - nankeen வெளிர் மஞ்சள் பச்சை - tilleul வெளிர்நீலம் - watchet வெளிர்பழுப்பு - suede வெளுப்பு – albicant வைக்கோல் (நிறம்) – stramineous - யாழறிவன் ![]() |
Mallachandiram (Krishnagiri Dist.) The Archaeology department has taken steps t... Posted: 10 Oct 2014 05:30 AM PDT Mallachandiram (Krishnagiri Dist.) The Archaeology department has taken steps to preserve a 2500-year-old megalithic burial site reckoned to be the largest in the State at Mallachandiram, 19 km from here. More than 200 dolmens (tombs) of four types, dating back to the megalithic period (3 BC-3 Common Era), are found in the village. These include Cairn circles and tombs of migratory tribes. A majority of the dolmens were built of vertical slabs with portholes on the eastern side. Rectangular slabs, similar to railings, encircle these structures, which have passages made out of small rectangular slabs. Inside the dolmens are paintings portraying human figures, bows and arrows, animals and symbols. Department sources say the locals, unaware of their archaeological significance, dismantled a few dolmens. The damaged slabs would be rebuilt. Chemists from the department will be involved in preserving the paintings. This burial site provides sufficient proof for the vestiges of a megalithic civilisation in a radius of 50 km in and around Mallachandiram. A similar megalithic burial site was discovered at Irulabanda village in Chittoor district of Andhra Pradesh, which borders on Krishnagiri. Collector Santhosh Babu said a plan was being worked out to document and preserve the pre-historic paintings and dolmens at Kuruvinayanapalli and Thalapallam, hero stones at Nagundapalayam and the megalithic habitation sites at Mallapadi and Maharajakadai. Source: http://www.megalithic.co.uk/article.php?sid=16084 http://www.thehindu.com/todays-paper/tp-national/tp- tamilnadu/article3056093.ece Video: Mallasanthiram Dolmens http://www.youtube.com/watch?v=HItKy-JXmrc In Tamil http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/mallacanti.htm http://mittaikkadai.blogspot.com/2010/10/blog-post_25.html ![]() |
Posted: 10 Oct 2014 04:35 AM PDT ஒரு பெண்ணான ஒருவள் தன் கணவனை இழந்துவிட்டால், அவளை ஓர் ஆணானவன் மறுமணம் புரிகிறான்...! இதை இந்த சமுதாயம் "வாழ்க்கை கொடுக்கின்றான் " என்று அவனைப் பெருமைப்படுத்துகிறது..!!! இதுவே ஓர் ஆணானவன் தன் மனைவியை இழந்துவிட்டால்.., அவனை மறுமணம் செய்யும் அந்தப் பெண்ணை இந்த சமுதாயம் எப்படி அழைக்கிறது...??? "இரண்டாம்தாரம்"...!!!??? நல்ல சமுதாயம்..!!! ஒவ்வொரு தனி மனிதனின் விழிப்புணர்ச்சியே... சிறந்தச் சமுதாயம் உருவாக்குவதற்கானக் கிடைக்கபெறும் புத்துணர்ச்சி..!!! - Nancy Jeyakumar ![]() |
Posted: 10 Oct 2014 03:39 AM PDT |
Posted: 10 Oct 2014 02:57 AM PDT அமைதிக்கான நொபேல் பரிசை வென்ற இந்தியாவின் கைலாஷ் சத்யர்த்தி என்ற பெயரை பெரும்பாலானோர் இந்த நிமிஷம் தான் கேள்விப்படுகிறோம் என்பதிலேயே நம்நாட்டு மீடியாக்களின் லட்சணம் பல்லிளிக்கிறது.. @ராஜேஷ் பலவேஷம் |
Posted: 10 Oct 2014 02:55 AM PDT அருவாளில் இருந்துச் சொட்டும் இரத்தத்தில் இருப்பது தான் வீரம் என்கிறவனுக்கு, ஒருபோதும் புரிவதில்லை வன்முறைக்கும் வீரத்திற்கும் ஆன வித்தியாசம். - கனா காண்கிறேன் |
Posted: 10 Oct 2014 02:20 AM PDT |
Posted: 10 Oct 2014 01:27 AM PDT ஊதுபத்தி உருட்டும் வேலை ஒதுக்கீடு தண்டனை கைதி என்பதால் ஜெ.,க்கு புது பணி - என்கிற தலைப்பில் விஷமத்தனமான செய்தியை தினமலர் வெளியிட்டுள்ளது .செய்தியின் உள்ளே "அவர்கள் அப்பணியை செய்கின்றனரா என்பது தெரியவில்லை." என்கிற ரீதியில் செய்தி வெளியிட்டுவிட்ட ு கருத்துப்படம் ஒன்றையும் ஊதுபத்தி உருட்டுவதுபோல் படம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பெங்களூர் காவல்துறையினரிடம் விசாரித்ததில், ஒரு துளிகூட செய்தி உண்மையில்லை என்று தெரிவித்தனர். காஞ்சி மடத்தை சேர்ந்த ஜெயேந்திரரை ஜெயலலிதா ஆட்சியில் கைது செய்ததற்கு பழிவாங்கும் செயலாகவே இப்போது இதுபோன்ற செய்தி வெளியிடுவதற்கு காரணமாக இருக்கும் என்றே கருதவேண்டியுள்ள து. வாசகர்களை ஏமாற்றும் விதமாக செய்தியை திரித்து வெளியிடும் தினமலருக்கு கண்டனங்கள். ![]() |
சதுரங்க வேட்டை in OLX Posted: 09 Oct 2014 11:45 PM PDT |
Posted: 09 Oct 2014 11:25 PM PDT தமிழ்நாட்ட ஆள நிச்சயம் சிவாஜி ராவ் கெய்க்வாட் @ ரஜினிக்கு தகுதி இருக்கு, காரணம் அவரது தாய்மொழி தமிழ் இல்லைல... # அந்த ஒரு தகுதி போதாதா...!? @மருதநாயகம் |
Posted: 09 Oct 2014 10:15 PM PDT ஜாமீனில் வெளிவந்தால் ஜெயலலிதாவை வரவேற்க இப்படியெல்லாம் போஸ்டரடித்து ரெடியாக வைத்திருந்தார்களாம்.... "குன்ஹாவுக்கு குஸ்கா கொடுத்த காவிரித்தாயே....". "கர்நாடகாவுக்கே தண்ணி காட்டின காவிரியே.". . "குற்றவாளி என்று கோர்ட் சொன்னாலும் குற்றமற்றவரே..". "ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய உலகத்தின் முதல்வரே..ஆண்டவரே.".. "ஒபிஸ் க்கு வாழ்வு கொடுத்த யுபிஸ் சே".. "ஹெலிகாப்டர் தேவதையே..." "கொடநாட்டு பெண் சிங்கமே..". |
You are subscribed to email updates from சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |